Friday, August 22, 2008

குசேலன் - என் பார்வையில்

பொது: ரஜினிகாந்த்க்குத்தான் எத்தனை பிரச்சினை! இவர் தமிழரா? மராத்திக்காரரா? கன்னடிகாவா? வியாபாரியா? அரசியல்வாதியா? தமிழர்களை ஏமாற்றவே பிறந்தவரா? இல்லை எல்லோருக்கும் நல்லவரா வாழ நினைத்து யாரையும் திருப்திபடுத்த முடியாமல் குழம்பி நிற்கும் ஒரு பரிதாபத்திற்குரிய ஜென்மமா? சரி எது எப்படி இருந்தாலும் கொஞ்ச நேரம் அவரை விட்டுவிட்டு குசேலனைப்பார்ப்போம்!

படத்தின் கதை:
படத்தின் நாயகன், "குசேலன்" (பாலு), பசுபதி. நாயகி மீனா. பசுபதி (பாலு) ஒரு முடிதிருத்தும் தொழில் செய்பவர். நியாயமாகவும், சட்டத்திற்கு உற்பட்டும் வாழ விரும்பும் ஒரு அப்பாவி. இவரின் மனைவி மற்றும் குழந்தைகள் ஒரு அழகான குடும்பம். இவர் வாழ்க்கையில் பல கஷ்டங்களுடன் வாழ்க்கை வண்டி ஓடிக்கொண்டு இருக்கும்போது, சினிமா பைத்தியம் பிடித்த அவர் வசிக்கும் ஊருக்கு வருகிறார் அசோக் குமார் என்கிற நடிகர், ஒரு சூப்பர் ஸ்டார். அவர் வெளிப்புறப்படப்பிடிப்பிற்காக அந்த ஊருக்கு வருகிறார். ஊரே கொண்டாடுகிறது. எல்லோரும் இந்த நடிகரைப்பார்க்க வேண்டும் என்ற ஆவலில் அவர் தங்கி இருக்கும் கெஸ்ட் ஹவுஸ் முன்னால் கூடுகிறார்கள்.

பாலுவின் பழைய நண்பர்தான் இந்த அசோக் குமார், இன்று பெரிய நடிகராகி, சூப்பர் ஸ்டாராகி இருக்கிறார். இதை பாலு தன் மனைவி குழந்தைகளிடம் சொல்லாமல் சொல்கிறார். அவர்களுக்கு சூப்பர் ஸ்டார் தன் ஏழை அப்பாவின் நண்பர் என்கிற பெருமை தாங்க முடியவில்லை. அந்த உண்மை ஊர் முழுவதும் பரவுகிறது. ஊரில் உள்ள அனைவரும் பாலுவின் உதவியை நாடுகிறார்கள்- சூப்பர் சாருடன் ஃபோட்டோ எடுத்துக்கொள்ள, அவரிடம் தன் படத்திற்கு கால்ஷீட் வாங்க இப்படி. மனைவியும், குழந்தைகளும், நண்பர்களும், விரோதிகளும், பள்ளியில் ஆசிரியையாக இருக்கும் கன்னிகாஸ்த்ரிகளும்கூட பசுபதியை அணுகுகிறார்கள்- சூப்பர் ஸ்டாரை பார்க்க உதவி செய்யக்கோரி. ஆனால், பாலுவின் நிலைமை தர்மசங்கடம், மேலும் பாலுவிற்கு பயம், தன்னை தன் பழைய நண்பன் அடையாளம் தெரியாது என்று சொல்லிவிட்டால்? அவரும் முயற்சிக்கிறார், சந்திக்க, ஆனால் கூட்டத்தில் முட்டி மோதி அவரால் சந்திக்க முடியவில்லை. ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியே.

