Thursday, September 10, 2015

சாமி என்னும் கற்சிலைக்கு எதுக்குப் பாலாபிஷேகம்?

ஏழைகள் நிறைந்த நாடு இந்தியா. நடிகர்களுக்கு பாலாபிஷேகம் செய்வது அபத்தம். ப்ரோட்டீன் ரிச் உணவான பாலை மாட்டை ஏமாத்தி அதிடம் இருந்து பறித்து, மனிதன் தன் தேவைக்கு பயன்படுத்துகிறான். சரி, போகட்டும். ஏழ்மை நாடான இந்தியாவில் சினிமா நடிகர் களின்  'கட் அவ்ட்'க்கு பாலை  ஊற்றுவதைவிட  அந்தப் பாலை ஏழைக்குழந்தைகளுக்குத் தரலாம். இதில் மாற்றுக்கருத்து சிந்திக்கத் தெரிந்த மூளை உள்ள யாருக்கும் இருக்காது. அப்படி சிலைக்கு பாலாபிஷேகம் செய்பவன் ஒரு அடிமுட்டாள்!

 



 Image result for பாலாபிஷேகம்



சரி, கடவுள் என  ராமன், இலக்குவன், முருகன், கணேசன், ஐய்யப்பன், சரஸ்வதி, லட்சுமி, காளியாத்தா, மாரியாத்தா னு உள்ள உருவச் சிலைகளை வடித்து மனிதன் தன் மனவியாதிக்கு மருந்தாக பயன்படுத்துகிறான்.

தான் செய்யும் அயோக்கியத்தனத்தால் தனக்கு ஏற்படும் மனப் பிராந்தியை சரி செய்ய இதுபோல் கடவுள்ணு சொல்லிப் பல கற்பனை கேரக்டர்களை உருவாக்கி தன் மனவியாதிக்கு மருந்தாக பயன்படுத்துகிறான். சரி போகட்டும், எப்படியோ அவன் மனம் நன்னிலை அடைந்தால் சரி.

 


அதோட நின்றானா? அதுமட்டுமல்லாமல் அதே சிலைகளுக்கு பாலாபிஷேகம் செய்கிறான். இது மட்டும் அபத்தம் இல்லையா? எனக்கு விளங்கவில்லை!

 உடனே நம்ம பக்தசிகாமணிகள் எல்லாம் நம்மளை வில்லனைப் பார்ப்பதுபோல் பார்ப்பார்கள்.

மனிதர்களின் முக்கியமாக, பக்தகோடிகளின் மூளை வினோதமானது. தனக்கு விருப்பமுள்ள அபத்தத்தை எல்லாம் கண்டு கொள்ளாது. தனக்குப் பிடிக்காத அபத்தத்தை பூதக்கண்ணாடி இட்டுப் பார்க்கும். வேடிக்கையான உலகம் இது!

21 comments:


  1. கட்டவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்பவனை அரசாங்கம் நினைத்தால் நிச்சயமாக தடுக்க முடியும் நண்பரே ஆனால் செய்ய மாட்டார்கள் காரணம் இந்த வகையான கூமுட்டைகள்தானே இவர்களுக்கு வேண்டும் என்ன செய்வது இதனால் மானமுள்ள தமிழனுக்கும் தலைகுனிவே ... நல்லதொரு பதிவை தந்தமைக்கு நன்றி நண்பரே...

    ReplyDelete
  2. கில்லர் ஜி சொன்னது உண்மைதான் ஆனால் இதற்கு எனது ஆசிரியர் ஓர் அறிவியல் விளக்கத்தை தந்தார் அதாவது ஈஸ்ட் உற்பத்தி இருக்கும் இடங்களில்தான் மனிதன் வாழ முடியும் ... வெள்ளையர்களுக்கு பிரட்டில் கிடைக்கும் இது கோவில்களில்தான் உற்பத்தியாகிறது என்றார் அவர்.

    நான் ஒன்று கண்மூடித்தனமாய் வழிபடுபவன் அல்ல எனினும் ஒரு நாளுக்கு இவ்வளவு பால் என்று அளவை வேண்டுமாலும் குறைக்கலாம்.

    இது நம்பிக்கைகளோடு தொடர்புடையது எனவே தடாலடி முடிவுகளை இதில் எடுக்க முடியாது.

    ReplyDelete
  3. பதிவர் கையேட்டில் உங்கள் தளம் வரவில்லை என்றால் எப்படி...?

    அனுப்ப வேண்டுகிறேன்... நன்றி...

