Thursday, February 28, 2013

சீனா சூப்பர் பவராவதற்கு விலை?! புற்றுநோய்!

 இன்னைக்கு சீனா அமெரிக்காவையே மிரட்டும் அளவுக்கு ஒரு சூப்பர் பவராகிவிட்டது என்கிற ஒரு பெரிய விசயம்தான் சூப்பர் பவராகத் துடிக்கும் இந்தியாவுக்குத் தெரியும். சைனாவுடைய வெற்றிக்குக் காரணம் இண்டஸ்ட்ரியல் ரெவலூஷன் (Industrial revolution). எல்லாப் பொருள்களும் சைனாவில் தயாரிக்கப் படுகிறது. இதனால் பயங்கர வருவாய், வேலை வாய்ப்பு இத்யாதி இத்யாதி. ஆனால், அதற்கு ஒரு விலை இருக்கிறது. எல்லா தொழிற்சாலைகளில் வரும் வேதிக்கழிவுகளால் தண்ணீர் மற்றும் சுவாசிக்கும் காற்றும் சுத்தமில்லாமல் ஆகிவிட்டது. இதனால் பலருக்கும் நுரையீரல் புற்றுநோய் மற்றும் ஈரல் புற்றுநோய் என்று பல ஆயிரம் மக்கள் பாதிக்கப் படுறாங்க என்பதை சைனா உணர ஆரம்பித்துவிட்டது. சூப்பர் பவராவதற்கு விலை, சுகாதாரக் கெடுதி மற்றும் புற்றுநோய்! இதுக்குத்தான் நம்மளும் ஆசைப் பட்டுக்கொண்டிருக்கிறோம்.

Something about SKIN CANCER...

 "தோல் புற்றுநோய் என்பது வெள்ளைக்காரர்களுக்கு மட்டும்தான் வரும்! ஏன் என்றால் அவர்கள் தோலில் மெலனின் என்கிற பிக்மெண்ட் கெடையாது" என்பது உண்மை போல இருக்கும். ஆனால் கருப்புதோல் உள்ள கருப்பர்களுக்கும், ப்ரவுன் தோல் உள்ள நமக்கும் தோல் புற்றுநோய் வரலாம். வருகிறது என்பதுதான் உண்மை. 

புற்று நோயிலேயே மோசமான ஒண்ணு இது. தோலில் ஆரம்பிச்சு உடலில் எந்த முக்கிய உள்ளுறுப்புக்கும்க்கும் பரவலாம் (lungs and liver). மேலும் கருப்பு நிறத்தில் உள்ளவங்க நமக்கெல்லாம் தோல் புற்றுநோய் வராதுனு அசட்டையாக இருப்பதால்,தோல் புற்றுநோய் முற்றியபிறகுதான் அதை கவனிக்கிறார்கள். மருத்துவரை அனுகும்போது அது ஸ்டேஜ் 3 or more போல காலம் கடந்துவிடுகிறது. :-(

21 comments:

  1. நல்ல தகவல்தான்.முறையான கட்டமைப்பு இல்லாமல் ஏற்படுத்தப்படும் தொழில் வளர்ச்சி இந்தியா போன்ற நாடுகளுக்கு ஆபத்தானது.
    எப்போதும் விரிவாக எழுதும் நீங்கள் இந்த விஷயத்தை இன்னும் சற்று விரிவாக எழுதி இருக்கலாமே!

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. ரொமப் "நீளமா பதிவெழுதுற" திறமை என்னிடம்கம்மி, முரளி. மேலும் நேரமின்மையும் காரணம். So, I kind of like to give the "bottom line" of these issues! பதிவு நீளமோ இல்லையோ தவறான செய்தியை மட்டும் கொடுக்கக்கூடாதுனு ரொம்ப கவனமாக இருப்பேன்..

