Friday, July 4, 2008

கற்பு, குஷ்பு, நாம்

“என்னடா ரொம்ப "டல்"லா இருக்க, வசந்த்?

"ஒண்ணுமில்லடா நேத்து ஒரு விவாதம்!"

“யாரோட?”

“சந்தியாவோடதான்”

“எதுவும் ஈகோ க்ளாஷா?”

“இல்லைடா, குஷ்பு, கற்பு, நம்மைப் பற்றி”

“குஷ்பு சொன்னதில் தப்பில்லை, இப்போலாம் எல்லோரும் திருமணத்துக்கு முன்பு செக்ஸ் வச்சிக்கிறாங்கனு சொல்லியிருப்பாள்?”

“ஆமடா!”

“இந்தக்காலத்து படித்த பெண்கள் அப்படித்தான் ஃபீல் பண்ணுறாங்கடா”

“நீயும் இதை நம்புறியா?”

“பெண்கள் பத்தி நமக்கென்ன தெரியும், வசந்த்?”

“ரொம்ப கொஞ்சம்தான், அப்போ அவங்க சொல்றதைத்தான் நாம் நம்பனும்னு சொல்றியா?”

“நிச்சயமா!”

“இல்லைடா, எனக்குத்தெரிய நிறைய பசங்ககூட திருமணத்துக்கு முன் வெர்ஜினா இருந்ததா கேள்விப்பட்டு இருக்கிறேன்”

“பசங்க பற்றி நமக்கு நிச்சயம் தெரியும். அப்படி இருந்தால் என்ன? அதைப்பற்றியெல்லாம் அவங்க பெருமைப்படலை! அந்த மாதிரி ஆண்களைப்பார்த்து பரிதாபப்பட்டாலும் படுவாங்க! இந்தக்காலத்து பெண்கள்ல கூட சிலர்/பலர் வேர்ஜினாக இருக்கத்தான் செய்வாங்க. ஆனால் இங்கே பிரச்சினை அதில்லை”

“என்ன சொல்றடா?”

“நாங்க ஏன் வேர்ஜினா இருக்கனும்னு நீங்க எதிர்பார்க்கிறங்க? உங்களில் எத்தனை பேர் அப்படி இருக்கீங்கனு கேக்கிறாங்க?”

“கல்யாணத்துக்கு முன் வெர்ஜினா இருப்பதில் அவங்க பெருமையடையறாங்களா? நான் நிச்சயம் பெருமையடைவேன்”

“இப்போதெல்லாம் பெருமையடைவதில்லை என்று நினைக்கிறேன், ஏன் பெருமையடையனும்?”

“எனக்கு சரியா தெரியல, இருந்தாலும் ஒரு சின்ன உறுத்தல் இந்த விஷயத்தில் எனக்கு”

“ஏன்?”

“சரியா தெரியாது”

“ஏன் தெரியுமா?”

“ஏன்?”

“இன்னும் நம்ம கலாச்சாரத்தில் >70% arranged marriage தான் பண்ணுறோம். ஆனால், சந்தியா, குஷ்பு, நீ, நான் எல்லாம் பார்க்கிற, இருக்கிற சொசையிட்டியில் arranged marriage, ரொம்ப அரிது. arranged marriage பண்ணுகிற பெண் வேர்ஜினா இல்லைனா, அவள் வரப்போகிற கணவனிடம் இல்லாமல் யாரிடமோ செக்ஸ் பற்றி பழகி இருக்காள்னு ஆகுது. அது சரியல்ல.. ஏன் காதலித்த அவனையே கல்யாணம் செய்து இருக்கலாம் இல்லையா?..இவங்க எல்லோரும் தனக்குப்பிடித்தவருடன் பழகி, காதல் மற்றும் காமத்தில் கலந்து பின்பு அவர்களையே கல்யாணம் பண்ணிக்கொண்டால் நல்லா இருக்குமே.. எதுக்கு செக்ஸ் பழக ஒரு ஆள், வாழ இன்னொரு ஆள்? இப்படியெல்லாம் யோசிக்கிறயா”

“Exactly”

“சரி, இதைவிடுடா, ரெண்டு டிக்கட்ஸ் இருக்கு, தசாவதாரம் பார்க்கப்போகலாம், வாறியா?

65 comments:

  1. குஷ்பு மேட்டரைப் பாதியிலே நிறுத்திட்டீங்க?

    ReplyDelete
  2. திரு. லதானந்த்:

    பாவம் குஷ்பு! அவரை வைத்து ஏகப்பட்ட அரசியல் பண்ணிவிட்டார்கள்! அதனால் விட்டுவிட்டேன். :-)

    குஷ்புவாக இருந்தாலும் சரி, நானாக இருந்தாலும் சரி, தன்னைப்போல்/ தன் வாழ்க்கைபோல்தான் இந்த உலகமே என்று நினைப்பது தவறு, என்பது என் எண்ணம் :)

    ReplyDelete
  3. என்ன வருண் குஷ்பூ அக்காவ நீங்களும் போட்டு தாக்கி இருக்கீங்க... :-)

    ReplyDelete
  4. என்ன பண்றது சியாம்? :-(

    ReplyDelete
  5. என்ன வருண் யார் அந்த சந்தியா? :)

    குஷ்புவைப்பற்றி நான் தானே விவாதம் பண்ணினேன்?

    ReplyDelete
  6. //அது சரியல்ல.. ஏன் காதலித்த அவனையே கல்யாணம் செய்து இருக்கலாம் இல்லையா?..இவங்க எல்லோரும் தனக்குப்பிடித்தவருடன் பழகி, காதல் மற்றும் காமத்தில் கலந்து பின்பு அவர்களையே கல்யாணம் பண்ணிக்கொண்டால் நல்லா இருக்குமே.. எதுக்கு செக்ஸ் பழக ஒரு ஆள், வாழ இன்னொரு ஆள்? இப்படியெல்லாம் யோசிக்கிறயா”//

    வருண்,

    In a perfect world, நீங்க சொல்வது நடக்கலாம். அதாவது காதலித்த நபரையே கல்யாணம் பண்ணிக்கலாம். ஆனால் நிறைய பேருக்கு பல காரணங்களால் காதல் கைகூடுவதில்லை. அவர்களெல்லாம் என்ன செய்வார்கள்? வேறு யாரையாவது திருமணம் செய்வதைத்தவிர வேறு வழி இல்லை.

