அதான் "ப்ளாப்" ஆயிருச்சுனு ஏற்கனவே ஒரு பதிவு போட்ட இல்லை? இப்போ எதுக்கு இன்னொரு பதிவுனு கேக்கிறீர்களா? அதையெல்லாம் மறப்பேனா? இல்லை மறுக்கத்தான் முடியுமா? விசயம் என்னவென்றால், ஒரு சில படங்கள் 4 வாரங்களுக்கு அப்புறம் கண்ணா பின்னானு பிக்-அப் ஆகலாம். அதுமாதிரி எல்லாம் தமிழ் சினிமா உலகில் ஆகியிருக்கு. ஆனால் அதுபோல எதுவும் இந்தப்படத்திற்கு பெருசா லேட் பிக்-அப் ஆகவில்லை. அதுதான் உண்மையில் நடந்தது!
தலைப்புக்கு வரேன்...
மூன்று வருடம் சிரமப்பட்டு மூன்று ஹீரோக்களை மாற்றி கடின உழைப்பில் உருவான ஒரு படம்தான் “நான் கடவுள்” என்கிற படம். தமிழ் வலைபூக்களில் எந்தப்படத்திற்கும் இல்லாத பெரிய பாராட்டுக்கள் இந்தப்படத்திற்கு கிடைத்தது. மற்றபடி இது விமர்சனர்களை ஓரளவுக்கு கவர்ந்தது. ஆனந்தவிகடன் 44 மதிப்பெண்கள் கொடுத்தது. மற்ற விமர்சகர்கள் ஓரளவுக்கு நல்ல விமர்சனமே கொடுத்தார்கள். இந்தப்படத்தில் நடித்ததற்காக நடிகை பூஜாவுக்கு ஒரு தேசிய விருது கிடைக்க வாய்ப்பிருக்கிறது. இயக்குனர் பாலாவுக்கும் ஒரு தேசிய விருது கிடைக்கலாம்.
கமர்ஷியலாக எப்படிப்போகிறது என்று இன்றைய தேதிக்குப் பார்த்தால்,
· இன்று 7 வது வாரம்! சென்னையில் பல மல்டிப்ளெக்ஸில் இதை தூக்கிவிட்டார்கள். சத்யம் காம்ப்ளெக்ஸில் ஒரு ஷோ கூட இன்று ஓடவில்லை! அபிராமி காம்லெக்ஸ்ல ஒரு சின்ன தியேட்டரில் மட்டும் ஓடுது. அவ்வளவுதான்.
· சென்னையில் செக்கண்ட் ஸ்ட்ரிங் தியேட்டர்களான முரளி கிருஷ்ணா, கிருஷ்ண வேணி, மஹாலக்ஷ்மி போன்ற திரையரங்குகளில் ஓடுது.
· மற்றபடி, மதுரை, கோவை , சேலம், பங்களூர் போன்ற பெரிய ஊர்களில் இப்படத்தை தூக்கி விட்டார்கள் என்று தெரிகிறது.
· பி அண்ட் சி செண்டர்களில்படம் சுமாராகத்தான் போனது. போட்ட காசை கஷ்டப்பட்டு எடுத்து இருக்கலாம்.
· ஓவெர் சீஸ் லயும் படம் பெரிய கலெக்ஷன் கொடுக்கவில்லை! மலேசியாவில் மட்டும் இன்னும் ஒரு 9 திரையரங்குகளில் ஓடுகிறது. இருந்தாலும் இது ஒரு பெரிய சாதனை அல்ல!
இதிலிருந்து என்ன தெரியுதுனா ஓவெர் ஹைப் நல்லதில்லை! நான் கடவுள், ரஜினி கடிதம் எழுதியதால் பிச்சுக்கிட்டு ஓடுச்சு, அது இதுனு சொன்னதெல்லாம் அர்த்தமற்றது.
படம் 7 வாரம்கூட மல்டிப்ளக்ஸ்ல ஓடலை என்பதுதான் இன்றைக்கு உண்மை நிலவரம். 7 வாரங்களில் சென்னையில் மட்டும் சென்னை வசூல் என்ன என்று பார்த்தால் அதுவும் தோல்விப்படங்கள்(வில்லு) போல்தான் இருக்கு!ஒண்ணும் பெரிய அளவில் இல்லை(சோர்ஸ்: பிஹைண்ட்வூட்ஸ்).
