Friday, December 11, 2009

கமலால் "பேரிழந்த" இயக்குனர்கள்!



"அண்ணே, சாருவைப் பாராட்ட கமல் தேடினாராம்! ஆனா சாரு அதை டேர்ன் டவ்ன் பண்ணிட்டாராம்."

"எதுக்குப் பாராட்டத் தேடினாராம்?"

"மஹாநதி படத்துக்கு நல்ல விமர்சனம் எழுதயதற்காம். அந்தக்காலத்தில்!"

"மஹாநதி யார் படம்ப்பா? கமல்தான் இயக்குனரா?"

"இல்லண்ணே, அது கமல் படம் அதனால அதுல எல்லாக் க்ரிடிட்டும் கமலுக்குதானே பொதுவா கொடுக்கப்படும்?"

"அப்போ நாயகன் , இந்தியன், வேட்டையாடு விளையாடு போன்ற படங்களுக்கும் அப்படியா? கமல் படமா இதெல்லாம்?"

"அதெப்படிண்ணே? நாயகன், மணிரத்னம் படம். இந்தியன் சங்கர் படம்! வேட்டையாடு விளையாடு கெளதம் படம் இல்லையா?"

"என்ன இது அநியாயமா இருக்கு! அப்போ மஹாநதி , குணா எல்லாம் சந்தானபாரதி படம் இல்லையா?" சாரு, சந்தானபாரதியை இல்லை பாராட்டனும்! சுப்ரமணியபுரம், பருத்திவீரன் போன்ற பட்ங்களுக்கும் இயக்குனருக்குத்தானே க்ரிடிட்? மஹாநதிக்கு மட்டும் ஏன் கமலுக்கு க்ரிடிட்?"

"அதென்னனு தெரியலைண்ணே, ஒருவேளை நடிப்பைப் பாராட்டி எழுதி இருப்பாரோ என்னவோ.. சந்தான பாரதி மஹாநதி இயக்குனர்னு நீங்க சொல்லித்தான் எனக்குத் தெரியும்!"

"குணாவும் சந்தான பாரதி படம் தான். ஆனா விமர்சகர் உலகம் எல்லாம் கமல் இயக்குனர்போலதான் எழுதுறாங்க!"

"தசாவதாரம், யாருண்ணே இயக்கினா?"

"கே எஸ் ரவிக்குமார்! ஆனால் அதுவும் கமல் இயக்குனர் போலதான் பேசப்படுது."

"திரைக்கதை கமல் என்பதால் அவர் படம் மாதிரித்தான் எல்ல்லோரும் பேசுராங்கண்ணே!"

"சந்தான பாரதி, கே எஸ் ரவிக்குமார் போன்றவர்கள் இயக்கினால் அவர்கள் பெயர் மறைந்து க்ரிடிட் கமலஹாசனுக்கு போயிடுது. அதே சமயம் மணி, கெளதம், ஷங்கர் போன்றவர்கள் இயக்கினால், அவர்களுக்கு ஒழுங்கா க்ரிடிட் போகும்!'

"பாவம்ண்ணே சந்தான பாரதியும், கே எஸ் ரவிக்குமாரும். அவங்க படமெல்லாம் கமல் இயக்கியதுபோல கமலுக்குத்த்தான் க்ரிடிட் கொடுக்கிறது இந்த விமர்சக உலகம்!"

"அன்பே சிவம், யாரு படம் தெரியுமில்ல?"

"கமல்தான அண்ணே இயக்குனர்?"

"சுந்தர் சி. நம்ம குஷ்புவுடைய ஆத்துக்காரர்!"

"ஆனா விமர்சகர்கள் க்ரிடிட் கொடுத்தது கமலுக்குத்தாண்ணே!"

"கமலால் "பேரிழந்த" இயக்குனர்கள்ல சந்தான பாரதிக்கு முதல் இடம். அடுத்து சுந்தர் சி, அடுத்து நம்ம கே எஸ் ரவிக்குமார்! இதில் கமல் மேலே எந்த தப்பும் இல்லை! இந்தப்பாழாப்போன விமர்சகர் உலகம்தான் இந்த இயக்குனர்களுக்கு க்ரிடிட் கொடுக்காமல் விடுவது!"

19 comments:

  1. உண்மைய சொல்லுங்க இதுக்கு பேர் தானே உள்குத்து !!!

