Wednesday, December 17, 2014

லிங்கா பார்த்த கதை!

அமெரிக்கா கொட்டகையில் போயிப் படம் பார்த்து ரொம்ப நாளாச்சு. பல வருடங்களாச்சு! ஆமா, எந்திரன் பார்த்தது. நேரம் சரியாக அமையாததால் கோச்சடையான்கூட பார்க்கவில்லை! அதென்னவோ லிங்கா படம் பார்க்கணும்னு ஒரு ஆவல்.  படம் பார்க்க நேரமும் கிடைத்தது.

ஒரே க்யூரியாஸிட்டி..  இந்த அறுபத்து நாலு வயசுல ரஜனி என்னதான் நடிச்சு இருக்காரு? இந்த வயதில் ஆடி ஓடி "ரஜனியாக" ஸ்டைலுடன் நடிக்க முடியுமா? அதுவும் இந்த வயதில் சின்னப் பொண்ணுங்க  அனூஷ்கா, சோனாக்ஸியோட எல்லாம் ரஜனி டூயட் எல்லாம பாடுவதைப் பார்த்து ரசிக்க முடியுமா? என்ற பதில் தெரியாத கேள்விகளுக்கு பதிலறிய ஆசை. இது போதாதுனு படம் வெளிவரும் முன்னாலேயே ஆளாளுக்கு இது என் கதை என் கதைனு சொல்லி கேஸ் மேலே கேஸ் போடுறாஙகளே?

அப்படி என்னதான் கதை ? சரி போயித்தான் பார்ப்போமே?னு புறப்பட்டுப் போனேன்.

இருங்க!

******************************

இதுக்கு இடையில் பதிவுலகில் விமர்சனங்களும் வந்துவிட்டன.

*  மணிமாறன் (இவர் என்ன மூடுல படம் பார்த்தாரோ?) படம் ஒரு தர பார்க்கலாம்னு ஒரே சலிப்பு! இவர் விமர்சனத்தில் சுத்தமாக நம்பிக்கை இல்லை!

அப்புறம் நம்ம ரஜினி ரசிகர் கிரி, நான் எதிர்பார்த்ததுக்கு எதிரா இவர் விமர்சனம்! கிரிதான் நமக்கு சுத்தமாப் பிடிக்காத இயக்குனர் பாலா ரசிகரே. அதனால இவர் டேஸ்ட் வேற மாதிரி இருக்கலாம்னு என்னை நானே சரிக்கட்டிக்கிட்டேன்.

* ரஜினி விசிறி ஹாரியின் விமர்சனம். அதுவும்  ஓரளவுக்கு நல்லா இருந்தாலும்,  ரொம்ப நல்லா இருந்ததுனு சொல்ல முடியாது.

எல்லாமே நெகட்டிவ்தான்!

* ரஜினி விசிறி ஆரூர் மூனா விமர்சனம் வந்தது!! விமர்சனம் நல்லா இருந்தது! சரி ரஜினி விசிறியாக இருந்தாலும் இவர் ஓரளவுக்கு நியாயமாகத்தான் எழுதுவாருனு ஒரு நம்பிக்கை வந்தது!

* உண்மைத்தமிழன், சரவணன்  நல்ல விமர்சனம் எழுதி இருந்தாரு. இவரு சுமாரான ரஜினி விசிறி என்றாலும், ஓரளவுக்கு நியாயமாகத்தான் எழுதுவாருனு ஒரு ஆறுதல்.

* அதிசயமாக,  ஜாக்கி சேகர் விமர்சனமும் நல்லா இருந்தது!!! இவர் ஒரு  கமல் ரசிகர்னுகூடச்  சொல்லலாம். இருந்தும் இவர் விமர்சனம் நம்ம ரஜினி விசிறிகள்  கிரி, ஹாரி விமர்சனத்தைவிட  நல்லா இருந்தது.

சரினு ரொம்ப எதிர்பார்க்காமல்த்தான் படம் பார்க்கப் போனேன்..

**************************

நான் போனது முதல் நாள் முதல்காட்சி கெடையாது.  ரெண்டாவது நாள், நைட் ஷோ. அமெரிக்காவில்தான் இப்போலாம் தமிழ்ப்படம் முக்குக்கு முக்கு தினமும் நாலு ஷோ ஓடுதேனு டிக்கட் எல்லாம் ஆண்லைன்ல வாங்கவில்லை! கொட்டகைக்கு ஒரு அரை மணி நேரம் முன்னால போயிட்டேன்.

அங்கே பார்த்தால் ஒரே குடும்பம் குடும்பமா லிங்கா பார்க்கனு குழந்தைகளையும் அழச்சுண்டு வந்துட்டாங்க நம்ம மக்கள். ஒரே பெண்கள் கூட்டம். அவுங்கல்லாம் நம்மல மாரியில்லாமல் ஏற்கனவே டிக்கட்டும் வச்சுண்டு இருந்தாங்க.

