Monday, March 9, 2009

ரஜினி என்னும் திறமைமிக்க நடிகர்!

ரஜினிகாந்த் என்கிற நடிகர் எப்படி தமிழ்மக்களை கவர்ந்தார்? தமிழ் சூப்பர் ஸ்டாராகி முடிசூடா மன்னனாக எப்படி ஆனார்? இவருக்கு உண்மையிலேயே நடிப்புத் திறமை ஏதாவது இருந்ததா? இல்லை சும்மா சிகரெட்டை தூக்கிப்போட்டு பிடிச்சு விளையாண்டு ஸ்டெயில் என்கிற பேரில் மக்களை கவர்ந்தாரா?

ரஜினியின் அரசியலையோ, ஆன்மீகத்தையோ, நம்பிக்கையையோ, அவர் குடும்ப வாழக்கையையோ பற்றி இங்கே நான் பேச வரவில்லை. 1974 ல அபூர்வ ராகங்களில் அறிமுகமான ரஜினி என்கிற நடிகர், தமிழ் சினிமாவில் எப்படி சூப்பர் ஸ்டார் ஆகும் இந்த அளவுக்கு வளர்ந்தார் என்பதை மட்டும் பற்றி பார்ப்போம்.

ரஜினியின் அப்பா ஒரு டைரக்டரோ அல்லது பெரிய நடிகரோ அல்லது படமெடுக்கும் அளவுக்கு பணக்காரரோ கிடையாது. ரஜினி, தமிழ் சினிமாவில் நுழையும்போது தமிழர் அல்ல! இவர் நடிக்க வரும்போது இவருக்கு எதுவும் பெரிய இடத்து சிபாரிசு கிடையாது! இருந்தும் ரஜினியிடம் இருக்கிற ஏதோ ஒண்ணு கே பாலசந்தரை கவர்ந்தது. இவர் முதல் படமான அபூர்வ ராகங்களில் பாலசந்தர் இவருக்கு ஒரு சின்ன வாய்ப்பு கொடுத்தார்.அதே நேரத்தில் பல படங்களில் இவருக்கு [மூன்று முடிச்சு, அவர்கள், அவள் ஒரு தொடர்கதை (தெலுங்கு வேர்ஷன்)] வாய்ப்பு கொடுத்தார் பாலசந்தர். பாலசந்தர் இதுபோல் பல நடிகர்களுக்கு வாய்ப்பு தந்துள்ளார், ரஜினிக்கு மட்டுமல்ல. உதாரணமாக நடிகை சுஜாதா, நடிகர் கமலஹாஷன் போன்றவர்களுக்கும் இதேபோல் வாய்ப்பு கொடுத்தார்.

ரஜினிகாந்தின் வளர்ச்சியின் வேகத்தைப்போல் எந்த ஒரு நடிகனும் தமிழ் சினிமாவில் அன்றும் இன்றும் என்றும் வளர்ந்ததில்லை. ரஜினிகாந்தின் வளர்ச்சி தமிழ் சினிமாவில் ஒரு தனி வரலாறு என்று சொன்னால் அது மிகை இல்லைதான். எம் ஜி ஆர், சிவாஜி கூட இவ்வளவு வேகமாக வளரவில்லை.

1975 லிருந்து ரஜினி ஒரு மிகவும் பிஸியான நடிகராகிவிட்டார்! அதன் பிறகு தமிழ் சினிமாவில் இவருக்கு மார்க்கட் என்றுமே கீழேபோகவில்லை! இவருடைய நடிப்பு, அன்றைய பெரிய நடிகர்கள், எம் ஜி ஆர் போலவோ, சிவாஜி போலவோ, ஜெய்சங்கர் போலவோ, சிறிய நடிகர்கள் சிவகுமார் போலவோ கமஹாஷன் போலவோ இல்லை. ரஜினியின் நடிப்பு அவருக்கே உரிய ஒரு புது பாணியில் தனி "ஸ்டயிலுடன்" இருந்தது.

மூன்று முடிச்சு படத்தில் இவர் நடிப்பைப்பார்த்த தமிழ் ரசிகப்பெருமக்கள் அசந்துபோனார்களாம்! இவரோட திரையுலகம் வந்த சக நடிகர்கள் மிரண்டு போனார்கள் என்கிறார்கள். அதைத் தொடர்ந்து அவர் வில்லனாக இவர் நடித்த அவர்கள் (ராமனாதன்), 16-வயதினிலே (பரட்டையன்), போன்ற படங்களில் இவருடைய நடிப்பைப்பார்த்து தமிழ்மக்கள் இவருடைய நடிப்புத்திற்மை பார்த்து பலவாறு புகழ்ந்து தள்ளினார்களாம். இவர் வில்லனாக நடித்ததை விமர்சகர்கள், "People loved to hate him! என்றார்களாம்.

ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் க்ளிண்ட் ஈஸ்ட்வுட் போலவும், பாலிவுட் நடிகர் சத்ருகன் ஷினா போலவும் ரஜினியின் ஸ்டயில் இருந்ததாக ஒரு சிலர் சொன்னாலும், இவருடைய "16-வயதினிலே பரட்டையன்", "அவர்கள் ராமநாதன்" போன்ற ரோல்களில் இவர் தமிழருக்கே ஆன திமிர்பிடித்த ஆட்டிடூடுடன் அபாரமாக நடிப்பதைப்பார்த்த தமிழ்மக்கள் அதெல்லாம் இல்லை ரஜினியின் நடிப்பு தனித்துவம் (யுனீக்) என்று விவாதம் பண்ண ஆரம்பித்தார்கள்.

பிறகு இவர் ஹீரோவாக நடித்த புவனா ஒரு கேள்விக்குறி படத்தில் நடித்த "சம்பத் கேரக்டர், முள்ளும் மலரும் படத்தில்,வந்த காளி கேரக்டர் மற்றும் ஆறிலிருந்து அறுபது வரை சந்தானம் கேரக்டர் கள், ரஜினிகாந்து ஒரு திறமைமிக்க நடிகர் என்று சந்தேகமே இல்லாமல் நிரூபித்தது. இப்படியே வளர்ந்தவர்தான் இன்றைய சூப்பர் ஸ்டார். இவரிடம் அபாரமான நடிப்புத் திறமை இருந்ததென்னவோ உண்மைதான்.

26 comments:

  1. //ரஜினியின் நடிப்பு அவருக்கே உரிய ஒரு புது பாணியில் தனி "ஸ்டயிலுடன்" இருந்தது. //


    ஆமாம் சிவாஜியின் பாணியும் அமிதாப் பச்சனின் பாணியும் கலந்து கொடுத்த கலவை அவர்

    ReplyDelete
  2. //ஆமாம் சிவாஜியின் பாணியும் அமிதாப் பச்சனின் பாணியும் கலந்து கொடுத்த கலவை அவர்//

    இந்தி நடிகர் சத்ருஹன் சின்ஹாவின் பாணையை பின்பற்றியதாகவும் கூறுபவர்கள் உண்டு. அக்கினி கரங்கள் படத்தில் இருவரும் இணைந்து நடித்தனர். அதில் இந்த பாதிப்பை என்னால் பெரியளாவு அவதானிக்கமுடியவில்லை.

    ReplyDelete
  3. கமல் என்ற பெரும் கலைஞனுடன் ஒப்பிடப்பட்டதாலேயே அவரது நடிப்பு திறன் குறித்து அதிகம் பேசப்படவில்லை என்று நினைக்கிறேன்

    மற்றப்படி இப்பொழுது நடிக்கும் பலரையும் விட அவர் 100 மடங்கு சிறந்த நடிகர் என்பதில் சந்தேகம் இல்லை

    ReplyDelete
  4. //ரஜினிகாந்தின் வளர்ச்சியின் வேகத்தைப்போல் எந்த ஒரு நடிகனும் தமிழ் சினிமாவில் அன்றும் இன்றும் என்றும் வளர்ந்ததில்லை.// தகவல் எந்த அளவுக்கு சரி என்று தெரியவில்லை. வேண்டுமானால் நிலையான வளர்ச்சி என்று சொல்லலாம். தனுஷ் மூன்றே படங்களில் உச்சத்தை அடைந்தவர்.

    ReplyDelete
  5. பரட்டை தலை,குறுக்கு நடை,சிகரெட்,கண்ணாடி,வாடை தமிழ்,நாயகன் நகைச்சுவை,வில்லத்தனம்ன்னு ஸ்டைல் மன்னன் தான் ரஜனி.தனி மனித குணம்,ஆன்மீகம்,பாலச்சந்தர் படங்கள் தவிர ரஜனி நடிப்பில் என்னைக் கவரவில்லை.சிறுசு,பெருசுன்னு பிரிவினையில்லாம படம் பார்க்கிறதால நடுவுல உட்கார்ந்து நானும் படம் பார்க்கிறேன்.