    இது (China)பற்றி சைனீஸ் கலீக் சொன்னார். பெரிய நகரங்களில் பொல்லுஷன் அதிகமாக இருப்பதாகவும், வேதிக்கழிவுகள், ஆறு, நதி, குளங்களில் கலந்து விடுகிறது என்றும்..குடிநீர் சுத்தமாக இல்லை. மற்றும் சுத்தமான காற்றுக் கெடையாது என்றும்..

    தோல் புற்று நோய் பற்றியும் எனக்குத் தெரிந்தவர்கள் ஒரு சிலருக்கு வந்ததால் பெற்ற கேள்வி ஞானம்தான்.

    மற்றபடி என்னால் லவ் ஸ்டோரி எல்லாம் ரசித்து ரசித்து நீளமாக எழுதமுடியும், :-) புற்று நோய் போல் சோகமான விசயங்களை என்னால் "ரசித்து" நீளமாக எழுத முடிவதில்லை என்பது இன்னொரு உண்மை. :(

    ReplyDelete
  4. சில இனங்களை சில வகையான கான்சர்கள் குறைவாக தாக்கும்...Other than that..It is an Equal Opportunity Killer...

    Thanks for spreading the word Varun...

    ReplyDelete
  5. விவசாயம், நெசவு, உலோக & மட்பாண்ட தொழில் தவிர ஏனைய அனைத்தும் இயற்கைக்கு எதிரானவையே, இங்கு அனைவருக்கும் ஆபத்து இருப்பது தெரியும்....
    ஓட்ட பந்தயத்தில் போட்டி போடுவது போல் தற்கொலைக்கும் போட்டி நடக்கிறது?
    அனைத்தும் முதலில் இருந்து அமிபாவில் இருந்து ஆரம்பிக்கும் நாள் விரைவில் வரும்...
    எழுதுவதற்கான நேரம் அனைவருக்கும் குறைகிறது என்பது வருத்தமளித்தாலும் யாரும் படிப்பதை குறைத்து கொள்வதில்லை என்பது மகிழ்ச்சியான ஒன்று

    ReplyDelete
  6. ஒரு காலத்தில் சீனா இந்தியாவை மிஞ்சிவிட்டதேயென கவலைப்பட்டேன். ஆனால், இந்தியா நல்லரசாக இருந்தாலே போதுமென உணர்ந்தேன். அது இப்போது உண்மையாகுது போல...

    ReplyDelete
  7. //பதிவு நீளமோ இல்லையோ தவறான செய்தியை மட்டும் கொடுக்கக்கூடாதுனு ரொம்ப கவனமாக இருப்பேன்..//
    குட் ...நீள அகலங்களை விட விசயத்தின் ஆழம் தான் முக்கியம் . இது போன்ற சிறு பதிவுகள் தான் என் விருப்பமும் கூட .

    ReplyDelete
  8. வருண்!தொழில் வளர்ச்சியும்,பொருளாதார மாற்றங்களும் ஏற்படாத காலத்திற்கு முன்பே இந்தியாவில் கேன்சர் நோய் இருந்திருக்கிறது.இதற்கு முக்கிய காரணங்களாக மூக்குப்பொடி (அண்ணா),பீடி,சிகரெட்,புகையிலை என்ற காரணங்கள்.இப்பொழுது தொழிற்புரட்சியினால் புற்று நோய் வருகிறது என்பது முந்தைய தனிமனித குணங்களாக இல்லாமல் ஒருவர் மீது திணிக்கப்படும் பொருளாதாரம் சார்ந்த ஒன்று.

    சீனாக்காரன் டைகர் பாம் முதற்கொண்டு என்னென்னமோ விற்பனை செய்கிறான்.கேன்சருக்கு மாற்று மருந்து கண்டு பிடிக்கவில்லையா?2008ல் கண்டுபிடிக்கப்பட்ட பால் பவுடரில் பீங்கான்,பிளாஸ்டிக் போன்றவற்றில் கலக்கும் மெலாமைன் கலந்து விற்றது போன்றவையும் கூட கேன்சருக்கான காரணமாக இருந்திருக்க கூடுமே!

