நம்ம டோண்டு ஐயாதான் இப்படி ஒரு காமெடியான வரியை எழுதியிருக்காரு. வழக்கம்போல ஜாதிக்கு வக்காலத்து வாங்காமல் வாங்கி, அது நம்ம கலாச்சாரத்துடன் கலந்துவிட்டது, அதனால அதை ஒழிப்பது என்பது இப்போதைக்கு நடக்கிற காரியம் இல்லைனு அவரு எப்போவும் சொல்றதை இப்போவும் சொல்ல வரும்போது, "ஜாதியை ஒழிக்க நினைப்பது மனித இயற்கைக்கு புறம்பானது" னு சொல்லியிருக்காரு.
ஆமா, ஜாதிக்கும் மனித இயற்கைக்கும் என்ன சம்மந்தம்னு தெரியலை எனக்கு.
ஏற்ற தாழ்வு, மனித இயற்கை!
அழகு, அழகின்மை, மனித இயற்கை!
அறிவாளி, புத்தியில்லாதவன் மனித இயற்கை!
வீரம், கோழைத்தனம், மனித இயற்கை!
இதெல்லாம் மனித இயற்கை, சரிதான். ஆனால் இந்தியாவில் மட்டும் கண்டுபிடிக்கப்பட்ட சாதி என்னும் ஒருவகையான பிரிவினை மனித இயற்கைனு சொல்றது சுத்தமான அபத்தம் இல்லையா? ஜாதி அடிப்படையில் ஒருவன் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்பது எப்படி மனித இயற்கையாகும்?!
அவர் பதிவுக்கு ஆங்கிலத்தில் பின்னூட்டம் ஒண்ணு எழுதிப் போட்டுட்டுத்தான் வந்தேன். நிச்சயம் அது வெளியே வரும். இருந்தாலும் ஆங்கிலத்தில் எழுதியதால், அவ்ளோ திருப்தியில்லை! இப்போ அதன் தமிழாக்கம் இங்கே!
சாதியை ஒழிப்பது, அதாவது ஜாதிங்கிறத சொல்லிக்கிட்டு திரிகிறவங்க இல்லாமல்ப் போவது என்பது நம் வாழ்நாளில் நடக்கப் போற விசயம் இல்லை என்பதை முதலில் ஏற்றுக்கொள்வோம்.
ஆனால் ஜாதியை முழுமையாக ஒழிக்க முடியவில்லை என்பதால் அதுக்குக் காரணம் மனித இயற்கைக்கு புறம்பானது என்பதெல்லாம் சுத்தமான அபத்தம்.
கவனித்துப் பார்த்தால் சாதி மட்டுமல்ல, உலகில் நெறைய விசயங்களை முழுமையாக நம்மால் ஒழிக்க முடியவில்லைதான்.
* கேன்சர், நீரிழிவு, ரத்தக்கொதிப்பு போன்ற வியாதிகளையும்தான் அடியோட ஒழிப்பதென்பது இப்போதைக்கு முடியாது. அதனால அதை ஒழிக்க நாம போராட முயற்சி செய்யாமலா இருக்கோம்? அவைகளை ஓரளவுக்கு கட்டுப் படுத்துவதால் எத்தனையோ பேர் இன்னைக்கு உயிரோட இருக்காங்க இல்லையா? இதுபோல் வியாதிகள் வரத்தான் செய்யும், வந்துட்டுப் போகுது, அது பாட்டுக்கு இருந்துட்டுப் போகுது, வந்தால் அதை ஒழிக்க வழி கண்டுபிடிப்பது என்பதெல்லாம் இயற்கைக்கு புறம்பானதுனு பேசாமல் எல்லோரும் சாவோமா? காலரா, பெரியம்மை போன்ற வியாதிகளை எல்லாம் நம்ம அரவே ஒழிக்கவில்லையா? அதனால் இன்னைக்கு மனிதன் இனம் அதிக நாட்கள் வாழ வில்லையா? நன்மையடையவில்லையா??
