Wednesday, March 13, 2013

பாலாவும் அவர் உருவாக்கும் கொடூர வயலண்ஸும்!

பாலா அவர்கள் தமிழ் படங்களில். வெள்ளித்திரையில் காட்டுற வயலண்ஸே எரிச்சலைக் கிளப்பும். "சரி, சினிமாதானே?" னு நம்ம பார்க்கணும்னு நம்மை நாமே சரிக்கட்டிப் பார்த்தாலும் கஷ்டமாத்தான் இருக்கும்.

இப்போ என்னடானா ரியாலிட்டி ஷோனு இவர் "களத்தில்" வயலண்ஸை எவ்ளோ ரசிக்கிறார்னு பரதேசிக்கு ஒரு விளம்பரம் வேற.

நான் இதை ஏற்கனவே சொல்லியிருக்கேன், பாலாவின் அசாத்திய திறமையை என்னால் பாராட்டமுடியாமல் அவரை வெறுக்க வைப்பது அவர் படங்களில் அவர் வயலண்ஸை காட்டும் விதம்தான் என்று.

வயலண்ஸை நிஜ வாழக்கையிலும் ரசிக்கும் ஒருவர் தான் இதுபோல் ரசித்து ரசித்து இதையெல்லாம் காட்ட முடியும் என்பது என் "மூடநம்பிக்கை"!



I always wonder, Has Bala been physically abused by someone when he was young?

இந்த பரதேசி ட்ரைலெர் தியேட்டருக்கு கூட்டத்தை கூட்டிவருமா? இல்லைனா இந்தப்படத்தை குழிதோண்டி பொதைக்க உதவுமானு பொறுத்திருந்துதான் பார்க்கணும்.

இப்போ உள்ள நம்ம இள ரசிகாமனிகளின் ரசனையை எல்லாம் குறைத்து மதிப்பிடமுடியாது! பார்க்கலாம்!

ஆமா,  எனக்கும் பாலாக்கும் என்ன பிரச்சினை? எதற்காக பாலா படங்களை எப்போவுமே நெகட்டிவாவே விமர்சிக்கிறேன் (கீழே உள்ள தொடுப்புகளையும் பார்க்கவும்)

பிரச்சினைனா..அவர் ரசிச்சு ரசிச்சுக்காட்டுற வயலண்ஸ்தான்.
 

பாலாபடங்கள், பாலா பற்றி தொடர்புடைய என் பதிவுகள்!

நான் கடவுள் இல்லை! கஞ்சா சாமியார்!

இயக்குனர் பாலாவின் “மிருகவெறி”!

நான் கடவுள் ஃப்ளாப் ஆனது ரஜினியாலா?



15 comments:

  1. இத பத்தி தான் என்னோட வலை தளத்துலே எழுதிருக்கேன்

    ReplyDelete
  2. இவரது சமீபத்திய படங்கள் ஊத்தோ ஊத்துன்னு ஊத்திகிச்சு.......... இன்னொரு மணிரத்னம் in the making..........

    ReplyDelete
  3. வெறும் நிழல் தானே...?

    வீடியோ : நல்ல விளம்பரம்...!!!

    ReplyDelete
  4. ***சக்கர கட்டி said...

    இத பத்தி தான் என்னோட வலை தளத்துலே எழுதிருக்கேன் ***

    நீங்க சொன்னதுக்கு அப்புறம்தான் போய் பார்த்தேன்.. ஒத்த சிந்தனைகள் உங்களுக்கும் எனக்கும்.

    ReplyDelete
  5. ***Jayadev Das said...

    இவரது சமீபத்திய படங்கள் ஊத்தோ ஊத்துன்னு ஊத்திகிச்சு.......... இன்னொரு மணிரத்னம் in the making..........**

    நான் கடவுள், அவன் இவன் ரெண்டுமே எடுபடவில்லைதான். இது என்னாகுதுனு பார்ப்போம், ஜெயவேல்.

    ReplyDelete
  6. *** திண்டுக்கல் தனபாலன் said...

    வெறும் நிழல் தானே...?

    வீடியோ : நல்ல விளம்பரம்...!!!**

    நிழல் நிஜமாவதும், நிஜம், நிழல் வடிவில் வருவதும் உண்டு சார். :)

    ReplyDelete
  7. இந்த விளம்பர டார்கெட்டே இந்த வருண் மாதிரி ஆளுகதான்..இப்டியே விமரிசனம் என்கிற பேரில் விளம்பரம் குடுத்து படம் பாக்குற ஐடியா இல்லாதவங்களையும் தியேட்டருக்கு கூட்டி வந்துருவாங்க...கமல் எல்லாருக்கும் ஒரு நல்ல வழிய காட்டி விட்டுருக்காரு.பாலா கடைசியா சிரிக்கிறாரு பாருங்க..நம்ம பயபுள்ளைகள பாத்துதான்...:)

    ReplyDelete
  8. வாங்க சுனா!

    நான் விளம்பரம் பண்ணி கோடி கோடியா சம்பாரிச்சுட்டேன் போங்கோ! :)))

    --------------

    கமல், பாலா ரெண்டு பேருக்குமே போதுமான அளவு பேரும் புகழும் இருக்கு..

