Wednesday, December 23, 2009

அயல்நாடுகளில் வேட்டைக்காரன் வெற்றியா? தோல்வியா?


விஜயுடைய வேட்டைக்காரன் மலேசியா, சிங்கப்பூர், இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் வெளியாகி இருக்கிறது. அயல் நாடுகளில் வேட்டைக்காரனுக்கு மிகப்பெரிய எதிரி அவதார் தான். ஈழத்தமிழர்களும் இதை புறக்கணிப்பதால், விளைவுகள் எப்படி இருக்குமோ என்ற பதட்டம் இருந்தது.

யு கே பாக்ஸ் ஆபிஸ்ல ஓப்பனிங் வீகெண்ட்ல 14 வது இடத்தை பிடித்து இருக்கிறான் வேட்டைக்காரன்!

14 Vettaikaaran Ind £43,608 B4U
0 1 12 £3,634 £43,608


சரி, இது வெற்றியா? இல்லை தோல்வியா? வெற்றினா, எவ்வளவு பெரிய வெற்றி? அப்படினு கேட்டீங்கனா, சுமாரான வெற்றிதான்.

அதெப்படி சொல்றீங்க?

சிவாஜி, தசாவதாரம் போன்ற பெரிய பட்ஜெட் படங்களை ஒதுக்கிவிட்டு. சின்ன பட்ஜெட் படமான நம்ம குசேலனுடன் ஒப்பிட்டுப்பார்ப்போம்!

12 Kuselan Ind £97,015 Ayngaran
1 17 £5,707 £97,015

தீபாவளிக்கு ரிலீஸான ஆதவன் எப்படி போச்சுனு பார்ப்போம்!

15 Aadhavan Ind £57,582 Ayngaran 1 11 £5,235 £57,582

சூர்யாவின் ஆதவன் வேட்டைக்காரனைவிட குறைந்த ஸ்க்ரீன்ல ரிலீஸ் ஆகி, அதிகமாக கலக்சன் கொடுத்திருக்கு!!!

மலேசியா பாக்ஸ் ஆஃபிஸ்லயும் "அவதார்" முதலிடத்திலும், வேட்டைக்காரன் இரண்டாவது இடத்திலும்தான் இருக்கு. மலேசியா பாக்ஸ் ஆஃபிஸ் கலக்சன் இன்னும் வெளியிடப்படவில்லை!

ஓவெர்சீஸ்ல விஜய் இன்னும் அவ்வளவு பெரிய ஆள் ஆகவில்லை என்றுதான் தோனுது. யு எஸ்லயும் விஜய்க்கு அவ்வளவு பெரிய மார்க்கட் கிடையாது! ஈழத்தமிழர் புறக்கணிப்பால் நிச்சயம் யு கே, கனடா போன்ற நாடுகளில் பெரிய தாக்கம் இருக்கத்தான் செய்யும்.

9 comments:

Unknown said...

உண்மைதான் டொரோந்த்டோவில் வேட்டைக்காரன் திரையிடப் படவில்லை.

வருண் said...

வாங்க முகிலன்!

ஈழத்தமிழர்கள் புறக்கணிப்புதான் இதற்கு காரணம்.

ஈழத்தமிழர்கள் கோபத்தில் கொஞ்சம் அர்த்தம் இருக்கத்தான் செய்யுது. இந்த நேரத்தில் இவருடைய காங்க்ரெஸ் நட்பெல்லாம் தேவையே இல்லாதது!

தமிழ் பையன் said...

வருண், நான் ஒரு விஜய் விசிறி அல்ல.. ஆனால் உங்கள் கருத்தை படிக்கும்போது (கமெண்ட் பகுதியில்) எல்லா நடிகர்களும் தங்களுக்கு எது சரி என்று படுகிறதோ அதை அரசியல் நிலையாக எடுக்காமல், தன படம் ஓடுவதற்கு ஏற்ற ஒரு நிலை எடுப்பதுதான் சரி என்று சொல்வதாகத் தோன்றுகிறது. அரசியல் என்பது சாக்கடை என்று எல்லோரும் ஒதுங்கி இருக்க, அங்கு கடை கட்டுபவர்கள் எல்லோரும் கழிசடைகள் ஆகிப் போனது நமது நாட்டின் துரதிர்ஷ்டம். அப்படி இல்லாமல் ஏதோ ஒரு நிலை எடுக்கும் எந்த ஒரு குடிமகனும், விஜய் மற்றும் விஜயகாந்த் உட்பட, வரவேற்கப் பட வேண்டியவர்களே.

வருண் said...

