Monday, August 29, 2011

ஆண்களின் ஆண்மைக்குறைவு பிரச்சினை!

ஒரு சில ஆங்கிலப்படங்கள் பார்த்தபோதுதான் இதுபோல பிரச்சினைகள் கண்ணில் தட்டுப்படுது! ஒரு சில ஆண்கள் ஒரே ஒரு "டெஸ்டக்கிள்" (விதைக்கொட்டை?)யுடன் வாழ்ந்துகொண்டு இருப்பதாக. நிச்சயம் ஒரு சிலர் இரண்டும் இல்லாமலும் வாழ்ந்துகொண்டுதான் இருப்பாங்க. அதைப்பத்திப்பேசவோ அல்லது தெரிந்துகொள்ளக்கூட தைரியம் இல்லை எனக்கு. அதனால் அதைப்பற்றி இப்போ நான் எதுவும் பேசப்போவதில்லை!

சிறுவயதில் ஒரு நண்பனுக்கு இந்த பிரச்சினையுள்ளதாக சில நண்பர்கள் சொல்லிக் கேள்விப்பட்டு இருக்கேன். ஆனால், அதனால என்ன? ஒண்ணு இருந்தாலே போதும் என்று பலர் வாதம் செய்ததாக நினைவு. அதுக்கப்புறம் ஒண்ணு இருந்தாலே போதும் என்ற எண்ணத்துடன் அதைப்பற்றி எதுவும் ஆராச்சி செய்ததில்லை!

பொதுவாக நான் சாதாரண பிரச்சினைகளைத்தான் பொழுதுபோக்குக்காக கடலைக் கார்னர் போன்றவற்றில் எழுதுவது வழக்கம். இதுபோல் "டிப்ரெஸிங்" மற்றும் "சீரியஸ்"பதிவெல்லாம் எழுதுவதில்லை. Ignorance is Bliss தான் பொதுவாக என்னுடைய பாலிஸி. ஆனால் *ing Kevin Costner, Jennifer Aniston "Rumor has it" படம் டி வி ல் பார்த்ததால் வந்த விளைவு இல்லை வினை தான் இந்தப் பதிவு.

இந்தப்படத்தில் கெவின் காஸ்ட்னர் குழந்தை பெற்றுக்கமுடியாத ஒரே ஒரு டெஸ்டக்கிளுடன் வாழும் பணக்கார ஆண்மகனாகக் காட்டுவாங்க. "கால்ப்பந்து" ஆடும்போது ஏற்பட்ட விபத்தில் ஒரு டெஸ்டக்கிளை இழந்ததாக காட்டுறாங்க. இந்தப் படத்திலிருந்துதான் அவங்களால குழந்தை பெத்துக்கிறது கஷ்டம் என்றும், இதுபோல, ஆக்ஸிடெண்ட் அல்லது இன்ஃபெக்ஷன் காரணமாக பல ஆண்கள் ஒரு டெஸ்டிக்கிளை இழந்து நம்முடன் வாழ்ந்துகொண்டு இருக்காங்கனு இந்த மரமண்டைக்குத் தெரிஞ்சது! பொதுவாக இதைப்பத்தி ரொம்ப சீரியஸாக யோசிச்சதே இல்லை!

இது சம்மந்தமாக கூகில் பண்ணிப்பார்த்தபோது ஒரு சில நல்ல டிஸ்கசன் ஃபாரம் (கருத்துக்களங்கள்) போயி வாசிக்க முடிந்தது. அதில் இதுபோல பிரச்சினை உள்ளவங்க, எந்த வயதில் எப்படி இழந்தார்கள், இன்னைக்கு எப்படி மன அழுத்தத்துடன், தன்னம்பிக்கை இல்லாமல் நம்மில் வாழ்ந்து கொண்டு இருக்காங்கனு தெரிய வந்தது.

* ஒரு சிலர் தங்களுக்கு உள்ள இந்தக்குறையால் தங்கள் ரத்தத்தில் "டெஸ்டாஸ்டீரோன்" கம்மியாகிவிட்டது என்றும், அதனால "செக்ஸ் ட்ரைவ்" அல்லது "செக்ஸ் வைத்துக்கொள்ளும் ஆசை" குறைந்துவிட்டாக சொல்றாங்க.

* ஒரு சிலர் தங்களுக்கு "விந்து எண்ணிக்கை" இதனால் கம்மியாக இருப்பதாகவும் சொல்றாங்க.

* ஒரு சிலருக்கு இது பெரிய சைக்கலாஜிக்கள் ஸ்ட்ரெஸை உருவாக்குதுனு சொல்றாங்க.

பலர் இவர்கள் மனதைப்புரிந்து ஆறுதலாகவும், நல் முறையிலும் உருப்படியாக பதில் சொல்லி இருக்காங்க.

இவர்கள் நினைக்கும் காரணங்களில் எது டாக்ரர்களாலும் விஞ்ஞானிகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை என்றெல்லாம் நான் ரொம்ப ஆராயவில்லை.

பொதுவாக நடுவயது ஆண்களுக்கு தலையில் முடி உதிர்ந்து வழுக்கை விழுவதைக்கூட ஏற்றுக்கொள்ள முடியாத கோழைகள்தான் நம்மில் கோடிக்கணக்கானவர்கள். அப்படி இருக்கும்போது நல்லாப் பிறந்து இடையில் இதுபோல் டெஸ்டக்கிள் இழப்பவர்களுடைய மனநிலை எப்படி பாடுபடும்னு நெனச்சா ரொம்ப கஷ்டமா இருக்கு.

"ஆண் குறி சைஸ்" பத்தியும், "கிளர்ச்சி ஸ்விட்ச்" போன்ற வெட்டிப்பிரச்சினைகளை உண்மை கலந்தும், கலக்காமலும் பக்கம் பக்கமாக எழுதும் மனோதத்துவ டாக்டர் சாலினி போன்றவர்கள் இருக்கும் இணையதள உலகில் இதுபோல் ஒரு டெஸ்ட்க்கிளுடன் பிரச்சினைகளுடன் வாழும் ஆண்கள் தங்கள் முகங்களை காட்டாமலே தன் பிரச்சினைகளை எப்படி சமாளிப்பது என்று தன் பிரச்சினைகளை ஒரு சில நல்ல தளங்களில் பேசமுடிவது, இது சம்மந்தமாக ஒரு சில நல்லவர்கள் உதவி, ஆலோசனை பெறுவது, மேலும் பல பெண்களிடம் இருந்து ஆறுதல் தரும் விசயங்களை பெற்றுக்கொள்வது போன்ற நல்ல விசயங்கள்தான் இன்றைய இணையதளத்தின் மிகப்பெரிய பலம் மற்றும் பயன்!

No comments: