Showing posts with label மதம். Show all posts
Showing posts with label மதம். Show all posts

Tuesday, April 15, 2014

பார்ப்பனர்கள், மைனாரிட்டி மதத்தவர் மற்றும் நரேந்திர மோடி!

இந்துக்கள் மத வெறியர்கள் எல்லாம் கெடையாது! ஏன் அவங்களையே விமர்சிக்கிற? மதத்தைத் தூக்கி ஓரமா வை! மனுஷாளை மனுஷாளாப் பாரு! னு எல்லாம் நல்லாவே வியாக்யானம் பேசலாம்.

ஒன்றைப்புரிந்து கொள்ளுங்கள். ஒரு மதத்தில் மத வெறியர்கள் அதாவது எக்ஸ்ட்ரீமிஸ்ட் என்னைக்குமே மைனாரிட்டிதான்! இந்துக்கள் மெஜாரிட்டியாக வாழும் இந்தியாவில், வட இந்தியர்கள், மற்றும் பார்ப்பனர்களில் உள்ள இந்து மதவெறியர்களே போதும், மைனாரிட்டிகளை கதிகலங்க வைக்க!  இந்துக்களை மத வெறியர்கள் என "லேபல்" செய்ய இவர்களே போதும்! ஒரே ஒரு கோட்சேதான் தேவைப்பட்டான் ஒரு காந்தியை அகற்ற! மறக்க வேண்டாம்!

எங்களுக்கெல்லாம் திறந்த மனது! நாங்க புத்தனை வழிபடுவோம்! வேளாங்கன்னி மாதாவை வணங்குவோம். நாகூர் தர்ஹாவுக்குப் போவோம். ஏற்வாடி தர்ஹா போயி எங்கவீட்டில் உள்ள பைத்தியத்தைக் கட்டிப் போடுவோம்! என்றெல்லாம் எல்லாரும் யோக்கியர்கள் பட்டம் நமக்கு நாமே கொடுத்துக்கலாம்தான். ஆனால் இதேபோல்தான் மெஜாரிட்டி கிருத்தவர்களும், இஸ்லாமியர்களும்கூட  சொல்லுவாங்க. அவர்களிலும் எல்லோருமே மத வெறியர்கள் அல்ல என்பதே உண்மை!

சங்கர் ராமன் கொலை வழக்கில் யாருமே தண்டிக்கப்படாமல் இந்து மத குருக்கள் காப்பாத்தப் படும்போது இந்துக்களுக்கு பெரிதாக எதுவும் தோணாதுதான். அதுலயும் இந்தப் பார்ப்பானுக கண்டுக்கவே மாட்டாணுக! ஊருக்காக வேணா அப்பப்போ நீலிக்கண்னீர் வடிப்பானுக! ஆனால் இதுபோல் செயல்கள் இந்தியாவில் வாழும் மைனாரிட்டிகளை இந்திய ஜனநாயகத்தின் மேல் உள்ள நம்பிக்கையை இன்னும் இழக்க வைக்கும் என்பதை உங்க மரமண்டையில் ஏற்றுங்கள்!

வரும் தேர்தலில் இன்றைய தமிழர்களின் அரசியல் நிலைப்பாடு என்ன?

தமிழ்நாட்டில் உள்ள பார்ப்பனர்கள் அனைவருமே மோடியிடம் உள்ள நல்லவைகளை மட்டுமே மிகைப்படுத்தி அவரே பிரதமராக வரவேண்டும் என்கிறார்கள். அது ஏன்? மோடியைப் பார்த்தால் ஏன் இவர்களுக்கு மட்டும் அருவருப்பாக பயமாகத் தோண மாட்டேன் என்கிறது? மோடி என்ன காந்தியா இல்லைனா அன்னா ஹாசரேயா? இல்லையே? ஒண்ணு புரிந்துகொள்ளுங்கள் பார்ப்பனர்கள் ஜெனட்டிக்கலாவே ஹிந்து மதவெறியர்கள் என்பதை அவர்களே உணர்வதில்லை! அவாள் மூளை இந்த விசயத்தில் கொஞ்சம் மழுங்கியேதான் இருக்கும்!