அவர் முயற்சி தோல்வி அடையவே, கடைசியில் எல்லோரும் ஏழை பாலுவைப்பார்த்து சிரிக்கிறார்கள். இவர் சூப்பர் ஸ்டார் ஃப்ரெண்டாம் என்று!! பொய் சொன்னதாக சொல்கிறார்கள். தன் குழந்தைகள்கூட அவரை சந்தேகிக்கிறார்கள். சுயமரியாதையுள்ள எந்த ஏழைக்கும் எப்படி இருக்குமோ அதை பசுபதி அழகாக காட்டுகிறார், ரொம்ப நல்லா நடித்து இருக்கிறார். கடைசியில், பள்ளிக்கு ஒரு ஆண்டுவிழாவில் சூப்பர் ஸ்டாரை பசுபதியின் உதவி இல்லாமல் அழைத்து வருகிறார்கள். பசுபதி மனைவி குழந்தைகள் எல்லோரும் சூப்பர் ஸ்டாரை பார்க்க பள்ளிக்கு செல்கிறார்கள். யாருக்கும் தெரியாமல் பாலுவும் அந்த விழாவுக்கு வந்து ஒரு ஓரத்தில் நிற்கிறார், தன் நண்பன் பேச்சை கேட்க. சூப்பர் ஸ்டார் பேசுகிறார். எப்படி? அந்த ஊரில் பாலுவை கேலி செய்த அனைவரும் கண்ணில் நீர் மழ்க வைக்கும் அளவுக்கு. தங்கள் தவறை உணருகிறார்கள் எல்லோரும். பாலு ஆனந்த கன்ணீர் வடிக்கிறார். திரையரங்கிலும் 90% ஆடியன்ஸ் கண்கலங்குகிறார்கள். உண்மையிலேயே ஒரு நல்ல க்ளைமாக்ஸ்!

காமெடி: ஆஹா ஓஹோனு பாராட்டும் அளவுக்கும் இல்லை. அதே சமயத்தில் ரொம்ப மோசமும் இல்லை

* தன்னை கல்யாணம் செய்த கவர்ச்சியான மனைவி தன்னை தொடவிடாமல் இருப்பதால் அவளுக்கு தெரிந்தும், தெரியாமலும் வடிவேலு பார்த்து ரசிப்பதை என்னால் ரசிக்க முடிந்தது. காராணம் அவர் மனைவிதானே அவர். அவருக்கு இந்த உரிமைகூட கிடையாதா?

* ஆனால் நயந்தாராவை உடை மாற்றும் அறையில் பார்ப்பதுபோல் எடுத்தது தேவையே இல்லாத ஒண்ணு. அதை "சென்சாரா"வது கவனமாகப்பார்த்து வெட்டி எறிந்து இவர்களுக்கு உதவி செய்து இருக்கலாம். இதைப்பார்த்து "சாரு" டேர்ன் ஆண் பண்ணியது எனக்கு கொஞ்சம் அதிசயமாக இருந்தது. எனக்கு அந்த சீன் படு எரிச்சலைத்தான் தந்தது!

ரஜினிகாந்த்: நடிப்பில் எந்த குறையும் சொல்ல முடியாது. அழகாக செய்து இருக்கிறார். பார்க்கவும் நல்லாத்தான் இருக்கிறார். ஆனால் இவர் தனிவாழ்க்கை சம்மந்தப்பட்ட 3 கேள்வியை கேட்டு அதற்கு மழுப்பலான பதில் தருவதை தவிர்த்து இருக்கலாம். எந்த அறிவு ஜீவியின் ஐடியானு தெரியலை இது. மட்டமான ஐடியா! அதை ஏற்றது இவரின் முட்டாள்த்தனம்!

பாடல்கள்: ரசிக்கத்தக்கவே உள்ளன.

ஒளிப்பதிவு: பிரமாதம்

டைரக்ஷன்: சுமார்தான். க்ளைமாக்ஸ் மட்டும் பிரமாதம்.

மற்றவை: இந்தப்படம் கவிதாலயாவின் தயாரிப்பு. அதாவது பாலசந்தரின் தயாரிப்பு. ரஜினிகாந்த் ஒரு 20 நாள் கால்ஷீட் கொடுத்துள்ளார். இதில் ரஜினிகாந்த வருவது 25%. அவர் மற்றபடங்களுக்கு வாங்கும் சம்பளம் 20 கோடி (சிவாஜி, சந்திரமுகி) என்றால், இந்தப்படத்தில் அவர் நடித்ததற்கு கிடைக்கவேண்டிய நியாயமான சம்பளம் 5 கோடி!

இதில் இவருக்கு ஒரு சண்டை கிடையாது, பன்ச் வசனம் இல்லை. இரண்டு பாடல்களில் வருகிறார். படத்தில் முதலில் 40 நிமிடங்கள் இவர் சுத்தமாக தலைகாட்டவே இல்லை. இந்தப்படம் குழந்தைகளைக்கவராது என்பது என் தாழ்மையான எண்ணம்.

