Friday, March 1, 2013

சுஜாதாவை சமன் செய்த இன்றைய ஆண்லைன் விக்கிபீடியா!

எச்சரிக்கை! அமரர் சுஜாதாவை வணங்கும் பக்தர்கள் இந்தப் பதிவை வாசிக்காமல் தவிர்ப்பது நல்லது! நன்றி!

பாமர தமிழ் வாசகர்கள், ஏன் எதற்கு எப்படி? ல  சுஜாதாவிடம் அறிவியல் சம்மந்தமான கேள்விகள் கேட்பார்கள். இது ஒரு நேரடி கேள்வி பதில் நேரம் கிடையாது. அதாவது கேள்வி கேட்டதற்கும் பதில் சொல்வதற்கும் இடையே உள்ள காலம் எவ்ளோனா.. நாட்கள், வாரங்கள் ஏன் மாதங்களாகக் கூட இருக்கலாம்.

சுஜாதாவிடம் கேள்வி கேட்பதையே பெரிய க்ரிடிட்டாக நினைக்கும் பாமர வாசகன் ஒருவன் கேட்ட கேள்வியை நம்ம சுஜாதா எடுத்துட்டுப் போயி விக்கிப்பீடியா இல்லனா ஏதாவது ஒரு நல்ல சோர்ஸ்ல போயி பதிலைதேடி எடுத்து அதை தமிழாக்கம் செய்து நமக்குக் கொடுப்பாரு (சிறிது நக்கலும் கிண்டலும் சேர்த்து). "ஐயா எனக்கு இந்தக் கேள்விக்கு பதில் தெரியலை"னு இவர் எந்தக் கேள்வியையும் சொன்னதாக எனக்கு ஞாபகம் இல்லை. ஆக க்ரிடிட் எல்லாம் பதிலைத் தேடி எடுத்து வரும் சுஜாதாவுக்குத்தான் போகும். ஏன் என்றால் பொதுவாக அவர் பதில் சொல்ல உதவிய சோர்ஸை எல்லாம் நம்ம பாமரனுகளுக்கு தெளிவாக சொல்வதில்லை. "நான் கேள்விப்பட்ட வரைக்கும்," இல்லைனா "நான் அறிந்தவரைக்கும்"  என்ற  சொற்கோர்வைகள்  அவர் தேடிப் படித்த "சோர்ஸை" குறிக்கும் என்பது பாமரனுக்குப் புரியாது. ஒரு வேளை புரியுமோ? இப்படித்தான் நம்ம ஊர்ல பொதுவாக பல மேதைகள் (சுஜாதா, மதன் போன்ற) உருவாக்கப் படுறாங்க.

இந்த அபூர்வ சகோதரர்கள் குள்ள அப்பு டெக்னாலஜி பத்தி நம்ம மேதாவிக்கெல்லாம் மேதை கமலஹாசன் விட்ட பந்தா இருக்கே! என்னவோ இவரே "இண்வெண்ட்" செய்த உலகமகா டெக்னாலஜி அது என்பதுபோல! கடைசியில் சொன்னதுபோல அதை வெளிவிடவும் இல்லை!

சுஜாதாபோல் மேதைகள்,  தான் செய்யும் தொழிலில் (மாதச் சம்பளம் வாங்கிக்கொண்டு) பி இ எல் ல ஏதாவது விஞ்ஞான "ப்ரேக் த்ரு" செய்து நோபல் பரிசு இல்லை ஏதாவது பெரிய பேட்டண்ட் எதுவும் செய்தாங்களானு பார்த்தால் ஒரு மண்ணும் இருக்காது. பாமரனுக்கு மேதையா இருப்பதில்தான் இவர்களுக்கு பெருமை! என்ன நாலு படத்துக்கு சினிமா வசனம் வேணா எழுதி சாதிச்சு இருப்பாங்க! ஆனால் பாமரனைப் பொறுத்தவரையில் அவன் விஞ்ஞானக் கேள்விக்கு பதில் தேடி எடுத்து வந்து சொன்ன சுஜாதாதான் மேதை. விஞ்ஞானத்தில் 24 மணி நேரமும் செலவழிக்கும் ஒரு அறிவியல் ஆய்வாளன் எல்லாம் யாருனே தெரியாது. இதுதான் உலகம்!

நேற்று முந்தினம் சுஜாதா மறைந்த தினமாம். அஞ்சலி எல்லாம் செலுத்தினார்கள்! நம்மூர்ல உள்ள "பிரப்பலப் பதிவர்கள்" எல்லாருமே ஒட்டு மொத்தமான சுஜாதா ஜால்ராதான். அது மட்டுமல்ல கமலஹாசன் ஜால்ராவாவும் இருப்பாங்க. ஏன் என்றால் "பப்ளிசிட்டி" விரும்பும் இந்த மேதைகளும் ஒரு மாதிரி "பிரப்பலப் பாரமரன்கள்" தான். இவர்களுக்குப் அறிவியல் , அறிவியலை எப்படிப் புரிந்து கொள்ளணும், பொது அறிவு, பகுத்தறிதல்  இதெல்லாம் ரொம்ப கம்மினுகூட  சொல்லலாம்.  ஆனால் "கவர்ச்சி எழுத்தழகு", "சினிமா ஞானம்" "அடல்ட் ஜோக் ஞானம்" எல்லாம் அதிகம் இருக்கலாம்தான். அதனால் நம்ம வாசக பாமரர்கள் சுஜாதாவை புகழ்வது  போலவே இந்த "பிரப்பல மேதைகளும்" சாண்ஸ் கெடைக்கிற போதெல்லாம் சுஜாதாவை வானளவுக்குப் புகழுவாங்க.

* தமிழ் இலக்கியத்தில் சுஜாதா எதையும் பெருசா சாதிக்கவில்லை. தமிழ் இலக்கியத்தை பொறுத்தவரை சாகித்ய அகாதமி விருதுகூட பெறாத ஒரு இலக்கியவாதிதான் சுஜாதா. 

* காதல் என்பது ஜஸ்ட் செக்ஸ்/ஹார்மோண்ஸ் என்று புரிந்துகொண்டவர் சுஜாதா. 

* தத்துவம் பேசுவதெல்லாம் பொதுவாக பார்ப்பனர்களுக்கு கொஞ்சம் கஷ்டம். அவர்களுக்கு "சர்வைவல்" தான் ரொம்ப ரொம்ப முக்கியம்!
அதனால் "சுஜாதா தத்துவத்தையும்" ஒதுக்கி வைத்து விடலாம். 

* சரி, சுத்தமான விஞ்ஞானத்திலும் இல்லைனா தொழில்நுட்பத்திலும் எதுவும் பெருசா சாதிச்சாரா?னா  அதுவும் சாதிக்கவில்லை!

சரி தலைப்புக்கு வர்ரேன்..

ஏன் எதற்கு எப்படி? யில் அவர் ஆற்றிய அவருடைய அறிவியல் பங்களிப்பைப் பொறுத்தவரை சுஜாதாவின்  இழப்பை  இன்றைய இணையதள உலகம் எளிதாக சமன் செய்து விட்டது என்னும் கூற்று முற்றிலும் உண்மை. ஏன் எதற்கு எப்படி? என்கிற பிரிவில் கேட்கப்படும் கேள்விகளுக்கு மட்டுமல்லாமல் பலவிதமான அறிவியல் விசயங்களை எல்லாம் இன்று விக்கில மட்டுமன்றி பல நல்ல தளங்களில் அழகா சேகரிச்சு வச்சிருக்காங்க. அரைகுறை  ஆங்கிலத்தில் கூகில்ல இல்லைனா தமிழில்கூட டைப் அடிச்சா எல்லா பதிலும் கண் முன்னால் வந்து நிக்கும். நீங்க அள்ளிக்கலாம்!

அதனால சுஜாதா இல்லாமல் நாங்க அறிவீணர்களாயிட்டோம்னு ஒப்பாரி வைக்காமல், உங்க கேள்விக்கெல்லாம் உடனே பதில் சொல்லும் கூகிலையும், விக்கியையும் ஒழுங்கா பயன்படுத்த கத்துக்கோங்க! ஆமா, நீங்களும் மேதையாகலாம்!

63 comments:

  1. அடின்ன அடி இது தான் மரண அடி! நொறுக்கிடீங்க !வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  2. இதையே நான் முன்பு 7 பகுதிகளாக "ஊடங்கங்களின் ஆபாசம்" என்ற தொடர் எழுதியிருந்தேன்.

    என்னைப் பொறுத்தவரை, அவர் ஒரு சிறந்த மொழி பெயர்ப்பாளர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை...!

    அப்படி எழுதிய அதே சமயத்தில் அவருடைய மெல்லிய கிண்டலுடன் முடிக்கும் நகைச்சுவைக்கு credit கொடுத்தது பாராட்டியும் எழுதினேன்.

    கூகிள் மச்சானும், என்சைக்ளோபீடியா மாமவும், விக்கிபீடியா மாமியும் எல்லா தமிழ் அறிவு ஜீவிகளின் "சுயம்பு" அறிவை பப்பள பள பளான்னு வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது.

    ReplyDelete
  3. Varun...

    To his defence..(!)...he did not have instant...blanket accesss to everything under the sun like we have now...

    Anyway get ready to receive some hate mails...-:)

    ReplyDelete
  4. ***கறுத்தான் said...

    அடின்ன அடி இது தான் மரண அடி! நொறுக்கிடீங்க !வாழ்த்துக்கள் !***

    கறுத்தான்!

    சுஜாதா எழுத்தை நீங்க விரும்பி வாசிப்பவர்னு எங்கேயோ படிச்ச ஞாபகம் (உங்க ப்ரஃபைல் லயா?)??

    என்னவோ போங்க! :)

    ReplyDelete
  5. *** நம்பள்கி said...

    இதையே நான் முன்பு 7 பகுதிகளாக "ஊடங்கங்களின் ஆபாசம்" என்ற தொடர் எழுதியிருந்தேன்.

    என்னைப் பொறுத்தவரை, அவர் ஒரு சிறந்த மொழி பெயர்ப்பாளர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை...!

    அப்படி எழுதிய அதே சமயத்தில் அவருடைய மெல்லிய கிண்டலுடன் முடிக்கும் நகைச்சுவைக்கு credit கொடுத்தது பாராட்டியும் எழுதினேன்.

    கூகிள் மச்சானும், என்சைக்ளோபீடியா மாமவும், விக்கிபீடியா மாமியும் எல்லா தமிழ் அறிவு ஜீவிகளின் "சுயம்பு" அறிவை பப்பள பள பளான்னு வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது.***

    நம்பள்கி!

    உங்க தொடரை நான் இன்னும் வாசிக்கவில்லை. வாசிக்கணும்.

    இன்று ஏகப்பட்ட விசயங்கள் எளிதில் ஆண்லைனக் கிடைக்கின்றன. இன்றைய பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள் எல்லாம் லக்கினு கூட சொல்லுவேன். எனக்கெல்லாம் நம்ம ஊர் வாத்தியார்கள் நெறையாவே தப்பு தப்பா டீச் பண்ணி இருக்கா!

    வாத்தியார்கள் (தப்பா சொல்லிக்கொடுத்தாலும்) சொன்னதுதானே வேதம் நம்ம ஊர்ல? :(

    ReplyDelete
  6. ***ரெவெரி said...

    Varun...

    To his defence..(!)...he did not have instant...blanket accesss to everything under the sun like we have now...

    Anyway get ready to receive some hate mails...-:)***

    வாங்க ரெவரி!

    ஆமா, சுஜாதா மேலே உனக்கேண்டா காண்டு?ணு வருவா! பெரியவா எல்லாம் மாறுவேடத்தில்! :)))

    ReplyDelete
  7. அது சரி... நல்லா சொன்னீங்க போங்க...

    ReplyDelete
  8. அப்போ, என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா இருந்தது பலர் வீட்டில்.

    Windows வந்த போதே, என்சைக்ளோபீடியா கூடவே வந்தது.

    பெரிய நகரங்களில் British Council Library உண்டு! அங்கு எல்லாம் உண்டு. நாங்க படிக்கும் போது உலக விஷயங்களை அறிந்து கொள்ள ஆனந்த் theater அருகே உள்ள British Council Library க்கு தான் செல்வோம்.

    குளு குளு A/C வேற...! சுருங்க சொன்னா அது படிக்கும் இடம் மற்றும் அதுக்கும் மேலே; அதான், British Council Library காதலர்களின் சொர்க்கபுரி! meeting place, etc படிச்சா மாதிரியும் ஆச்சு...!

    அதேபோல, தனிமையை விரும்பும் [நேயர்களின்] விருப்பம்... University Library...!

    ReplyDelete
  9. *** சே. குமார் said...

    அது சரி... நல்லா சொன்னீங்க போங்க...***

    வாங்க, குமார்! :)

    ReplyDelete
  10. ***நம்பள்கி said...

    அப்போ, என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா இருந்தது பலர் வீட்டில்.

    Windows வந்த போதே, என்சைக்ளோபீடியா கூடவே வந்தது.

    பெரிய நகரங்களில் British Council Library உண்டு! அங்கு எல்லாம் உண்டு. நாங்க படிக்கும் போது உலக விஷயங்களை அறிந்து கொள்ள ஆனந்த் theater அருகே உள்ள British Council Library க்கு தான் செல்வோம்.

    குளு குளு A/C வேற...! சுருங்க சொன்னா அது படிக்கும் இடம் மற்றும் அதுக்கும் மேலே; அதான், British Council Library காதலர்களின் சொர்க்கபுரி! meeting place, etc படிச்சா மாதிரியும் ஆச்சு...!

    அதேபோல, தனிமையை விரும்பும் [நேயர்களின்] விருப்பம்... University Library...!***

    என்ன சார், மலரும் நினைவுகளா?? :)))

    ReplyDelete
  11. யோவ் தளபதி? எங்கய்யா போனீரு?? உண்மையை உரக்கச் சொல்வோம்!! சும்மா கத்தினப் பத்தாது. செய்து காண்பிக்கணும்!! நம்மெல்லாம் சும்மா!!

    ஏரின்னா ஏறிப் பார்த்திடணும்!
    சும்மா கீரியக் கீறிட்டு இருக்கப்படாது!!

    ReplyDelete
  12. ஆமா, தளபதியை எங்கே மணியண்ணா?
    அவர் தளம் வச்சு எழுதிட்டு இருந்தாரு. 1 வருடமா ஒரு பதிவையும் காணோம்??

    ReplyDelete
  13. வருண் மச்சான்,

    எனக்கு சுஜாதாவின் எழுத்துகள் பிடிக்கும். கணேஷ், வசந்த் கதைகள் இன்னும் ஞாபகம் இருக்கிறது.

    சுஜாதா பெரிய அறிவியல் மேதையோ,தொழிழ்நுட்ப வித்தகரோ கிடையாது.
    ஆனால் அதில் சிலவற்றை தமிழில் எழுத முயற்சித்தார்.

    அறிவியல் எல்லாம் அப்போது விக்கிபிடியாவுக்கு பதில் என்சைக்ளோப் பீடியா பார்த்து சொல்லி இருப்பார் என்பதில் ஐயமில்லை. ஏதோ அதையாவது சொல்ராரே என நனமையாகவே பார்க்கலாமே!!

    அறிவியல் பதிவுலகில் எழுதும் நான் உட்பட அனைவரும் விக்கிபிடியா ,கூகிள் ஆண்டவர் துணையுடன்தான் எழுதுகிறோம்.சுஜாதாவுக்கு சொல்வது அனைவருக்கும் பொருந்தும்.சுஜாதா தகவல் பெறும் மூல புத்த்கம் சொல்லாமல் இருந்து இருக்கலாம். அது அப்போது தவறா? என்பது நல்ல கேள்வி!! உங்களின் விருப்புக்கு விட்டு விடுகிறேன்.