சரி,  மைனாரிட்டிகளான இஸ்லாமியர்கள், கிருத்தவர்கள் அரசியல் நிலைப்பாடென்ன? மோடியைப் பார்த்தாலே தங்களை ஒழித்துவிடும் எமன் என்பதுபோல்தான் அவர்கள் உணருகிறார்கள்.  பார்ப்பனர்கள் சிந்தனைக்கு எக்ஸாக்ட் ஆப்போசிட்! ஈழத்தமிழர்களுக்கு தொடர்ந்து தீங்கிழைத்த காங்கிரஸ் அரசியல்வாதிகள்கூட இவர்களுக்கு மோடியைப் பார்க்கும்போது எவ்வளவோ நல்லவர்களாகத் தோன்றுகிறார்கள். காங்கிரசுக்குத்தான்  மைனாரிட்டி மதத்தவர்  ஓட்டு விழும் என்று அடித்துச் சொல்லலாம்.

இதற்கிடையில் நம்ம திராவிட காமெடியன்கள்..

சீமான், ராம்தாசு, வை கோ, விசயகாந்துனு இதுகளும் இதுக அடிவருடிகளும், அப்புறம் திமுக ஆதரவாளர்கள், அதிமுக ஆதரவாளர்கள் எல்லாம் ஒரே குழப்பநிலையில் எப்படி அரசியல் பொழைப்பு நடத்துறதுனு தெரியாமல் என்ன எழவையோ அரசியல்னு பண்ணிக்கிட்டு திரிகிதுகள். இவர்கள் என்னைக்குமே எதையும் செய்ய லாயக்கில்லாதவர்கள் என்பதால்தான் தமிழ்நாட்டை ஆள ஒரு திராவிடன்கூட இல்லாமல் போய்விட்டது.

அரசியலைப் பொருத்தவரையில் பார்ப்பனர்களும், மைனாரிட்டி மதத்தவரும்தான் என்னைக்குமே ஒரு தெளிவான முடிவுடன் இருக்காங்க. இவர்களில் மெஜாரிட்டிக்கு நல்லவனாகத் தோன்றுபவன், மைனாரிட்டிக்கு எமனாகத் தோணுகிறான். உண்மை நிலவரம் இப்படி இருக்க, "வாங்க! நம்ம ஆத்திகன் எல்லாரும் ஒண்ணாச் சேர்ந்து கடவுளைக் கட்டி அழுவோம்" னு ஒரு உலகத்துக்குகே ஒவ்வாத தத்துவத்தை சொல்லிக்கிட்டுத் திரியுது மூளை மழுங்கிய ஓரு ஆத்திகப் பண்டாரம்!

மதநம்பிக்கை இல்லாத இந்து திராவிடர்கள்  மற்றும் தமிழ்ப் பற்றாளர்கள் நிலைப்பாடு என்றுமே உறுதியில்லாததுதான். ராமன் ஆண்டா என்ன ராவணன் ஆண்டா என்ன? என்பதே. ஒரு வேளை இதுதான் பெரிய மனிதச் சிந்தனையோ என்னவோ?

Thursday, April 3, 2014

புத்தரை வாங்கிய இந்துமதம் அல்லா ஜீசஸையும் வாங்கிடலாமே?

பெரியவர் தமிழ் இளங்கோ ஒரு பின்னூட்டத்தில் தன்னுடைய இந்துமதப் பெருமையை அடக்கமாகவும் பெருமையாகவும் இப்படிச் சொல்லியுள்ளார்.

நாத்திகமதம் எனப்படும் புத்தமததையே உள்வாங்கிக் கொண்டு புத்தரையும் ஒரு அவதாரமாக்கிய பெருமை இந்து மதத்திற்கு உண்டு.
இதிலே என்ன பெருமை இருக்குனு எனக்குத் தெரியலை. ஒரு சின்ன கம்பெணி நல்லா முன்ன்னேறியதென்றால் அதை விலை கொடுத்து வாங்கி அந்த கம்பெணியை ஒண்ணுமில்லாமல் செய்யும் ஒரு பணபலம் படைத்த இன்னொரு திமிங்கலம் கம்பெணி செய்வதுபோல் ஒரு  செயல் இது!