    இதுமாரி "bad publicity" அவர்களுக்கு உதவுதா இல்லை உபத்திரவமானு எதையும் முடிவா சொல்ல முடியாது!

    ReplyDelete
  9. Bala's movies are not violent but SICK. If you like Hostel series movies, you will like them. This genre movies in Tamil are directed only by Bala and the person himself is sick. Sick genre movies have unique audience and not for common audience. In Tamilnadu only these sick movies are compared with regular movies and target everybody instead of the small crowd that like them.

    ReplyDelete
  10. வாங்க, அமர பாரதி!

    ஆனால் நிச்சயமாக திறமை நிறைந்த ஒரு இயக்குனர்தான் பாலா.. ஏன் இப்படி ஒருமாதிரியான பாத்திரங்களை ரசித்து எடுக்கிறார்? அதில்தான் அவருக்கு திருப்தி கெடைக்கிது? னு யோசித்தால் பாலா ஒரு மாதிரியான "வியாதியஸ்தன்"னுதான் முடிவுக்கு வரணும்! :(

    ReplyDelete
  11. //இந்த பரதேசி ட்ரைலெர் தியேட்டருக்கு கூட்டத்தை கூட்டிவருமா? இல்லைனா இந்தப்படத்தை குழிதோண்டி பொதைக்க உதவுமானு பொறுத்திருந்துதான் பார்க்கணும்.//
    உண்மைதான் . ரெம்ப சீப்பான ஒரு வெளம்பரம் . சிறந்த இயக்குனராக அறியப்பட்ட பாலா ,இனிமேல் மிக சீப்பான தயாரிப்பாளராக அறியப்படுவார் . புதிய இயக்குனர்கள் , தயாரிப்பாளர்கள் தங்களது வித்தியாசமான கதைகளாலும், கிரியேட்டிவான மார்கெட்டிங்கினாலும் படமெடுத்து வெற்றி பெரும் பொழுது . இவர்களின் தரம் தாழ்ந்த முயற்சி கேவலமாக இருக்கிறது .
    வழக்கமான விளம்பரத்தை தவிர்த்து, ஏதாவதொரு வில்லங்கமும் , விவகாரமும் இருந்தால தான் படம் போணியாகும் என்ற முடிவுக்கு மூத்த இயக்குனர்கள் ( கமல் , அமீர், மணிரத்னம், இப்போ பாலா ) வந்துவிட்டார்கள் .அப்டின்னா சரக்கு தீர்ந்து விட்டதாகவே தெரிகிறது . நல்ல கதைகளுக்கு இது போன்றவை தேவையில்லை .

    ReplyDelete
  12. நீங்க சொல்ற மாதிரி ஒரே மாதிரி படங்களைத்தான் ரசித்து எடுக்கிறார். அவருக்கு பிடிச்சது(?) பார்க்கறவங்களுக்கும் பிடிச்சிடும்.

    ReplyDelete
  13. இதென்னவோ விளம்பர உத்தி மாதிரி தெரியுது, நன்கு கவனித்த போது, அடி மெய்யாகவே விழவில்லை, சினிமாவுக்கு சினிமாக் காட்டி மக்களுக்கு எனிமாக் கொடுக்கும் முனிமாக்கள் இவர்கள் ! பிரியாவுடுங்க, மாணவர் போராட்டம் பத்தி எதாவது எழுதுங்க .

    ReplyDelete
  14. பாலா ஒரு ஜாதி வெறியர் தனது கல்லூரி காலங்களில் ஜாதி உணர்வோடு இருந்தவர் இன்றும் அதனை தொடர்கிறார். தான் ஜாதிக்கு அடுத்த நிலையில் உள்ள ஜாதியை சேர்ந்தவரையே படத்தின் வில்லனாக வைப்பார். அது வில்லனின் ஆடை, பழக்க வழக்கங்கள், ஆகியவை வழியாக சொல்பவர். மதுரை அதனை சுற்றி உள்ள மாவட்டத்தில் இருப்பவர்களுக்கு இது புரியும். தான் சார்ந்த இனத்தை சார்ந்தவர்கள் நல்லவர்கள் அப்பாவிகள் என்று கட்டுபவர் உதாரணம் "அவன் இவன்" போலீஸ். தனது எந்த சினிமாவிலும் பெரிய பண முதலைகளை வில்லனாக சித்தரிக்காதவர். அடி மனதின் வெறுப்பை, கோபத்தை சினிமாவில் தீர்த்துகொள்வார் . வில்லனை கொடூரமாக சாகடிப்பார். இவர் திரைப்படங்களில் இறுதியில் வரும் வன்முறை காட்சிகளை நீக்கிவிட்டு படத்தை போட்டால் அது ஓடாது.

    ReplyDelete
  15. நல்ல பகிர்வு...

    எப்படிப்பார்த்தாலும் பாலாவுக்குள் ஒரு நல்ல இயக்குநர் இருக்கிறார் என்பதை மறுக்க முடியாது....

    இருந்தும் அவர் தேர்ந்தெடுக்கும் கதைக்களம் ஒரு வட்டத்துக்குள்தான் இருக்கிறது.

    ReplyDelete