சிவாஜி படத்தின் வெற்றியின் விளைவால், இந்த சாதாரண படத்தை 60 கோடிக்கு வாங்கியது பிரமிட் சாய்மீரா நிறுவனம். இதனுடைய ஆடியோ ரைட்ஸ் சுமார் 3 கோடிக்கு விற்பனையானது. 60 கோடிக்கு வாங்கிய பிரமிட் சாய்மீரா எப்படியோ அதிகமான மினிமம் கியாரண்டி வைத்து விற்றுவிட்டார்கள். படத்தை காட்டாமலே வியாபாரம் செய்துவிட்டார்களா?? இது அவ்வளவு தொகைக்கு விற்றதும் சரி, படத்தைப்பார்க்காமல் வாங்கியதும் சரி, சரியான முட்டாள்தனம் என்பது இப்போதுதான் புரிகிறது.

படம் எதிர்பார்த்த அளவு போகவில்லை, தோல்விப்பட வரிசையில் சேரவேண்டியதாகிவிட்டது. தியேட்டர் ஓனர்கள் நஷ்டப்படுகிறார்கள். ப்ரமிட் சாய்மிரா மற்றும் பாலசந்தருக்கு மற்றும் ரஜினிகாந்துக்கும் லாபம்.

ஆனால் தியேட்டர் ஓனர்கள் போர்க்கொடி தூக்குகிறார்கள்! மினிமம் கியாரண்டியை குறைத்து வைத்து இருக்க வேண்டும். படத்தை ரஜினிகாந்த் கெஸ்ட் ரோல் பண்னுகிறார் என்பதுபோல் திரையிட்டு இருக்கனும். இது ஒரு ரஜினிபடம்போல் வைத்து அதிகவிலைக்கு விற்றுவிட்டார்கள் என்று குறை சொல்கிறார்கள், தியேட்டர் ஓனர்கள்! இப்போ தியேட்டர் ஓனர்கள் ப்ரமிட் சாய்மீராவையும் கவிதாலயாவையும் மினிமம் கியாரண்டியை குறைத்து வைத்து இல்லாததால்தான் நாங்கள் நஷ்டப்படுகிறோம். எங்களுக்கு நஷ்ட ஈடு கொடுங்கள் என்று சொல்லிக்கூறி போராடுகிறார்கள்!

19 comments:

கயல்விழி said...

உங்கள் விமர்சனத்தில் பெரும்பகுதி எனக்கு ஒப்புதல் இல்லை, இருந்தாலும் ஆழமான பார்வை, Good job.

கயல்விழி said...

//நடிப்பில் எந்த குறையும் சொல்ல முடியாது. அழகாக செய்து இருக்கிறார். பார்க்கவும் நல்லாத்தான் இருக்கிறார்.//

கடைசியா எப்போது கண் செக்கப் பண்ணீங்க? JK :)

கயல்விழி said...

//இந்தப்படத்தில் அவர் நடித்ததற்கு கிடைக்கவேண்டிய நியாமான சம்பளம் 5 கோடி!
//

ஆனால் நிஜத்தில் கிடைத்தது எத்தனை கோடி? அதில் தான் கேட்ச் இருக்கிறது :)

வருண் said...

***கயல்விழி said...
உங்கள் விமர்சனத்தில் பெரும்பகுதி எனக்கு ஒப்புதல் இல்லை, இருந்தாலும் ஆழமான பார்வை, Good job.***

ஒப்புதல் இல்லாத ஒரு விமர்சனத்தை பாராட்டும் பெரிய மனது உனக்கு கயல்! :-)

கயல்விழி said...

//ஒப்புதல் இல்லாத ஒரு விமர்சனத்தை பாராட்டும் பெரிய மனது உனக்கு கயல்! :-)//

Classic Sarcasm :) :)

வருண் said...

*** கயல்விழி said...
//நடிப்பில் எந்த குறையும் சொல்ல முடியாது. அழகாக செய்து இருக்கிறார். பார்க்கவும் நல்லாத்தான் இருக்கிறார்.//

கடைசியா எப்போது கண் செக்கப் பண்ணீங்க? JK :)

22 August, 2008 12:19 PM***

ஏன் ரஜினி ரசிகர்களிடம் நான் அடி வாங்கனும்னு உனக்கு ஆசையா?

