Saturday, November 27, 2010

ஆர்யாவின் அநாகரிகப் பேச்சு!

"நான் ஒரு மலையாளி என்பதில் பெருமைப்படுகிறேன். பொதுவாக மலையாளிகள் ரசனையில் உயர்ந்தவர்கள். க்ளாஸ் படங்கள், உயர்ந்த நடிப்புதான் அவர்களுக்குப் பிடிக்கும். தமிழர்கள் ரசனை அப்படியல்ல. சுமாராக நடித்தாலும் லட்சங்கள், கோடிகளைக் கொட்டுவார்கள்" இப்படி ஆர்யா சொன்னதாக சொல்லப்படுகிறது!

தமிழன் ரசனையை, தமிழன் தரத்தை, தமிழனைக் கேவலப்படுத்த சாருநிவேதிதா, ஜெயமோகன், ஜெயராம்னு ஏகப்பட்ட பேரு கிளம்பிட்டார்கள். இதைப் பத்தி நான் ஏற்கனவே எழுதியும் இருக்கேன். இப்போ இந்த ஆர்யானு ஒரு அரைவேக்காடு!

ஒருபக்கம் “யார் இந்த ஆர்யா? முந்தா நேத்து பெய்த மழையில் நேத்து மொளச்ச காளான்! தமிழ் நாட்டுக்கு பொழைப்புக்காக வந்தவன். ஆனா திமிரைப் பாரு! இவன் தமிழர்களை விட தரத்தில் உயர்ந்த மலையாளியாம்! அவன் மட்டமான புத்தியக் காட்டிட்டான் பாரு!” னு கொதிக்கிறார்கள் பலர்.

இன்னொருபக்கம் அவரு “உண்மையைத்தானே சொல்றாரு? நம்மாளு ரசனை மட்டமானதுதான்” னு கைதட்டும் தமிழர்களும் பலர் இருக்காங்க!

இவர்கள் ரெண்டு கோஷ்டியும் அடிச்சுக்குவானுக! இதுதான் தமிழனுக்கே உள்ள தனித்துவம்னு வெட்கப்படலாம்! இல்லைனா பெருமையாவும் சொல்லிக்கலாம்!

ஆர்யாவுக்கு ஏன் கொஞ்சம்கூட நாகரிகமாகப் பேசத்தெரியலை? தமிழ் ரசிகர்களை இறக்காமல் அவரை இறக்கி உண்மையைப் பேசியிருக்கலாமே?

“தமிழ் சினிமாவில் பணம் அதிகம்! தமிழர்கள் எண்ணிக்கையில் அதிகம். நான் ஒரு மலையாளி! எனக்குப் பணம்தான் முக்கியம்! மலையாள சினிமால நடிச்சா வாங்குகிற பணத்தில் வாழ்நாள் பூரம் ஏழையாவேதான் இருப்பேன். பணத்துக்காகத்தான் தமிழ் சினிமால இருக்கேன்! நீங்களும் எனக்கு அதிக சம்பளம் கொடுத்து படம் எடுத்தால் நான் நிச்சயம் மலையாள்ப் படத்தில் நடிப்பேன்”னு சொல்லியிருந்தால் ஆர்யாவின் ஆனஸ்டியை நான் பாராட்டி இருப்பேன்.

ஆர்யாவை தமிழ் சினிமா உலகம் தண்டிக்கிறது, கண்டிக்கிறதெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும். ஆர்யா இப்படிப் பேசியதால் நிச்சயம் ஒரு ஆயிரம் இல்லை லட்சம் தமிழர்கள் இவர் படத்தை புறக்கணிக்கத்தான் செய்வார்கள். இதனால் நஷ்டப் படுவது தமிழர்கள் அல்ல! நிச்சயம் ஆர்யாதான்!

எனக்கு ஆர்யா மலையாளினு இப்போத்தான் தெரியும்! இதுவரை இவர் ஒரு தமிழ் நடிகர்னுதான் இவரைப் பார்த்தேன். ஆனால் இனிமேல்? தன்னைவிட தமிழனை மட்டம்னு நினைப்பவன்னு நினைப்பேன்!

எனக்கு மலையாளிகள்மேலே வெறுப்பை உண்டாக்குவது இதுபோல் அறிவுகெட்ட மலையாளிகள்தான்! ஆமா இவங்க சினிமாவில் ஆஸ்கரும், அறிவியல் மற்றும் இலக்கியத்தில் நோபல் பரிசுமா வாங்கி குவிச்சுட்டாங்க பாருங்க! எதுக்கு இந்த நெனைப்பு??

13 comments:

  1. தளபதி இதைப்பத்தி எல்லாம் எதும் சொல்றதே இல்லை... அநாகரிகப் பேச்சுன்னுதான வரணும்...

    ReplyDelete
  2. ம்ம் என்ன பண்றது

    ReplyDelete
  3. **பழமைபேசி said...