    ReplyDelete
  6. ***ஆமாம் சிவாஜியின் பாணியும் அமிதாப் பச்சனின் பாணியும் கலந்து கொடுத்த கலவை அவர்

    9 March, 2009 7:46 PM***

    ஹிந்தி தெரியாததால் அமிதாப் நடிப்பு பற்றி தெரியாது.

    நடிகர் திலகம், நடிப்பின் இலக்கணம் என்ற போதிலும், ரஜினியின் ஒரு சில நடிப்பு திறமைகள், அவரையே பாராட்ட வைத்து இருக்கின்றன.

    * மூன்று முகம் படத்தில் அலெக்ஸ் பாண்டியன் ரோல்.

    * மன்னன் படத்தில் அம்மா என்றழைக்காத பாடலில் ரஜினியின் அலட்டிக்காத அழகான நடிப்பு!

    * புவனா ஒரு கேள்விக்குறி யில் ராஜா என்பார் பாடலில் அவர் காட்டும் முகபாவனைகள் போன்றவைகள்!

    ReplyDelete
  7. ***அருண்மொழிவர்மன் said...
    //ஆமாம் சிவாஜியின் பாணியும் அமிதாப் பச்சனின் பாணியும் கலந்து கொடுத்த கலவை அவர்//

    இந்தி நடிகர் சத்ருஹன் சின்ஹாவின் பாணையை பின்பற்றியதாகவும் கூறுபவர்கள் உண்டு. அக்கினி கரங்கள் படத்தில் இருவரும் இணைந்து நடித்தனர். அதில் இந்த பாதிப்பை என்னால் பெரியளாவு அவதானிக்கமுடியவில்லை.

    9 March, 2009 7:59 PM***

    உங்கள் கருத்துக்கு நன்றி, அருண்மொழிவர்மன்! :-)

    ReplyDelete
  8. ***புருனோ Bruno said...
    கமல் என்ற பெரும் கலைஞனுடன் ஒப்பிடப்பட்டதாலேயே அவரது நடிப்பு திறன் குறித்து அதிகம் பேசப்படவில்லை என்று நினைக்கிறேன்

    மற்றப்படி இப்பொழுது நடிக்கும் பலரையும் விட அவர் 100 மடங்கு சிறந்த நடிகர் என்பதில் சந்தேகம் இல்லை

    9 March, 2009 8:27 PM***

    நீங்கள் சொல்வது உண்மைதான், டாக்டர் புருனோ! :-)

    ReplyDelete
  9. ***SUREஷ் said...
    "People loved to hate him!

    :)))

    10 March, 2009 4:39 AM***

    இது ஏதோ ஒரு விமர்சனத்தில் வாசித்த வரி, சுரேஷ்! :-)

    ReplyDelete
  10. ***அமர பாரதி said...
    //ரஜினிகாந்தின் வளர்ச்சியின் வேகத்தைப்போல் எந்த ஒரு நடிகனும் தமிழ் சினிமாவில் அன்றும் இன்றும் என்றும் வளர்ந்ததில்லை.// தகவல் எந்த அளவுக்கு சரி என்று தெரியவில்லை. வேண்டுமானால் நிலையான வளர்ச்சி என்று சொல்லலாம். தனுஷ் மூன்றே படங்களில் உச்சத்தை அடைந்தவர்.

    10 March, 2009 6:38 AM***

    வாங்க அமர பாரதி! :-)

    குறைந்த நாளில் மேலே போனவர்கள் நெறையப்பேர் இருக்காங்க, அமரபாரதி.

    அவர்கள், நிலைத்து நிற்க முடியுமா என்பது தெரியவில்லை!

    ReplyDelete
  11. ***ராஜ நடராஜன் said...
    பரட்டை தலை,குறுக்கு நடை,சிகரெட்,கண்ணாடி,வாடை தமிழ்,நாயகன் நகைச்சுவை,வில்லத்தனம்ன்னு ஸ்டைல் மன்னன் தான் ரஜனி.தனி மனித குணம்,ஆன்மீகம்,பாலச்சந்தர் படங்கள் தவிர ரஜனி நடிப்பில் என்னைக் கவரவில்லை.சிறுசு,பெருசுன்னு பிரிவினையில்லாம படம் பார்க்கிறதால நடுவுல உட்கார்ந்து நானும் படம் பார்க்கிறேன்.

