நான் ஒரு பார்ப்பனர் வகுப்பை சேர்ந்தவர். ஆனால் இணையதளத்தில் என் கருத்தை சொல்லனும். பார்ப்பான் என்கிற காரணத்தால் என்னை எல்லோரும் தமிழின துரோகினு சொல்றாங்க! நான் சொல்வதில் உள்ள நியாயத்தையோ , உண்மையையோ பார்க்க மறுக்கிறார்கள் என்கிற ஒரு பிரச்சினையுடன் வந்தார் என் நெருங்கிய நண்பர்.
அவருக்கு நான் சொன்ன அறிவுரைகள்:
* உங்க பேர் என்ன? விஜயராகவனா? முதலில் அதை தமிழழகன் என்று மாற்றுங்கள். இதுதான் இனிமேல் உங்க பெயர்.
* நீங்க வெஜிடேரியனா? ”ஆமா. வீட்டில் அதுதான் குக் பண்ணுவாங்க. அதே சாப்பிட்டு பழகிட்டேன்” நு சொல்றீங்களா? ஒண்ணு பண்ணுங்க, அங்கங்கே,சிக்கன் பிரியாணி சாப்பிட்டேன், பர்கர் சாப்பிட்டேன், சைனீஸ் ஃபூட் பிடிக்கும்னு சொல்லுங்க!
* அப்புறம் இந்த மன்னி சொன்னாங்க, அத்திம்பேர் சொன்னாரு, அண்ணா சொன்னான், தங்கை சொன்னாள் நு எதுவும் சொல்ல ப்படாது! அண்ணி சொன்னாங்க, அத்தான் சொன்னாரு, அண்ண்ன் சொன்னாரு, தங்கச்சி சொல்லுச்சி நு சொல்லனும். இதில் ரொம்ப கவனமா இருக்கனும். சரியா?
* நீங்க கடவுள் நம்பிக்கை இல்லாதவரா? நல்லதா போச்சு. தந்தை பெரியார் சொன்னார். கலைஞர் சொன்னார்னு அப்பப்போ ஏதாவது சொல்லுங்க.பொய் எல்லாம் சொல்ல வேணாம். அவர்களும் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள்தானே? உங்க கருத்தை ஒத்து ஏதாவது சொன்ன தை ”கோட்” பண்ணி சொல்லுங்க.
* அப்புறம், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு தானே? அதுமட்டும் போதாது, ராஜிவ் காந்தி படுகொலை தப்பே இல்லைனு சொல்லுங்க!
* இன்னொரு விசயம். நீங்க ரஜினி ரசிகரா? முடிந்தால் கமல் ரசிகராகப்பாருங்க! என்ன அப்படி பார்க்கிறீர்கள்? தமிழர்களை பொறுத்தமட்டில் ரஜினி ரசிகர்கள் எல்லாம் தமிழின துரோகிகள்.
சரி, நீங்க பார்ப்பனரல்லாதவரா ஒரு இமேஜ் உண்டாக்க இது ஓரளவுக்கு போதும் என்றேன். நண்பர் முயன்று, பயங்கர வெற்றியடைந்து விட்டாதாக எனக்கு நன்றி சொன்னார்.
46 comments:
புலியைப்பார்த்து பூனை சுட்டுப்போட்டுகிட்டா, பூனை ஒண்ணு புலியாகிவிடாது தலைவரே...
இந்த மாதிரி ரணகளமான ஐடியா கொடுத்து ஏன் அவரை வம்புல மாட்டிவிடறீங்க...
பார்த்துங்க,இதே மாதிரி முகமூடியை வீட்டிலும் போட்டு மாட்டிக்கபோறார். :-)
ம்ம்ம்ம்..... ஒருநாள் தெரியாமலா போகும்..
//புலியைப்பார்த்து பூனை சுட்டுப்போட்டுகிட்டா, பூனை ஒண்ணு புலியாகிவிடாது தலைவரே...
