புதுசா ஒரு சில மேதாவிகள் கிளம்பி இருக்கிறார்கள். எதையாவது (edited) சும்மா உளற வேண்டியது. தமிழ் சினிமாவில் பாடல்கள் இடம் பெறக்கூடாதாம். அப்போதுதான் அது உயர் தரமாகுமாம்! ஏன் என்றால் அது எதார்த்தத்தை காட்டவில்லையாம்.
ஆங்கிலப்படங்களுக்கு இணையாக அப்போதுதான் நம் படங்கள் வருமாம்! கமலஹாசன் இந்த தியரியை எக்ஸகூட் பண்ணமுடியாமல் தூக்கம் வராமல் இருக்காராம். இந்த மேதாவி அவரை தூங்க வைப்பதற்காக இப்படி ஒரு தாலாட்டுப் பதிவு எழுதுகிறாராம். என்ன ஒரு கரிசனம்?
சினிமா என்பது ஒரு தனி உலகம். அது எல்லோருக்கும் தெரியும். அது இயல்பாகத்தான் இருக்கனும்னா இந்த மேதாவி சொல்லுகிற கமலஹாஷனின் சமீபத்திய மிகப்பெரிய குப்பை தசாவதாரத்துக்கும் ரியாலிட்டிக்கும்/எதார்த்ததுக்கும் எவ்வளவு தூரம்?
ஹாலிவுட் படங்கள்
* க்ரீஸ்
* ஹை ஸ்கூல் ம்யூசிகல்ஸ்
* சிகாகோ
எல்லாம் மக்கள் ரசிக்க முடியவில்லையா என்ன?
இன்னும் எத்தனையோ ஹாலிவுட் படங்களில் செயற்கையான பாடல்கள் இடம் பெறுகின்றன. அவைகளை ரசிக்க முடிகிறது.
ஏன் OSCAR winner SLUMDOG MILLIONAIRE படத்தில் பாடல்களில்லையா? ஜெய் ஹோ பாடலை வெள்ளைக்காரர்கள் மிகவும் ரசித்தார்கள் என்றுகூட சொல்லலாம்.
12 OSCAR winner TITANIC had songs in it!
ஸ்டார்வார்ஸ், பேக் டு த ஃப்யூட்சர், லார்ட் ஆஃப் த ரிங்க்ஸ், ஸ்பைடெர்மேன், ஹாரி பாட்டர், இதிலெல்லாம் உள்ள கதையோட்டம் ரொம்ப எதார்த்தமாகத்தான் இருக்கிறதா என்ன?
* தெய்வம் தந்த வீடு, காற்றுக்கென்ன வேலி பாடல்கள் இருப்பதால் அவள் ஒரு தொடர் கதை, அவர்கள் போன்ற படங்களின் தரம் குறைந்துவிட்டதாக இந்த மேதாவி கண்டுபிடித்துவிட்டாராம். என்ன ஒரு கண்டு பிடிப்பு!!!
என்னைப்பொறுத்தமட்டில் பாடல்கள் இல்லா தமிழ்ப்படம் வருவதில் தவறில்லை. ஆனால் சினிமா என்பது பொழுதுபோக்குக்காவும் மக்கள் பார்க்கிறார்கள். அதில் வரும் பாடல்கள்தான் அவர்களை பொதுவாக மகிழ்விப்பது.
பாடல்கள் வேணாம், சரி! அப்போ தமிழ்ப்படத்தில் பேக் கிரவ்ண்ட் ம்யூசிக் எதுக்காம்? அதையும் எடுத்து விடலாமே? அழுவதற்கென்று கொடுக்கப்படும் பேக்ரவ்ண்ட் ம்யூசிக்தான் ஒரு ரசிகனை அழவைப்பது. இல்லைனா அழுகை சீனில் எல்லாம் மக்கள் சிரிப்பார்கள்! பேக் க்ரெவ்ண்ட் ம்யூசிக்கும் எதார்த்தத்துக்கு முரணானதுதானே? அது மட்டும் எதுக்கு?
இவர் கனவு நிறைவேறனும்னா இவரே ஒரு படம் கமலஹாஷனை வைத்து பாடல்கள், பேக் க்ரவ்ண்ட் ம்யூசிக் எதுவுமே இல்லாமல் படம் எடுக்க வேண்டியதுதான்!
