Friday, January 7, 2011

திருட்டு வி சி டியின் அமோக வளர்ச்சி! எந்திரனால் நஷ்டமடைந்தவர்கள்!

பதிவுலகில் டிவிடி ல படம் பாருங்கனு ஒருத்தர் சொல்றாரு. திருட்டு டிவிடி/விசிடிதான் படம் வந்து கொஞ்ச நாள்ல கெடைக்குது. அப்போ டி வி டி ல படம் பாருங்கனா அதுக்கு அர்த்தம்? திருட்டு டி வி டி திருட்டு வி சி டி பார்க்கசொல்றாரா? னு அசிங்கமா ஒரு கேள்வி கேட்கத் தோனுது. ஃபிளாப்பாப்போன படத்துக்கு மட்டும்தான் நல்ல டி வி டி உடனே கெடைக்குது.

இன்றைய சூழலில் திருட்டு வி சி டி மக்கள் பார்ப்பதற்கு காரணம் என்ன? "குறைந்த செலவில் பார்க்க முடியுது. சினிமாவுக்காக மக்கள் முட்டாள்த்தனமாக காசு செலவழிக்காமல் திருட்டு வி சி டியில் படம் பார்க்கிறாங்க. " என்று சொல்லலாம். ஆனால் அது முற்றிலும் உண்மை அல்ல!

யு எஸ்ல ஹிந்திப்படங்களுக்கு திருட்டு வி சி டி உடனே கெடைக்கிறது. எஃப் பி ஐ வார்னிங் உடன் தான்! தமிழ்ப்படங்களும் இப்போ எல்லாம் ஒரிஜினல் எல்லாம் கிடைப்பதில்லை! இந்தியா பஸார்லயே காப்பி பண்ணி 2-3 டாலருக்கு விக்கிறாங்க. இதைப்பத்தி யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. கடைக்காரனிடம் போயி எனக்கு ஒரிஜினல் ரெண்ட் பண்ணுனு சொன்னால் ஒரு மாதிரியாப் பார்க்கிறான். என்னமோ லூசைப் பார்ப்பதுபோல சிரிக்கிறான்.

சிவாஜி, எந்திரன் போன்ற ரஜினி படங்களை மக்கள் திருட்டு வி சி டி யில் பார்ப்பதற்கு காரணம் என்னனு திருட்டு வி சி டியை ஒழிக்கனும்னு அழுகிற ரஜினிக்குத் தெரியுமா? தெரியாதுனா இந்தப் பதிவை அவருக்கு அனுப்புங்கப்பூ!

தென் தமிழ்நாட்ல ரஜினி படம் ரிலீஸ் ஆகும் முதல் நாள் டிக்கட் விலை ரூ 200! கவுண்டர் டிக்கட் விலை ரூ 35 கூட இருக்குமானு தெரியலை. சென்னையிலே சத்யம் திரையரங்கில் விற்கிற விலையைவிட அதிகம்! படப்பெட்டி ரூ 40 லட்சத்திற்கு வாங்கி வந்து போட்ட காசை நான் எடுக்கனும்னு ரூ 200 க்கு ஒரு டிக்கட் விக்க ஆரம்பிக்கும்போது இப்போ எல்லாம் ரஜினி படம் பார்க்கவே மக்கள் யோசிக்கிறாங்க. நிச்சயம் ஒரு குடும்பத்திற்கு ரூ 1000 கொடுத்து படம்பார்க்க எல்லோரும் முன்வருவதில்லை! எனக்குத் தெரிய நெறையப்பேர் திருட்டு வி சி டி லதான் ரஜினி படங்களைப் பார்க்கிறாங்க!

படப்பொட்டி எடுத்தவனும் ரூ 200 ல இருந்து ரூ 100 அப்புறம் ரூ 80 னு 5-6 வாரங்களில் ஆக்கினாலும், அதுக்குள்ள நம்ம ஆளு திருட்டு வி சி டி ல பார்த்து முடிச்சுடுறான். கடைசியில் எந்திரன் படம் எடுத்தவனுக்கும் 10-20 லட்ச ரூபாய் நஷ்டம் என்பதுதான் நிதர்சனம்! எந்திரன் ப்ளாக் பஸ்டர்தான்! ஆனால் நெறையா திரையரங்கு ஓனர்கள் போட்ட காசை எடுக்கவில்லை என்பதுதான் நான் கேள்விப்பட்டது!

அந்தக்காலத்தில் ரஜினி படத்தை வச்சு சம்பாரிச்ச திரையரஙங்கு ஓனர்கள், இப்போ சிவாஜி, எந்திரன் படத்தை எடுத்து நஷ்டமடைந்ததுக்கு யார் காரணம்? அவங்களுடைய பேராசையா? அப்படியும் சொல்லலாம்! மக்களை தியேட்டர் பக்கம் வரவிடாமல் துரத்தியவர்கள் இவர்களே!

* ரூ 30 டிக்க்ட்டை ரூ 200 க்கு ஒரு டிக்கட் என்று விற்ற தியேட்டர் ஓனர்கள்தான் மக்களை திருட்டு விசிடியில் பார்க்க ஊக்குவிக்கிறது !னு சொல்றதுல என்ன தப்பு இருக்கு?

