Wednesday, August 13, 2014

வருணின் சுமாரான உளறல்கள் (2)

* மிஸஸ் டஃப்ட் ஃபயர் புகழ் (அதான் அவ்வை ஷண்முகி) ராபின் வில்லியம்ஸ் இறந்துவிட்டாராம்!!!  வாழப்பிடிக்கவில்லைனு தன்னைத்தானே அழித்துக் கொண்டாராம்! ஆமாம், தற்கொலையாம்! அவர் வாழ்க்கை, அவர் அதை என்ன வேணா செய்யலாம்! இதில் நான் சொல்ல என்ன இருக்கு?

 

இருந்தாலும்..

இவர் ஒரு "எண்டர்டெய்னராக" வாழ்ந்தவர். எல்லோரையும் தன் நடிப்பால் ரசிக்கவைத்தவர்!  சிரிக்க வைத்தவர்!  ஆனால் அவருடைய வாழ்க்கையில் சந்தோஷமாக இல்லையாம். யாருதான் இவ்வுலகில் சந்தோஷமாக இருக்காங்க? வாழ்வில்  தன்னைத்தானே ஏமாற்றி சிரித்து, உலகைப் புரிந்து  வாழத் தெரியாத ஒரு அப்பாவி போல இவரு...இவருக்கென்ன பிரச்சினைனு தெரியலை. இவரு  என்ன ஃபிஸிக்கல்லி சேலஞ்சிடா? இல்லை மெண்டல்லி சேலஞ்சிடா? காசுக்கு பிரச்சினையா? பொண்டாட்டிக்கு பஞ்சமா? (மூனுதர கல்யாணம் பண்ணி இருக்காரு). தன் மனதை மனச்சலவை செய்து தன்னையே ஏமாற்றி  சந்தோசமாக வாழத் தெரியாதவர் பாவம்! யாருதான் பிரச்சினைகளால் குழம்பவில்லை? எல்லோரும்தான் குழம்புகிறோம். வாழவேண்டுமென்றால் குழப்பத்தில் இருந்து வெளிவர கற்றுக்க வேண்டும். மனதைப் பழக்கப்படுத்த வேண்டும். இவரு மட்டும்தான் குழம்பினாரா? Buddha was confused too. He did not commit suicide! He realized what human mind is all about! அதுக்கப்புறம் புத்தர் குழம்பவே இல்லை!

அதனால நான் என்ன சொல்றேன்னா..Don't THINK too much about life! If you are a sensible person, I am sure you can not find any beautiful meaning in the life we live! You should just know how to fool yourself to live happily.That's all. Just LIVE! :-))

**************************

* படம் வந்து ஒரு வருடத்திற்குப்பிறகு பலராலும் பலவாறு புகழப்பட்ட  தங்கமீன்கள்.. கடைசியா பார்த்தாச்சு.

 

செல்லம்மா மாதிரி ஏகப்பட்ட குழந்தைகளைப் பார்த்தாச்சு.ஆனால் "கல்யாணி' மாதிரி ஒரு அப்பாவை இங்கேதான் பார்க்க முடிஞ்சது.

 நான்கூட  செல்லம்மா மாதிரித்தான் படிச்சேன். மக்காத்தான் இருந்தேன். ஆமா அரசு பள்ளியில்தான். ஆமா தமிலு மீடியம்தான்! கடைசியா செல்லம்மா போயி "செட்டில்" ஆகும் அரசினர் பள்ளியைவிட பலமடங்கு  மட்டமான பள்ளிதான் நான் "ஐந்தாங் கிளாஸ்" வரை படிச்சது! நெஜம்மாத்தான் சொல்றேன்..ஆமா, யார் சொன்னா சிறுவயதில் சுமாராப் படிச்சா பின்னால நல்லாப் படிச்சு வெற்றியடைய முடியாதுனு? என்ன முகத்தை சுழிக்கிறீங்க? இந்தப் படத்தை வைத்து நான் சுயதம்பட்டம் அடிக்கிறேன்னா? :)

சரி, படத்துக்கு உள்ளே இறங்குவோம்..

உங்க குழந்தை, "போட்டிமனப்பான்மை" இல்லாமல் வித்தியாசமான சிந்தனைகளுடன் இருந்தால்... அவளு(னு)டைய "learning style" வேறு மாதிரியாக இருந்தால் அவள் மனநிலைக்கேற்ப சரியான பள்ளியில் சேர்க்க வேண்டியதுதான் சரி.

