Tuesday, October 4, 2011

வினவுதளம் இப்போ தமிழ்மணம் திரட்டியில் இல்லையா?

கொஞ்ச நாளாவே வினவு தளம் தமிழ்மண முகப்பில் காணோமேனு இந்த "ட்யூப் லைட்" க்கும் புரிந்து எங்கடானு தேடித்தேடிப் பார்த்து கண்டுபிடிச்சுப் பார்த்தால் வினவு தளத்தில் தமிழ்மணப் பதிவுப்பட்டையையே காணோம்! பொதுவா நான் வினவுத்தளத்திற்கு தமிழ்மண வாசலிருந்துதான் சென்றடைவது வழக்கம். கட்டண சேவையிலே ஒரு வருடம் போல இருந்த இவர்கள், ரொம்பப் பிரபலமானதும் தற்போது தனியாப் போயிட்டாங்க போல! நான் டிஸ்கவர் பண்ணுறதெல்லாம் இப்படித்தாங்க ரொம்ப காலங்கடந்துதான் பண்ணுவதால் நெறைய நோபல்பரிசுகள் எனக்குக் கெடைக்காமல்ப் போயிடுச்சு. :)

நான்கூட நெனைப்பதுண்டு இவ்வளவு பிரபலமான பிறகு வினவுதளம் ஏன் இன்னும் தமிழ்மணம் திரட்டியிலே தொடர்கிறார்கள்னு..பிறகு, என்னதான் பிரபலமானாலும் தமிழ்மணக் குடும்பத்தில் ஒரு அங்கத்தினரா இருப்பது ஒரு "honor" என்பதாலிருக்கும் என்று என்னை நானே சமாதானப்படுத்திக் கொள்வதுண்டு.

என்னைப்போல பல கன்சர்வேட்டிவ் பதிவர்கள்/வாசகர்கள் பொதுவாக தமிழ்மணத்தைத்தான் தமிழ் வலைபதிவுகளின் நுழைவாயிலாக வச்சிருக்காங்க. வளர்ந்ததும், தானே விரும்பி தமிழ்மணத்தை விட்டு அந்த வலைதளம் ஒதுங்கியதும் அந்த வலைதளம் பக்கம் போவதில்லை. இந்தப் பிரச்சினைக்காகவே ஒரு சிலர் ரொம்ப பிரபலமாகாமல் ரொம்பவே அடக்கி வாசிக்கிறாங்களோ என்னவோ! :-)

In any case, it is very nice to see, vinavu.com became one of the Top most tamil blogs in a short period. வினவு சகோதரர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். வாழ்க வினவு தளத்தின் தமிழ்த்தொண்டு!

17 comments:

  1. http://www.vinavu.com is in Tamilmanam. Do not spread rumors

    ReplyDelete
  2. kanaga: I am not spreading any rumors. It is long time since I saw vinavu's post in TM! Sorry if I were wrong and you were correct. :-)

    ReplyDelete
  3. oops! vinavu is still aggregated by TM!!!

    http://www.tamilmanam.net/most/read/3

    However, there seems like "glitch" or something. Bcos, I dont see the TM toolbar in vinavu???

    ReplyDelete
  4. நண்பர்களே , என்னுடைய இந்த சவால் போட்டி கதையை படித்து , ஓட்டை போடவும்:

    B L A C K D I A M O N D - சவால் சிறுகதைப் போட்டி -2011

    ReplyDelete
  5. யாராவது இந்தக் கருவைரத்துக்கு "ஓட்டை" போட்டுவிடுங்களேன். தாழ்வாரத்திலே காக்கா பீய்ச்சியதாகப் பின்னூட்டப்பெட்டியிலே எச்சமிட்டுத் தொலைக்கிறது

    ReplyDelete
  6. @ Ramya Parasuram

    தங்கள் உயர்ந்த கருத்துக்கு நன்றி ,வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  7. நான் பார்த்தவரைக்கும் தமிழ்மணத்தை ஏணியாகத்தான் பாவிக்கின்றார்கள். ஏறியவுடன் ஏளனம் செய்ய தயாராய் இருக்கிறார்கள். வினவு தளம் பட்டையை எடுத்த விபரம் நீங்கள் சொல்லித்தான் தெரிகின்றது. ஒரு பாரம் இனி சுமக்க வேண்டாம் என்று நினைத்து இருக்கக்கூடும்.

    ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். அடுத்த பத்தாண்டுகளில் சமூகத்தில் நடத்த அத்தனை மாற்றங்களை ஏமாற்றங்களை நிகழ்வுகளை ஒருவர் முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் நிச்சயம் வினவு தளத்தை ஒரு மாதம் தொடர்ந்து படித்தாலே போதுமானது.

    படித்தவுடன் முடிவுக்கு வரவேண்டியது அவரவர் பொறுப்பு.

    ReplyDelete
  8. //நான் பார்த்தவரைக்கும் தமிழ்மணத்தை ஏணியாகத்தான் பாவிக்கின்றார்கள். ஏறியவுடன் ஏளனம் செய்ய தயாராய் இருக்கிறார்கள். வினவு தளம் பட்டையை எடுத்த விபரம் நீங்கள் சொல்லித்தான் தெரிகின்றது. ஒரு பாரம் இனி சுமக்க வேண்டாம் என்று நினைத்து இருக்கக்கூடும்.//

    @ஜோதிஜி
    வினவு தளத்தில் பதிவுகள் லோட் ஆவதற்கு காலதாமதம் ஆவதாக்கக்கூறித் தான் தமிழ்மணம் பட்டையை நீக்குவதாக வினவு சொன்னார்கள். கட்டண சேவையையும் யாரோ ஒருவரது நன்கொடையில் பயன்படுத்துவதாக உங்கள் கேள்விக்கே பதிலளித்தார்கள்.

    ஏறிய பின் ஏளனம் செய்வதாக எனக்கு தோன்றவில்லை. ஏனெனில் அது தனிப்பட்ட விளம்பரத்தை கருதி நடத்தப்படும் தளமல்ல. தனியொரு நிறுவனத்தின் பெயரை விட முற்போக்குக் கருத்துக்கள் பரவுவது முக்கியமென கருதுகிறேன்.

    ReplyDelete
  9. ***Ramya Parasuram said...

    யாராவது இந்தக் கருவைரத்துக்கு "ஓட்டை" போட்டுவிடுங்களேன். தாழ்வாரத்திலே காக்கா பீய்ச்சியதாகப் பின்னூட்டப்பெட்டியிலே எச்சமிட்டுத் தொலைக்கிறது

    4 October 2011 9:17 PM***

    Take it easy, please. He just wants everybody to read and appreciate his story! :-)

    ReplyDelete
  10. ஆட்சி மாறியது தெரியாதா?

    அதனால் காட்சியும் மாறியது.

    மகஇக மருதய்யனுக்கு படியளந்த உளவுத்துறை ஜாபர்சேட் இப்போது எப்படி உள்ளார்?

    அடுத்த எண்கவுன்டர் லிஸ்டில் மருதய்யனின் பெயரும் உள்ளது.

    ReplyDelete
  11. ***IlayaDhasan said...

    நண்பர்களே , என்னுடைய இந்த சவால் போட்டி கதையை படித்து , ஓட்டை போடவும்:

    B L A C K D I A M O N D - சவால் சிறுகதைப் போட்டி -2011

    4 October 2011 8:23 PM***

    இளையதாசன் உங்க கதைக்கு ஓட்டுப்போட்டாச்சுங்க. வெற்றி பெற வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  12. ***JOTHIG ஜோதிஜி said...

    நான் பார்த்தவரைக்கும் தமிழ்மணத்தை ஏணியாகத்தான் பாவிக்கின்றார்கள். ஏறியவுடன் ஏளனம் செய்ய தயாராய் இருக்கிறார்கள். ***

    அந்த ஏணிக்கு அவர்கள் படியாக இருந்ததாக நினைப்பதால்...

    ***வினவு தளம் பட்டையை எடுத்த விபரம் நீங்கள் சொல்லித்தான் தெரிகின்றது. ஒரு பாரம் இனி சுமக்க வேண்டாம் என்று நினைத்து இருக்கக்கூடும்.***

    நல்லா இருக்கட்டும்

    ***ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். அடுத்த பத்தாண்டுகளில் சமூகத்தில் நடத்த அத்தனை மாற்றங்களை ஏமாற்றங்களை நிகழ்வுகளை ஒருவர் முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் நிச்சயம் வினவு தளத்தை ஒரு மாதம் தொடர்ந்து படித்தாலே போதுமானது.

    படித்தவுடன் முடிவுக்கு வரவேண்டியது அவரவர் பொறுப்பு.***

    இதில் என்னவும் மாற்றுக்கருத்து எனக்கில்லைங்க, ஜோதிஜி :)

    ReplyDelete
  13. ***Inban said...