ஏற்கனவே "ப்ளாப்" னு நான் க்ளைம் பண்ணிய பதிவு இங்கே!
http://timeforsomelove.blogspot.com/2009/02/blog-post_17.html
12 comments:
இந்த மாதிரிப் படங்கள் எவ்வளவு கலெக்ஷன் செய்ய்மோ அந்த அளவு செய்திருக்கும். இந்த மாதிரி கல்ட் வகை படங்கள் பெரும் கலெக்ஷன் அள்ளினால் அது மக்களின் மனநிலையை சந்தேகப்பட வைக்கும். முழுக்க முழுக்க மனநிலை பிறழ்ந்த மனிதர்கள்தான் இந்த மாதிரி படங்களை ரசித்துப் பார்க்க முடியும்.
ஆனால் இதைச் சொன்னால் சொல்பவர் பாலாவைச் சிறுமைப் படுத்துகிறார் என்று சொல்லி விடுவார்கள். மேலும் ஆர்யா அவருடைய அம்மாவிடம் பேசும் போது சொல்லும் "அஹம் பிரம்மாஸ்மி" என்ற சொற்றொடரின் தொனி ஏதோ "எனக்கு ஆய் வந்திருச்சு" என்று சொல்வதைப் போலவே இருந்தது. இதே போன்ற எண்ணம் எனக்கு பாரதி படத்தில் வரும் "அக்கினிக் கொஞ்சொன்று கண்டேன்" என்ற பாட்டினைக் கேட்கும் போதும் வந்தது. எவ்வளவு வீரியம் மிக்க வரிகள் அவை? ஆனால் பாட்டில் "டன் டனக்கு டன் டனக்கு" என்று மெட்டுப் போட்டிருப்பார்கள்.
எல்லா நாட்டிலும் இந்த மாதிரி கல்ட் வகை படங்களின் ரசிகர்கள் இருக்கிறார்கள். சாருவின் வலை தளத்தில் அவர் புகழ்ந்து எழுதியிருக்கும் படத்தின் காட்சிகளைப் பாருங்கள். தற்கொலை செய்வதற்கு வேறு வழியே கிடைக்கவில்லையா?
என்னுடைய பார்வையில் "நான் கடவுள்' ஒரு கல்ட் சிக் மூவி.
***முழுக்க முழுக்க மனநிலை பிறழ்ந்த மனிதர்கள்தான் இந்த மாதிரி படங்களை ரசித்துப் பார்க்க முடியும்
ஆனால் இதைச் சொன்னால் சொல்பவர் பாலாவைச் சிறுமைப் படுத்துகிறார் என்று சொல்லி விடுவார்கள்.
என்னுடைய பார்வையில் "நான் கடவுள்' ஒரு கல்ட் சிக் மூவி.***
அமரபாரதி:
நம்ம கருத்தை நம்ம தைரியமாக சொல்லலாம்.
யாருக்கு பயப்படனும்?
ரசிப்பதும், விமர்சிப்பதும் அவரவர் உரிமை! அதை யாருக்காகவும் விட்டுக்கொடுக்க வேண்டியதில்லை!
இப்படியே ஒரு படத்தை விமர்சிக்க அவர் கோபிப்பார், இவர் வருத்தப்படுவார்னு அடுத்தவர் களுக்காகவே வாழ்வதில்லை பேச்சு/எழுத்து சுதந்திரம்.
உங்கள் கருத்துக்கும், வருகைக்கும் நன்றி! :-)
// தமிழ் வலைபூக்களில் எந்தப்படத்திற்கும் இல்லாத பெரிய பாராட்டுக்கள் இந்தப்படத்திற்கு கிடைத்தது. //
அது ஏன் என்று எனக்கு புரியவில்லை.
அமரபாரதி சார்
பலர் நினைத்து கூறினால் அடிவிழும் என்று கூறாமல் விட்ட விஷயங்களை ஒரேயடியாக போட்டு தாக்கி விட்டீர்கள் :) :) :)
***புருனோ Bruno said...
// தமிழ் வலைபூக்களில் எந்தப்படத்திற்கும் இல்லாத பெரிய பாராட்டுக்கள் இந்தப்படத்திற்கு கிடைத்தது. //
அது ஏன் என்று எனக்கு புரியவில்லை.***
பாலாவுடைய சின்சியர் முயற்சி, கடின உழைப்பை பாராட்டியே ஆகனும்னு நிக்கிறாங்க.
நாத்தீகர்களும் கஞ்சா சாமியார் பக்தரானதுதான் இதில் வேடிக்கை!
தசாவதார "பெருமாளை" கிழிகிழினு கிழிச்சவர்களெல்லாம் காசியையும், அகோரியையும் ரசிக்கிரார்கள்.
இதே படத்தை மணிரத்ணம் எடுத்திருந்தால் இதே விமர்சகர்கள் வேறு மாதிரி விமர்சித்து இருப்பார்கள்!
