Tuesday, July 31, 2012

தமிழ் ஓவியாவைப் பாராட்டனும்!

தமிழ் ஓவியா அவர்கள், முழுநேரமும், பெரியார் புகழ்ச்சி, பார்ப்பனர் இகழ்ச்சி என்று எழுதுவதால், இவர் வலைதளத்தில் "வெரைட்டி" இல்லைனோ என்னவோ நான் ரொம்பப் போயி வாசிப்பதில்லை! பார்ப்பனர்கள் எல்லாமே இவருக்கு ரொம்ப நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்காங்க. இவரு அவங்கள விடாது திட்டுவதால, அவங்க மேலே ஒரு பரிதாபம் உருவாகி, அவங்களுக்கு திராவிடர்களிடம் இருந்து நெறையவே ஆதரவு திரட்டி தருபவர் நம்ம தமிழ் ஓவியாதான்! மேலும் இவரு யாரு? ஆணா, பெண்ணா? சின்னப்பையனா பெரிய ஆளா? என்னனு எனக்கு இவர்பற்றி ஒண்ணுமே தெரியாது. இவருக்கென்று பல ரசிகர்கள், விசிறிகளும் இருக்கத்தான் செய்றாங்க.

பொதுவாக ஒரு பதிவராகத்தான் வலைதளத்தில் எழுதுறவங்கள எல்லாமே நான்  பார்ப்பது வழக்கம். பர்சனலாக எனக்கு யாரையுமே தெரியாது.  பதிவுலகில் ஒருவர் நடந்துகொள்கிற விதம், அவங்க பதிவு, அவங்க பின்னூட்டம், மற்றும் அதில் தெரிகிற  அவங்களுடைய கொள்கைகள், அவங்க நேர்மை போன்றவைகளை வைத்துத்தான் தனக்கென்று ஒருவர் தன் பதிவுலக மரியாதையை சம்பாரிக்கிறார்னு நான் சொல்லுவேன்.

சமீபத்தில்தான் நம்ம டோண்டு ராகவர், 1945லயே பிறந்தவர்னு என் அறிவுக்கு எட்டியது!!! அவரு புகைப்படத்தைப் பார்த்துப்புட்டு அவரு ஒரு 45-55 ரேஞ்சிலே இருப்பாருனுதான் நான் நெனச்சேன். இப்போ  அவரே திரும்பத் திரும்ப அவர் தளத்தில் அவர் வயதைச் சொன்னதால அவர் வயதில் ரொம்ப  முதியவர்னு நான் கற்றுக்கொண்டேன். ஒரு முறை ஏதோ ஒரு விவாதத்தில் செந்தழல் ரவி வந்து (வழக்கம்போல எரிச்சலுடன்) "அவர் வயதுக்கு மரியாதை கொடுய்யா" னு ஏதோ சொன்னதாக ஞாபகம் வருது. என்னைப் பொறுத்தவரையில் நம்முடைய விவாத வார்த்தை ஜாலங்கள், கருத்துக்கள்தான் நம்மளா நமக்கு நாம் வரையறுத்துக் கொள்ளும்/சம்பாரித்துக்கொள்ளும் மரியாதை. நமக்கு பதிவுலகில் மரியாதை கொடுக்கலனு யாரையும் குறை சொல்வதைவிட, (அப்படி மரியாதை எதிர்பார்த்தால்) நம்மைத்தான் நாம் குறைசொல்லிக்கனும்.  மேலும் அனுபவசாலிகள், பெரியவர்கள்,  நேற்றுவந்த சாதாரண கத்துக்குட்டிகள் கத்துறதையெல்லாம்  கண்டுக்கக்கூடாது! ஏன், கண்டுக்கிட்டு ஒப்பாரி வைத்தால் அதைவிட அசிங்கமாயிருக்குமா?னு வீம்பெல்லாம் பேசாதீங்க! எனிவே, பதிவுலகில் சிறு வயதினர்கள் மரியாதையாக நடத்தப்படுவதும், மிகப் பெரியவர்கள் மரியாதைக் குறைவாக நடத்தப்படுவதும், அவங்க அவங்க தன் நடத்தை மற்றும் கொள்கையால்  சம்பாரித்துக் கொள்வது என்றுதான் நான் சொல்லுவேன்.

