Thursday, August 7, 2008

கூத்தாடிகளின் அரசியலும், ஆட்டு மந்தை மக்களும்!

இந்த பதிவை கடுங்கோபத்தில் எழுதுகிறேன். திரைப்படத்தை கண்டுபிடித்த லூமியர் சகோதரர்கள், திரைப்படத்துறையினர், முக்கியமாக யார் எப்படி ஏமாற்றினாலும் எதைப்பற்றியும் கவலைப்படாத மக்கள் என்று அனைவர் மேலும் கோபம் கோபமாக வருகிறது. திரைப்படம் என்ற ஒன்று கண்டுபிடிக்கப்படாமல் இருந்தால் நலமாக இருந்திருக்கும். திரைப்படத்துறை மூலமாக நாம் அடைந்தது என்ன? ஒன்றுமே இல்லை! அந்த காலத்தில் இருந்து இந்த காலம் வரைக்கும் அதே கதை: காதல், காதலுக்கு வில்லன் - வில்லி, நாலு சண்டை, ஆறு பாட்டு கடைசியில் காதலர்கள் ஒன்று சேர்கிறார்கள் - இந்த same old கதைக்கு விதிவிலக்காக வந்த தமிழ்ப்படங்கள் ரொம்பக்குறைவு.

இந்த 'காதல்' என்ற அரைத்த மாவை விதம் விதமாக அரைத்தாகிவிட்டது. பார்த்து காதல், பார்க்காமலே காதல், பொருந்திய காதல், பொருந்தாக்காதல், ஏழை காதலி - பணக்கார காதலன், பணக்கார காதலி - ஏழை காதலன், வேண்டாம் என்று ஒதுக்கி, நாலு அறை கொடுத்தால் கூட மானமே இல்லாமல் ஹீரோ பின்னால் ஓடும் ஹீரோயின்கள் etc etc. நடுநடுவே வன்முறை, ஆபாசம், ஜாதிப்பற்று, மதம்,அரசியல், போலீஸ் போன்ற இதர மலிவு மசாலாக்கள்.

தரமான தமிழ்ப்படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். தரமான தமிழ்ப்படம் என்று நாம் நினைப்பவைகளும், அறிவுஜீவி இயக்குநர்/நடிகர்களாக கருதப்படுபவர்களும் கூட ஹாலிவுட் அல்லது வேற்று மொழி படங்களில் இருந்து காப்பியடிக்கப்பட்டவை/காப்பியடித்தவர்கள் என்பது கசப்பான உண்மை. யாருடைய படத்தையோ காப்பி அடித்துவிட்டு, வெட்கமில்லாமல் டிவியில் 'என் படம்' என்று பேட்டி பொடுப்பார்கள், விளம்பரப்படுத்திக்கொள்வார்கள்!

இதெல்லாம் கொஞ்ச காலமாகவே என்னிடம் இருந்து வந்த எண்ணங்கள், தமிழ் சினிமா பார்ப்பதையே விட்டுவிட்டேன். நண்பர்கள் யாராவது சினிமா பற்றி பேசினால் கூட தவிர்த்து விடுவேன். என்னுடைய தற்போதைய கோபத்துக்கு காரணம், ரஜினியின் மன்னிப்பு கடிதம் மட்டுமல்ல. ரஜினி என்ற சுயநலவாதியின் சாமியார் முகமூடி பலமுறை கிழிந்தாகிவிட்டது. அதைக்கேட்டு கேட்டு நம்மில் பலருக்கு சலித்துவிட்டது! ஆனால் ரஜினி மட்டும் தான் இப்படியா? உண்ணாவிரதத்தின் போது ஆவேசமாக ஆபாச வார்த்தைகள் பயன்படுத்தி சொற்பொழிவாற்றிய சத்யராஜ் இதில் ரஜினிக்கு சப்போர்ட். சத்யராஜ் மட்டும் பல்டி அடிக்கவில்லை- பாரதிராஜா, சீமான் போன்றவர்களும் அப்படியே. இவர்களை எல்லாம் நம்பிய நம்மை என்ன செய்தால் தகும்? பிஸ்னஸ் என்றவுடன் அனைவரும் கைகோர்த்துக்கொள்கிறார்களே?

இந்தக்கூத்தாடிகளை நம்பி இவர்களிடம் ஒட்டு மொத்த தமிழ்நாட்டு அரசியலையே ஒப்படைத்தாகிவிட்டது. சுதந்திரப்போராட்ட வீரர்களுக்கும், மக்களுக்குக்காக உழைத்தவர்களும், படித்தவர்களுக்கும் போக வேண்டிய முக்கிய அரசியல் பதவிகளை, படத்தில் மட்டும் ஏழை பங்காளியாக நடித்தவர்களுக்கும், அவர்களின் பெண் நண்பர்களுக்கும், கதை வசனம் எழுதுபவர்களுக்கும், ஏன், காமெடியன்களுக்கு கூட கொடுத்தாகி விட்டது. அவர்கள் ஆட்சி செய்த/செய்யும் அழகை(!) ரசித்தாகிவிட்டது. இனி என்ன? திரும்பவும் கேப்டன், விஜய், கார்த்திக் போன்ற அடுத்தச்சுற்று ஏமாற்றுக்காரர்களுக்கு தயாராகப்போகிறோமா அல்லது இனியாவது மாற்றம் வருமா?

சினிமாவினால் நாம் இழந்தது ஏராளம். நல்ல புத்தகங்களைப்படித்தல், சிந்தித்தல், குடும்பம் மற்றும் நண்பர்களுடன் நேரம் செலவிடுதல், உடற்பயிற்சி போன்ற நல்லதெல்லாம் தொலைந்து போய் நாம் couch potato ஆகி வெகு காலமாகிறது. இப்போதும் காலம் கடந்துவிடவில்லை, சினிமாவுக்கும், தொலைக்காட்சிக்கும், நடிகர்களுக்கும் நாம் கொடுக்கும் முக்கியத்துவத்தை குறைப்பது இயலாத காரியம் இல்லை. நாம் ஆட்டு மந்தையாகவே தொடர்ந்து இருக்கப்போகிறோமா அல்லது மனிதர்களாகி திருந்தப்போகிறோமா என்பது நம் கையில் இருக்கிறது.

185 comments:

குடுகுடுப்பை said...

blog படிச்சே நான் இப்போ couch potato ஆயிட்டேன்

Thamiz Priyan said...

///சினிமாவினால் நாம் இழந்தது ஏராளம். நல்ல புத்தகங்களைப்படித்தல், சிந்தித்தல், குடும்பம் மற்றும் நண்பர்களுடன் நேரம் செலவிடுதல், உடற்பயிற்சி போன்ற நல்லதெல்லாம் தொலைந்து போய் நாம் couch potato ஆகி வெகு காலமாகிறது.////
:)

வருண் said...

*** திரைப்படத்துறை மூலமாக நாம் அடைந்தது என்ன? ஒன்றுமே இல்லை! **
திரைப்படங்களில் வரும் செயற்கையான திரைப்பட பாடல் காட்சிகள் உண்டு. ஆனால் சில அழகான கவிதைகள் திரைப்படப்பாடல்களாக வந்ததும்/வருவதும் உண்டு. அவைகளை நான் ஒன்றுமில்லை என்று சொல்ல முடியாது. சில கவிதை வரிகளை கொடுக்கிறேன்.

* நினைக்கத்தெரிந்த மனமே உனக்கு மறக்கத்தெரியாதா? பழகத்தெரிந்த உயிரே உனக்கு விலகத்தெரியாதா?

* வெறும் கோயில் இதிலென்ன அபிஷேகம்?
உன் மனமெங்கும் தெருக்கூத்து பகல் வேஷம்!

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம், கயல்! :)

கயல்விழி said...

//blog படிச்சே நான் இப்போ couch potato ஆயிட்டேன்
//

அட்லீஸ்ட் வலைப்பூக்கள் படிப்பது கொஞ்சமாவது ஜெனரல் நாலெஜுக்கு உதவும் இல்லையா?

வருகைக்கு நன்றி குடுகுடுப்பை :)

கயல்விழி said...

வாங்க தமிழ்ப்பிரியன் :)

கயல்விழி said...

//* நினைக்கத்தெரிந்த மனமே உனக்கு மறக்கத்தெரியாதா? பழகத்தெரிந்த உயிரே உனக்கு விலகத்தெரியாதா?

* வெறும் கோயில் இதிலென்ன அபிஷேகம்?
உன் மனமெங்கும் தெருக்கூத்து பகல் வேஷம்!
//

இதை விட அழகான கவிதைகளை பல கவிஞர்கள் எழுதி இருக்கிறார்கள் வருண். நமக்கு படிக்கும் பழக்கம் ரொம்ப குறைந்துப்போனதால் அதெல்லாம் பாப்புலராகவில்லை. :)

Indian said...

//blog படிச்சே நான் இப்போ couch potato ஆயிட்டேன்//

நூத்தில ஒரு வார்த்தை.

மொக்கைச்சாமி said...

west coast'la வெயில் ஜாஸ்தியோ.. பதிவு ரொம்ப சூடா இருக்கு... jokes apart, lemme come to the point...

சினிமா அப்படிங்கறது ஒன்னும் பெரிய விஷயம் இல்ல அதுவும் ஒரு சாதாரண ஆனால் நிறைய பணம் புகழ் கூடும் தொழில் அப்படிங்கறத எல்லோரும் புரிஞ்சிக்கற வரைக்கும் இவங்க இப்படித்தான் ஆடுவாங்க... இது மண்டையில ஏறனும்னா (அடுத்த தலைமுறைக்காவது) கல்வி அறிவு மிக அவசியம்... இந்த கல்வி அறிவு மக்களுக்கு வந்துடுச்சின்னா அப்புறம் இந்த அரசியல் வாதிங்க வெட்டி பேச்சால் குப்பை கொட்ட முடியாது... இந்த மாதிரி ஆட்சி செஞ்சிக்கிட்டு 5 வருஷம் நீட்டிக்க முடியாது... இவனுங்க எடுக்கற ஒரு சினிமாவும் ஓடாது... so அரசு/கட்சி/சினிமா இது மூணும் கூட்டா மக்களை முட்டளாவே தான் வெச்சிக்கிப்பாங்க... 20 வருஷம் முன்னாடி கல்வி திட்டங்கள் எப்படி இருந்துதோ அப்படியே தான் இன்னும் நம்ம நாட்டுல இருக்கு...இது மாறுறதுக்கான அறிகுறியும் காணோம்...

அதனால சினிமா'வ மட்டும் தப்பு முடியாது இல்லையா... யுஎஸ்'லையும் நெறைய சினிமா வருது... நல்ல படமும் வருது... குப்பை படமும் வருது... மக்கள் தெளிவா தான் இருக்காங்க... உங்க ஊர் கவர்னர்'ah தவிர எனக்கு தெரிஞ்சி அரசியலும் சினிமாவும் இங்க தனி தனியா தான் இருக்கு... so எனக்கு என்னவோ the problem is with the people and/or government அப்படின்னு நினைக்கறேன்...

(அது சரி "காதல் கல்வெட்டு-10" எப்போ ரிலீஸ்?)

கயல்விழி said...

வணக்கம் இந்தியன் :)

கயல்விழி said...

வாங்க மொக்கைச்சாமி(நல்ல பெயர்)

இங்கே வழக்கம் போல சூடு அதிகம், கூடவே ரஜினியைப்பற்றிய எரிச்சல்.

ஒரு முக்கியமான பாயிண்ட். நம்மூரில் படித்தவர்கள் கூட வெறித்தனமான ரசிகர்களாக இருக்கிறார்கள். படிப்புக்கும் இதற்கும் ரொம்ப சம்மந்தமில்லை. நான் கல்லூரியில் படிக்கும் சமயம், கல்லூரி மாணவர்கள் விஜய் - அஜீத் என்று இரண்டு க்ரூப் அமைத்து சமயத்தில் அடிதடி அளவுக்கு கூட போயிருக்கிறது. பிடித்த நடிகரின் படத்தின் முதல் நாள் ஷோவை எப்பாடு பட்டாவது பார்த்துவிடும் வெறித்தனமான ரசிகர்களில் படித்தவர்களும் இருக்கிறார்கள். இங்கே படிக்காதவர்கள் கூட ஹாலிவுட் வெறும் சினிமா என்பதை அறிந்திருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் சினிமா ஆதீக்கம் ஒரு சமுதாயப்பிரச்சினை என்பதே என் கருத்து.

கயல்விழி said...

//(அது சரி "காதல் கல்வெட்டு-10" எப்போ ரிலீஸ்?)//

இதற்கு வருண் தான் பதில் சொல்லனும்.

Selva Kumar said...

யோசிக்க வேண்டிய பிரச்சனை..

Selva Kumar said...

ஏதோ சினிமாக்காரங்கனால தான் தமிழ் நாட்டுல அரசியல் இப்படினு சொல்ல முடியாது.

Selva Kumar said...

//உண்ணாவிரதத்தின் போது ஆவேசமாக ஆபாச வார்த்தைகள் பயன்படுத்தி சொற்பொழிவாற்றிய சத்யராஜ் இதில் ரஜினிக்கு சப்போர்ட். சத்யராஜ் மட்டும் பல்டி அடிக்கவில்லை- பாரதிராஜா, சீமான் போன்றவர்களும் அப்படியே.//

இது புரியலயே..சத்தியராஜ் எங்கே பல்டி அடித்ததார்...நான் அப்படி எதுவும் படிக்கலயே..

Selva Kumar said...

//இனி என்ன? திரும்பவும் கேப்டன், விஜய், கார்த்திக் போன்ற அடுத்தச்சுற்று ஏமாற்றுக்காரர்களுக்கு தயாராகப்போகிறோமா அல்லது இனியாவது மாற்றம் வருமா?

//

சரி வைகோ..ராமதாஸ்.. எப்படி ??

கயல்விழி said...

//ஏதோ சினிமாக்காரங்கனால தான் தமிழ் நாட்டுல அரசியல் இப்படினு சொல்ல முடியாது.

//

வருக வழிப்போக்கன்.

நீங்க தமிழ் நாட்டில் இருக்கும் இரண்டு பெரிய கட்சியைப்பார்த்தீங்கன்னா, தொடர்ந்து சினிமாகாரர்களின் ஆதிக்கம் புரியும்.

கயல்விழி said...

//இது புரியலயே..சத்தியராஜ் எங்கே பல்டி அடித்ததார்...நான் அப்படி எதுவும் படிக்கலயே..//

ரஜினி செய்தது தவறில்லை என்று சொல்லி இருக்கார், ஆனால் அந்த நிலையில் அவர் இருந்தால் அப்படி செய்யமாட்டாராம். ரொம்ப குழப்பறார்.

கயல்விழி said...

//சரி வைகோ..ராமதாஸ்.. எப்படி ??
//

அவங்களும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். இதில் இராமதாஸ் ஜாதி அரசியலால் முன்னுக்கு வந்தவர்.

துளசி கோபால் said...

இன்னொன்னு சொல்ல விட்டுட்டீங்களா?

மார்கெட் போன நடிகர்களையெல்லாம் கொண்டுபோய் பார்லிமெண்டில் வச்சாத்தான் நமக்கு நிம்மதி.

இதுவரை சம்பாரிச்சது போதாதாம். நமக்காக அவுங்க அங்கே உக்காந்து கொரல் கொடுப்பாங்களாம்.

சினிமாவைச் சினிமாவா மட்டுமே பார்க்கும் நாள் எதுவோ?

இப்படிக்கு,

ப்ளொக் பொடேட்டோ :-))))

கயல்விழி said...

//ப்ளொக் பொடேட்டோ :-))))//

அட்லீஸ்ட் உங்க பதிவை எல்லாம் படிச்சால் கொஞ்சம் மூளை வளருது இல்லையா டீச்சர்?
'
வருகைக்கு நன்றி :)

siva gnanamji(#18100882083107547329) said...

ஊருக்கு நூறு பேர் இப்படி சிந்திக்கும்
காலம் எப்பொழுது வரும்?

கயல்விழி said...

வருக சிவ ஞானம்ஜி :)

Selva Kumar said...

//நீங்க தமிழ் நாட்டில் இருக்கும் இரண்டு பெரிய கட்சியைப்பார்த்தீங்கன்னா, தொடர்ந்து சினிமாகாரர்களின் ஆதிக்கம் புரியும்.
//

கட்சியைவிட கடந்த 40 வருசத்துல முதல் அமைச்சர் + எதிர்கட்சித்தலைவர் யாருன்னு பாருங்க..

நான் கேட்க நினைத்தது என்னன்னா..

சினிமாக்காரங்க இல்லாட்டி தமிழ்நாடு எப்படி இருந்திருக்கும்ணு?

Selva Kumar said...

//ஆனால் அந்த நிலையில் அவர் இருந்தால் அப்படி செய்யமாட்டாராம். ரொம்ப குழப்பறார்.
//

உங்களுக்கு சத்தியராஜ் நக்கல் புரியல.

