Monday, June 1, 2015

ர-ஞ்-சி-த்-னி கூட்டணி முடிவானது!

பதிவர் செந்தழல் சேது பயந்தது போலவே இயக்குனர் ரஞ்சித் தான் அடுத்த ரசினி படத்தை இயக்குகிறார்னு அதிகாரப் பூர்வமாக அறிவித்துவிட்டார்கள். பாவம் அவர் இப்போவே ரஞ்சித்தை நெனச்சு கவலைப் பட்டு கண்ணீர் விட ஆரம்பிச்சுட்டாரு! இந்தப் பதிவை வாசிக்கும் ரஞ்சித் செந்தழல் சேதுவை மனதில் கொண்டு படம் இயக்கவும்!

Embedded image permalink
ரஞ்சித்னினு இதுக்கு பேரு வச்சாச்சு!



இப்போலாம் தமிழ் படம் பார்க்கிறேன்னு நான் 2-3 வருடத்துக்கு ஒரு தரதான் ஒரு 20 டாலர் செலவழிப்பது. நெஜம்மாத்தாங்க சொல்றேன்! ரஜினி படங்கள் மட்டும்தான் தியேட்டர்ல போயி பார்க்கிறது. எல்லாரும் 20 டாலர் டிக்கட்னு வச்சு கொள்ளையடிக்கிறானுகனு படம் பார்க்காமலே, செலவழிச்சமாதிரி திட்டும்போது, எனக்கு ரெண்டு வருடத்துக்கு ஒரு தரத்தானே 20 டாலர்? தமிழ் சினிமாவுக்காக ரெண்டு வருடத்துக்கு ஒரு  20 டாலர் செலவழிச்சா அது என்ன அத்தனை பெரிய செலவா? னு தோனும். முறைக்காதீங்கப்பா! :)))

எதுக்குப் பிடிக்காத நடிகர்கள்  படத்தை மெனக்கெட்டுப் போயி, முதல் நாள் முதல் ஷோ பார்த்துட்டு வந்து படம் நல்லாவேயில்லைனு சொல்லணும்? எதுக்கு அப்படி மாஞ்சுக்கிட்டு முதல் விமர்சனமே படம் மொக்கை னு எழுதணும்னு தெரியலை? நான் வேற மாதிரி ஒரு தனி வழியிலே போக ஆரம்பிச்சுட்டேன். அடுத்த 20 டாலர் செலவு இன்னும் ஒரு வருடத்தில் வந்திடும். இப்போவே டைம்மும் நிக்கலுமா குருவி சேர்க்கிற மாதிரி 20 டாலர் சேர்க்கணும்! :))

 ரஞ்சித்னு  சொன்னதும் இந்தியன் எக்ஸ்ப்ரெஸ்ல அட்டக்கத்தி ரஞ்சித்துக்கு பதிலா ஒரு மலையாளப் பட இயக்குனர் படத்தை போட்டுட்டானுகப்பா  படுபாவிகள்!



Image result for rajini ranjith movie
சத்தியமா இந்த ரஞ்சித் ரஜினி படத்தை இயக்கவில்லை!





Image result for rajini ranjith
இந்த மாதிரி ஒரு மொட்டை கெட் அப் ல ரஜினி நடிச்சா நல்லா எதார்த்தமாயிருக்கும்

5 comments:

  1. லிங்காவுக்கு நான் கொடுத்தது 25 டாலர் :-)

    கமலும் ரஜினியும் எதிர் எதிர் நிலையில் உள்ளனர். கமல் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், இசை என்று எல்லா இடத்திலும் மூக்கை நுழைத்து படத்தை சொதப்புகிறார். ரஜினியோ இது எதையும் செய்யாமல் தன்னை முழுதாக இயக்குனரிடம் ஒப்படைத்து விடுகிறார். நல்ல இயக்குனர் கையில் அவர் சிக்கினால் ரசிகர்களுக்கு தீபாவளி. ஆனால் இயக்குனர்கள் ரஜினி ரசிகர்களுக்காக காம்ப்ரமைஸ் செய்வதாக நினைத்துக் கொண்டு படத்தை சொதப்புகிறார்கள்.

    ரஞ்சித் அம்மாதிரி செய்யாமல் இருப்பார் என்று நம்புவோம். ரஜினிக்கு 50 வயதுக்கு மேல் என்றும், ஜோடி கிடையாதென்றும் செய்திகள் வருகின்றன. உண்மையா என்று தெரியவில்லை. நானும் இப்படத்தை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன் வருண்.

    ReplyDelete
  2. சேமிப்பது என்றும் நல்லது தான்...! ஹா... ஹா...

    ReplyDelete
  3. //ரஜினிக்கு 50 வயதுக்கு மேல்// It will be realistic if that is 60 years !!

    ReplyDelete
  4. ரஜினியின் படம் அவரது பலமான உங்களை போன்ற உண்மையான ரசிகர்களை மகிழ்விக்கும்படியான படமாக அமைய வாழ்த்துகிறேன்...

    நன்றி
    சாமானியன்

    ReplyDelete
  5. இதுதான் ரிலாக்ஸ்சா கீது..
    இருபது டாலர் கொஞ்சம் அதிகம்தான் எனினும் ஆங்கில சூப்பர் ஸ்டார்களின் படத்தை விட பத்து டாலர் அதிகமாக இருப்பதாக நண்பர்கள் சொன்னபொழுது புரிந்தது நம்மவர்களின் ரஜனி மோகம்..

    ReplyDelete