ஆக மொத்தத்தில் இப்போலாம் ரஜினி படத்தை வச்சு சம்பாரிச்ச தியேட்டர் முதலாளிகள், இன்றைக்கு வெற்றி பெற்றதாக சொல்லப்படும் ரஜினி படத்தால் நஷ்டமடைகிறார்கள் என்பதுதான் நிதர்சனம்!

பாபாவில் கூட நஷ்டமடைந்ததாக பொய் சொல்லி ரஜினியிடம் காசு வாங்கி சம்பாரித்த பலர், இப்போ வெளியே சொல்லாமல் இருக்காங்க! அவங்க கையொப்பமிட்ட அக்ரிமெண்ட் அப்படி!

ஆக, 30 ரூபாய் டிக்கட்டை 200 ரூபாய்க்கு விற்கும் தியேட்டர் ஓனர்களை நஷ்டமடைய செய்யும் திருட்டு வி சி டி பார்க்கிற நம்ம ஏழை மக்களை திட்டனுமா இல்லை பாராட்டனுமா? என்னனு எனக்குத் தெரியலை.

19 comments:

  1. இது என்ன பாஸ்.. எங்க ஊர்ல நான் முட்டி மோதி 150 ரூபா கொடுத்து வாங்கின டிக்கெட்ல எழுதியிருந்தது என்ன தெரியுமா.??? ஃபர்ஸ்ட் க்ளாஸ் 7 ரூபானு... 7 ரூபா டிக்கெட்ட 150 ரூபா கொடுத்து வாங்கினேன்.. ரொம்ப நாளுக்கப்பறம் ஊருக்கு போனோமேநம்ம தியேட்டர எட்டி பாக்கலாமானு பாத்தா இந்த கொடுமை.. அதுவும் கதவெல்லாம் திறந்திருக்க ரஜினி வந்தா எம்.ஜி.ஆர்., வர மாதிரி தெரிஞ்சிது.. இத கேக்க யாருமே இல்லையா..?? அவ்வ்வ்வ்வ்...

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. என்னுடைய ரிலேடிவ்ஸ் சிலர், சென்னை வந்தபோது அபிராமில் (கரெக்சன்) ரெண்டாவது முறை பார்க்கும்போது அவங்க ஊர்ல் கொடுத்த காசைவிட 1/3 கொடுத்துதான் பார்த்தாங்க!

    ஊர்ல டிக்கட்ல போட்டிருக்க விலை 10 அல்லது 15. ரஜினி படம் என்பதால் சந்தோஷமாக 200 ரு கொடுத்து டிக்கட் வாங்கினார்களாம்!

    ஆனால் எல்லோரும் இதுபோல் கொடுக்க முடிவதில்லை. ரஜினி படம் பிடிக்கும்தான் அதுக்காக ரூ 1000 யாரு செலவழிப்பா? டிவிடிலதான் பார்க்கனும்னு சொல்றாங்க!

    தியேட்டரில் கொள்ளையடிச்சுக்கிட்டு திருட்டு வி சி டி பத்தி எப்படிங்க குறை சொல்றது???

    பிளாக்ல வாங்கினால் பரவாயில்லை. இது தியேட்டரே பிளாக்ல விக்கிறது! :(

    7 January 2011 9:32 AM

    ReplyDelete
  4. எந்திரனால் என் குடும்பத்திற்கு அறுபது டாலர் + பெட்ரோல் நஷ்டம். தவறு என்னுடையதுதான். ஒரு தகவலுக்காக.

    ReplyDelete
  5. இன்னொரு வகையில் லாபம், இனிமேல் தியேட்டருக்கு படம் பார்க்க செல்வதில்லை என்று எந்திர சத்தத்தில் முடிவெடுத்தாச்சு.

    ReplyDelete
  6. ****குடுகுடுப்பை said...

    எந்திரனால் என் குடும்பத்திற்கு அறுபது டாலர் + பெட்ரோல் நஷ்டம். தவறு என்னுடையதுதான். ஒரு தகவலுக்காக.

    7 January 2011 11:28 AM***

    கடைசில கு கு க்கு பிடிச்ச மாதிரி ஒரு பதிவப்போட்டாச்சு. :) சாதனைதான் :)

    ReplyDelete
  7. ***குடுகுடுப்பை said...

    இன்னொரு வகையில் லாபம், இனிமேல் தியேட்டருக்கு படம் பார்க்க செல்வதில்லை என்று எந்திர சத்தத்தில் முடிவெடுத்தாச்சு.

    7 January 2011 11:30 AM***

    இதெல்லாம் சுடுகாட்டு ஞானோதயம் போலதான். அந்த நிமிசத்துக்குத்தான். :)))

    ReplyDelete
  8. கடைசில கு கு க்கு பிடிச்ச மாதிரி ஒரு பதிவப்போட்டாச்சு. :) சாதனைதான் :)
    //
    எனக்கு பிடிக்கற பதிவெல்லாம் வேண்டாம், உங்க நோக்கத்துகாக போடுங்க.