    அன்றே தட்டச்சில் கதை அவர் எழுதியது பெரியவிடயம் எனில் ,அனைவரும் இப்போது கணிணியில் தட்டச்சி பதிவிடுவது சாதாரண விடயம்.ஆகவே ஒப்பீடு சரியல்ல!!

    அவர் ஒரு வெற்றிகரமான மத்திய தர வர்க்கத்திற்கு பிடித்த எழுத்தாளர். அவ்வளவுதான்!!

    அறிவியலுக்கு பொருந்தும் விடயம் வரலாற்றுக்கும் பொருந்தும்!!

    இதே பார்வையில் சாண்டில்யனைப் பார்ப்பீர்களா??

    நன்றி!!!!!!!!!!!!

    ReplyDelete
  14. பாருங்க... குழந்தைகளின் சிந்திக்கும் திறன் எல்லாம் இப்போ காணாமல் போய் விட்டது... (அதுவும் வசதி படைத்த குழந்தைகளின் முகத்தின் பின்னே கணினி திரையின் ஒளி வட்டம் கண்ணை கூசுகிறது... வசதி இல்லாதவர்களுக்கெல்லாம் படிப்பு அல்லது கணினி ஒரு கேடா...?)

    சின்ன கட்டுரை எழுத வேண்டுமென்றாலும் நாடுவது நீங்கள் சொன்னவையே... நிறைய அள்ளுகிறார்கள்... மேதை ஆகிறார்கள்... என்னே சிந்தனை...!--> அவர்களின்... நாடும் விரைவில் உருப்படும்... நம்புவோம்... நாளை நமதே...

    சுஜாதா / கமல் / மதன் ரசிகன் என்று நீங்கள் நினைப்பது நினைத்து, சிரிப்பு தான் வருகிறது...

    நன்றி...

    ReplyDelete
  15. //சுஜாதாவை சமன் செய்த இன்றைய ஆண்லைன் விக்கிபீடியா! // சுஜாதா கூகிளில் தேடிப்பிடித்து படித்து கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார் சரி இருந்து விட்டு போகட்டும். ஆனால் அன்றைய கால கட்டங்களில் நமக்கு கம்யூட்டர் என்பது கைக்கெட்டாத ஏதோ பிரமாதமான பொருள். இல்லையா? அப்போதே கம்யூட்டரின் இயக்கம் பற்றி சாதாரண பாமரனுக்கும் புரியும் படியாக எழுதியவர் என்பதை மறுக்க முடியாது. அவர் கூகிளில் தேடி படித்து பதில் அளித்தார் என்பது பிற்காலங்களில் மட்டுமே என்று நினைக்கிறேன். என்னை பொருத்தளவில் அவர் வெளிப்படையாக எல்லா விசயங்களையும் கையாண்டார். காசுக்காக அதை எழுதினாரா என்றால் இருக்கட்டுமே யார் சும்மா எழுத்துலக சேவை செய்கிறார்கள். ஓட்டிங் மெசினை செயல் படுத்த முனைந்தவர் என்பதில் மாற்றுக்கருத்து உண்டா?
    ஜாதி வெறியோடோ அல்லது மத வெறியோடோ ஒரு புத்தகத்தை படித்தால் அதை புரிந்து கொள்வதில் சிக்கல் கட்டாயம் உண்டு.
    சாகித்ய அகாதமி விருது பெற்றால் தான் ஒருவர் இலக்கிய சேவை செய்தார் என்று பார்பது பிற்போக்கான கண்ணோட்டம்.
    சயன்ஸ்பிக்சன் கதைகள் ஆகட்டும் வரலாற்று கதைகளாகட்டும் துப்பரியும் கதைகளாகட்டும் அவருக்கென்று ஒரு தனி இடம் இருந்தது.
    நீங்கள் அவரை மேம்போக்காக அணுகிறீர்கள் என்றே என்னத்தோன்றுகிறது. உங்கள் கருத்தை நீங்கள் முன் வைப்பது உங்கள் உரிமை.
    அவர் அடியொற்றி பல எழுத்துக்கள் ..எழுத்தாளர்கள் உருவாகினார்கள் என்பது ஜால்ரா அடிப்பதும் ஒன்றல்லவே.
    தனக்கு எல்லாம் தெரியும் என்று பீத்திகொள்ளாதவராகவே நான் அவரை கருதுகிறேன்.
    வாரத்தில் எத்துணை கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியும்? இன்றைய கூகிளும் இணைய ஒப்பீடும் இதற்கு பொருந்தாதது.

    ReplyDelete
  16. கலாகுமரன் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.சுஜாதா என்ற பெயர் தலைப்பில் இடம் பெறாமல் இப்பதிவு வெளியாகி இருந்தால் இதற்கான வாசகர் எண்ணிக்கை எப்படியிருக்கும் என இதே பதிவை "சுஜாதா" பெயரை தலைப்பிலிருந்து நீக்கிவிட்டு வெளியிட்டு பாருங்கள்.

    ReplyDelete
  17. what u know about sujatha..... sujatha really leagend ... yes i agree... sujtha somewhere get source but only persoin in the tamil writer giving simple science every body can standard him writing........

    ReplyDelete
  18. Man gains knowledge only from other sources including you. Nobody is born with all knowledge he want. You also do that.

    You have forgotten that he was the head of the team that made Electronic Voting Machines which is a revolution in our democracy.

    Jayakumar

    ReplyDelete
  19. சாகித்திய அகாடமி விருதோ, சாகாதகித்திய அகாடமி விருதோ... ஏதோ ஒரு விருது வாங்கியிருந்தாதான் உங்க பார்வையில நல்ல எழுத்தாளர்னு அர்‌த்தமோ? விக்கிபீடியாவும், மத்த ஊடகங்களும் இன்னிக்குத் துணை நிக்கிற பட்சத்துல அதை வெச்சுட்டு எத்தனை சுஜாதா அவருக்கப்புறம் உருவாகியிருக்காங்க...?

    ReplyDelete
  20. சுஜாதா எதை கண்டுபிடித்தார் என்று கேட்டு இருந்தீர்கள் ..இன்று நாம் எல்லாம் ஓட்டு போடும் இயந்திரத்தை வடிவமைத்த குழுவில் சுஜாதாவும் ஒருவர் ..எந்த மனிதனும் தானாக எதையும் கற்றுக்கொள்ள முடியாது ஏதேனும் SOURCE வேண்டும் அன்றைய காலகட்டத்தில் சுஜாதா எளிமையாக தமிழில் விளக்கம் அளித்துக்கொண்டு இருந்தார் ..அறிவியல் என்பது யார் வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம் ஆனால் அதை தெளிவாக கற்றுக்கொடுக்க ஒருவர் வேண்டும் ..சுஜாதா அறிவியலை எளிமை படுத்தினார்

    ReplyDelete
  21. A complete bastardic review about sujatha,absolutely childish and ignorant,நான் எதுவோ இவரிடம் விஷயம் இருப்பதாக நினைத்து இந்த தளத்திற்கு அடிக்கடி வருவதுண்டு,,ஏய் ஏய் அப்படி எல்லாம் நீயாக எதையாவது கற்பனைப் பண்ணிக் கொள்ளாதே ,, இனிமேல் இந்தா தளத்தின் பக்கமே வராதே என் எழுத்தின் வேள்யு இவ்வளவு தான் என்று இந்த ஒரு பதிவின் மூலம் மிக மிக தெளிவாக புரியவைத்து விட்டார் ,, சுஜாதாவை பற்றி மிக மேலோட்டமாக புரிந்து வத்திருக்கும் ஒரு கைகுழந்தையின் பதிவு

    ReplyDelete
  22. சினிமா நடிகை சுஜாதா இவ்வளவு பெரிய ஆளா?