இதுக்கு ஆர்த்தம்

"ரஜினி அப்படித்தான் செய்வாரு அதுல தப்பில்ல.ஏன்னா ரஜினிக்கு பணம் முக்கியம்.

ஆனா நான் அப்படி செய்ய மாட்டேன்
ஏன்னா எனக்கு தமிழ்நாடு முக்கியம்"

Selva Kumar said...

//அவங்களும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். இதில் இராமதாஸ் ஜாதி அரசியலால் முன்னுக்கு வந்தவர்.
//

யாருமே நல்லவங்க இல்லைங்கறீங்க, அப்ப யாரு நல்லவங்க ?

எல்லோரும் நல்லா பேசறோம்.
ஆனா வரச்சொன்னாத்தான் தெரியும்.


நாமெல்லாம் அரசியலுக்கு வரத் தயாரா ?


அந்த வகையில சினிமா நடிகர்கள்/ஜாதி அரசியல்வாதிகள் ரிஸ்க் எடுத்துதான் வந்துள்ளார்கள்.

பேசறவங்க எல்லோரும் ஏதோ ஒரு கட்சியில சேர்ந்து வேலை செய்யனும், அப்போ நிலைமை தானே மாறும்.

If we expect IDEAL politics & Politicians, அது எப்பவுமே நடக்காது.

இருக்கிற நிலைமையில் உள்ளே இறங்கினால்தான் மாறும்.

இல்லையேல் வெறும் வெட்டிப்பேச்சாகவே இருக்கும்.

கயல்விழி said...

வழிப்போக்கன்

உங்களுக்காக சத்யராஜின் எக்ஸாக்ட் வார்த்தைகள்

"ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை வலியுறுத்தி சென்னையில் நடத்தப்பட்ட உண்ணாவிரத மேடையில் கர்நாடகத்துக்கு எதிராகவும் ரஜினியை மறைமுகமாகவும் விமர்சித்து கடுமையாகப் பேசியவர் நடிகர் சத்யராஜ். தற்போது கர்நாடக பிலிம் சேம்பருக்கு ரஜினி எழுதிய கடிதம் குறித்து நடிகர் சத்யராஜிடம் கருத்துக் கேட்டோம். ''நான்கூட என்னோட பகுத்தறிவு கருத்துக்களை மணிவண்ணனோட 'அமைதிப்படை' வேலுபிரபாகரனோட 'புரட்சிக்காரன்' போன்ற படங்கள்லதான் காட்ட முடியும். அதைவிட்டுட்டு என்னை புதுசாப் புக்பண்ற தயாரிப்பாளருங்ககிட்டே என்னோட கருத்தைத் திணிக்க முடியாது. அதுபோல என்னோட கடவுள் மறுப்புக் கொள்கையை 'தங்கம்' படத்துல காட்டமுடியாது. பெரியார் திடலுல பேசின விஷயத்தை ஏவி.எம் ஸ்டுடியோவுல கேமராவுக்கு முன்னாடி பேசமுடியாது. ஒரு மனுஷனுக்கு புருஷன், மகன், அப்பா, ஆபீஸர்னு பலவேஷம் இருக்கு. இதுக்கு நடிகர்களும் விதிவிலக்கில்லே, அவங்களும் மனுஷங்கதானே! ரஜினிசார் சொந்தமா தயாரிச்ச படத்துக்கு கர்நாடகத்துக்கு லெட்டர் எழுதியிருந்தார்ன்னா கண்டிச்சு பேசலாம். ஆனா நிலைமை அப்படியே உல்டாவா இருக்கு. இப்போ 'குசேலன்' படத்தோட தயாரிப்பாளரைக் காப்பத்துற வேஷம் போட்டிருக்கார். இதுமாதிரி ஒரு பிரச்னை என் படத்துக்கு கர்நாடகத்துல வந்தா அந்தப் படத் தயாரிப்பாளருக்கு எவ்வளவு பணம் நஷ்டமாகுதோ அதை என் சம்பள பணத்திலேருந்து கொடுப்பேன், இதுசத்தியம். ஆனா ஒகனேக்கல் விஷயத்தில் உடும்புப் பிடியாத்தான் இருப்பேன்'' என்றார். "

(விகடன் தளம்)

மேலே இருப்பதை படித்தால் எனக்கு சத்யராஜ் நக்கலடிப்பது போல தெரியவில்லை, ரஜினிக்கு ஆதரவே அளிக்கிறார். அவர் அத்தனை நல்லவராக இருந்தால், "ரஜினி செய்தது தவறு" என்பதை ஆணித்தரமாக சொல்லி இருக்கலாமே?? உண்ணாவிரதத்தில் பேசினாரே அது மாதிரி.

Selva Kumar said...

கோவிச்சுக்காதீங்க..
பிரச்சனையை ஒரு புது கோணத்தில் பார்த்தேன்.

கயல்விழி said...

//If we expect IDEAL politics & Politicians, அது எப்பவுமே நடக்காது.
//

ஐடியலாக இருப்பது சாத்தியமில்லை, குறைந்தபட்சம் சுமாராகவாவது இருக்கலாம் இல்லையா?

கயல்விழி said...

//கோவிச்சுக்காதீங்க..
பிரச்சனையை ஒரு புது கோணத்தில் பார்த்தேன்.//

Ofcourse, no problem at all. :) :)

Selva Kumar said...

//அதை என் சம்பள பணத்திலேருந்து கொடுப்பேன், இதுசத்தியம். ஆனா ஒகனேக்கல் விஷயத்தில் உடும்புப் பிடியாத்தான் இருப்பேன்'' என்றார். //

இதை திரும்ப படியுங்கள்.

அவர் ரஜினியின் சூழ்நிலையை தெளிவாக விளக்கிவிட்டு, எனக்கு சம்பளத்தைவிட ஒகனேக்கல் முக்கியம் என்று சொல்கிறார்.

(மறைமுகமாக சொல்வது --> ரஜினி சம்பளத்துக்காக மன்னிப்பு கேட்டார்)

இப்படி நான் புரிஞ்சுகிட்டேன்..

அப்படியில்லையா ?

Selva Kumar said...

//ஐடியலாக இருப்பது சாத்தியமில்லை, குறைந்தபட்சம் சுமாராகவாவது இருக்கலாம் இல்லையா?
//

அதுதான் இல்லையே..:((

அதுக்கு என்ன செய்யலாம் ?

கயல்விழி said...

//இப்படி நான் புரிஞ்சுகிட்டேன்..

அப்படியில்லையா ?//

எனக்கு வேற மாதிரி தெரிகிறது, நீங்கள் சொல்வது போலவும் இருக்கலாம்.

பாருங்க, இதில் தான் பிரச்சினை, ஏன் இப்படி நம்மை குழப்பனும்? தெளிவா தன் கருத்தை சொல்லலாம் இல்லையா?

ரஜினியும் இப்படித்தானே நம்மை குழப்பினார்?

Selva Kumar said...

நமக்கு அரசியல்வாதிகள் யார் என்ன தப்பு செய்றாங்கனு நல்லா தெரியுது.

ஆனா நாம "மக்களா" என்னத்த சரியா செய்யலாம்னு தெரியல ?

இதப்பத்தி கொஞ்சம் விரிவா இன்னொரு பதிவு போடுங்க..

Anonymous said...

//
சினிமாவினால் நாம் இழந்தது ஏராளம். நல்ல புத்தகங்களைப்படித்தல், சிந்தித்தல், குடும்பம் மற்றும் நண்பர்களுடன் நேரம் செலவிடுதல், உடற்பயிற்சி போன்ற நல்லதெல்லாம் தொலைந்து போய் நாம் couch potato ஆகி வெகு காலமாகிறது.//

"தரமற்ற" தமிழ் சினிமாவினாலும், பணம் சம்பாரிப்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு இயங்கும் செயற்கைக்கோள் தொலைக்காட்சிகளாலும் இழந்தது ஏராளம் என்று வேண்டுமானால் சொல்லலாம். இதில் தொலைக்காட்சிகளுக்கே மக்களை "couch potato" ஆக்கியதில் பெரும்பங்கு உண்டு என்பது என் கருத்து.
--வளவன்

Sundar சுந்தர் said...

என்ன கயல் ரொம்ப சூடா போட்டிருக்கீங்க? ரிலாக்ஸ் ப்ளீஸ் ! அரசியல்வாதிகளுக்காக தீக்குளித்துகொண்டிருந்த மக்கள் குறைந்து அரசியல்வாதிகளாக பார்ப்பது போல, நடிகர்களை நடிகர்களாக பார்க்கும் நாளும் நடக்கும். இவர்கள் பேசுவதற்கெல்லாம் உங்கள் பதியல்களை நீங்கள் வீணடித்தால், உங்களால் மட்டுமே பதிய கூடிய கருத்துகளை நான் எப்போது படிப்பது? so please get back to more important things :)

கயல்விழி said...

//தரமற்ற" தமிழ் சினிமாவினாலும், பணம் சம்பாரிப்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு இயங்கும் செயற்கைக்கோள் தொலைக்காட்சிகளாலும் இழந்தது ஏராளம் என்று வேண்டுமானால் சொல்லலாம். இதில் தொலைக்காட்சிகளுக்கே மக்களை "couch potato" ஆக்கியதில் பெரும்பங்கு உண்டு என்பது என் கருத்து.
//

வருகைக்கு ரொம்ப நன்றி வளவன்.

தொலைக்காட்சி சினிமா இல்லையென்றால் ஒன்றுமே இல்லை(தமிழ் சேனல்களைப்பொறுத்த வரை).

கயல்விழி said...

//என்ன கயல் ரொம்ப சூடா போட்டிருக்கீங்க? ரிலாக்ஸ் ப்ளீஸ் ! அரசியல்வாதிகளுக்காக தீக்குளித்துகொண்டிருந்த மக்கள் குறைந்து அரசியல்வாதிகளாக பார்ப்பது போல, நடிகர்களை நடிகர்களாக பார்க்கும் நாளும் நடக்கும். இவர்கள் பேசுவதற்கெல்லாம் உங்கள் பதியல்களை நீங்கள் வீணடித்தால், உங்களால் மட்டுமே பதிய கூடிய கருத்துகளை நான் எப்போது படிப்பது? so please get back to more important things :)

//

மீண்டும் வருகை தந்ததுக்கு நன்றி சுந்தர் :)

அது என்ன என்னால் மட்டுமே எழுத முடிந்த பதிவுகள்?(சொன்னீர்கள் என்றால் எழுத வசதியாக இருக்கும்,அதனால் தான் கேட்டேன்) :)

Anonymous said...

இந்த பதிவை கடுங்கோபத்தில் எழுதுகிறேன்.

"ரிலாக்ஸ் ப்ளீஸ்"
:) :)

கயல்விழி said...

ப்ளாக் பெயருக்கும், எழுத்துக்கும் எத்தனை முரண்பாடு பார்த்தீங்களா?
:) ;)
நல்வரவு சதானந்தன்.

Indian said...

//மேலே இருப்பதை படித்தால் எனக்கு சத்யராஜ் நக்கலடிப்பது போல தெரியவில்லை, ரஜினிக்கு ஆதரவே அளிக்கிறார். அவர் அத்தனை நல்லவராக இருந்தால், "ரஜினி செய்தது தவறு" என்பதை ஆணித்தரமாக சொல்லி இருக்கலாமே?? //

அடடா, இப்படி புரிஞ்சுக்காமத்தான் ரஜினி ரசிகர்கள் சத்யராஜை காச்சு காச்சுன்னு காச்சராங்களா?

நானும் வழிப்போக்கன் மாதிரிதாங்க புரிஞ்சுகிட்டேன் :(

வருண் said...

சத்யராஜ் "வீரமாக" பேசாதற்கு நிச்சயம் ஒரு முக்கிய காரணம் இருக்கு.

ஏன் மென்று முழுங்குகிறார்???

கொஞ்சம் யோசிக்கனும். ரஜினியை கவிழ்த்த இதைவிட ஆப்பர்டூனிட்டி கிடைக்குமா என்ன??

வருண் said...

****" இதில் தொலைக்காட்சிகளுக்கே மக்களை "couch potato" ஆக்கியதில் பெரும்பங்கு உண்டு என்பது என் கருத்து.
--வளவன்***

அதைப்பற்றியெல்லாம் யாருக்கு கவலை??

ரஜினிகாந்தை ஏதாவது ஒருவைகையில் கேவ்லப்படுத்தனும்.

அந்த ஆளு செத்தால்,தமிழர்கள் எல்லாம் திருந்தி வாழ்ந்துவிடுவார்கள் என்கிற நல்லெண்னம் பலருக்கு!

அதுவரை,ரஜினிகாந்த் தான் ப்ரைமரி டார்கெட்.அது காவேரியாக இருந்தாலும் சரி, குப்பை அள்ளுற பிரச்சினையாக இருந்தாலும் சரி!

இதற்காகவாவது அந்த ஆளு செத்து தொலையனும்! செத்தால் தமிழன் திருந்தி விடுவானா என்ன?

நிறைய பேருக்கு புழைப்பு ஓடாது:-(

ஜோசப் பால்ராஜ் said...

சிறப்பான ப‌திவு கயல்விழி. மிக நியாயமான சினம்.

செயல்வீரர் காமராஜரையே வெறும் வாய்சொல்வீரர்களின் பேச்சைக்கேட்டு தோற்கடித்த பெருமை கொண்ட நம்மவர்களுக்கு இது புரியுமா எனத்தெரியவில்லை.
கல்வியறிவு பெற்றவர்களும் இன்று நடிகர்களின் பின்னால் போவதை என்னவென்று சொல்வது? மனப்பாடம் செய்து, அப்படியே எழுதி மதிப்பெண் பெறும் மெக்காலே கல்வி முறை நம்மை எழுதப் படிக்க தெரிந்தவர்களாக்குகின்றதே தவிர, கல்வியறிவு பெற்றவர்களாக மாற்றவில்லை. மொழிபெயர்க்க தெரியாததால் நான் சொல்ல நினைத்ததை அப்படியே ஆங்கிலத்தில் தருகிறேன்.

Our education system making us as Literate, but not educated.

கயல்விழி said...

நல்வரவு ஜோசப் மற்றும் இந்தியன் :)

காமராஜர் எல்லாம் இப்போது தேர்தலுக்கு மட்டுமே பயன்படுகிறார் :(

VIKNESHWARAN ADAKKALAM said...

நான் ஒரு மலேசியன் என்ற முறையில் எனக்கு இதைச் சொல்ல தகுதி இல்லை... இருந்தாலும் சொல்கிறேன்..
தவறாக இருப்பின் மன்னிக்கவும்.

ஒலிம்பிக் போட்டிகளில் சீனாவிற்கு இருக்கும் வேகம் இந்தியாவிற்கு இல்லாமல் இருக்க என்ன காரணம்? குட்டி குட்டி நாடுகள் எல்லாம் அனைத்துலக போட்டியில் முன்னோடிகளாக வர முடியும் என்றால் ஏன் இந்தியாவால் முடியவில்லை... சினிமா கலைஞர்களுக்கு கொடுக்கும் முக்கியதுவத்தை ஏன் இம்மாதிரியான போட்டிகளுக்கு கொடுப்பதில்லை. ஒரு இந்தியன் என்ற முறையில் இந்திய திருநாடு பிந்தங்கி இருப்பதை கண்டு மிகவும் வேதனைபடுகிறேன். சினிமா கலைஞர்களில் உடல் அசைந்தால் கூட போதும் அதை பற்றி பத்து நாட்களுக்கு பேசியே அவரை பிரபல படுத்திவிடுகிறோம்... இது முறையானது தானா?

manikandan said...

***********ஒலிம்பிக் போட்டிகளில் சீனாவிற்கு இருக்கும் வேகம் இந்தியாவிற்கு இல்லாமல் இருக்க என்ன காரணம்? குட்டி குட்டி நாடுகள் எல்லாம் அனைத்துலக போட்டியில் முன்னோடிகளாக வர முடியும் என்றால் ஏன் இந்தியாவால் முடியவில்லை... சினிமா கலைஞர்களுக்கு கொடுக்கும் முக்கியதுவத்தை ஏன் இம்மாதிரியான போட்டிகளுக்கு கொடுப்பதில்லை*****************

எதுக்கு கொடுக்கணும் ?

manikandan said...

******நான் கல்லூரியில் படிக்கும் சமயம், கல்லூரி மாணவர்கள் விஜய் - அஜீத் என்று இரண்டு க்ரூப் அமைத்து சமயத்தில் அடிதடி அளவுக்கு கூட போயிருக்கிறது. பிடித்த நடிகரின் படத்தின் முதல் நாள் ஷோவை எப்பாடு பட்டாவது பார்த்துவிடும் வெறித்தனமான ரசிகர்களில் படித்தவர்களும் இருக்கிறார்கள். இங்கே படிக்காதவர்கள் கூட ஹாலிவுட் வெறும் சினிமா என்பதை அறிந்திருக்கிறார்கள்.******

கல்லூரியில் படிக்கற சமயத்துல சண்டை போடறாங்க.....காலம் முழுக்க அவங்களுக்கு ரசிகனா இருக்கறது இல்ல பசங்க. அத புரிஞ்சிக்கோங்க.

manikandan said...