****tamil boy said...
வருண், நான் ஒரு விஜய் விசிறி அல்ல.. ஆனால் உங்கள் கருத்தை படிக்கும்போது (கமெண்ட் பகுதியில்) எல்லா நடிகர்களும் தங்களுக்கு எது சரி என்று படுகிறதோ அதை அரசியல் நிலையாக எடுக்காமல், தன படம் ஓடுவதற்கு ஏற்ற ஒரு நிலை எடுப்பதுதான் சரி என்று சொல்வதாகத் தோன்றுகிறது. அரசியல் என்பது சாக்கடை என்று எல்லோரும் ஒதுங்கி இருக்க, அங்கு கடை கட்டுபவர்கள் எல்லோரும் கழிசடைகள் ஆகிப் போனது நமது நாட்டின் துரதிர்ஷ்டம். அப்படி இல்லாமல் ஏதோ ஒரு நிலை எடுக்கும் எந்த ஒரு குடிமகனும், விஜய் மற்றும் விஜயகாந்த் உட்பட, வரவேற்கப் பட வேண்டியவர்களே.***

அரசியலில் இறங்குமளவுக்கு விஜய்க்கு இப்போ என்னங்க அவசரம?

இவர் எடுத்த நிலை (காங்கிரஸ்), நிலையானதுனு எப்படி சொல்றீங்க?

விஜய்க்கு அனுபவம் பத்தாதுங்க. நடிக்கிறதுலயே பத்தாது, அரசியல்ல கேக்கவே வேணாம்!

கலாநிதிமாறனை பார்க்கக்கூட அப்பா கையைப்பிடிச்சுக்கிட்டுத்தான் போறாரு.

****Very happy about the grand opening witnessed by Vettaikkaran, our Ilathalapathy Vijay called on Sun TV Network chairman and managing director Kalanithi Maran, who had released the movie, in Chennai on Tuesday.

The actor thanked Mr.Kalanithi Maran during the meeting that took place at the latter s office for non-stop promotional activities due to which the film has become a super hit all over the world in just three days after its release.

Vijay was accompanied by his father and filmmaker S A Chandrasekaran. They presented a bouquet and a shawl to Kalanithi Maran. Sun Pictures chief operations officer Hansraj Saxena was also present during the meeting. ***

இவர் அரசியலில் நுழைய எந்தவிதமான தகுதியும் இல்லை என்பது என் தாழ்மையான எண்ணம்.

MADURAI NETBIRD said...

//ஓவெர்சீஸ்ல விஜய் இன்னும் அவ்வளவு பெரிய ஆள் ஆகவில்லை என்றுதான் தோனுது. யு எஸ்லயும் விஜய்க்கு அவ்வளவு பெரிய மார்க்கட் கிடையாது! //

யு எஸ்லயும் புத்திசாலிங்க இருக்காங்கப்பா........ ஹி ஹி....................

ரகுநந்தன் said...

ஈழத்தமிழர் கோபம் தனியே விஜய் காங்கிரஸ் தொடர்பு மட்டுமல்ல சன், கருநாநிதி, சிங்களப்பாடகர்/ஸ்ரீலங்கா ராணுவம் எல்லாம் கலந்த்தது. இதனைத் தனியே காங்கிரஸ் எனச் சுருக்கவேண்டாம். இது ஆரம்பம் தான். இனிமேல்தான் இருக்குது ஆப்பு!

வருண் said...

***மதுரைநண்பன் said...
//ஓவெர்சீஸ்ல விஜய் இன்னும் அவ்வளவு பெரிய ஆள் ஆகவில்லை என்றுதான் தோனுது. யு எஸ்லயும் விஜய்க்கு அவ்வளவு பெரிய மார்க்கட் கிடையாது! //

யு எஸ்லயும் புத்திசாலிங்க இருக்காங்கப்பா........ ஹி ஹி....................***

அமெரிக்காவில் இருக்க "மதுரைக்காரங்க"ளா இருக்கும்!:-)))

வருண் said...

***JanuskieZ said...
Hi... Looking ways to market your blog? try this: http://bit.ly/instantvisitors***

நன்றி, JanuskieZ! :)

வருண் said...

***ரகுநந்தன் said...
ஈழத்தமிழர் கோபம் தனியே விஜய் காங்கிரஸ் தொடர்பு மட்டுமல்ல சன், கருநாநிதி, சிங்களப்பாடகர்/ஸ்ரீலங்கா ராணுவம் எல்லாம் கலந்த்தது. இதனைத் தனியே காங்கிரஸ் எனச் சுருக்கவேண்டாம். இது ஆரம்பம் தான். இனிமேல்தான் இருக்குது ஆப்பு!

25 December 2009 9:06 AM***

உங்கள் கருத்துக்கு நன்றி, ரகுநந்தன் :)