சரி கவுண்டரில் போயி லிங்கா ஒரு டிக்கட் னு சொன்னதும் அந்த வெள்ளைக்காரி ஒரு சர்காஸ்டிக் லுக்குடன்!  டிக்கட் விலை  இருபது டாலர் என்றார். "ஆமா எட்டு டாலர்தானே எல்லாப் படமும் இருபது டாலருக்கு அப்படி என்ன படம் பார்க்கிறார்கள்?"  என்பது போல ஒரு லுக்கு விட்டுச்சு அந்த அம்மணி.  "உனக்கு இதெல்லாம் புரியாதும்மா" னு  நானும் சிரிச்சுக்கிட்டேன்.. சரி டிக்கட்டை கொடு னு வாங்கிட்டு உள்ள போனால், ஒரே தாய்க்குலங்கள்தான்ப்பா அலைமோதுச்சுக..

"போய் ஒரு ரோ  ஃபுல்லா சீட் போடணும். அவ வர்ரா. இவ வர்ரா.. ஒண்ணா உக்காந்து பார்க்கணும்"னு ஒரு அம்மா ஒரே  அமர்க்கலம் பண்ணிட்டு இருந்துச்சு!

"நேத்தே முதல் காட்சி முடிந்ததுங்க. இன்னைக்கு கூட்டம் கம்மியாத்தான் இருக்கும். இடம்லாம் ஈஸியா கிடைக்கும்.. கவலைப்படாதீங்க!" னு நானும்  தெரிஞ்ச ஆள் மாதிரி பதில் சொன்னேன். அதென்னனு தெரியல. தமிழ்ப் படம் பார்க்க போனா இந்த ஆண்ட்டிகள் (ரஜினி ரசிகைகள்) எல்லாரும் நமக்கு சொந்தம் போலதான் தோனும். :)

"நீங்கதான் வெங்கட் ஃப்ரெண்டா?"னு இன்னொரு அம்மா என்னிடம் ஓடி வந்துச்சு!

"ஐயோ, அது நான் இல்லைங்க!" னு சொல்லிட்டு வரிசையில் நின்னா ஒரே திருவிழாக்கோலம்தான்.

தியேட்டர் உள்ள போகும்போதே கூட்டம் ஓரளவுக்கு வரும்னு தோன்றியது. கொஞ்சம் நல்ல இடமாப் போயி பிடிச்சுக்குவோம்னு (அமெரிக்காவில் சீட் நம்பர் எல்லாம் கெடையாதுங்க. இவங்க உங்களைவிட கொஞ்சம் பின் தங்கிதான் இருக்காங்க) வேகமா  உள்ள போயிட்டேன். நேரம் ஆக ஆக கூட்டம் கூட்டமா பிள்ளை குட்டிகளை இழுத்துக்கிட்டு வந்துட்டாங்க நம்ம மக்கள்.

கழுத்து வலிக்கிறாப்பிலே படம் பார்க்கும் சீட்கள்.. அதாங்க முன்னால முதல் மூனு ரோ மட்டும் ஃபில் ஆக வில்லை. மற்ற ரோ எல்லாமே ஃபில் ஆயிடுச்சு! தியேட்டரில்  ஒரு 80% ஃபுல்லாகி இருந்ததுனு சொல்லலாம். ஒரு 150 பேரு இருப்பாங்கனு நெனைக்கிறேன்.

20 டாலர் தெண்டம் போட்டு படம் பார்க்க வந்து இருக்கேனே?னு ஒருத்தர் கூட கவலைப் பட்ட மாதிரி தெரியலை. இதுல ஒரு சில அம்மாக்கள் விசில் எல்லாம் கொண்டு வந்து அடிச்சுக்கிட்டு படம் பார்க்கிறாங்கப்பா. :)

**********************

பாடல்கள் எல்லாம் ஏற்கனவே வெளி வந்துவிட்டாலும், பாடல்களை அவ்வளவா கேட்கவில்லை. ஏதோ ஒரு 5 பாட்டு இருக்குணு தெரியும். ரெண்டு டூயட்டையும் யு ட்யூப்ல லேசா பார்த்து இருந்தேன்.

சரி, படத்தைப் பத்திச் சொல்லவா?

படம் ஆரம்பம் கிராமத்தில். ஒரு அஞ்சு நிமிடம் ரஜினி இல்லாமலே படம் ஓடுச்சு. அப்புறம்தான்  இண்ட்ரோ சாங் (ஓ நண்பா) வந்தது.