***புருனோ Bruno said...
அமரபாரதி சார்
பலர் நினைத்து கூறினால் அடிவிழும் என்று கூறாமல் விட்ட விஷயங்களை ஒரேயடியாக போட்டு தாக்கி விட்டீர்கள் :) :) :)***
உண்மைதான், அமர பாரதி அவர்களின் பின்னூட்டம், என் பதிவைவிட பலமடங்கு நல்லா இருக்கு! :-)
நன்றி புரூனோ சார், நன்றி வருன். எனக்கு எங்காவது இதை எழுத வேண்டும் என்ற எண்ணம் இருந்து கொண்டே இருந்தது. உங்களுடைய பதிவு சரியான இடமாக அமைந்து விட்டது.
புரூனோ சார்,
//அது ஏன் என்று எனக்கு புரியவில்லை.// கட்டமைப்பப்பட்ட பொதுப் புத்தியின் வெளிப்பாடு என்றே நினைக்கிறேன்.
படம் எவ்வளவு எதார்த்தமாக ஹீரோ ஹீரோஇன் காதல் இல்லாமல், தேவைப்படாத எந்த காட்சியும் இல்லை . படம் ஓடவில்லை என்று ஒரு பதிவிடுவது என்ன சந்தோசமோ . எல்லோரும் நன்றாக உள்ளது என்று கூறுவது அதற்கு மாற்றாக கண்டுபிடித்து கருத்து எழுதுவது உங்களுக்கு நன்கு பிடிக்கும் என நினைகிறேன். எழில் -பெங்களூர்
****ezilmaran said...
படம் எவ்வளவு எதார்த்தமாக ஹீரோ ஹீரோஇன் காதல் இல்லாமல், தேவைப்படாத எந்த காட்சியும் இல்லை .****
ஆர்யா கெட்டவர்களை கொல்லும் விதமெல்ல்லாம் எதார்த்தமா?!
***படம் ஓடவில்லை என்று ஒரு பதிவிடுவது என்ன சந்தோசமோ .***
ஆமா, இதோட இந்த அஹோரிச்சாமியாகளை எல்லாம் ஹிரோவாக மாற்றுவது ஒழியனும்!
***எல்லோரும் நன்றாக உள்ளது என்று கூறுவது அதற்கு மாற்றாக கண்டுபிடித்து கருத்து எழுதுவது உங்களுக்கு நன்கு பிடிக்கும் என நினைகிறேன். எழில் -பெங்களூர்***
எல்லோரும் சொல்வதையே நான் சொல்லனும்னு என்னங்க இருக்கு?
நான் தவறாக எதுவும் சொல்லி இருந்தால் சொல்லுங்க!
"இந்தப்படம்" பங்களூர்ல பிச்சுக்கிட்டு ஓடுது, நீர் சொல்வது தவறுனு நீங்க சொல்லுங்க, நான் கேட்டுக்கிறேன்! :-)
உங்கள் வருகைக்கு நன்றிங்க! :-)
//ஆமா, இதோட இந்த அஹோரிச்சாமியாகளை எல்லாம் ஹிரோவாக மாற்றுவது ஒழியனும்!// அப்படி போடுங்க. ஆர்யா நீதி மன்றத்தில் உட்காந்து கொண்டு பதில் சொல்லுவது ரொம்ப யதார்த்தம். வீட்டில் உட்கார்ந்து கொண்டு கஞ்சா அடிப்பது ரொம்ப ரொம்ப யதார்த்தம். சும்மா எதை வித்தியாசமா காட்டினாலும் அதை ஆஹா ஒஹோன்னு புகழ்வது எல்லோராலும் முடியாது.
//ஹீரோ ஹீரோஇன் காதல் இல்லாமல்// அப்போ ஹீரோ ஹீரோயின் காதல் இருந்தா அது யதார்த்தமில்லாத படமா? நல்ல கொள்கையா இருக்கே.
//ஆர்யா நீதி மன்றத்தில் உட்காந்து கொண்டு பதில் சொல்லுவது ரொம்ப யதார்த்தம். வீட்டில் உட்கார்ந்து கொண்டு கஞ்சா அடிப்பது ரொம்ப ரொம்ப யதார்த்தம். //
ஹி ஹி
//அப்போ ஹீரோ ஹீரோயின் காதல் இருந்தா அது யதார்த்தமில்லாத படமா?//
ஹி ஹி
//ஆர்யா கெட்டவர்களை கொல்லும் விதமெல்ல்லாம் எதார்த்தமா?!//
ஹி ஹி
--
இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் வராது சார் :) :)
Post a Comment