Wednesday, December 1, 2010

அந்தணா! திருடுறது தப்புண்ணா!

அறிவுகெட்ட அந்தணா! திருடுறது தப்பு இல்லையா? அதாவது மிஷ்கின் ஜப்பானியப் படத்தை தழுவி தமிழ் சினிமாவுக்கு புதுமையா ஒரு படம் எடுக்கிறது?

என்ன பார்க்குறீங்க? யார் அந்த அந்தணன்னா?

Tamil cinema னு இணையதளத்தில் ஆர் எஸ் அந்தணன்னு ஓரு விமர்சகர் நந்தலாலாப் படத்துக்கு மிஷ்க்கினுக்கு வக்காலத்து வாங்கி எழுதிய சில வரிகள்.

'''ஒன்று மட்டும்தான் புரியவேயில்லை. நாம் எடுக்கிற படத்தை சுட்டு வேறு மொழிகளில் எடுக்கிறார்கள். பின் அதை ரீமேக் ரைட்ஸ் என்ற பெயரில் நாமே

பெரும் பணம் கொடுத்து வாங்கி தொலைக்கிறோம். மறுமுறையும் பார்த்து கைதட்டுகிறோம். அல்லது கவலைப்படுகிறோம். அல்லது விமர்சனம் என்ற பெயரில் துவைத்து காயப் போடுகிறோம்.

இந்த பித்துக்குளித் தனத்தையெல்லாம் பொறுத்துக் கொள்கிற நாம், தமிழ்சினிமாவை ஏதோ ஒரு வகையில் கவுரவப்படுத்தியிருக்கிற மிஷ்கினை மட்டும் உண்டு இல்லை என்று பந்தாடுவதுதான் ஏன் என்று புரியவில்லை.

கிகிஜிரோவோ, என்ன இழவோ? இருந்துவிட்டு போகட்டும். நந்தலாலா ஓடட்டுமே.... இல்லையென்றால் முச்சந்தியில் நின்று 'நாசமா போங்கடா' என்று சபிப்பதை தவிர வேறொன்றும் சொல்வதற்கில்லை!'''

என்ன சொல்றாரு இவரு? ஒரு ஜப்பானிய மொழிப்படத்தின் ப்ளாட்டை திருடி, மிஷ்கின் தமிழ் சினிமாவை கவுரவப்படுத்துறாராம்மா? ஒரிஜினல் படத்தை எழவுங்கிறான் இந்த அறிவுகெட்ட முண்டம். அதை திருடிக்கொண்டு வந்தவன் மேதையாம்! இதிலே யாரை நாசமாப்போகனு சொல்றான் இந்த நாயி? படம் பார்ப்பவர்களையா? சபிக்கிறானாம்? படம் பார்க்கிறனுகளுக்கு ஒரு மண்ணும் தெரியாது! எங்கே இருந்து பிடிச்சுட்டு வர்றானுகனு தெரியலை இது மாதிரி லூசூகளை! ஒரு படத்தில் ப்ளாட் திருடப்பட்டால் அதை சொல்லத்தான் செய்வான். அவன் திருடினான் இவன் திருடினான்! எவன் யோக்கியன் ? என்பதெல்லாம் புல்ஷிட்!

ஏன் இந்த ஜப்பானைய பட டைரெகட்ருக்கு இதை அனுப்பி அவர் ஒப்பீனியன் கேக்கவேண்டியதுதானே? அந்த அளவுக்கு மிஷ்கினுக்கு தைரியம் இருக்கா? இல்லை இந்த அந்தணன் இதை மிஷ்கினுக்காக செய்வரா?

நிச்சயம் இந்த ப்ளாட் திருடப்பட்ட ஒண்ணுதான். இது மிஷ்கின் வாழ்க்கையில் வருகிற அனுபவம் இல்லை! புதுமையா படம் எடுக்கனும்னு ஜப்பானிய மொழி, ரஷ்யமொழிப் படங்கள் பார்க்கிறது, புத்தங்கள் படிக்கிறது- ஒரு சிலருக்கு இதே வேலைதான்.