சரி, தமிழ் ஓவியாவை எதுக்குப் பாராட்டனும்?

சமீபத்தில் இவர் தளத்தில் இவர் பதிவுக்கு இவரே சாதாரணமாகப் பின்னூட்டங்கள் போட்டுக்கிறாரு!!! எவனும் நான் எழுதுறதை  படிக்க மாட்டேன்கிறான், படிச்சாலும் பின்னூட்டமிட மாட்டேன்கிறான் என்றெல்லாம் அதைப்பத்தி கவலைப்படாமல்,  நானே என் பதிவுக்குப் பின்னூட்டம் போட்டுக்கிறேன்னு இறங்கிட்டாரு மனுஷன். மொதல்ல நான் இதை கவனிச்சபோது, "ஏன் இப்படி காமெடி செய்றாரு?"னுதான் நெனச்சேன். அப்புறம் இன்னொரு கோணத்தில் இதைப் பார்க்கும்போது, யாரோ ஒருவராக "பொய்வேடம்" அணிந்து வந்து ஊரை ஏமாற்றி ஒரு அனானியாக வேறொருவராகப்  தன்  பதிவுக்குப் பின்னூட்டம் போடுறதைவிட இப்படி தமிழ் ஓவியாவாகவே வந்து பின்னூட்டம் போடுவது, நேர்மையானது, மேலும்  பாராட்டுக்குரியதுனு தோணுச்சு. அதான் அவரைப் பாராட்டுறேன்! :)

21 comments:

  1. ஐயா,

    சொல்ல மறந்த விஷயத்தை -விடுபட்ட தகவல்களை தர கமெண்ட் ஃபார்மை உபயோகிச்சுக்கிட்டா தப்பென்ன?

    மேலும் இவரது எழுத்துக்கள் பிராமணர்கள் மேல் அனுதாபத்தை ஏற்படுத்தும் என்பது ஏற்கத்தக்கதல்ல.

    அலார்ட் பண்ணுதுங்கோ.

    இவர் தளத்தை ஆளில்லாத டீக்கடைன்னு நினைச்சுராதிங்க..
    அலெக்ஸால 95,299 ஆவது ரேங்குல இருக்காய்ங்க.

    ReplyDelete
  2. தமிழ் ஓவியா பெண்தான்.... ஊரு திண்டுக்கல்.

    ReplyDelete
  3. வாங்க முருகேசன்! உங்களைப் பார்த்து ரொம்ப நாளாச்சு சார்.

    ***ஐயா,

    சொல்ல மறந்த விஷயத்தை -விடுபட்ட தகவல்களை தர கமெண்ட் ஃபார்மை உபயோகிச்சுக்கிட்டா தப்பென்ன?***

    நான் அதை தப்புனெல்லாம் சொல்லலைங்க. புதுமையா இருக்குனுதான் சொல்ல வந்தேன்.

    ***மேலும் இவரது எழுத்துக்கள் பிராமணர்கள் மேல் அனுதாபத்தை ஏற்படுத்தும் என்பது ஏற்கத்தக்கதல்ல.***

    அளவுக்குமீறினால் அமிர்தமும் நஞ்சு சார். இது பழமொழி! அதாவது அதேபோல் நஞ்சும் அமிர்தமாகிவிடும்!

    ReplyDelete
  4. ***

    இவர் தளத்தை ஆளில்லாத டீக்கடைன்னு நினைச்சுராதிங்க..
    அலெக்ஸால 95,299 ஆவது ரேங்குல இருக்காய்ங்க.***

    ஐயோ நான் அப்படியெல்லாம் சொல்ல-லேது சார்! :)

    ReplyDelete
  5. ***ராவணன் said...