இந்த மாதிரி ரணகளமான ஐடியா கொடுத்து ஏன் அவரை வம்புல மாட்டிவிடறீங்க...//
பழமொழி என்னவோ நல்ல பழமொழி தான்.. ஆனா புலி யாருங்கிறதுல தான் பிரச்சினை. நாங்கதான் உண்மையான தமிழர்கள் அப்படின்னு சொல்லிக்கிட்டு ஊரை ஏமாத்துறவங்கதான் இன்னைக்கு நம்ம ஊர்ல அதிகம். அவங்களை புலின்னு சொன்னா அப்புறம் புலியை அசிங்கப் படுத்துறாப்புல தோணுது :)
நண்பர் வருண் , இந்தப்பதிவு எனக்கு அனேக சந்தேகங்களை ஏற்படுத்துகின்றன...
1. தமிழ் என்ற வார்த்தை பெயரில் வருமாறு பார்ப்பனர்கள் பெயர் வைக்க மாட்டார்களா?
2. பார்ப்பனர்கள் வீட்டில் குக் பண்ணி பழகியதால் மட்டுமே வெஜிடேரியனா? இல்லை நான் வெஜ் குக் பண்ணக் கூடாது என்பதால் வீட்டில் குக் பண்ணுவதில்லையா?
3. மன்னி , அத்திம்பேர் இவையெல்லாம் எந்த மொழி வார்த்தைகள்
4. ஈழத்தமிழர்களுக்கு ஆதரவில்லை என்பதுதான் பார்ப்பனர்களின் அடையாளமா?
தோழமையுடன்
மதிபாலா
ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்ததாலேயே அவரோட கருத்துக்களை மறுக்கறாங்கன்னா,அவங்க பழகறதுக்கு தகுதி இல்லாதவங்கன்னு அர்த்தம்.
Ask your friend to Chillax! :)
உங்க நண்பர் பெயர் லுக்கி லக்கா?
நிறைய விசியங்களை விட்டுடீங்களே..
சோ, சுப்பிரமணிய சாமியை பத்தி தவறி போய் கூட நல்லதா பேச கூடாது.
இட ஒதுக்கிட்டை பத்தி ஆதரிச்சு பதிவெழுதனும்.
அமெரிக்கா மேல எல்லா பழியையும் போடனும்
இஸ்ரேலை எதிர்க்கனும், பாலஸ்தீனத்தை ஆதரிக்கனும்
ரம்ஜான், ஈஸ்டர் கொண்டாடனும், தீபாவளி கொண்டாட கூடாதுன்னு அஞ்சு பக்கத்திற்கு பதிவு எழுதனும்.
ராமாயனத்துல ராமன் கெட்டவன், ராவணன் தான் நல்லவன் ஏன்னா அவன் தமிழன்னு சொல்லனும்.
யார் புலி? யார் பூனை?
அப்படியே பூனைகள் என்றாலும், ஏன் பல புலிகள் பூனைகளிடம் அடிமையாக(கை கட்டி வாய் பொத்தி) இருக்கின்றன.
நல்லதை, நல்லது என்றும் கெட்டதை கெட்டது என்றும் கூறும் பூனைகளை, சாதகமாக இருந்தால் தலையில் தூக்கி கொண்டு ஆடுவதும், பாதகமாக இருந்தால் கீழே போட்டு மிதிப்பதும் இந்த so called புலிகளின் வழக்கம்.
வருண்...பாத்தீங்களா என்னை வம்புல மாட்டிவிட்டுடீங்க...
பவாம சில பேருக்கு பூனைக்கும் புலிக்கும் வித்தியாசம் தெரியலையாம்...அதையும் சொல்லிக்கொடுத்துடுங்க...
வேடதாரிகளின் வேடங்கள் வெகுநாள்களுக்கு நிலைக்காது என்று சொல்லிக்கொள்கிற அதே நேரத்திலே...........
தமிழனாக மாற தகுதிகளை வரையறுத்துத்தருகிற தம்பி வருணிடத்திலே நான் கேட்டுக்கொள்வது என்னவென்றால்........................
பார்ப்பனர்கள் பலர் பார்வை பட தமிழனாக மாறமுடியும் என்று சொல்கிற நீ, தமிழர்கள் பார்ப்பானாக மாற ஏதும் வழியிருக்கிறதா என்பதையும் எடுத்துச்சொல்ல வேண்டும்
இப்படிக்கு
-மு.க
:_)))))))))))))))))))))))))))
பார்பனர் என்றால் யார்?