ஒருவனுடைய க்ரியேட்டிவிட்டினா இதுதானா? எனக்கு உண்மையிலே தெரியலை. எங்கேயாவது போய் ஐடியாவைத் தேடி கொண்டு வருவதா க்ரியேட்டிவிட்டி? இயக்குனர் பாலு மஹேந்திரா இதேபோல்தான். எதையாவது ஒரு ஹாலிவுட் படத்தின் ப்ளாட்டை தமிழில் ஆக்கித் தருவது. அதாவது தமிழ் சினிமால பெரிய புடுங்கிகள்னு பேர் எடுக்கிறவன் நெறையப்பேர் திருடனுகதான்.

பாலச்சந்தர், பார்திராஜா, பாக்யராஜ் போன்றவர்கள் இதற்கு விதிவிலக்குனு சொல்லலாம். "குட்டி" "முள்ளும் மலரும்" "பசங்க" "முதல் மரியாதை" போன்ற படங்களெல்லாம் இதற்கு விதிவிலக்குனு சொல்லலாம். அந்தக்காலத்தில் பீம்சிங் எடுத்த சிவாஜி படங்களெல்லாம் இதற்கு விதிவிலக்கு.

அந்தணன், ஏன் இப்படி அடிச்சுக்கிறாருனு தெரியலை! ஒரு ப்ளாட் ஒரு படத்தை தழுவி எடுத்தால் அது ஒரு பெரிய நெகடிவ் பாயிண்ட் தான்! அதை சொல்லத்தான் செய்வாங்க!

15 comments:

  1. FYI, K.Balachandar is also of the same category, he stole from Bengali movies

    ReplyDelete
  2. ***azhagan said...

    FYI, K.Balachandar is also of the same category, he stole from Bengali movies

    1 December 2010 8:44 AM***

    Can you give me the NAMES of Bangali movies and the copied tamil version of KB?

    I need to check them out! Thanks :)

    ReplyDelete
  3. KB made tamil movies from other language movies. Naming a few:
    1. Punnagai - Sathyakam from Hindi
    2. Kaavia Thalaivi - Mamta from Hindi
    3. Aboorva Ragangal - 40 Carats from English
    4. Nootrukku Nooru - English ( dont remember the name of the movie)
    There are more, but I hv to recollect my memory

    ReplyDelete
  4. நல்ல பதிவு வருன், அந்தணணை விடுங்கள். எல்லோரையும் விமர்சிக்கும் அவர் எடுத்த படம் கிழக்கு கடற்கரை சாலை. உடலில் அது ஒன்றே போதும். மற்ற பாகங்களை விட வாய் பெரிதாக இருப்பவர்கள் இப்படித்தான் பேசுவார்கள். ஆனால் மிஷ்கின் "கிகுஜிரோவைப் பார்த்தேன். அதன் பாதிப்பு இந்த படத்திலும் இருக்கலாம்" என்று சொல்லியிருந்தால் கூட சிறிதளவு நேர்மையாக இருந்திருக்கும். ஆனா கதையின் முடிச்சு என் குண்டலினியில் இருந்து தோன்றியது என்று பீலா விடும் போதுதான் இவர்கள் எவ்வளவு தடித்த தோலுடையவர்கள் என்பது தெரிகிறது.

    நான் இந்த படத்தைப் பார்க்கவில்லை, விமர்சனங்கள் மட்டுமே படித்தேன். நான் பார்ப்பது நல்ல பொழுது போக்கு படங்களை மட்டுமே. அந்த ரீதியில் எனக்கு பிடித்த படங்கள் கந்தசாமி மற்றும் எந்திரன் வகையறா. இப்போதும் மிஷ்கின் மீது நான் தவறு சொல்லவில்லை. ஆனால் படம் காப்பி என்பது உண்மையே என்று விமர்சனங்கள் சொல்கின்றன.

    ReplyDelete
  5. ///IRSHAD JEDDY said...

    3. Aboorva Ragangal - 40 Carats from English///


    ***40 Carats (1973) More at IMDbPro »
    ad feedback

    A forty year old woman who was vacationing in Greece meets a twenty-two year old, who was also on vacation. They spend the night together and she leaves him while he was sleeping. She then returns to New York and she is stunned to learn that her daughter's boyfriend is him. He then pursues her, and she is uncertain of what to do. ***

    அபூர்வ ராகங்கள்ல வேற ப்ளாட் இல்லையா? :) நீங்களே சொல்லுங்க!

    ReplyDelete
  6. ***அமர பாரதி said...