****" இதில் தொலைக்காட்சிகளுக்கே மக்களை "couch potato" ஆக்கியதில் பெரும்பங்கு உண்டு என்பது என் கருத்து.
----வளவன்-----

அதைப்பற்றியெல்லாம் யாருக்கு கவலை??
---வருன்------
*********

இதுக்கு எல்லாம் நான் கவலைப்பட்டுக்கிட்டு இருக்கனுமா ?

பாருங்க. ஒருத்தன் உடம்ப நல்லா வச்சிகனம்ன்னு உடற்பயிற்சி பண்றான். இன்னொருத்தன் விஜய், அஜித் படம் பாக்க சண்டை போடறான். வித்தியாசம் அவ்வளவு தான். ரெண்டுபேரும் ஒரே குறிக்கோளோட தான் செயல்படறாங்க.

ரஜினி, சத்யராஜ், ஒகேனக்கல் :- எதுக்கு உபயோகபட்டதோ இல்லையோ.....புது பதிவு எழுத கரு கிடைக்காத தமிழ் பதிவர்களுக்கு ஒரே கொண்டாட்டம் தான் போங்க.

கயல்விழி :- தமிழர் வாழ்வுல ஒரு புத்துணர்ச்சி கொண்டு வந்த நமீதா, ஷகீலா எல்லாம் wastennu சொல்றீங்களா ?

manikandan said...

அமெரிக்கால பாதிபேரு obeseaa இருக்கறதுக்கும் தமிழ் சினிமா தான் காரணமா ?

manikandan said...

///சினிமாவினால் நாம் இழந்தது ஏராளம். நல்ல புத்தகங்களைப்படித்தல், சிந்தித்தல், குடும்பம் மற்றும் நண்பர்களுடன் நேரம் செலவிடுதல்//////

குடும்பத்தோட சினிமா போற மக்கள் ரொம்ப அதிகம் தாங்க .

*****நல்ல புத்தகங்களைப்படித்தல்*****

உங்களுக்கு நக்கல் ரொம்ப ஜாஸ்தி. எது நல்ல புத்தகம்ன்னு அடிச்சுக்க ஆரம்பிப்பாங்க.

******சிந்தித்தல்*******

ஏன் நல்ல சிந்தனைன்னு சொல்லாம விட்டீங்க ?

manikandan said...

இவ்வளவு போதும் இப்போ. நீங்க சாயங்கலாமா வந்த உடன மிச்சத்த பேசலாம்.

Anonymous said...

கயல்,

இந்த NEWS-அ படிங்க.

http://thatstamil.oneindia.in/news/2008/08/07/tn-rajini-fans-to-agitate-against-tamil-magazine.html

இவங்கலாம் திருந்துவாங்கனு நினைக்கிறீங்களா ? வாய்ப்பே இல்ல... hmmmm

கூடுதுறை said...

அக்கா அடிச்சிட்டிங்க ஒரே பாலில் 2 சிக்ஸர்...

நீங்கள் தமிழ் மக்கள் மனதிலும் இருப்பதுதான்... ஆனால் என்ன செய்வது வேற வழியில்லையே...

நடிகர்களைத்தான் எல்லோரும் அரசியலுக்கு வாருங்கள் கூறுகிறார்களே தவிர மற்றவர்களை அரசியலுக்கு வர அழைப்பதில்லையே...

மற்றவர்களும் அரசியலை ஒரு கெட்ட மற்றும் அநியாயம் செய்யும் தொழிலாகத்தானே பார்க்கிறார்கள்....

கிரி said...

உலக வெப்பமயமாகுதலை விட சூடா இருக்கு :-)...நல்லா எழுதி இருக்கீங்க.

மோகன் said...

கயல்..
உங்கள் கோபம் புரிகிறது.சினிமாவால் நாம் இழந்தது ஏராளம்.. உண்மைதான். ஆனால் அந்த இழப்புக்கு யார் காரணம்? யாரும் வலுக்கட்டாயமாக நம்மை இழுத்து சென்று திரைஅரங்கிலோ,டிவி முன்போ அமரவைப்பதில்லையே...ஆட்டுமந்தைகளில் ஒரு ஆடாக நாம் இருக்கும்வரை,ஆட்டுவிக்கும் கூத்தாடி கூட்டமும்,அரசியல்வாதிகளும் இருக்கதான் செய்வார்கள்.

மா(ற்)றவேண்டும் என்ற சிந்தனை நம்மிடமிருந்துதான் ஆரம்பிக்கவேண்டும்.
இதுவரை என்ன செய்திருக்கிறோம் நாம்? தமிழகத்திலே பள்ளிக்கல்லூரிப் படிப்புகளை முடித்துவிட்டு,வேலைக்காக வெளிமாநிலங்களுக்கோ, வெளிநாட்டுக்கோ சென்றுவிட்டு ஒரளவு செட்டில் ஆனவுடன்,இணைய உலகில் புகுந்து தமிழக நிலைமையை அக்குவேறு ஆணிவேறாக அலசி காயப்போடுவதை தவிர வேறு என்ன செய்துள்ளோம் ?
அட்லீஸ்ட் நடைப்பெறும் தேர்தல்களில் ஓட்டாவது போட்டுள்ளோமா?? இல்லை அரசியல் வாழ்க்கையில் இறங்கும் துணிவுதான் நமக்கு இருக்கிறதா???
மேலும் அரசியல்வாதிகளின் வாழ்க்கை பதவியில் இருக்கும்வரைதான்..ஆனால் அரசாங்க இயந்திரம் இயக்கப்படுவது, நம்மைப்போல் படித்தவர்களால்தான்.எவ்வளவுப்பேர் செய்யவேண்டிய கடைமைகளை செய்கிறார்கள்???
மாற்றம் என்பது நம் ஒவ்வொருவரிடமிருந்தும் ஆரம்பிக்க வேண்டும்... அது நிகழாதவரை,திரைபிம்பங்களை நம்பி நாட்டை ஒப்படைத்துவிட்டு,ஒட்டுமொத்தமக்களும் ஆட்டுமந்தைகளாகவும், நம்மைப் போன்றவர்கள், நம் கோபங்களை இதுப்போன்ற இணைய உலகில் கொட்டிவிட்டு,அடுத்த ப்ளாகை படிக்கப்போகவேண்டியதுதான்.....

உண்மைத்தமிழன் said...

கயல் நல்லவொரு சிந்தனை..? எல்லாருக்கும் இருக்கிறதுதான்.. ஆனாலும் சொல்ல முடியல..

சினிமாக்காரர்களை தலையில் தாங்குவது மக்களுக்குப் பிடிக்கிறதே என்பதால்தான். பிடிப்பது எதனால் என்பதற்கு யாராலும் சரியான பதிலைச் சொல்ல முடியாது..

சினிமாக்காரர்களைவிட அதிகமாக நடிப்பவர்கள் அரசியல்வாதிகள்தான். தற்போதைய அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அவர்கள்தான் முழு முதற் காரணம். இங்கே சினிமாக்காரர்களை கொஞ்சம் தங்களுக்காக அப்படி, இப்படி என்று ஆட, அலைய விடுகிறார்கள்.

ஒகனேக்கல் திட்டத்தை எதிர்க்கக்கூடாது என்று கர்நாடக காங்கிரஸ் கட்சிக்கு சோனியா உத்தரவிடலாம். இப்படியொரு உத்தரவை இடாமல் போனால் எங்களது ஆதரவை இழக்க நேரிடும் என்று தி.மு.க. எச்சரித்து வெளிப்படையாக அரசியல் செய்யலாம்.

ஆனால் இவர்கள் இருவருமே இதை செய்யாமல் போய் இரு தரப்பு கலைஞர்களை வைத்து பிரச்சினையை பெரிதாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

கலைஞர்களுக்கோ ஆட்சியாளர்களை பகைத்துக் கொள்ள முடியாதே என்ற நிலைமை. வராவிட்டால் பார்.. பார்.. அந்த மாநிலத்திற்கு சப்போர்ட் செய்கிறார் என்று பொய்ப்பரப்புரை பரப்பப்படுமே.. அதற்குத்தான் அவர்கள் பயப்படுகிறார்கள்.

ஆளும்கட்சிக்காரன் வீட்டு மாடு கன்னு போடவில்லையென்றால் அதுகூட எதிர்க்கட்சிக்காரன் செய்த சதிவேலைதான் என்பதை நம்பக்கூடியவர்கள் நமது மக்கள்.. வேறு என்ன செய்வார்கள் கலைஞர்கள்..?

ரஜினியை விட்டுவிடுங்கள். சத்யராஜை விட்டுவிடுங்கள். அந்த உண்ணாவிரதப் போராட்டம் தேவைதானா..? ஏன் கலைஞரே ஆதரவு வாபஸ் என்று சொல்லி சோனியாவிடம் அம்மாநில காங்கிரஸ் ஆதரவை வாங்கக் கூடாதா? இல்லாவிடில் ஆளுகின்ற பா.ஜ.க. அரசுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி சொல்லக் கூடாதா..? அம்மாநிலத்து காங்கிரஸின் ஆதரவும் நமக்குக் கிடைத்துவிட்டால் நமக்கும் சாதகம்தானே..

காவிரி தண்ணி பிரச்சினையையே முடிக்க மறுக்கிறார்கள். இதையா செய்யப் போகிறார்கள்..?

எல்லாம் அரசியல்.. இதில் கலைஞர்கள் வெறும் ஊறுகாய் மட்டுமே..

வெண்பூ said...

கயல் அற்புதமாக எழுதியிருக்கிறீர்கள். கட்டுரையின் மையக்கருத்தை 100 சதவீதம் ஆதரித்தாலும், ஒருசில விசயங்களை ஒத்துக்கொள்ள முடியவில்லை. முக்கியமாக, "சினிமா கண்டுபிடிக்காமலேயே இருந்திருக்கலாம்". கோவிலில் பெண்க‌ளின் ந‌ட‌ன‌ம், தெருக்கூத்து, நாட‌க‌ம் என்ற‌ ப‌ரிணாம‌ வ‌ள‌ர்ச்சியின் அடுத்த‌ க‌ட்ட‌ம்தான் சினிமா. ஒரே பிர‌ச்சினை, கோவில் பெண்க‌ளோ, தெருக்கூத்து க‌லைஞ‌னோ, நாட‌க‌ ந‌டிக‌னோ நாடாள‌ முடிய‌வில்லை (இந்த‌ மான‌ங்கெட்ட‌ மக்களாட்சி முறை இல்லாத‌து கூட‌ கார‌ணமாக‌ இருக்க‌லாம்).

manikandan said...

**********ரஜினியை விட்டுவிடுங்கள். சத்யராஜை விட்டுவிடுங்கள். அந்த உண்ணாவிரதப் போராட்டம் தேவைதானா ******

நல்ல கேள்வி உண்மை தமிழன்.

அந்த போராட்டத்துக்கு வந்து இருந்த ஸ்ரேயா அக்கா அழகா இருந்தாங்க. அந்த போராட்டம் நடக்காட்டி அவங்கள பாக்க முடியுமா ? இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்க ? இத்தனை பிரபலங்களையும் நேர்ல பாக்றது எவ்வளவு கஷ்டம் தெரியுமா ? ஒரே சமயத்துல எல்லாரையும் பாத்து ஜென்ம சாபல்யம் அடைஞ்ச தமிழ் குஞ்சுங்களோட மனநிலைய புரிஞ்சிகாம நீங்க உளறாதீங்க.

தப்பா நினைச்சிக்காதீங்க. "அந்த போராட்டம் தேவை தானா" அப்படிங்கற கேள்வி படிச்சி படிச்சி அலுத்து போச்சு. அந்த போராட்டம் தேவையோ / தேவை இல்லையோ, அத பத்தி நம்ப பேசறது தேவையற்ற ஒன்று. ஏற்கனவே அளவுக்கு அதிகமா இதை பத்தி விவாதிசாச்சு. போதும் ஸ்டாப். (அடுத்த போராட்டம் வரைக்கும் )

manikandan said...

********சினிமாக்காரர்களைவிட அதிகமாக நடிப்பவர்கள் அரசியல்வாதிகள்தான்******

அரசியல்வாதிய விட அதிகமா நடிக்கறது நான் தான். ( நானும் நீயும்ன்னு கூட பதிவு எழுதலாம் போல இருக்கே )

manikandan said...

*********மா(ற்)றவேண்டும் என்ற சிந்தனை நம்மிடமிருந்துதான் ஆரம்பிக்கவேண்டும்.
இதுவரை என்ன செய்திருக்கிறோம் நாம்? தமிழகத்திலே பள்ளிக்கல்லூரிப் படிப்புகளை முடித்துவிட்டு,வேலைக்காக வெளிமாநிலங்களுக்கோ, வெளிநாட்டுக்கோ சென்றுவிட்டு ஒரளவு செட்டில் ஆனவுடன்,இணைய உலகில் புகுந்து தமிழக நிலைமையை அக்குவேறு ஆணிவேறாக அலசி காயப்போடுவதை தவிர வேறு என்ன செய்துள்ளோம் ?
அட்லீஸ்ட் நடைப்பெறும் தேர்தல்களில் ஓட்டாவது போட்டுள்ளோமா?? இல்லை அரசியல் வாழ்க்கையில் இறங்கும் துணிவுதான் நமக்கு இருக்கிறதா???
மேலும் அரசியல்வாதிகளின் வாழ்க்கை பதவியில் இருக்கும்வரைதான்..ஆனால் அரசாங்க இயந்திரம் இயக்கப்படுவது, நம்மைப்போல் படித்தவர்களால்தான்.எவ்வளவுப்பேர் செய்யவேண்டிய கடைமைகளை செய்கிறார்கள்???
மாற்றம் என்பது நம் ஒவ்வொருவரிடமிருந்தும் ஆரம்பிக்க வேண்டும்... அது நிகழாதவரை,திரைபிம்பங்களை நம்பி நாட்டை ஒப்படைத்துவிட்டு,ஒட்டுமொத்தமக்களும் ஆட்டுமந்தைகளாகவும், நம்மைப் போன்றவர்கள், நம் கோபங்களை இதுப்போன்ற இணைய உலகில் கொட்டிவிட்டு,அடுத்த ப்ளாகை படிக்கப்போகவேண்டியதுதான் ************

அடுத்தது என்ன ப்ளாக் படிசீங்கன்னு சொல்லுங்க. நாங்களும் வருவோம் தான.

மோகன் நீங்க சொல்றது முக்கால்வாசி உண்மை தான். ஆனா எல்லா மாநிலத்துகாரனும் இது தான் பண்றான். ஆனா அவனுங்க முதலமைச்சரா ராப்ரிதேவி, தேவிலால், தேவகௌடா மாதிரி ஆளுங்கள தான் வராங்க. நம்ப மட்டும் தான் MGR, ஜெயலலிதா, ரஜினி, கார்த்திக், ஜே கே ரிதீஷ்ன்னு போய்க்கிட்டு இருக்கோம்.

வால்பையன் said...

நியாயமான கோபம் தான்
//couch potato//
இதுக்கு என்ன அர்த்தம்

வால்பையன்

கயல்விழி said...

//ஒலிம்பிக் போட்டிகளில் சீனாவிற்கு இருக்கும் வேகம் இந்தியாவிற்கு இல்லாமல் இருக்க என்ன காரணம்? குட்டி குட்டி நாடுகள் எல்லாம் அனைத்துலக போட்டியில் முன்னோடிகளாக வர முடியும் என்றால் ஏன் இந்தியாவால் முடியவில்லை... சினிமா கலைஞர்களுக்கு கொடுக்கும் முக்கியதுவத்தை ஏன் இம்மாதிரியான போட்டிகளுக்கு கொடுப்பதில்லை. //

வருகைக்கு ரொம்ப நன்றி விக்னேஷ்வரன்.

உலகத்திலேயே மக்கள் தொகையில் இரண்டாம் இடத்தைப்பெற்ற இந்தியா, ஒலிம்பிக்ஸ் போட்டிக்கு சென்று கடைசியில் தலைகுனிவோடு திரும்புகிறது. இதற்கு காரணம், இந்திய மக்களுக்கு விளையாட்டென்றால் அது கிரிகெட் மட்டும் தான். மற்றதை எல்லாம் விளையாட்டாகவே யாரும் கருதுவதில்லை. அந்த கிரிகெட்டிலும் நாம் சரியாக விளையாடுவதில்லை என்பது காமெடி.

சினிமா, டிவி, கிரிகெட், வேலை, குடும்பம் - இதற்குள் மூழ்கி மக்கள் தொலைந்துவிடுகிறார்கள்

கயல்விழி said...

வணக்கம் அவனும், அவளும்

//எதுக்கு கொடுக்கணும் ?//

ஏன் கொடுக்கக்கூடாது?

கயல்விழி said...