    மேலும் கற்பு என்பதை எப்படி டிஃபைன் பண்ணுகிறீர்கள்? எதுவரை நடந்தால் கற்பு பறிபோனதாக அர்த்தம்? என்னைப்பொறுத்தவரை உடல் ரீதியான உறவுகளை விட மனரீதியான உறவுகள் அர்த்தமுள்ளவை. திருமணத்துக்கு முன் மனதால் தவறு செய்யலாம் ஆனால் உடலால் தவறு செய்யக்கூடாது- இது தான் கற்பா?

    பிகு: உடலாலும், மனதாலும் தவறே செய்யாத பெண் தான் வேண்டுமென்றால் குழந்தையை தான் திருமணம் செய்யமுடியும்.

    ReplyDelete
  7. சந்தியா???!!

    ஓ, அதுவா?!

    நீ சந்தியாவையும், வசந்தையும் இன்னும் மீட் பண்னவில்லை! :)

    ---------------------

    இல்லையே கயல், பர்ஃபெக்ட் உலகம் எல்லாம் தேவையில்லை!

    அப்படி உடலுறவு வைத்துக்கொண்டவர்கள், எதற்காக அரேஞெட் மேரேஜ் பண்ணனும் என்பது கேள்வி!

    காதல் கைகூடவில்லை என்றால் இன்னொரு காதலனை தேடலாமே!

    நான் கற்பைப்பற்றி எதுவுமே சொல்லவில்லையே, கயல்!

    ReplyDelete
  8. *** In a perfect world, நீங்க சொல்வது நடக்கலாம். அதாவது காதலித்த நபரையே கல்யாணம் பண்ணிக்கலாம். ஆனால் நிறைய பேருக்கு பல காரணங்களால் காதல் கைகூடுவதில்லை. அவர்களெல்லாம் என்ன செய்வார்கள்? வேறு யாரையாவது திருமணம் செய்வதைத்தவிர வேறு வழி இல்லை.***

    ஏன் இன்னொருவரை காதலித்து திருமணம் செய்யாமல், அர்ரேஞெட் மேரேஜ் செய்கிறார்கள்?!

    அதுவும் 70% பெண்களுக்கு மேல்!

    ReplyDelete
  9. ***பிகு: உடலாலும், மனதாலும் தவறே செய்யாத பெண் தான் வேண்டுமென்றால் குழந்தையை தான் திருமணம் செய்யமுடியும்.***

    ஏன் அதை தவறு னு நீ சொல்ற கயல்?!

    ReplyDelete
  10. I mean, your argument suggests that
    * sex is inevitable by every person (both mentally or/and physically) before marriage!

    * It is impossible to find anyone who never experienced it unless he/she is a child.

    Fine!

    But you are not going to say that

    * every person must have experienced conventional sex with someone before marriage (we are talking about physical here). If they say, they have not, they are lying.

    Are you, kayal?

    ReplyDelete
  11. அட நீங்கள்லாம் ரொம்ப பெரிய ஆளுங்கப்பா பெரிய பெரிய மாட்டரெல்லாம் பேசுறிங்க...

    ReplyDelete
  12. //ஏன் இன்னொருவரை காதலித்து திருமணம் செய்யாமல், அர்ரேஞெட் மேரேஜ் செய்கிறார்கள்?!

    அதுவும் 70% பெண்களுக்கு மேல்!
    //

    நீங்கள் இப்படி கேட்பது தான் வியப்பாக இருக்கிறது, காதலில் தோல்வியடைபவர்கள் காதலைப்பற்றியே பயந்து போய் பெற்றோர் பார்க்கும் பையனை திருமணம் செய்துக்கொள்வது லாஜிகல் சாய்ஸ் தானே?

    நியாய, அநியாயம் எல்லாம் இதில் பார்க்கமுடியாது. அனைத்து மனிதர்களுமே சுயநலவாதிகள் தான். தங்களுக்கு எது பொருத்தமாக இருக்கிறதோ அந்த முடிவை எடுப்பது தான் மனித இயல்பு.

    ReplyDelete
  13. //* every person must have experienced conventional sex with someone before marriage (we are talking about physical here). If they say, they have not, they are lying.
    //
    நிச்சயமாக அப்படி சொல்லப்போவதில்லை. திருமணத்துக்கு முன் வெர்ஜினாக இருப்பவர்கள் இந்த காலத்திலும் பலர் இருக்கிறார்கள்.

    ReplyDelete
  14. *** நிச்சயமாக அப்படி சொல்லப்போவதில்லை. திருமணத்துக்கு முன் வெர்ஜினாக இருப்பவர்கள் இந்த காலத்திலும் பலர் இருக்கிறார்கள் ***

    அப்போ சரி கயல்! நீ சொல்கிற பாயிண்ட்ஸ் நான் முழுமனதாக ஏற்று பண்ணிக்கொள்கிறேன். :-)

    கற்பு என்பது நிச்சயமாக ஒரு குழப்பமான விசயம்தான். கல்யாணத்திற்கு முன்பாக இருந்தாலும் சரி பின்பாக இருந்தாலும் சரி. ஏன்னா மனதளவில் கற்போட இருக்கிறதெல்லாம் கண்ணகி, சீதை, ராமன் போன்றவர்கள் மட்டும்தான்! :)

    ReplyDelete
  15. //கற்போட இருக்கிறதெல்லாம் கண்ணகி, சீதை, ராமன் போன்றவர்கள் மட்டும்தான்! :)
    //

    இவர்களும் நிஜமா கற்பனையா என்று தெரியாத காவிய நாயக நாயகிகள். இன்றைய உலகத்தில் சாத்தியம் இல்லை என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  16. //கற்போட இருக்கிறதெல்லாம் கண்ணகி, சீதை, ராமன் போன்றவர்கள் மட்டும்தான்! :)
    //

    இவர்களும் நிஜமா கற்பனையா என்று தெரியாத காவிய நாயக நாயகிகள். இன்றைய உலகத்தில் சாத்தியம் இல்லை என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  17. //அட நீங்கள்லாம் ரொம்ப பெரிய ஆளுங்கப்பா பெரிய பெரிய மாட்டரெல்லாம் பேசுறிங்க...// ரிப்பீட்டேய்ய்ய்...

    இது ஒரு எளிமையான ஆனா குழப்பக்கூடிய விஷயம்..இது பத்தி நான் என்ன சொல்ல வர்றேன்னா...கொர்ர்...கொர்ர்ர்...கொர்ர்ர்ர்

    ReplyDelete
  18. //இது ஒரு எளிமையான ஆனா குழப்பக்கூடிய விஷயம்..இது பத்தி நான் என்ன சொல்ல வர்றேன்னா...கொர்ர்...கொர்ர்ர்...கொர்ர்ர்ர்//

    வருணுடைய பதிவை படிச்சதும் தூக்கம் வருது என்பதை மறைமுகமா சொல்றீங்க போலிருக்கு.