    நீங்க சொன்னது 100 சதவீதம் உண்மை

    -- கிருஷ்ணா

    ReplyDelete
  2. அய்யா நானும் ஒரு மீ தி பர்ஸ்ட்டு!!!

    ReplyDelete
  3. இயக்குனர்கள் பெயர்தான் இழந்தார்கள், தயாரிப்பாளர்கள் என்ன இழந்தாங்கன்னு சொல்லவே இல்லையே :)

    ReplyDelete
  4. ஆமா, கே எஸ் ரவிக்குமார்,சந்தானபாரதி இவங்க எல்லாம் பெரிய இயக்குந்ர்கள், கமலை வைத்து இவர்கள் எடுத்த படங்கள் தவிர மீதி எல்லாம் Jamesh cameron remake க்காக காத்திருக்கராராம், போங்க சார், சாரு க்காக கமலை மட்டம் தட்டவேண்டாம்,

    படையப்பா ஒன்னு போதுமே , சுட்டி ட்வியில் போட, , சுந்தர் சூப்பர் , அருணாசலம் , சே சான்ஸ்ஸே இல்லை

    ReplyDelete
  5. ***KayKay said...
    அய்யா நானும் ஒரு மீ தி பர்ஸ்ட்டு!!!

    11 December 2009 7:52 AM****
    ஆமாங்க கிருஷ்ணா, நீங்கதான் ஃபர்ஸ்ட்ங்க!:)

    ****KayKay said...
    உண்மைய சொல்லுங்க இதுக்கு பேர் தானே உள்குத்து !!!

    நீங்க சொன்னது 100 சதவீதம் உண்மை

    -- கிருஷ்ணா

    11 December 2009 7:50 AM***

    உள்க்குத்தோட உண்மைத்தாங்க சொன்னேன்! :) பகிர்தலுக்கு நன்றிங்க! :)

    ReplyDelete
  6. ***சங்கர் said...
    இயக்குனர்கள் பெயர்தான் இழந்தார்கள், தயாரிப்பாளர்கள் என்ன இழந்தாங்கன்னு சொல்லவே இல்லையே :)

    11 December 2009 8:22 AM***

    வாங்க சங்கர்! :-)

    என்னை வம்புல மாட்டிவிட்டுருவீங்க போல! :-)

    ReplyDelete
  7. ***Mr.vettiபைய்யன் said...
    ஆமா, கே எஸ் ரவிக்குமார்,சந்தானபாரதி இவங்க எல்லாம் பெரிய இயக்குந்ர்கள், கமலை வைத்து இவர்கள் எடுத்த படங்கள் தவிர மீதி எல்லாம் Jamesh cameron remake க்காக காத்திருக்கராராம், போங்க சார், சாரு க்காக கமலை மட்டம் தட்டவேண்டாம்,

    படையப்பா ஒன்னு போதுமே , சுட்டி ட்வியில் போட, , சுந்தர் சூப்பர் , அருணாசலம் , சே சான்ஸ்ஸே இல்லை

    11 December 2009 9:02 AM***

    கே எஸ் ரவிக்குமார், எல்லா நடிகர்களையும் வச்சு ஹிட் கொடுத்து இருக்கார்ங்க. சுந்தர் சி யும்தான்.

    ஏங்க, கமலை டிஃபெண்ட் பண்ணுவதற்காக எல்லோரையும் போட்டு கவுத்துறீங்களே! :)

    ReplyDelete
  8. ரொம்ப‌ ஆளுமையான‌ இய‌க்குன‌ர்னா ச‌ரி.. கே.விஸ்வ‌னாத், ம‌ணிர‌த்ன‌ம், ஷ‌ங்க‌ர். ச‌ந்தான‌பாரதி க‌ம‌ல் இய‌க்கினார்னா முத‌ல் உத‌வி இய‌க்குன‌ரா இருப்பார் (ஹே ராம் ).. அப்ப‌ ஆள‌வ‌ந்தானைக் கெடுத்த‌து சுரேஷ் கிருஷ்ணானு சொல்றீங்க‌.. ரைட்டு :)

    -Toto
    www.pixmonk.com

    ReplyDelete
  9. ***Toto said...
    ரொம்ப‌ ஆளுமையான‌ இய‌க்குன‌ர்னா ச‌ரி.. கே.விஸ்வ‌னாத், ம‌ணிர‌த்ன‌ம், ஷ‌ங்க‌ர்.***

    ஆமாங்க, இவங்ககிட்ட எல்லாம் ரொம்ப நம்ம ஐடியாவை இம்ளிமெண்ட் பண்ண முடியாது!

