Wednesday, February 16, 2011

பதிவுலகில் திமுக காரர்களுக்கு பஞ்சம்!

ஒரு காலத்தில் பதிவுலகில் ரசினியை என்னவேணா திட்டலாம்! கேக்க நாதி இருக்காது! இப்போ அது ரொம்ப கொறைஞ்சி போயிருச்சு! பதிவர்களுக்கு போர் அடிச்சிருச்சா என்னனு தெரியலை!

மற்றபடி எப்போவுமே என்றும் காண்ட்ரோவேர்ஸியல் சாருவை திட்டி என்னத்தையாவது எழுதி எளிதில் சூடாக்கலாம். அதாவது சாருவின் தேகம் பத்தியும் எந்திரனில் ஐஸ்வர்ராய் பின்பிறம் பற்றியும் மிக்ஸ்ப் பண்ணி எதையாவது பேசி கோயிலப்பட்டி முறுக்கு விக்கலாம்! அதெப்படி இது ரெண்டையும் இணைக்க முடியும்? பதிவுலகில் எல்லாமே முடியும்ங்க!

சமீபத்தில் பதிவுலக சூப்பர் ஸ்டார் சாருக்குப் போட்டியா சீமான் போட்டிக்கு வந்து நின்னாரு. அதாவது மாவீரன் சீமான் பத்தி தலைப்பில் பேசினால்/எழுதினால் உங்க பதிவு ரொம்பவே விரும்பி வாசிக்கப் படும்! இப்போ சீமான் அண்ணே அம்மா ஜால்ரா ஆனதும் ஓரளவுக்கு அவர் சூப்பர் ஸ்டார் பதவிக்கு அழிவுகாலம் வந்துருச்சு. தன்னால் தனிப்பட்ட முறையில் செய்யமுடியாமல் ஜெயா பின்னால போய் நிக்கிற எவனுமே தன்மானமுள்ள தமிழனா எப்படி இருக்க முடியும்?னு மக்களுக்கு சந்தேகம் வந்துருச்சு.

அதிசயமாக இன்னைக்கு பதிவுலகில் திமுக காரர்களுக்கு ரொம்பவே பஞ்சமாகிப் போயிடுச்சு. கலைஞர் தும்மினாலும் இருமினாலும், அதிலும் அரசியல்தான் இருக்குனு சொன்னாலும், எதுக்கெடுத்தாலும் கலைஞரை கண்ணா பின்னானு விமர்சிச்சாலும் நியாயம் கேக்க ஒரு திமுக் காரன் இல்லாமல் நாதியில்லாமல் போச்சு.

ஒரு வேளை தி மு க காரங்க எல்லாம் எதையும் தாங்கும் இதயம் கொண்டவங்களா ஆகிட்டாங்களானு தெரியலை! அல்லது காங்கிரஸ் கூட்டணியோட நிக்கிற எப்படியும் நாங்கதான் ஆட்சியப் பிடிக்கபோறோம், தூற்றுவார் தூற்றட்டும்னு கண்டுக்காமல் இருக்காங்களானு தெரியலை!

இதிலென்ன கொடுமைனா திமுக அல்லாதவர்கள் எல்லாம் இப்போ கலைஞருக்கு வக்காலத்து வாங்க வேண்டிய பரிதாப நிலை உருவாகிப்போச்சு! பதிவுலகில் தி மு க காரங்க எப்போ திரும்ப வந்து ஆதிக்கம் செலுத்த போறாங்கனு ஒரே ஏக்கமாயிடுச்சு போங்க. அட் லீஸ்ட் அநியாயமாக/எந்த ஒரு நியாயமே இல்லாமல் கலைஞர் தாக்கப்படும் போதாவது வந்து என்னனு ஒரு பின்னூட்டம் போட்டுக் கேளுங்கப்பா!