//கல்லூரியில் படிக்கற சமயத்துல சண்டை போடறாங்க.....காலம் முழுக்க அவங்களுக்கு ரசிகனா இருக்கறது இல்ல பசங்க. அத புரிஞ்சிக்கோங்க.//

ஏன் இருப்பதில்லை? வருண் கூட ஒரு குறிப்பிட்ட நடிகரின் தீவிர விசிறி.

கயல்விழி said...

// தமிழர் வாழ்வுல ஒரு புத்துணர்ச்சி கொண்டு வந்த நமீதா, ஷகீலா எல்லாம் wastennu சொல்றீங்களா ?//

என்னைப்பொறுத்த வரையில் ரொம்ப வேஸ்ட்!

மோகன் said...

////
மோகன் நீங்க சொல்றது முக்கால்வாசி உண்மை தான். ஆனா எல்லா மாநிலத்துகாரனும் இது தான் பண்றான். ஆனா அவனுங்க முதலமைச்சரா ராப்ரிதேவி, தேவிலால், தேவகௌடா மாதிரி ஆளுங்கள தான் வராங்க. நம்ப மட்டும் தான் MGR, ஜெயலலிதா, ரஜினி, கார்த்திக், ஜே கே ரிதீஷ்ன்னு போய்க்கிட்டு இருக்கோம்.
//////

ராப்ரிதேவி, தேவிலால், தேவகௌடா
இவர்களால் அந்தந்த மாநிலங்கள் மேலும் பின்தங்கிப் போயுள்ளதே தவிர என்ன மாற்றம் வந்தது??அவர்களுக்கு பிறகு அவர்கள் வாரிசுகள்தான் வருகிறார்கள். அதே நிலைதான் தமிழகத்திலும்.2011'ல் எத்தனை முதல்மைச்சர்கள் தமிழகத்துக்கு கிடைக்கப்போகிறார்களோ..தெரியவில்லை.
அட்லீஸ்ட் லாலு'வாவது மத்திய அமைச்சரான பிறகு நஷ்டத்தில் ஓடிய ரயில்வே துறையை கோடிகள் குவிக்கும் துறையாக மாற்றியிருக்கிறார்.அவர் எதுவும் மாயம் செய்யவில்லை...செயல்படும் அதிகாரிகளுக்கு முழு சுதந்திரமும், காலத்திற்கு ஏற்ற மாற்றங்களை செயல்படுத்தவும் அனுமதித்தார்.....தமக்கு தெரியாத்தை,தைரியமாக விசயம்றிந்தவர்களிடம் நம்மிக்கையாக ஒப்படைத்துவிட்டு,அவர்கள் பாதை மாறாமல் லகானை லாவகமாக கையாளத்தெரிந்தால்..லாலு போல எவர் வேண்டுமானாலும் வெற்றியடையலாம்......

கயல்விழி said...

//அமெரிக்கால பாதிபேரு obeseaa இருக்கறதுக்கும் தமிழ் சினிமா தான் காரணமா ?//

அதற்கு அவர்களின் அதிக கொழுப்பு + அதிக கார்போஹைட்ரேட் உணவுப்பழக்கங்கள் முக்கியக்காரணம்.

கயல்விழி said...

//
குடும்பத்தோட சினிமா போற மக்கள் ரொம்ப அதிகம் தாங்க//

இதை நான் முன்பே எழுதவேண்டும் என்று நினைத்தேன். பல தமிழ் சினிமாக்கள், குடும்பத்துடன் போய் பார்க்கும் தகுதியை இழந்துவிட்டன, முக்கியமாக குழந்தைகள். சினிமாவுக்கு குடும்பத்தோடு போவதை விட க்ரானைட் சுவரில் முட்டிக்கலாம்.

கயல்விழி said...

//உங்களுக்கு நக்கல் ரொம்ப ஜாஸ்தி. எது நல்ல புத்தகம்ன்னு அடிச்சுக்க ஆரம்பிப்பாங்க. //

எது நல்ல புத்தகமா? அது அவரவர் ரசனையைப்பொறுத்தது. எதை படித்தாலும் ஏதாவது தகவலை அறிந்துக்கொள்ளக்கூடிய புத்தகமாகவோ அல்லது சிந்தனையை தூண்டக்கூடிய புத்தகமாகவோ இருப்பது நலம்.

கயல்விழி said...

//இவ்வளவு போதும் இப்போ. நீங்க சாயங்கலாமா வந்த உடன மிச்சத்த பேசலாம்.//

விளக்கமான கருத்துக்களுக்கு நன்றி அவளும், அவனும்.

கயல்விழி said...

//http://thatstamil.oneindia.in/news/2008/08/07/tn-rajini-fans-to-agitate-against-tamil-magazine.html//

:( :( திருந்தாத ஜென்மங்கள்!

வருகைக்கு நன்றி பைத்தியம்.

Indian said...

//நியாயமான கோபம் தான்
//couch potato//
இதுக்கு என்ன அர்த்தம் //

couch - நல்ல வசதியான சோபா
potato - புடிச்சு வச்ச புள்ளையாரு

காலைல இருந்து மாலை வரைக்கும் ஆடாம அசங்காம வசதியான சோபாவுல உக்காந்து காலாட்டிட்டே டிவி பாத்து பொழுத ஓட்டறாங்களே ? அவுங்கதான் couch potato

கயல்விழி said...

//அக்கா அடிச்சிட்டிங்க ஒரே பாலில் 2 சிக்ஸர்...//

மிக்க நன்றி கூடுதுறை அங்கிள் :) :)

கயல்விழி said...

//உலக வெப்பமயமாகுதலை விட சூடா இருக்கு :-)...நல்லா எழுதி இருக்கீங்க.//

வாங்க கிரி, நன்றி :)

கயல்விழி said...

வருகைக்கு நன்றி மோகன் :)

உங்கள் விளக்கமான கருத்துக்களுக்கும் நன்றி. நீங்கள் சொல்வது ரொம்ப சரி, மாற்றம் மக்களிடம் தான் வரவேண்டும். ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள்

manikandan said...

******இதை நான் முன்பே எழுதவேண்டும் என்று நினைத்தேன். பல தமிழ் சினிமாக்கள், குடும்பத்துடன் போய் பார்க்கும் தகுதியை இழந்துவிட்டன, முக்கியமாக குழந்தைகள். சினிமாவுக்கு குடும்பத்தோடு போவதை விட க்ரானைட் சுவரில் முட்டிக்கலாம்******

இத நான் ஒத்துக்கமாடேன். இப்ப வர்ற சராசரி படங்கள் ஒரு பத்து வருடம் முன்னாடி வந்த படத்தவிட எவ்வளவோ தேவலாம்.

கயல்விழி said...

வாங்க உண்மைத்தமிழன், முதன் முறையாக வந்திருக்கிறீர்கள். இங்கே அனைவரும் என்னிடம் "என்ன உண்மைத்தமிழன் மாதிரி பின்னூட்டம் எழுதறீங்க" என்று கேட்டிருக்கிறார்கள். And finally I meet you! கருத்துக்களுக்கு நன்றி.

//எல்லாம் அரசியல்.. இதில் கலைஞர்கள் வெறும் ஊறுகாய் மட்டுமே..//

சினிமாவும் அரசியலும் தமிழ்நாட்டைப்பொறுத்தவரை ஒன்றோடு ஒன்று ரொம்ப தொடர்புடையது. மார்கெட் போன தமிழ் நடிகர்கள் பேக் அப் ப்ளானாக அரசியலை வைத்திருக்கிறார்கள். கலைஞர்கள் தங்களுக்கு ஆதாயம் இருப்பதால் தான் அரசியல்வாதிகளோடு சேர்ந்து ஆடுகிறார்கள், ஒன்றும் தெரியாத அப்பாவிகள் இல்லை.

கயல்விழி said...

//இத நான் ஒத்துக்கமாடேன். இப்ப வர்ற சராசரி படங்கள் ஒரு பத்து வருடம் முன்னாடி வந்த படத்தவிட எவ்வளவோ தேவலாம்.//

எனக்கு இதில் கருத்து வேறுபாடு இருக்கிறது அவனும் அவளும். சமீப படங்களில் வன்முறை, ஆபாசம் எல்லாம் ரொம்ப அதிகம். குழந்தைகள் பார்க்க தகுந்தது இல்லை.

manikandan said...

***விளக்கமான கருத்துக்களுக்கு நன்றி அவளும், அவனும்***

கயல்விழி,

நான் என்ன கருத்து சொன்னேன் ?

நீ எழுதி கிழிச்சது போதும். இனிமே இந்த பக்கமே வராதன்னு மறைமுகமா சொல்றீங்களா ?

இன்னும் ஒரு மணிநேரம் ஆகும் நான் கிளம்ப.

கயல்விழி said...

//ஒரே பிர‌ச்சினை, கோவில் பெண்க‌ளோ, தெருக்கூத்து க‌லைஞ‌னோ, நாட‌க‌ ந‌டிக‌னோ நாடாள‌ முடிய‌வில்லை (இந்த‌ மான‌ங்கெட்ட‌ மக்களாட்சி முறை இல்லாத‌து கூட‌ கார‌ணமாக‌ இருக்க‌லாம்).
//

வருகைக்கு நன்ரி வெண்பூ :)

மக்களாட்சி என்ற கான்செப்டில் எந்த தவறும் இல்லை. எந்த ஆட்சி முறையாக இருந்தாலும் அதை ஒழுங்கீனமாக மாற்ற முடியும் என்பதற்கு ஜனநாயக நாடான இந்தியா நல்ல உதாரணம்!

கயல்விழி said...

//ஒரே பிர‌ச்சினை, கோவில் பெண்க‌ளோ, தெருக்கூத்து க‌லைஞ‌னோ, நாட‌க‌ ந‌டிக‌னோ நாடாள‌ முடிய‌வில்லை (இந்த‌ மான‌ங்கெட்ட‌ மக்களாட்சி முறை இல்லாத‌து கூட‌ கார‌ணமாக‌ இருக்க‌லாம்).
//

வருகைக்கு நன்ரி வெண்பூ :)

மக்களாட்சி என்ற கான்செப்டில் எந்த தவறும் இல்லை. எந்த ஆட்சி முறையாக இருந்தாலும் அதை ஒழுங்கீனமாக மாற்ற முடியும் என்பதற்கு ஜனநாயக நாடான இந்தியா நல்ல உதாரணம்!

manikandan said...

*****ராப்ரிதேவி, தேவிலால், தேவகௌடா
இவர்களால் அந்தந்த மாநிலங்கள் மேலும் பின்தங்கிப் போயுள்ளதே தவிர என்ன மாற்றம் வந்தது*****

மோகன்,

நான் சொல்ல வந்ததும் இதே தான். சினிமாகாரன் மட்டும் இல்ல. யார் வந்தாலும் நிலைமை இது தான்.

கயல்விழி said...

//அந்த உண்ணாவிரதப் போராட்டம் தேவைதானா..? ஏன் கலைஞரே ஆதரவு வாபஸ் என்று சொல்லி சோனியாவிடம் அம்மாநில காங்கிரஸ் ஆதரவை வாங்கக் கூடாதா? //

நல்ல பாயிண்ட் உண்மைத்தமிழன். காவிரி பிரச்சினை மட்டுமல்ல, தங்களுக்கு சம்மந்தமில்லாத பிரச்சினைகளில், அரசியல் அறிவோ, படிப்பறிவோ இல்லாத நடிகர்/நடிகைகள் கலந்துக்கொள்ளாமல் இருப்பதே நலம்.

கயல்விழி said...

நன்றி வால்பையன் :)

Couch potato - சோபாவில் டிவி முன்னால் உட்கார்ந்து, உட்கார்ந்து உருளைக்கிழங்கு போல உடல் பருத்தவர் என்று நினைக்கிறேன்.

கயல்விழி said...

//அவர் எதுவும் மாயம் செய்யவில்லை...செயல்படும் அதிகாரிகளுக்கு முழு சுதந்திரமும், காலத்திற்கு ஏற்ற மாற்றங்களை செயல்படுத்தவும் அனுமதித்தார்.....தமக்கு தெரியாத்தை,தைரியமாக விசயம்றிந்தவர்களிடம் நம்மிக்கையாக ஒப்படைத்துவிட்டு,அவர்கள் பாதை மாறாமல் லகானை லாவகமாக கையாளத்தெரிந்தால்..லாலு போல எவர் வேண்டுமானாலும் வெற்றியடையலாம்......
//

நீங்கள் சொல்லி இருப்பது உண்மைதான். இருந்தாலும் ஏன் விஷயம் தெரியாத ஒருவர் அந்த துறைக்கு மந்திரியாக வரவேண்டும்? அந்த துறையிலேயே இருப்பவர், படித்தவருக்கு அந்த பதவியைக்கொடுத்தால் இன்னும் திறமையாக நிர்வாக செய்ய முடியும் இல்லையா?

அரசியலுக்கு யாரும் சேவை செய்ய வருவதில்லை, சம்பாதிப்பதே முதல் குறிக்கோள். எனவே, அரசியலுக்கும் குறைந்தபட்சமாக ஒரு பொலிடிகல் டிகிரியாவது இருந்தால் நலமாக இருக்கும். படிப்பறிவில்லாதவர்களை தேர்தலில் நிற்க அனுமதிக்கக்கூடாது என்பது என் கருத்து.

கயல்விழி said...

//நான் என்ன கருத்து சொன்னேன் ?

நீ எழுதி கிழிச்சது போதும். இனிமே இந்த பக்கமே வராதன்னு மறைமுகமா சொல்றீங்களா ?//
//நான் சொல்ல வந்ததும் இதே தான். சினிமாகாரன் மட்டும் இல்ல. யார் வந்தாலும் நிலைமை இது தான்.
//

கீழே இருப்பது நீங்கள் சொன்ன கருத்து தானே? இது போன்ற நல்ல கருத்துக்களை நடுநடுவே எழுதி இருக்கிறீர்கள், அதற்கு நன்றி :)

கயல்விழி said...

உங்களுடைய விளக்கம் இப்போ தான் பார்த்தேன், நன்றி இந்தியன் :)

கயல்விழி said...

//Our education system making us as Literate, but not educated.
//

ஜோசப் பால்ராஜ், 100% சரியாக சொல்லி இருக்கிறீர்கள். நம்ம கல்விமுறை, ஏதாவது வெளிநாட்டுக்காரர்களுக்கு காலம் முழுவதும் படித்த அடிமையாக வேலை செய்யவே உதவும். (ஐஐடி போன்ற சில படிப்புக்கள் நீங்கலாக)

வருண் said...

////அவனும் அவளும் said...
****" இதில் தொலைக்காட்சிகளுக்கே மக்களை "couch potato" ஆக்கியதில் பெரும்பங்கு உண்டு என்பது என் கருத்து.
----வளவன்-----

அதைப்பற்றியெல்லாம் யாருக்கு கவலை??
---வருன்------
*********

இதுக்கு எல்லாம் நான் கவலைப்பட்டுக்கிட்டு இருக்கனுமா ?

பாருங்க. ஒருத்தன் உடம்ப நல்லா வச்சிகனம்ன்னு உடற்பயிற்சி பண்றான். இன்னொருத்தன் விஜய், அஜித் படம் பாக்க சண்டை போடறான். வித்தியாசம் அவ்வளவு தான். ரெண்டுபேரும் ஒரே குறிக்கோளோட தான் செயல்படறாங்க.

ரஜினி, சத்யராஜ், ஒகேனக்கல் :- எதுக்கு உபயோகபட்டதோ இல்லையோ.....புது பதிவு எழுத கரு கிடைக்காத தமிழ் பதிவர்களுக்கு ஒரே கொண்டாட்டம் தான் போங்க.///

நடிகர்களே ஹொகேனக்கல் பிரச்சினைக்கு அல்லthu காவேரி பிரச்சினைக்கு தேவை இல்லாதவர்கள்.

Why cant we UNDERSTAND THIS??

Why BLAME them for inability of our govt and democracy???

சுப்ரீம் கோர்ட் ஆர்டரை "எக்சக்யூட்" பண்ன முடியாத நிலைமையில் நம் ஜனநாகம் இருக்கு!!! :( :(

இதுக்கு நடிகர் சத்ஜராஜோ, ரசினியோ தேவை இல்லை.

அப்துல் காதருக்கும் அம்மாவாசைக்கும் என்னங்க சம்மந்தம்??

நமக்கு எதுக்கு நடிகர்கள் உதவி இங்கே??

ஜனங்களும் (xclude the actors here), அரசியல் தலைவர்களும் இதை "ரிசால்வ்" பண்ணனும்!

இதை புரிந்துகொள்ளாத ஞாநிபோல் விமர்ச்கர்கள் இதை வைத்து பிழைப்பு நடத்துகிறார்கள்!

என்னதை சொல்றது???

கயல்விழி said...

//நடிகர்களே ஹொகேனக்கல் பிரச்சினைக்கு அல்லthu காவேரி பிரச்சினைக்கு தேவை இல்லாதவர்கள்.

Why cant we UNDERSTAND THIS??
//

வருண்

தமிழக மக்கள் யாருமே இந்த நடிகர்களிடம் வந்து காவிரி பிரச்சினைக்காக போராடுங்கள், வாய்ஸ் கொடுங்கள் என்று கெஞ்சவில்லை. இந்த நடிகர்களே தங்களுடைய படம் ரீலீஸ் ஆகும் போதும், அல்லது ரிட்டயர் ஆன பிறகு பிஸ்னஸுக்காகவும் வீணாக உண்ணாவிரதம் இருத்தல், தேர்தல் நேரத்தில் அறிக்கையிடுதல் அல்லது ஒரு கட்சிக்காக கொள்கைப்பரப்புதல் என்று வலிய வந்து செய்கிறார்கள். இதற்கு காரணம் அவர்களுடைய சுயநலமே தவிர மக்கள் மேல் அவர்களுக்கு அக்கறை இல்லை.

ஞானி போன்றவர்கள் இது போன்ற பிரச்சினையை வைத்து பிழைப்பதை விட பல மடங்கு அதிகமாக இந்த நடிகர்கள் அரசியலை வைத்தும், திரைப்படத்தை வைத்தும் பிழைக்கிறார்கள்.

Indian said...

எனக்கு எந்த நடிகரும் கட்சி ஆரம்பித்தால் எந்தப் பிரச்சினையும் இல்லை, அது விஜயகாந்தோ அல்லது சரத்குமாரோ இல்ல JK ரித்தீசோ. அவர்களுக்கு நாட்டை முன்னேற்றும் எண்ணம் உண்மையிலேயே இருக்கிறதா, அதற்கான வழிமுறைகளை கைவசம் வைத்திருக்கிறார்களா, உருப்படியான கொள்கைகள் இருக்கிறதா, முந்தைய பொது வாழ்க்கையில் நேர்மை இருக்கிறதா என மட்டுமே பார்க்க விரும்புகிறேன்.

நடிகன் நாடாள அருகதை இல்லாதவர்கள் என்றால் எம்ஜியார் தூக்கிப் பிடித்த சத்துணவுத் திட்டம் இன்று நாடளவில் பாரட்டப்படுகிறதே?


இன்னிக்கி ஒரு கட்சி ஆரம்பிக்கணும்னா குறைஞ்சது 100 கோடி ரூபாய் seed money தேவைப்படுது. இவ்வளவு பணம் உங்களிடமோ என்னிடமோ உள்ளதா? என்னுடைய பார்வையில் இப்பல்லாம் கட்சி நடத்துவதென்பது ஒரு பப்ளிக் லிமிடெட் கம்பெனி அல்லது பார்ட்னர்ஷிப் கம்பெனி நடத்துவது போன்றதுதான்.

யாரு வேணும்னாலும் கட்சி ஆரம்பிக்கணும்னா கட்சி நிதி சேர்ப்பதை சட்டபூர்வமாக்கி காசோலை மூலமாக நிதி வாங்குவதை கட்டாயமாக்க வேண்டும்.

இல்லாங்காட்டி, ஒன்னு கட்சி ஆரம்பிக்கறவர் நடிகரா இருக்கணும் இல்லாட்டி தொழில் அதிபரா இருக்கணும்.

அதனால நடிகர்கள் வேணாம்னா, யார்தான் நாடாள்வதாம்?

மறு வாசிப்பில எனக்கே சிரிப்பா இருக்கு.
பெக் அதிகமாயிருச்சோ?

வருண் said...

****

வருண்

தமிழக மக்கள் யாருமே இந்த நடிகர்களிடம் வந்து காவிரி பிரச்சினைக்காக போராடுங்கள், வாய்ஸ் கொடுங்கள் என்று கெஞ்சவில்லை. இந்த நடிகர்களே தங்களுடைய படம் ரீலீஸ் ஆகும் போதும், அல்லது ரிட்டயர் ஆன பிறகு பிஸ்னஸுக்காகவும் வீணாக உண்ணாவிரதம் இருத்தல், தேர்தல் நேரத்தில் அறிக்கையிடுதல் அல்லது ஒரு கட்சிக்காக கொள்கைப்பரப்புதல் என்று வலிய வந்து செய்கிறார்கள். இதற்கு காரணம் அவர்களுடைய சுயநலமே தவிர மக்கள் மேல் அவர்களுக்கு அக்கறை இல்லை. ***

As far as I know, there was no actors movie was releasing during hogenakkal issue brought up. It is some actors forced other actors to participate to "execute" their drama!

கயல்விழி said...

//நடிகன் நாடாள அருகதை இல்லாதவர்கள் என்றால் எம்ஜியார் தூக்கிப் பிடித்த சத்துணவுத் திட்டம் இன்று நாடளவில் பாரட்டப்படுகிறதே?
//

இந்தியன்,

எம்ஜிஆரின் சத்துணவு திட்டம், பல வருடங்களாக பல நாடுகளில் அரசு பள்ளிகளில் செயல்படுத்தப்பட்ட திட்டமே தவிர, இன்னோவேட்டிவ் கண்டுபிடிப்பு இல்லை. அந்த சத்துணவு திட்டம் சென்சேஷனலானது என்றாலும் செயல்படுத்திய விதம் சரி இல்லை, சரியான திட்டமிடுதல் இல்லை. அதை இன்னும் எபெக்டிவாக செய்திருக்கலாம். மேலும் இதைத்தவிர, எம்ஜிஆர்ரைப்பற்றி ஊழல் போன்ற விமர்சனங்கள் உண்டு.

Selva Kumar said...

கயல் மற்றும் இந்தியன்,

எனக்கு தெரிஞ்சு சத்துணவு திட்டம் கொண்டு வந்தது காமராசர்..

MGR அல்ல..

Selva Kumar said...

//அவர்களுக்கு நாட்டை முன்னேற்றும் எண்ணம் உண்மையிலேயே இருக்கிறதா, அதற்கான வழிமுறைகளை கைவசம் வைத்திருக்கிறார்களா, உருப்படியான கொள்கைகள் இருக்கிறதா, முந்தைய பொது வாழ்க்கையில் நேர்மை இருக்கிறதா என மட்டுமே பார்க்க விரும்புகிறேன்//


வழிமொழிகிறேன்...

Selva Kumar said...

//ஞானி போன்றவர்கள் இது போன்ற பிரச்சினையை வைத்து பிழைப்பதை விட பல மடங்கு அதிகமாக இந்த நடிகர்கள் அரசியலை வைத்தும், திரைப்படத்தை வைத்தும் பிழைக்கிறார்கள்.//

ஞாநிய விடமாட்டீங்க போல.:))

வருண் said...

*** ஞானி போன்றவர்கள் இது போன்ற பிரச்சினையை வைத்து பிழைப்பதை விட பல மடங்கு அதிகமாக இந்த நடிகர்கள் அரசியலை வைத்தும், திரைப்படத்தை வைத்தும் பிழைக்கிறார்கள்.

8 August, 2008 10:56 ***

Well I beg to disagree on this, Kayal. IMHO, The critics are cheaper than any actors these days, Kayal!

Actors, besides their business, they behave like a "human being" at times. These critics are heartless and try to run their life using every damn thing!

Selva Kumar said...

//அடடா, இப்படி புரிஞ்சுக்காமத்தான் ரஜினி ரசிகர்கள் சத்யராஜை காச்சு காச்சுன்னு காச்சராங்களா?

நானும் வழிப்போக்கன் மாதிரிதாங்க புரிஞ்சுகிட்டேன் :(
//

நன்றி இந்தியன்..

Selva Kumar said...

99

Selva Kumar said...

100

Selva Kumar said...

//These critics are heartless and try to run their life using every damn thing!
//

Yes, I do agree with Varun. They think that just by blasting each and every issue, people will like them.

They never think about practical possibilities.

வருண் said...

*** வழிப்போக்கன் said...
கயல் மற்றும் இந்தியன்,

எனக்கு தெரிஞ்சு சத்துணவு திட்டம் கொண்டு வந்தது காமராசர்..

MGR அல்ல..***

அதை "மதிய உணவு திட்டம்" என்பார்கள்! :-)

Selva Kumar said...

ஓ.கே வந்த வேலை முடிஞ்சுது. இன்னொரு பதிவு போட்டு 90 வந்ததும் சொல்லி அனுப்புங்க வந்து சென்சுரி அடிச்சுட்டு போறேன்..

பை..பை

கயல்விழி said...

//As far as I know, there was no actors movie was releasing during hogenakkal issue brought up. It is some actors forced other actors to participate to "execute" their drama!
//

உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ளாமல் இருந்தால் பாப்புலாரிட்டி போய்விடும் என்ற காரணத்தினால் நடிகர்கள்/நடிகைகள் அதில் கலந்துக்கொள்ளுகிறார்கள். நான் எழுதிய சில காரணங்களில் இதுவும் அடங்கும், அதாவது மூவி ரிலீஸ் மட்டுமே எப்போதும் முக்கிய காரணமாக இருப்பதில்லை

வருண் said...

***வழிப்போக்கன் said...
//These critics are heartless and try to run their life using every damn thing!
//

Yes, I do agree with Varun. They think that just by blasting each and every issue, people will like them.

They never think about practical possibilities.***

அழகாக சொல்லிவிட்டீர்கள், வழிப்போக்கன்! (உங்களுக்கு ஒரு கைதட்டு! :-) )

Selva Kumar said...

ஓஹோ அப்படியா...வாரம் ரெண்டு முட்டை சேத்து போட்டா அது வேற திட்டமாகிடுமா ??

புரியலயே..

கயல்விழி said...

//Well I beg to disagree on this, Kayal. IMHO, The critics are cheaper than any actors these days, Kayal!

Actors, besides their business, they behave like a "human being" at times. These critics are heartless and try to run their life using every damn thing!//

I disagree Varun.

I believe that these actors are as bad as critics. The critics too, after they are done with their job, I am sure behave like any other human being.

கயல்விழி said...

நன்றி வழிப்போக்கன் :)

Selva Kumar said...

//உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ளாமல் இருந்தால் பாப்புலாரிட்டி போய்விடும் என்ற காரணத்தினால் நடிகர்கள்/நடிகைகள் அதில் கலந்துக்கொள்ளுகிறார்கள்.//

படத்துல (தமிழ்..தமிழ்னு) டயலாக் பேசறப்போ அடுத்த நடிகரின் ரசிகன் ஓவரா கிண்டல் பண்ணக்கூடாதல்லவா..

வருண் said...

***வழிப்போக்கன் said...
ஓஹோ அப்படியா...வாரம் ரெண்டு முட்டை சேத்து போட்டா அது வேற திட்டமாகிடுமா ??

புரியலயே..***

ஒருஜினல் ஐடியா காமராசர் உடையதுதான் வழிப்போக்கன்! :)

Selva Kumar said...

//I believe that these actors are as bad as critics. The critics too, after they are done with their job, I am sure behave like any other human being.
//
I don't think so.

There are good peoples like madhan.I would leave them out here.

But people like Gnani they just maintain same face everywhere and in everything.

வருண் said...

*** I believe that these actors are as bad as critics. The critics too, after they are done with their job, I am sure behave like any other human being.***

The former look worse because they make lots of money. The latter's major jealousy is right there! So, they attack them pretty badly and heartlessly!

Sundar சுந்தர் said...

//அது என்ன என்னால் மட்டுமே எழுத முடிந்த பதிவுகள்?(சொன்னீர்கள் என்றால் எழுத வசதியாக இருக்கும்,அதனால் தான் கேட்டேன்) :) //
உங்க கருத்துக்களின் தலைப்புகளை நான் வரையறுக்க முயற்சித்ததாக நினைத்துடாதீங்க! எந்த செய்தி தொகுப்பை பார்த்தாலும் இது சம்பந்தபட்ட கருத்துகளாகவே நிறைய தெரிகின்றன. ஒகனேக்கல் பிரச்சினை ஒரு அரசியல் பிரச்சினையாக நான் பார்க்கிறேன். இது தொடர்பாக எழுந்துள்ள தற்போதைய நிகழ்வு அதன் தொடர்ச்சி. என்னை பொருத்த வரைக்கும் இது ஒரு misplaced எதிர்பார்ப்புகளினால் எழும் உணர்ச்சிபூர்வமான, பிரிவுணர்வுகளை தூண்டக்குடிய விவாதமாக தெரிகிறது.

உங்களோட/வருணின் மற்ற பதிப்புகளை விரும்பி படித்த எனக்கு இது தொடர்பில்லாமல் தெரிந்தது, அதனால் அப்படி கருத்து எழுதினேன்.

வருண் said...

****

But people like Gnani they just maintain same face everywhere and in everything. ****

I watched his latest debate. He hardly listens and he is opinionated and he just keeps living in his world. Never tries to understand some other's perspective or views or anything!

கயல்விழி said...

//The former look worse because they make lots of money. The latter's major jealousy is right there! So, they attack them pretty badly and heartlessly!
//

That's the prize they pay for popularity I guess.

ஆனால் இந்த நடிகர்கள் மக்களின் வாழ்வாதாரப்பிரச்சினைகளில் விளையாடாமல் இருந்தால் அதுவே போதும். ப்ராகாஷ்ராஜ் ஒரு கன்னடர், அவர் அமைதியாக இல்லையா? அது மாதிரி.

கயல்விழி said...

//உங்களோட/வருணின் மற்ற பதிப்புகளை விரும்பி படித்த எனக்கு இது தொடர்பில்லாமல் தெரிந்தது, அதனால் அப்படி கருத்து எழுதினேன்.
//

No problem :)

உங்களுக்கு பிடித்த டாப்பிக் எதெல்லாம்?

மீண்டும் வருகை தந்ததற்கு நன்றி சுந்தர் :)

வருண் said...

உண்ணாவிரதத்தில் கலந்து **** கொள்ளாமல் இருந்தால் பாப்புலாரிட்டி போய்விடும் என்ற காரணத்தினால் நடிகர்கள்/நடிகைகள் அதில் கலந்துக்கொள்ளுகிறார்கள். நான் எழுதிய சில காரணங்களில் இதுவும் அடங்கும், அதாவது மூவி ரிலீஸ் மட்டுமே எப்போதும் முக்கிய காரணமாக இருப்பதில்லை

8 August, 2008 11:12 AM***

If you ask me it was well-executed plot one person who will be ALWAYS questioned for his tamil identity. And never be able to prove his "tamil identity" ever! It was not for resolving hogenakkal issue at all! That is my humble opinion!

Just like gnAni, I am opinionated too, kayal! LOL!!

Indian said...

//ஒலிம்பிக் போட்டிகளில் சீனாவிற்கு இருக்கும் வேகம் இந்தியாவிற்கு இல்லாமல் இருக்க என்ன காரணம்?//

எழுதுனவுக நம்மூரு அம்மணிதேன்.

Source: http://www.atimes.com/atimes/China/JH02Ad01.html

Inside China's sports machine
By Pallavi Aiyar


...Xie added that a clever Olympics strategy has targeted sports "suitable to the physiques and talents of East Asian peoples". He gave the examples of events such as table tennis, badminton and gymnastics, in which China has come to excel. These are sports that require quick reflexes and flexibility rather than raw physical strength and stamina.

Some critics have claimed that China's success at the Olympics is somewhat undermined by the fact of its having targeted "soft sports", underdeveloped in other countries, like shooting and taekwondo as well as women's sports in general. About 63% of China's medals in Athens were won by women - excluding mixed sports - compared with about 40% for the US and Russia ...


China's sports system is adapted from that of the former Soviet Union. It relies on an extensive network of scouts and coaches who ferret out the best sporting talent from the country's vast pool of youngsters studying in primary schools. Potential future champions are given detailed physical exams to test whether their bone structure and bodies are likely to develop in a way appropriate for a certain sport: height is key for volleyball, strength for weightlifting, agility for gymnastics.

Those chosen are then funneled into a pyramid-like sports training structure.

At the top of the pyramid are some 300 elite sports training schools nationwide where 46,000 youngsters aged six to 18 undergo intensive daily training. Below this tier of top schools are another 3,000-odd, level-2 specialist sports schools with about 400,000 children in training. Finally at the base, 6 million youth hone their skills at 11,400 regular schools that also happen to specialize in one or another sporting category.

...A visit to the cavernous gymnastics training hall revealed row after row of toddlers, some as young as five. Looking cute in leotards, many had missing baby teeth. They lined up obediently, their expressions neither sad nor happy, for hours of bone-aching exercises. Others hung from rings or cart-wheeled perfectly across long mats.

The coaches were stern. There seemed to be few allowances made for their age or the fact that at five and six they had virtually no say in the decision to enter training. No Buddhia-like controversy is known to have erupted in China. (Buddhia was a little boy who ran a 60 kilometer race in 2006, but was later prevented from training by child welfare authorities in India who deemed him too young to train so hard.)

"Sacrifices are necessary to be a champion," said Liu Hong Bin, the school's director, by way of explanation for the harsh regime.