    நல்ல பதிவு வருன், அந்தணணை விடுங்கள். எல்லோரையும் விமர்சிக்கும் அவர் எடுத்த படம் கிழக்கு கடற்கரை சாலை. உடலில் அது ஒன்றே போதும். மற்ற பாகங்களை விட வாய் பெரிதாக இருப்பவர்கள் இப்படித்தான் பேசுவார்கள். ஆனால் மிஷ்கின் "கிகுஜிரோவைப் பார்த்தேன். அதன் பாதிப்பு இந்த படத்திலும் இருக்கலாம்" என்று சொல்லியிருந்தால் கூட சிறிதளவு நேர்மையாக இருந்திருக்கும். ஆனா கதையின் முடிச்சு என் குண்டலினியில் இருந்து தோன்றியது என்று பீலா விடும் போதுதான் இவர்கள் எவ்வளவு தடித்த தோலுடையவர்கள் என்பது தெரிகிறது. ***

    இவனுக மூளை எப்படி வேலை செய்யும்னே தெரிய்லை எனக்கு!

    ReplyDelete
  7. ஹி ஹி கண்டபடி திட்டிருக்கீங்க. same feeling.

    ReplyDelete
  8. ***Arun said...

    ஹி ஹி கண்டபடி திட்டிருக்கீங்க. same feeling.
    1 December 2010 10:33 AM ***

    அந்தணன் சொல்றார்..

    //தமிழ்சினிமாவை ஏதோ ஒரு வகையில் கவுரவப்படுத்தியிருக்கிற மிஷ்கினை மட்டும் உண்டு இல்லை என்று பந்தாடுவதுதான் ஏன் என்று புரியவில்லை.கிகிஜிரோவோ, என்ன இழவோ?//

    சூட்சி படப் ப்ளாட்டை திருடி வந்ததுக்காக அமீரையும் தான் திட்டினோம். க்மலை இது சம்மந்தமா பலரும் ஹார்ஷா அட்டாக் பண்ணி இருக்காங்க.

    மிஷ்க்கினுக்கு மட்டும் ஏன் விதிவிலக்குனு தெரியலை?

    நான் மேலே என் பதிவில் கோட் பண்ணியுள்ள வரிகளை இந்த ஆளு விமர்சனத்தில் இருந்து தூக்கினால் நல்லது.

    ReplyDelete
  9. புகை பிடித்தல் உடல் நலத்திற்குக் கேடு!
    ஆறுவது மனநலத்திற்குக் கேடு!!
    சினமுறுவது மனம், உடல் இரண்டுக்கும் கேடு!!

    நியூயார்க் இரயிலடியார் சொல்லக் கேட்டது!!!

    ReplyDelete
  10. ***பழமைபேசி said...

    புகை பிடித்தல் உடல் நலத்திற்குக் கேடு!
    ஆறுவது மனநலத்திற்குக் கேடு!!
    சினமுறுவது மனம், உடல் இரண்டுக்கும் கேடு!!

    நியூயார்க் இரயிலடியார் சொல்லக் கேட்டது!!!
    1 December 2010 3:14 PM ***

    ரயிலடியார் சொன்னதை கேட்டு வந்து சொன்னவருக்குத்தான் க்ரிடிட்! :)))

    ReplyDelete
  11. @@@
    ஏன் இந்த ஜப்பானைய பட டைரெகட்ருக்கு இதை அனுப்பி அவர் ஒப்பீனியன் கேக்கவேண்டியதுதானே?
    @@@
    அதைவிடவும் மிஷ்கினுக்கு தைரியம் உன்டு. அந்த ஜப்பானிய படத்தின் இயக்குனரோடு இந்தப் படத்தை பார்க்க வென்டும் என்ரு விருப்பம் தெரிவித்து இருக்கிறார். இந்தப் படம் தமிழ் சினிமா ரசிகர்களின் ரசனையை உயர்த்தும் ஒரு முயர்ச்சி. அதர்காக தழுவி எடுக்கவும் செய்யலம். காப்பியும் அடிக்கலாம். தப்பில்லை. ஒன்னுமே இல்லாத ஓருல எதவது ஒன்னு நல்லதுதனெ. இதேபொலதான் பேரான்மை வந்த போதும் சொன்னங்க. கிக்குஜிரொவை எத்தனை தமில் மக்கல் பாத்தாங்க? நந்தலால தமில் சினிமாவில் காட்சி மொழிக்கு புதிய அந்தச்து கொடுத்த படம் என்ர வகையில் மிகுந்த வர்வெர்புக்கு உரியர்து. மிஷ்கின் பாராட்டுக்குரியவர்.

