Tuesday, February 2, 2010

இயக்குனர்/நடிகர் ஹனிபா மறைந்தார்!


மலையாள இயக்குனர் மற்றும் நடிகரான கொச்சின் ஹனிபா, நெறையப்படங்கள் மலையாளத்திலும் தமிழிலும் இயக்கி இருந்தாலும் இவர் நடிகரான பிறகுதான் பலருக்கு இவரைத்தெரியும். தமிழில் இவர் செய்த பாத்திரங்கள் ஒவ்வொன்றும் அருமையானவை, நம் மனதைவிட்டு என்றுமே போகாதவை. தன்னுடைய 62 வது வயதில் நம்மைவிட்டு போய்விட்டார்!

இவர் நடித்த படங்களில் முக்கியமானவை

* மஹாநதி

* முதல்வன்

* பட்டியல்

* சிவாஜி

இவர் இயக்கிய படங்களில் சில

* பாசப்பறவைகள் (1988)

* பாடாத தேனீக்கள் (1988)

* பாச மழை (1989)

* பகலில் பெளர்னமி (1990)

* பிள்ளைப் பாசம் (1991)

* வாசலிலே ஒரு வெண்ணிலா (1991)

சின்ன ரோல்களில் வந்து நம்மை மிகவும் கவரும் நடிகர்கள் வெகுசிலரே. இதில் மறைந்த நடிகர்கள், எஸ் வி ரங்காராவ், டி எஸ் பாலையா வகையைச் சேர்ந்தவர் நடிகர் ஹனிபா!

மிகவும் அருமையான ஒரு நடிகர்! என்று எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவுக்கு இவர் நடிப்பு இருக்கும். தமிழ் திரையுலகுக்கு இது ஒரு பேரிழப்புதான்!

15 comments:

  1. பாசப்பறவைகளில் பெரிய ரவுடியாக வருவார்..,

    அப்புறம் வேட்டைக்காரனை விட்டுவிட்டீர்களே..,

    ReplyDelete
  2. வாங்க, தல! :)

    நான் பாசப்பறவைகள் பார்க்கலை சுரேஷ்! வேட்டைக்காரனும் இன்னும் பார்க்கலை! :)

    ReplyDelete
  3. ஆழ்ந்த அனுதாபங்கள்:(

    ReplyDelete
  4. புள்ளிக்கு ப்ராயம் 62

    ReplyDelete
  5. துக்கம் பகிர்தலுக்கு நன்றி, நடராஜன் & டீச்சர்!
    ---------------------
    டீச்சர்: அவருக்கு வயது அறுபத்தி ரெண்டா?

    இண்டியா டைம்ஸ்னுல ஒரு லிங்க்ல, 58 னு தான் போட்டிருந்தாங்க!

    எனிவே, திருத்திவிடுகிறேன்.

    ReplyDelete
  6. நீங்க சொன்னதுதான் சரி போல டீச்சர்.விக்கில இப்படித்தான் போட்டிருக்கு :)

    Salim Ahmed Ghoush
    22 April 1948(1948-04-22)
    Kochi, Kerala, India

    ReplyDelete
  7. ஆழ்ந்த வருத்தங்கள்

    ReplyDelete
  8. அவரின் சமீபத்து படங்கள், "வேட்டைக்காரன்" மற்றும் "மோதி விளையாடு" , "அ, ஆ, இ, ஈ" அனைத்திலும் அதகளப்படுத்தி இருப்பார். மிக சிறந்த நடிகர்.
    இங்கேயும் கொஞ்சம் பாருங்க..
    http://naadodigal.wordpress.com

    ReplyDelete
  9. adadaa...
    very sad. A fantastic actor and entertainer. Only very few can bring in that comical villain roles to perfection like him.Just remembered his roles in Mahanadhi and Pattiyal. Class acting from his end. Tamil & Malayalam film industry will definitely miss him.

    ReplyDelete
  10. அன்னாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

    லிஸ்ட்ல மவுனம் சம்மதம் ஆல்ஸோ.

    ReplyDelete
  11. சகாயமேரி ஜோ, நாடோடிகள், ஸ்ரீராம், & துபாய் ராஜா!

    தங்கள் அனுதாபங்களை பகிந்துகொண்டதுக்கு நன்றி!

    ReplyDelete
  12. ANNIYAN also..

    " Caar a niruththaama ponadhukku Maranathandanaya, Haiyo!!!"

    ReplyDelete
  13. This comment has been removed by the author.

    ReplyDelete
  14. ஆமாங்க ஸ்ரீனிவாஸ்! அன்னியன்லயும் நல்லா செய்திருப்பார்!

    ReplyDelete