படையப்பாவில்,  சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு னு வெளியே அவுட்டோரில் எடுத்து இருப்பாங்க. இங்கே ஒரு செட்டு போட்டு இந்தப் பாட்டு எடுத்து இருந்தாங்க. பாட்டு நல்லாத்தான் இருந்தது. பார்க்கவும் கேட்கவும்! இந்த வயதில் ரஜினி நல்லா எனெர்ஜ்டிக்காத்தான் இருந்தார்.

அப்புறம், திருடன் ரஜினி- சந்தானம் காமெடி.

 அப்புறம்தான் சேச்சி அனூஷ்கா வந்தார்.

நான் பயந்த மாரி இல்லாமல் 64 வ்யது ரஜினியையும் 25 வயது அனுஷ்காவையும் ஜோடியாக ரசிச்சுப் பார்க்க முடிந்தது. அனுஷ்கா சூரயாவுடன் பார்க்கும்போது ரொம்ப உயரமாத் தெரிவார். இப்போ ரஜினியோட பார்க்கும்போது அப்படித் தெரியவில்லை. மேலும் கொஞ்சம் (ரொம்பவே) வெயிட் போட்டு இருப்பதால் இந்த ஜோடி நல்லாத்தான் இருந்தது.

வேறமாரிச் சொல்லணும்னா இவங்க ரொம்மாண்ஸ்,  சந்திரமுகில , ரஜினி-நயனை ரொமாண்ஸைவிட, சிவாஜில  ரஜினி-ஸ்ரேயா ரொமாண்ஸைவிட, எந்திரன்ல  ரஜினி-ஐஸ்வர்யா ஜோடியை விட நல்லா இருந்தது நான் சொன்னால் நம்ப மாட்டீங்க. என்னுடைய மதிப்பீடு அது.


 



எனக்கு இந்த கெமிஸ்ட்ரி பிடிச்சி இருந்தது. இதற்கு முக்கியக் காரணம் அனூஷ்கா சாதாரணமாக ரஜினியோட காசுவலாக க்ளோஸாக நடிச்சு இருந்தார்.

ஆக, என்னுடைய பயம் கொஞ்சம் கொஞ்சமாப் போயிடுச்சு.

அதுக்கப்புறம் படம் ஜாலியாத்தான் போச்சு. காமெடியெல்லாம் சிரிக்க முடிஞ்சது. எரிச்சல் தரவில்லை!

 


இடைவேளைக்கு அப்புறம் படம் நீளம், போர் னு எல்லாரும் சொன்னாங்க, சத்தியமாக எனக்கு அப்படி தோனவில்லை.

 ப்ஃளாஷ்பேக் எல்லாம் நல்லாத்தான் இருந்துச்சு. ரஜினியின்  நடிப்பையோ பாடல்களையோ, பேக்ரவுண்ட் ம்யூசிக்கோ எனக்கு எதுவும் குறையாகத் தோனவில்லை!

ஆளாளக்கு விமர்சகர்கள் எல்லாம் நல்ல வில்லன் வேணும்னு அடம் பிடிக்கிறாங்க. எனக்கு அதெல்லாம் தேவைப் படவில்லை!

சும்மா சொல்லக்கூடாது சோனாக்சியும் நல்லாவே நடிச்சு இருந்தார். சோனாக்ஸி-ரஜினி காம்பினேஷனும் ரொம்ப விரசமில்லாமல் நாகரீகமாக இருந்தது. அனுஷ்கா-ரஜினி அளவுக்கு கெமிஸ்ட்ரி இல்லை என்றாலும் நல்லாத்தான் இருந்துச்சு. அவர்களுக்கு வரும் டூயட்டும் நல்லாவே இருந்தது.

 


லிங்கேஸ்வரன் ரஜினி பெரியவர்களுக்கும் பெண்களுக்கும் ரொம்ப பிடிக்கும். (இருங்க! நீஙக ரஜினியை வெறுப்பவராக இல்லை என்றால்! :) )

ரெண்டு டூயட்களுமே நல்லா இருந்தது.

படையப்பா படத்தில் வர்ர  டூயட், எந்திரன் டூயட், சந்திரமுகி டூயட், சிவாஜி டூயட்களைவிட எனக்கு இந்தப் ப்படத்தில் எடுத்து இருந்த டூயட்கள் பிடிச்சதுனு நான் சொல்லணும். :)

 


http://st1.bollywoodlife.com/wp-content/uploads/2014/11/rajini-sonakshi.jpg


அப்புறம் எல்லாரும் குறை சொல்லும் க்ளைமேக்ஸ் எனக்கு எரிச்சல் எல்லாம் தரவில்லை! ரஜினியின் மசாலாப்  படத்தில் க்ளைமாக்ஸ்னா இப்படித்தான் இருக்கும். இதுபோல் மசாலாப் படத்தில் க்ளைமேக்ஸ்னு என்ன எதிர் பார்க்கிறாங்கனு தெரியலை. :)

ஆக இதிலிருந்து உங்களுக்கு நல்லா புரிஞ்சி இருக்கும்?

