இன்னைக்கு சீனா அமெரிக்காவையே மிரட்டும் அளவுக்கு ஒரு சூப்பர்
பவராகிவிட்டது என்கிற ஒரு பெரிய விசயம்தான் சூப்பர் பவராகத் துடிக்கும்
இந்தியாவுக்குத் தெரியும். சைனாவுடைய வெற்றிக்குக் காரணம் இண்டஸ்ட்ரியல்
ரெவலூஷன் (Industrial revolution). எல்லாப் பொருள்களும் சைனாவில்
தயாரிக்கப் படுகிறது. இதனால் பயங்கர வருவாய், வேலை வாய்ப்பு இத்யாதி
இத்யாதி. ஆனால், அதற்கு ஒரு விலை இருக்கிறது. எல்லா தொழிற்சாலைகளில் வரும்
வேதிக்கழிவுகளால் தண்ணீர் மற்றும் சுவாசிக்கும் காற்றும் சுத்தமில்லாமல்
ஆகிவிட்டது. இதனால் பலருக்கும் நுரையீரல் புற்றுநோய் மற்றும் ஈரல்
புற்றுநோய் என்று பல ஆயிரம் மக்கள் பாதிக்கப் படுறாங்க என்பதை சைனா உணர
ஆரம்பித்துவிட்டது. சூப்பர் பவராவதற்கு விலை, சுகாதாரக் கெடுதி மற்றும்
புற்றுநோய்! இதுக்குத்தான் நம்மளும் ஆசைப் பட்டுக்கொண்டிருக்கிறோம்.
Something about SKIN CANCER...
"தோல் புற்றுநோய் என்பது வெள்ளைக்காரர்களுக்கு மட்டும்தான் வரும்! ஏன் என்றால் அவர்கள் தோலில் மெலனின் என்கிற பிக்மெண்ட் கெடையாது" என்பது உண்மை போல இருக்கும். ஆனால் கருப்புதோல் உள்ள கருப்பர்களுக்கும், ப்ரவுன் தோல் உள்ள நமக்கும் தோல் புற்றுநோய் வரலாம். வருகிறது என்பதுதான் உண்மை.
புற்று நோயிலேயே மோசமான ஒண்ணு இது. தோலில் ஆரம்பிச்சு உடலில் எந்த முக்கிய உள்ளுறுப்புக்கும்க்கும் பரவலாம் (lungs and liver). மேலும் கருப்பு நிறத்தில் உள்ளவங்க நமக்கெல்லாம் தோல் புற்றுநோய் வராதுனு அசட்டையாக இருப்பதால்,தோல் புற்றுநோய் முற்றியபிறகுதான் அதை கவனிக்கிறார்கள். மருத்துவரை அனுகும்போது அது ஸ்டேஜ் 3 or more போல காலம் கடந்துவிடுகிறது. :-(
Thursday, February 28, 2013
Friday, February 22, 2013
சண்டியர் கரனுக்கு எதிராக இன்னொரு வில்லன் சங்கர்!
கமல் ரசிகர்களிலேயே ஒரு வினோதமான ஆள்தான் நம்ம சண்டியர் கரன் என்பவர். இவர் என்ன எழவைப் பத்தி எழுதினாலும் கமல் புகழ் பாடுகிறாரோ இல்லையோ ரஜினியை மெண்டல் என்றும் ரஜினி ரசிகர்களை மடையர்கள் என்றும் சொல்லாமல் இருக்க மாட்டார். இவர் தளத்தில் நடக்கும் மட்டுறுத்தல் என்னும் கூத்து இருக்கே! அடேங்கப்பா!