புத்தரின் சிந்தனைகள் அனைத்தும் இந்துமதத்தில் உள்ள குறைகளப் பார்த்தே தலை தூக்கின. அது இந்துமதம்போல அல்லாமல், சீனா, ஜப்பான் என்று பல நாடுகளில் போற்றப்பட்டன. புத்தரின் தனிப்பட்ட சிந்தனைகளை புத்தருக்கு கொடுக்காமல் அவரை இந்துவாக அவர் அனுமதியில்லாமல் மாற்றியது தவறு என்றுகூட நான்தான் சொல்லணுமா? இந்து மதம் தன் சொத்து என்று நினைத்துக் கொண்டு திரியும் பார்ப்பனர்கள் எவருமே புத்தரின் சிந்தைனைகளை புகழ்வதில்லையே? அதெல்லாம் தெரியாதா இவருக்கு?

அப்படியே அல்லா, ஜீசஸ், மோசஸ், பெரியார் எல்லாரையும் இந்து அவதார புருஷராக ஆக்கிப்புட்டீங்கனா, அட் லீஸ்ட் சிலர் இந்து மதப்பெருமை பேசுவதுபோல் ஒவ்வொருவரும் தன் மதப்பெருமை பேசி, மற்றவர் மதத்தை இறக்கி பக்தர்கள் உங்களுக்குள்ளேயே அடிச்சுக்கிட்டு நாறாமலாவது ஒற்றுமையாக இருப்பீங்க. என்ன பண்ணுறது? புத்தரை வாங்கியதுபோல் "அல்லா" "ஜீசஸை" "மோசஸை" இந்து மத கிருஷ்ணர் அவதாரமாக ஆக்கி எல்லோரையும் இந்துவாக ஆக்க முடியாது பாருங்க! :)

பெரியவருக்குப்  பொறந்தநாள் வாழ்த்துச் சொல்லப் போன இடத்தில், சில அதிகப்பிரசங்கி ஆத்திகர்களின் வாய்திமிருடன் வந்த பின்னூட்டங்கள் சம்மந்தமாக அவருடன் விவாதிக்கும்போது பெரியவரின்  "நேர்மை" என்னை மெய்சிலிர்க்க வைத்தது.

என்னதான் அவர்,  நாத்திகன் எல்லாம் போலி, ஒரு வயதில் பகவான் காலடியில் வந்து விழுந்துடுவானுகனு சொல்லாமல் சொன்னாலும், "நல்லா இருக்கட்டும்"னு  அவர் பதிவை  கண்டுக்காமல் விட்டாச்சு.

இருந்தாலும் இந்த இந்து மதப் பெருமை என்னை இப்படிப் பேச வச்சிருச்சு! :)

Wednesday, March 19, 2014

அமெரிக்காவில் பகவத்கீதை மேல் சத்ய பிரமாணம்!

கடவுள் ஒருவரே என்று நம்பும் இந்துக் கண்மணிகளின் பார்வைக்கு. முதல் அமெரிக்க காங்கிரஸ் பெண்மணி தன் சத்ய பிரமாணத்தை பைபிளின் மேல் எடுக்காமல் தன் மத நூலான பகவத்கீதையில் எடுத்தார். இதை கிருத்தவர்கள் பெரும்பாண்மையாக வாழும் அமெரிக்கா அனுமதித்தது. இது ரொம்ப பழைய ஒரு செய்திதான். ஆனால் இதை இப்போ ஞாபகப்படுத்த ஒரு சூழ்நிலை உருவாகி இருக்கிறது!

கடவுள் ஒருவரே, எல்லா மதத்தவரும் ஒரே கடவுளைத்தான் பார்க்க, பேச, பழக விரும்புகிறோம் என்று ஒப்புக்கு சொல்லிவிட்டு   தன் மதம்தான் உயர்வு என்கிற நினைப்பில் பல இந்து வெறியர்கள் வாழுகிறார்கள்.