இதை இவ்வளவு மிகைப்படுத்தாமல் செய்கிற தாய் தந்தையர்லாம் "ரியல் லைஃப்"ல இருக்கத்தான் செய்றாங்க. I don't have to go and search anywhere to find such parents! நாம் அன்றாட வாழ்க்கையில் பார்க்கிறோம். ராம், அப்படிப்பட்ட சாதாரணமான ஒரு தந்தை ரோலை ரொம்ப கஷ்டப்பட்டு,  மிகைப்படுத்தி செய்றாரு, பாவம்.

சப்போஸ் +2 ல கெமிஸ்ட்ரில 200/200  வாங்கிய மாணவ/மாணவிகளுக்கு அந்த புத்தகத்தில் இருக்க கெமிஸ்ட்ரி எல்லாம் அழகா புரிஞ்சி இருக்கும்னு நெனச்சீங்கனா, நீங்களும் மக்குதான்! அந்த 200 வாங்கிய  பையனோ, பொண்ணோ "ஸ்மார்ட் ஸ்டூடண்ட்" அவ்ளோதான். அதுக்காக 200 வாங்கியவன்/ள் நல்ல "கெமிஸ்ட்" வருங்காலத்தில் நோபல்பரிசு பெறுவார் என்றெல்லாம் சும்மா ஒளற முடியாது. Scoring high marks has nothing to do with your deep understanding in that subject. அப்படி உண்மையிலேயே ஆழமாகப் படிக்கணும் புரியணும்னு நெனைக்கிற மாணவர்கள் இருநூறெல்லாம் வாங்க முடியாது. They get stuck somewhere- trying to understand something deeply as they dont have enough time. நல்லாப் படித்து மதிப்பெண் எடுத்தலும், புரிதலும் வேற வேற!

சரி படத்துக்கு வருவோம்.

எனக்கு இது புரியலை..ஒரு சீன்ல செல்லம்மா  தன் தோழியிடம் பேசும்போது  அந்த வீட்டு ஜன்னலை காட்டினார்கள். அதான் அந்த ஜன்னல் மூலமாக அவள் தன் தோழியிடம் பேசுவதை..

அந்தத்தோழி உண்மையானவளா?  இல்லைனா கற்பனை கேரக்டரா???

ஏன் கேக்கிறேன்னா. அந்த ஜன்னல்..

அந்த ஜன்னல் இருக்குல்ல.. அதென்ன அது.. அந்த ஜன்னலை வெளியே இருந்து திறக்க முடியுமாம், மூட முடியுமாம். உள்ளே இருந்து எதுவும் செய்ய முடியாதாம்!!!

தெரியாமல்த்தான் கேக்கிறேன்..ஒரு வீட்டில் ஜன்னல் எதுக்கு வைக்கிறோம்? வீட்டில் உள்ளவர்கள் தன் "ப்ரைவசி"க்காக! தேவையான போது  அதை "அட்ஜஸ்ட்" செய்வதுக்காகத்தான்னு நான் ஒரு லெக்ச்சர் கொடுக்கணுமா என்ன?. இது ஏன் இப்படி முட்டாள்த்தனமான ஒரு"ஜன்னல் கட்டமைப்பு" அதுவும் ஒரு சிறிய வீட்டில்? எனக்குப் புரியலை! புரிஞ்சவங்க தெளிவு படுத்தலாம்- என் அறியாமையைப் போக்கலாம்!!! இயக்குனர் ராம், தன்னை ஜீனியஸாகக் காட்டணும்னு எல்லாரையும் முட்டாளாக்கி இருக்காரா? இல்லை எங்க வீட்டில் மட்டும் முட்டாள்த்தனமா  ஜன்னலை மாத்தி வச்சுட்டாங்களா? Am I missing something here? படத்தை இன்னொருதர பார்க்கவா? அதெல்லாம் முடியாது. தங்கமீன்களில் பாராட்ட எவ்ளோவோ விடயம் இருக்கு? ஏன் வருண் இப்படி?னு யாரோ தலையில் அடிச்சுக்குவதுபோல் ஒரு உணர்வு.

*********************

*  சொந்தக்கதை..

"டேய் மாப்ளே!  இவன் என்னடா சொல்றான்? பறவைகள் இவன் வீட்டுக்கு கூட்டம்கூட்டமா வருதாம்! இரை போட்டானாம். எல்லாத்தையும் காலி பண்ணிட்டு திரும்ப வருதாம்! ஆனால் இவன் சொல்ற கதைக்கு ஒரு ஃபோட்டோவையும் காணோம். ஏதோ கூகில் இமேஜில் இருந்து நாலு படத்தை வெட்டி ஒட்டியிருக்கான், நாதாரி. ஆத்தாடி! என்னமா கதை விடுறானுக! நாங்களும்தான் சொல்லலாம் எங்க வீட்டில் மானாடுது, மயிலாடுதுனு, குயில் கூவுதுனு" ..