    ReplyDelete
  4. மதம் பிடித்த மனிதனுக்கு கல்லுக்கு ஊற்றினால் தவறாக தெரியாது. இதுவே சரியென்று மிக பயங்கரமாக படித்த மேதாவிகளும் அறுதி இட்டு கூறுவார். வேதனை. எதற்கு தான் படிக்க வேண்டுமோ? இதே போல் தான் சாதியும். அதே எங்கே உள்ளது? அதன் அடையாளம் என்ன? படித்த மருத்துவர்களும் கட்சி வைத்து சாதியை வளர்கின்றனர்.

    இதற்கு பெயர் தான் மூளை சங்கிலி. உடலில் வேறு எங்காவது சங்கிலி பிணைத்து இருந்தால் உடைத்து விடலாம். மூளையில் இருந்து உடைக்க ஒரே வழி கல்வி.. அதை முதலில் கொடுப்பதை தடை செய்வது. முடியாத போது அரை குறையாக கல்வி தருவது.
    வேதனை.. என்று இந்நிலை மாறுமோ. அரசு நினைத்தால், எதுவும் செய்ய முடியும். ஆனால் ஆள்பவர்களோ இந்நிலை மாறகூடாது என்ற நிலையில்.

    ReplyDelete
  5. ***Mathu S said...

    கில்லர் ஜி சொன்னது உண்மைதான் ஆனால் இதற்கு எனது ஆசிரியர் ஓர் அறிவியல் விளக்கத்தை தந்தார் அதாவது ஈஸ்ட் உற்பத்தி இருக்கும் இடங்களில்தான் மனிதன் வாழ முடியும் ... வெள்ளையர்களுக்கு பிரட்டில் கிடைக்கும் இது கோவில்களில்தான் உற்பத்தியாகிறது என்றார் அவர். ***

    வாங்க மது! :)

    உங்களுக்கு விளக்கம் சொன்ன ஆசிரியருக்கு கேள்வி!

    அப்போ நடிகர்களுக்குப் பாலாபிஷேகம் செய்ற இடங்களிலும் ஈஸ்ட் உருவாகும் இல்லையா? ஈஸ்ட் உருவாக்கும் விசிறிகளை மட்டும் ஏன் மட்டமாக விமர்சிக்கணும் என்கிற கேள்வி என்னுள் எழுகிறது!

    ReplyDelete
  6. மது!
    உங்க ஆசிரியர் கடவுளை நம்புவர் போல! அதான் அப்படி!
    அவர் பாஷையிலே சொன்னால் கடவுளும் ஈஸ்ட் மாதிரித்தான்---தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான். wild yeast கேள்விப் பட்டு இருப்பீர்கள். திராட்சைப் பழங்கள் மேல் வெள்ளையாக இருக்கே அதே ஈஸ்ட் தான்; என்ன ஈஸ்ட்டுக்கும் கடவுளுக்கும் ஒரே வித்யாசம்---ஈஸ்டை கண்ணால் பார்க்கலாம்...!

    ஈஸ்ட் இல்லை என்றால் இட்லியில்லை! உளுத்தம் பருப்பு கழுவுன தண்ணீரில் ஈஸ்ட் இருக்கும்!

    ReplyDelete
  7. நடிகனானாலும், தலைவனாலும்,கல்லாயிருக்கும் கடவுளானாலும் அவர்களுக்காக உணவுப் பொருட்களை வீணாக்குவது தவிர்க்கப்படவேண்டியதே! ஆனால் இவை நம் நாடுகளில் நடக்கும் விடயமா?
    அரசு சட்டம் போட காவி விடுமா?
    ஆனால் இந்தக் கூட்டம் சாத்திரப் படிக்கு தெளித்துவிட்டு, மிகுதியை அனாதை விடுதிகளுக்கு கொடுக்கலாம்.

    ReplyDelete
  8. ***KILLERGEE Devakottai said...


    கட்டவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்பவனை அரசாங்கம் நினைத்தால் நிச்சயமாக தடுக்க முடியும் நண்பரே ஆனால் செய்ய மாட்டார்கள் காரணம் இந்த வகையான கூமுட்டைகள்தானே இவர்களுக்கு வேண்டும் என்ன செய்வது இதனால் மானமுள்ள தமிழனுக்கும் தலைகுனிவே ... நல்லதொரு பதிவை தந்தமைக்கு நன்றி நண்பரே...***

    வாங்க கில்லர்ஜி! யாரையும் யாரும் திருத்த முடியாதுங்க. நாம் அப்படி செய்யாதவரை/நியாயப் படுத்தாதவரை நம் மானம் தப்பித்துவிடும். ஒட்டுமொத்தத் தமிழர்களின் மானத்தை காப்பாத்துறதெல்லாம் நடக்கிற காரியம் இல்லைங்க. :)

    ReplyDelete
  9. ***நான் ஒன்று கண்மூடித்தனமாய் வழிபடுபவன் அல்ல எனினும் ஒரு நாளுக்கு இவ்வளவு பால் என்று அளவை வேண்டுமாலும் குறைக்கலாம்.