* பொறாமை, அறியாமை, தாந்தான் பெரிய இவன் என்கிற அகம்பாவம் போன்ற மனித இயல்புகள் எல்லாமே இயற்கையானதுதான். அதனால் அதுபோல் சின்னப்புத்திகளை தவறு என்று சுட்டிக்காட்டி, அதை ஒழித்தால்தான் மனித இனம் மேலும் உயரும் என்றும் காலங்காலமாக நம் முன்னோர்கள் படிச்சு, நாமும் படிச்சு, இளையவர்களுக்கு சொல்லிக்கொடுப்பதில்லையா? ஏன் அப்படி செய்றோம்?அது இயற்கையான உணர்வுகள் என்பதால் அதுக்கு எதிரா நாம் செயல்படுவது தப்பு, இயற்கைக்குப் புறம்பானதுனு எல்லாம் சொல்லிக்கிட்டு நாம் அதுபோல் உணர்வுகளை கண்டுக்காமல் விட்டுவிட்டு நம்ம பாட்டுக்கு வாழ்ந்திருந்தோமேயானால் இன்னைக்கும் மனிதன் காட்டுமிராண்டியாகத்தான் வாழ்ந்துகொண்டு இருப்பான்.
அதனால ஒண்ணை முழுமையாக ஒழிக்க முடியாது என்ற நிலையிருந்தாலும், அதை ஓரளவுக்கு ஒழிக்க, அதனால் விளையும் கொடுமைகளை கட்டுப்படுத்த முயல்வதே இன்னைக்கு நாம் நம் எதிர்கால சந்ததிகளுக்கு செய்ய வேண்டிய நம் கடமை! நம்மால் முழுமையாக ஒழிக்க முடியாது என்பதால் "எல்லாம் பகவான் செயல்" "இயற்கைக்கு புறம்பானது" என்று பேசுவதெல்லாம் அபத்தம், அறியாமை!
14 comments:
Good!
nalla karuththu nandri
சகோ வருண்,
நல்ல பதிவு. நேற்று இது சம்பந்தமாக டோண்டு அய்யா தளத்தில் பல பின்னூட்டங்கள் இட்டாச்சு. சோ, அவற்றை மறுபடியும் சொல்ல வேண்டியது இல்லை என்றே தோன்றுகிறது. நன்றி.
சிறந்த பதிவு
இந்தியாவில் மட்டும் கண்டுபிடிக்கப்பட்ட சாதி என்னும் ஒருவகையான பிரிவினை மனித இயற்கைனு சொல்றது சுத்தமான அபத்தம் இல்லையா? - வருண்
இந்தியாவில் மட்டும் கண்டுபிடிக்கப்பட்ட சாதி என்னும் ஒருவகையான பிரிவினை மனித இயற்கைனு சொல்றது சுத்தமான அபத்தம் இல்லையா? - வருண்
இந்தியாவில் மட்டும் கண்டுபிடிக்கப்பட்ட சாதி என்னும் ஒருவகையான பிரிவினை மனித இயற்கைனு சொல்றது சுத்தமான அபத்தம் இல்லையா? - வருண்
VARUN, WELL SAID.
LET THE ABOVE SENTENCE ECHO THROUGHOUT INDIA BY ALL MEDIA.
சாதியை எத்தனை இறைவன் வந்தாலும், எத்தனை தூதர் வந்தாலும் ஒழிக்கமுடியாது.
எந்த மதமானாலும் சாதியை உள்வாங்காமல் இந்தியாவில் வளரமுடியாது.
இந்த உலகம் இருக்கும் வரை இந்த உலகில் சாதி இருக்கும்.
சாதி என்பது எந்த ஒரு கற்பனையில் உருவான புத்தகத்தின் மூலம் உருவானதல்ல.
கற்பனையில் உருவான மதங்களை ஒழித்துவிட்டு இயற்கையாக உருவான சாதியை ஒழிக்கலாமா இல்லையா என்று பேசலாம்.