வருண் ஒரு பக்கா ரஜினி ரசிகன் என்று! நான் ரஜினி விசிறி என்பதால்தான் என்னால ரசிக்க முடிந்ததா என்னனு தெரியவில்லை!

கூட படம் பார்த்த எல்லலோருமே படம் முடிஞ்சு திருப்தியாகப் போனதுபோலதான் தெரிஞ்சது. நான் ஒவ்வொருத்தராப் போயி விசாரிக்கவில்லை.

நீங்க ரஜினியை வெறுப்பவர் இல்லை என்றால் கட்டாயம் போயிப் பாருங்க. ஒரு தர இல்லை, ரெண்டு தர. ரஜினி பிடிக்காதுனா உங்க அபிமான நடிகர் படம் வர்ர வரை வெயிட் பண்ணுங்க!

33 comments:

  1. நடு நிலையான சரியான விமர்சனம்
    வித்தியாசமாகச் சொல்லிச் சென்றவிதம்
    மனம் கவர்ந்தது
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. எல்லாம் ஓகே வருண், எனக்கு அந்த அனுஷ்கா போர்சன்ல அதான் தோணுச்சு:)ஆனா இப்படி பென்னி க்விக் உண்மையை கதையை தழுவி எடுதுட்டுட்டு, அவர் படத்தை கூட காட்டாமல், அல்லது ஒரு கார்ட் கூட போடாமல் எடுத்திருப்பது சரியா??? ஏதோ இந்த ஆள் தான் டம் கட்டின மாதிரி இப்பவே மதுரைல எல்லாம் இரண்டாம் பென்னி க்விகே என பேன்னர்கள் வேறு:((( to be said frankly, சத்தியமா இதை உங்ககிட்ட நான் எதிர்பார்க்கல,:( மற்ற எல்லா விமர்சனங்களையும் படிக்கும் போது வருண் எழுதின இதை mention பண்ணுவார், மற்றவர்களிடம் இதை எதிர்பார்க்கமுடியாது என எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். உடனே நான் ரஜினியை வெறுப்பவள் என கட்டம் கட்டிவிடாதீர்கள். அந்த வெள்ளக்கார அம்மா வெள்ளைகார கலெக்டரிடம் ஒரு கேள்வி கேட்கும், எனக்கு அந்த கேள்வியை k.s டீம்மை கேட்கனும்னு தோணுச்சு. ரஜினி கிட்ட நான் எதையும் எதிர்பார்க்கல, ஆனா மற்ற பல ரஜினி ரசிகர்கள் போல் இல்லாத rational வருனிடம் நான் இதை இதை எதிர்பார்க்கலை. இன்னும் நிறைய பாமர சனம் நம்ம ஊர்ல இருக்கு. அவர்கள் "டே! தெரியுமா, அது பென்னி க்விக் கட்டின டம் இல்லையாம்டா! யாரோ ராஜா கட்டினதாம், வெள்ளகார கலெக்டர் கட்டினதா மெரட்டி தான் அவரு படத்தை பதிக்க வெச்சாராம். நம்ம தலைவர் (ரஜினி) இல்லைனா நமக்கு இந்த உண்மை தெரியுமா " என பேசிக் கொள்கிறார்கள். வாழ்க ரஜினி! வாழ்க K.S.ரவிக்குமார்.

    ReplyDelete
  3. உங்க அடுத்த பதிவுக்காக ஆவலோட காத்திருந்தேன். ரொம்ப நாள் கழித்துவந்த நண்பனை இன்முகம் காட்டி வரவேற்க முடியாமல் போய்டுச்சு:) நட்பு வேறு கருத்து வேறுபாடு வேறு எனும் புரிந்துகொள்ளும் பக்குவம் உங்களிடம் இருக்கும் என்கிற நண்பிக்கையில்:))) உங்கள் தோழி மைதிலி.

    ReplyDelete
  4. எங்கே ஆளையே காணோமேன்னு கொஞ்சம் தேடினேன். நல்ல பதிவு, இருந்தாலும் இதை படித்த உடனே நீங்கள் ரஜினியின் விசிறி என்று தெரிகின்றது.

    உங்கள் 20 டாலர், உங்கள் சந்தோசம். பதிவிற்கு நன்றி!

    ReplyDelete
  5. hi Varun, மனதில் பட்டதை எழுதியிருப்பது தெரிகிறது..நான் இன்னும் பார்க்கவில்லை.
    இங்கே $25 என்று சொன்னார்கள்..உங்கள் ஊர் கொஞ்சம் பரவாயில்லை போலவே :))

    ReplyDelete
  6. எப்டி விசு அண்ணா இப்படி?? இப்படி கூட நானும் சொல்லி சென்றிருக்கலாமோ:)

    ReplyDelete
  7. ****Ramani S said...