    *** ச‌ந்தான‌பாரதி க‌ம‌ல் இய‌க்கினார்னா முத‌ல் உத‌வி இய‌க்குன‌ரா இருப்பார் (ஹே ராம் ).. ***

    அவரே இயக்கிய படங்களிலும் அவர் உதவி இயக்குனர்தான் :-)))

    ***அப்ப‌ ஆள‌வ‌ந்தானைக் கெடுத்த‌து சுரேஷ் கிருஷ்ணானு சொல்றீங்க‌.. ரைட்டு :)

    -Toto
    www.pixmonk.com

    11 December 2009 8:51 PM***

    அவங்க ரெண்டு பேருக்கும் இடையில் என்ன மாதிரி புரிதல்னு தெரியலையே! :)

    ReplyDelete
  10. ஏன் விமர்சகர்கள் மேல் பழி போடுகிறீர்கள்.
    அந்த சம்பந்தப்பட்ட இயக்குனரே தன்னைத் டம்மியாக்கிக்கொள்கிறார்கள் என்றே சொல்லவேண்டும்.

    சிங்கீதம் சிரினிவாச ராவ் என்று ஒருவர் இருந்தார் தெரியுமா ? ஏன் ?
    இவர்களெல்லாம் கமலிடம் எனக்கு ஒரு படம் பண்ணிக்கொடுங்கசார் என்று காலில் விழுந்து விடுவது தானே காரணமாக இருக்கும் ?

    கமல் ஒரு எல்லாம் தெரிந்த ஏகம்பரம். அவரைப் பொருத்தவரை அவர் சொல்வது தான் சரி, மற்றவர்கள் சொல்வது தவறு...பெரும்பாலும் அது சரியாகக்கூட இருக்கும். இப்படி இருக்கும் ஒரு நடிகரை நாம் தலையில் தூக்கிவைத்துக்கொண்டிருக்கிறோம். ஆகவே அவர் படத்திலும் கமலாகவே வருகிறார். சம்பந்தப்பட்ட கதாப்பாத்திரமாக வருவதில்லை.

    ஆனால் மணியோ, சங்கரோ, கவுதமோ ஒரு படம் செய்துவிட்டு அவருடன் வேறு படம் செய்ய விரும்புவதில்லை என்பதையும் நீங்கள் கவனிக்கவேண்டும்.

    ReplyDelete
  11. வாங்க வஜ்ரா!

    எனக்கு யார் மேலே தப்புனு தெரியலைங்க. விமர்சகர்கள் ஒரு பாவமும் அறியாதவர்கள்னு சொல்லமுடியுமா என்னனு தெரியலை.

    The bottom line is, these directors do not get the credit but I am not sure whether they feel bad for not getting proper credit or not!

    Take it easy!

    ReplyDelete
  12. " மகாநதி " ரிலீஸ் ஆனா சமயத்துல , ஒரு விமர்சனத்துல இப்படி சொல்லி இருந்தார்கள்
    "மற்ற நடிகர்கள் தொட கூட பயப்படும் ஸ்கிரிப்ட்ல் கமல் வாழ்ந்து இருக்கிறார் " என்று.

    இந்த லிஸ்ட்ட பாருங்க , கமலா தவிர முன்னணி நடிகர்கள் யார் இதற்க்கு ஒப்பு கொள்வார்கள் ?
    மகாநதி, குணா , அன்பே சிவம் , தசாவதாரம் ...

    நல்ல / வித்தியாசமான படமும் வேணும் , ப்ளாப் ஆனா கமல திட்டவேண்டியது.

    இதுக்கு பதில்,
    உருப்படியா, "பழனியப்பன் சைக்கிள் வீலுக்கு பெண்டு எடுக்குறத" பத்தி பதிவு போட்டிருக்கலாம். கவுண்டமணிக்கு உபயோகமா இருந்து இருக்கும்.

    ReplyDelete
  13. ***அஹோரி said...

    " மகாநதி " ரிலீஸ் ஆனா சமயத்துல , ஒரு விமர்சனத்துல இப்படி சொல்லி இருந்தார்கள்
    "மற்ற நடிகர்கள் தொட கூட பயப்படும் ஸ்கிரிப்ட்ல் கமல் வாழ்ந்து இருக்கிறார் " என்று.***

    தப்புத்தாளங்கள் படம் பார்த்து இருக்கீங்களா?