இதில் மதவெறி என்றுமே குறையாத "அப்பாவி வேடமிடும்" பார்ப்பனர்கள் மற்றும் "உயர்சாதி என்று தன்னை முன்பே உயர்த்திக்கொண்டு" தன்னை தனித்துவமாக எண்ணும் பார்ப்பனர்களுடன் கைகோர்த்துக்  கொண்டு தன் திராவிட சகோதரர்களை ஏறி மிதித்து மேல் வந்த உயர்சாதி திராவிட துரோகிகள் எல்லாம் தன்னிடம் உள்ள  "இந்து மத வெறி"யை மறைத்து ஊரை ஏமாற்றிக்கொண்டு திரிகிதுகள்.

இந்தவகையில் கிருத்தவர்களும் இஸ்லாமியர்களும் எவ்வளவோ பரவாயில்லை. தன் மதம், தன் கடவுள்தான் தனக்கு முதன்மையானவர்கள் னு வெளிப்படையாக சொல்லி இந்த "யோக்கியர்களிடம்" கெட்ட பெயர் வாங்கிக்கொள்ளும் வெகுளிகள். இந்த இந்துக்கள் இருக்காங்களே, அடேங்கப்பா! இவனுக போடுற நாடகத்தைப் பார்த்து இவனுக கட்டி அழுகிற கடவுளே ஓடி ஒளிஞ்சுடுவாரு!

கடவுள் ஒருவனே, மதமெல்லாம் ஒரு பெரிய விடமே இல்லை என வாதிட்டு ஊரை ஏமாற்றும் இந்துக்களை நீங்கள் கவனமாகப் பார்க்கவேண்டும்.

* சரி, கடவுள் ஒருவனே,  மதம் ஒண்ணும் பெரிய விடயமில்லை என்று நீ சொன்னால் அதை நீ முழுமனதுடன் நம்பினால்.. ஒருவன் மதம் மாறுவது அல்லது ஒருவனை மதம் மாற்றுவது, அல்லது மாற்ற முயல்வது (அது சரியோ தவறோ என்பது வேறு விடயம்)  உன்னை  ஏன் பாதிக்கிது?

* மதம் மாறினாலும் அவன் இன்னும் கடவுள் பத்தனாகத்தானே? ஆத்திகனாகத்தானே இன்னொரு மதத்திலும் இருக்கிறான்?

* நீ ஏன்  சாதி என்னும் கூவம் கலந்து அதை பிரிக்கவே முடியாத இந்துமதத்தை  அவன் விருப்பத்துடன் துறப்பதை ப்பார்த்து, ஒருவன்  மதம் மாறுவதை பெரிது படுத்தி அவனை இழிவு படுத்த முறபடுகிறாய்?

* மதம் மாறினாலும் அவன் உன்னுடைய ஒரே கடவுளைத்தானே வழிபடுகிறான், முண்டம்? அது ஏன் உனக்குப் புரியமாட்டேன் என்கிறது?

இங்கே கவனி முண்டம்! ஒருவன் மதம் மாறுவது உன்னை பாதித்தால் உன்னைப் பற்றி நீ புரிந்துகொள்.

* நீ ஒரு மத வெறியன்!

 * கடவுள் எல்லாம் உனக்கு ரெண்டாவதுதான்!

* உன் மதம்தான் உனக்கு முதன்மையானது என்று நம்பும் விஷப் பார்ப்பனர் வகையைச் சேர்ந்தவன் நீ!

* உனக்கு உன் சாதி முக்கியம், உன் மதம்தான் முக்கியம், கடவுள் எல்லாம் உனக்கு அப்புறம்தான். இதைப்புரிந்துகொள்!

இதைப் புரிந்துகொள்ளாமல் ஊரை ஏய்த்துக்கொண்டு திரியாதே!

போயி உன் சாதியைக் கட்டி அழு!