However, the emphasis on sacrifice for the glory of the country to the detriment of the personal fulfillment and on occasion even health of individual athletes is perhaps the most trenchant criticism of China's sports machine...

...Sports historian Zhao Yu holds that the government-led nature of sports in China leads to an over-emphasis on medals and winning, while developing grassroots love of sports remains neglected. "We are not a real sporting country because we lack a popular base. Most Chinese kids in normal schools are purely focussed on academics and sports are rarely seen as beneficial or important. Our success in the Olympics is artificially engineered from the top," he said.

Xie believed that the focus on gold medals was appropriate to a particular historical juncture in China to prove to the world what the country is capable of. He concurred with Zhao, however, arguing that "now we [the Chinese] should reconsider our sports value system and also focus on the enjoyment of sports and the spirit of sports rather than merely winning"...

Selva Kumar said...

btw,

Gnani's this week take on Rajni was balanced and the best in recent times..

Selva Kumar said...

நன்றி இந்தியன்..

இது உணமைதான் 2 வருடம் முன்னாடி இதே பல்லவி அய்யர் NDTVல் இதை ஒரு டாகுமென்டரியாக செய்தார்கள்..

அங்கே உள்ள வசதிகளை பாத்து அசந்துவிட்டேன். இந்த முறை சீனா பதக்க பட்டியலில் முதலாக இருந்தாலும் ஆச்சரியம் இல்லை.

கயல்விழி said...

நன்றி இந்தியன்

Indian said...

விட்டுப் போனது. நம்மாளுக சீனாவின் வழிமுறைகளிலிருந்து ஏதாவது பாடங் கத்துக்கிட்டாச் சரி. இல்லையின்னா, பேசிப் பேசி, பேசிப் பேசி பேசிக்கிட்டே இருக்க வேண்டியதுதான்.

Selva Kumar said...

//விட்டுப் போனது. நம்மாளுக சீனாவின் வழிமுறைகளிலிருந்து ஏதாவது பாடங் கத்துக்கிட்டாச் சரி.//

:))

வருண் said...

*** வழிப்போக்கன் said...
btw,

Gnani's this week take on Rajni was balanced and the best in recent times..

8 August, 2008 11:46 AM ***

ஓ கே, என் பதிவை ஜாலியா எடுத்துக்கொள்ளுங்கள்!

* //குசேலன் படத்தில் ஏதோ "ஸ்ட்ராங்" ஸ்டோரி இருப்பதாக சொல்றார்.//

எனக்கு அந்த மாதிரி எதுவும் இருக்கிற மாதிரி தெரியலை. ஒரு ஸ்டுபிட் ப்ளாட் மற்றும் ஸ்டோரி அது.

* குசேலன் படத்துக்கு 51/100 மார்க் கொடுத்தார்.

விகடன் இதுக்கு 39/100 கொடுத்துள்ளது.

இதிலிருந்து என்ன தெரியுது??

ஞாநிக்கு பிடிப்பதுபோல் படம் எடுத்தால், தலையில் துண்டைப்போட வேண்டியதுதான்!

Selva Kumar said...

//ஓ கே, என் பதிவை ஜாலியா எடுத்துக்கொள்ளுங்கள்!
//

நீங்க சிரியஸா சொன்னாக்கூட நாங்க காமெடியாத்தான் ஏடுத்துக்குவோம்.

LOL!!

Selva Kumar said...

// //குசேலன் படத்தில் ஏதோ "ஸ்ட்ராங்" ஸ்டோரி இருப்பதாக சொல்றார்.//

அது மலையாள குசேலன்...

//எனக்கு அந்த மாதிரி எதுவும் இருக்கிற மாதிரி தெரியலை. ஒரு ஸ்டுபிட் ப்ளாட் மற்றும் ஸ்டோரி அது.//

நீங்க அந்த பாத்ததுனால..நீங்க தமிழினத்துக்கு துரோகம் பண்ணீட்டீங்க.



//* குசேலன் படத்துக்கு 51/100 மார்க் கொடுத்தார்.

விகடன் இதுக்கு 39/100 கொடுத்துள்ளது.


இதிலிருந்து என்ன தெரியுது??

//

விகடன் 0-50 ஸ்கேல்ல மார்க் போடுது..

50க்கு மேல போட்ட ஒரு படம் சொல்லுங்க பாப்போம்.

ஞாநி 0-100 போட்டிருக்கார்.




//ஞாநிக்கு பிடிப்பதுபோல் படம் எடுத்தால், தலையில் துண்டைப்போட வேண்டியதுதான்!
//

நான் ரசினி பத்தி அவர் சொன்னத பத்தி சொன்னேன். குசெலன் பத்தி சொல்லல

ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

வருண் said...

ரசினி பற்றி சொன்னதுக்கு அப்புறம் வர்றேன்.
வழிப்போக்கன்!


* கல்யாண ராமன்

* முள்ளும் மலரும்

* தண்ணீர் தண்ணீர்

* இந்தியன்

* சேது

இதெல்லாம், ஆ. வி இல் 50 ப்ளஸ்!

வருண் said...

My problem is,

* What does ngAni want from Rajnikanth?

* Does not he know about him, yet?

* He is still trying to understand him?

I think he has formed a clean opinion on him and he knows Rajni's stand in hohenakkal (how to spell??) is NOT going to make a difference. Rajni is nothing as far this issue is concerned.

gnAni is not trying to understand him. He just uses him to write an article for his survival!

That is all!

Just like Rajnikanth, gnAni is another worthless actor here!

manikandan said...

*******As far as I know, there was no actors movie was releasing during hogenakkal issue brought up. It is some actors forced other actors to participate to "execute" their drama!****

சங்கம், union இது எல்லாம் எதுக்கு இருக்கு ? இதுக்கு தான்.

manikandan said...

*********
* கல்யாண ராமன்

* முள்ளும் மலரும்

* தண்ணீர் தண்ணீர்

* இந்தியன்

* சேது

இதெல்லாம், ஆ. வி இல் 50 ப்ளஸ் *****

நீங்க ஒரு encyclopediavaa ?

Selva Kumar said...

//* கல்யாண ராமன்

* முள்ளும் மலரும்

* தண்ணீர் தண்ணீர்

* இந்தியன்

* சேது

இதெல்லாம், ஆ. வி இல் 50 ப்ளஸ்!
//

ஓஹோ அப்படியா..நான் 50க்கு மேல போட்டதேயில்லைனு நெனச்சேன்.

75 வருட தமிழ் சினிமாவுல 5 படந்தான் 50க்கு மேல..

ஆ.வி ஒரு படமாவது 100 மார்க்குக்கு அவங்களே எடுத்து காட்டணும்.

Selva Kumar said...

**நீங்க ஒரு encyclopediavaa ?
**

அவங்க (கயல் + வருண்)

ஒரு Knowledgopedia..
ஒரு Thoughtsopedia..
ஒரு Argumentopedia...
ஒரு Discussionopedia..
மொத்தத்துல ஒரே blogopedia..

Selva Kumar said...

//gnAni is not trying to understand him. He just uses him to write an article for his survival!

That is all!

Just like Rajnikanth, gnAni is another worthless actor here!
//

ஏதோ ஞாநிக்கு இங்க யாருமே சப்போர்ட் பண்ணலயே நாம பண்ணலாம்னு பாத்தேன்..

இப்படி கேட்டா நான் என்ன பண்றது.

ஏஸ்கேப்..

ஆவ்வ்வ்வ்வ்வ்..

வருண் said...

அவனும் அவளும்/ வழிப்போக்கன்:

vikatan maarks!!!

16 Vayathinile = 64*
Hey Ram = 60
Mahanadi = 60
Nayagan = 60

------------http://harihb.info/blog/tag/ananda-vikatan/

இதையும் பாருங்கள்! :)

வருண் said...

However these days Vikatan reviews/ marks suck big time :-(

They need to dissolve the committee and form a new review committee! :)

Sundar சுந்தர் said...

//உங்களுக்கு பிடித்த டாப்பிக் எதெல்லாம்?//
எல்லா தலைப்பும் பிடிக்கும். நான் படித்த வரை, வருணின் கவிதையாய் நகரும் காதல் படிக்கட்டும், உங்களின் உண்மையான உணர்வுகளோடு கற்பு தலைப்பில் எழுதும் கண்ணோட்டங்களும் ரொம்ப அசல்.

வருண் said...
This comment has been removed by the author.
வருண் said...

*** வருணின் கவிதையாய் நகரும் காதல் படிக்கட்டும், ***

I am flattered - Thank you, Sundar! :-)

I never wrote anything like this before. It was indeed Kayal's encouragement which helped me write whatever I have written so far! She likes anything I write. So, I dont consider her as a good critic for me. :-)

Thank you Sundar again for spending time, reading those ! :)

புருனோ Bruno said...

//அந்த காலத்தில் இருந்து இந்த காலம் வரைக்கும் அதே கதை: காதல், காதலுக்கு வில்லன் - வில்லி, நாலு சண்டை, ஆறு பாட்டு கடைசியில் காதலர்கள் ஒன்று சேர்கிறார்கள் - இந்த same old கதைக்கு விதிவிலக்காக வந்த தமிழ்ப்படங்கள் ரொம்பக்குறைவு.//

குறைவு என்றில்லை. அப்படி வரும் ஓரிரண்டு படங்களை கூட ஒரே வாரத்தில் தோல்வியடைய செய்யும் நம் மக்களை என்ன சொல்வது

1. ஏர்போர்ட்
2. பேசும் படம்
3. வள்ளி
4. சிறைச்சாலை
5. பாரதி
6. பெரியார்
7. ஒன்பது ரூபாய் நோட்டு
8. குசேலன் !!! (படம் சரியில்லை என்றாலும் நீங்கள் சொன்ன ”காதல், காதலுக்கு வில்லன் - வில்லி, நாலு சண்டை, ஆறு பாட்டு கடைசியில் காதலர்கள் ஒன்று சேர்கிறார்கள் ” கடையில் பொருந்தாத படம் தானே அது !!!

புருனோ Bruno said...

பைவ் ஸ்டார் பார்த்திருக்கிறீர்களா. நட்பு குறித்த (வித்தியாசமான) அந்த படம் தோல்வி அடைந்து செல்வராகவன் படங்கள் வெற்றிபெற்றால் புது இயக்குனர்கள் எது போல் படம் எடுக்க நினைப்பார்கள் !!

-

சென்ற மறூமொழியில் எழுத மறந்த சில படங்கள்

1. காமராசர்
2. இயற்கை
3. அன்பே சிவம்
4. வீடு

புருனோ Bruno said...

//இப்படி சொல்லிக்கொண்டே போகலாம், கயல்! :)//

சில சமீப கால பாடல் வரிகள் கூட கூட நன்றாகத்தான் உள்ளன

1. கண்ணுக்கு மையழகு (புதிய முகம்)
2. பூ பூக்கும் ஓசை (மின்சார கனவு)

புருனோ Bruno said...

//இதுமாதிரி ஒரு பிரச்னை என் படத்துக்கு கர்நாடகத்துல வந்தா அந்தப் படத் தயாரிப்பாளருக்கு எவ்வளவு பணம் நஷ்டமாகுதோ அதை என் சம்பள பணத்திலேருந்து கொடுப்பேன், இதுசத்தியம். ஆனா ஒகனேக்கல் விஷயத்தில் உடும்புப் பிடியாத்தான் இருப்பேன்'' என்றார். "//

இது தான் நக்கல் என்பது

நான் ”எனது சம்பளத்தில் ஒரு பகுதியை இழக்க தயார். ஆனால் ஓகேனேக்கல் முக்கியம்”

ரஜினிக்கு ஒகேனக்கலை (தமிழர்களை) விட அவரது பணம் முக்கியம் என்பதை தெளிவாக குறிப்பிட்டு நக்கலடித்து உள்ளார் :) :) :)

பரிசல்காரன் said...

//தமிழ்நாட்டில் சினிமா ஆதீக்கம் ஒரு சமுதாயப்பிரச்சினை என்பதே என் கருத்து.//

வழிமொழொகிறேன்!

கயல்விழி said...

ரொம்ப அதிசயமா இன்று புரூனோ, பரிசல் எல்லாம் ஒரே சமயத்தில் வந்திருக்காங்க?

வருக புரூனோ மற்றும் பரிசல் :)

கயல்விழி said...

//சில சமீப கால பாடல் வரிகள் கூட கூட நன்றாகத்தான் உள்ளன

1. கண்ணுக்கு மையழகு (புதிய முகம்)
2. பூ பூக்கும் ஓசை (மின்சார கனவு)//

சமீபமா? இதெல்லாம் 10 வருடம் முன்னால் வந்த பழைய பாடல்கள் புரூனோ அவர்களே :)

குடுகுடுப்பை said...

வருங்கால முதல்வர் புரட்சி வலைப்பூ தலைவி கயல்விழி மற்றும் அண்ணன் வருண் புகழ் ஓங்குக

குடுகுடுப்பை said...

//நம்ம கல்விமுறை, ஏதாவது வெளிநாட்டுக்காரர்களுக்கு காலம் முழுவதும் படித்த அடிமையாக வேலை செய்யவே உதவும். (ஐஐடி போன்ற சில படிப்புக்கள் நீங்கலாக)//
இந்தியாவின் மக்கள் தொகை 125 கோடி , சீன மக்கள் தொகை 150 கோடி , இந்த இரு பெரும் நாடுகளும் , சிறிதே மக்கள் தொகை கொண்ட மேலை நாடுகளுக்கு சேவை செய்வதை பெரும் பாகியமாக செய்கிறோம். நாம் நமக்காக வாழ /உழைக்க வழி உண்டா
இதனை பற்றி கண்டிப்பாக வலைத்தளத்தில் ஒரு பதிவு வேண்டும்

கயல்விழி said...

//இது தான் நக்கல் என்பது

நான் ”எனது சம்பளத்தில் ஒரு பகுதியை இழக்க தயார். ஆனால் ஓகேனேக்கல் முக்கியம்”

ரஜினிக்கு ஒகேனக்கலை (தமிழர்களை) விட அவரது பணம் முக்கியம் என்பதை தெளிவாக குறிப்பிட்டு நக்கலடித்து உள்ளார் :) :) :)
//

நீங்கள் சொல்வது மாதிரியே நக்கலாக இருந்தாலும் மழுப்பலான நக்கலாகவே தெரிகிறது.

கயல்விழி said...

//இந்தியாவின் மக்கள் தொகை 125 கோடி , சீன மக்கள் தொகை 150 கோடி , இந்த இரு பெரும் நாடுகளும் , சிறிதே மக்கள் தொகை கொண்ட மேலை நாடுகளுக்கு சேவை செய்வதை பெரும் பாகியமாக செய்கிறோம். நாம் நமக்காக வாழ /உழைக்க வழி உண்டா
இதனை பற்றி கண்டிப்பாக வலைத்தளத்தில் ஒரு பதிவு வேண்டும்
//
குடுகுடுப்பை

நீங்கள் ரொம்ப சரியாக சொல்லி இருக்கிறீர்கள். எத்தனை நாட்கள் நாமெல்லாம் வெளிநாடுக்காரர்களுக்கே வேலை செய்யப்போகிறோம் இதைப்பற்றி அடுத்த விவாதம் தொடங்கலாம்.

சீனா ஒலிம்பிக்ஸில் கலக்கறாங்க பாருங்க, இந்தியா ஹோஸ்ட் பண்ணும் நாள் வர ஏதாவது வழி இருக்கா?

Selva Kumar said...

அட 150..

100ம் நானே..150ம் நானே..

Selva Kumar said...

==நீங்கள் சொல்வது மாதிரியே நக்கலாக இருந்தாலும் மழுப்பலான நக்கலாகவே தெரிகிறது==


மே பி....மேடை போட்டு லைவ் டெலிகாஸ்ட் பண்ணியிருந்தா, வெளுத்து வாங்கியிருப்பார்.

Selva Kumar said...

==எத்தனை நாட்கள் நாமெல்லாம் வெளிநாடுக்காரர்களுக்கே வேலை செய்யப்போகிறோம் இதைப்பற்றி அடுத்த விவாதம் தொடங்கலாம்==

அட நீங்க வேற.

நம்ம கிட்ட இருக்கிற முதலீடே "மக்கள் தான்" அதனால நம்ம பொருளாதாரம் எப்பவுமே மனிதவளத்தை நம்பியே இருக்க வேண்டும்.

அனைத்து மக்களும் இந்தியாவிற்கு மட்டுமே உழைக்க வேண்டுமென்று தேவையில்லை.

என்னை பொருத்தவரை ஒரு 25% - 40% மக்கள் இந்தியாவிற்காக உழைத்தால் போதுமானது.


நாம் செய்ய வேண்டியது "உற்பத்தி திறன்" Productivity மேன்பாடுதான்.

எப்படி இன்னும் நிறைய பேருக்கு நாம் வேலை செய்ய முடியும் என்று யோசிக்க வேண்டும்.

உதாரணம்--> Manufacturing should Improve, Knowledge Process Outsourcing, Bio-Tech.