நம்ம ஆளு புதுமையா யோசிப்பது என்றால் இதைப்போல் ஏதாவது குப்பை தியரியைவிட்டு தன்னைத்தானே பெரிய அறிவு ஜீவினு நெனச்சுக்க வேண்டியதுதான்!
14 comments:
ஏண்ணே இம்புட்டு டென்சன் ஆகறீங்க.. அங்க அவரு அவர் கருத்தை நாகரீகமா சொன்னாரு. அந்தளவுக்கு முடியாட்டியும் உங்க அளவுக்கு ஏன் பாட்டு தேவைன்னு சொல்லுங்க. ஏத்துக்கறோம். அதை விட்டுட்டு அவரு மேதாவி, நீங்க அதி மேதாவி ரேஞ்சுக்கு எழுதியிருக்கீங்க!
நீங்க சொல்ற விசயம் படி பார்த்தா சார்லி சாப்ளின் படத்துல வசனமே கிடையாது. பின்னணி இசையும் ஒரே இசைதான். இசையமைச்சதும் சார்லி சாப்ளின் தான். இப்ப பேசியே சாவடிக்கறானுங்களே.. அதுக்கு எவனும்/ளும் பழைய்ய படி பேசாமலே நடிச்சு இருந்தா எம்புட்டு நல்லா இருக்கும்.
யோசிக்க முடியலைல்ல. அப்படித்தான் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போற முயற்சியில பாடல்கள் அவசியமில்லாத்தனம் அப்படிங்கறதை ஆரம்பிச்சுருக்காங்க. இதுல முடிஞ்சா விவாதம் செய்ங்க.. முடியலைங்கறதுக்காக இப்படி விதண்டாவாதம் செய்யாதீங்க..
நீங்க குறிப்பிட்ட ஹாலிவுட்ல இருக்குற சில வெற்றிபெற்ற படங்கள்ல பாடல்கள் இருக்குங்கறதுக்காக எல்லா படத்திலும் பாட்டை இணைச்சா படத்தை ஓட்டுறாங்க. தனியா ஆல்பம் போட்டு வசூல் அள்ளுறது உங்களுக்கு தெரியாதா!?
ஸ்ஸ்சப்ப்பா. ரொம்ப பெருசா போச்சு. ஜோடா ஆர்டர் செய்யுங்க.
Sensi:
I am a big lover of Tamilmovie songs. I hate the idea of such a thought. I like to quote tamil movies song lyrics everywhere.
Even KB' movies had great songs and situation.
I am sorry if I had been impolite as I hate that idea and claiming that that would improve the tamil cinema quality!
I dont think getting rid of songs improve the quality of any movie!
This is mostly a situational comment by Kamal - the hindi original of his forth coming movie is not song oriented, so OPO could also be following the suit....
This is called preparing public mind or also called marketing.
அண்ணே.. சினிமாப்பாட்டுக்கு நானும் எதிரி கிடையாது. இப்ப வந்த வேட்டையாடு விளையாடு படத்துல பாட்டு இல்லாம என்னால பார்த்திருக்க முடியுமான்னு கேட்டா சத்தியமா ரெண்டாம் தடவை பார்த்திருக்கமாட்டேன்னு சொல்லுவேன்.
ஆனா (ஏதேதோ) இடிச்சதும் லவ் வர்றது, கர்ச்சீப்போட சேர்த்து மனசயும் கொடுக்கறது, நைகி ஷூபோட்டு மாடு மேய்க்கறது, இந்த சிச்சுவேசனுக்கெல்லாம் பாட்டு வைக்க ஆஸ்திரேலியா, பாரீஸ், அமேரிக்கான்னு அலையறது இதெல்லாம் தேவையான்னு தான் கேக்க வைக்குது அந்த பதிவு.
மத்தபடி 80ல வந்த பாட்டுக்களையும் சூழலையும் இப்ப இருக்குற படங்களோட சம்பந்தப்படுத்தி சொல்லி காமெடி செய்யாதீங்க.. சொல்லிப்புட்டேன்!