யாரு இப்படி பேசிக்கிறது? இதுமாதிரித்தான்  எங்க ஊரில் ஒருத்தன் இல்லாதபோது அவன் "நண்பர்கள்" எல்லாம்  அவனைப் பற்றி புறம் பேசிக்குவானுக!

அதனால எதுக்கு வம்பு?  எங்க வீட்டில் வந்து செல்லும்  விருந்தாளிகளை காட்டிடுவோம்..நாலு சுமாரான படத்தை கொடுத்துடுவோம்!



இரை நெறையா இருக்கா?

அணில் வந்து கொட்டிவிட்டுடுச்சு பாருங்க. இரை எல்லாம் கீழே விழுந்து கெடக்கு



ஆமா, என் பங்கு எங்கே? னு புறாவோட இன்னொருத்தரு போட்டிக்கு

எல்லாம் காலி! come on Varun! ரிஃபில் டைம்!!னு குருவி கத்துது..



உளறல்கள் தொடரும்...



25 comments:

  1. வாழ்க்கை பற்றிய உங்கள் அறிவுரையும், கல்வி பற்றிய உங்கள் கருத்துகளும் அருமை..யதார்த்தத்தைச் சொல்லி இருக்கிறீர்கள்..இன்றும் பல பெற்றோர் மதிப்பெண் வாங்கவேண்டுமே என்று சொல்லி, கவலைப்பட்டு மற்றவரையும் குழப்பி விடுகின்றனர்..அப்படி ஒரு தாயிடம் புரியவைக்க முயற்சிசெய்து, என் வாய் திறக்க முடியாமல் காது வலி வாங்கிக்கொண்ட சம்பவம் உண்டு.. :)
    இரைதேடி வரும் உயிர்கள் மிக அழகு. வாழ்த்துக்கள் வருண். அருமையான கருத்துகளைச் சொல்லிட்டு உளறல் என்று தலைப்பா?

    ReplyDelete
  2. Glad to see you Grace. :) Lots of my opinions about life are shared here, Grace. I am sure so many would disagree with my view of life. That is the reason I humbly say உளறல்கள்! :=)

    ReplyDelete
  3. உண்மையை உரைக்கும் “உளறல்“ பதிவு அருமை வருண் சார்.

    ReplyDelete
  4. வாங்க, அருணா! :)

    கருத்துரைக்கு நன்றிங்க! :)

    ReplyDelete
  5. என்ன சர்ப்ரைஸ்ன என் ரீடிங் லிஸ்டில் அடுத்தடுத்து ஒரே மாதிரி ரெண்டு பதிவு**http://www.malartharu.org/2014/08/robin-williams.html**

    ReplyDelete
  6. ***.ஆமா, யார் சொன்னா சிறுவயதில் சுமாராப் படிச்சா பின்னால நல்லாப் படிச்சு வெற்றியடைய முடியாதுனு** ஹை!! நானும் அப்படிதான் தொடங்கினேன்:))இதை படிச்சு பாருங்க**http://makizhnirai.blogspot.com/2014/01/blog-post_7.html**சும்மா சும்மா லிங்க் கொடுக்கிறேன் கோச்சுக்ககூடாது.FRIENDSHIP IS SHARING. ISN'T IT:)

    ReplyDelete
  7. தங்கமீன்களில் பாராட்ட எவ்ளோவோ விடயம் இருக்கு? எப்படி வருண் இப்படி?னு அசந்து ல போனேன்;)உளறல் ரொம்ப நல்லாவே இருக்கு:))

    ReplyDelete
  8. ***என்ன சர்ப்ரைஸ்ன என் ரீடிங் லிஸ்டில் அடுத்தடுத்து ஒரே மாதிரி ரெண்டு பதிவு**http://www.malartharu.org/2014/08/robin-williams.html** ***

    I noticed that too. Good timing! He seems like a big fan of him and he could not take his loss easily.

    Suicide is something unacceptable to me. Not sure I can feel sorry for people those who don't want to live!