சாதியை உண்டாக்கியது பிராமணர்கள் அல்ல, அவர்களுக்கு அந்த அளவிற்கு அறிவு கிடையாது.
மனப்பாடம் செய்து ஒப்பிப்பது மட்டுமே பிராமண இனத்திற்குத் தெரியும்.
வருன்,
டோன்டு விதி விலக்குகளை மட்டுமே விதியாக்க நினைப்பவர். இந்த ஜென்மத்தில் கடவுள் அவரை உயர்ந்த சாதியில் படைத்து விட்டதற்காக கடவுளுக்கு அவர் நன்றி சொல்லட்டும். இவர் தன் முயற்சியில் உயர் சாதியில் பிறந்திருந்தால் அவர் சொல்வதற்கு ஒரு மதிப்பு இருக்கும். அது இல்லாத போது சாதியைப் பற்றி அவர் பேசும் அனைத்து குப்பைகளையும் புறக்கணிப்பதே சரி.
//அவர்களுக்கு அந்த அளவிற்கு அறிவு கிடையாது.// சரியாகச் சொன்னீர்கள் ராவனன். ஆனால் தந்திரம் அதிகம்.
@ ரிஷி, விழித்துக்கொள், சிராஜ், சுவனப்பிரியன், and VANJOOR!
தங்கள் கருத்துக்கும், புரிதலுக்கும் நன்றி :)
***ராவணன் said...
சாதியை எத்தனை இறைவன் வந்தாலும், எத்தனை தூதர் வந்தாலும் ஒழிக்கமுடியாது.
எந்த மதமானாலும் சாதியை உள்வாங்காமல் இந்தியாவில் வளரமுடியாது.
இந்த உலகம் இருக்கும் வரை இந்த உலகில் சாதி இருக்கும்.
சாதி என்பது எந்த ஒரு கற்பனையில் உருவான புத்தகத்தின் மூலம் உருவானதல்ல.
கற்பனையில் உருவான மதங்களை ஒழித்துவிட்டு இயற்கையாக உருவான சாதியை ஒழிக்கலாமா இல்லையா என்று பேசலாம்.
சாதியை உண்டாக்கியது பிராமணர்கள் அல்ல, அவர்களுக்கு அந்த அளவிற்கு அறிவு கிடையாது.
மனப்பாடம் செய்து ஒப்பிப்பது மட்டுமே பிராமண இனத்திற்குத் தெரியும்.
16 February 2012 7:22 AM***
கொஞ்ச நாள் முன்னாலவரை, அமெரிக்காவில் ஒரு கருப்பர், ப்ரசிடெண்ட் ஆவது அசாத்தியம்னு அடிச்சுப் பேசிக்கொண்டு இருந்தார்கள். ஆனால் இன்னைக்கு?
காலம் மாறிக்கொண்டு வருகிறது, ராவணன். :)
"உயர்சாதி"யில் பிறந்து வேஷித்தனம் செய்து பொழைப்பு நடத்துறவங்ககூட தங்கள் சாதிப் பெருமையில்தான் வாழ்றாங்கபோல. சாண்ஸ் கெடைக்கும்போது இதுபோல் ஆட்கள்கூட சாதிப் பெருமைதான் பேசிக்க்கிறாங்க.
****அமர பாரதி said...
வருன்,
டோன்டு விதி விலக்குகளை மட்டுமே விதியாக்க நினைப்பவர். இந்த ஜென்மத்தில் கடவுள் அவரை உயர்ந்த சாதியில் படைத்து விட்டதற்காக கடவுளுக்கு அவர் நன்றி சொல்லட்டும். இவர் தன் முயற்சியில் உயர் சாதியில் பிறந்திருந்தால் அவர் சொல்வதற்கு ஒரு மதிப்பு இருக்கும். அது இல்லாத போது சாதியைப் பற்றி அவர் பேசும் அனைத்து குப்பைகளையும் புறக்கணிப்பதே சரி.***
காலங்காலமாக, செய்துவரும் ஒருமுட்டாள்த்தனத்தை, மக்களிடம் இருந்து அவ்வளவு எளிதாக ஒழிக்க முடியவில்லை என்பதால், அந்த முட்டாள்த்தனத்தை "சரி" என்றும், "அதை ஒழிக்க முயல்வது இயற்கைக்கு புறம்பானது" என்கிற வாதமெல்லாம் மூளைவளர்ச்சியடையாதவங்க செய்றதுங்க.