    //நான் பார்த்தவரைக்கும் தமிழ்மணத்தை ஏணியாகத்தான் பாவிக்கின்றார்கள். ஏறியவுடன் ஏளனம் செய்ய தயாராய் இருக்கிறார்கள். வினவு தளம் பட்டையை எடுத்த விபரம் நீங்கள் சொல்லித்தான் தெரிகின்றது. ஒரு பாரம் இனி சுமக்க வேண்டாம் என்று நினைத்து இருக்கக்கூடும்.//

    @ஜோதிஜி
    வினவு தளத்தில் பதிவுகள் லோட் ஆவதற்கு காலதாமதம் ஆவதாக்கக்கூறித் தான் தமிழ்மணம் பட்டையை நீக்குவதாக வினவு சொன்னார்கள். கட்டண சேவையையும் யாரோ ஒருவரது நன்கொடையில் பயன்படுத்துவதாக உங்கள் கேள்விக்கே பதிலளித்தார்கள்.***

    இந்த விசயங்களை இங்கே பகிர்ந்தமைக்கு நன்றிங்க, இன்பன்.

    *** ஏறிய பின் ஏளனம் செய்வதாக எனக்கு தோன்றவில்லை. ஏனெனில் அது தனிப்பட்ட விளம்பரத்தை கருதி நடத்தப்படும் தளமல்ல. தனியொரு நிறுவனத்தின் பெயரை விட முற்போக்குக் கருத்துக்கள் பரவுவது முக்கியமென கருதுகிறேன்.

    5 October 2011 6:38 AM***

    எலிமெண்டரி ஸ்கூல் டீச்சர் நிலைமைதான் தமிழ்மணத்திற்கு! ஒரு காலத்தில் மூக்கு வழிய வந்த மாணவர்கள்தான் இணையதங்கள். பெரிய பட்டப்படிப்புப் படிச்சு பெரியாலானதும், டீச்சர் என்ன சொல்லிக்கொடுத்தாங்க.. நானா படிச்சுத்தான் இந்த நெலைமைக்கு வந்தேன்னு சொல்லாதவரைக்கும் ஓ கே தான்! :)

    ReplyDelete
  14. ***ராவணன் said...

    ஆட்சி மாறியது தெரியாதா?

    அதனால் காட்சியும் மாறியது.

    மகஇக மருதய்யனுக்கு படியளந்த உளவுத்துறை ஜாபர்சேட் இப்போது எப்படி உள்ளார்?

    அடுத்த எண்கவுன்டர் லிஸ்டில் மருதய்யனின் பெயரும் உள்ளது.

    5 October 2011 8:05 AM***

    வாங்க ராவணன்! ஆட்சி மாறியது தெரியும். ஆனா நீங்க சொல்றதெல்லாம் எனக்குப் புரியலை. ஆனால் பலருக்குப் புரியும்னு நம்புறேன். :)

    ReplyDelete
  15. //வாங்க ராவணன்! ஆட்சி மாறியது தெரியும். ஆனா நீங்க சொல்றதெல்லாம் எனக்குப் புரியலை. ஆனால் பலருக்குப் புரியும்னு நம்புறேன். :) //

    நீங்களும் நம்பிட்டீங்களா?

    அவர் சொன்னது யாருக்கும் புரியாது. சந்தேகம் கிளம்ப வேண்டும் ஆனால் புரியக்கூடாதென்பது தான் நோக்கமே. வினவு, மகஇக, மருதய்யன் (மகஇக பொதுச்செயலாளர்) என்று எங்கு பெயர் தென்பட்டாலும் அங்கே வந்து இவர் அவதூறு செய்வதைப் பார்த்திருக்கிறேன். சமரசமே இல்லாமல் போராடும் தோழர்களுக்கு இதெல்லாம் தூசு தான்.

    ReplyDelete
  16. inban:

    எனக்குப் புரியவே இல்லை. எப்படி நம்ப முடியும்? :)

    ReplyDelete
  17. //

    inban:

    எனக்குப் புரியவே இல்லை. எப்படி நம்ப முடியும்? :)
    //

    பலருக்கு புரியும்னு நம்பிட்டீங்களே. அத சொன்னேன். :)

    எல்லாருக்கும் 'சேம் பிளட்' தான், யாருக்கும் புரியாது. ஆனா ஏதோ விஷயம் இருக்கு போலன்னு சந்தேகம் மட்டும் வரும்.

    ReplyDelete