    அமெரிக்காவுக்கே சவால் விடும் நிலைக்கு சீனா வளர்ந்துள்ளதற்கு அமெரிக்காவும் முக்கிய காரணமல்லவா:)

    ReplyDelete
  9. இப்பவே நிறைய வயல்வெளிகளையே பார்க்க முடியலை நம் நாட்டில். வயல் இருந்த இடத்தில எல்லாம் எதாவது ஒரு தொழிற்சாலைதான் முளைச்சிருக்கு. எந்த காரணமாயிருந்தாலும் சுற்றுப்புற சூழலுக்கு கேடு வந்தா மனிதனை பாதிக்கும்.

    ReplyDelete
  10. how to prevent skin cancer, Varun.......?? you always give problem part, not the solution part........... :((

    ReplyDelete
  11. /தோல் புற்றுநோய் வராதுனு அசட்டையாக இருப்பதால்,தோல் புற்றுநோய் //

    ஆமாம் ..சின்ன கவனக்குறைவு அசட்டைத்தனம் தான் இந்த கான்சர் அரக்கன் பாரபட்சமில்லாம அசுரத்தனமா பரவிட்டுருக்கு
    colostomy problems /colon/உணவுக்குழாய் புற்று முன்பெல்லாம் கறுப்பின/ஆபிரிக்க மக்களிடம் மட்டும் வரும் இப்ப நம் நாட்டிலும் நிறைய பேருக்கு வருது(

    ReplyDelete
  12. ***ரெவெரி said...

    சில இனங்களை சில வகையான கான்சர்கள் குறைவாக தாக்கும்...Other than that..It is an Equal Opportunity Killer...

    Thanks for spreading the word Varun...***

    நான்கூட நமக்கெல்லாம் தோல் புற்று நோய் வராதுனுதான் நெனைச்சுண்டு இருந்தேன், ரெவெரி..

    ஏர்லி ஸ்டேஜ்லயே பார்த்தால் மற்ற முக்கிய உள்ளுறுப்புகளுக்கு அது பரவாமல் தடுத்துடலாம்னு சொல்றாங்க..

    ReplyDelete
  13. ***Kathir Rath said...

    விவசாயம், நெசவு, உலோக & மட்பாண்ட தொழில் தவிர ஏனைய அனைத்தும் இயற்கைக்கு எதிரானவையே, இங்கு அனைவருக்கும் ஆபத்து இருப்பது தெரியும்....
    ஓட்ட பந்தயத்தில் போட்டி போடுவது போல் தற்கொலைக்கும் போட்டி நடக்கிறது?
    அனைத்தும் முதலில் இருந்து அமிபாவில் இருந்து ஆரம்பிக்கும் நாள் விரைவில் வரும்...
    எழுதுவதற்கான நேரம் அனைவருக்கும் குறைகிறது என்பது வருத்தமளித்தாலும் யாரும் படிப்பதை குறைத்து கொள்வதில்லை என்பது மகிழ்ச்சியான ஒன்று***

    வாங்க, கதிர். அறிவியல் மருத்துவ வளர்ச்சியால், infectious diseases (TB Cholera, small pox) போன்றவற்ரை நாம் ஒழித்தது என்னவோ உண்மைதான்..

    ஆனால் வேதிக்கழிவுகளை ஒழுங்காக அப்புறப்படுத்தவேண்டிய மிக முக்கியம். மேலை நாடுகளில் அதிக கவனம் செலுத்துறாங்க. இந்தியா, சைனா போன்ற நாடுகளில் கவனக்குறைவு ரொம்ப அதிகம்..

    ReplyDelete
  14. ***சீனு said...

    ஒரு காலத்தில் சீனா இந்தியாவை மிஞ்சிவிட்டதேயென கவலைப்பட்டேன். ஆனால், இந்தியா நல்லரசாக இருந்தாலே போதுமென உணர்ந்தேன். அது இப்போது உண்மையாகுது போல.***

    வாங்க சீனு..