25 comments:

  1. கேட்போம்

    இவண்
    திமுககாரன்

    ReplyDelete
  2. தளபதி, நீங்களும் நானும் குரல் குடுத்தது சிலருக்கு தெரியாம்ப் போய்டிச்சா?? அல்லது, தூங்கியும் தூங்காம நடிக்கிறாகளான்னுதான் தெரியலை!!

    ReplyDelete
  3. ***Blogger ILA(@)இளா said...

    கேட்போம்

    இவண்
    திமுககாரன்

    16 February 2011 7:54 AM
    Blogger நசரேயன் said...

    கேட்போம்

    16 February 2011 8:16 AM
    Blogger Peppin said...

    ketpom...

    16 February 2011 8:20 AM***

    இதுவரை கேட்கலை. இனிமேலாவது கேளுங்க! நீங்க நல்லாயிருப்பீங்க! :)

    ReplyDelete
  4. ***Blogger பழமைபேசி said...

    தளபதி, நீங்களும் நானும் குரல் குடுத்தது சிலருக்கு தெரியாம்ப் போய்டிச்சா?? அல்லது, தூங்கியும் தூங்காம நடிக்கிறாகளான்னுதான் தெரியலை!!

    16 February 2011 8:45 AM***

    என்னத்த குரல் கொடுத்தீங்களோ, போங்க! மனசுக்குள்ளேயே சத்தமா பேசினீங்களோ, மணியண்ணா? :)))

    ReplyDelete
  5. அது கூட பரவால்ல!2-ஜி யோ கசுமாலமோ அதுல கோத்து வுட்டுடுவாங்களோன்னு பயப்புடுறாங்க போல!

    ReplyDelete
  6. ***Yoga.s.FR said...

    அது கூட பரவால்ல! 2-ஜி யோ கசுமாலமோ அதுல கோத்து வுட்டுடுவாங்களோன்னு பயப்புடுறாங்க போல!

    16 February 2011 10:40 AM***

    நான் ஏன் என்னைத் திமுக காரர்கள் லிஸ்ட்ல இருந்து வெகுகவனமாக கழட்டிக்கிட்டேன்னு நினைக்கிறீங்க?

    என்னையும் 2G அல்லது 3 G, ராஜா இல்லை மந்திரி, கனிமொழி இல்லைனா ஒரு தேன்மொழியோட சேர்த்துடுவாங்கனுதான்! :)))

    ReplyDelete
  7. dont worry 100 idiot writers cannot change the people verdict. the so called educated people never votes. so we will win with huge margin. The 2g money will help and we will give 1000 rs per begger

    ReplyDelete
  8. ஹி..ஹி கேப்போமில்ல..

    இப்படிக்கு உடன்பிறப்பு...

    ReplyDelete
  9. ஒரு சில தி.மு.க. எதிர்ப்பாளர்களின் அநாகரீகமான மறுமொழிகள் கூட காரணமாயிருக்கலாம்.

    ReplyDelete
  10. //"பதிவுலகில் திமுக காரர்களுக்கு பஞ்சம்!"//
    ஓ! அதுவா? கூலி வாங்காம எவ்வளவு நாளைக்குத்தான் மாரடிக்க முடியும்? தலைமைக்கே இன்னும் சுரணை வந்த பாடில்லை. இவங்களுக்கு அதற்குள் வந்திடுமா என்ன? காங்கிரசுக்கு முழுக்கு போடுகிற அன்று வலை எங்கும் இவர்கள் தான் சிலிர்த்துக்கொண்டு வியாபித்திருப்பார்கள் பாருங்கள்!!

    ReplyDelete
  11. பச்சப்புள்ள நசரேயன் கூட ISI,CIA,KGB அக்மார்க் அரசியல் பதிவு நேற்று போட்டாருன்னு இப்பத்தானே எனக்குப் புரியுது:)

    ReplyDelete
  12. இந்த பிரச்சினையெல்லாம் அமுங்கின பொறவு, 'வீறு'(?) கொண்டு எழுந்து வருவாங்க. 'அப்ப எங்கன போயிருந்தீங்க?'னு அப்ப கேட்டீங்கன்னா, கெக்க பிக்கனு சிரிப்பானுங்க... :)

    ReplyDelete
  13. ஹா ஹா ஹா கேட்டாச்சு.. என்ன?