    தமிழ் ஓவியா பெண்தான்.... ஊரு திண்டுக்கல்.***

    நான் நம்பிட்டேன் என்பதை நீங்க நம்பனுமே, ராவணன்?! :)))

    ReplyDelete
  6. ///ராவணன் said...

    நீ பொம்பளையா ஆம்பளையா என்று தெரியாது.

    1996-ல் இருந்து இந்திய அரசில் பங்குகொண்ட கருணாநிதி என்ற ஆளிடம் உன் கேள்விகளைக் கேள்.

    இல்லையென்றால் ஜெயலலிதாவிற்கு சமூக நீதி காத்த வீராங்கணை என்று பட்டம் கொடுத்த வீரமணி என்ற வீரனிடம் கேள்.

    சும்மா காற்றுடன் பேசாதே?
    July 28, 2012 6:58 PM ***

    -------------

    முருகேசன் சார், அது அளவுக்கு மிஞ்சினால்னு வரனும்.. சாரி :)

    ReplyDelete
  7. \\ஒரு அனானியாக வேறொருவராகப் தன் பதிவுக்குப் பின்னூட்டம் போடுறதைவிட இப்படி தமிழ் ஓவியாவாகவே வந்து பின்னூட்டம் போடுவது, நேர்மையானது, \\ அந்த ஒவ்வொரு பின்னூடமும் ஒரு பதிவு மாதிரி இருக்கு. ஆளில்லாத டீக்கடை, அறை லிட்டர், ஒரு லிட்டர் டீயை அவரே ஆத்தி ஆத்தி குடிக்கிறரார்ப்போல!!

    ReplyDelete
  8. ஆமா, ஜெயவேல், பின்னூட்டங்கள் ஒண்ணொண்ணும் ஒரு பதிவாப் போடலாம்தான்..:)

    இவரை, இஷ்டத்துக்கு திட்டி ஏகப்பட்ட பின்னூட்டங்கள் வரத்தான் செய்யும்னு நெனைக்கிறேன். மாடெரேஷன் செய்து வெளியிட மாட்டேன்கிறாரோ என்னவோ! :)

    ReplyDelete
  9. \\மாடெரேஷன் செய்து வெளியிட மாட்டேன்கிறாரோ என்னவோ! :) \\ அதான் இல்ல மாடரே ஷன் இருக்கு ஆனால் எதையும் மறுப்பதில்லை. ஆளேயில்லாத கடைக்கு எது வந்தாலும் அவங்களுக்கு சந்தோஷம்தான், தாராளமா வெளியிடுவாங்க. அப்படியும் சனம் வரமாட்டேங்குது. ............

    ReplyDelete
  10. தமிழ் ஓவியா தளத்தில் சிலதைப் படிக்கிறேன்; எனக்கு தெரியாத விஷயங்களைப் பற்றி அறிந்து கொள்ள.

    நீங்கள் சொன்னதிற்கு அப்புறம் தன் நான் பார்த்தேன். அவரது தமிழ் மண ரேங்க் 49. தமிழ் மணத்தல் அவர் எல்லாப் பதிவையும் விரும்பிப் படிப்பவர்கள் ஏராளமாக இருக்க வேண்டும். இல்லை என்றால் 49 rank வரவே முடியாது!

    இந்து மதம் பிராமணர்கள் - எதிராக பின்னூட்டமிட மக்கள் தயங்கலாம். அசிங்கம் என்றும் நினைக்கலாம். பின்னூட்டமிட ஆசை இருந்தாலும் அப்படி செய்தால் நமது சமூகத்தில் மரியாதை இருக்காது என்ற பயமும் இருக்கலாம். சாமி கும்பிடுகிரவன் தான் நல்லவன் என்று அபிப்ராயம் இருப்பதால், யாரும் அதை வெளியில் எதிர்க்க மாட்டார்கள்; அப்படி சாமி கிட்டே நேரடியாக் ரெகமண்டேஷன் பண்ற பிராமணர்களை-உயர்ந்த ஜாதியை- எதற்கு எதிர்க்க வேண்டும் என்றும் இருக்கலாம்.