    ReplyDelete
  12. .பாலசந்தர் பல வேற்று மொழிப்படங்களின் கதை; காட்சி அமைப்பு என நிறைய கையாண்டுள்ளார். அவர் காலத்தில் இவ்வளவு இலகுவாக வேற்று மொழிப்படங்கள் சாதாரணமானவர்களுக்குக் காணக்கிடைப்பதில்லை. அப்போ இணையமும் இல்லை.
    இருந்தால் காயப்போட்டிருப்பார்கள்.
    மிஸ்கின் ..;நல்லதொரு யப்பானியப் படம் பார்த்தேன். அதைத் தமிழ்ப்படுத்தினேன் எனக் கூறியிருக்கலாம்.

    ReplyDelete
  13. ***Jayaprakashvel said...

    @@@
    ஏன் இந்த ஜப்பானைய பட டைரெகட்ருக்கு இதை அனுப்பி அவர் ஒப்பீனியன் கேக்கவேண்டியதுதானே?
    @@@
    அதைவிடவும் மிஷ்கினுக்கு தைரியம் உன்டு. அந்த ஜப்பானிய படத்தின் இயக்குனரோடு இந்தப் படத்தை பார்க்க வென்டும் என்ரு விருப்பம் தெரிவித்து இருக்கிறார். இந்தப் படம் தமிழ் சினிமா ரசிகர்களின் ரசனையை உயர்த்தும் ஒரு முயர்ச்சி. அதர்காக தழுவி எடுக்கவும் செய்யலம். காப்பியும் அடிக்கலாம். தப்பில்லை. ஒன்னுமே இல்லாத ஓருல எதவது ஒன்னு நல்லதுதனெ. இதேபொலதான் பேரான்மை வந்த போதும் சொன்னங்க. கிக்குஜிரொவை எத்தனை தமில் மக்கல் பாத்தாங்க? நந்தலால தமில் சினிமாவில் காட்சி மொழிக்கு புதிய அந்தச்து கொடுத்த படம் என்ர வகையில் மிகுந்த வர்வெர்புக்கு உரியர்து. மிஷ்கின் பாராட்டுக்குரியவர்.***

    உங்க கருத்துக்கு நன்றிங்க. அந்தணனை பாராட்டாதவரை எனக்கு சந்தோஷம்தான் :)

    ReplyDelete
  14. ***யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

    .பாலசந்தர் பல வேற்று மொழிப்படங்களின் கதை; காட்சி அமைப்பு என நிறைய கையாண்டுள்ளார். அவர் காலத்தில் இவ்வளவு இலகுவாக வேற்று மொழிப்படங்கள் சாதாரணமானவர்களுக்குக் காணக்கிடைப்பதில்லை. அப்போ இணையமும் இல்லை.
    இருந்தால் காயப்போட்டிருப்பார்கள்.***

    பலச்ந்தரை குற்றம் சாட்டியிருந்தால், "ஆமாம் சில காட்சிகள் தழுவப்பட்டுள்ளது" னு சொல்லியிருப்பார்னு நெனைக்கிறேன்.

    அப்புறம் அனந்துக்கு பாதி மோசமான க்ரிடிட்டும் போகனும்!

    யார் செஞ்சாலும் அது தப்புத்தாங்க!

    ***மிஸ்கின் ..;நல்லதொரு யப்பானியப் படம் பார்த்தேன். அதைத் தமிழ்ப்படுத்தினேன் எனக் கூறியிருக்கலாம்.

    2 December 2010 4:11 AM***

    இனிமேல் நேர்முக பேட்டியிலே இது போல் கேள்விகள் எழும்போது என்ன சொல்கிறார்னு பார்ப்போம்! :)

    ReplyDelete
  15. vikatan has given 45/100!

    Here is something for anthaNan!

    ///ஜப்பானியத் திரைப்படமான 'கிக்குஜிரோ’ கதையின் 'ஸ்கெட்ச்'சை எடுத்துக்கொண்டு 'நந்த லாலா' படைத்த மிஷ்கின், டைட்டிலில் 'கதை’ என்று தன் பெயரைப் போட்டுக்கொண்டது சரியா? இன்ஸ்பிரேஷனுக்கு கிரெடிட் தர மறுப்பது என்ன நியாயம்? கடுமையான கண்டனங்கள் மிஷ்கின்! ///

    ReplyDelete