உன் மதத்தை கட்டி அழு!

மதம் மாறுபவன், மாற்றப்படுபவனை விட்டுவிட்டு ஏதாவது ஹிந்து மஹாஜன சங்கக்கூட்டம் நடத்து!

உன்னை மாதிரி எத்தனை பேரை நாங்க பார்த்து இருக்கோம் தெரியுமா?
சும்மா "முட்டை"க் கதை சொல்லி சீன் போடாதே! 

நீ யாரு?  உனக்கு என்ன முக்கியம்? என்பதெல்லாம் உன்னைவிட எங்களுக்குத் தெரியும். புரியுதா?

போயி உன் கடவுளை ஏமாத்து! பகுத்தறியத் தெரிந்த எங்களுக்கு உன்னையும் தெரியும் உன் கடவுளையும் பிச்சுப் பிச்சுப் போட்டு ஆராயத் தெரியும்!

Tulsi Gabbard from Hawaii has created history by not only becoming the first Hindu ever to be sworn in as a member of the US House of Representatives, but also being the first ever US lawmaker to have taken oath of office on the sacred Bhagavad Gita. Tulsi, 31, was administered the oath of office by the John Boehner, Speaker of the House of Representatives. "I chose to take the oath of office with my personal copy of the Bhagavad-Gita because its teachings have inspired me to strive to be a servant-leader, dedicating my life in the service of others and to my country," Gabbard said after the swearing in ceremony yesterday. "My Gita has been a tremendous source of inner peace and strength through many tough challenges in life, including being in the midst of death and turmoil while serving our country in the Middle East," she said explaining the reasons for taking the oath of office on Gita. "I was raised in a multi-racial, multi-cultural, multi-faith family.
Democratic Congresswoman from Hawaii, Tulsi Gabbard, being administered the oath of office by the Speaker of the US House of Representatives John Boehner in Washington on Friday. Gabbard took the oath on a personal copy of her Bhagavad Gita. PTI Photo
பகவத்கீதை மேல் சத்யபிரமாணம்


My mother is Hindu; my father is a Catholic lector in his church who also practices mantra meditation. I began to grapple with questions of spirituality as a teenager," Gabbard said. "Over time, I came to believe that, at its essence, religion gives us a deeper purpose in life than just living for ourselves. Since I was a teenager, I have embraced this spiritual journey through the teachings of the Bhagavad-Gita. "..In so doing, have been blessed with the motivation and strength to dedicate my life in service others in a variety of ways," she said. Proud of her Hindu religion, she is not Indian or of Indian heritage. Her father Mike Gabbard, is currently Hawaii State Senator and mother Carol Porter Gabbard is an educator and business owner. At 21, she became the youngest person elected to the Hawaii Legislature. At 23, she was the state's first elected official to voluntarily resign to go to war. At 28, she was the first woman to be presented with an award by the Kuwait Army National Guard. Early during the Democratic National Convention, Gabbard spoke from stage along with Nancy Pelosi, the Democratic Party leader in the US House of Representatives. Currently, a Company Commander with the Hawaii Army National Guard, who has volunteered to serve on two deployments to the Middle East, Gabbard served as Hawaii's youngest state representative in 2002 and is the youngest woman in the USA to be elected into such a position. She was endorsed by the US President Barack Obama during the election campaign. Having never visited India so far, Tulsi says she is looking to make her first trip to India as an elected member of the House of Representatives. "As a Vaishnava, I especially look forward to visiting the holy sites of Vrindavan," she had told PTI in an earlier interview. Tulsi's spiritual lineage is the Brahma Madhva Gaudiya Sampradaya. She is a disciple of Jagad Guru Siddhaswarupananda Paramahamsa who is disciple of AC Bhaktivedanta Swami. Jagad Guru Siddhaswarupananda Paramahamsa is a co-founder of the World Vaishnava Association, an umbrella organization of over 30 India-based and world-wide missions adhering to and promoting Vaishnava teachings. Notably Hawaii is comprised of a majority of Christians with a significant number of Buddhists (10-15 per cent of the population). The number of Hindus living in Hawaii is relatively small, with only two Hindu temples in the entire state, the Iskcon Temple on Oahu and the Aadheenam Temple on Kauai. Her religion, Tulsi said was not an issue for the election, neither it has been a negative factor in her electoral campaign, she noted. Tulsi was born in 1981 in Leloaloa, American Samoa, the fourth of five children born to a Hindu mother and a Christian (Catholic) father. At the age of two, the family moved to Hawai'i, the 50th state of the US, also known as the "Aloha State"; which is also the birth place of the US President Barack Obama.