இவர் பல "உண்மைகளை" பகிர்ந்து கொள்வதால் இவர் தளத்தை தவிர்ப்பது கொஞ்சம் கடினம். என்னதான் நம்ம சண்டியர் சொல்றாருனு நான் போய் பார்ப்பது வழக்கம்! ஆனால் ஒண்ணுப்பா, ரஜினிமேலேயும், ரஜினி ரசிகர்கள் மேலேயும் இவருக்கு இருக்கும் காண்டு என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. கமலஹாசன் என்னும் மிகப்பெரும் கலைஞனை அவனளவுக்கு திறமை இல்லாத ஒரு கன்னடத்தை சேர்ந்த மராத்திக்காரன் பாக்ஸ் ஆஃபிஸில் வெல்வதா? என்கிற ஆதங்கம் அவரிடம் இருக்கு. ஆனால்.. அதுக்காக பொய்யையும் புரட்டையும் எழுதுவது தவறுனு இவருக்கு விளங்க மாட்டேன் என்கிறது. விஸ்வரூபம் வசூல் சாதனை பற்றிச் சொல்லும்போது எதையாவது இஷ்டத்துக்கு சேர்த்து விடுவாரு இவரு. தேவையே இல்லாமல் இவர் ரஜினி ரசிகர்களை அவனாமப்படுத்துவதால் இவரை இவர் தளத்திலேயே போய் திட்ட வேண்டிய அவசியம் ஆகிறது.
சமீபத்தில், internet movie data base என்னும் தளத்தில் சுமார் 24 000 க்கும் மேற்பட்ட மக்கள் கணிப்பில் விஸ்வரூபம் 9.5/10 மதிப்பெண்கள் பெற்ற சாதனையை ஒரு பதிவில் பகிர்ந்து கொண்டார், நம்ம சண்டியர். அது உண்மையிலேயே பாராட்டப் பட வேண்டிய ஒன்றுதான். ஆனால், நம்ம சண்டியர் அதோட நின்று இருக்கலாம். அவர் நிக்காமல், எந்திரன் வசூலை விஸ்வரூபம் வீழ்த்தியதாக் ஒரு பொய் செய்தியையும் எந்தவிதமான மனசாட்சியில்லாமல், அதே பதிவில் கோர்த்துவிட்டு எழுதுகிறார். இவர் மூளை வித்தியாசமாக வேலை செய்கிறது. உலக நடப்பு, உண்மை என்பதெல்லாம் ஒருபுறம் இருக்க ஒரு பெரிய பொய்யை சாதாரணமாக உண்மை போல் எழுதுகிறார். இது என்னை மாரி உண்மை விரும்பி ஆளுக்கெல்லாம் படு எரிச்சலை கிளப்புது. சரினு இவர் தளத்தில் போய் "உண்மை ஒருபுறம் இருக்க ஏன்யா கதை விடுற?" னு இவரைப் போலவே எதிர்வாதம் செய்தால், நம்ம காமெண்ட்ஸை எல்லாம் தூக்கிவிட்டு, நம்மை விமர்சிச்சு ஒரு பதில் வேற தருவார்.
ஆமா அது அவர் தளம்! அவர் என்ன வேணா செய்யலாம்! வாழ்க சண்டியர்!
இவர் இப்படி ஒருபுறம் இருக்க, இவரை மிஞ்சும் அளவில் தட்ஸ் டமில் தளத்தை சேர்ந்த சங்கர் என்னும் இன்னொரு காமெடியன் கமலஹாசனையும் பலவிதமாக இறக்குகிறான்.
சண்டியர் கரனுக்கு சரியான போட்டி இந்த தட்ஸ்தமிழ் சங்கர்தான்! :)))
என்னைப் பொறுத்தவரையில் எதிரிக்கு எதிரி நண்பன் என்றெல்லாம் இந்த விடயத்தில் நான் சொல்ல மாட்டேன். ரெண்டு பேருமே (சண்டியர் கரன் & தட்ஸ் டமில் சங்கர்) பொய்யர்கள்தான்! :)))

விஸ்வரூபத்தை தூக்கிய அமீரின் ஆதிபகவன்... 500 அரங்குகளில் வெளியீடு!