    இது நம்பிக்கைகளோடு தொடர்புடையது எனவே தடாலடி முடிவுகளை இதில் எடுக்க முடியாது.**

    தங்கள் கருத்துக்கு நன்றி மது. அவரவர் மனதிருப்திக்கு, அவரவருக்கு எது சரி என்று தோன்றுகிறதோ, அதை அவரவர் செய்கிறார்கள்.

    பாலை வீணடிப்பது என்று பார்த்தால், அது யார் செய்தாலும் தவறுதான் என்பது என்னுடைய கருத்து, மது. :)

    ReplyDelete
  10. ***திண்டுக்கல் தனபாலன் said...

    வேடிக்கை உலகம் தான்...

    September 10, 2015 at 9:30 AM***

    வாங்க தனபாலன்! :)

    ***திண்டுக்கல் தனபாலன் said...

    பதிவர் கையேட்டில் உங்கள் தளம் வரவில்லை என்றால் எப்படி...?

    அனுப்ப வேண்டுகிறேன்... நன்றி...***

    என்னனு பார்க்கிறேங்க! :)

    ReplyDelete
  11. *** ssk tpj said...

    மதம் பிடித்த மனிதனுக்கு கல்லுக்கு ஊற்றினால் தவறாக தெரியாது. இதுவே சரியென்று மிக பயங்கரமாக படித்த மேதாவிகளும் அறுதி இட்டு கூறுவார். வேதனை. எதற்கு தான் படிக்க வேண்டுமோ? இதே போல் தான் சாதியும். அதே எங்கே உள்ளது? அதன் அடையாளம் என்ன? படித்த மருத்துவர்களும் கட்சி வைத்து சாதியை வளர்கின்றனர்.

    இதற்கு பெயர் தான் மூளை சங்கிலி. உடலில் வேறு எங்காவது சங்கிலி பிணைத்து இருந்தால் உடைத்து விடலாம். மூளையில் இருந்து உடைக்க ஒரே வழி கல்வி.. அதை முதலில் கொடுப்பதை தடை செய்வது. முடியாத போது அரை குறையாக கல்வி தருவது.
    வேதனை.. என்று இந்நிலை மாறுமோ. அரசு நினைத்தால், எதுவும் செய்ய முடியும். ஆனால் ஆள்பவர்களோ இந்நிலை மாறகூடாது என்ற நிலையில்.

    September 10, 2015 at 9:36 AM***

    ஹீரோவுக்கோ அல்லது கடவுளுக்கோ பாலாபிஷேகம் தேவை இல்லைங்க. தனக்குப் பிடித்த நடிகன் படத்தை அடிச்சு பிடிச்சு தன் காசை செலவழிச்சு முதல் நாள் பார்ப்பதை தப்புனு சொல்ல முடியாது. ஆனால் இதெல்லாம் தேவையில்லைனு நம்ம கருத்தை சொல்லீட்டு போய்க்கிட்டே இருக்க வேண்டியதுதான். :)

    ReplyDelete
  12. ***நம்பள்கி said...

    மது!
    உங்க ஆசிரியர் கடவுளை நம்புவர் போல! அதான் அப்படி!
    அவர் பாஷையிலே சொன்னால் கடவுளும் ஈஸ்ட் மாதிரித்தான்---தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான். wild yeast கேள்விப் பட்டு இருப்பீர்கள். திராட்சைப் பழங்கள் மேல் வெள்ளையாக இருக்கே அதே ஈஸ்ட் தான்; என்ன ஈஸ்ட்டுக்கும் கடவுளுக்கும் ஒரே வித்யாசம்---ஈஸ்டை கண்ணால் பார்க்கலாம்...!

    ஈஸ்ட் இல்லை என்றால் இட்லியில்லை! உளுத்தம் பருப்பு கழுவுன தண்ணீரில் ஈஸ்ட் இருக்கும்!***

    மதுவுக்கும் இதெல்லாம் தெரியத்தான் செய்யும், நம்பள்கி! :)

    ReplyDelete
  13. ***யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

    நடிகனானாலும், தலைவனாலும்,கல்லாயிருக்கும் கடவுளானாலும் அவர்களுக்காக உணவுப் பொருட்களை வீணாக்குவது தவிர்க்கப்படவேண்டியதே! ஆனால் இவை நம் நாடுகளில் நடக்கும் விடயமா?
    அரசு சட்டம் போட காவி விடுமா?
    ஆனால் இந்தக் கூட்டம் சாத்திரப் படிக்கு தெளித்துவிட்டு, மிகுதியை அனாதை விடுதிகளுக்கு கொடுக்கலாம்.***

    யாரையும் நம்ம திருத்த முடியாதுங்க, யோகன். ஆனால் நமக்கு இது பிடிக்கலைனு உரக்கச் சொல்லிவிட்டுப் போவது நமது கடமை! அவ்வளவுதான் நாம் செய்ய இயலும். :)

    ReplyDelete
  14. நடிகர்களுக்கு பாலுக்கு பதில் சுண்ணாம்பை ஊற்றலாம்.