பார்ப்பனியம் என்றால் என்ன?
பிராமணன் என்றால் யார்?
பிராமணியம் என்றால் என்ன?
பிராமணிதிற்க்கும்,பார்பன்னியதிர்க்கும் என்ன சம்பந்தம்?
கொஞ்சம் விளக்கம் வேண்டும் அண்ணா...
//
ுலியைப்பார்த்து பூனை சுட்டுப்போட்டுகிட்டா, பூனை ஒண்ணு புலியாகிவிடாது தலைவரே...
இந்த மாதிரி ரணகளமான ஐடியா கொடுத்து ஏன் அவரை வம்புல மாட்டிவிடறீங்க...
//
சூடு போட்டுக்கொண்ட பூனையைப் பார்த்து சிரிக்கும் புலி சொல்லும் கதை இது. ஓகேயா ?
ரொம்ப நன்றி
வருண் அய்யங்கார்
(சும்மா தமாசுக்குப்பா)
வீட்டிற்குள் தெலுங்கு, கன்னடம், உருது, துளு, மார்வாடி, மலயாளம் போன்ற தூய தமிழைப் பேசுபவர்கள் எல்லாம் தூய தமிழர்கள். ஆனால் வீட்டிலும் வெளியிலும் தமிழ் மட்டுமே பேசும் பார்ப்பானர்கள் தமிழர்கள் அல்லர்.
என்ன கொடுமை சரவணன் இது ?
***நாஞ்சில் பிரதாப் said...
புலியைப்பார்த்து பூனை சுட்டுப்போட்டுகிட்டா, பூனை ஒண்ணு புலியாகிவிடாது தலைவரே...
இந்த மாதிரி ரணகளமான ஐடியா கொடுத்து ஏன் அவரை வம்புல மாட்டிவிடறீங்க...
11 March, 2009 9:10 PM***
இல்லைங்க, நீங்கள் "இன்னொருவரா" இருந்து உங்கள் கருத்தை சொன்னால், அதன் "ரெஸ்பாண்ஸ்" வேற மாதிரி இருக்கும்.
பொதுவாக எல்லோருமே, யார் சொல்றாங்க, இவன் சாதி என்ன னுதான் பார்க்கிறார்கள். என்ன சொல்றாங்கனு பார்க்கிறதில்லை. ஏன் அப்படி இவன் சொல்றானுதான் பார்ப்பாங்க.
இதுபோல் வேடமிட்டு வெற்றியடைவது எளிதுங்க. :-)
***வடுவூர் குமார் said...
பார்த்துங்க,இதே மாதிரி முகமூடியை வீட்டிலும் போட்டு மாட்டிக்கபோறார். :-)
11 March, 2009 9:12 PM***
அவர் இதுவரை மாட்டிக்கவில்லை! அப்ப்டி மாட்டினால்தான் என்னங்க? தன்னை பார்க்காமல், தன் கருத்தை எப்படி பார்க்கிறார்கள் என்று அறிய ஒரு முயற்சிதானே? இதில் எதுவும் பெரிய தப்பில்லைனு தோனுது :-)
***ஆ.ஞானசேகரன் said...
ம்ம்ம்ம்..... ஒருநாள் தெரியாமலா போகும்..
11 March, 2009 9:24 PM**
It is not that who you are, which matters. It is often how you prject yourself as who you are, only matters!
தெரியாமலே போகலாம்ங்க! :-)
***மதுசூதனன் ராமானுஜம் said...
//புலியைப்பார்த்து பூனை சுட்டுப்போட்டுகிட்டா, பூனை ஒண்ணு புலியாகிவிடாது தலைவரே...