    வருண் எங்கிருந்தாலும் ஓடி வந்து தமிழ்ப்பறவையை கவனிக்கவும்(ஏதோ என்னால் முடிந்த சிறு உதவி)

    ReplyDelete
  19. **** தமிழ்ப்பறவை said...

    இது ஒரு எளிமையான ஆனா குழப்பக்கூடிய விஷயம்..இது பத்தி நான் என்ன சொல்ல வர்றேன்னா...கொர்ர்...கொர்ர்ர்...கொர்ர்ர்ர்

    7 July, 2008 1:57 PM ****

    அதைப்பற்றி பேசப்பேசத்தானே புரியும், தமிழ்ப்பறவை? :-)

    என்ன? பேசப்பேச இன்னும் குழப்பும்னு சொல்றீங்களா? LOL!!!

    ReplyDelete
  20. **** தமிழன்... said...
    அட நீங்கள்லாம் ரொம்ப பெரிய ஆளுங்கப்பா பெரிய பெரிய மாட்டரெல்லாம் பேசுறிங்க...

    7 July, 2008 11:36 ***

    என்ன தமிழன் இப்படி சொல்லியெல்லாம் தப்பித்துப்போக முடியாது!

    நீங்க என்ன நினைக்கிறீங்கனு சொல்லுங்க?!!

    நான் ஒரு சூழ்நிலை சொல்றேன் கேளுங்க!

    ஒருத்தி ஒருவனை காதலிக்கிறாள், உடல் உறவு வைத்துக்கொள்கிறாள். நான் அவன் விலை மாதுவுடனும் படுத்தவன். அவளுக்கு "அன்போட சேர்த்து" ஹை ஐ வி யும் கொடுத்துவிடுகிறான். காண்டம் பயன்படுத்தவில்லை. இவள் எச் ஐ வி பாஸிடிவ் இப்போ! He did not marry her. He dumped her!

    Now she goes for arranged marriage!

    அப்பா, அம்மா அரேஞ்சிட் மேரேஜ் பண்ணி வைக்கிறார்கள் எச் ஐ வி டெஸ்ட் பண்ணவில்லை!

    இப்போ இவள் ஹஸ்பண்ட் ம் எச் ஐ வி பாஸிடிவ் ஆகிவிடுகிறான் because of her!

    Is this fair???!!!

    ReplyDelete
  21. *** கயல்விழி said...

    இவர்களும் நிஜமா கற்பனையா என்று தெரியாத காவிய நாயக நாயகிகள். இன்றைய உலகத்தில் சாத்தியம் இல்லை என்று நினைக்கிறேன்.***

    நிச்சயம் அவர்கள் கற்பனைதான் கயல்!. நாம் நிஜத்தில் முடியாததைத்தான் கற்பனை காவியங்களில் செய்கிறோம்!

    ReplyDelete
  22. வருண் மற்றும் கயல், குறுக்கிடுவதற்கு மன்னிக்கணும் (நீங்க ரெண்டு பேர் மட்டும் பேசிக்கிட்டு இருக்கிற மாதிரி தோன்றுவதால் இந்த மன்னிப்பு), எந்தவொரு விவாதத்திலும் இரு தரப்புகள் (வலது - இடது, கிழக்கு - மேற்கு, ஆத்திகம் - நாத்திகம், etc.) இருக்கும். இந்த உங்களுடைய விவாதத்தில் இரு தரப்புகள்ன்னு நான் நினைக்கிறது conservative - liberal என்ற இரு தரப்புகளைத்தான். (மற்றும் ஆண் - பெண் என்ற தரப்புகளை அல்ல. ஏன்னா ஆணுக்கு ஒரு விதி பெண்ணுக்கு ஒரு விதின்னு இருக்க முடியாது, பெரும்பாலும் நடைமுறையில் அப்படி இருந்தாலும்).

    இப்போது இந்த விவாதத்தில் இரு தரப்புகளைப் பார்ப்போம். conservative - திருமணத்திற்கு முன் வெர்ஜினா இருக்கணும் என்ற கொள்கை இருப்பவர்கள். liberal - அப்படியெல்லாம் இருக்கத் தேவையில்லை என்று எண்ணுபவர்கள். இரு தரப்பிலும் நியாய - அநியாயங்கள் இருக்கலாம். சுயநலங்கள் இருக்கலாம். எது சரி அல்லது தவறு என்ற விவாதம் முடிவில்லாதது. இரு liberals மத்தியில் பிரச்சனை இருக்க வாய்ப்பில்லை, இரு conservatives மத்தியிலும் (சந்தேகம் போன்றவற்றைத் தவிர வேறு) பிரச்சனையில்லை. ஒரு conservativeவும் ஒரு liberalஉம் திருமணம் என்ற ஏற்பாட்டால் இணைக்கப்படும்போதுதான் பிரச்சனை ஏற்படுகிறது. அப்படி இணைவதிலும் தவறில்லை. இருவருடைய கடந்த காலத்தைப் பற்றிய வெளிப்படைத்தன்மையும் புரிந்துணர்வும் இருந்தால் எதிரெதிர் தரப்பிலிருப்பவர்களும் (சில சமரசங்களோடு) ஓன்று சேரும் வாய்ப்பிருக்கிறது.

    (இதில் எய்ட்ஸ் போன்ற சாத்தியங்களை புகுத்தி விவாதத்தை சிக்கலாக்க விரும்பவில்லை)

    இரு தனிநபர்களுக்கிடையேயான ஒரு தனிப்பட்ட பிரச்சனை / முடிவு, ஒரு சமூகப் பிரச்சனையைப் போல் ஆக்கப்பட்டு அரசியல் செய்யப்படுவதுதான் மிகவும் வருத்தமான நிலை.

    ReplyDelete
  23. //வருண் மற்றும் கயல், குறுக்கிடுவதற்கு மன்னிக்கணும் (நீங்க ரெண்டு பேர் மட்டும் பேசிக்கிட்டு இருக்கிற மாதிரி தோன்றுவதால் இந்த மன்னிப்பு)//

    தாராளமாக குறிக்கிடுங்கள் வாய்ஸ். பல பேர் கருத்தறிய தான் ப்ளாகில் பதிவது.