    நம்பினால் நம்புங்கள்; தமிழ் நாட்டில் அதுவும் 90 விழுக்காடு மக்கள் நம்புவது சொல்வது;

    "அவுக உயர்ந்த சாதி! உயர்ந்த சாதி சனம்."

    இந்த மூட நம்பிக்கையில் இருந்து மக்களை வெளிக் கொண்டுவர அவர் உழைக்கிறார்.

    அவருக்கு, பின்னூட்டமும் வந்தால் அவர் தமிழ் மணத்தில் முதல் 10 ரேங்கில் இடுப்பார் என்பது என் கருத்து.

    ReplyDelete
  11. ***Jayadev Das said...

    \\மாடெரேஷன் செய்து வெளியிட மாட்டேன்கிறாரோ என்னவோ! :) \\ அதான் இல்ல மாடரே ஷன் இருக்கு ஆனால் எதையும் மறுப்பதில்லை. ஆளேயில்லாத கடைக்கு எது வந்தாலும் அவங்களுக்கு சந்தோஷம்தான், தாராளமா வெளியிடுவாங்க. அப்படியும் சனம் வரமாட்டேங்குது. ............

    31 July 2012 10:27 AM***

    அவரு இதைத்தான் சொல்லுவாரு, இப்படித்தான் நினைப்பாரு, இதுதான் இவரு கருத்துனு எல்லாருக்கும் தெரியும். அப்புறம் விவாதத்திற்கு இடமேது? ஒண்ணு ஆமா னு சொல்லலாம், இல்லைனா இல்லைனு சொல்லலாம். சொல்லி என்ன ஆகப்போதுனு யாரும் எதுவும் சொல்றதில்லையோ?

    ReplyDelete
  12. ***நம்பினால் நம்புங்கள்; தமிழ் நாட்டில் அதுவும் 90 விழுக்காடு மக்கள் நம்புவது சொல்வது;

    "அவுக உயர்ந்த சாதி! உயர்ந்த சாதி சனம்." ***

    இன்னும் இப்படியே இருக்கவங்கள (90%) இவரு பதிவெவெழுதி திருத்தனும் நெனைப்பது இவருடைய மிகப்பெரிய தப்பு!

    ReplyDelete
  13. வஞ்சி புகழ்ச்சி அணி :))




    நன்றி,
    http://www.ezedcal. com (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம். பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  14. வருண்!நீங்க உருப்படியா செய்த ஒரே விசயம் சக பதிவராக தமிழ் ஓவியாவை பாரட்டியது.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. வருண், இதுவரைக்கும் நீங்க உருப்படியா லைப்ல எதுவுமே செய்யலேன்னு கேள்விபட்டேன், அப்படியா.....? அடப் பாவமே.........

    ReplyDelete
  16. ***ராஜ நடராஜன் said...

    வருண்!நீங்க உருப்படியா செய்த ஒரே விசயம் சக பதிவராக தமிழ் ஓவியாவை பாரட்டியது.

    வாழ்த்துக்கள்.

    1 August 2012 1:40 AM

    ---------------------
    Blogger Jayadev Das said...

    வருண், இதுவரைக்கும் நீங்க உருப்படியா லைப்ல எதுவுமே செய்யலேன்னு கேள்விபட்டேன், அப்படியா.....? அடப் பாவமே.........

    1 August 2012 1:57 AM

    ------------------

    ஜெயவேல்!

    நடராஜனுக்கும் கருத்துச் சுதந்திரம் இருக்குங்க. அவர் கருத்தை சொல்றாரு.. :) ஆனால் இந்த நிமிடம் வரை எந்த ஒரு விசயத்திலேயும் எனக்கும் அவருக்கும் கருத்து ஒற்றுமை இருந்ததில்லை! :)

    ReplyDelete
  17. வருண்,

    ரிலாக்ஸ் பிளீஸ்...

    தமிழ் ஓவியாவுடனும், உங்களுடனும் என்னால் ஒரே மாதிரியாக பேச முடியுமா?

