Monday, May 14, 2012

கவிஞரே! ஏன் இந்த வீண் வம்பு?

சொல்லவந்த ஒரு விசயத்தை
தெளிவாக சொல்வதை தவிர்த்து
கவிதை வடிவாக்க வேண்டுமென்பதால்
மடக்கி மடக்கி எழுதி
பத்தி பத்தியாக எழுதி
அர்த்தமற்ற கற்பனையை
வலுக்கட்டாயமாகக் கலந்து
தேவையேயில்லா வர்ணனையை
அங்கங்கே அதில் பூசி மொழுகி
பிறரையும் குழப்பி தானும்
குழம்புவதுதான் கவிதையா?

16 comments:

  1. ஹா... ஹா....

    கேட்க வந்த கேள்வியையும் மடக்கி மடக்கி எழுதி கவிதை ஆக்கிட்டிங்களே நண்பா.

    ReplyDelete
  2. என்னய்யா என்னாச்சு இப்பிடி மடக்குறீங்க....

    ReplyDelete
  3. வாங்க குமார் & மனோ அவர்களே!!!

    ஆமா, இப்படி சொன்னதாலே, கவிஞர்கள் எல்லாம் ரொம்ப கோபமா இருப்பாங்க என் மேலே! என்ன பண்ணுறது?

    அவங்களுக்கு என் அறிவுரை என்னனா,
    "கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை"னு நெனச்சுக்கிட்டு அலட்டிக்காமப் போயிடுங்க! என்பதே! :)

    ReplyDelete
  4. எழுப்பியுள்ள கேள்வியும்
    சொல்லிச் சென்றவிதமும் அருமை
    மனம் கவர்ந்த கவிதை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. ***Ramani said...

    எழுப்பியுள்ள கேள்வியும்
    சொல்லிச் சென்றவிதமும் அருமை
    மனம் கவர்ந்த கவிதை
    தொடர வாழ்த்துக்கள்

    15 May 2012 6:30 PM**

    உண்மையிலேயே இந்த "கவிதையை"யும் வாழ்த்த ரொம்ப பெரிய மனசு வேண்டும்! உங்ககிட்ட அது இருக்கு! நன்றிங்க, ரமணி!

    ReplyDelete
  6. வாங்க நிலா!

    என்னை கவிதை எழுதத்தெரியாத ஞானசூனியங்கள் எல்லாம் இப்படித்தான் சொல்லுவோமாக்கும்! :)))

    ReplyDelete
  7. நீங்க என்னை மாதிரி ஆளுங்களைத்தான் சொல்றிங்கன்னு புரிஞ்சுது... அதன்... எதுவும் சொல்லாம ஒரு ஸ்மைலி மட்டும்

    ReplyDelete
  8. ***வருண் said...

    வாங்க நிலா!

    என்னை கவிதை எழுதத்தெரியாத ஞானசூனியங்கள் எல்லாம் இப்படித்தான் சொல்லுவோமாக்கும்! :)))**

    Actually, it should read as,

    என்னைப்போல் கவிதை எழுதத்தெரியாத ஞானசூனியங்கள் எல்லாம் இப்படித்தான் சொல்லுவோமாக்கும்! :)))**

    ReplyDelete
  9. ***nila(a)Charu said...

    நீங்க என்னை மாதிரி ஆளுங்களைத்தான் சொல்றிங்கன்னு புரிஞ்சுது... அதன்... எதுவும் சொல்லாம ஒரு ஸ்மைலி மட்டும்***

    உங்கள மாரி சீரியஸா கவிதை எழுதவங்களை எல்லாம் நான் சொல்லவில்லைங்க. ஒரு சிலருடைய ஏனோ தானோ" கவிதைகள் வாசிக்கும்போது இப்படி தோணியதென்னவோ உண்மைதான். அது யாரு கவிதை, எந்தக் கவிதைனு மட்டும் தயவு செய்து கேக்காதீங்க. நன்றி :)

    ReplyDelete
  10. மறுபடியும் கொஞ்சம் கிறுக்கியிருக்கேன்.. நேரமிருந்தால் வந்து வாசியுங்கள்...

    ReplyDelete
  11. அட... இங்கேயும் ஒரு கவிஞர்!!

    ReplyDelete
  12. ***nila said...
    மறுபடியும் கொஞ்சம் கிறுக்கியிருக்கேன்.. நேரமிருந்தால் வந்து வாசியுங்கள்...

    19 May 2012 1:02 AM***

    I will check it out, nila!:)

    ReplyDelete
  13. ***பழமைபேசி said...
    அட... இங்கேயும் ஒரு கவிஞர்!!

    19 May 2012 9:18 AM***

    :-)))

    ReplyDelete
  14. ஹி!ஹி!ஹி! ரொம்பத்தான் புகழுறீங்க:)

    ReplyDelete
  15. உரைநடையை மடக்கி மடக்கி எழுதி அதையும் கவிதை என்கிறார்கள் ஒரு சிலர் உங்களைப் போல....)))

    ReplyDelete
  16. அய்யா வணக்கம்.
    நான் மரபுக் கவிதையை வம்பிற்கு இழுத்தேன் என்றால் நீங்கள் இங்கு புதுக்கவிதையை வம்பிழுத்திருக்கிறீர்கள்!
    “முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டுமோ..:))
    நன்றி

    ReplyDelete