    //இந்த உங்களுடைய விவாதத்தில் இரு தரப்புகள்ன்னு நான் நினைக்கிறது conservative - liberal என்ற இரு தரப்புகளைத்தான். (மற்றும் ஆண் - பெண் என்ற தரப்புகளை அல்ல. ஏன்னா ஆணுக்கு ஒரு விதி பெண்ணுக்கு ஒரு விதின்னு இருக்க முடியாது, பெரும்பாலும் நடைமுறையில் அப்படி இருந்தாலும்). //

    நீங்கள் நினைப்பது போல நான் லிபரலும் இல்லை, வருண் கன்சர்வேட்டிவும் இல்லை. பல விஷயங்களில் என்னை விடவும் வருண் லிபரல். எங்களுக்கு சில மாறுபட்ட கருத்துக்கள் வருவதுண்டு, மற்ற ஜோடிகள் போலவே.

    //இரு தனிநபர்களுக்கிடையேயான ஒரு தனிப்பட்ட பிரச்சனை / முடிவு, ஒரு சமூகப் பிரச்சனையைப் போல் ஆக்கப்பட்டு அரசியல் செய்யப்படுவதுதான் மிகவும் வருத்தமான நிலை.//

    நீங்கள் குறிப்பிடும் இருதரப்பினர்களிடையே(கயல், வருண்) பிரச்சினையும் இல்லை, முடிவெடுப்பதில் சிக்கலும் இல்லை. இருவரும் மிகத்தெளிவாகவே இருக்கிறோம். இது எங்கள் சம்மந்தமான பிரச்சினை இல்லை.

    நாங்கள் எப்போதும் எங்களைப்பற்றியே பேசிக்கொள்வதில்லை. பல சமுதாயப்பிரச்சினைக்களைப்பற்றியும் பேசுவோம். அப்படி பறிமாறிக்கொள்ளும் கருத்துக்களை அடுத்தவரும் படிக்கவும் அவர்கள் கருத்துக்களை அறிந்துக்கொள்ளவும் வலைப்பூவில் பதிகிறோம். உங்களின் தவறான புரிதலுக்கு வருந்துகிறோம்.

    உங்கள் கருத்துக்களுக்கும், வருகைக்கும் நன்றி :)

    ReplyDelete
  24. //இரு தனிநபர்களுக்கிடையேயான ஒரு தனிப்பட்ட பிரச்சனை / முடிவு, ஒரு சமூகப் பிரச்சனையைப் போல் ஆக்கப்பட்டு அரசியல் செய்யப்படுவதுதான் மிகவும் வருத்தமான நிலை.//

    பல தனிநபர்களும் சேர்ந்தது தான் சமுதாயம். எனவே ஒருவேளை இது தனிநபர் பிரச்சினையாக இருந்தாலும் சமுதாயப்பிரச்சினையாகவும் கருதப்படும்.

    ReplyDelete
  25. கயல்விழி,

    //நீங்கள் நினைப்பது போல நான் லிபரலும் இல்லை, வருண் கன்சர்வேட்டிவும் இல்லை. பல விஷயங்களில் என்னை விடவும் வருண் லிபரல். எங்களுக்கு சில மாறுபட்ட கருத்துக்கள் வருவதுண்டு, மற்ற ஜோடிகள் போலவே.//

    Oops. நான் பொதுப்படையாகத் தெரிவித்த கருத்துகளை உங்களைச் சம்மந்தப் படுத்திப் புரிந்து கொண்டு விட்டீர்களென்று நினைகிறேன். மீண்டும் தெளிவுப்படுத்தி விடுகிறேன் - conservative / liberal போன்ற பதங்களை நான் குறிப்பிட்ட பொருளிலேயே பயன்படுத்தியிருக்கிறேன் (i.e. those who believe in virginity and those who do not). உங்களையோ வருணையோ குறிப்பிட்டு அல்ல. நீங்கள் ஒரு 'ஜோடி' என்பது பற்றியும் எனக்குத் தெரியாது. Sorry for the misunderstanding.

    //இரு தனிநபர்களுக்கிடையேயான ஒரு தனிப்பட்ட பிரச்சனை / முடிவு, ஒரு சமூகப் பிரச்சனையைப் போல் ஆக்கப்பட்டு அரசியல் செய்யப்படுவதுதான் மிகவும் வருத்தமான நிலை.//

    மேற்குறிப்பிட்ட என்னுடைய வரிகளும் உங்களைக் குறிக்கவில்லை. மாறாக, ஒரு ஆண் - பெண் இருவர் மத்தியிலான ஒரு தனிப்பட்ட பிரச்சனை குறித்தே பேசியிருக்கிறேன். அது சில வருடங்களுக்கு முன்பு (குஷ்புவின் பேட்டியைத் தொடர்ந்து) எப்படி அரசியலாக்கப்பட்டது என்பதை குறித்து வருத்தம் தெரிவித்திருக்கிறேன்.

    ReplyDelete
  26. தவறுக்கு மன்னிக்கவும் வாய்ஸ், நீங்கள் எழுதியதை வைத்து எங்களைப்பற்றி முன்பே தெரிந்திருக்கும் என நினைத்தேன்.

    ReplyDelete
  27. என் இரு சதங்களை பதியலாமா ?

    முதலில் குஷ்பு பிரச்சினை பற்றி :

    பெண்கள் திருமணத்திற்கு முன்னர் உடலுறவு கொள்ளலாம், அதில் தவறில்லை, பாதுகாப்பான உடலுறவே முக்கியம் என்று அவர் சொன்னதாக அறிகிறேன். இதுவரை சொன்னதில் தவறில்லை. [தார்மீக நெறிப்படி தவறேயாயினும் - காரணம் தமிழகம் போன்ற சிக்கல்கள் நிறைந்த ஒரு சமூகத்தில் இப்படியெல்லாம் பேட்டி கொடுத்தல் பொறுப்புணர்வற்ற செயலாகவே புரிந்துகொள்ளப்படும். ("திருமணத்திற்கு முன்னதான உடலுறவு திருமண வாழ்வை பாதிக்க மிகுந்த சாத்தியங்கள் உள்ளன" என்று பிரபல செக்ஸாலஜிஸ்ட் நாராயண ரெட்டி கூறியிருக்கிறார். "திருமணத்திற்கு முன் உடலுறவு தவறில்லை" என்று திரைப்பட நடிகை குஷ்பு கூறியுள்ளார். யார் கூற்றை நீங்கள் தேர்வு செய்வீர்கள் ?)] ஆனால் அது அவரது தனிப்பட்ட கருத்தென்ற அளவில் அதற்கு மரியாதை உண்டு.