    ReplyDelete
  23. சுஜாதா மாயையை அடித்து நொறுக்கியதற்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  24. //அதனால சுஜாதா இல்லாமல் நாங்க அறிவீணர்களாயிட்டோம்னு ஒப்பாரி வைக்காமல், உங்க கேள்விக்கெல்லாம் உடனே பதில் சொல்லும் கூகிலையும், விக்கியையும் ஒழுங்கா பயன்படுத்த கத்துக்கோங்க! //

    :-)) வருண் செம

    சுஜாதா மீது பல்வேறு கருத்துகள் இருக்கலாம்.. ஆனால் அவரது எழுத்துக்கள் எளிமையானவை என்பது என் கருத்து. அவர் விருதுகள் வாங்காமல் இருக்கலாம்.. ஆனால் வாங்கியவர்கள் எழுதியவற்றை என்னால் படித்து புரிந்து கொள்ள முடியவில்லை. எழுத்தாளர்கள் என்றாலே எனக்கு ஏனோ அலர்ஜி..சுஜாதா தவிர்த்து.

    விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்று எவருமில்லை சுஜாதாவும் விதிவிலக்கல்ல.

    ReplyDelete
  25. முதலில் ஆண்லைனா, ஆன்லைனா - எதுன்னு சரியா சொல்லு நைனா. அப்புறம் சுஜாதாவை வாரலாம்.

    ReplyDelete
  26. varun sir. u r great. once again u have proved what a wonderful blogger u r.you have opened the eyes of all the followers of sujatha. please never ever give up this service and attitude. every point should be approached in a parrellel thought. i am telling this from my heart. thank u sir.

    ReplyDelete
  27. ***சார்வாகன் said...

    வருண் மச்சான்,

    எனக்கு சுஜாதாவின் எழுத்துகள் பிடிக்கும். கணேஷ், வசந்த் கதைகள் இன்னும் ஞாபகம் இருக்கிறது.

    சுஜாதா பெரிய அறிவியல் மேதையோ,தொழிழ்நுட்ப வித்தகரோ கிடையாது.
    ஆனால் அதில் சிலவற்றை தமிழில் எழுத முயற்சித்தார்.

    அறிவியல் எல்லாம் அப்போது விக்கிபிடியாவுக்கு பதில் என்சைக்ளோப் பீடியா பார்த்து சொல்லி இருப்பார் என்பதில் ஐயமில்லை. ஏதோ அதையாவது சொல்ராரே என நனமையாகவே பார்க்கலாமே!!

    அறிவியல் பதிவுலகில் எழுதும் நான் உட்பட அனைவரும் விக்கிபிடியா ,கூகிள் ஆண்டவர் துணையுடன்தான் எழுதுகிறோம்.சுஜாதாவுக்கு சொல்வது அனைவருக்கும் பொருந்தும்.சுஜாதா தகவல் பெறும் மூல புத்த்கம் சொல்லாமல் இருந்து இருக்கலாம். அது அப்போது தவறா? என்பது நல்ல கேள்வி!! உங்களின் விருப்புக்கு விட்டு விடுகிறேன்.

    அன்றே தட்டச்சில் கதை அவர் எழுதியது பெரியவிடயம் எனில் ,அனைவரும் இப்போது கணிணியில் தட்டச்சி பதிவிடுவது சாதாரண விடயம்.ஆகவே ஒப்பீடு சரியல்ல!!

    அவர் ஒரு வெற்றிகரமான மத்திய தர வர்க்கத்திற்கு பிடித்த எழுத்தாளர். அவ்வளவுதான்!!

    அறிவியலுக்கு பொருந்தும் விடயம் வரலாற்றுக்கும் பொருந்தும்!!

    இதே பார்வையில் சாண்டில்யனைப் பார்ப்பீர்களா??

    நன்றி!!!!!!!!!!!!
    1 March 2013 5:45 pm ***

    சார்வாஅகன் மச்சான்: "என்சைக்ளோபீடியாவை"த்தான் நான் மீன் பண்ணினேன், விக்கிப்பீடியாவை பார்ப்பார் என்று சொல்லும்போது. :)

    சாண்டிலயனை யாரும் மேதை என்றெல்லாம் சொல்வதில்லை. காமம் கலந்து வரலாற்றுக் கதை எழுதுபவர்னுதான் சாதாரணமாக சொல்லுவா! :)

    ReplyDelete
  28. ***திண்டுக்கல் தனபாலன் said...

    பாருங்க... குழந்தைகளின் சிந்திக்கும் திறன் எல்லாம் இப்போ காணாமல் போய் விட்டது... (அதுவும் வசதி படைத்த குழந்தைகளின் முகத்தின் பின்னே கணினி திரையின் ஒளி வட்டம் கண்ணை கூசுகிறது... வசதி இல்லாதவர்களுக்கெல்லாம் படிப்பு அல்லது கணினி ஒரு கேடா...?)

    சின்ன கட்டுரை எழுத வேண்டுமென்றாலும் நாடுவது நீங்கள் சொன்னவையே... நிறைய அள்ளுகிறார்கள்... மேதை ஆகிறார்கள்... என்னே சிந்தனை...!--> அவர்களின்... நாடும் விரைவில் உருப்படும்... நம்புவோம்... நாளை நமதே...

    சுஜாதா / கமல் / மதன் ரசிகன் என்று நீங்கள் நினைப்பது நினைத்து, சிரிப்பு தான் வருகிறது...

    நன்றி...***

    சகோதரர் தனபாலன்!

    நீங்க பெரிய சுஜாதா விசிறி என்று நினைக்கிறேன். உங்க மனதைப் புண் படுத்தியிருந்தால் மன்னிச்சுக்கோங்க!

    ReplyDelete
  29. ***கலாகுமரன் said...

    //சுஜாதாவை சமன் செய்த இன்றைய ஆண்லைன் விக்கிபீடியா! // சுஜாதா கூகிளில் தேடிப்பிடித்து படித்து கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார் சரி இருந்து விட்டு போகட்டும். ஆனால் அன்றைய கால கட்டங்களில் நமக்கு கம்யூட்டர் என்பது கைக்கெட்டாத ஏதோ பிரமாதமான பொருள். இல்லையா? அப்போதே கம்யூட்டரின் இயக்கம் பற்றி சாதாரண பாமரனுக்கும் புரியும் படியாக எழுதியவர் என்பதை மறுக்க முடியாது. அவர் கூகிளில் தேடி படித்து பதில் அளித்தார் என்பது பிற்காலங்களில் மட்டுமே என்று நினைக்கிறேன். என்னை பொருத்தளவில் அவர் வெளிப்படையாக எல்லா விசயங்களையும் கையாண்டார். காசுக்காக அதை எழுதினாரா என்றால் இருக்கட்டுமே யார் சும்மா எழுத்துலக சேவை செய்கிறார்கள். ஓட்டிங் மெசினை செயல் படுத்த முனைந்தவர் என்பதில் மாற்றுக்கருத்து உண்டா?
    ஜாதி வெறியோடோ அல்லது மத வெறியோடோ ஒரு புத்தகத்தை படித்தால் அதை புரிந்து கொள்வதில் சிக்கல் கட்டாயம் உண்டு.
    சாகித்ய அகாதமி விருது பெற்றால் தான் ஒருவர் இலக்கிய சேவை செய்தார் என்று பார்பது பிற்போக்கான கண்ணோட்டம்.
    சயன்ஸ்பிக்சன் கதைகள் ஆகட்டும் வரலாற்று கதைகளாகட்டும் துப்பரியும் கதைகளாகட்டும் அவருக்கென்று ஒரு தனி இடம் இருந்தது.
    நீங்கள் அவரை மேம்போக்காக அணுகிறீர்கள் என்றே என்னத்தோன்றுகிறது. உங்கள் கருத்தை நீங்கள் முன் வைப்பது உங்கள் உரிமை.
    அவர் அடியொற்றி பல எழுத்துக்கள் ..எழுத்தாளர்கள் உருவாகினார்கள் என்பது ஜால்ரா அடிப்பதும் ஒன்றல்லவே.
    தனக்கு எல்லாம் தெரியும் என்று பீத்திகொள்ளாதவராகவே நான் அவரை கருதுகிறேன்.
    வாரத்தில் எத்துணை கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியும்? இன்றைய கூகிளும் இணைய ஒப்பீடும் இதற்கு பொருந்தாதது.****

    கலா குமாரன்: என்சைக்ளோபீடியா பார்த்து பதில் சொல்லியிருப்பார் என்பதைத்தான் "மீன்" பண்ணினேன்.

    இன்றைக்கு வேதியியல் சம்மந்தப்பட்ட பல கேள்விகளுக்கு என்னால எளிதில் ஆண்லைன்ல பதில் எடுக்க முடியுது. இதே வசதி ஒரு 10 வருடம் முன்னால இல்லை.

    You could take my criticisms +vely that today lots of information available in on-line. It is TRUE!

    ReplyDelete
  30. *** சேக்காளி said...

    கலாகுமரன் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.சுஜாதா என்ற பெயர் தலைப்பில் இடம் பெறாமல் இப்பதிவு வெளியாகி இருந்தால் இதற்கான வாசகர் எண்ணிக்கை எப்படியிருக்கும் என இதே பதிவை "சுஜாதா" பெயரை தலைப்பிலிருந்து நீக்கிவிட்டு வெளியிட்டு பாருங்கள்.***

    இந்தப் பதிவைப் பொறுத்தவரையில் இந்தத் தலைப்புதான் மிகவும் சரியானது.

    சுஜாதா என்றல்ல, சாரு, ஜெயமோஹன், ரஜினிகாந்த் போன்ற பெயர்களை தலைப்பில் வைத்தாலும் கூட்டம் வரத்தான் செய்யும்.

    சுஜாதாவையும் விக்கிப்பீடியாவையும் கம்ப்பேர் செய்யும்போது அவர் பெயரை சொல்லாமல் எப்படி தலைப்பு கொடுப்பது?

    ReplyDelete
  31. ***Blogger கொசு said...

    what u know about sujatha..... sujatha really leagend ... yes i agree... sujtha somewhere get source but only persoin in the tamil writer giving simple science every body can standard him writing....**

    Thanks, Mr/Ms. kosu, for your comment. Take care!

    ReplyDelete
  32. ***jk22384 said...

    Man gains knowledge only from other sources including you. Nobody is born with all knowledge he want. You also do that.

    You have forgotten that he was the head of the team that made Electronic Voting Machines which is a revolution in our democracy.

    Jayakumar **

    I strongly believe Voting machine is not invented by that group in which Sujatha was a member. It must be a known technology and was adopted by us with small manipulations.

    ReplyDelete
  33. ***பால கணேஷ் said...

    சாகித்திய அகாடமி விருதோ, சாகாதகித்திய அகாடமி விருதோ... ஏதோ ஒரு விருது வாங்கியிருந்தாதான் உங்க பார்வையில நல்ல எழுத்தாளர்னு அர்‌த்தமோ? விக்கிபீடியாவும், மத்த ஊடகங்களும் இன்னிக்குத் துணை நிக்கிற பட்சத்துல அதை வெச்சுட்டு எத்தனை சுஜாதா அவருக்கப்புறம் உருவாகியிருக்காங்க...? ***

    பாலகணேஷ்: சுஜாதா ஒண்ணும் பெரிய தமிழ் இலக்கியவாதி இல்லை என்று சொல்லியுள்ளேன். அது உண்மைதானே???

    ReplyDelete
  34. ***P.K.K.BABU said...

    PROBLA........... PATHIVAR***

    Yeah, I don't worship sujatha! :-)

    ReplyDelete
  35. ***NADINARAYANAN MANI said...

    சுஜாதா எதை கண்டுபிடித்தார் என்று கேட்டு இருந்தீர்கள் ..இன்று நாம் எல்லாம் ஓட்டு போடும் இயந்திரத்தை வடிவமைத்த குழுவில் சுஜாதாவும் ஒருவர் ..எந்த மனிதனும் தானாக எதையும் கற்றுக்கொள்ள முடியாது ஏதேனும் SOURCE வேண்டும் அன்றைய காலகட்டத்தில் சுஜாதா எளிமையாக தமிழில் விளக்கம் அளித்துக்கொண்டு இருந்தார் ..அறிவியல் என்பது யார் வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம் ஆனால் அதை தெளிவாக கற்றுக்கொடுக்க ஒருவர் வேண்டும் ..சுஜாதா அறிவியலை எளிமை படுத்தினார் ***

    எந்திரம் மூலம் ஓட்டுப்போடுவது என்பதை இந்தியாவில்தான் முதன் முதலில் செய்தார்களா? இல்லைனு தான் நெனைக்கிறேன். அப்போ அது சுஜாதாவுடைய கண்டுபிடிப்பு இல்லை, நண்பரே! :)

    ReplyDelete
  36. ****Good citizen said...

    A complete bastardic review about sujatha,absolutely childish and ignorant,நான் எதுவோ இவரிடம் விஷயம் இருப்பதாக நினைத்து இந்த தளத்திற்கு அடிக்கடி வருவதுண்டு,,ஏய் ஏய் அப்படி எல்லாம் நீயாக எதையாவது கற்பனைப் பண்ணிக் கொள்ளாதே ,, இனிமேல் இந்தா தளத்தின் பக்கமே வராதே என் எழுத்தின் வேள்யு இவ்வளவு தான் என்று இந்த ஒரு பதிவின் மூலம் மிக மிக தெளிவாக புரியவைத்து விட்டார் ,, சுஜாதாவை பற்றி மிக மேலோட்டமாக புரிந்து வத்திருக்கும் ஒரு கைகுழந்தையின் பதிவு***

    நல்ல குடிமகன்:

    பதிவில் முதல் ரெண்டு வரியை வாசிக்காமல் ஏன் தாவுனீங்கனு தெரியலை. உங்கள மாரி ஆளுக்காகத்தானே எச்சரிக்கை செய்துள்ளேன்.

    அதை சட்டை செய்யாமல் தொடர்ந்தது உங்க முட்டாள்த்தனம், நண்பரே!

    ReplyDelete
  37. நல்லது நண்பரே ,நான் முட்டாலாவே இருந்து விட்டு போகிறறேன்( உங்களை போல் கேனத்தனமாக யோசிப்பதற்கு பதில் முட்டாலாக இருப்பது எவ்வளவோ மேல் )சுஜாதாவின் ரசினாக உள்ளே வராதே என்று எச்சரித்த அறிவாளி ,இதே போல் உங்களின் மற்ற பதிவுகளுக்கும் எச்சரிக்கை(சங்கு ஊதி இருந்தால்)விட்டிருந்தால் எப்போதோ என் வருகையை ந்றுத்தி இருப்பேன்,,அதனால் தயவு செய்து மணி ஆட்டவும் சாரி அடிக்கவும்

    ReplyDelete
  38. ***ராவணன் said...

    சினிமா நடிகை சுஜாதா இவ்வளவு பெரிய ஆளா?
    2 March 2013 6:31 am ***

    இதெல்லாம் ரொம்ப ஓவர் ராவணன்! :)

    ReplyDelete
  39. ****மருதநாயகம் said...

    சுஜாதா மாயையை அடித்து நொறுக்கியதற்கு வாழ்த்துகள்****

    வாங்க மருதநாயகம்!

    சுஜாதா ஒரு அறிவுக் களஞ்சியம்னு மட்டுமே சொல்லிக் கேள்விப்பட்ட உலகம் இது. ஒரு சில உண்மைகளை எடுத்துச் சொன்னால் நான் ஏதோ சுஜாதாவை கெட்ட வார்த்தை சொல்லி திட்டியதாக பார்க்கிறது, "சுஜாதாவை வணங்கும் உலகம்". :)

    ReplyDelete
  40. *** கிரி said...

    //அதனால சுஜாதா இல்லாமல் நாங்க அறிவீணர்களாயிட்டோம்னு ஒப்பாரி வைக்காமல், உங்க கேள்விக்கெல்லாம் உடனே பதில் சொல்லும் கூகிலையும், விக்கியையும் ஒழுங்கா பயன்படுத்த கத்துக்கோங்க! //

    :-)) வருண் செம

    சுஜாதா மீது பல்வேறு கருத்துகள் இருக்கலாம்.. ஆனால் அவரது எழுத்துக்கள் எளிமையானவை என்பது என் கருத்து. அவர் விருதுகள் வாங்காமல் இருக்கலாம்.. ஆனால் வாங்கியவர்கள் எழுதியவற்றை என்னால் படித்து புரிந்து கொள்ள முடியவில்லை. எழுத்தாளர்கள் என்றாலே எனக்கு ஏனோ அலர்ஜி..சுஜாதா தவிர்த்து.

    விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்று எவருமில்லை சுஜாதாவும் விதிவிலக்கல்ல.***

    நல்ல கருத்து, கிரி ! :)

    ReplyDelete
  41. ***தம்பி said...

    முதலில் ஆண்லைனா, ஆன்லைனா - எதுன்னு சரியா சொல்லு நைனா. அப்புறம் சுஜாதாவை வாரலாம். ***

    தம்பி: தமிங்கல வார்த்தைல எல்லாம் ச்பெல்லிங்கு மிஸ்டேக் பார்க்கிறதுதான் காமெடியாயிருக்கு! :)

    Better luck next time!

    Keep trying, you will succeed one day! :)))

    ReplyDelete
  42. ***Anbazhagan Ramalingam said...

    varun sir. u r great. once again u have proved what a wonderful blogger u r.you have opened the eyes of all the followers of sujatha. please never ever give up this service and attitude. every point should be approached in a parrellel thought. i am telling this from my heart. thank u sir.***

    I never try to prove anything in the blog world. Neither do I try to please my "audience"! This Blog is not for "proving" or "pleasing" anything, it is for expressing my thoughts. :) Thanks to you for stopping by, Mr. A. R! :)

    ReplyDelete
  43. *** Good citizen said...

    நல்லது நண்பரே ,நான் முட்டாலாவே இருந்து விட்டு போகிறறேன்( உங்களை போல் கேனத்தனமாக யோசிப்பதற்கு பதில் முட்டாலாக இருப்பது எவ்வளவோ மேல் )சுஜாதாவின் ரசினாக உள்ளே வராதே என்று எச்சரித்த அறிவாளி ,இதே போல் உங்களின் மற்ற பதிவுகளுக்கும் எச்சரிக்கை(சங்கு ஊதி இருந்தால்)விட்டிருந்தால் எப்போதோ என் வருகையை ந்றுத்தி இருப்பேன்,,அதனால் தயவு செய்து மணி ஆட்டவும் சாரி அடிக்கவும்***

    It is not uncommon that it took a while for you to understand me and my attitude. Unfortunately, you can not fix the past but you can fix the future after your "enlightenment".

    Please go, find some great blogs and read some worthy stuff. Obviously this is not one of that kind!

    Good luck and good bye! :)

    ReplyDelete
  44. எந்திரம் மூலம் ஓட்டுப்போடுவது என்பதை இந்தியாவில்தான் முதன் முதலில் செய்தார்களா? இல்லைனு தான் நெனைக்கிறேன். அப்போ அது சுஜாதாவுடைய கண்டுபிடிப்பு இல்லை, நண்பரே! :) ## இல்லை நண்பா அமெரிக்காவில் 1964 முதலே எந்திரம் மூலம் ஓட்டு அளிக்கும் முறை இருந்தது ..ஆனால் இங்கே தாங்கள் புரிந்துகொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால் இரண்டும் வேறு வேறு விதமான விஷயங்கள் ..உதாரணமாக PC க்கும் LAPTOPக்கும் உள்ள வித்தியாசம் என்று வைத்துக்கொள்ளுங்கள்..இரண்டும் ஒரே பணியை தான் செய்கின்றன ஆனால் இரண்டும் வேறு வேறு ..அது போல தான் EVM என்பது இந்தியாவிற்கென பிரத்தேக வடிவமைப்பு கொண்டது ..இதை வடிமைத்தது BHEL நிறுவனம் தான் ..அந்த வடிவமைப்பில் முக்கிய பங்கு ஆற்றியவர் சுஜாதா..இன்றைய சூழ்நிலையில் வேண்டுமானால் இது சர்வ சாதரணமா கண்டுபிடிப்பாக இருக்கலாம் ஆனால் அந்த எந்திரம் கண்டு பிடிக்கப்பட்ட ஆண்டு 1982 க்கு முன் ..அப்போது தொலைக்காட்சியே அரிய பொருளாக இருந்த தருணம் ...உங்களுக்கு சுஜாதாவை மட்டம் தட்ட வேண்டும் என்ற அடிப்படை மனநிலையில் STEROTYPING போக்கில் செயல் படுகிறீர்கள் அதனால் தான் அவர் கண்டுபிடிப்பில் பங்கு ஆற்றினார் என்றால் கூட அதை ஏற்றுக்கொள்ள மனம் வர மாட்டேன் என்கிறது ..இன்னும் புரியும் படி சொல்ல வேண்டும் என்றால் என்ஜின் என்பது நான்கே வகை தான் ஆனால் அதை ஒவ்வொரு நிறுவனமும் தனக்கு சொந்தமான கண்டுபிடுப்பு என்று சொல்வது எதனால் ??? கண்டுபிடிப்பு என்பது அடிப்படையை கண்டுபிடிப்பதில் மட்டும் இல்லை அதை முன்னேற்றம் செய்வதிலும் இருக்கிறது

    ReplyDelete
  45. நதி நாராயணன் மணி!

    நல்ல எதிர்வாதம், விளக்கம் நண்பரே! உங்க பின்னூட்டம் சுஜாதாவுக்கு சிறந்த அஞ்சலியாக அமையும்! :)

    ReplyDelete
  46. வருண், சுஜாதாவின் படைப்புகள் அமர இலக்கியங்கள் என்று பொய் சொல்லி வாதாடுவது என் உத்தேசமில்லை. நீங்கள் எழுதியதின் தொனி எனக்கு அவர் விக்கிபீடியா, புத்தகங்கள் இல்லாவிட்டால் எழுதியிருக்க முடியாது என்பதாகத் தோன்றியது. மற்ற வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டு, தன் சுவாரஸ்ய எழுத்து நடையால் ஈர்த்தார் என்பதுதான் நான் சொல்ல விரும்பியது. அந்த வெகுஜன எழுத்தும் எனக்குப் பிடித்தமானதே. நன்றிப்பா!

    ReplyDelete
  47. வருண் உங்கள் பதிவுகளைத் தவறாமல் படித்துவருகிறேன். உங்களின் வெளிப்படையான கருத்துக்களும் விவாதங்களும் பல சமயங்களில் எனக்குப் பிடிக்கும். சில பதிவுகள் என்ன சொல்லவருகின்றன என்பதையும் தாண்டி எதற்காக எழுதப்பட்டிருக்கின்றன என்பதையும் பார்க்கவேண்டியவர்களாக இருக்கிறோம். அந்தவகையில்தான் இந்தப் பதிவையும் பார்க்கவேண்டியிருக்கிறது.அப்படிப் பார்த்தால் ஒன்று மட்டும் புரிகிறது. நீங்கள் சின்ன வயதிலிருந்தே சுஜாதாவின் நல்ல ரசிகராக இருந்திருக்கிறீர்கள்(இப்போதும் அப்படித்தான் என்பது வேறுவிஷயம்)
    சுஜாதா பற்றிய பல்வேறு தகவல்களைக்கொண்ட புத்தகம் ஒன்று எழுதிவருகிறேன். பல விஷயங்களுக்கு அதிலேயே பதில் இருக்கும் என்பதனால் இங்கே ஒன்றும் சொல்லவிரும்பவில்லை.