Monday, March 17, 2014

இந்துமதம் வளர்க்கும் புனிதமான பன்னிக்குட்டி!

தான் இந்துவாக இருந்து கொண்டு, தன் மதம்தான்  உயர்ந்தது, தாந்தான் உலகில் மிகப்பெரிய யோக்கியன் என்பதுபோலவும்,  கிருத்தவ மிஷனரிகள் தன்னிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாக தன் அனுபவத்தைச் சொல்லி,  கிருத்துவ மதத்தை இழிவுபடுத்தி பதிவெழுதிய ஒரு இந்துமதப் பன்னிக்குட்டி, ஏதோ மதப்பற்றெல்லாம் தனக்கில்லை என்பதுபோலவும். தனக்கு எம்மதமும் சம்மதம் என்பது போலவும், ஒரே கடவுள்தான், மதமாற்றம் என்பதெல்லாம் அவசியமில்லை என்றும் பிதற்றியது.

உடனே அன்னாருடைய  மதத்தையும் அன்னாரின் "கொலைகார மதகுருக்களையும்"  அவர்கள் செய்யும் அயோக்கியத்தனத்தையும் விமர்சிக்க தவிர்ப்பதேன் என்று மற்றவர்கள் பின்னூட்டங்கள் வாயிலாக விமர்சிக்க வந்தவுடனே எதிர் விவாதம்  செய்ய வக்கில்லாமல்..

இது என் தளம், நான் யாரை வேணா "பன்னி" என்று விளித்துவிட்டு என் விவாதத்தை முடிப்பேன் என்று விவாதத்தை கீழ்வருமாறு முடித்திருக்கிறது  இந்த  இந்து மதம் வளர்க்கும் புனிதமான பன்னிக்குட்டி!


நல்ல வாதம்.. ஒருத்தனை குறை சொன்னா இன்னொருத்தனை குறை சொல்வது சூப்பர் டெக்னிக்.. கிறிஸ்தவத்தில் ஜாதி இல்லை என்று சொல்லும் போதே உங்கள் அறிவாளித்தனம் பளிச்சிடுகிறது.. வாழ்த்துக்கள்..

பெர்னாட் ஷா சொன்ன ஒன்று தான் ஞாபகம் வருகிறது, “Never wrestle with pigs. You both get dirty and the pig likes it.”.. இனி உங்களிடம் வீண் வம்பு பேச எனக்கு விருப்பமில்லை.. உங்கள் குப்பைகளையும், மரியாதைக்குறைவான வார்த்தைகளையும் கொட்டுவதென்றால் கொட்டுங்கள்.. என் பக்கம் பதில் லேது நைனா.. ஆல் தி பெஸ்ட்..

தன் தளம் என்பதால்  தன் வசதிபோல் மற்றவர்களை பன்றி என்று விளிக்கும் இந்து மத வெறியனுக்கு அவன் தளத்தில் பதில் சொல்ல முடியவில்லை! இல்லை சொல்லப்பட்ட பதில்கள் எதிர்விவாதம் செய்ய வக்கில்லாததால் அகற்றப்பட்டது!

அதனாலென்ன இப்போ?

நமக்குனு ஒரு தளமிருக்கு இல்லையா? இந்த மதவெறிபிடித்து யோக்கியன் வேடமிட்டும் அலையும் பன்றிகளையும் அவைகளின் கேவலமான மட்டுறுத்தலையும் விமர்சிக்க நம் தளத்தில் முடியாதா என்ன??!