இந்த மாதிரி ரணகளமான ஐடியா கொடுத்து ஏன் அவரை வம்புல மாட்டிவிடறீங்க...//
பழமொழி என்னவோ நல்ல பழமொழி தான்.. ஆனா புலி யாருங்கிறதுல தான் பிரச்சினை. நாங்கதான் உண்மையான தமிழர்கள் அப்படின்னு சொல்லிக்கிட்டு ஊரை ஏமாத்துறவங்கதான் இன்னைக்கு நம்ம ஊர்ல அதிகம். அவங்களை புலின்னு சொன்னா அப்புறம் புலியை அசிங்கப் படுத்துறாப்புல தோணுது :)
11 March, 2009 9:57 PM***
ஆமா இந்த புலி, எலி, துரோகி, தியாகி என்று கொடுக்கப்படுகிறா பட்டம் எல்லாம் பார்க்கிறவங்க கண்ணோட்டத்திற்கேற்ப மாறும் என்பது உண்மைதாங்க :-)
***மதிபாலா said...
நண்பர் வருண் , இந்தப்பதிவு எனக்கு அனேக சந்தேகங்களை ஏற்படுத்துகின்றன...
1. தமிழ் என்ற வார்த்தை பெயரில் வருமாறு பார்ப்பனர்கள் பெயர் வைக்க மாட்டார்களா?
2. பார்ப்பனர்கள் வீட்டில் குக் பண்ணி பழகியதால் மட்டுமே வெஜிடேரியனா? இல்லை நான் வெஜ் குக் பண்ணக் கூடாது என்பதால் வீட்டில் குக் பண்ணுவதில்லையா?
3. மன்னி , அத்திம்பேர் இவையெல்லாம் எந்த மொழி வார்த்தைகள்
4. ஈழத்தமிழர்களுக்கு ஆதரவில்லை என்பதுதான் பார்ப்பனர்களின் அடையாளமா?
தோழமையுடன்
மதிபாலா
11 March, 2009 10:52 PM***
1) வாலியின் அம்மா பேர் பொன்னம்மாவாம். இதை எல்லோரும் அதிசயமா கேட்டாங்க. ஏன் என்ற பிராமன்ப்பெண்னுக்கு பொன்னம்மானு பேர் வைப்பது ரொம்ப ரேர் னு சொல்லலாம். இதுபோல் சொல்லிக்கொண்டேஎ போகமாலாம்.
2) இந்துக்களில் பலர், கோழியும், ஆடும் சாப்பிடுவாங்க, மாடு சாப்பிடுவர்களை மட்டமா பார்ப்பாங்க! இதெல்லாம் மோஸ்ட்லி "ட்ரடிஷன்" தான். நம்ம அம்மா அப்பா சமைப்பது சாப்பிடுவதுபோல் நாம் செய்கிறோம். எதையும் மாற்ற மனம் வருவதில்லைங்க!
3) உங்க கேள்வி எனக்கு புரியவில்லை. அதில் சமஸ்கிரதம் கலக்கவே இல்லையே? தமிழ் எழுத்துக்களால் ஆன வார்த்தைகள் தானே?
4) அப்படி ஒரு குற்றச்சாட்டு உண்டு. அது உண்மை அல்ல!
***viji said...
தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் தங்கள் பதிவில் newspaanai பட்டனை சேர்த்து பதிவுகளை www.newspaanai.com ல் எளிதாக சேர்க்கலாம். மேலும் விபரங்களுக்கு கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும். http://www.newspaanai.com/easylink.php#blogger நன்றி.
12 March, 2009 1:21 AM***
சரிங்க, முயற்சிக்கிறேன். நன்றி :-)
**sriram said...
ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்ததாலேயே அவரோட கருத்துக்களை மறுக்கறாங்கன்னா,அவங்க பழகறதுக்கு தகுதி இல்லாதவங்கன்னு அர்த்தம்.
Ask your friend to Chillax! :)
12 March, 2009 1:22 AM ***
I see the bias and prejudice with almost everyone one time or other!
*** மாயவரத்தான்.... said...
உங்க நண்பர் பெயர் லுக்கி லக்கா?
12 March, 2009 2:41 AM***
ROTFL!
இல்லைங்க, அவர் பேர் வேற! :-)
***Bleachingpowder said...
நிறைய விசியங்களை விட்டுடீங்களே..
சோ, சுப்பிரமணிய சாமியை பத்தி தவறி போய் கூட நல்லதா பேச கூடாது.
இட ஒதுக்கிட்டை பத்தி ஆதரிச்சு பதிவெழுதனும்.