    அதையும் அப்படிச் சொல்லலாம்!

    கே பி 70லயே நெறையா பண்ணிட்டார்.

    ReplyDelete
  14. ***இந்த லிஸ்ட்ட பாருங்க , கமலா தவிர முன்னணி நடிகர்கள் யார் இதற்க்கு ஒப்பு கொள்வார்கள் ?
    மகாநதி, குணா , அன்பே சிவம் , தசாவதாரம் ...

    நல்ல / வித்தியாசமான படமும் வேணும் , ப்ளாப் ஆனா கமல திட்டவேண்டியது.

    இதுக்கு பதில்,
    உருப்படியா, "பழனியப்பன் சைக்கிள் வீலுக்கு பெண்டு எடுக்குறத" பத்தி பதிவு போட்டிருக்கலாம். கவுண்டமணிக்கு உபயோகமா இருந்து இருக்கும்.

    15 December 2009 8:46 PM***

    எல்லாம் சரிதான், எதுக்கு ஒப்புக்கு ஒரு இயக்குனர், இவர்தான் எல்லாம்னா?

    இவர்தான் எல்லாம்னா இயக்குனராக இவரே க்ளைம் பண்ண வேண்டியதுதானே? அந்த வீணாப்போன இயக்குனர்களை இணைஇயக்குனரா போட வேண்டியதுதானே என்பது கேள்வி!

    ReplyDelete
  15. கண்ணா ... நேத்திக்கு தப்புன்னு பட்டது இன்னைக்கு சரி ன்னு படும்.
    எதிர்காலத்துல இந்த படங்கள் கிளாசிக் லிஸ்ட்ல இருக்கும்.
    அப்போ அந்த இயக்குனர்களுக்கு நல்ல பேர் கிடைக்கும்.
    கமலின் உயர்ந்த உள்ளத்தை என்னன்னு சொல்லி பாராட்டுறது ....

    //இவர்தான் எல்லாம்னா இயக்குனராக இவரே க்ளைம் பண்ண வேண்டியதுதானே?//
    கமல் என்ன தனக்கு தானே பட்டம் கொடுத்துக்குற தற்குறியா ?
    இல்லை கலிங்கத்து பரணி படிக்காத காரிருளா ?
    இல்லை புறநானூறு தெரியாத புண்ணாக்கா ?
    குதித்து பயந்தோட கமல் என்ன குள்ள நரியா ?

    ReplyDelete
  16. ***மணிப்பக்கம் said...
    i love this post, fine!

    16 December 2009 7:54 AM***

    Glad you liked it! Thanks :-)))

    ReplyDelete
  17. ***அஹோரி said...
    கண்ணா ... நேத்திக்கு தப்புன்னு பட்டது இன்னைக்கு சரி ன்னு படும்.
    எதிர்காலத்துல இந்த படங்கள் கிளாசிக் லிஸ்ட்ல இருக்கும்.
    அப்போ அந்த இயக்குனர்களுக்கு நல்ல பேர் கிடைக்கும்.
    கமலின் உயர்ந்த உள்ளத்தை என்னன்னு சொல்லி பாராட்டுறது ....***

    அஹஹா!!! நல்ல கற்பனைவளம் உங்களுக்கு!

    இயக்குனர்கள் எல்லாம் போய் சேர்ந்த பிறகு ஆவியா வந்து புகழ்மாலையை வாங்கிக்க வேண்டியதுதான் போல! :))

    ReplyDelete
  18. ***//இவர்தான் எல்லாம்னா இயக்குனராக இவரே க்ளைம் பண்ண வேண்டியதுதானே?//
    கமல் என்ன தனக்கு தானே பட்டம் கொடுத்துக்குற தற்குறியா ?
    இல்லை கலிங்கத்து பரணி படிக்காத காரிருளா ?
    இல்லை புறநானூறு தெரியாத புண்ணாக்கா ?
    குதித்து பயந்தோட கமல் என்ன குள்ள நரியா ?

    16 December 2009 7:49 PM***

    தன்னுடைய ஒரிஜினல் காண்ட்ரிப்யூஷனுக்கு க்ரிடிட் எடுத்திகிறதுல எந்த தப்புல் இல்லை, சார்!

    ஹாலிவுட்ல சுட்ட படத்துக்கு தான் க்ரிடிட் எடுத்துக்கிறதுதான் தப்பு, சார்!

    ReplyDelete