    நடு நிலையான சரியான விமர்சனம்
    வித்தியாசமாகச் சொல்லிச் சென்றவிதம்
    மனம் கவர்ந்தது
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்*****

    வாங்க ரமணி சார். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. :)

    ReplyDelete
  8. ****Mythily kasthuri rengan said...

    எல்லாம் ஓகே வருண், எனக்கு அந்த அனுஷ்கா போர்சன்ல அதான் தோணுச்சு:)ஆனா இப்படி பென்னி க்விக் உண்மையை கதையை தழுவி எடுதுட்டுட்டு, அவர் படத்தை கூட காட்டாமல், அல்லது ஒரு கார்ட் கூட போடாமல் எடுத்திருப்பது சரியா??? ஏதோ இந்த ஆள் தான் டம் கட்டின மாதிரி இப்பவே மதுரைல எல்லாம் இரண்டாம் பென்னி க்விகே என பேன்னர்கள் வேறு:((( to be said frankly, சத்தியமா இதை உங்ககிட்ட நான் எதிர்பார்க்கல,:( மற்ற எல்லா விமர்சனங்களையும் படிக்கும் போது வருண் எழுதின இதை mention பண்ணுவார், மற்றவர்களிடம் இதை எதிர்பார்க்கமுடியாது என எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். உடனே நான் ரஜினியை வெறுப்பவள் என கட்டம் கட்டிவிடாதீர்கள். அந்த வெள்ளக்கார அம்மா வெள்ளைகார கலெக்டரிடம் ஒரு கேள்வி கேட்கும், எனக்கு அந்த கேள்வியை k.s டீம்மை கேட்கனும்னு தோணுச்சு. ரஜினி கிட்ட நான் எதையும் எதிர்பார்க்கல, ஆனா மற்ற பல ரஜினி ரசிகர்கள் போல் இல்லாத rational வருனிடம் நான் இதை இதை எதிர்பார்க்கலை. இன்னும் நிறைய பாமர சனம் நம்ம ஊர்ல இருக்கு. அவர்கள் "டே! தெரியுமா, அது பென்னி க்விக் கட்டின டம் இல்லையாம்டா! யாரோ ராஜா கட்டினதாம், வெள்ளகார கலெக்டர் கட்டினதா மெரட்டி தான் அவரு படத்தை பதிக்க வெச்சாராம். நம்ம தலைவர் (ரஜினி) இல்லைனா நமக்கு இந்த உண்மை தெரியுமா " என பேசிக் கொள்கிறார்கள். வாழ்க ரஜினி! வாழ்க K.S.ரவிக்குமார். ***

    வாங்க மைதிலி! எனக்கு இந்த உண்மைக் கதை தெரியாதுங்க. Benny Quick க்கு கொடுக்க வேண்டிய க்ரிடிட்டை ரஜினி திருடினால் அதை நானும் உங்களோட சேர்ந்து வன்மையாகக் கண்டிக்கிறேன். :)

    ReplyDelete
  9. ***Mythily kasthuri rengan said...

    உங்க அடுத்த பதிவுக்காக ஆவலோட காத்திருந்தேன். ரொம்ப நாள் கழித்துவந்த நண்பனை இன்முகம் காட்டி வரவேற்க முடியாமல் போய்டுச்சு:) நட்பு வேறு கருத்து வேறுபாடு வேறு எனும் புரிந்துகொள்ளும் பக்குவம் உங்களிடம் இருக்கும் என்கிற நண்பிக்கையில்:))) உங்கள் தோழி மைதிலி.***

    அடடா, இப்போத்தான் நீங்க நல்லா பின்னூட்டமிடுறீங்க.. சொல்ல வேண்டியதை சொல்ல வேண்டியவர்களிடம் சொல்லி. :).

    இதே மாதிரி இனிமேலும் தொடருங்க. :)

    ReplyDelete
  10. *** விசுAWESOME said...

    எங்கே ஆளையே காணோமேன்னு கொஞ்சம் தேடினேன். நல்ல பதிவு, இருந்தாலும் இதை படித்த உடனே நீங்கள் ரஜினியின் விசிறி என்று தெரிகின்றது.

    உங்கள் 20 டாலர், உங்கள் சந்தோசம். பதிவிற்கு நன்றி!***

    நான் ரஜினி விசிறினு ஒரு சிலருக்குத்தான் தெரியாது. பொதுவா எல்லாருக்கும் தெரியுமே. :)

    ReplyDelete
  11. ***Mythily kasthuri rengan said...