    இன்னும் சரியாகச் சொன்னால் தமிழ் ஓவியாவில் பெண்ணும் இருக்கின்றார். அவரே பதிவு செய்த செய்தி இது.

    ReplyDelete
  18. ***ராவணன் said...

    வருண்,

    ரிலாக்ஸ் பிளீஸ்...

    தமிழ் ஓவியாவுடனும், உங்களுடனும் என்னால் ஒரே மாதிரியாக பேச முடியுமா?

    இன்னும் சரியாகச் சொன்னால் தமிழ் ஓவியாவில் பெண்ணும் இருக்கின்றார். அவரே பதிவு செய்த செய்தி இது.
    1 August 2012 7:43 AM ***

    நீங்க "தமிழ் ஓவியா" மேல் ஆராச்சி செய்து கொடுக்கிற "ரிப்போர்ட்", என்னை உங்களை ஆராச்சி செய்யத் தூண்டுது. இது மாரி செய்கிற ஒரு ஆராச்சி பெரிய "தொத்து வியாதி"! எனக்கு ஒட்டி விட்டது நீங்கதான், ராவணன்!!! :)

    ReplyDelete
  19. வருண் சார் !
    காலம் மாறிப்போச்சு -இன்னம் என்ன சாதி - பாவம் அவாள் அவா காரியத்தை பார்க்கிறா-எதுக்கு அவாளை போட்டு கிளிக்கிறதுன்னு நினைக்கிற சனம் இன்னம் இருக்கு.

    ஆன் லைன்ல படிக்கிறவுகளை ப்ரவுசர்ஸ்னு தான் சொல்றோம்.

    அதாவது ச்சொம்மா மேயறது.ஸ்க்ரால் பண்ணிக்கிட்டே போறது.

    இந்த நிலையில சொல்ல வந்ததை திருப்பி திருப்பி - இன்னம் சொல்லப்போனா ஹார்ஷா சொல்ல வேண்டியதா இருக்கு.

    இதைத்தான் தமிழ் ஓவியா செய்றாய்ங்க.

    ReplyDelete
  20. முருகேசன் சார்!

    எனக்கு ஒண்ணுமட்டும் புரியலை. நீங்க ஜோதிட நம்பிக்கை உள்ளவர். அப்படியிருக்கும்போது நீங்க எப்படி தமிழ் ஒவியாவுக்கு "ஆதரவு நிலை" ல இருக்கீங்க???

    இந்த மரமண்டைக்கும் (நாந்தேன்) புரியிறாப்பிலே கொஞ்சம் விளக்கம் தர முடியுமா? நன்றி :)))

    ReplyDelete
  21. ஒரு தனி மனிதனாகத் தன் வேலை,குடும்பம் இதையும் பார்த்துக் கொண்டுப் பெரியார் கொள்கைகளைப் பரப்பும் தமிழ் ஓவியா சிறந்த பண் பாடுள்ள உண்மையானத் தமிழர்.நேரில் பழகுவத்ற்கு இனிமையான்வர்,அமைதியானவர்.

    இவ்வளவு எழுதியும் இன்னும் "படித்த" "பட்டம் பெற்ற"த் தமிழர்கள் மூட நம்பிக்கையிலும், புரியாத மந்திஅரத்தை ஓதும் கடவுளின் "மாமா"க்களிடம் பயந்து,மயங்கி இருப்பதைப் பார்த்தால் விவேக் சொன்ன 'இன்னும் நூறு பெரியார் வந்தால் கூட உங்களைத் திருத்த முடியாதுட்டா' தான் இணையத்திலும் தெரிகிறது.
    இன்னும் நூறு தமிழ் ஓவொயாக்கள் இணையத்திற்குத் துணிந்து வரட்டும். ஆம்! அது வரைத் தமிழ் ஓவியா அய்யாவைப் பாராட்டுவோம், சிலக் கூழக்கும்பிடு பார்ப்பனர்கள் பல பெயரிலே வந்து செய்யும் அநியாயங்களுக்குப் பதில் கொடுப்போம்.

    ReplyDelete