Tuesday, May 30, 2017

மாடு, மனிதன், மனிதம், மண்ணாங்கட்டி!

அதாவது அமெரிக்காவில் நாங்க என்ன சொல்லுவோம்னா "I n G o d W e t r u s t!". இங்கே "We" யாருனா நாங்க தான் அமெரிக்கர்கள். நாங்க ஏன் கடவுளை நம்புகிறோம்னா.. கடவுள் எல்லாரையும் விட எங்களை மட்டும் கொஞ்சம் உயர்வாக வைத்துக் கொள்ள எல்லா வகையிலும் உதவணும். ஏன் கடவுள் எங்கள் எதிரியையும் எங்களைப் போலவே நினைத்தால் அல்லது மதித்தால்? எல்லோரையும் சமமாக நினைக்கும் அப்படிப்பட்ட கடவுள் எங்களுக்குப் பிடிக்குமா என்னணு தெரியவில்லை.

மனிதன் நியாயங்கள் எல்லாம் அவன் வசதிக்கு அவனே உருவாக்கிக் கொண்டது. கடவுளைக் கூட மனிதன் அவன் தேவைக்கு, அவன் மனநிலையை சரி பண்ண உருவாக்கிக் கொண்டான்.

மோனிங் டவ் என்பது ஒரு வகையான புறா. இவ்வகைப் புறாக்கள் மில்லியன் கணக்கில் பெருகிக்கொண்டே போகிறது என்பதால் அதைச் சுட்டுக் கொல்லலாம், வேட்டை ஆடலாம் என்பது அவன் வகுத்த சட்டம். அதே சமயத்தில் பலவிதமான கொடூர விலங்குகள் சிங்கம், புலி, சிறுத்தை போன்றவைகள் அழிந்து கொண்டு வருகின்றன என்பதால் அவைகளை கொல்லுவது சட்ட விரோதம்!!! இப்படித்தான் மனிதன் சட்டதிட்டங்கள் வகுத்து வாழ்கிறான். இதேபோல்தான் மனிதன் நியாய தர்மங்கள் தொடர்கின்றன.

நீங்க கவனித்துப் பார்த்தால் மனித இனத்தைவிட  மட்டமான ஜென்மங்கள் எதுவுமே இல்லை . ஆனால் இவன் தன்னைப் பற்றி யோசிக்காமல் உலகில் உள்ள மற்ற ஜீவராசிகளை, ஒட்டுண்ணி, சாருண்ணினு முத்திரை குத்தி ஏமாத்திக் கொண்டு திரிகிறான். இவனுக்குத் தேவைனா நாயையும் பூனையையும் கொஞ்சுவான். அவைகள் காமுற முடியாவண்ணம் அவைகளுடைய செக்ஸ் உணர்வுகளை அழித்துவிடுவான். கேட்டால் அப்படி செய்வதால் அவைகள் அதிக நாள் உயிர் வாழ்கின்றன என்பான். எல்லாம் அவன் வசதிக்கு! வடிகட்டிய சுயநலம்! இப்படித்தான் மனிதன் வாழ்கிறான்..இந்த வாழ்க்கையில் இவன் மனிதம் மண்ணாங்கட்டினு இந்தக் கழிவுகளில் இவன் நல்ல கழிவு, இவன் கெட்ட கழிவுனு  வகைப் படுத்துகிறான்.

இவ்வுலகில் மிகப் பெரிய பிரச்சினையே..மனித இனம் உலகில் தோன்றி வளர்ந்துகொண்டே போகிறது என்பதுதான். எங்கே பார்த்தாலும் மனிதன், மனிதன் மனிதன். கோடி கோடியாக வளர்ந்துகொண்டே போகிறான். உலகம் நாசமாவதுக்கு மனித இனப் பெருக்கம் கட்டுமீறிப் போவதுதான் காரணம். "க்லோபல் வாமிங்"க்கு முக்கியக் காரணம் மனித வளர்ச்சி, மற்றும் அவன் விஞ்ஞான வளர்ச்சிதான். தண்ணீர்  பஞ்சத் திற்கு காரணமும் மனிதப் பெருக்கம்தான்.

மாட்டை சாப்பிடக்கூடாது ஆனால் கொன்னு வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யலாம்?!. இல்லை, பசு மாட்டைத்தான் கொல்லக் கூடாது! எருமை கருப்பா இருக்கு அதை வெட்டினால் தப்பில்லை . ஆடு, கோழி எல்லாம் கொன்னால் தப்பில்லை. பசு மாடுமட்டும்தான் பாவம்! என்ன இதெல்லாம்? பார்ப்பனர்கள் மேல் கடுப்பாவது இங்கேதான். ஒரு பார்ப்பான் சொல்றான், நாம் கொன்னு ஏற்றுமதி செய்வது எருமைமாட்டைத்தான். பசுவை அல்ல! அதாவது அவரு நியாயப் படுத்துகிறார். எருமைனா என்ன? பசுனா என்ன முண்டம்?! இவ்வளவுக்கும் இவன் ஒரு பயாலாஜிஸ்ட். டெய்லி எலியையும் முயலையும் கொன்னு ரிசேர்ச் பண்ணுபவன்!  உண்மை என்னனா இப்படி கொன்னு அனுப்பலைனா இந்திய வருமானம் தடைப்படும். பணத் தேவைக்காக ஒரு சில எருமையைக் கொன்னு அனுப்பலாம். கேவலமான நியாயப் படுத்தல்!