    சீனு: சீனாவில் கடுமையான சட்டதிட்டம் கொண்டு வந்து தடுக்க வாய்ப்பு இருக்கு. நம்ம ஜனநாயகத்தில்தான் ஓட்டைகள் அதிகம்.

    இப்போவே கவனம் செலுத்தினால்தான் உண்டு..

    ReplyDelete
  15. ***ஜீவன்சுப்பு said...

    //பதிவு நீளமோ இல்லையோ தவறான செய்தியை மட்டும் கொடுக்கக்கூடாதுனு ரொம்ப கவனமாக இருப்பேன்..//
    குட் ...நீள அகலங்களை விட விசயத்தின் ஆழம் தான் முக்கியம் . இது போன்ற சிறு பதிவுகள் தான் என் விருப்பமும் கூட .***

    பொல்லுஷன் கண்ட்ரோல் அவசியம்..
    தோல் புற்றுநோய் நமக்கும் வரலாம் என்கிற ரெண்டு விசயம் சொல்லத்தான் இந்தப் பதிவு.

    பின்னால் ஜெயவேல் சொல்லியதுபோல் நான் தீர்வு எதுவும் கொடுக்கவில்லை என்பது பதிவில் குறையே.

    ReplyDelete
  16. ***ராஜ நடராஜன் said...

    வருண்!தொழில் வளர்ச்சியும்,பொருளாதார மாற்றங்களும் ஏற்படாத காலத்திற்கு முன்பே இந்தியாவில் கேன்சர் நோய் இருந்திருக்கிறது.இதற்கு முக்கிய காரணங்களாக மூக்குப்பொடி (அண்ணா),பீடி,சிகரெட்,புகையிலை என்ற காரணங்கள்.இப்பொழுது தொழிற்புரட்சியினால் புற்று நோய் வருகிறது என்பது முந்தைய தனிமனித குணங்களாக இல்லாமல் ஒருவர் மீது திணிக்கப்படும் பொருளாதாரம் சார்ந்த ஒன்று.

    சீனாக்காரன் டைகர் பாம் முதற்கொண்டு என்னென்னமோ விற்பனை செய்கிறான்.கேன்சருக்கு மாற்று மருந்து கண்டு பிடிக்கவில்லையா?2008ல் கண்டுபிடிக்கப்பட்ட பால் பவுடரில் பீங்கான்,பிளாஸ்டிக் போன்றவற்றில் கலக்கும் மெலாமைன் கலந்து விற்றது போன்றவையும் கூட கேன்சருக்கான காரணமாக இருந்திருக்க கூடுமே!

    அமெரிக்காவுக்கே சவால் விடும் நிலைக்கு சீனா வளர்ந்துள்ளதற்கு அமெரிக்காவும் முக்கிய காரணமல்லவா:)***


    வாங்க நடராஜன். கருத்துக்கு நன்றி. :)

    ReplyDelete
  17. ***உஷா அன்பரசு said...

    இப்பவே நிறைய வயல்வெளிகளையே பார்க்க முடியலை நம் நாட்டில். வயல் இருந்த இடத்தில எல்லாம் எதாவது ஒரு தொழிற்சாலைதான் முளைச்சிருக்கு. எந்த காரணமாயிருந்தாலும் சுற்றுப்புற சூழலுக்கு கேடு வந்தா மனிதனை பாதிக்கும்.***

    வாங்க உஷா அன்பரசு!

    சுற்றுப்புற சூழலுக்கு கேடு வரக்கூடாது என்பதை வேதியல் தொழிற்சாலை நடத்துபவர்கள் உணர்ந்து நடந்துகொண்டால் போதுமாதுங்க.

    வேதியல் நிபுணர்களுக்குத்தான் எது நல்லது எது கெட்டதுனு தெரியும். அதற்கு நல்ல தீர்வும் தெரியும். அதற்கான நல்ல தீர்வை செயல்படுத்தி பொறுப்புடம் நடந்துக்கணும்.

    வாழைப்பழதோலை ரோட்டில் போடக்கூடாதுனு அந்தக்காலத்திலேயே சொல்றோம்.