பொய்மையும் வாய்மை இடத்து.. LOL!!

வருண் said...

*** கயல்விழி said...
//ஒப்புதல் இல்லாத ஒரு விமர்சனத்தை பாராட்டும் பெரிய மனது உனக்கு கயல்! :-)//

Classic Sarcasm :) :)***

I promise, there was 0% sarcasm in it, kayal! You dont know how much I respect you! :-)

கயல்விழி said...

//
I promise, there was 0% sarcasm in it, kayal! You dont know how much I respect you! :-)//

அப்படியே நம்பிட்டோம்

வருண் said...

கயல்விழி said...
***//இந்தப்படத்தில் அவர் நடித்ததற்கு கிடைக்கவேண்டிய நியாமான சம்பளம் 5 கோடி!
//

ஆனால் நிஜத்தில் கிடைத்தது எத்தனை கோடி? அதில் தான் கேட்ச் இருக்கிறது :)

22 August, 2008 12:20 PM***

எனக்கு தெரியலை. 20-26 கோடினு சொல்றாங்க. இது கொள்ளை. அனேகமாக எல்லாம் திரும்பி போயிடும். கடைசியில் ஒரு 1 கோடி மிஞ்சும் னு நினைக்கிறேன் ! :)

அது சரி said...

என்னங்க இது அனியாயமா இருக்கு??

ரஜினி படம்னு சொன்னாய்ங்க. ரஜினி பத்தி படம் பூரா பேசுனா அது ரஜினி படம் ஆயிடுமா? ரசினி படம்னு எப்டி இருக்கணும்னு ஒரு விதி இருக்குல்லா? அது எதுவுமே இல்லாம டிக்கட்டுக்கு 12 பவுண்டு வாங்கிட்டாய்ங்க.

தொலையுது வுடுங்க. பசுபதியையாவது ஒழுங்க யூஸ் பண்ணியிருக்காய்ங்களா? அதுவும் இல்ல.

நமக்கு ரொம்பத் தெரியாது பாஸு. ஆனா, படம்னா, நம்பள மாதிரி மொத ரோ சீட்டு காராய்ங்கள ஒக்கார வெக்கனும். இந்த படத்துக்கு போயி, பாதி நேரம் வெளிய நின்னு தம்மடிச்சது தான் மிச்சம்.

ம‌னுச‌னுக்கு ம‌ட்டுமில்ல‌, ப‌ட‌த்துக்கும் ஒரு எய்ம் வேணும் பாஸு. காமெடி ப‌ட‌ம்னா ஊடால‌ சீரிய‌ஸா ரொமான்ஸ் வுட‌க்கூடாது. ஆக்ஸ‌ன் ப‌ட‌த்தில‌ அழுகாச்சி ப‌ண்ண‌க்கூடாது.

ஆனா குசேல‌ன்ல‌ இன்த‌ மேறி எதுவுமில்ல‌. கானா மானா வ‌ர்றாரு, ர‌சினி ப‌த்தி கொஞ்ச‌ம் பேசுறாரு. அடுத்து கோனா ரூனா வ‌ர்றாரு அவ‌ரு ஒரு ப‌த்து நிமிச‌ம் அறுக்குறாரு. அப்புற‌ம் ந‌ம்ம‌ மானா சானா வ‌ர்றாரு, அவ‌ர் ப‌ங்குக்கு அவ‌ரும் ந‌ம்ப‌ள‌ த‌ம்ம‌டிக்க‌ வ‌ச்சிட்டாரு.

மொத்த‌த்துல‌, குசேல‌ன் ந‌ம்ப‌ க‌பால‌த்த‌ பொள‌ன்துட்டாருங்ணா!

வருண் said...

*** அது சரி said...
என்னங்க இது அனியாயமா இருக்கு??

ரஜினி படம்னு சொன்னாய்ங்க. ரஜினி பத்தி படம் பூரா பேசுனா அது ரஜினி படம் ஆயிடுமா? ரசினி படம்னு எப்டி இருக்கணும்னு ஒரு விதி இருக்குல்லா?**

அது சரி, அதென்னங்க விதி?? கொஞ்சம் சொல்லுங்களேன்! :)

அது சரி said...