இவன் மட்டுமல்ல பொதுவாக மனிதர்களே இப்படித்தான். எதையும் "நியாயப் படுத்துகிறார்கள்"! இது சரி, இது தப்பு! என்று இவர்களே ஒரு சட்டம் ஒரு வெளக்கெண்ணை வியாக்யாணம் பேசி தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்கிறார்கள்.

பறவைகள் புழுக்களை கொத்தி சாப்பிடுகின்றன. அதைப் பறவைகள் நியாயப் படுத்துவதில்லை!

பருந்துகள் சிறு பறவைகளை கொன்னு சாப்பிடுகின்றன. அதையும் அவைகள் நியாயப் படுத்த  முயல்வதில்லை.

ஆனால் ஆறறிவு பெற்ற மனிதன் ஏதாவது ஒரு வகையில் தான் வாழச் செய்யும் பலவிதமான அயோக்கியத் தனங்களை தொடர்ந்து நியாயப் படுத்துகிறான். தன்னையும் உலகையும்  ஏமாற்றி வாழ்கிறான். இதுதான் உண்மை.

கவனித்துப் பார்த்தால், மனிதன் பேசும் மனிதம், மனிதாபிமானம், இறை பக்தி எல்லாமே அவன் செய்யும் அயோக்கியத் தனங்களை நியாயப் படுத்த அவனே உருவாக்கிக் கொண்டது.

இது ஏன் உங்களுக்குப் புரிய மாட்டேன் என்கிறது?

ஏன் இப்படி எல்லாம் நீங்க யோசிக்க முயல்வதில்லை?

உங்களை நிற்கவைத்து உங்கள் எதிரி நிலைமையிலிருந்து உங்கள் அசிங்கப் பகுதியை பார்க்க நீங்கள் முயல்வதில்லை. ஏன்? ஏன் என்றால் உங்களைப் பற்றிய உண்மை உங்களைக் கொன்றுவிடும். உங்களைப் பார்த்தால் உங்களுக்கே பரிதாபாமாக இருக்கும். அருவருப்பாக இருக்கும். அதனால் நீங்க அப்படியெல்லாம் யோசிக்க முயல்வதில்லை.

நீங்கள் உங்கள் அசிங்கத்தைக் கழுவ, கடவுள், பக்தி, மனிதம், மனிதாபிமானம் என்கிறீர்கள். எல்லாமே உங்களை நீங்கள் ஏமாற்றிக்கொள்ள உருவாக்கிய கான்சப்ட்தான். இந்த ஆறாவது அறிவு  உங்களை சித்ரவதை செய்யும் என்பதால் உங்களுக்கு இத்தேவை இருக்கிறது. ஆமாம் நீங்கள் உயிருடன், மனநலத்துடன் வாழும் வரை.

8 comments:

Avargal Unmaigal said...

பாஸ் நீண்ட நாட்களுக்கு அப்புறம் உங்களிடம் இருந்து ஒரு நல்ல பதிவு பல விஷ்யங்கள் சிந்திக்க வைக்கின்றன, நான் எப்ப வருவேன் என்று தெரியாது ஆனால் சரியான நேரத்தில் வருவேன் என்ரு சொல்வது போல நீங்களும் சரியான பதிவோட வந்திருக்கீங்க குட்

Angelin said...

நறுக்குன்னு கேட்டிங்க ..நல்லதொரு பதிவு
தனது நியாயங்கள் அநியாயமாகி கொண்டிருக்கிறது என்பதை அறியாதவர்கள் ..இவர்களுக்கு தான் தான் மட்டுமே பிறரிடத்தில் தன்னை வைத்து பார்க்க தைரியம் வராத கோழைகள்

ராஜி said...

அருமையான பதிவு. மனித இனம்தான் இருப்பதிலேயே கேடுகெட்ட ஜென்மம்

தனிமரம் said...

சிந்திக்க வேண்டிய காலகட்டம் பாஸ்! கொன்றால் பாவம் தின்றால்ப்போச்சு ))

ரமேஷ் said...


நல்ல பதிவு ! நன்றி

வருண் said...

நம்மைப் பற்றி நான் விமர்சிப்பதை திறந்த மனதுடன் புரிந்து, ஆதரவு தந்த தோழர், தோழிகள், மதுரைத்தமிழன், ஏஞ்சலின், ராஜி, தனிமரம் மற்றும் ரமேஷ் அனைவருக்கும் நன்றி. :)

G.M Balasubramaniam said...

நம்மைப் பற்றிய விமரிசனம் அருமை. இதில் வரும் நாம் உலகடங்கியவர்களா இல்லை இப்போதைய புத்திசாலிகளா

adhi said...

அருமை...