    ஓட்டுப்பதிவு எந்திரம் பற்றிச் சொன்னதற்கு நண்பர் Nadinarayanan Mani(தமிழில் இவர் பெயரை எப்படி எழுதுவது என்பதில் குழப்பம்)சரியான விளக்கம் தந்திருக்கிறார். ஒரேயொரு திருத்தம். அது BEL. BHEL அல்ல. இரண்டு பொதுத்துறை நிறுவனங்களுக்கும் பெரிய வித்தியாசம் உண்டு. BHEL- என்பது கனரக இயந்திரங்களைத் தயாரிக்கும் நிறுவனம்.BEL-என்பது எலக்ட்ரானிக்ஸ் சம்பந்தப்பட்ட நிறுவனம்.Bharat Electronics limited- என்பதுதான் அதன் முழுப்பெயர். சுஜாதா இங்குதான் ஜெனரல் மேனேஜராக இருந்தார்.இதற்கு மேலே பதவி உயர்வு பெற்று மேனேஜிங் டைரக்டராகவும் சில மாதங்கள் இருந்தார் என்று நினைக்கிறேன்.

    ஓட்டுப்பதிவு எந்திரத்தை இந்தியாவுக்குக் கொண்டுவருவதற்கு சுஜாதா எடுத்துக்கொண்ட முயற்சிகள் அசாத்தியமானது. இது ஏற்கெனவே ஏதோவொரு நாட்டில் புழக்கத்தில் இருந்திருந்தாலும் இன்றைய இந்தியாவில் இப்போதைய புழக்கத்தில் உள்ளதற்கேற்ப வடிவமைத்து இயங்கச் செய்ததில் அவர் பங்கு மகத்தானது. இதையெல்லாம் ஏதோ இணையம் இருக்கிறது என்பதற்காக அவுட்டடி அடித்து விமர்சித்துவிட்டுப் போய்விடுவது நியாயமானதாகப் படவில்லை.
    தமிழனுடைய(அல்லது 'ஒரு மனிதனுடைய' என்றே வைத்துக்கொள்வோம்) எந்த உழைப்பையும் திறமையையும் அர்ப்பணிப்பையும் ஏதேதோ காரணங்கள் தேடி ஒன்றுமில்லாமல் செய்துகொண்டேயிருந்தால் நாம் எதற்குமே லாயக்கற்றவர்களாகத்தான் போகவேண்டியிருக்கும்.

    ஆன்லைனும் விக்கிபீடியாவும் கூகிளும் எப்போது புழக்கத்துக்கு வந்தன?
    சுஜாதா 69-லிருந்தே விஞ்ஞானத்தைத் தமிழில் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டுவிட்டார் என்பதை மட்டும் புரிந்துகொண்டால் போதும். நன்றி.

    ReplyDelete
  48. வாங்க அமுதவன்!

    அவரு BHEL னா சொன்னார்? நான் கவனிக்கவில்லை! மன்னிக்கவும். சுஜாதா ஜலஹல்லி பக்கத்தில் BEL லதான் இருந்தார்னு தெரியும். நான் கூட BEL ல ஒரு ப்ராஜெக்ட்ல இண்வால்வ் ஆகி இருந்தேன்.. ஓட்டுப் பெட்டி சம்மந்தமா இல்லை. எல் சி டி சம்மந்தமான ஒண்ணு! :)

    ----------

    உங்க பின்னூட்டத்தை கவனமாப் படிச்சுட்டு இன்னொரு பின்னூட்டமிடுறேன். :)

    ReplyDelete
  49. ***பால கணேஷ் said...

    வருண், சுஜாதாவின் படைப்புகள் அமர இலக்கியங்கள் என்று பொய் சொல்லி வாதாடுவது என் உத்தேசமில்லை. நீங்கள் எழுதியதின் தொனி எனக்கு அவர் விக்கிபீடியா, புத்தகங்கள் இல்லாவிட்டால் எழுதியிருக்க முடியாது என்பதாகத் தோன்றியது. மற்ற வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டு, தன் சுவாரஸ்ய எழுத்து நடையால் ஈர்த்தார் என்பதுதான் நான் சொல்ல விரும்பியது. அந்த வெகுஜன எழுத்தும் எனக்குப் பிடித்தமானதே. நன்றிப்பா!***

    நண்பர் பால கணேஷ்!

    இந்தப் பதிவே சுஜாதாவை ஆஹா ஓஹோனு எதுக்கெடுத்தாலும் புகழ்றதைப் பாத்து எரிச்சலடைந்து எழுதியது. ஏதாவது அவார்ட் வாங்கி இருக்காரானு பார்த்தேன். ஒண்ணும் இல்லை.. அதான் அவரு பெரிய இலக்கியவாதி இல்லைனு ஒரு விமர்சனம். :)))) ஆனால் என் விமர்சனத்தைப் பார்த்து ஜெயமோஹன் சந்தோஷப்படுவார். :)))

    ReplyDelete
  50. ****அந்தவகையில்தான் இந்தப் பதிவையும் பார்க்கவேண்டியிருக்கிறது.அப்படிப் பார்த்தால் ஒன்று மட்டும் புரிகிறது. நீங்கள் சின்ன வயதிலிருந்தே சுஜாதாவின் நல்ல ரசிகராக இருந்திருக்கிறீர்கள்(இப்போதும் அப்படித்தான் என்பது வேறுவிஷயம்)
    சுஜாதா பற்றிய பல்வேறு தகவல்களைக்கொண்ட புத்தகம் ஒன்று எழுதிவருகிறேன். பல விஷயங்களுக்கு அதிலேயே பதில் இருக்கும் என்பதனால் இங்கே ஒன்றும் சொல்லவிரும்பவில்லை.***

    நெஜம்மாவா சொல்றீங்க?! :)))

    நான் சுஜாதா ரசிகரா இருந்தேன்னு சொல்ல முடியாது. சுஜாதா ரசிகர்கள் மத்தியில் இருந்தேன்னு சொல்லலாம்.

    2-3 தர அவர் மேடை பேச்சை கேட்டு இருக்கேன். :) பங்களூரில் தமிழ் பேரவைனு சொல்லி போய் அவரை அழைத்தால் மறுக்காமல் வந்து விடுவார்.:)))

    ReplyDelete
  51. ****ஓட்டுப்பதிவு எந்திரத்தை இந்தியாவுக்குக் கொண்டுவருவதற்கு சுஜாதா எடுத்துக்கொண்ட முயற்சிகள் அசாத்தியமானது. இது ஏற்கெனவே ஏதோவொரு நாட்டில் புழக்கத்தில் இருந்திருந்தாலும் இன்றைய இந்தியாவில் இப்போதைய புழக்கத்தில் உள்ளதற்கேற்ப வடிவமைத்து இயங்கச் செய்ததில் அவர் பங்கு மகத்தானது. இதையெல்லாம் ஏதோ இணையம் இருக்கிறது என்பதற்காக அவுட்டடி அடித்து விமர்சித்துவிட்டுப் போய்விடுவது நியாயமானதாகப் படவில்லை.
    தமிழனுடைய(அல்லது 'ஒரு மனிதனுடைய' என்றே வைத்துக்கொள்வோம்) எந்த உழைப்பையும் திறமையையும் அர்ப்பணிப்பையும் ஏதேதோ காரணங்கள் தேடி ஒன்றுமில்லாமல் செய்துகொண்டேயிருந்தால் நாம் எதற்குமே லாயக்கற்றவர்களாகத்தான் போகவேண்டியிருக்கும்.***

    உங்க வருத்தமும், கோபமும் புரியுது..

    எதுவுமே எளிதல்ல என்பதும் தெரியும்! :)

    ReplyDelete
  52. நான் பெரிய சுஜாதா வெறியன் இல்லை தான் என்றாலும் இத்தனை கடுமையான விமர்சனத்தை ஜீரணிக்க முடியவில்லை . பெரிய இலக்கிய மேதை இல்லாவிட்டாலும் சாமானிய மக்களுக்கு சுவையாக கதை எழுதியவர் .Wikipediya பார்ததுசொன்னல் நாளை என் பிள்ளையும் என்னை முட்டாள் என்பானோ.

    சில வட்டார நடையும் வசவு வார்த்தைகளையும் எழுதுவது தான் இலக்கியம் என்றல் கஷ்டம் தான் ...