அமெரிக்கா மேல எல்லா பழியையும் போடனும்
இஸ்ரேலை எதிர்க்கனும், பாலஸ்தீனத்தை ஆதரிக்கனும்
ரம்ஜான், ஈஸ்டர் கொண்டாடனும், தீபாவளி கொண்டாட கூடாதுன்னு அஞ்சு பக்கத்திற்கு பதிவு எழுதனும்.
ராமாயனத்துல ராமன் கெட்டவன், ராவணன் தான் நல்லவன் ஏன்னா அவன் தமிழன்னு சொல்லனும்.
12 March, 2009 3:14 AM***
உண்மைதான், நீங்க சொல்வதையும் சேர்த்துக்கலாம்தான் :-)
***அறிவிலி said...
யார் புலி? யார் பூனை?
12 March, 2009 3:38 AM***
ஆமாங்க, புலி என்று சொல்லிக்கொள்பவர்கள் எல்லாம் புலியல்ல. பூனை என்று சொல்லப்படுபவர்கள் எல்லாம் பூனையும் அல்ல! ;-)
:-))))
***நாஞ்சில் பிரதாப் said...
வருண்...பாத்தீங்களா என்னை வம்புல மாட்டிவிட்டுடீங்க...
பவாம சில பேருக்கு பூனைக்கும் புலிக்கும் வித்தியாசம் தெரியலையாம்...அதையும் சொல்லிக்கொடுத்துடுங்க...
12 March, 2009 5:08 AM***
இந்த பதிவை நான் மொக்கையிலும் சேர்த்து இருக்கேன். இந்த பிரச்சினையை ஜாலியா அனுகத்தான் முயற்சித்தேன்.
நான் அவருக்கு பதில் சொல்லிட்டேன். நீங்க தப்பிச்சீங்க! :-)
***நன்மனம் said...
வேடதாரிகளின் வேடங்கள் வெகுநாள்களுக்கு நிலைக்காது என்று சொல்லிக்கொள்கிற அதே நேரத்திலே...........
தமிழனாக மாற தகுதிகளை வரையறுத்துத்தருகிற தம்பி வருணிடத்திலே நான் கேட்டுக்கொள்வது என்னவென்றால்........................
பார்ப்பனர்கள் பலர் பார்வை பட தமிழனாக மாறமுடியும் என்று சொல்கிற நீ, தமிழர்கள் பார்ப்பானாக மாற ஏதும் வழியிருக்கிறதா என்பதையும் எடுத்துச்சொல்ல வேண்டும்
இப்படிக்கு
-மு.க
:_)))))))))))))))))))))))))))***
சாய்பாபா அவர் வீட்டு வந்திருந்தபோது கேட்டிருக்கனும்! என்னிடம் கேட்டால்? :-) :-) ;-)
***ஆண்ட்ரு சுபாசு said...
பார்பனர் என்றால் யார்?
பார்ப்பனியம் என்றால் என்ன?
பிராமணன் என்றால் யார்?
பிராமணியம் என்றால் என்ன?
பிராமணிதிற்க்கும்,பார்பன்னியதிர்க்கும் என்ன சம்பந்தம்?
கொஞ்சம் விளக்கம் வேண்டும் அண்ணா...
12 March, 2009 5:30 AM***
உலகத்திலே எதையுமே ஒழுங்கா வ்ரையுறுக்க முடியாது. இவைகளை சில! :-)
***Vajra said...
//
ுலியைப்பார்த்து பூனை சுட்டுப்போட்டுகிட்டா, பூனை ஒண்ணு புலியாகிவிடாது தலைவரே...
இந்த மாதிரி ரணகளமான ஐடியா கொடுத்து ஏன் அவரை வம்புல மாட்டிவிடறீங்க...
//
சூடு போட்டுக்கொண்ட பூனையைப் பார்த்து சிரிக்கும் புலி சொல்லும் கதை இது. ஓகேயா ?
12 March, 2009 5:34 AM***
உங்களுக்கு ஓ கே னா விடுங்க! நம்ம நம்புவதுதான் சரி. உலகம் கிடக்கட்டும்! :-)
***வால்பையன் said...
ரொம்ப நன்றி
வருண் அய்யங்கார்
(சும்மா தமாசுக்குப்பா)
12 March, 2009 8:12 AM***
அதெப்படி கரெக்ட்டா சொல்லீட்டீங்க?! :-))))
***Vajra said...
வீட்டிற்குள் தெலுங்கு, கன்னடம், உருது, துளு, மார்வாடி, மலயாளம் போன்ற தூய தமிழைப் பேசுபவர்கள் எல்லாம் தூய தமிழர்கள். ஆனால் வீட்டிலும் வெளியிலும் தமிழ் மட்டுமே பேசும் பார்ப்பானர்கள் தமிழர்கள் அல்லர்.
