Friday, January 13, 2012

சீரியஸா கேக்கிறேன்! சாருநிவேதிதா தமிழனில்லையா?

நான் என்ன நைட்ரஸ் ஆக்ஸைடை நுகர்ந்துவிட்டேனா என்னனு தெரியலை. இல்லை நெஜம்மாவே சாரு எழுதியிருக்கது ரொம்ப "funny" யா இருக்கா? நீங்கதான் சொல்லனும்!

சாருநிவேதிதா தளத்துக்குப் போயி எக்ஸைல் பத்தி புது "கமர்சியல்" ஏதாவது எழுதி இருக்காரானு பார்க்கலாம்னு போனேன். ஆனால் அந்த மாதிரி பெருசா எதுவும் இல்லை.

சும்மா புத்தகவிழாக்கு போனது பத்தி எதையோ எழுதி இருந்தார். படிச்சுப் பார்த்தால் பயங்கர சிரிப்பு சிரிப்பா வந்தது. நீங்களும் படிங்க!


புத்தக விழா (2)

நேற்று புத்தகத் திருவிழாவுக்குச் சென்றிருந்தேன். ரொம்ப நேரம் இருந்தேன். அடையாளம், கிழக்கு, உயிர்மை, கருப்புப் பிரதிகள், க்ரியா, ஞாநபானு பதிப்பக ஸ்டால்களைப் பார்த்தேன். ஞாநியிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தேன். கீதா பிரஸ், கோரக்பூர் எனக்கு மிகவும் பிடித்த பதிப்பகங்களில் ஒன்று. அந்த ஸ்டாலில் வால்மீகி ராமாயணம் ஃபுல் செட் இருந்தது. 700 ரூ. விலை. கிட்டத்தட்ட இனாமாகக் கொடுப்பது போன்ற விலை. ஆனாலும் என் கையில் அவ்வளவு காசு இல்லை. அதனால் 70 ரூபாய்க்கு ஸ்ரீமந் நாராயணீயம் என்ற புத்தகத்தை மட்டும் வாங்கினேன்.

மீண்டும் கிழக்குக்கே வந்தேன். யாருக்கும் என்னை அடையாளம் தெரியாததால் கிளம்பி விட்டேன். அப்போது ஒரு 70 வயது முதியவர் எக்ஸைலில் கையெழுத்து வாங்கிக் கொண்டார். புத்தக விழாவை விட்டு வெளியே வந்த போது ஹரன் பிரஸன்னா (கிழக்கு) உள்ளே வந்து கொண்டிருந்தார். எக்ஸைல் விற்பனை பற்றி உற்சாகமாகப் பேசினார். வெளியே வழக்கம் போல் புத்தக விழாவுக்கு சம்பந்தமே இல்லாமல் ஒரு பொதுக் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. த்மிழில் இல்லாதது எதுவுமே இல்லை; உலகில் தோன்றிய முதல் மனித இனமே தமிழ் இனம்தான் என்று ஒருவர் கரகர குரலில் பேசிக் கொண்டிருந்தார். பார்வையாளர்களும் உற்சாகமாகக் கைதட்டி மகிழ்ந்தனர். தமிழர்களுக்கு இருக்கும் நகைச்சுவை உணர்வுக்கு ஈடு இணையே இல்லை.

புத்தக விழாவின் கழிப்பறையை நினைத்து பயந்து அன்றைய தினம் மதியத்திலிருந்தே தண்ணீர் குடிக்காமல் இருந்ததால் சிறுநீர் பிரச்சினை இல்லை. ஆனால் தாகத்தில் தொண்டை வறண்டு கொண்டிருந்தது.


என்னதான் எழுதி இருக்காருனு பார்த்தால்

* 1) எக்ஸைல ஒரு வயதானவர் படிச்சுட்டு இம்ப்ரஸ் ஆகி இவருட்ட ஆட்டோ க்ராஃப் வாங்கினது அவருக்கே அவரு கொடுத்துக்கிற ஒரு சீரியஸ் கமர்ஸியல். அவருடைய பாணியிலே எழுதி இருக்காரு. அது நல்லாத்தான் இருக்கு.