    ReplyDelete
  14. எசுமா
    டெசுமா
    தடா
    பொடா
    அடுத்து?

    வடா!!

    ReplyDelete
  15. கருணாநிதியை பட்டாபட்டி அண்டர்வேருடன் கைது செய்தால் நாங்கள் குரல் கொடுப்போம். பட்டாபட்டியின் அண்டர்வேரை திருப்பிக்கொடு என்று அண்டார்டிகா வரையிலும் சாலை மறியல் செய்வோம்.

    ஆமாங்கண்ணா...திமுக ண்ணா என்னாங்கண்ணா?
    பட்டாபட்டி சொல்லுவாரு....
    "திரும்பிநிக்கிற முண்டக் கட்டைங்க"

    ReplyDelete
  16. நீங்க கூறியது உம்மைதான், இதற்கு முக்கிய காரணம் ஒரு சில தி.மு.க. எதிர்ப்பாளர்களின் அநாகரீகமான மறுமொழிகள்தான் . முக்கியமாக நாம் தமிழர்கள் ...., என் பதிகுகளுக்கே மிக கேவலமான பின்னூட்டம் இட்டனர் , ஆனால் நம்மை போல் சகிப்புத்தமையுடன் சிலர் உள்ளார்கள் , இருபினும் இது இது மிகவும் குறைவுதான்

    ReplyDelete
  17. சீமானின் கருத்தை சரியாக புரிந்துகொள்ளாமல் எழுதுவது சரியாகாது, இன்றைய நிலையில் அவர் எடுத்த முடிவு சரியே, காங்கிரசும் , திமுக வும் இந்த தேர்தலில் தோற்கடிக்க இதுவே சிறந்த வழி.

    ReplyDelete
  18. கேட்போம்
    கேட்போம்
    கேட்போம்
    கேட்போம்
    கேட்போம்
    தைரியம் இருந்த இப்போ திட்டுங்கடா

    ReplyDelete
  19. //இதிலென்ன கொடுமைனா திமுக அல்லாதவர்கள் எல்லாம் இப்போ கலைஞருக்கு வக்காலத்து வாங்க வேண்டிய பரிதாப நிலை உருவாகிப்போச்சு!//

    ஏங்க, இந்த தள்ளாத வயதிலும் இந்த பேய்களோட மல்லுக் கட்டிட்டு...
    பேசாம அரசியலில் இருந்து ஒய்வு என்று அறிவித்து விட்டு முழு நேர கலைஞர் TV டைரக்டரா சினிமாவில் சாதிக்க இன்னும் உங்களுக்கு 13 வயதிருக்கு...(ஆய்சு 100)
    இதை படித்த கலைஞருக்கு
    LOW BPயாம்ல...

    ReplyDelete
  20. enda kalainar enna vaanathil irunthu erangiyavara?vimarsanathukku apparpattavara?unna mari jaalranga irrukkiravaraikum tamilnatta thirutha mudiyathuda..................

    ReplyDelete
  21. dai jaghangeer jaya ungala elam evalavu adichalum thiruntha matingada vimarsanmgarthu nagarigama irukanum singukar enda vimasanm panare nanga kalingaruku jalra thanda thatarom ana neenga elam jayaku velaku pudichitu irukengada

    ReplyDelete
  22. intha thadavayum dmk than Jeikum ella admk supporters kitaum kekaren jaya achi panina 10 years unga records publisish panugada pakthula Dmk voda last 10 years recordsum publish panugada apa therium Kalingar evalavu makkal nala thitangal panirukarunu

    ReplyDelete
  23. ஆளாளுக்கு ஏகவசனத்துல (அதுவும் தமிலிஸ்ல) ஆரம்புச்சுட்டாங்கப்பா! :(

    ReplyDelete