என்ன கொடுமை *சரவணன்* இது ?
12 March, 2009 8:37 AM***
யாரு, அப்பன் *முருகனிடம்* கேக்குறீங்களா? :-)
***கிரி said...
:-))))
12 March, 2009 9:35 AM***
வாங்க கிரி, தெய்வீக சிரிப்பு உங்கள் சிரிப்பு! :-))))
***ஆண்ட்ரு சுபாசு said...
பார்பனர் என்றால் யார்?
பார்ப்பனியம் என்றால் என்ன?
பிராமணன் என்றால் யார்?
பிராமணியம் என்றால் என்ன?
பிராமணிதிற்க்கும்,பார்பன்னியதிர்க்கும் என்ன சம்பந்தம்?
கொஞ்சம் விளக்கம் வேண்டும் அண்ணா...
12 March, 2009 5:30 AM***
உலகத்திலே எதையுமே ஒழுங்கா வ்ரையுறுக்க முடியாது. இவைகளை சில! :-)//
அது எப்படி ..வரையறைக்குள் இல்லாத ஒன்றை கொண்டு நீங்கள் உங்களை வரையறுத்துக்கொள்ள இயலும்? "நானும் ஒரு பார்ப்பனன் தான்" ....சரி அப்படி வரையறுக்க முடியாத ஒன்றை இங்கு அதிக விழுக்காடு மக்கள் வரையறுத்து பேசுவது ஏன்?அப்படியானால் யார் சரி? யார் தவறு? உங்களால் விளக்கமாய் சொல்ல இயலும் என நினைகிறேன் ...நன்றி அண்ணா.
***அது எப்படி ..வரையறைக்குள் இல்லாத ஒன்றை கொண்டு நீங்கள் உங்களை வரையறுத்துக்கொள்ள இயலும்? ***
We are using lots of terms (you as well) which can not be defined and which are debatable>
* What is God?
* What is Sugar?
Try defining that you will know what I mean.
We are using lots of terms (you as well) which can not be defined and which are debatable>
* What is God?
* What is Sugar?
Try defining that you will know what I mean.//
கடவுள் என்றால் என்ன?
நம்பிக்கையின் பால் வரையறுக்க படுகிற ஒரு வரையறை தான் கடவுள்.கடவுளை பற்றிய வரையறை தனி மனிதனுக்கு மனிதன் மாறுபடுகிறது.அதற்காக நம்பிக்கை இல்லாத ஒருவனிடம் போய் கடவுளை வரையறுத்து கேட்க வேண்டாம்.கோயில் வைக்கப்படும் கடவுள் சிலைகள் எல்லாம் கடவுளின் வரையறை அன்றி வேறென்ன?
What is sugar?
எனக்கு வேதியியல் அதிகம் தெரியாது ....Sugar என்பது மூலக்கூறுகளை கொண்டு வரையறுக்க படக்கூடியதே.
***கடவுள் என்றால் என்ன?
நம்பிக்கையின் பால் வரையறுக்க படுகிற ஒரு வரையறை தான் கடவுள்.கடவுளை பற்றிய வரையறை தனி மனிதனுக்கு மனிதன் மாறுபடுகிறது.***
The same thing is true for a Brahmin as well.
e.g. I cant say a brahmin is one who practices vegetarian. Because lots of Bengali brahmins do eat fish and goat and chicken. They proudly say that they are Brahmins as well.
Reagarding Sugar,
* I can say a substance which is white (also raw sugar has different color) tastes sweet! Again, sugar is not only one it tastes sweet! So I have not defined correctly.
* I can also say, it alpha-D- glucopyranosyl-beta-D-fructofuronoside! It wont make any sense to you for sure but my definition is not wrong!