    இவர்கள் வேதிக்கழிவுகள கண்ட ஆறு, குளத்தில், கடலில் கலக்காமல் கவனமாக அவைகளை முறைப்படி "டிஸ்போஸ்" செய்யணும்.. அந்தப் பொறுப்பு அவசியம்

    ReplyDelete
  18. ***Jayadev Das said...

    how to prevent skin cancer, Varun.......?? you always give problem part, not the solution part........... :((***

    வாங்க ஜெயவேல்..

    சூரிய வெளிச்சத்தில் இருப்பதை, யு வி ரேடியேஷன் சூழலில் இருப்பதை தவிர்க்க சொல்றாங்க.. சன் ஸ்க்ரீன் லோஷன் பயன் படுத்தணும்னு சொல்றாங்க.. (நம்ம ஊர்ல ஏழைகள் சந்தனத்தை தடவ வேண்டியதுதான்)

    உடலில் கருப்பு நிறத்தில் 5 மில்லிமீட்டர் டயாமீட்டடக்கு பெரியதாக புதிதாக மச்சம் போல், தொட்டுப்பார்த்தால், உணரமுடிவதுபோல(வலி இருக்காது) மிகவும் "ரஃப்" ஆக எதுவும் உண்டானால் உடனே அதை என்னனு பார்க்க சொல்றாங்க.

    வெள்ளை நிறத்தில் வரும் (வெண்குஷ்டம்) உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தாது. பார்க்க நல்லாயிருக்காது அவ்ளோதான்.

    கருப்பு நிறத்தில் வரும் மச்சம் போன்றவைதான் ஆபத்தானது என்கிறார்கள்..

    ReplyDelete
  19. ***angelin said...

    /தோல் புற்றுநோய் வராதுனு அசட்டையாக இருப்பதால்,தோல் புற்றுநோய் //

    ஆமாம் ..சின்ன கவனக்குறைவு அசட்டைத்தனம் தான் இந்த கான்சர் அரக்கன் பாரபட்சமில்லாம அசுரத்தனமா பரவிட்டுருக்கு
    colostomy problems /colon/உணவுக்குழாய் புற்று முன்பெல்லாம் கறுப்பின/ஆபிரிக்க மக்களிடம் மட்டும் வரும் இப்ப நம் நாட்டிலும் நிறைய பேருக்கு வருது(***

    வாங்க ஏஞ்சலின்!

    இந்த ஊர்ல சாதாரண வயிறு வலி வரும்போது (தொடர்ந்து வந்தால்) உடனே கோலனோ ஸ்கோப்பி, எண்டோ ஸ்கோப்பினு உள்ள ட்யூபை விட்டு பார்ப்பாங்க. பயாப்ஸி எடுத்து, ஒண்ணும் இல்லைனு சொல்ரவரை உயிர் போய் வரும்.

    55 வயதுக்கு மேலே உள்ளவங்க இது சம்மந்தமாக கவனிச்சுப் பார்க்கணும்னு டாக்டர்கள் அறிவுரை சொல்வதுண்டு..அவர்களுக்கு கோலன் கேண்சர் வர சாண்ஸ் அதிகம்ணு சொல்றாங்க.

    நம்ம ஊரில் இதை கவனிக்காமல் விடுவதற்கு காரணம் என்னவென்றால், கேண்சர் வந்தால் அதை நம்ம எப்படி "டீல்" பண்ண முடியும்? பணம் இல்லை, வசதி இல்லை.. எனக்கெதுக்கு இப்படி ஒரு வியாதி? என்கிற சிந்தனைகள்தான். அதையும் நம்ம தப்புனு சொல்வது கடினம்.. ஏழைகளுக்கெல்லாம் இதுபோல் "முன்னெச்சரிக்கை" வைத்தியச் செலவு என்பது நினைத்துப் பார்க்க முடியாதது. :(

    ReplyDelete
  20. நன்றி . சுருக்கமாக சொல்லிவிட்டீர்கள்

    ReplyDelete