//பிச்சைகாரன் வாந்தி எடுத்தது போல்//
சாதாரண மனிதன் வாந்தி எடுப்பதற்கும், பிச்சைகாரன் வாந்தி எடுப்பதற்கும் என்ன வித்தியாசம் என விளக்கமுடியுமா?
நீங்கள் எடுக்கும் வாந்திகள் எந்த கேட்டகிரியில் வரும்!
பணக்காரன் எடுத்த வாந்தியா?
இல்லை
அமெரிக்காகாரன் எடுத்த வாந்தியா?
***வால்பையன் said...
//பிச்சைகாரன் வாந்தி எடுத்தது போல்//
சாதாரண மனிதன் வாந்தி எடுப்பதற்கும், பிச்சைகாரன் வாந்தி எடுப்பதற்கும் என்ன வித்தியாசம் என விளக்கமுடியுமா?***
***வால்பையன் said...
நீங்கள் எடுக்கும் வாந்திகள் எந்த கேட்டகிரியில் வரும்!
பணக்காரன் எடுத்த வாந்தியா?
இல்லை
அமெரிக்காகாரன் எடுத்த வாந்தியா?***
அதைவிடுங்க! "அது பிச்சை பாத்திரதில்" நான் சாப்பிட்டு வாந்தி எடுப்பதால் என் வாந்தியும் பிச்சைக்காரன் வாந்தி மாதிரிதான் இருக்கும்!
---------------
பாடல்கள் இல்லைனா தமிழ்ப்படம் தரம் உயர்ந்துவிடுமா?
தெய்வம் தந்தவீடு, காற்றுக்கென்ன வேலி போன்ற பாடல்கள்தான் அவள் ஒரு தொடர்கதையின் தரத்தை உயர்த்தியது! நிச்சயம் குறைக்கவில்லை!
***மத்தபடி 80ல வந்த பாட்டுக்களையும் சூழலையும் இப்ப இருக்குற படங்களோட சம்பந்தப்படுத்தி சொல்லி காமெடி செய்யாதீங்க.. சொல்லிப்புட்டேன்!***
இதே ரூல் எல்லாத் தமிழ்ப் படத்துக்கும்தான். அதெப்படி? 70, 80 ல வந்த படங்களுக்கு வேற சட்டம்??????
****Dhan said...
This is mostly a situational comment by Kamal - the hindi original of his forth coming movie is not song oriented, so OPO could also be following the suit....
This is called preparing public mind or also called marketing.****
We all know the taste of hindi audience is way off from the taste of us!
Dasa is BB in Tamil but it flunked in Hindi.
So Kh has to do some changes to satisfy Tamil audience and he justifies what he does for the sake of marketing!
கமல்ஹாசன்! எங்க சொல்லுப்பா கமல்ஹாசன்! கமல்ஹாஷன் இல்லப்பா. கமல்ஹாசன்! சரியா கண்ணு?
லதானந்த் சார்!
அவர் பழைய படங்களில் எல்லாம அவர் பெயர் கமலஹாஷன் என்றுதான் வந்தது. அதுதான் அவர் ஒரிஜினல் பெயர்.
பின்னால ஹிந்திக்கு போன பிறகுதான் கமல்ஹாஷனானார்.
டி ராஜேந்தர் -> விஜய டி ராஜேந்தர் ஆனதுபோல
எஸ் எ சந்திரசேகர் -> எஸ் எ சந்திரசேகரா ஆனது போல
எனக்கு அவர் பழைய ஒரிஜினல் பெயர்தான் பிடிக்கும்! :-)))
***லதானந்த் said...
கமல்ஹாசன்! எங்க சொல்லுப்பா கமல்ஹாசன்! கமல்ஹாஷன் இல்லப்பா. கமல்ஹாசன்! சரியா கண்ணு?***
மன்னிக்கனும் லதானந்த் சார். நீங்க "ல்" பத்தி சொல்றீங்களானு நெனச்சுட்டேன்.
கமலஹாசன் தான் போலும்! கமலஹாஷன் இல்லை! இனிமேல் "ச" போட்டு எழுதுகிறேன். :)
சரி
//
We all know the taste of hindi audience is way off from the taste of us!
Dasa is BB in Tamil but it flunked in Hindi.
//
Can't agree. OSO, Singh is King, kambakht Ishq are all super hits there. We can't comment by comparing the taste of audience.
Post a Comment