* I can also say, it is C12H22O11. It has a glucose and fructose molecule combined together! You would not know what it mean either unless you are chemist.
* I can say it is a Carbohydrate.
How does this definition help understanding anything?
So, you can complicate the hell out of here!
Still you can go on say you are wrong!
Anyway, We all know what I mean by pArppAn. You are asking to define that and I dont know what is your intention here.
I dont think I can satisfy you with my definition. I admit my inablity of not able to define what a pAppAn is! But I do know what is a pAppAn jut like you know what is sugar! :-)
Anyway take it easy! :)
16 March, 2009 7:23 AM
it's ok ..but i could define in either way...but i don't wanna do so..take care :-)
***it's ok ..but i could define in either way...but i don't wanna do so.
take care!***
Neither do I :-) I understand, Andrew! Take it easy :-)
Thanks for stopping by here! :)
தமிழர்கள் பார்ப்பானாக மாற ஏதும் வழியிருக்கிறதா என்பதையும் எடுத்துச்சொல்ல வேண்டும்
???
??
???
???
???
???
??
??
//***அது எப்படி ..வரையறைக்குள் இல்லாத ஒன்றை கொண்டு நீங்கள் உங்களை வரையறுத்துக்கொள்ள இயலும்? ***
We are using lots of terms (you as well) which can not be defined and which are debatable>
* What is God?
* What is Sugar?
Try defining that you will know what I mean.//
அதெப்படிங்க யாராவது எதாவது கோக்குமாக்கா எடக்குமடக்கா கேள்வி கேட்டா ஒடனே இங்கிலிபீஸுக்கு தாவிடுறிங்க. இவ்ளோ பதிலும் தமிழ்ல தான் சொன்னிங்க, பொறவு எதுக்கு இங்கிலிபீஸு? எதிராளிய பேசாம போக வைக்கிற தந்திரமா? தந்திரம் நல்லாவே வேலை செய்யுது போல...
உங்க பதிவுக்கு எனது இரண்டு காசு
:)
***பிரியமுடன் பிரபு said...
தமிழர்கள் பார்ப்பானாக மாற ஏதும் வழியிருக்கிறதா என்பதையும் எடுத்துச்சொல்ல வேண்டும்
20 March, 2009 4:37 PM ***
திரு. பிரபு!
பிராமண-தமிழர்கள் கலப்புத் திருமணம் இதற்கு உதவலாம் என்று நம்புகிறேன்
***ராஜா said...
//***அது எப்படி ..வரையறைக்குள் இல்லாத ஒன்றை கொண்டு நீங்கள் உங்களை வரையறுத்துக்கொள்ள இயலும்? ***
We are using lots of terms (you as well) which can not be defined and which are debatable>
* What is God?
* What is Sugar?
Try defining that you will know what I mean.//
அதெப்படிங்க யாராவது எதாவது கோக்குமாக்கா எடக்குமடக்கா கேள்வி கேட்டா ஒடனே இங்கிலிபீஸுக்கு தாவிடுறிங்க. இவ்ளோ பதிலும் தமிழ்ல தான் சொன்னிங்க, பொறவு எதுக்கு இங்கிலிபீஸு? எதிராளிய பேசாம போக வைக்கிற தந்திரமா? தந்திரம் நல்லாவே வேலை செய்யுது போல...
22 March, 2009 6:13 AM***
திரு. ராஜா!
இதில் தந்திரமும் இல்லை மந்திரமும் இல்லை. ஒவ்வொரு சமயம் ஒரு சில விசங்களை ஆங்கிலத்தில் சொல்ல எளிதாக இருக்கு அவ்ளோதான்.
சர்க்கரைனா என்னானு தமிழ்ல சொல்ல சொன்னீங்கனா எனக்கு அந்த "வேதிப்பொருள்கள்" போன்றவை எல்லாம் சொல்ல முடியாது.
தவறா எடுத்துக்காதீங்க! :-)
***கோவி.கண்ணன் said...
உங்க பதிவுக்கு எனது இரண்டு காசு
:)
23 March, 2009 1:54 AM***
வாங்க கோவி! :-)
என் சிந்தனை நெறைய நேரங்களில் உங்க சிந்தனையுடன் ஒத்துப்போகிறது :-)))
Post a Comment