    10 March, 2009 7:15 AM***

    உங்கள் கருத்துக்கு நன்றி, திரு. நடராஜன்! :-)

    ReplyDelete
  12. ***ராஜ நடராஜன் said...
    பரட்டை தலை,குறுக்கு நடை,சிகரெட்,கண்ணாடி,வாடை தமிழ்,நாயகன் நகைச்சுவை,வில்லத்தனம்ன்னு ஸ்டைல் மன்னன் தான் ரஜனி.தனி மனித குணம்,ஆன்மீகம்,பாலச்சந்தர் படங்கள் தவிர ரஜனி நடிப்பில் என்னைக் கவரவில்லை.சிறுசு,பெருசுன்னு பிரிவினையில்லாம படம் பார்க்கிறதால நடுவுல உட்கார்ந்து நானும் படம் பார்க்கிறேன்.

    10 March, 2009 7:15 AM***

    உங்கள் கருத்துக்கு நன்றி, திரு. நடராஜன்! :-)

    ReplyDelete
  13. ஆனா இப்ப என்ன கவலைன்னா அந்த பழைய ஸ்டைல்,வேகம் எல்லாம் இப்ப இல்லைன்னுதான் தோணுது கடைசியா மொட்டை பாஸ்ல பாத்தது அந்தக்காலத்து வேகம் அதன் சாயல்கள் வந்திருக்கும் அவரையும் அறியாமல்...

    தனி பாணி மூலம்தான் அவர் இந்த இடத்துக்கு வந்தார் என்பது உண்மை.

    ReplyDelete
  14. ரொம்ப நாளைக்கப்புறம் பின்னூட்டம் எழுதியிருக்கிறேன் வருண்... சுகம்தானே,கயல்விழி எப்படி இருக்காங்க...

    ReplyDelete
  15. தமிழன் கறுப்பி!

    உங்களையெல்லாம் பாத்தா நெம்பப் பாவமாயிருக்கு!

    ReplyDelete
  16. தமிழன்-கறுப்பி... said...
    ஆனா இப்ப என்ன கவலைன்னா ***அந்த பழைய ஸ்டைல்,வேகம் எல்லாம் இப்ப இல்லைன்னுதான் தோணுது கடைசியா மொட்டை பாஸ்ல பாத்தது அந்தக்காலத்து வேகம் அதன் சாயல்கள் வந்திருக்கும் அவரையும் அறியாமல்...

    தனி பாணி மூலம்தான் அவர் இந்த இடத்துக்கு வந்தார் என்பது உண்மை.

    10 March, 2009 8:03 AM***

    வாங்க தமிழ்ன் - கறுப்பி!

    உங்கள் பெயர்மாற்றமே எனக்கு இப்போத்தான் தெரிந்தது! :-)


    ***தமிழன்-கறுப்பி... said...
    ரொம்ப நாளைக்கப்புறம் பின்னூட்டம் எழுதியிருக்கிறேன் வருண்... சுகம்தானே,கயல்விழி எப்படி இருக்காங்க...

    10 March, 2009 8:05 AM***

    ஆமா, உங்களை கடைசியா "தமிழனா" பார்த்துதான் :-)

    கயல், சுகம்தான். நீங்க கேட்டதா சொல்றேன் :-)

    ReplyDelete
  17. ***லதானந்த் said...
    தமிழன் கறுப்பி!

    உங்களையெல்லாம் பாத்தா நெம்பப் பாவமாயிருக்கு!

    10 March, 2009 9:13 AM***

    வாங்க லதானந்த் சார். நம்ம எல்லாமே பாவப்பட்ட ஜென்மம்னுதான் சொல்றாங்களே ;-)

    ReplyDelete
  18. // தனுஷ் மூன்றே படங்களில் உச்சத்தை அடைந்தவர்.//

    அடுத்த மூன்றே படங்களில்........ :) :) :)

    ReplyDelete
  19. ’முள்ளும் மலரும்’, ’ஆறிலிருந்து அறுபது வரை’ வரிசையில் ’எங்கேயோ கேட்ட குரல்’-ஐ விட்டு விட்டீர்களே:)?

    ReplyDelete
  20. ***புருனோ Bruno said...
    // தனுஷ் மூன்றே படங்களில் உச்சத்தை அடைந்தவர்.//

    அடுத்த மூன்றே படங்களில்........ :) :) :)

    10 March, 2009 9:54 AM***

    மீண்டும் வருக, டாக்டர் ப்ருனோ. :-)

    நிச்சயமாக தனுஷை ரஜினி வளர்ச்சி முன்னால் "கம்ப்பேர்" பண்ண்க்கூடாது.