    ஆனால் அவர் வரம்பு மீறிய இடம் இந்த கூற்று :

    "எந்த படித்த ஆடவனும் 'தனக்கு வரும் மனைவி கன்னித்தன்மை இழக்காதவளாக இருக்கவேண்டும்' என்று எதிர்பார்க்கமாட்டான்"

    இவர் எப்படி இதை சொல்லவியலும் ? அப்படியாயின் கன்னியாய் மனைவியை எதிர்பார்க்கும் யாரும் படித்தவனில்லையா ? ஏன், திருமணம் வரை தன் கன்னனாகவே இருக்கும் ஒரு ஆடவன் ஒரு கன்னியை மனைவியாக எதிர்பார்ப்பதில் என்ன பிழை ?

    மிகுந்த ஆணவம் தெறிக்கும் திமிர்ப்பேச்சு இது.

    (கற்பென்ற விஷயத்திற்குள் நான் புக விரும்பவில்லை. 'இடுப்புக்குக்கீழா இருக்கிறது கற்பு ?' என்ற பிரபஞ்சன் கட்சி நானும்)

    ஆனால் இவ்விஷயத்தில் நேர்மையே நான் வலியுறுத்துவது. மறைத்தல் சந்தேகத்தை விதைத்து அவநம்பிக்கையை வளர்க்கும்.

    அன்புடன்
    முத்து

    ReplyDelete
  28. இந்த குஷ்புவ நீங்க இன்னமும் விடல்லையாய்யா?? பாவம் அவங்க தெரியாம பேசிட்டாங்க விடுங்க

    ReplyDelete
  29. Virginity is lack of opportunity. Applies to both boys and girls before marriage. Aalai vidunkappu !!

    ReplyDelete
  30. வாய்ஸ் ஆஃப் விங்ஸ்!

    நீங்கள் தவறுதலாக புரிந்துகொண்டதில் தவறொன்றுமில்லை. நான் கண்செவர்வேடிட்ட்வும் இல்லை, கயலும் அதெர் எக்ஸ்ட்ரீம் கிடையாது ;-)

    நீங்கள் நினைப்பதுபோல் பலரும் நினைத்து இருந்தால் அதில் தவறொன்றுமில்லை!

    ஆனால் நான் கண்செவேடிவ்க்காக வாதாடுவதில் தவறொன்றுமில்லையே?

    அதேபோல் கயல், நம்மில் உள்ள போலிதனமான “கண்செர்வேடிவ்னெஸை” கேலி பண்ணுவதிலும் தவறில்லை! :)

    உங்கள் விமர்சனத்திற்கு நன்றி! :)

    ReplyDelete
  31. ****இவர் எப்படி இதை சொல்லவியலும் ? அப்படியாயின் கன்னியாய் மனைவியை எதிர்பார்க்கும் யாரும் படித்தவனில்லையா ? ஏன், திருமணம் வரை தன் கன்னனாகவே இருக்கும் ஒரு ஆடவன் ஒரு கன்னியை மனைவியாக எதிர்பார்ப்பதில் என்ன பிழை ?****

    தன் மனைவி அழகா இருக்கனும் என்று விரும்புவதுபோல், தன் மனைவி படித்தவளாக அறிவாளியாக இருக்கனும் என்று விரும்புவதுபோல், தன் மனைவி கன்னியாக இருக்க வேண்டும் என்று விரும்பும் ஆண்கள் நிச்சயம் உண்டு.

    குஷ்புவிமன் தனிப்பட்ட வாழக்கையை விமர்சனம் பண்ணுவது நிச்சயம் அனாகரீகம். தவறு!

    அதே போல் குஷ்பு வார்த்தைய அளந்து விடாதது தப்பு! ஏனென்றால் இன்னும் 70 வயது தம்பதிகளும் உயிரோடு இருக்கிறார்கள். அன்று நாமும் இதைவிட பலமடங்கு கண்செர்வேடிவாகத்தான் இருந்திருப்போம். கல்யாணம் ஆகுமுன் உடலுறவில் ஈடுபட்டவர்கள் மிகச்சிலராகவும் இருந்து இருப்பார்கள்.

    அவர்களுக்கு குஷ்புவின் “ஸ்டேட்மெண்ட்” எரிச்சலை தரும் என்பது என் தாழ்மையான எண்ணம், திரு முத்து!

    ReplyDelete
  32. இன்னும் இது முடியலையா..? வந்து கவனிச்சிக்குறேன்... மேட்டர் ரொம்ப சூடாத்தான் போய்க்கிட்டிருக்கு....

    ReplyDelete
  33. ***தமிழ்ப்பறவை said...
    இன்னும் இது முடியலையா..? வந்து கவனிச்சிக்குறேன்... ****

    தமிழ்ப்பறவை ஒரே அன்பா மிரட்டுறாரு! நானும் பயந்த மாதிரி நடிக்கவா? LOL! :-)

    ReplyDelete
  34. //தமிழ்ப்பறவை ஒரே அன்பா மிரட்டுறாரு! நானும் பயந்த மாதிரி நடிக்கவா? LOL! :-)//

    நேற்றில் இருந்து தமிழ்ப்பறவை இங்கே பறந்து பறந்து உங்களை வாரி விடுகிறார் :) :)

    ReplyDelete
  35. //Virginity is lack of opportunity. Applies to both boys and girls before marriage. Aalai vidunkappu !!//

    உங்களை யார் பிடிச்சி வச்சிட்டு இருப்பது? :)

    நன்றி அனானிமஸ்.

    ReplyDelete
  36. //Virginity is lack of opportunity. Applies to both boys and girls before marriage. Aalai vidunkappu !!//

    உங்களை யார் பிடிச்சி வச்சிட்டு இருப்பது? :)

    நன்றி அனானிமஸ்.

    ReplyDelete
  37. //இந்த குஷ்புவ நீங்க இன்னமும் விடல்லையாய்யா?? பாவம் அவங்க தெரியாம பேசிட்டாங்க விடுங்க//
    நீங்க சொல்லி இருப்பது தான் ஆயிரத்தில் ஒரு வார்த்தை. நானும் இதையே தான் வருணிடம் சொல்லி வருகிறேன், இருந்தும் அவர் குஷ்புவை விடுவதாக இல்லை.

    ஒருவேளை குஷ்புவிடம் வருணுக்கு சீக்ரெட் க்ரஷோ என்னவோ JK :)

    ReplyDelete
  38. This comment has been removed by the author.

    ReplyDelete
  39. வருண் said...
    குஷ்பு மேலேயா?

    எனக்கு க்ரேஷா?

    நீ வேற, நடிகைகள்னா எனக்கு உண்மையிலேயே அவ்வளவு பிடிக்காது.

    ஆனால் நடிகை மேலே எனக்கு க்ரஷ் வர ஒரு பாஸிபிலிட்டி இருக்கு, கயல்!