Read more at: http://tamil.oneindia.in/movies/news/2013/02/ameerin-aadhi-bhagavan-kicked-viswaroopam-2-weeks-170280.html
வெளியான இரண்டே வாரங்களில் தமிழகத்தின் பெரும்பாலான அரங்குகளிலிருந்து தூக்கப்பட்டுள்ளது கமல்ஹாஸனின் விஸ்வரூபம். இந்தப் படம் ஓடிய பெரும்பாலான அரங்குகளில் இன்று அமீரின் ஆதிபகவன் வெளியாகியுள்ளது. குறிப்பாக சென்னையில் 40 திரையரங்குகளில் அமீரின் ஆதிபகவன் வெளியாகியுள்ளது பெரிய சாதனையாகப் பார்க்கப்படுகிறது. புறநகர்களில் 22 அரங்குகளில் இந்தப் படம் வெளியாகியுள்ளது. ரஜினி, கமல் நடிக்காத ஒரு படம் சென்னை நகரில் இவ்வளவு அரங்குகளில் வெளியாகியிருப்பது இதுவே முதல் முறை. ரசிகர்களின் பல்ஸ் என்று கூறப்படும் காசி திரையரங்கில் இரண்டே வாரங்களில் விஸ்வரூபம் எடுக்கப்பட்டு, ஆதிபகவன் போடப்பட்டுள்ளது. கோவை மண்டலத்தில் மொத்தம் 47 அரங்குகளில் விஸ்வரூபம் வெளியிடப்பட்டிருந்தது. இதில் 40 அரங்குகளில் படம் எடுக்கப்பட்டுவிட்டது. அவற்றில் பெருமளவு ஆதிபகவன் படமே வெளியாகியுள்ளது. மதுரையில் இதுவரை இல்லாத அளவு அதிகபட்சமாக 8 அரங்குகளில் ஆதிபகவன் வெளியாகியுள்ளது. வெற்றி, அமிர்தம், பிக் சினிமாஸ், மதி, அபிராமி, தமிழ்ஜெயா, மணி இம்பாலா உள்ளிட்ட அரங்குகளில் இந்தப் படம் வெளியாகியுள்ளது. திண்டுக்கல், சிவகங்கை, காரைக்குடி, தேனி, பழனி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் 26 அரங்குகளில் ஆதிபகவன் திரையிடப்பட்டுள்ளது. கோவை நகரில் மட்டும் 11 அரங்குகளில் ஆதிபகவன் வெளியாகியுள்ளது. கிட்டத்தட்ட கோவைக்கு இணையாக திருப்பூரில் 9 அரங்குகளில் இந்தப் படத்தை திரையிட்டுள்ளனர். சேலம் ஏரியாவில்தான் அதிகபட்ச அரங்குகளில் இந்தப் படம் வெளியாகிறது. சேலம் நகரில் மட்டும் 8 அரங்குகளிலும், மற்ற பகுதிகளில் 42 அரங்குகளிலும் ஆதிபகவன் வெளியாகிறது.நம்ம சண்டியர் மாரியே பொய்களைக் கலந்து எழுதும் சங்கர் போல் ஆசாமிகளைப் பார்க்கும்போது, நம்ம சண்டியர் கரனுக்கு ஏற்ற சரியான வில்லன் ஒருத்தன் உருவாகிவிட்டான் னு சந்தோஷப்பட வச்சிட்டாரு நம்ம கரண்! :)))
என்னைப் பொறுத்தவரையில் எதிரிக்கு எதிரி நண்பன் என்றெல்லாம் இந்த விடயத்தில் நான் சொல்ல மாட்டேன். ரெண்டு பேருமே (சண்டியர் கரன் & தட்ஸ் டமில் சங்கர்) பொய்யர்கள்தான்! :)))
Wednesday, February 20, 2013
சாதீயத்தை வளர்க்கும் தளங்களை முளையிலேயே கிள்ளி எறியுங்கள்!