    எப்டி விசு அண்ணா இப்படி?? இப்படி கூட நானும் சொல்லி சென்றிருக்கலாமோ:)***

    ஏன்??? அவர் அவராவே இருக்கட்டும், நீங்க நீங்களாவே இருங்க, மைதிலி! :)

    ReplyDelete
  12. பாஸ் 20 டாலர் கொடுத்து நீங்க பார்த்த படத்தை நான் காசு கொடுக்காமலே பார்த்துட்டேன்.. அதுதாங்க உங்க பதிவில் நீங்க போட்ட லிங்கா படங்களைத்தான் நான் பார்த்துடேன் அது போதும்பா.

    ReplyDelete
  13. ****தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

    hi Varun, மனதில் பட்டதை எழுதியிருப்பது தெரிகிறது..நான் இன்னும் பார்க்கவில்லை.
    இங்கே $25 என்று சொன்னார்கள்..உங்கள் ஊர் கொஞ்சம் பரவாயில்லை போலவே :))****

    வாங்க கிரேஸ் :)

    இங்கே FDFS தான் 25 டாலர், அதன் பிறகு 20 டாலர் தான்னு நினைக்கிறேன். :) ஒருவேளை பாக்ஸ் ஆஃபிஸ் கவுண்டர்ல வாங்கினதாலே கொஞ்சம் கம்மியா இருக்குமோனு தெரியலை.

    உங்க ஊர் ரொம்ப பணக்காரங்க இருக்க ஊர் என்பதாலும் இருக்கலாம். :))

    ReplyDelete
  14. எனக்கு படம் பிடித்து இருந்தது.. ஒரு ரஜினி ரசிகனாக..ஒரு commercial movie அதுவும் ரஜினி movie'இல் என்ன இருக்குமோ அது எல்லாம் இருந்தது.. ரசித்து மகிழ்தோம்..
    ஒரு ரஜினி ரசிகனின் பார்வையில் உங்க விமர்சனம் அருமை.. நன்றி..

    ReplyDelete
  15. அமெரிக்காவின் ஒரு ஊரில் தமிழ்ப்படம் பார்க்கவந்த கூட்டம், அந்த அனுபவம் எப்படி இருக்குமென்பதை உங்கள் பதிவின் மூலம் தெரிந்துகொண்டேன்.

    ReplyDelete
  16. வருண் இன்னைக்கு தான் நினைத்தேன்.. எங்கடா வருண் எதையும் கூறவில்லையே என்று :-)

    தலைவர் படம் கலக்குது. இவங்கெல்லாம் திட்டி திட்டியே படத்தை ஹிட் ஆக்கிட்டாங்க :-)

    ReplyDelete
  17. சூப்பரா ஒரு பார்வை வருண்..

    //ஹாரியின் விமர்சனம். அதுவும் ஓரளவுக்கு நல்லா இருந்தாலும், ரொம்ப நல்லா இருந்ததுனு சொல்ல முடியாது.

    எல்லாமே நெகட்டிவ்தான்! //

    கி கி.. ;-)

    ReplyDelete
  18. You say you don't know about John Pennycuick. You may now go and read about him; and come back to read this reply. It is unethical to create an opposite character - a Tamil or an Indian, - and to make him build the dam, thus eclipsing the credit that is due to John. How could one sit in the theatre to see this atrocity to history and robbing of credit due to another person ? BTW, it is not an ordinary credit to forget. John did a signal service to Tamils which no Tamil even and ever thought of it. The benefit of that service is being enjoyed by the population of 3 districts. He lost his wealth to bring wealth to Tamils. The film may be good and watchable but it is an attempt to cloud the name and fame of the right person, merely because he was a white. Instead of an Indian engineer, the British Raj Engineer should have been shown in the filmed story, and rendered justice. They have not even created a false character an Indian and through his act, they say they create patriotism, and we recommend this film to children: robbing Peter to pay Paul !

    I would suggest the TN Government take a documentary on John and show it to all children of TN. It only named the PWD HQ building of Madurai district after him. Not sufficient. This will expose Rajni and his gang and how they lived on false glory! Varun, Tamils are notorious to be ungrateful. Such films will make them ugliest in that notoriety :-(

    ReplyDelete
  19. பாஸ்.. படத்தைப் பற்றி நிறைய நெகடிவ் விமர்சனங்களை படித்துவிட்டு படம்பார்க்க போனால் நிச்சயம் பிடிக்கலாம். நானே இரண்டாவது முறை பார்க்கும் போது சில காட்சிகள் பிடித்திருந்தது . ஆனால் ஆயிரம் பேரோடு முதல் ஷோ பார்க்கும்போது எல்லோரும் பட்ட வேதனைகளின் வெளிபாடே விமர்சனத்தில் எதிரொலிக்கிறது.