இவர்களை முழுவதுமாக புறக்கணிப்பதில் உள்ள அபாயம் என்னனா, "தான் சொன்னது சரி என்பதால்தான் எவனும் எதுவும் சொல்லவில்லை" னு இவர்கள் நினைத்துக்கொண்டு முட்டாளாகவே தொடர்ந்து வாழ்ந்து கொண்டு இருப்பதுடன், இன்னும் நாலு முட்டாள்களை இவர்களைப் போல் உருவாக்கி, வருங்காலத்தையும் குட்டிச்சுவர் பண்ணிவிடுவார்கள்.
அதனால் இவர்களை முழுவதும் புறக்கணிப்பதும் நம் தவறுதான், அமர பாரதி. :)
சாதி என்பதை ஒழிக்க முடியாததற்க்கு ஒரே காரணம்தான் தாழ்ந்தவனோ உயர்ந்தவனோ சாதியை ஒழிக்க விரும்புவதில்லை தன் சாதி பெரிதாக கருதவேண்டுமென நினைப்பதுதான்.இதில ஒன்னுமே இல்லையென்றாலும் வீரமா தலைப்புவைத்துக்கொண்டு திரிவது.தமிழன் என்று தம்பட்டம் அடிக்கு தருதலைகள் சாதி என்று வந்தவுடன் கூடாது என்று என்று ஏன் சொல்கிறீகள் உங்களுக்கு பாதகமாக இருப்பதாலா.நீ எங்கே தமிழனென்ரு இனம் பிரிக்கிறாயோ அங்கே சாதி என்று இனம்பிரியும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.சாதி என்பது நேற்று முளைத்து இன்று வந்ததல்ல ஒரு சமுகத்தின் பல நூறு வருடங்கள் தொன்று தொட்டுவந்த கலாசாரம் அது எல்லா சாதிக்கும் உண்டு அந்த ஒட்டு மொத்த கலாசாரத்தின் சின்னம்தான் தமிழன் இங்கு சாதி இல்லையேல் தமிழனுக்கென்று கலாசாரம் இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு இனமும் உயர்வாக தாழ்வாக கருதபட்டுக்கொண்டிருகிறது என்பது தான் உண்மை உன் சமுகத்தை இந்த உலகம் இழிவாக எண்ணுகிறது என்றாள் அவர்கள் மும் உன் சமுகத்தை உயத்த முயற்சி செய். சாதி என்பது தேவை அப்பொழுதே பாரப்பரியம் காக்கபடும் ஆனால் மற்ற இனத்தவரை எண்ணுவதை மாற்ற் நினைப்போம்
சாதி என்பதை ஒழிக்க முடியாததற்க்கு ஒரே காரணம்தான் தாழ்ந்தவனோ உயர்ந்தவனோ சாதியை ஒழிக்க விரும்புவதில்லை தன் சாதி பெரிதாக கருதவேண்டுமென நினைப்பதுதான்.இதில ஒன்னுமே இல்லையென்றாலும் வீரமா தலைப்புவைத்துக்கொண்டு திரிவது.தமிழன் என்று தம்பட்டம் அடிக்கு தருதலைகள் சாதி என்று வந்தவுடன் கூடாது என்று என்று ஏன் சொல்கிறீகள் உங்களுக்கு பாதகமாக இருப்பதாலா.நீ எங்கே தமிழனென்ரு இனம் பிரிக்கிறாயோ அங்கே சாதி என்று இனம்பிரியும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.சாதி என்பது நேற்று முளைத்து இன்று வந்ததல்ல ஒரு சமுகத்தின் பல நூறு வருடங்கள் தொன்று தொட்டுவந்த கலாசாரம் அது எல்லா சாதிக்கும் உண்டு அந்த ஒட்டு மொத்த கலாசாரத்தின் சின்னம்தான் தமிழன் இங்கு சாதி இல்லையேல் தமிழனுக்கென்று கலாசாரம் இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு இனமும் உயர்வாக தாழ்வாக கருதபட்டுக்கொண்டிருகிறது என்பது தான் உண்மை உன் சமுகத்தை இந்த உலகம் இழிவாக எண்ணுகிறது என்றாள் அவர்கள் மும் உன் சமுகத்தை உயத்த முயற்சி செய். சாதி என்பது தேவை அப்பொழுதே பாரப்பரியம் காக்கபடும் ஆனால் மற்ற இனத்தவரை இழிவாக எண்ணுவதை மாற்ற நினைப்போம்