    அது என்னனா, ஒருவேளை எதிர் காலத்தில் நீ நடிக்க போனால், உன் மேலே நிச்சயம் க்ரஷ் வரும்! :)

    8 July, 2008 1:58 PM

    ReplyDelete
  40. //நீ வேற, நடிகைகள்னா எனக்கு உண்மையிலேயே அவ்வளவு பிடிக்காது.

    ஆனால் நடிகை மேலே எனக்கு க்ரஷ் வர ஒரு பாஸிபிலிட்டி இருக்கு, கயல்!

    அது என்னனா, ஒருவேளை எதிர் காலத்தில் நீ நடிக்க போனால், உன் மேலே நிச்சயம் க்ரஷ் வரும்! :)
    //

    எப்போ எப்படி கேட்டாலும் இப்படி சாமர்த்தியமா தப்பிக்கிறீங்களே எப்படி? 'காதலியிடம் அடிவாங்காமல் தப்பிப்பது எப்படி' என்ற புத்தகத்தை நீங்க எழுதலாம்.

    நடிகையா? நானா? நான் நடித்தால் அந்த படத்தின் மொத்த டிக்கட்டையும் நீங்க தான் வாங்கி தனியே உட்கார்ந்து பார்க்கனும்(சாரி, என் படத்தை எனக்கே பார்க்கும் தைரியம் இல்லாததால், இதில் உங்களுக்கு நான் கம்பனி தரமுடியாது)

    ReplyDelete
  41. Let me stop here. Someone would be concerened about this discussion.

    They may say,

    In such a serious "kushboo topic" how could you?! LOL!

    But to tell you the honest truth, I will love to watch your movie alone, kayal :)

    ReplyDelete
  42. *** நேற்றில் இருந்து தமிழ்ப்பறவை இங்கே பறந்து பறந்து உங்களை வாரி விடுகிறார் :) :)

    8 July, 2008 12:53 PM ***

    ஆமாம், வாயை திறக்க மாட்டேன்கிறார் மனுஷன்! LOL

    ReplyDelete
  43. வாங்க சிபி சார்!

    நீங்கள் பயப்படும்படி ஒண்ணும் இல்லை. :-)

    நம்மைப்பற்றி நாமே கொஞ்சம் புரிந்துகொள்ளலாமேனுதான் குஷ்பு ஆண்ட்டியையும், நம்ம கற்பு மேட்டரை இங்கே கொண்டு வந்து கொஞ்சம் விளையாடவிட்டேன்! :-)

    ReplyDelete
  44. //ஆமாம், வாயை திறக்க மாட்டேன்கிறார் மனுஷன்! //

    இந்த விஷயத்தில வாயைத் திறந்து எது வேண்டுமானாலும் பேசிவிடலாம்..ஆனால் நான் மனதைத்திறக்கத்தான் பயப்படுகிறேன்.. நான் முக்கால்வாசி conservativஎ.. மீதி liberal..
    அன்பர் முத்துவின் கருத்துக்களில் உடன்படுகிறேன்..
    மற்ற படி குஷ்பூ சூப்பர்.. நான் 'வருஷம்‍ 16 ' குஷ்பூவைச் சொன்னேன்..
    இது நியாயமா ? இன்னும் இந்த விவாதமே முடியலை.. அதுக்குள்ள அடுத்தடுத்த பதிவுகளா..?

    ReplyDelete
  45. **** தமிழ்ப்பறவை said...
    //ஆமாம், வாயை திறக்க மாட்டேன்கிறார் மனுஷன்! //

    இந்த விஷயத்தில வாயைத் திறந்து எது வேண்டுமானாலும் பேசிவிடலாம்..ஆனால் நான் மனதைத்திறக்கத்தான் பயப்படுகிறேன்.. நான் முக்கால்வாசி conservativஎ.. மீதி liberal..
    அன்பர் முத்துவின் கருத்துக்களில் உடன்படுகிறேன்..*****

    முதலில் நண்பர் முத்துகுமாருக்கு என் நன்றி! தமிழ்ப்பறவை தன் கருத்தை சொல்ல வைத்ததற்கு! :-)

    நன்றி தமிழ்ப்பறவை! :)

    ReplyDelete
  46. முத்துவின் கருத்துக்கள் அப்படியே பலரின் கருத்துக்களையும் பிரதிபலிக்கிறது என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  47. ஆமாம், கயல், முத்தோட பதிவு பல ஆண்களுக்கு முத்தான பதிவுதான்!

    ஒண்ணு கவனிச்சியா கயல், ஆண்கள் இப்போவெல்லாம் கற்பைப் பற்றி பேச ரொம்பத்தான் யோசிக்கிறாங்க?!

    நல்ல முன்னேற்றம்தான்! :-)

    ReplyDelete
  48. so kadaisila enna conclusion??

    yaaru yaaru enna enna pesuraangannu takkunu purinjikka mudiyala... slightly confusing :)))

    ReplyDelete
  49. //so kadaisila enna conclusion??

    yaaru yaaru enna enna pesuraangannu takkunu purinjikka mudiyala... slightly confusing :)))//

    இன்று உங்களுக்கு ப்ளாக் படிக்கும் நாளா ஜி? :) :)

    ReplyDelete
  50. ஜி: முத்துக்குமார் மட்டும்தான் ஆண்களில் தன் கருத்தை சொல்லி இருக்கிறார். மற்றவர்கள் எல்லாம் எதுக்கு வம்பு னு எதுவும் சொல்ல பயப்படுகிறார்கள்!

    ரப் சொன்னதுபோல கற்பு "இரண்டு பேருக்குள்ள உள்ள பர்சனல் சமாச்சாரம்" என்று வைத்தாலும், குஷ்பு பேசியது தவறுதான்.

    அவர் ஏன் அப்படி பேசினார் என்று எல்லோருக்கும் தெரியும். அவரை தரக்குறைவாக ஒரு டைரக்டர் பேசியதால், அவர் டிஃபெண்சிவாக பேசியிருக்கார்.

    சரி குஷ்புவை விடுங்க.

    கல்யாணம் பண்னும் முன்னால் கற்பைப்பற்றி கவலை எதுக்கு படுறீங்கனு ங்கிற விசயத்தை விட்டாலும்,

    கலயாணத்திற்கு அப்புறம் ஆணும் பெண்னும் ஏன் கற்போட இருக்கனும் என்பதும் ஒரு கேள்விக்குறி போல்தான் இருக்கு!

    அதனால் இந்த கற்பு மேட்டரை சும்மா தூக்கி எறிந்துவிட்டு, எப்படி வேணா வாழலாம் னு சொல்லவும் முடியாது!