    ReplyDelete
  20. ஹை வருண்! நீங்க ரஜினி விசிறியா....அதான்...இங்கயும் இப்படி எங்க தளத்துலயும் அப்படி....ஓகே ஓகே! எங்களுக்கு என்னன்னா ஏற்கனவே இந்த முல்லை அணைப் பிரச்சினை...இது வேற கிளப்பிடாம இருக்கணுமேனு தோணுச்சு...அது நல்ல காலம் படத்துல இல்லாத மாதிரிதான் தோணுச்சு...அதான் ...தொடர்கின்றோம்....

    ReplyDelete
  21. ***Avargal Unmaigal said...

    பாஸ் 20 டாலர் கொடுத்து நீங்க பார்த்த படத்தை நான் காசு கொடுக்காமலே பார்த்துட்டேன்.. அதுதாங்க உங்க பதிவில் நீங்க போட்ட லிங்கா படங்களைத்தான் நான் பார்த்துடேன் அது போதும்பா.***

    எல்லாரும் வாரா வாராம் $10 கொடுத்து எல்லாத் தமிழ்ப்படமும் பார்க்கிறாங்க. நான் 4 வருடத்துக்கு அப்புறம் $20 டாலர் கொடுத்து ஒரு படம் பார்த்து இருக்கேன்.

    நீங்க என்னைவிட கஞ்சம் போல இருக்கு.. இப்படி ஓசிலயே படம் பார்த்துக்குறீங்க.. :)

    ReplyDelete
  22. *** Amudhavan said...

    அமெரிக்காவின் ஒரு ஊரில் தமிழ்ப்படம் பார்க்கவந்த கூட்டம், அந்த அனுபவம் எப்படி இருக்குமென்பதை உங்கள் பதிவின் மூலம் தெரிந்துகொண்டேன்.***

    வாங்க சார். :)

    உண்மையிலேயே ஒரு கெட் டுகெதர் மாரி ரொம்ப நல்லா இருக்கும் சார் அந்த சூழல். :)

    ReplyDelete
  23. **** கிரி said...

    வருண் இன்னைக்கு தான் நினைத்தேன்.. எங்கடா வருண் எதையும் கூறவில்லையே என்று :-)

    தலைவர் படம் கலக்குது. இவங்கெல்லாம் திட்டி திட்டியே படத்தை ஹிட் ஆக்கிட்டாங்க :-)****

    வாங்க கிரி. என்னுடைய டேஸ்ட் கொஞ்சம் வேற கிரி. எனக்குப் பிடிச்சது..பலர் கம்ப்ளைன் பண்ணத்தான் செய்றாங்க :)

    ReplyDelete
  24. ***ஹாரி R. said...

    சூப்பரா ஒரு பார்வை வருண்..

    //ஹாரியின் விமர்சனம். அதுவும் ஓரளவுக்கு நல்லா இருந்தாலும், ரொம்ப நல்லா இருந்ததுனு சொல்ல முடியாது.

    எல்லாமே நெகட்டிவ்தான்! //

    கி கி.. ;-) ***

    நான் ரொம்ப எதிர்பார்த்துப் போகவில்லை ஹாரி. :)

    ReplyDelete
  25. ****குலசேகரன் said...

    You say you don't know about John Pennycuick. You may now go and read about him; and come back to read this reply. It is unethical to create an opposite character - a Tamil or an Indian, - and to make him build the dam, thus eclipsing the credit that is due to John. How could one sit in the theatre to see this atrocity to history and robbing of credit due to another person ? BTW, it is not an ordinary credit to forget. John did a signal service to Tamils which no Tamil even and ever thought of it. The benefit of that service is being enjoyed by the population of 3 districts. He lost his wealth to bring wealth to Tamils. The film may be good and watchable but it is an attempt to cloud the name and fame of the right person, merely because he was a white. Instead of an Indian engineer, the British Raj Engineer should have been shown in the filmed story, and rendered justice. They have not even created a false character an Indian and through his act, they say they create patriotism, and we recommend this film to children: robbing Peter to pay Paul !

    I would suggest the TN Government take a documentary on John and show it to all children of TN. It only named the PWD HQ building of Madurai district after him. Not sufficient. This will expose Rajni and his gang and how they lived on false glory! Varun, Tamils are notorious to be ungrateful. Such films will make them ugliest in that notoriety :-(***

    We always worship British over our own people. That's why we let them rule us. I think we should invite them and take over our country again. We can bring millions of British engineers like Pennycuick.

    How do you like my suggestion??

    ReplyDelete
  26. ***Manimaran said...