***சோழன் said...
சாதி என்பதை ஒழிக்க முடியாததற்க்கு ஒரே காரணம்தான் தாழ்ந்தவனோ உயர்ந்தவனோ சாதியை ஒழிக்க விரும்புவதில்லை தன் சாதி பெரிதாக கருதவேண்டுமென நினைப்பதுதான்.***
தன் சாதியை பெருசா நெனைக்கிறது ரெண்டு வகையான முட்டாள்கள்..
ஒண்ணு பார்ப்பான்கள், இவனுக ஏதோ உலக்த்திலேயே அறிவாளிகள்னு நெனைப்பதுடன், என்னவோ மாமிசம் சாப்பிடுவதால் அறிவு மங்கிவிடும்னு நெனைத்துக்கொண்டு வாழும் அடி முட்டாப் பசங்க!
இவன் ஓட்டுற காரு மாமிசம் திங்கிறவன் அறிவால் உருவானது. இவன் யூஸ் பண்ணுற கம்ப்யூட்டரும் அப்படித்தான். உலக அளவில் பார்க்கும்போது இந்தியாவில் இவனுக அறிவை வச்சு ஒரு மயிரையும் புடுங்கவில்லை. இனிமேலும் புடுங்கப்போவதில்லை. ஆனால் எதோ தாந்தான் "அறிவாளி"னு நெனச்சுக்கிட்டு எதையோ ஒளறிக்கிட்டு திரிகிறானுக. :)
இன்னும் ஒண்ணு.. இந்த வீரம்னு சொல்லிக்கிட்டுத் திரிகிற திராவிட பொறம்போக்கு சாதிகள். எல்லா எடத்திலேயும் இவனுகதான் வீரம் து இதுனு பேசுவானுக. அறிவும் கெடையாது, வெட்டி சவடால் பேசிக்கிட்டு எல்லா அயோக்கியத்தனமும் பண்ணிக்கிட்டு தாந்தான் பெரிய புடுங்கினு ஒளறிக்கிட்டு திரிகிறவனுக. இந்த ரெண்டு முட்டாள்களும் திருந்தவே மாட்டானுக என்பதால் சாதி இருக்கத்தான் செய்யும். ஆனால் இதெல்லாம் அவனுக மனதளவில் ஆக ரொம்ப நாட்கள் இல்லை. பதிவுலகிலேயே சாதிக்கு கொடு பிடிக்க யாருமே தயாரா இல்லை. ஒரு சில மூளைவளர்ச்சியில்லா பார்ப்பனர்கள் தவிர. இதுவே ஜாதியை ஒழிக்க நாம் செய்துள்ள மிகப்பெரிய முன்னேற்றம்தான். இந்த முன்னேற்றம் வளரத்தான் போகுது.
இன்று சாதிப்பெயரை தன் பெயரோடு இணைத்துக் கொள்ள யாரும் விரும்புவதில்லை. இந்தியாவில் தமிழகத்தில் மட்டும்தான் இந்த நிலை என்று நினைக்கிறேன். இதுவே ஒரு முன்னேற்றம்தான்.
Post a Comment