    ReplyDelete
  15. கமலஹாசன் இதையெல்லாம் விரும்புகிறவர் இல்லை. ஆனால், விளம்பரம், பரபரப்பு, ஆடம்பரம், ஆரவாரம் என்றெல்லாம் வரும்போது 'மார்க்கெட் வேல்யூவை' நினைத்துக்கொண்டு பேசாமல் இருந்து தொலைக்கவேண்டியிருக்கிறது போலும்! இந்த ரசிகர்களையெல்லாம் எப்படி யார் திருத்தப் போகிறார்கள் என்பதுதான் தெரியவில்லை.

    ReplyDelete
  16. வருண்!!! நல்லா சொன்னீங்க!!! தெளிவா சொன்னீங்க!!! அருமையா சொன்னீங்க,,, ஆனா பாஸ் ரஜினி கட் அவுட் பாலாபிசேகம் தான் நான் அதிகம் பார்த்திருக்கிறேன்.:))) (பின்குறிப்பு: எனக்கும் ரஜினிக்கும், அல்லது கமலுக்கும், எந்த வாய்கால்வரப்புத் தகராறும் இல்லப்பா:))

    ReplyDelete
  17. ***Subramanian M said...

    நடிகர்களுக்கு பாலுக்கு பதில் சுண்ணாம்பை ஊற்றலாம்.***

    தங்கள் கருத்துக்கு நன்றி. :)

    ReplyDelete
  18. *** Amudhavan said...

    கமலஹாசன் இதையெல்லாம் விரும்புகிறவர் இல்லை. ஆனால், விளம்பரம், பரபரப்பு, ஆடம்பரம், ஆரவாரம் என்றெல்லாம் வரும்போது 'மார்க்கெட் வேல்யூவை' நினைத்துக்கொண்டு பேசாமல் இருந்து தொலைக்கவேண்டியிருக்கிறது போலும்! இந்த ரசிகர்களையெல்லாம் எப்படி யார் திருத்தப் போகிறார்கள் என்பதுதான் தெரியவில்லை.***

    வாங்க சார்! :) இந்த விசயத்தில் கமலஹாசன் மேல் தவறேதும் இல்லை சார்!

    ReplyDelete
  19. ***Mythily kasthuri rengan said...

    வருண்!!! நல்லா சொன்னீங்க!!! தெளிவா சொன்னீங்க!!! அருமையா சொன்னீங்க,,, ஆனா பாஸ் ரஜினி கட் அவுட் பாலாபிசேகம் தான் நான் அதிகம் பார்த்திருக்கிறேன்.:))) (பின்குறிப்பு: எனக்கும் ரஜினிக்கும், அல்லது கமலுக்கும், எந்த வாய்கால்வரப்புத் தகராறும் இல்லப்பா:))***

    ஸ்டாட்டிஸ்டிக்கலா நீங்க சொல்றது உண்மைதான் மைதிலி. நான் சொல்ல வர்ரது சிலைக்கு பாலை ஊற்றும் பகதர்கள் பற்றி. I am not criticizing KH or RK here!

    சினிமா நடிகனுக்கு பாலை ஊத்தினால்குய்யோ முறையோ னு அழும் அதே பக்தர்களிடம் ஏன்ப்பா கற்சிலைக்கு இப்படி பாலை ஊத்தி பாழாக்குறீங்களே, இதுவும் தப்புத் தானே?னு கேட்டால் பேச்சு மூச்சே வராது. This is called lack of open mind in analyzing an issue to find out the facts! <

    ReplyDelete
  20. ***சினிமா நடிகனுக்கு பாலை ஊத்தினால்குய்யோ முறையோ னு அழும் அதே பக்தர்களிடம் ஏன்ப்பா கற்சிலைக்கு இப்படி பாலை ஊத்தி பாழாக்குறீங்களே, இதுவும் தப்புத் தானே?னு கேட்டால் பேச்சு மூச்சே வராது. This is called lack of open mind in analyzing an issue to find out the facts! <**

    fact....fact...fact....(புரியல?? சொன்னது ரைட்டு தான் பாஸ்:)

    ReplyDelete