    பாஸ்.. படத்தைப் பற்றி நிறைய நெகடிவ் விமர்சனங்களை படித்துவிட்டு படம்பார்க்க போனால் நிச்சயம் பிடிக்கலாம். நானே இரண்டாவது முறை பார்க்கும் போது சில காட்சிகள் பிடித்திருந்தது . ஆனால் ஆயிரம் பேரோடு முதல் ஷோ பார்க்கும்போது எல்லோரும் பட்ட வேதனைகளின் வெளிபாடே விமர்சனத்தில் எதிரொலிக்கிறது. ***

    நீங்க உங்க்ளுக்கு தோன்றியதை எழுதி இருக்கீங்க. நான் அதில் தவறேதும் சொல்லவில்லை. நான் படம் பார்க்கணும்னு முடிவு செய்துவிட்டதால் பாஸிட்டிவ் ரிவியூக்களை நம்பிப் போனேன். அவ்வளவுதான்!:)

    ReplyDelete
  27. ***Thulasidharan V Thillaiakathu said...

    ஹை வருண்! நீங்க ரஜினி விசிறியா....அதான்...இங்கயும் இப்படி எங்க தளத்துலயும் அப்படி....ஓகே ஓகே! எங்களுக்கு என்னன்னா ஏற்கனவே இந்த முல்லை அணைப் பிரச்சினை...இது வேற கிளப்பிடாம இருக்கணுமேனு தோணுச்சு...அது நல்ல காலம் படத்துல இல்லாத மாதிரிதான் தோணுச்சு...அதான் ...தொடர்கின்றோம்....***

    வாங்க துளசிதரன். உங்களை என்னைப்போல ஒரு சிலருக்கு படம் நல்லாத்தான் இருந்ந்தது. ஆனால் பொதுமக்கள் தீர்ப்பு என்னவோ வேறமாதிரி இருக்கும்போலதான் தோனுது. பார்க்க்லாம். :)

    ReplyDelete
  28. முதல் பாடல்...
    அபுதாபி யாஸ் ஐலேண்ட் பார்முலா ஓன் கட்டிடத்தில்...

    நல்ல விமர்சனம்...

    இப்போ அறையில் லிங்கா ஓடிக் கொண்டிருக்கிறது...

    படம் சரியில்லை என்பது இப்போதே தெரிய ஆரம்பித்து விட்டது....

    ReplyDelete
  29. வணக்கம் வருண் சார்.

    பொதுவாக எதிர்ப்பார்ப்பு இல்லாதவர்களுக்கு ஏமாற்றம் இருக்காது.

    உங்களுக்கும் அப்படியே.....
    நான் ஏமார்ந்தது என்னவோ உண்மை தான். 15 யுரோ...(

    ReplyDelete
  30. ***-'பரிவை' சே.குமார் said...

    முதல் பாடல்...
    அபுதாபி யாஸ் ஐலேண்ட் பார்முலா ஓன் கட்டிடத்தில்...

    நல்ல விமர்சனம்...

    இப்போ அறையில் லிங்கா ஓடிக் கொண்டிருக்கிறது...

    படம் சரியில்லை என்பது இப்போதே தெரிய ஆரம்பித்து விட்டது....***

    கருத்துரைக்கு நன்றி குமார்! :)

    ReplyDelete
  31. ***அருணா செல்வம் said...

    வணக்கம் வருண் சார்.

    பொதுவாக எதிர்ப்பார்ப்பு இல்லாதவர்களுக்கு ஏமாற்றம் இருக்காது.

    உங்களுக்கும் அப்படியே.....
    நான் ஏமார்ந்தது என்னவோ உண்மை தான். 15 யுரோ...(***

    வாங்க அருணா! நான் இதைவிட மோசமா இருக்கும்னு நெனச்சுப் போயிருக்கேன் போல! :)

    15 யூரோவா??!!! :)

    ReplyDelete
  32. "ஆமா எட்டு டாலர்தானே எல்லாப் படமும் இருபது டாலருக்கு அப்படி என்ன படம் பார்க்கிறார்கள்?" என்பது போல ஒரு லுக்கு விட்டுச்சு அந்த அம்மணி. "உனக்கு இதெல்லாம் புரியாதும்மா" னு நானும் சிரிச்சுக்கிட்டேன்.. சரி டிக்கட்டை கொடு னு வாங்கிட்டு உள்ள போனால், ஒரே தாய்க்குலங்கள்தான்ப்பா அலைமோதுச்சுக.. "

    இதே எட்டு டாலர், இருபது டாலர் வித்யாசம் பிரான்ஸிலும் உண்டு ! அதெல்லாம் அவங்களுக்கு புரியாது வருண் !!!

    நான் படம் பார்க்கவில்லை, இந்த வாரமும் ஓடினால் முயற்சிக்கலாம்...

    தமிழ் பட தியேட்டர் சூழலை மிக அருமையாக படம்பிடித்துள்ளீர்கள் !

    விமர்சனத்தின் முடிவில் வருண் டச் !

    நன்றி
    சாமானியன்

    ReplyDelete
  33. Sorry, Visu, I did not realize that you dont want to publish that. I just removed. Take it easy! :) My apologies for overlooking that.

    ReplyDelete