    ReplyDelete
  9. ***.ஆமா, யார் சொன்னா சிறுவயதில் சுமாராப் படிச்சா ***பின்னால நல்லாப் படிச்சு வெற்றியடைய முடியாதுனு** ஹை!! நானும் அப்படிதான் தொடங்கினேன்:))இதை படிச்சு பாருங்க**http://makizhnirai.blogspot.com/2014/01/blog-post_7.html**சும்மா சும்மா லிங்க் கொடுக்கிறேன் கோச்சுக்ககூடாது.FRIENDSHIP IS SHARING. ISN'T IT:)***

    என்ன சொல்றீங்கனு கட்டாயம் பார்க்கிறேன். :)

    ReplyDelete
  10. ***அசந்து ல போனேன்;)***

    இப்படியும் ஒரு ஆளு இருக்கான்னா??!!

    :=)))))))))))))))))

    ** உளறல் ரொம்ப நல்லாவே இருக்கு:))**

    :-)

    ReplyDelete
  11. சிறந்த திறனாய்வுப் பகிர்வு
    தொடருங்கள்

    ReplyDelete
  12. தங்கள் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி, திரு காசி ராஜலிங்கம்! :)

    ReplyDelete
  13. வருண் நீங்க ரிலாக்ஸ் ஆனதற்கு அப்புறம் இந்த பதிவை படித்து கருத்துச்சொல்ல வேண்டுகிறேன்:)
    http://www.tronbrook.com/2014/08/ode-on-my-scooter.html

    ReplyDelete
  14. ஓ அப்படி... :)
    ஆனா, வருண் உளறலையும் ஒத்துக்க மாட்டாங்க சில மக்கள், ஏன்னா அவங்க உளறல் வித்தியாசமாய் இருக்கும்! :)

    ReplyDelete
  15. ஒரு போஸ்டுக்கும் இன்னொனுக்கும் இவ்ளோ டைமா எடுக்கிறது:(( two weeks ஆச்சு man. மைதிலி வெய்டிங்:))

    ReplyDelete
  16. லைஃப் கொஞ்சம் பிஸியா போயிட்டு இருக்குங்க, மைதிலி! :)

    ReplyDelete
  17. ராபின் இழப்பின் காரணம் பெர்கின்சன்ஸ் ..
    சிந்தனை செயல்பாடுகளை மாற்றிவிடும் ஒரு நோய்..

    பெரிய இழப்பு அது.

    நல்ல விமர்சனம் தங்கமீன்கள்

    ஆமாப்பா அந்த தீனிப் பெட்டி எங்க வாங்கினீங்க...?

    ReplyDelete
  18. பிஸியா இருக்கிறது நல்ல விஷயம் தானே:))take care:))

    ReplyDelete
  19. மதுரையில் சந்திக்கிறோம் வருண்...

    ReplyDelete
  20. வருகையை பதிவு செய்ய :
    http://dindiguldhanabalan.blogspot.com/2014/08/Tamil-Writers-Festival-2014-1.html

    ReplyDelete
  21. வீட்டுக்கு வந்து செல்லும் விருந்தாளிகள் படம் அருமை.

    ReplyDelete
  22. Mathu S said...

    ராபின் இழப்பின் காரணம் ****பெர்கின்சன்ஸ் ..
    சிந்தனை செயல்பாடுகளை மாற்றிவிடும் ஒரு நோய்..

    பெரிய இழப்பு அது.****

    உண்மைதான் மது! அவர் இந்த முடிவுக்கு வரும்போது அவராகவே இருந்து இருக்க மாட்டார். பொதுவாக தர்கொலை செய்பவர்களை முதலில் மனநோய் ஆட்கொள்கிறது. தன்னை இழந்த பிறகுதான் தன் உயிரை இழக்கிறாங்கனு சொல்றாங்க.

    ***நல்ல விமர்சனம் தங்கமீன்கள்****

    :)

    ****ஆமாப்பா அந்த தீனிப் பெட்டி எங்க வாங்கினீங்க...?***

    இங்கே விதவிதமா, அழகழகா செய்து "ரெடி மேட்" ஆக விக்கிறாங்களே!:)

    ReplyDelete
  23. *** Mythily kasthuri rengan said...

    பிஸியா இருக்கிறது நல்ல விஷயம் தானே:))take care:))***

    எல்லாம் நன்மைக்கே, மைதிலி :)

    ReplyDelete
  24. வாங்க தனபாலன்!

    மதுரையில் பதிவர் சந்திப்பு எல்லாம் நல்ல முறையில், சிறப்பாக நடக்க, வாழ்த்துக்கள்! :)

    ReplyDelete
  25. ***கோமதி அரசு said...

    வீட்டுக்கு வந்து செல்லும் விருந்தாளிகள் படம் அருமை.***

    வாங்க கோமதி அம்மா! நன்றி! :)

    ReplyDelete