    I wonder what will Kushboo or Suhashini or Sathyaraj will say about that?!

    Again one can get away from the problem by saying it is a "personal issue" and it is "emotional issue"

    இன்னொரு கருத்துக்களத்தில், ஒரு விவாதத்தில் "ப்ரிட்ஜெஸ் ஆஃப் தி மேடிஷன் கவுண்ட்டி" காதலை தவறு இல்லை என்று சொல்லும் நிறைய தமிழர்களை பார்த்து இருக்கிறேன்!

    ReplyDelete
  51. //அவர் ஏன் அப்படி பேசினார் என்று எல்லோருக்கும் தெரியும். அவரை தரக்குறைவாக ஒரு டைரக்டர் பேசியதால், அவர் டிஃபெண்சிவாக பேசியிருக்கார்.
    //

    குஷ்புவை தரக்குறைவா ஒரு டைரக்டர் பேசினாரா? அதென்னக்கு தெரியாதே??

    ReplyDelete
  52. //அதனால் இந்த கற்பு மேட்டரை சும்மா தூக்கி எறிந்துவிட்டு, எப்படி வேணா வாழலாம் னு சொல்லவும் முடியாது!
    //

    அடடா, அடங்க மாட்டீங்களா நீங்க?

    திரு டோண்டுவின் வலைப்பக்கத்தில் இதை தான் எழுதினேன். கற்பு என்பது இருபாலினருக்கும் என்று நீங்கள் விவாதத்துக்காக குறிப்பிட்டாலும், நடைமுறையில் நடப்பது என்ன?

    கற்பு என்பது வெறும் பெண்களுக்கான ஸ்டாண்டர்டாக தான் பார்க்கப்படுகிறது. ஆண்களுக்கு ஃப்ரீ பாஸ்.

    இதை நீங்க எல்லாம் ஓடி வந்து கண்டிப்பா மறுப்பீங்க தான். நீங்களெல்லாம் மறுப்பதால் உண்மை பொய்யாகிவிடாது.

    ReplyDelete
  53. நிஜம்மாவா?

    அது தங்கர்பச்சான் தேவையே இல்லாமல் ஒரு நடிகை/ மற்றும் பெண் என்கிற காரனத்திற்காக, அவரை தரக்குறைவாக பேசியதால், தன்னை/தன் வாழ்க்கையை டிஃபெண்ட் பண்ணத்தான் அவர் அப்படி பேசினார் கயல்!

    இல்லைனா இவர் எதற்கு கற்பு பற்றி எல்லாம் கவலைப்படுகிறார்!

    ReplyDelete
  54. ஒருவிஷயம் தெளிவா தெரியுது. குஷ்பு சொன்னது தமிழ் ஆண்களை ரொம்ப பாதிச்சிருக்கு. பெண்களை பாதிக்கவில்லையே கவனித்தீர்களா?

    இராமதாஸ் கட்சி மகளிரணியின் கண்டன ஊர்வலத்தை விட்டுத்தள்ளுங்கள், அது சும்மா அரசியலுக்காக செய்தது.

    I am talking about normal, edcated women. Why do you think we are not that bothered?

    ReplyDelete
  55. அய்யோ கயல், கற்பு என்பது பெண்களுக்கு மட்டும் என்று பேசுவது சுத்தமான முட்டாள்தனம்!

    படித்தவர்கள் மற்றும் கொஞ்சம்கூட நாகரீகம் இல்லாதவர்கள் பேசுவது அது!

    நான் இருபாலாரையும்தான் பற்றி பேசுகிறேன்!

    ReplyDelete
  56. *** I am talking about normal, edcated women. Why do you think we are not that bothered? ****

    I think neither educated women nor men are bothered by her statement. At least they understand what it really means and whast i the REALITY and that it is s complicated issue to say anything as "right" or "wrong"!

    ReplyDelete
  57. //வருண் said...
    ஜி: முத்துக்குமார் மட்டும்தான் ஆண்களில் தன் கருத்தை சொல்லி இருக்கிறார். மற்றவர்கள் எல்லாம் எதுக்கு வம்பு னு எதுவும் சொல்ல பயப்படுகிறார்கள்!//

    :)))

    இது பயம் இல்ல வருண்.... தவிர்த்தல். ஏன் தவிர்க்கனும்னு கேக்குறீங்களா?? கற்புக்கு ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விளக்கம் இருக்கும். என்னுடைய விளக்கத்த மத்தவங்கக்கிட்ட திணிக்கவோ, பகிர்ந்திக்கவோ தேவயில்லன்னு நினைக்கலாம். :))

    என்ன பொருத்த வரைக்கும் கல்யாணத்துக்கு முன்னோ, பின்னோ எல்லாருமே ஒரு வரைமுறையோட(அளவுகோல் தனி மனிதனை மட்டும் பொருத்தது அல்ல. அருகாமை சுற்றத்தையும் பொருத்தது) இருந்தா எல்லாருக்குமே நல்லது. :)))

    ReplyDelete
  58. This comment has been removed by the author.

    ReplyDelete
  59. நன்றி ஜீ.

    ஆண் பெண் இருவரும் சரி சமம் சமானம்தான். ஆனால் ஆண் வேறு பெண் வேறு.

    என்னுடைய பார்வையில், கற்பு விசய்த்தில் பெண்களுக்கு உள்ள சகிப்புத்தன்மை, மன்னிக்கும் மனது (எந்தப்பாலர் தவறு செய்தாலும்), ஆண்களுக்கு இல்லை.

    ஆண்கள், உணர்ச்சிவசப்படுகிறார்கள். பெண்களின் இந்தத்தன்மையை இன்னும் புரிந்து கொள்ள இவர்களால் இயலவில்லை என்று நினைக்கிறேன்.

    கொஞ்சம் பொறுங்கள்!

    நானும் ஆண்தான்! என்னை இதில் நான் எக்ஸ்க்லுட் செய்யவில்லை :-I

    ReplyDelete
  60. திருமணத்திற்குமுன் பலருடன் விருப்பம் போல் உறவுவைத்துக்கொள்வது தவறில்லை எனும் கலாச்சாரத்தில்கூட திருமணத்திற்குபின் வேறொருவருடன் உறவுகொண்டால் பொறுத்துக்கொள்ள முடிவதில்லையே. ஏன் அப்படி?

    கற்பு மனதில்தான் என்போர் திருமணத்திற்குபின் உடலில் தேடுவதேன்?