    தனுஷ் இன்னும்கூட நிலையான இடம் பெற்றுவிட்டாரா என்பது சந்தேகத்துக்குரியது

    ReplyDelete
  21. *** ராமலக்ஷ்மி said...
    ’முள்ளும் மலரும்’, ’ஆறிலிருந்து அறுபது வரை’ வரிசையில் ’எங்கேயோ கேட்ட குரல்’-ஐ விட்டு விட்டீர்களே:)?

    10 March, 2009 10:35 AM***

    வாங்க, ராமலக்ஷ்மி! :-)

    "எங்கேயோ கேட்ட குரல்" நிச்சயம் அந்த வகையில் சேரவேண்டிய உயர்தர படம்தாங்க!

    அதுவும், ரஜினி கேரக்டர் (வீரையன்??) அதில் நடத்தை தவறிய மனைவியை மன்னித்து அவளுக்கு இறுதிச் சடங்கு ஊரை எதிர்த்து செய்வது போல் எல்லாம் மனிதாபிமானத்தின் உச்சத்தை காட்டுவது போல் இருக்கும்.

    ரஜினி நல்லா வளர்ந்த பிறகு வந்த படம் என்பதால் அதை சொல்லாமல் விட்டுவிட்டேங்க! :-)

    ReplyDelete
  22. பாபா, முள்ளும் மலரும் ரெண்டு படத்தையும் விட்டுட்டீங்க. எனக்கு ரஜினி ஆக்டிங்ல ரொம்ப பிடிச்ச படங்கள் அவை.

    ReplyDelete
  23. மணிகண்டன்!

    பாபாவை விட்டது உண்மைதான். முள்ளும் மலரும் பத்தி சொல்லி இருக்கேனே? :-)

    ReplyDelete
  24. கமஹாஷன்?

    அதிசயப் பிறவி, பாபா இவற்றில் அவரது மார்க்கெட் சரியவில்லையா?

    ருத்ரைய்யா இயக்கிய "அவள் அப்படித்தான்" படத்தில் ஸ்ரீப்ரியாவின் மேலதிகாரியாக பிரமாதமாக நடித்திருப்பார். "தப்பும்மா, ரொம்ப தப்பு" என்று சொல்லியபடியே எல்லா தவறுகளையும் அவர் செய்து கொண்டு இருப்பது தான் அவரது கதாபாத்திரம்.

    //இவரிடம் அபாரமான நடிப்புத் திறமை இருந்ததென்னவோ உண்மைதான்.//
    இப்போ அதைப் பெருசா ஒன்னும் பயன்படுத்த வேண்டாம்னு விட்டுட்டாங்களோ இயக்குனர்கள்?

    ReplyDelete
  25. ***Joe said...
    கமஹாஷன்?****

    அவரைப்பற்றி நான் என்ன தப்பா சொன்னேன்?

    ***அதிசயப் பிறவி, பாபா இவற்றில் அவரது மார்க்கெட் சரியவில்லையா?***

    எனக்குத்தெரிய சரியவில்லை!

    ***ருத்ரைய்யா இயக்கிய "அவள் அப்படித்தான்" படத்தில் ஸ்ரீப்ரியாவின் மேலதிகாரியாக பிரமாதமாக நடித்திருப்பார். "தப்பும்மா, ரொம்ப தப்பு" என்று சொல்லியபடியே எல்லா தவறுகளையும் அவர் செய்து கொண்டு இருப்பது தான் அவரது கதாபாத்திரம்.***

    அந்தப்படம் நான் பார்க்கவில்லைங்க. ரொம்ப வித்தியாசமான படம்னு சொல்றாங்க. பார்க்கனும் :-)

    ***//இவரிடம் அபாரமான நடிப்புத் திறமை இருந்ததென்னவோ உண்மைதான்.//
    இப்போ அதைப் பெருசா ஒன்னும் பயன்படுத்த வேண்டாம்னு விட்டுட்டாங்களோ இயக்குனர்கள்?

    12 March, 2009 1:55 AM***

    தயாரிப்பாளர்கள் பொதுவாக சினிமாவையும், ரஜினியையும் வைத்து எப்படி சம்பாரிக்கலாம் என்றுதான் பார்க்கிறார்கள்.

    ரஜினியும் பாக்ஸ்-ஆஃபிஸ் ஹிட் கொடுப்பதுதான் உண்மையான வெற்றி என்று நம்புவதுபோல் தோனுது :-(

    ReplyDelete