ஒரு சில பதிவர்கள் உலகம் அறியாதவர்களாக இருக்காங்களா இல்லை அப்படி நடிக்கிறாங்களா னு தெரியவில்லை. பதிவெழுத ஆரம்பித்த சில மாதங்களில் தன் ஊரைச் சொல்லுறது, அப்புறம் தன் பதிவின் மூலமாக ஏதாவது ஒரு உண்மைக்கதை சொல்லுவது போல தன் சாதியை பறைசாற்றி விடுகிறார்கள். இவர்கள் என்ன செய்கிறார்கள்னு சாதியிலேயே ஊறி அறியாமையில் வாழும் இவர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் இவர்களை நமக்குப் புரியாதா என்ன?
பதிவுலகில் வந்து தன் சாதியைச் சொல்வதை தவிர்ப்பதை விட்டுவிட்டு எதார்த்தமாக சொல்வதுபோல் தன் சாதியை வேணுமென்றே பறைசாற்றுகிறார்கள். ஏன் இப்படி செய்கிறார்கள்? இவர்கள் வலைதளத்தில் இவர்கள் சாதிக்கூட்டத்தை மறைமுகமாக ஒன்று சேர்ப்பதற்காகனுகூட சொல்லாம்! சாதாரண வாசகனாக, ஒரு தமிழனாக இவர்கள் எழுத்தின் மீது நாட்டம் கொண்டு வாசிக்க வருகிற பதிவர்களை விட "இவன் நம்ம ஆளு" னு வாசிக்க ஒரு கூட்டமே இவர்களுக்குத் தேவைப் படுகிறது என்பது பரிதாபம்.
ஏற்கனவே இருகிக்கிற மறுக்க முடியாத மறைக்க முடியாத ஒரு பிரச்சினை..பதிவுலகில் ஒருவர் பெயரை வைத்து அவர் மதத்தை எளிதாக அறிந்துவிடலாம். நாத்திகரான நீங்க இக்பால் செல்வன்னு வீம்புக்கு பெயர் வைக்காமல் இருக்கும் வரையில் அது எளிது. ஒரு பதிவரின் மதமறிவது பதிவுலகில் எளிது என்பது எல்லாருக்கும் தெரியும். இதை எப்படி தவிர்ப்பது? முடியாது போலவே? என்று யோசித்துக்கொண்டிருக்கும் இந்த தருணத்தில் சாதீயம், சாதி அடையாளங்களை சொல்லிக்கொண்டு அலையும் சாதித்தளங்கள் வளர ஆரம்பித்து உள்ளது.
வலைபதிவர் ஒருவர், மிகக்கவனமாக தன் சாதி அடையாளங்களை வெளியில் சொல்லாமல் இருப்பதில் என்ன பிரச்சினை னு எனக்கு விளங்கவில்லை!
ஏற்கனவே பதிவர்களில் பலரை வெஜிடேரியன் என்கிற ஒரு விடயத்தை வைத்தே ஓரளவுக்கு இவர்கள் பார்ப்பனர்கள்னு யூகித்துவிடலாம். இதில் பலர் நாகரிகம் கருதி, எவ்வளவுதான் கவனமாக தன் சாதியை வெளிக்காட்டக்கூடாதுனு இருந்தாலும் இவர்களை அடையாளம் கண்டு கொள்வது எளிது. இவர்களை அடையாளம் கண்டுகொண்டாலும், கண்டு கொள்ளாத மாதிரி விட்டுவிட்டுப் போய்விடுகிறோம். முடிந்தவரை இவர்களை ஒரு தமிழ்ப் பதிவராக பார்க்க முயல்கிறோம். சாதியை ஒதுக்கி வைத்துவிட்டு அவர்களை ஒரு பதிவராகப் பார்ப்பதுதான் அழகு என்று திறந்த மனதுடன் பார்க்கிறோம்.
இது பத்தாதுனு பிராமனர் அல்லாத பிறசாதியைச் சேர்ந்த தமிழ்ப்பதிவர்கள் தன் சாதி அடையாளத்தை வேண்டுமென்றே வெளிக்கொண்டு வந்து, சாதியை, சாதி அடையாளத்தை ஒழிக்க முடியாதுனு வியாக்யாணம் வேற பேசுகிறார்கள். இப்படி செய்துகொண்டு தான் எதுவும் தவறு செய்யவில்லை, நான் எல்லா சாதியையும் மதிக்கிறேன், சாதியை என் வீட்டில்தான் வைத்திருக்கிறேன் என்று வேறு சொல்கிறார்கள்.