    ReplyDelete
  9. ***குடுகுடுப்பை said...

    கடைசில கு கு க்கு பிடிச்ச மாதிரி ஒரு பதிவப்போட்டாச்சு. :) சாதனைதான் :)
    //
    எனக்கு பிடிக்கற பதிவெல்லாம் வேண்டாம், உங்க நோக்கத்துகாக போடுங்க.***

    அஃப் கோர்ஸ், என் நோக்கம்தான் என் பதிவு! ஐ மீன் உங்களை திருப்திப்படுத்துற நோக்கம்லாம் இல்லை! எதார்த்தமா அப்படி அமஞ்சிருச்சு. :)

    ReplyDelete
  10. என்ன நடக்கு இங்க??

    ReplyDelete
  11. வருண் ரொம்ப நாட்களுக்கு பிறகு அவர் பி-ளாக்குக்கு பேர் வெச்ச மாதிரி இப்பதான் ரிலாக்ஸ்டா ஒரு பதிவு போட்டிருக்கார்.
    கு.கு வந்து கும்மியடிக்க, பழமை வந்து என்ன நடக்கு இங்க-ன்னு கேட்கிறார்... சரிதான்

    ReplyDelete
  12. என்னைக் கேட்டால் திரையரங்க உரிமையாளர்கள் அவர்களின் திரையரங்கத்தின் தரத்திற்கேற்ப கட்டணம் வசூலிப்பது தான் முறை... அதான் கேண்டீன்ல போட்ட காசை எல்லாம் எடுத்துடறான்களே அப்புறம் என்ன...?

    ReplyDelete
  13. //பதிவுலகில் டிவிடி ல படம் பாருங்கனு ஒருத்தர் சொல்றாரு. திருட்டு டிவிடி/விசிடிதான் படம் வந்து கொஞ்ச நாள்ல கெடைக்குது. அப்போ டி வி டி ல படம் பாருங்கனா அதுக்கு அர்த்தம்? திருட்டு டி வி டி திருட்டு வி சி டி பார்க்கசொல்றாரா? //

    யாருப்பா அந்த பதிவரு?

    ReplyDelete
  14. உண்மைதான், கண்டிப்பாக ஏழை மக்களை பாராட்டத்தான் வேணும்.

    ReplyDelete
  15. ***Blogger பழமைபேசி said...

    என்ன நடக்கு இங்க??

    7 January 2011 3:31 PM***

    வாங்க மணியண்ணா :)

    ReplyDelete
  16. ***Blogger அரசூரான் said...

    வருண் ரொம்ப நாட்களுக்கு பிறகு அவர் பி-ளாக்குக்கு பேர் வெச்ச மாதிரி இப்பதான் ரிலாக்ஸ்டா ஒரு பதிவு போட்டிருக்கார்.
    கு.கு வந்து கும்மியடிக்க, பழமை வந்து என்ன நடக்கு இங்க-ன்னு கேட்கிறார்... சரிதான்

    7 January 2011 3:48 PM***

    உங்க கருத்துக்கும், கணிப்புக்கும் நன்றிங்க, அரசூரான். :)

    ReplyDelete
  17. ***hilosophy Prabhakaran said...

    என்னைக் கேட்டால் திரையரங்க உரிமையாளர்கள் அவர்களின் திரையரங்கத்தின் தரத்திற்கேற்ப கட்டணம் வசூலிப்பது தான் முறை... அதான் கேண்டீன்ல போட்ட காசை எல்லாம் எடுத்துடறான்களே அப்புறம் என்ன...?

    7 January 2011 4:13 PM***

    தயாரிப்பாளர் விலையை ஏத்த, டிஸ்ட்ரிப்யூட்டர் பெட்டி விலையை ஏத்த, தியேட்டர் காரன் டிக்கட் விலையை ஏத்த, கடைசியில் மக்கள் திருட்டு விசிடி யை தவறுசெய்வதுபோல உணராமல் பார்க்குறாங்க என்பது என் எண்ணம்.

    தியேட்டர்க்கே ஆல் வரலைனா சம்சா எல்லாம் எங்கே சாப்பிட? :)

    ReplyDelete
  18. ***THOPPITHOPPI said...

    //பதிவுலகில் டிவிடி ல படம் பாருங்கனு ஒருத்தர் சொல்றாரு. திருட்டு டிவிடி/விசிடிதான் படம் வந்து கொஞ்ச நாள்ல கெடைக்குது. அப்போ டி வி டி ல படம் பாருங்கனா அதுக்கு அர்த்தம்? திருட்டு டி வி டி திருட்டு வி சி டி பார்க்கசொல்றாரா? //

    யாருப்பா அந்த பதிவரு?

    8 January 2011 2:06 AM**

    அதானே, யாரு அவருங்க தொப்பிதொப்பி? :)

    ReplyDelete
  19. ***இரவு வானம் said...

    உண்மைதான், கண்டிப்பாக ஏழை மக்களை பாராட்டத்தான் வேணும்.

    8 January 2011 4:13 AM***

    என்னால அப்படி அடிச்சு சொல்ல முடியலைங்க :(

    ReplyDelete