அது தவிர

* 2) அந்த ஸ்டாலில் வால்மீகி ராமாயணம் ஃபுல் செட் இருந்தது. 700 ரூ. விலை. கிட்டத்தட்ட இனாமாகக் கொடுப்பது போன்ற விலை. ஆனாலும் என் கையில் அவ்வளவு காசு இல்லை. அதனால் 70 ரூபாய்க்கு ஸ்ரீமந் நாராயணீயம் என்ற புத்தகத்தை மட்டும் வாங்கினேன்.

வால்மீகி ராமாயணம் ரூ 700 என்பது ரொம்ப அதிகமான விலையா? அதைத்தான் இப்படி நக்கலடிக்கிறாரா? அப்படித்தான் இருக்கனும். எனக்கு என்ன புரியலைனா, Why is he pretending like he is poor? He does not have a credit card???

Here is the best part of this write-up!

* 3) வெளியே வழக்கம் போல் புத்தக விழாவுக்கு சம்பந்தமே இல்லாமல் ஒரு பொதுக் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. த்மிழில் இல்லாதது எதுவுமே இல்லை; உலகில் தோன்றிய முதல் மனித இனமே தமிழ் இனம்தான் என்று ஒருவர் கரகர குரலில் பேசிக் கொண்டிருந்தார். பார்வையாளர்களும் உற்சாகமாகக் கைதட்டி மகிழ்ந்தனர். தமிழர்களுக்கு இருக்கும் நகைச்சுவை உணர்வுக்கு ஈடு இணையே இல்லை.

This part is hilarious and he is very sarcastic and funny and he is very honest as well! தமிழர்களுக்கு நகைச்சுவை உணர்வுக்கு ஈடு இணையே இல்லைனு சொல்லி அந்த சொற்பொழிவு ஆற்றும் "தமிழ் விரும்பி"யை இவரு லந்தக்கொடுக்கிறாரு. ஆனால் இதுல மறைந்து இருக்கும் உண்மை என்ன தெரியுமா? அதாங்க இதுபோல் லந்தடிக்கும் தமிழன் சாருவுடைய இந்த நகைச்சுவை உணர்வுக்கு ஈடு இணை ஏதுங்க?

ஒருவேளை சாரு தன்னை தமிழன் னு நினைப்பதில்லையா? மலையாளீயா இவரு? இல்லைனா வடநாட்டவரா? தமிழ் எழுத்தாளர்கள் யாருமே தன்னை தமிழனா நெனைக்கிறதில்லையா? ஒரே குழப்பமா இருக்கு எனக்கு!

7 comments:

  1. //நான் என்ன நைட்ரஸ் ஆக்ஸைடை நுகர்ந்துவிட்டேனா என்னனு தெரியலை. //

    இந்த வரி பதிவுலகத்தில எத்தனை பேருக்குப் புரியும்னு நெனைக்கறீங்க?

    ReplyDelete
  2. என்னங்க சார், ஹை ஸ்கூல் லயே சிரிப்பூட்டும் வாயு நைட்ரஸ் ஆக்ஸைட் னு சொல்லிக் கொடுப்பாங்களே!

    உங்க பின்னூட்டத்துக்கு ரொம்ப நன்றிங்க! :)

    ReplyDelete
  3. ரிலாக்ஸ் பிளீஸ்னு தலைப்பு வச்சிகிட்டு இப்படி சீரியஸா கேட்டா எப்படி?

    ReplyDelete
  4. சாரு நிவேதிதா ஒரு பிரெஞ்சுக்காரர், அங்குதான் பின் நவீனத்துவ கொண்டாட்டங்கள் அதிகமாக நடக்கின்றன. அவர் ஒரு மலையாளியும்கூட, கேரளாவில்தான் எழுத்தாளர்களை மதிக்கிறார்கள். இங்கோ மிதிக்கிறார்கள் (அவர்களுக்குள்ளேயே).

    ReplyDelete
  5. ஆமா...எனக்கும் தெரியாமலே நான் கேட்கின்றேன்.....?

    இந்த சாருநிவேதிதா யாரு?

    எதாவது செம பிகரா?

    பாலிவுட் செமகுட்டியா?

    இல்லையா?

    பின்ன யாரு அது?

    நானும் ஆறு கேள்விகள் கேட்டுள்ளேன். திருப்பிப்போட்டால் ஒம்பது ஆகும்.

    ReplyDelete
  6. சாரு நிவேதா???????????????

    ReplyDelete
  7. நண்பரே
    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்
    நண்பர்களுக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    தமிழர் வாழ்வு மேம்படும் என்ற நம்பிக்கையோடு..

    ReplyDelete