வேலையில்லா திண்டாட்டத்த ஒழிக்க அதுவே சிறந்த வழி.

அது போக இன்று வளர்ந்த நாடுகளில் மக்கள்தொகை வளர்சியில்லை. அதை நாம் நன்றாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.


More migration will happen in next 20 yrs.

In 2040 --> we may overtake china in HUman capital.

Selva Kumar said...

//சீனா ஒலிம்பிக்ஸில் கலக்கறாங்க பாருங்க, இந்தியா ஹோஸ்ட் பண்ணும் நாள் வர ஏதாவது வழி இருக்கா?//

மொதல்ல நாம ஒரு கோல்ட் வாங்க வழியிருக்கானு பாப்போம்.

ஹோஸ்ட் பண்ணுனா நாம லீடிங் பண்ற மாதிரி இருக்கணும்.

அது சரி said...

ரொம்ப கோவத்தில இருக்கீங்க போல, கொஞ்சம் கோவப்படாம இதையும் படிச்சிருங்க.

//தரமான தமிழ்ப்படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். //

இதை தான் எல்லாரும் சொல்கிறார்கள். ஆனால், எதை தரமான படம் என்று சொல்வீர்கள்? தரமான படம் என்பதற்கு உங்கள் வரையறை என்ன?? உங்கள் வரையறைக்கும், மற்றவரின் வரையறைக்கும் மாறுபாடு இருந்தால் என்ன செய்வீர்கள்??
எனக்கு சிவாஜி ஒரு குப்பை. ஆனால், பலருக்கு அது தரமான படமாக இருக்கலாம். இதற்கு என்ன செய்வது??

சிலருக்கு உதிரிப்பூக்கள், வீடு போன்றவை தரமான படம். என்னால் எனக்கு காசு கொடுத்தாலும் இந்த படங்களை பார்க்க முடியாது!

//யாருடைய படத்தையோ காப்பி அடித்துவிட்டு, வெட்கமில்லாமல் டிவியில் 'என் படம்' என்று பேட்டி பொடுப்பார்கள், விளம்பரப்படுத்திக்கொள்வார்கள்!
//

இது சினிமாக்காரர்கள் மட்டும் தான் செய்கிறார்களா?? வேறு எந்த துறையிலும் செய்வதில்லையா??

//
இவர்களை எல்லாம் நம்பிய நம்மை என்ன செய்தால் தகும்? பிஸ்னஸ் என்றவுடன் அனைவரும் கைகோர்த்துக்கொள்கிறார்களே?
//

ஹா ஹா. மக்களும் சும்மா செய்வதில்லை. அவர்களும் பிஸினஸ் தான் செய்கிறார்கள். ஜாதி, மதம், குடம், இலவச டி.வி., இலவச அடுப்பு, ரெண்டு ரூபா அரிசி, கோவில்ல மதியம் லஞ்ச் என்று அவர்களும் வியாபாரம் பார்த்து தான் ஓட்டு போடுகிறார்கள்.

//
இந்தக்கூத்தாடிகளை நம்பி இவர்களிடம் ஒட்டு மொத்த தமிழ்நாட்டு அரசியலையே ஒப்படைத்தாகிவிட்டது. சுதந்திரப்போராட்ட வீரர்களுக்கும், மக்களுக்குக்காக உழைத்தவர்களும், படித்தவர்களுக்கும் போக வேண்டிய முக்கிய அரசியல் பதவிகளை, படத்தில் மட்டும் ஏழை பங்காளியாக நடித்தவர்களுக்கும், அவர்களின் பெண் நண்பர்களுக்கும், கதை வசனம் எழுதுபவர்களுக்கும், ஏன், காமெடியன்களுக்கு கூட கொடுத்தாகி விட்டது.
//

அப்படி எதையும் மக்கள் ஒப்படைத்ததாக தெரியவில்லை. ஜெயாவின் வெற்றியை இப்படி சொன்னார்கள். ஆனால், அதே ஜெயா படுதோல்வியும் அடைந்தார். அவருக்கு எதிராக வெற்றி பெற்ற சுகவனம் என்பவர் கூத்தாடி அல்ல.

சுதந்திர போராட்ட வீரர்களுக்கு பதவி கொடுக்க இது ரொம்ப லேட். சுதந்திரம் வாங்கியே 61 வருடம் ஆகிவிட்டது. ஆக, பல சுதந்திர போராட்ட வீரர்களுக்கு வயது 80+. இவ்வளவு வயதானவர்கள் ஆட்சி பாரத்தை தாங்க வேண்டும் என்று சொல்கிறீர்களா? முதுமையால் அவதிப்படும் ஒருவர், எப்படி ஆட்சி நடத்துவார் என்று நினைக்கிறீர்கள்?

படித்தவர்கள் ஏதோ தேவதைகள் என்றா நினைக்கிறீர்கள்?? இப்பொழுது இருக்கும் M.L.A , M.P. களில் பலரும் படித்தவர்களே. இவர்கள் அரசியல் செய்யும் விதம் உங்களுக்கு தெரியாதா??

//இனி என்ன? திரும்பவும் கேப்டன், விஜய், கார்த்திக் போன்ற அடுத்தச்சுற்று ஏமாற்றுக்காரர்களுக்கு தயாராகப்போகிறோமா அல்லது இனியாவது மாற்றம் வருமா?
//
இவர்கள் மட்டும் தான் ஏமாற்றுக்காரர்களா?? நடிகர்களை மட்டும் ஏன் குறை சொல்கிறீர்கள்?? ஆற்காடு வீராசாமி என்று ஒருவர். அவர் என்ன தகுதியில் அமைச்சரானார்??

மாயாவதி என்று ஒருவர். லல்லு பிரசாத் என்று ஒருவர். இவர்களெல்லாம் என்ன சினிமாக்காரர்களா??

//
சினிமாவினால் நாம் இழந்தது ஏராளம். நல்ல புத்தகங்களைப்படித்தல், சிந்தித்தல், குடும்பம் மற்றும் நண்பர்களுடன் நேரம் செலவிடுதல், உடற்பயிற்சி போன்ற நல்லதெல்லாம் தொலைந்து போய் நாம் couch potato ஆகி வெகு காலமாகிறது. இப்போதும் காலம் கடந்துவிடவில்லை, சினிமாவுக்கும், தொலைக்காட்சிக்கும், நடிகர்களுக்கும் நாம் கொடுக்கும் முக்கியத்துவத்தை குறைப்பது இயலாத காரியம் இல்லை. நாம் ஆட்டு மந்தையாகவே தொடர்ந்து இருக்கப்போகிறோமா அல்லது மனிதர்களாகி திருந்தப்போகிறோமா என்பது நம் கையில் இருக்கிறது.
//

இதற்கு என்ன சொல்வது என்று எனக்கு தெரியவில்லை. எனக்கு தெரிந்து யாரும் தினம்தோறும் சினிமா பார்ப்பதில்லை. சினிமா இல்லாவிட்டாலும் பெரும்பாலான மக்கள் சிந்திக்கவோ, நல்ல புத்தகங்களை படிப்பதோ போவதில்லை.

நாட்டில் இருக்கும் எல்லா தீமைக்களுக்கும் சினிமாவும், சினிமாக்காரர்களும் தான் காரணம், மற்றபடி எல்லா மக்களும் ரொம்ப நல்லவங்க என்ற தொனியில் இருக்கும் உங்கள் பதிவில் எனக்கு உடன்பாடு இல்லை. சினிமாவில் தம் அடிப்பதை காட்டுவதால் இளைனர்கள் தம் அடிக்கிறார்கள், காதலிப்பதாக காட்டுவதால் ஸ்கூல் பசங்க கூட கெட்டு போகிறார்கள் என்று பலர் சொல்கிறார்கள்.

ஆனால், அதே சினிமாவில் கதானாயகன் நல்லவனாக இருப்பதையும், லஞ்சம் ஊழலை எதிர்ப்பவனாகவும், தாயை கடைசி வரை காப்பாற்றுவனாகவும் கூட காட்டுகிறார்கள். ஆனால், எத்தனை பேர் அதை பார்த்து நல்லவனாக இருக்கிறார்கள்?? பெற்ற தாய்க்கு சோறு போட மறுக்கும் நாய்களை எனக்கு தெரியும். அவன் எந்த சினிமா பார்த்து கெட்டு போனான்? விஜய் படம் பார்த்தா? இல்லை ரஜினி படம் பார்த்தா??

ரொம்ப கோவப்படாதீங்க. அயோக்கியமான ஒரு சமுதாயத்தில் இருந்து யோக்கியமான தலைவர்களை எதிர்பார்க்க முடியாது. திருடர்கள் கூட்டத்திற்கு ஒரு திருடன் தான் தலைவனாக இருக்க முடியும். அய்யோ, இந்த தலைவன் இப்படி திருடனாக இருக்கிறானோ என்று சொல்வதில் எந்த பயனும் இல்லை!!!

Sundar சுந்தர் said...

Kayal & Varun, உங்களால் தான் இந்த விளையாட்டிற்கே வந்தேன். இன்றிக்கு என்னோட முதல் பதிவு போட்டு இருக்கேன். கொஞ்சம் வந்து பாருங்களேன்! http://ennaalaigalil.blogspot.com/2008/08/blog-post_10.html

Aravinthan said...

திரைப்படம் மக்களை சோம்பேறியாக்கும்.

புதுகை.அப்துல்லா said...

மூன்று நாள் ஓய்விற்குப் பின் வந்து பார்த்தால் எல்லாரும் எல்லாம் சொல்லிட்டாங்க :(

நான் இன்னோரு தபா அப்பாலிக்கா வர்ரேன். :)

கயல்விழி said...

//இதை தான் எல்லாரும் சொல்கிறார்கள். ஆனால், எதை தரமான படம் என்று சொல்வீர்கள்? தரமான படம் என்பதற்கு உங்கள் வரையறை என்ன?? உங்கள் வரையறைக்கும், மற்றவரின் வரையறைக்கும் மாறுபாடு இருந்தால் என்ன செய்வீர்கள்??
எனக்கு சிவாஜி ஒரு குப்பை. ஆனால், பலருக்கு அது தரமான படமாக இருக்கலாம். இதற்கு என்ன செய்வது??

சிலருக்கு உதிரிப்பூக்கள், வீடு போன்றவை தரமான படம். என்னால் எனக்கு காசு கொடுத்தாலும் இந்த படங்களை பார்க்க முடியாது!
//

வணக்கம் அதுசரி

அந்த பதிவு எழுதிய போது என் மனநிலை கொதிப்பாகவே இருந்ததால் கட்டுரையில் சில கருத்துக்கள் மிகைப்படுத்தப்பட்டிருக்கலாம்.

நீங்கள் சொல்வது சரி தான், இருந்தாலும் பல படங்கள் உலகத்தரம் வாய்ந்ததாக கருதப்படுகிறது இல்லையா? உதாரணமாக: டைடானிக். அதாவது உலகத்தில் உள்ள பலராலும் தரமான படம் என்று ஒப்புக்கொள்ளப்பட்டது.

//இது சினிமாக்காரர்கள் மட்டும் தான் செய்கிறார்களா?? வேறு எந்த துறையிலும் செய்வதில்லையா??
//

இண்டர்நேஷனல் ஸ்டாண்டர்டுகளின் படி, மற்றவருடைய படைப்பை தன்னுடைய படைப்பு என்று சொல்லிக்கொள்வது படைப்புத்திருட்டு என்ற Plagerism. இதை எந்த துறையில் இருப்பவர் செய்தாலும் தவறு. அதை விளம்பரம்படுத்திக்கொள்வது வெட்கக்கேடு!

//ஹா ஹா. மக்களும் சும்மா செய்வதில்லை. அவர்களும் பிஸினஸ் தான் செய்கிறார்கள். ஜாதி, மதம், குடம், இலவச டி.வி., இலவச அடுப்பு, ரெண்டு ரூபா அரிசி, கோவில்ல மதியம் லஞ்ச் என்று அவர்களும் வியாபாரம் பார்த்து தான் ஓட்டு போடுகிறார்கள்//

வறுமை, கல்வியறிவு இல்லாமை, மூட நம்பிக்கை போன்றவை மக்கள் தவறு செய்யக்காரணம். தொலை நோக்கு இல்லாதது எப்போதிலிருந்து பிஸ்னஸ் ஆனது?

//அப்படி எதையும் மக்கள் ஒப்படைத்ததாக தெரியவில்லை. ஜெயாவின் வெற்றியை இப்படி சொன்னார்கள். ஆனால், அதே ஜெயா படுதோல்வியும் அடைந்தார். அவருக்கு எதிராக வெற்றி பெற்ற சுகவனம் என்பவர் கூத்தாடி அல்ல//

ஜெயா ஏற்கெனெவே படுதோல்வி அடைந்திருக்கிறார். அடுத்த தேர்த்தல் வரட்டும் பார்க்கலாம். திரும்பவும் தன்னை எம்ஜிஆர் வாரிசாக பிரச்சாரம் செய்து ஆட்சியை பிடிக்க மாட்டாரா? வரலாற்று புகழ்பெற்ற வளர்ப்பு மகன் திருமண சிக்கலில் இருந்தே மீண்டு வந்தவர் ஆயிற்றே?? இவருடைய எம்ஜிஆர் வாரிசு மோகம் கேப்டனுக்கும் தொற்றி இருக்கிறது. எம்ஜிஆரை இன்றும் கிராமங்களில் கடவுளாக நினைக்கிறார்களாம். எம்ஜிஆர் அத்தனை திறமையான ஆட்சியாளரா? நிச்சயம் இல்லை. காமராஜர் போன்றவர்கள் எம்ஜிஆர் போல புகழடையாததுக்கு சினிமா நடிகராக இல்லாதது காரணம் என்பது என் கருத்து.

கயல்விழி said...

//நாட்டில் இருக்கும் எல்லா தீமைக்களுக்கும் சினிமாவும், சினிமாக்காரர்களும் தான் காரணம், மற்றபடி எல்லா மக்களும் ரொம்ப நல்லவங்க என்ற தொனியில் இருக்கும் உங்கள் பதிவில் எனக்கு உடன்பாடு இல்லை. சினிமாவில் தம் அடிப்பதை காட்டுவதால் இளைனர்கள் தம் அடிக்கிறார்கள், காதலிப்பதாக காட்டுவதால் ஸ்கூல் பசங்க கூட கெட்டு போகிறார்கள் என்று பலர் சொல்கிறார்கள்.//

தீமையை சீக்கிரம் பற்றிக்கொள்வது மாதிரி நன்மையை பற்றிக்கொள்ளாதது மனித இயல்பு. ரஜினி மாதிரி ஸ்டைலாக சிகரெட் பிடிக்கும் ஒருவர், ரஜினி மாதிரி அம்மாவை பார்த்துக்கொள்ள மாட்டார். நான் இந்த பதிவில் நடிகர்களையும்,வெறித்தனமான ரசிகர்களையும் குறை சொல்லி இருக்கிறேனே தவிர, மக்கள் ரொம்ப நல்லவர்கள் என்று ஒருபோதும் எழுதவில்லை.

கயல்விழி said...

//ரொம்ப கோவப்படாதீங்க. அயோக்கியமான ஒரு சமுதாயத்தில் இருந்து யோக்கியமான தலைவர்களை எதிர்பார்க்க முடியாது. திருடர்கள் கூட்டத்திற்கு ஒரு திருடன் தான் தலைவனாக இருக்க முடியும். அய்யோ, இந்த தலைவன் இப்படி திருடனாக இருக்கிறானோ என்று சொல்வதில் எந்த பயனும் இல்லை!!!
//

கோபப்படுவதும் மனித இயல்பே!

நீங்கள் 'திருடர் கூட்டம்' என்று சொல்வதில் எனக்கு துளியும் ஒப்புதல் இல்லை. உதாரணத்துக்கு, உங்களுடைய லொகேஷன் யூகே என்று இருக்கிறது, நாங்கள் அமரிக்காவில் இருக்கிறோம். இந்த திருடர் கூட்டத்தில் இருந்து போன நாமெல்லாம் நார்மல் குடிமக்களாக வாழவில்லையா? ஒழுங்காக வரி செலுத்துவதில்லையா, சாலை விதிகளை பின்பற்றுவதில்லையா, சட்டம் ஒழுங்குக்கு கட்டுப்படுவதில்லையா? அதெப்படி திருடர் கூட்டத்தில் இருந்து வந்த சிலர் ஒழுங்காக இருக்க முடியும்? அரசு மேல் தான் தவறு இருப்பதாக நினைக்கிறேன்.

கயல்விழி said...

//இதற்கு என்ன சொல்வது என்று எனக்கு தெரியவில்லை. எனக்கு தெரிந்து யாரும் தினம்தோறும் சினிமா பார்ப்பதில்லை. சினிமா இல்லாவிட்டாலும் பெரும்பாலான மக்கள் சிந்திக்கவோ, நல்ல புத்தகங்களை படிப்பதோ போவதில்லை.
//

தினம் தோறும் சினிமா பார்க்காமல் இருக்கலாம், தினந்தோறும் டிவி பார்க்காதவர்கள் இருக்க முடியுமா? தொலைக்காட்சி என்பது சினிமாவின் மற்றொரு முகமாக மாறி பல காலம் ஆகிவிட்டது.

இதெல்லாம் இல்லாத காலத்தில் புத்தகம் படிக்கும் பழக்கம் பரவலாக இருந்தது என்று நினைக்கிறேன்.

கயல்விழி said...

//சுதந்திர போராட்ட வீரர்களுக்கு பதவி கொடுக்க இது ரொம்ப லேட். சுதந்திரம் வாங்கியே 61 வருடம் ஆகிவிட்டது. ஆக, பல சுதந்திர போராட்ட வீரர்களுக்கு வயது 80+. இவ்வளவு வயதானவர்கள் ஆட்சி பாரத்தை தாங்க வேண்டும் என்று சொல்கிறீர்களா? முதுமையால் அவதிப்படும் ஒருவர், எப்படி ஆட்சி நடத்துவார் என்று நினைக்கிறீர்கள்?
//

இப்போது வேண்டாம், கடந்த காலங்களில் கொடுத்திருக்கலாம் இல்லையா? அவர்கள் இடத்தை தான் சினிமா நடிகர்களும், அரசியல்வாதிகளும் ஆக்கிரமித்து விட்டார்களே?

கயல்விழி said...

ஏறக்குறைய என்னுடைய முழு கட்டுரைக்குமே மாற்றுக்கருத்து எழுதியதற்கு நன்றி அது சரி :)

கயல்விழி said...

நன்றி அரவிந்தன் மற்றும் புதுகை அப்துல்லா ;)

இவன் said...

இதெல்லாம் இப்போ யோசிச்சு ஒன்னும் ஆக போறதில்ல கயல்விழி... பேசாம போய் ஒரு 10 இல்லாட்டி 15 மொக்கைப்படம் பாருங்க பொழைச்சிடுவீங்க இல்லாட்டி என் ப்லொக்க்கு போய் நம்ம தலைவர் J.K.ரித்தீஷின் நாயகன் பட டிரைலர் பாருங்க வேலை முடிஞ்சு

Anonymous said...

ithu than namma nattoda thala ezhuthu namma nalla vimarsanam panni pesuvom, ezhuthuvom aana seyalle irangunganu solrache jega vangiduvom ipadi namma irukarapo

loos mohan, karthik senthil.... mudhal amaichar prime minister aharthule acharyam illai

SK said...

** நீங்கள் சொல்வது சரி தான், இருந்தாலும் பல படங்கள் உலகத்தரம் வாய்ந்ததாக கருதப்படுகிறது இல்லையா? உதாரணமாக: டைடானிக். அதாவது உலகத்தில் உள்ள பலராலும் தரமான படம் என்று ஒப்புக்கொள்ளப்பட்டது. ***

உங்களுக்கு உலக தரமாக தெரிகின்ற இதே டைட்டனிக் பலருக்கு பிடிப்பதில்லை. அதை விட ஆங்கில படத்தில் வருகின்ற வன்முறை காட்சிகளும், அரை மற்றும் முழு நிர்வாண காட்சிகளும் அதிகம். இது போல சினிமா சமூகத்தை பாதிப்பது இந்தியாவில் உள்ள பிரச்சனை மட்டும் அல்ல இது உலக நாடுகளில் அனைத்திலும் இருக்கும் பிரச்சனை.

*** தீமையை சீக்கிரம் பற்றிக்கொள்வது மாதிரி நன்மையை பற்றிக்கொள்ளாதது மனித இயல்பு. ரஜினி மாதிரி ஸ்டைலாக சிகரெட் பிடிக்கும் ஒருவர், ரஜினி மாதிரி அம்மாவை பார்த்துக்கொள்ள மாட்டார். நான் இந்த பதிவில் நடிகர்களையும்,வெறித்தனமான ரசிகர்களையும் குறை சொல்லி இருக்கிறேனே தவிர, மக்கள் ரொம்ப நல்லவர்கள் என்று ஒருபோதும் எழுதவில்லை. **

நீங்களே சொன்னது போல ஒரு சினிமாவோ வாழ்க்கையோ சமூகமோ இருந்துமே இருக்கும் அதில் எதை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது பார்ப்பவர் கண்களிலும் மனதிலும் இருக்க வேண்டும். அதற்கு தேவை மக்களுக்கு ' பகுத்தறிவு' ( பெரியார் சொன்னது இல்லை, என்னா எனக்கு அதை பத்தி அதிகம் தெரியாது ) . வழிப்போக்கன் முன்னாடியே சொல்லிட்டார்.

Educate the people and they themselves will know automatically what is important and least important.

SK said...

*** திரைப்படம் என்ற ஒன்று கண்டுபிடிக்கப்படாமல் இருந்தால் நலமாக இருந்திருக்கும். திரைப்படத்துறை மூலமாக நாம் அடைந்தது என்ன? **

வேலை இல்லா திண்டாடம் இன்னும் கொஞ்சம் அதிகமாகவே இருந்து இருக்கும்.
எந்த துறை எடுத்துக்கொண்டாலும் அதில் நல்லது கேட்டது என்று இருக்கும். ஒவ்வொருவர் கண்களுக்கு இதே மாறும். சினிமா துறையில் உள்ள அதிகபட்சமான மக்களால் கேட்டது என்று கருத கூடியதை மாற்றி நல்ல ஒரு சிந்தனைக்கு கொண்டு வரலாம். அதோடு நடிகரை நடிகராக மட்டுமே பார்க்கும் மனப்பான்மை வளர வேண்டும்.

SK said...

*** இப்போது வேண்டாம், கடந்த காலங்களில் கொடுத்திருக்கலாம் இல்லையா? அவர்கள் இடத்தை தான் சினிமா நடிகர்களும், அரசியல்வாதிகளும் ஆக்கிரமித்து விட்டார்களே? **

கடந்த காலத்தை பற்றி பேசி பயனே இல்லை. இனி என் செய்தால் நன்றாக இருக்கும்னு உங்களுக்கு தோணுவதை சொல்லுங்க. கோவம் இல்லாமல், அப்போ தான் நிம்மதியா யோசிக்க முடியும் இல்லையா.

SK said...

** நீங்கள் 'திருடர் கூட்டம்' என்று சொல்வதில் எனக்கு துளியும் ஒப்புதல் இல்லை. உதாரணத்துக்கு, உங்களுடைய லொகேஷன் யூகே என்று இருக்கிறது, நாங்கள் அமரிக்காவில் இருக்கிறோம். இந்த திருடர் கூட்டத்தில் இருந்து போன நாமெல்லாம் நார்மல் குடிமக்களாக வாழவில்லையா? ஒழுங்காக வரி செலுத்துவதில்லையா, சாலை விதிகளை பின்பற்றுவதில்லையா, சட்டம் ஒழுங்குக்கு கட்டுப்படுவதில்லையா? அதெப்படி திருடர் கூட்டத்தில் இருந்து வந்த சிலர் ஒழுங்காக இருக்க முடியும்? அரசு மேல் தான் தவறு இருப்பதாக நினைக்கிறேன். ****

இங்கே இருக்கதுனால வரி கட்றோம் இதே இந்தியாவுல இருந்த செய்வோமான்னு யோசிங்க. வரி சலுகை எப்படி வாங்கலாம்னு தான் யோசிப்போம்.

இந்தியாவுல நீங்க கார் ஓடுறீங்க. அதோட வேகம் இந்தியாவ பொறுத்த வரைக்கும் ௬0 - ௮0 கம்ப் தான் இருக்கலாம். நீங்க அப்படி தான் ஓட்டுவீங்களா. நீங்களே முயற்சி பண்ணாலும் முடியாது. பின்னாடி வர்றவன் சாவு கிரக்கின்னு திட்டிட்டு போவான்.

ஒரு உதாரணம் சொல்றேன். திருச்சில ஒரு ஐயப்பன் கோயில் இருக்கு, ஸ்ரீரங்கம் பெருமாள் கோயில் இருக்கும். ஐயப்பன் கோயில்ல உண்டியல் கிடையாது, தனி வரிசை எல்லாம் கிடையாது. எங்கயும் காசு கிடையாது. பயங்கர சுத்தமா இருக்கும். இங்கே வர நம்ம மக்கள் எல்லாத்தையும் அப்படியே அனுசரிச்சு போவாங்க.

இங்கே இருந்து கார் எடுத்திட்டு போற நேரா ஸ்ரீரங்கம் போற நம்ம மக்கா ஆளுக்கு நூறு ரூபா கட்டி தனி வரிசை, அங்கே தட்டுலே காசு.. அதோட அசிங்கம் ஒரு தடவை கோயில் உள்ள ஒரு படிகட்டுலே ஒரு தாத்தா காரி துப்பிட்டு வந்தத பார்த்தேன்.

நம்ம மக்களை இழுத்து புடிச்ச சரியா தான் இருப்பாங்க. இழுத்து புடிக்க யாரும் இல்லை. ஒரு விதியும் இல்லை என்பது ரொம்ப உண்மை.

manikandan said...

SK sir,

திருச்சில உள்ள ஐயப்பன் கோவில் பிரைவேட் கோவில். அப்படினா யாரோ ஒரு பணக்காரர் நடத்தறது. அவருக்கு உண்டியல் வைக்க வேண்டிய அவசியம் இல்ல. அந்த கோவிலுக்கு உள்ளார போற பொண்ணுங்களுக்கு துப்பட்டா கொடுக்கிற அளவுக்கு பணக்காரர்.

ஸ்ரீரங்கம் கோவில் அப்படி இல்ல. ஏகப்பட்ட விழா, செலவு எல்லாம். (இது எல்லாம் தேவைதானாங்கர discussion வேற பதிவுல வச்சிக்கலாம்) அடுத்தது கோவில் அப்படிங்கறது நம்ப சமூகத்துல உள்ள எல்லா விதமான மக்களும் வருகிற எடம். அதுனால ரொம்ப தூய்மையயோ இல்லாட்டி எல்லாரும் பேசாம இருக்கனும்ன்னோ எதிர்பார்கறது தப்பு. ஒரு தாத்தா அவர் வீட்டு வாசல்ல துப்பறபோது கோவில்ல துப்பிறது இயல்பே. இதுல எந்த விதமான விதி மீறலும் இல்ல. (அவர் கோணத்துல )
கோவில ஒரு sophisticated parkaa பாத்தா இப்படி தான் தோணும். நான் குப்பை போடறது சரின்னு சொல்லல. ஆனா ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு அளவுகோல்.uk, us, europe உள்ள church மாதிரி இருக்காது.

ஆனா உங்களோட எடுத்துக்காட்டு மட்டும் தான் நான் எதிர்க்கறேன்.

இந்த பதிவுல மொக்க பின்னோட்டம் மட்டும் தான் போடறதுன்னு இருந்தேன் ! சை !இதுவும் மொக்கை தான்.

King... said...

நடக்கட்டும்...

King... said...

எத்தனை சாமியாரைப்பிடிச்சாலும் திருந்த மாட்டம்னு சில பேர் அதுமாதிரிதான் கலைஞர்களை கலைஞர்களா பாக்காததால வந்த வினை...மற்றபடி அரசியலில் மாற்றம் இளைய சமுதாயம் செய்தால் மட்டுமே உருவாகும் மற்றபடி ஒரு தொண்டனாக இருந்துகட்சிக்குள் நுழைகிறவன் அல்லது தனது பிரபல்யம் மூலம் கட்சிக்குள் நுழைகிறவன் தன்னை தக்க வைத்துக்கொள்ள வேண்டிய தேவைகளிலேயே தொலைந்து விடுகிறான் தன் சுயத்திலிருந்து...

கயல்விழி said...

என்னா இவன் சார்? ரொம்ப நாளா இந்தப்பக்கம் காணோம்? ப்ளாக் போய் படிக்கிறேன்

கயல்விழி said...

நன்றி உத்ரா. தமிங்களீஷ் உபயோகிச்சு கொல்லறீங்களே!!

கயல்விழி said...

//உங்களுக்கு உலக தரமாக தெரிகின்ற இதே டைட்டனிக் பலருக்கு பிடிப்பதில்லை. அதை விட ஆங்கில படத்தில் வருகின்ற வன்முறை காட்சிகளும், அரை மற்றும் முழு நிர்வாண காட்சிகளும் அதிகம். இது போல சினிமா சமூகத்தை பாதிப்பது இந்தியாவில் உள்ள பிரச்சனை மட்டும் அல்ல இது உலக நாடுகளில் அனைத்திலும் இருக்கும் பிரச்சனை.

//

கருத்துக்களுக்கு நன்றி SK. :)


ஒரு உதாரணத்துக்கு, தேர்தலை எடுத்துக்கொள்வோம். எந்த கட்சிக்கு பெரும்பான்மை இருக்கிறதோ, அது ஆட்சிக்கு வருகிறது அல்லவா? நான் சொல்ல வந்ததும் அதே தான். பெரும்பான்மை கருத்துப்படி தரமான படங்கள் என்று கருதப்படுபவை.

அன்பே சிவம் - இதை நிறைய மக்கள் தரமான படம் என்று ஒப்புக்கொள்வார்கள் இல்லையா?

வீராச்சாமி - இந்த படத்தைப்பற்றிய பெரும்பான்மை கருத்து என்னவாக இருக்கும்?

கயல்விழி said...

//நடிகரை நடிகராக மட்டுமே பார்க்கும் மனப்பான்மை வளர வேண்டும்.
//

நான் எழுதிய கட்டுரையின் மொத்த கருத்தையும் இந்த இரண்டு வரிகளில் அடக்கிவிடலாம்.

கயல்விழி said...

//கடந்த காலத்தை பற்றி பேசி பயனே இல்லை. இனி என் செய்தால் நன்றாக இருக்கும்னு உங்களுக்கு தோணுவதை சொல்லுங்க. கோவம் இல்லாமல், அப்போ தான் நிம்மதியா யோசிக்க முடியும் இல்லையா.
//

கடந்த காலம் என்பது வரலாறு. வரலாற்றி படிப்பது எதற்கு? நாம் நடந்து வந்த தடங்களை திரும்பிப்பார்ப்பது நடந்த தவறுகள் மீண்டும் நடக்காமல் இருக்க அல்லது குறைய உதவும்.

கோபக்காரினே முடிவு பண்ணிட்டீங்களா? :) இந்த பதிவு ஒரு 15 நிமிடத்தில் எழுதினேன், அந்த நேரத்தில் இருந்த மனநிலை அது.

தீர்வு ரொம்ப சிம்பிள் நீங்களே சொல்லீட்டீங்க. அதை பின்பற்றுவது தான் கடினம்.

கயல்விழி said...

//நம்ம மக்களை இழுத்து புடிச்ச சரியா தான் இருப்பாங்க. இழுத்து புடிக்க யாரும் இல்லை. ஒரு விதியும் இல்லை என்பது ரொம்ப உண்மை.
//

அரசு எந்திரம் சரியில்லை என்பது நீங்கள் சொல்லவருவது இல்லையா? அந்த அரசை நிர்வகிக்கும் ஆட்கள் சரியானவர்களாக இருப்பதில்லை என்பது என் கருத்து.

கயல்விழி said...

//இந்த பதிவுல மொக்க பின்னோட்டம் மட்டும் தான் போடறதுன்னு இருந்தேன் ! //

அவனும் அவளும்

ஏன்?

கயல்விழி said...

//அல்லது தனது பிரபல்யம் மூலம் கட்சிக்குள் நுழைகிறவன் தன்னை தக்க வைத்துக்கொள்ள வேண்டிய தேவைகளிலேயே தொலைந்து விடுகிறான் தன் சுயத்திலிருந்து...
//

நன்றி கிங். மேலே இருக்கும் வரிகள் முற்றிலும் உண்மை.

இவன் said...

//என்னா இவன் சார்? ரொம்ப நாளா இந்தப்பக்கம் காணோம்? ப்ளாக் போய் படிக்கிறேன்//

சில பிரச்சனைகள் கயல்விழி என் ப்லொகை போய்ப்பாருங்கள் புரியும்

manikandan said...

//இந்த பதிவுல மொக்க பின்னோட்டம் மட்டும் தான் போடறதுன்னு இருந்தேன் ! //

அவனும் அவளும்

ஏன்? ******



சினிமாகாரங்க பத்தியே படிச்சு போர் அடிச்சு போனது தான் காரணம்.

ராஜ நடராஜன் said...

இந்தக்கோபமெல்லாம் எனக்கு வந்து ரொம்ப வருசமாகிறது.இப்ப பதிவில வந்து நீங்க புலம்பறீங்க:)

கயல்விழி said...

உங்களுடைய அனைத்து கருத்துகளுக்கும் வருகைக்கும் மிக்க நன்றி ராஜ நடராஜன். எல்லாவற்றையும் ஒரே சிட்டிங்கில் படித்தீர்கள் போலும். மீண்டும் ரொம்ப நன்றி.