உன் சாதியை நீ உன் வீட்டில் அடைத்து வைத்திருந்தால் எனக்கும் இந்த உலகுக்கும் உன் சாதி எப்படித் தெரிந்தது? நீ சொல்லாமல்? உன் சாதியை இணையதளத்தில் நீ பறை சாற்றி இருக்கிறாய். அதனால்தான் உலகுக்குத் தெரிகிறது! "உன் சாதி அடையாளத்தை உன் வீட்டில் அடைத்து வைக்காமல் பதிவுலகில் பறைசாற்றியிருக்கிறாய்" என்றுகூட உணராமல் அறியாமையில் வாழ்கிறாய்! மேலும் அதில் ஒரு தவறும் இல்லை, அது என் கருத்துரிமை என்று வேறு சொல்லுகிறாய்!
சாதாரண வாசகனாக இவர்கள் எழுத்தின் மீது நாட்டம் கொண்டு வாசிக்க வருகிற பதிவர்களை விட "இவன் நம்ம ஆளு" னு வாசிக்க ஒரு கூட்டமே வர வேண்டும் என்பதே இவர்கள் முயற்சி. இவர்கள் வலையுலகிற்கு பதிவெழுத வர்ரார்களா? இல்லைனா தன் மஹாஜனக் கூட்டத்தை ஒன்று சேர்க்க வர்ராங்களானு தெரியவில்லை!
உங்க சாதி அடையாளத்தை முன் வைப்பதில் தவறில்லை என்றுதான் ஐயா டோண்டு ராகவன் முதல்க்கொண்டு இன்று சாதி அடையாளத்தை "மறைமுகமாக" வெளியிடும் புதிய பதிவர்கள் வாதம் செய்றாங்க.
அதை ஒருபோதும் ஏற்கலாகாது! நீங்க உங்க சாதி அடையாளத்தை உங்க வீட்டிலேயே வைத்து விட்டு அந்த அடையாளத்தை வெளிக்காட்டாமல் இருக்க வேண்டிய பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது.
தமிழ்மணத்தின் முக்கிய பொறுப்பு!
* இதுபோல், எதோ எதார்த்தமாகப் பேசுவதுபோல் தன் சாதியை வெளிக்காட்டி சாதீயத்தை வளர்க்கும் வலைபதிவுகளை வளரவிடாமல் முளையிலேயே இந்தப் பிரச்சினையை கிள்ளி எறிய வேண்டிய முக்கியப் பொறுப்பு தமிழ்மணம் போன்ற வலைதளங்களுக்கு உண்டு என நான் உறுதியாக நம்புகிறேன்.
தமிழ்மணம், அப்படி எதுவும் செய்யவில்லை என்றால், பதிவுலகில் மதச்சண்டை இன்று நடப்பதுபோல் நாளை, சாதி அடிப்படையில் ஒன்று சேரும் கூட்டங்களும், சாதிச்சண்டைகளும் நடக்கும் அபாயம் இருக்கிறது என்பதை மனதில் கொள்ளுவோமாக! இதை முளையிலேயே கிள்ளி எறிவதுதான் புத்திசாலித்தனம்!
"சாதி வேணும்.." என்று பேசுவது என் கருத்துச் சுதந்திரம், உன் வேலையைப் பாரு! என்று எதிர் வாதம் செய்து சப்பை கட்டுவதை யாரும் எதுவும் சொல்வதற்கில்லை!
ஆனால்..
"தமிழ்மணம் போல திரட்டிகளை உமது சாதீயத்தை வளர்க்க பயன்படுத்த வேண்டாம்!" என்று சொல்லும் கருத்துரிமை எங்களுக்கும் உண்டு என்பதை புரிந்து கொள்க!

Subscribe to:
Posts (Atom)