    ReplyDelete
  53. இன்றும் விகடன் பதிப்பகத்தில் அதிகமாக விற்பவை ஏன் ? எதற்கு ? எப்படி தானாம்

    ReplyDelete
  54. எனக்கு மனசே சரியில்லை ... இப்படியா ஒரு மனிசரை மட்டமா எழுதறது. இன்னமும் ஒவ்வொரு டிவி சன்னலிலும் , மருத்துவம் , Stock market பற்றி கத்துக்கிட்டே தான் இருக்காங்க ... சுஜாதா தன்னை பெரிய ஞானியாக சொல்லிகொன்டத்தை படித்ததில்லை.

    ReplyDelete
  55. உங்கள் முயற்சி வெற்றி பெற்று விட்டதாக இப்போதாவது நம்புகிறீர்களா?.அல்லது எதிர்பார்ப்பு இருக்கிறதா?

    ReplyDelete
  56. ***nanjil madhavan said...

    நான் பெரிய சுஜாதா வெறியன் இல்லை தான் என்றாலும் இத்தனை கடுமையான விமர்சனத்தை ஜீரணிக்க முடியவில்லை . பெரிய இலக்கிய மேதை இல்லாவிட்டாலும் சாமானிய மக்களுக்கு சுவையாக கதை எழுதியவர் .Wikipediya பார்ததுசொன்னல் நாளை என் பிள்ளையும் என்னை முட்டாள் என்பானோ.

    சில வட்டார நடையும் வசவு வார்த்தைகளையும் எழுதுவது தான் இலக்கியம் என்றல் கஷ்டம் தான் ...***

    தமிழ் இலக்கியம்னா என்னணு நீங்கதான் சொல்லணும்! சொல்லுங்க நான் தெரிஞ்சுக்கிறேன். :)

    ReplyDelete
  57. *** nanjil madhavan said...

    இன்றும் விகடன் பதிப்பகத்தில் அதிகமாக விற்பவை ஏன் ? எதற்கு ? எப்படி தானாம் ***

    அதனால என்னங்க?

    ReplyDelete
  58. ***nanjil madhavan said...

    எனக்கு மனசே சரியில்லை ... இப்படியா ஒரு மனிசரை மட்டமா எழுதறது.***

    எனக்கு யாரையாவது, "இவர்தான் உலக மஹா ஜீனியஸ்". இவர் மட்டும் பொறக்கலைனா தமிழே அழிஞ்சிருக்கும். தமிழனுக்கு இப்போ உள்ள அறிவுல கால் அறிவுதான் இருக்கும்னு சொம்படிக்கிற பதிவுகளைப் பார்த்தால்..மனசு சரியில்லாமல் போகும். :)))

    ReplyDelete
  59. ***சேக்காளி said...

    உங்கள் முயற்சி வெற்றி பெற்று விட்டதாக இப்போதாவது நம்புகிறீர்களா?.அல்லது எதிர்பார்ப்பு இருக்கிறதா?***

    என் முயற்சி?? ஆமா ஆண்லைன்ல எல்லாமே இருக்குனு மக்களுக்கு சொல்வது.. அதில் வெற்றிதான். இல்லையா?? :)))

    ReplyDelete
  60. சுஜாதாவை பற்றி எழுதினாலே இணையத்தில் பலர் உடனே தாக்குதலுக்கு தயாராவது எதிர்பார்த்ததே. நீங்கள் சொல்வது பலவிதத்தில் உண்மைதான். இன்டர்நெட் இல்லாத காலத்தில் சுஜாதா விஞ்ஞான சங்கதிகளை தனக்கே உரிய நக்கல் நடையில் புட்டு புட்டு வைத்து தன்னை சுற்றி ஒரு அறிவாளி என்ற ஒளி வட்டத்தை உருவாக்கிகொண்டார். உங்களின் சமன்பாடு கூட (சுஜாதா-கமல்-மதன்)மிகச்சரியானதே. இவர்கள் எல்லோருமே பாமரனை விட நிறைய தெரிந்தவர்கள் என்று படிப்பவர்களை நம்பவைக்க மிகுந்த சிரத்தை எடுத்துக்கொண்டு ரொம்ப எச்சரிக்கையாக எழுதுவார்கள்.(கமல் பேசுவார் அவ்வளவே வித்தியாசம்) இந்தப்பட்டியலில் சேர்க்கப்படவேண்டிய இன்னொரு நபரும் இருக்கிறார். அவர் பெயரை நான் சொன்னால் தேவை இல்லாமல் இசையை பற்றி வீண் விவாதம் வரலாம் என்பதால் அவரின் பெயரை தவிர்க்கிறேன்.
    எழுபதுகளின் முடிவில் சுஜாதா சிலிகான் சில்லுப்புரட்சி என்று ஒரு தொடர் தின மணி கதிரில் எழுதியதே எனக்கு தெரிந்து தமிழில் ஒரு எழுத்தாளார் கம்பியுட்டரை பற்றி எழுதிய முதல் கட்டுரை.(இது தவறாக இருப்பின் தெரிந்தவர்கள் என்னை திருத்தலாம்) அப்போது சுஜாதா அந்த கட்டுரையை சீரியசாகவே எழுதினார். அதில் அப்போது தமிழ் நடுத்தர வாசகனுக்கு தெரியாத பல தகவல்களை எளிமையாகவும் நேர்த்தியாகவும் எழுதினார் என்பதில் மாற்று கருத்து இல்லை.
    அவர் ஒரு விஞ்ஞான பின்னணி கொண்டவர் என்பதாலும் மிக அதிகமாக படிப்பவர் என்பதாலும் அவரால் பல விஷயங்களை தமிழுக்கு கொண்டுவர முடிந்தது. மேலும் அவரை ஒரு சிறந்த மொழிபெயர்ப்பாளர் என்பது கூட இப்போது எண்ணிப்பார்க்கையில் சரியானதாகவே தோன்றுகிறது. நிறைய படிப்பவர்களால் அதன் பாதிப்பு இல்லாமல் எழுதுவது ஏறக்குறைய சாத்தியமில்லாத ஒன்று. எனவே சுஜாதாவும் அப்படி தான் படித்த நடையால் உந்தப்பட்டு ஒரு புதிய தமிழ் பாணியை தமிழ் எழுத்துக்கு அறிமுகப்பத்தியதாக நாம் முடிவு செய்யலாம்.
    சுஜாதாவின் பிம்பம் எனக்குள் உடைய துவங்கியது எண்பதுகளின் முடிவில். அதுவரை நான் அவரின் எழுத்துக்களை தொடர்ந்து படித்துவந்தவன். கணேஷும் வசந்தும் போரடிக்க, அவரின் எழுத்தில் இருந்த மேதாவித்தனம், பாசாங்கு(இது அவரின் வார்த்தை உபயோகம்), தேவை இல்லாத நக்கல், தான் நிறைய படிப்பவன் என்பதை பொதுவாக அவரின் எல்லா கதைகளில் வரும் கதா பாத்திரங்கள் மூலம் விளம்பரப்படுத்துவது போன்ற காரணங்களினால் ஒதுக்க ஆரம்பித்தேன். இருப்பினும் இப்போது இணையத்தில் தான் பெரிய ஆள் என்று உதார் விடும் சில சில்லுவண்டு எழுத்தாளர்கள் மத்தியில் சுஜாதா ஒரு தனிப்பிறவிதான். வெகுஜன எழுத்தாளர்களில் அவரை போன்று புகழ் பெற்றவர்கள் இல்லை என்பது உண்மை. அவரை விமர்சிப்பது தவறு என்பது போல சிலர் சொல்வது வேடிக்கையானது. அவரை போல வேறு யாரும் எழுத்துலகில் இல்லை என்று கருத்து சொல்வது அபத்தம்.
    இறுதியாக திரு அமுதவன் அவர்கள் சுஜாதாவை பற்றி என்ன எழுதுகிறார் என்பதை படிக்க நான் மிகுந்த ஆவலாக காத்திருக்கிறேன். நான் இணையத்தில் மிக விரும்பி படிக்கும் எழுத்துக்கு உரியவர் அவர் என்பதால்.

    ReplyDelete
  61. காரிகன்:

    சுஜாதா பற்றி உங்க விரிவான பின்னூட்டத்திற்கு நன்றி! :-)

    ReplyDelete