Thursday, January 24, 2013

விஸ்வரூபக் கமலுக்காக அழுது ஒப்பாரி வைப்போமா?!

விஸ்வரூபத்திற்கு இஸ்லாமியர்கள் தேவையில்லாமல் கொதித்தெழுகிறார்கள் என்று நம்புகிறார்கள் கலை, கலை, கலை என்று சினிமாவை கட்டி அழும் கமல்ஹாசனின் விசிறிகள். இவர்களைப் பொறுத்தவரையில் சினிமாவை ஒரு கலையாகவும், கமலை ஒரு கலைஞனாகவும் எல்லாரும் பார்க்க கத்துக்கணும் என்கிற எதிர்பார்ப்பு!

இஸ்லாமியர்கள் பார்வையில் விஸ்வரூபம்..

இந்தப்படம் முழுக்க முழுக்க  தீவீரவாதம் பற்றியது. இதில் தீவிரவாதிகளாக வருபவர்கள் எல்லாரும் இஸ்லாமியர்கள். 

"எங்களை ஏன் இப்படியே தீவிரவாதிகளாகவே காட்டுறீங்க?" என்கிறார்கள் இஸ்லாமியர்கள். அதனால் இப்படத்தை தடை செய்யச் சொல்லி வேண்டுதல் விடுத்து, முதல்வர் ஜெயாவின் கருணையில் இடைக்கால தடை வாங்கியுள்ளார்கள் இந்தப் பட வெளியீட்டுக்கு!

சரி நம்ம கமல் கதாபாத்திரம் இந்தப்படத்தில் ஒரு  இஸ்லாமியர் இல்லையா?னு கேட்டால்..நம்ம ஹீரோ கமல் இந்தப்படத்தில் ஒரு பார்ப்பனராக நடித்து உள்ளாராம்! ஒருவேளை "இஸ்லாமியப் பார்ப்பனரா" என்னனு எனக்குத் தெரியலை.

கமலையும், கமல் விசிறிகளையும், நடுநிலைவாதிகளையும் பொறுத்தவரையில் இது ஒரு கற்பனைக் கதை என்பதை எல்லோரும் தெளிவாக விளங்கிக்கொள்ளணும்! அப்புறம் இதில் வரும் இஸ்லாமியத் தீவிரவாதிகளை கலையுணர்வுடன், கலைத்துவமாக, ஒரு காதாபாத்திரங்களாக மட்டும் அனைவரும் பார்க்க வேண்டும்! ஆமா, பார்ப்பானாக வரும் கமலையும்தான்! மதச்சாயம் பூசி இந்தப்படத்தில் வரும்  யாரையும் நீங்க பார்க்கப்படாது! அதுபோல் ஒரு திறந்த மனது இஸ்லாமிய சகோதரர்களிடம் எதிர்பார்க்கப்படுகிறது!

மிகவும் அப்பாவியான, உலகமே அறியாத, உலக நாயகன் கமல், அவருடைய  இஸ்லாமிய சகோதரர்கள் எல்லாம் இவருடைய கலை ஆர்வத்தையும், இவர் நல்ல எண்ணத்தையும்  "சரி யாக" புரிந்து கொள்வார்கள் என்றும் விஸ்வரூபம் படத்தைப் பாராட்டுவார்கள்  என்றும் நம்பி மோசம் போய்விட்டார் போல் தெரிகிறது.   கமலின் இஸ்லாமிய சகோதரர்கள்  அனைவரும் இந்தப் படத்தை கலைக் கண்ணோடும், இதில் வரும் கதாபாத்திரங்களுக்கு மதச்சாயம் பூசாமலும், பார்ப்பாரகள், மேலும் இந்தப் படத்த்தை முழுமனதாகப் பாராட்டுவார்கள் என்று ஏமாந்து நிற்கிறார் உலகம் அறியாத உலக நாயகன் கமல்!

* கமல்ஹாசன் என்கிற இந்த அப்பாவிக் கலைஞன்  தற்போது படும் இன்னல்களுக்காக நாம் எல்லாம் கூடி ஒப்பாரி வைத்து அழுவோமா?