    என் சிந்தனையில், திருமணம் என்றொன்றிருக்கும் வரை கற்பென்றும் ஒன்று இருக்கத்தான் இருக்கும் !!!!! (திருமணம் செய்துகொள்ளாதவர்களின் கற்பைபற்றி இங்கே யாருக்கென்ன அக்கறை).

    அதுவரை, கற்பை இருபாலருக்கும் பொதுவில் வைப்போம். கண்ணனாக வாழ்பவன் கன்னியை எதிர்பார்ப்பது மிக நியாயம் (vice versa).

    என்ன, திருமணத்தின்போது (அ)கண்ணன்களும் (அ)கன்னிகளும் தங்கள் நிலையை வெளிப்படையாக தெரிவித்து தேர்வுசெய்து கொள்ளும் நேர்மை தான் வரவேண்டும். வருமா?

    ReplyDelete
  61. உங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும் ரொம்ப நன்றி திரு.கோயிந்து.

    கண்ணனா? கன்னி என்பதே பெண் பால், இதற்கு ஆண் பால் கிடையாது என்பதை அறிந்திருப்பீர்கள் தானே?

    விதவை என்ற வார்த்தைக்கும் ஆண் பால் கிடையாது.

    ReplyDelete
  62. >> என்னுடைய பார்வையில், கற்பு விசய்த்தில் பெண்களுக்கு உள்ள சகிப்புத்தன்மை, மன்னிக்கும் மனது (எந்தப்பாலர் தவறு செய்தாலும்), ஆண்களுக்கு இல்லை <<

    பெண்களுக்கு இருக்கும் சகிப்புத்தன்மை/மன்னிக்கும் மனதுக்கு காரணம் வரலாற்றில்/சமூகத்தில் இருக்கிறது. 'அவன் ஆமபள எப்படி வேணாலும் இருப்பான், பொமபள அடங்கித்தான் போகணும்' என்ற ஆணாதிக்க சிந்தனையில் இருக்கிறது.

    பெண்ணுக்கு பொருளாதார விடுதலை கிடைத்துவிட மேற்கண்ட கூற்று சற்று ஆட்டம் காண ஆரம்பிக்கும்.

    மணமுறிவும் பின்னான வாழ்வும் பெண்ணுக்கு சற்று சுலபமாக இருக்கும் என்ற உத்தரவாதம் சமூகத்தில் கிடைக்கும் பட்சத்தில் உங்கள் கூற்றும் கூட ஆட்டம் காண ஆரம்பிக்கும்.

    >> திருமணத்திற்குமுன் பலருடன் விருப்பம் போல் உறவுவைத்துக்கொள்வது தவறில்லை எனும் கலாச்சாரத்தில்கூட திருமணத்திற்குபின் வேறொருவருடன் உறவுகொண்டால் பொறுத்துக்கொள்ள முடிவதில்லையே. ஏன் அப்படி? <<

    இதற்கு குடும்பம் என்ற அமைப்பு, சந்ததி என்றெல்லாம் சிந்த்தித்தால் விடை கிடைக்கும்.

    எப்போது கூட்டமாய் வாழ்ந்த மக்கள் கூட்டம் தனித்தனி குடும்பம் என்ற அமைப்பாக மாற ஆரம்பித்ததோ அப்போது இதன் முதல் விதை விழுந்திருக்கும் என்று எண்ணத்தோன்றுகிறது.

    ஏனெனில் என் உழைப்பின் பலன் என் சந்ததிக்குப்போக வேண்டும் என்று எண்ண ஆரம்பித்த மனிதன் 'இது என் வம்சம்' என்று உறுதிப்படுத்திக்கொள்ள பெண்ணுக்கு கற்பென்ற நிபந்தனையை ஏற்படுத்தியிருக்கக்கூடும்.

    இன்றைய நிலையில் இது ஈகோ, தன்மானம் சார்ந்த விஷயம் என்று நினைக்கிறேன். தன் மனைவி இன்னொரு ஆடவனோடு படுக்கையை பகிர்ந்துகொள்வது என்பதை எந்த ஆடவனாலும் சுலபமாக தாங்கிக்கொள்ளல் இயலாது. அது அவனது ஆண்மைக்கு விடப்பட்ட சவாலாக, சோதனையாகவே எடுத்துக்கொள்ளப்படும்.

    >> கற்பு மனதில்தான் என்போர் திருமணத்திற்குபின் உடலில் தேடுவதேன் ? <<

    மனதில் இருந்தால் அது physical-ஆக எப்படி வெளிப்படும் என்கிறீர்கள் ? உடல்மூலமாகத்தானே ? பிறகென்ன ?

    'கற்பெனப்படுவது சொற்றிரம்பாமை' என்றுதான் சொல்லியிருக்கின்றனர் முன்னோர். இதில் சொற்றிரம்பாமை என்பது திருமணம் என்ற பந்தத்தில் ஈடுபடும்போது என்ன சொற்கள் சொல்லி ஈடுபட்டார்களோ அந்த சொற்களை மீறாமல் இருபாலறும் நடந்து கொள்வதே கற்பு. அது உடலுறவு என்பதில் மட்டுமல்ல. நேர்மை, அன்பு, பாசம், பொறுப்பு இன்னபிற குணநலன்களை பேணுவதிலும்தான்.

    >> அதுவரை, கற்பை இருபாலருக்கும் பொதுவில் வைப்போம் <<

    இதுவே பாரதி சொன்னது. நான் ஏற்றுக்கொள்வதும் இதுவே.

    >> என்ன, திருமணத்தின்போது (அ)கண்ணன்களும் (அ)கன்னிகளும் தங்கள் நிலையை வெளிப்படையாக தெரிவித்து தேர்வுசெய்து கொள்ளும் நேர்மை தான் வரவேண்டும். வருமா? <<

    விரைவில் Sexual freedom நமது சமூகத்திலும் சாத்தியமாகும்போது வரும்.

    >> விதவை என்ற வார்த்தைக்கும் ஆண் பால் கிடையாது. <<

    கன்னன் பற்றி தெரியவில்லை. ஆனால் விதவைக்கு ஆண்பால் விதுரன் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

    அன்புடன்
    முத்துக்குமார்

    ReplyDelete
  63. விதுரன்?!

    நன்றி, முத்துக்குமார்! :-)

    ReplyDelete
  64. ****பெண்ணுக்கு பொருளாதார விடுதலை கிடைத்துவிட மேற்கண்ட கூற்று சற்று ஆட்டம் காண ஆரம்பிக்கும்.****

    பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம் கிடைத்துவிட்ட சொசையிட்டீயில், ஏற்கனவே ஆட்டம் காண ஆரம்பித்துவிட்டது என்று நினைக்கிறேன்.:-)

    ReplyDelete