    தளபதி இதைப்பத்தி எல்லாம் எதும் சொல்றதே இல்லை... அநாகரிகப் பேச்சுன்னுதான வரணும்...
    27 November 2010 7:30 PM ***

    நன்றி, ப பே. சரி செய்துவிட்டேன் :)

    ReplyDelete
  4. சமீபத்தில் வரும் மலையாளப் படங்களும் வெறும் டப்பா படங்களாகவே உள்ளது. தமிழ் படங்களே காப்பி அடித்து தான் படம் எடுக்குகின்றனர்.
    ஆரியா எப்படியோ ஆனால் மலையாளி ரசிகர்கள் தமிழ் மொழியே மிகவும் விரும்புகின்றனர். அவர்களுடைய கிரண் சேனலில் தமிழ் படம் பாடல்களுக்கு என நேரம் உள்ளது. மேலும் குழந்தைகள் நடன நிகழ்ச்சியில் கூட தமிழ் பாடல்களையே பயண்படுத்துகின்றனர்.
    தமிழனுடைய ரசனையும் பண்படுத்த வேண்டியுள்ளது என் மறக்க இயலாது! 10 வயது காதல் ,மொக்க ஹீரோ டயலோக் மாற்றம் வேண்டும். பெண்கள் (ஹீரோ நடிகைகளுக்கு கூட: சிவாஜி, சிவகாசி,எந்திரன் போன்ற படங்கள்) உடுத்தும் உடையில் கவனம் செலுத்த வேண்டும்.!!

    ReplyDelete
  5. என் தளத்தில் போட்டு வாங்கியுள்ளேன். வந்து போகவும்.
    http://ponmaalaipozhuthu.blogspot.com/2010/11/blog-post_28.html

    ReplyDelete
  6. ***KANA VARO said...

    ம்ம் என்ன பண்றது
    27 November 2010 7:35 PM ***

    இப்படி ஒரு பதிவெழுதி நம்ம எரிச்சலை காட்டிக்க வேண்டியதுதான் :)

    ReplyDelete
  7. ***J.P Josephine Baba said...

    சமீபத்தில் வரும் மலையாளப் படங்களும் வெறும் டப்பா படங்களாகவே உள்ளது. தமிழ் படங்களே காப்பி அடித்து தான் படம் எடுக்குகின்றனர்.
    ஆரியா எப்படியோ ஆனால் மலையாளி ரசிகர்கள் தமிழ் மொழியே மிகவும் விரும்புகின்றனர். அவர்களுடைய கிரண் சேனலில் தமிழ் படம் பாடல்களுக்கு என நேரம் உள்ளது. மேலும் குழந்தைகள் நடன நிகழ்ச்சியில் கூட தமிழ் பாடல்களையே பயண்படுத்துகின்றனர்.
    தமிழனுடைய ரசனையும் பண்படுத்த வேண்டியுள்ளது என் மறக்க இயலாது! 10 வயது காதல் ,மொக்க ஹீரோ டயலோக் மாற்றம் வேண்டும். பெண்கள் (ஹீரோ நடிகைகளுக்கு கூட: சிவாஜி, சிவகாசி,எந்திரன் போன்ற படங்கள்) உடுத்தும் உடையில் கவனம் செலுத்த வேண்டும்.!!

    27 November 2010 9:20 PM***

    நல்ல கருத்துக்கள்ங்க! பகிர்தலுக்கு நன்றிங்க, J.P Josephine Baba :)

    ReplyDelete
  8. என்னவோ போங்க.

    ReplyDelete
  9. ***கக்கு - மாணிக்கம் said...

    என் தளத்தில் போட்டு வாங்கியுள்ளேன். வந்து போகவும்.
    http://ponmaalaipozhuthu.blogspot.com/2010/11/blog-post_28.html

    28 November 2010 5:04 AM**

    நன்றிங்க. வந்து பார்க்கிறேன் :)

    ReplyDelete
  10. ***Chitra said...

    என்னவோ போங்க.
    28 November 2010 8:26 AM ***

    மலையாள சினிமாவுக்குப்போயி இவரு உலகத்த்ரப்படங்கள்ல நடிச்சு "அஞ்சி ஆறு ஆஸ்கர்கள்" வாங்கிறதை சதிசெய்து தமிழர்கள் கெடுத்துட்டாங்களாம்!

    ரொம்ப பாவம் இவரு :(

    ReplyDelete
  11. வருண். U S வந்துள்ளேன்.முடுந்தால் தொடர்பு கொள்ளவும் sowmyatheatres@gmail.com

    ReplyDelete
  12. டிவிஆர் சார்!

    நீங்க யு எஸ் விசிட் பண்ணி இருக்கீங்கனு மகிழ்ச்சி! உங்களை ஜி மெயிலில் காண்டாக்ட் செய்கிறேன்!:)

    குளிர்காலத்தில் போய் வந்து இருக்கீங்க! இங்கேயும் வந்து சன் டிவி பார்க்காமல் அமெரிக்கன் ஃபுட் பால் பாருங்க! :)))

    ReplyDelete