* இல்லைனா "உன்னைப்போல் ஒருவன்" வெளியிட்ட போதே அந்தப் படத்தை இஸ்லாமியர்கள் எடுத்துக் கொண்ட, விமர்சித்த விதத்திலிருந்து  இவர் பாடம் கற்று, இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாகக் காட்டுவதை அதோட இவர் நிறுத்தி இருக்கணுமா?

இது விவாதிக்க வேண்டிய விடயம்!

Tuesday, March 31, 2009

"நாத்தீக இஸ்லாமியர்" அரிதிலும் அரிது?

தந்தை பெரியார், கெளதம புத்தர், மஹாவீரர் போன்றவர்கள் பிறப்பால் இந்துக்கள்தான். இந்து மதத்தில், அவர்கள் வழிபடும் கடவுள் நம்பிக்கை இல்லாமல் வேறு பாதையில் சென்றவர்கள். இவர்கள் அனைவரும் இஸ்லாமியராக பிறந்திருந்தால் "பகுத்தறிவு பாதையில்" போய் இருப்பார்களா? என்பது சந்தேகத்திற்குரியது. ஏன் இந்த சந்தேகம்? அதுபோல் உருவான யாரையும் நான் பார்க்கவில்லை.

இந்து மதத்தில் குறைபாடுகள் அதிகம். ஜாதியை உருவாக்கியது இந்து மதம். மனிதக்கடவுள்கள் இந்து மதத்தில்தான் உண்டு. பாபாஜி, சாய்பாபாஜி அந்த ஜி இந்த ஜினு போய்க்கிட்டே இருக்கும். ஏகப்பட்ட கடவுள்கள். ஆண் பெண், அலி என்று பலவகை கடவுள்கள்.

பொதுவாக இந்து மதக்கடவுள்கள் மனிதர் மாதிரியே உருவமுடைவராக கற்பனை செய்யப்பட்டவர்கள்.

கடவுளுக்கு மனிதனுக்கு உள்ள உடல் உறுப்புகள், மூளையெல்லாம் இருக்கனுமா என்ன?

ஏன் இருக்கக்கூடாது? என்பார்கள், கடவுளை படைத்தவர்கள்!

கடவுளுக்கு மனித உருவம் கொடுத்து, அவருக்கு நகை போட்டுவிட்டு, கை வச்சு, கால் வச்சு, சேலை அணிவித்து, நகைகள் போட்டு அலங்காரம் செய்து வேடிக்கை பார்ப்பவர்கள் இந்துக்கள்தான்.

கடவுளுக்குப் பாட்டுப்பாடி அவரை தூங்க வைப்பவர்கள், மகிழவைப்பர்களும் இந்துக்கள்தான்.

இவ்வளவு "குறைபாடுகள்" இருந்தாலும் ஒரு வகையில் பிறப்பால் இந்துக்களை பகுத்தறிவுவாதிகளாக ஆக்குகிறது. சிந்தனையாளர்களாகவும் ஆக்குகிறது.

இந்தியாவில் இந்துக்களுடையை மக்கள் தொகை 70 விழுக்காடுகளுக்கு மேல் இருந்தாலும், இதில் மத வெறியர்கள் எத்தனை விழுக்காடுகள் என்று பார்த்தால், அதிகம் இல்லை என்று சொல்லலாம்.

தமிழ்நாட்டை பொறுத்தவரையில் இந்து மத வெறியர்களுக்கு மிகப்பெரிய எதிர்ப்பு இந்துவாகப் பிறந்து இந்துமதத்தில் நம்பிக்கை இல்லாதவர்களால் வருகிறது.

உருவ வழிபாடு இல்லாத, இஸ்லாம் மதத்தில் இருந்து உருவாகிற கடவுள் நம்பிக்கை இல்லாத பகுத்தறிவுவாதிகள் மிக மிக அரிது. அது ஏன் என்று யாராவது விளக்க முடியுமா?