//
வருண் said...
ரஜினி படம்னு சொன்னாய்ங்க. ரஜினி பத்தி படம் பூரா பேசுனா அது ரஜினி படம் ஆயிடுமா? ரசினி படம்னு எப்டி இருக்கணும்னு ஒரு விதி இருக்குல்லா?**

அது சரி, அதென்னங்க விதி?? கொஞ்சம் சொல்லுங்களேன்! :)

//

நான் அப்பிவே நெனிச்சேன். என்னடா, நம்ம அண்ணாச்சி குசேலனுக்கே அவல் அள்ளி வுடுராறே, ஒரு வேள இவுரு இது வர ரசினி படமே பாத்ததில்லியோன்னு!

ஊர்ல நம்ம பயலுவ சொல்லுவானுவ, எல அது சரி, நீ கரீக்டா கண்டுபுடிக்கிறடான்னு.அது சரியாப் போச்சி!

அப்பிடியே உங்க ஊர் பக்கம் கெடிச்சா, "பாட்ஷா" டி.வி.டி. வாங்கி பாருங்கண்ணா. தமிழுக்கு தொல்காப்பியம்னா, என்ன மேறி மொத பெஞ்சி கோஸ்டிக்கெல்லாம் "பாட்ஷா" தான் எளக்கணம்!
அத‌ வ‌ச்சி தான் நாங்க‌ எல்லா ர‌சினி ப‌ட‌த்தையும் அள‌வு போடுற‌து!

வருண் said...

அது சரி, என்னங்க நீங்க!

நான் பாட்ஷாகூட பார்க்காமலா இருப்பேன்?!

இப்படி சொல்லீட்டீங்களே,அது சரி ?!

Syam said...

ஓவர் பில்டப் உடம்புக்கு ஆகாதுன்னு வாசு, ரஜினி இருவருக்கும் தெரிஞ்சு இருக்கும் :-)

Syam said...

//மேறி மொத பெஞ்சி கோஸ்டிக்கெல்லாம் "பாட்ஷா" தான் எளக்கணம்!//

அது சரி, ரொம்ப சரியா சொன்னீங்க, பாட்ஷா இன்னும் எத்தனை முறை வேண்டுமானாலும் பாத்துகிட்டே இருக்கலாம்...

வருண் said...

***Syam said...
ஓவர் பில்டப் உடம்புக்கு ஆகாதுன்னு வாசு, ரஜினி இருவருக்கும் தெரிஞ்சு இருக்கும் :-)***

வாசு தப்பா என்னவென்று தெரியலைங்க, ஷியாம்.

இந்தப்படம் அன்புள்ள ரஜினிகாந்த் போல ஒன்று. அதே அளவுதான் வெற்றியடைந்து உள்ளது.

ஆனால் முழு நீள ரசினி படமென்று, பொய்யெல்லம் சொல்லி வித்தியாசமாக "மார்க்கெட்டிங்"
பண்ணி தலையில் மண் அள்ளிபோட்டுக்கொண்டார்கள்

வருண் said...

அது சரி மற்றும் ஷியாம்:

எனக்கு அந்த பாட்ஷா படத்திலே பாட்ஷாவைவிட மாணிக்கத்தைத்தான் பிடிச்சது!

SK said...

கயல் மற்றும் வருண் எழுத்தில் உள்ள வித்தியாசம் .. தசாவதாரம் மற்றும் குசேலன் பட விமர்சனத்தில்.

வருண், உங்களுக்கு ரஜினி கொஞ்சமா புடிக்குமோ?

வருண் said...

***SK said...
கயல் மற்றும் வருண் எழுத்தில் உள்ள வித்தியாசம் .. தசாவதாரம் மற்றும் குசேலன் பட விமர்சனத்தில்.

வருண், உங்களுக்கு ரஜினி கொஞ்சமா புடிக்குமோ?***

எனக்கு அவர் மேலே வெறுப்பு கிடையாதுங்க!

எதற்க்கெடுத்தாலும் அந்த நடிகரை, அவரால் என்றுமே முடியாத தமிழர் சான்றிதழ் கொண்டுவரச்சொல்லவும், பொழுது போகவில்லைனா, ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார் கோயில் ஆண்டி என்பதுபோல் வரம்பு மீறி அவரை விமர்சிக்கவும். வெறுக்கவும், திட்டவும் பல மறத்தமிழர்கள் இருக்காங்களே, எஸ் கே?