காந்தி, என்னதான் நம் தேசத் தந்தையாக இருந்தாலும் அவருக்கு இந்து மதப்
பற்று அதிகம். காரணம்? காந்தி ஒரு பார்ப்பணர் இல்லை என்றாலும் ஒரு ஹை
க்ளாஸ் இந்து! காந்தியால் நெறைய சாதிக்க முடிந்ததற்கு அது ஒரு முக்கியக் காரணம்! காந்தி, கீழ் சாதியிலிருந்து வந்தவரில்லை என்பதை நினைவில் கொள்ளுவோம்!
சப்போஸ், காந்தியே ஒரு
தாழ்த்தப் பட்டவரா பிறந்து இருந்தால் என்ன ஆகியிருக்கும்? அவர் போராடி இவ்வளவு உயரத்திற்கு ஒரு பெரிய தலைவராக வந்திருக்க முடியுமா? என்றால்..,,சாண்ஸே இல்லை! என்பதே கசப்பான உண்மை!
சில உண்மைகளை ஏற்றுக்கொள்ள திறந்த மனது இருக்கிறதா உங்களிடம்?
தொடருங்கள்!
காந்தி, உயர் சாதியில்
பிறந்தது அவர் தப்பில்லை! ஆனால் அவர் தாழ்த்தப்பட்டவரா பிறந்து வளர்ந்து இருந்தால் நிச்சயம் இந்துமதப் போதகரா இருந்து இருக்க மாட்டார்! ஏன்? இருந்து
இருக்க முடியாது! ஏன்? சக இந்துக்கள், தாழ்த்தப் பட்டவரான தன்னை இழிவு படுத்துவதை தாங்க முடியாமல், இந்து மதத்தை வெறுத்து புத்தமதம் இல்லைனா இஸ்லாம்,
இல்லைனா க்ரிஷ்டியனாக ஆகி இருப்பார்!
காந்தி மேலே எனக்கு நெறையவே மரியாதை
எல்லாம் உண்டு. அஹிம்சை முறையில் போராட்டம் நடத்தலாம் என்று உலகத்துக்கே
கற்றுக் கொடுத்தவர் காந்தி! இருந்தாலும் உயர் சாதியில் பிறந்ததால் அவருக்கு
நெறையவே அனுகூலங்கள் இருந்தன என்பதை யாரும் மறுக்க முடியாது. காந்தி பொறந்தது குஜராத்! நம்ம தமிழ்நாடு
இல்லை! ஒரு வேளை அவர் தமிழ்நாட்டில் பொறந்து இருந்தால் காந்தியும் வீணாப்போயி இருப்பார்!
அடுத்து
நம்ம ஜீனியஸ் அம்பேத்கார் பற்றி பார்ப்போம்! அம்பேத்கார் பிறந்தது
மத்யபிரதேஷ்! ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பில் பிறந்து இவர் இந்த அளவுக்கு படித்து முன்னேறி மேலே வந்திருக்கார்னா, இது எவ்வளவு பெரிய விசயம்னு சாதி வெறிபிடித்து
அலையும் தமிழ்நாட்டில் பிறந்த எனக்கு நல்லாவே தெரியும்!
இச்சாதனையை
உலக அதிசயங்களில் முதல் அதிசயமாக வைக்கணும்! என்னைத் தவறா
புரிஞ்சுக்காதீங்க! அதாவது ஜீனியஸ்கள் தாழ்த்தப்பட்ட வகுப்பில் பிறந்தததை
நான் பெரிதாகச் சொல்லவில்லை! தாழ்த்தப்பட்ட வகுப்பில் பிறந்த ஒரு ஜீனியஸ், போராடி
வளர்ந்து நாடறிய உலகறிய முன்னேறியதை சொல்லுகிறேன்! அவருக்கு எவ்வளவு
தன்னம்பிக்கை இருந்து இருக்கணும்?
ஒரு வேளை அம்பேத்கார் தமிழ்
நாட்டில் பொறந்து இருந்தால்?
நெனைக்கவே எனக்கு பயம்மா இருக்கு! அம்பேத்கார் படித்து மேலே வளரவிடாமல் நம்ம ஊர்
உயர்சாதி முட்டாள்களால், சுத்தமாக
தடுத்து ஒடுக்கப்பட்டு அழிந்து இருப்பார்! அவர் சிந்தனைகளை, முன்னேற்றத்தை, படிப்பறிவை
வளர்க்கவிடாமல் சாதி வெறிபிடித்த தமிழர்களால் அழிக்கப்பட்டு இருப்பார்!
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் அந்தக்காலகட்டத்தில்
தாழ்த்தப்பட்டவர்கள் அடைந்த இன்னல்களுக்கு அளவே இல்லை! அம்பேத்காரை மட்டும்
விட்டு வைத்து இருப்பார்களா என்ன? மூளையைக் கசக்கி யோசிக்கவும்!
பார்ப்பணர்கள் பலரிடம் எனக்குப்
பிடிக்காத விசயம் ஒண்ணு இருக்கு. எதுக்கெடுத்தாலும்
தாழ்த்தப்பட்டவர்களுக்கு இன்று கொடுக்கப்படும் ரிசெர்வேஷன் பத்தி மட்டும்
வயிறெரியிவார்கள்! நாங்க தீண்டாமையை வளர்த்தோமே ஒழிய, தாழ்த்தப்பட்டவர்களை
எந்தவையிலும் "ஃபிசிக்கல் அப்யூஸ்" பண்ணவில்லை என்பார்கள். அதுபோல்
"அப்யூஸ்" செய்தவர்களெல்லாம் ஹைக்க்ளாஸ் திராவிட முட்டாள்கள்தான் என்பார்கள். அந்தக் குற்றச்சாட்டு
ஓரளவுக்கு உண்மைதான். ஆனால் பார்ப்பணர்கள் என்னைக்காகவது
தாழ்த்தப்பட்டவர்களுக்காக, அவர்கள் பட்ட இன்னல்களுக்காக அழுதிருக்காங்களா?
அவங்க படுகிற இன்னல்களைப் பத்தி கவலையாவது பட்டு இருக்காங்களா? இல்லை,
அவர்களுக்குகாக இரங்கச்சொல்லி இவங்க கடவுளிடம் பூஜை செய்து இருக்காங்களா? அவங்களும்
மனிதர்கள்தான், ஏன் அவர்களை நாம் இவ்வளவு கீழ்த்தரமா ட்ரீட் பண்ணுகிறோம்?னு
யோசிக்கவாவது செய்தார்களா? அந்த அளவுக்கு பார்ப்பணர்களுக்கு மூளை
இருந்ததா? இல்லை திறந்த மனதுதான் இருந்ததா? னு பார்த்தால்... கெடையவே கெடையாது
என்றுதான் தோனுது. அதுபோல் நற்சிந்தனை கொண்ட பாரதியையே அக்ரஹாரத்தைவிட்டுத்
தள்ளி வைத்தவர்கள் இவர்கள்! கொஞ்சம்கூட பொது நோக்கில்லாமல் இவங்க முன்னேற்றம், இவங்க கல்வியறிவு, இவங்க
மதம், இவங்க கடவுள் நம்பிக்கை இதில்தான் இவர்கள் எப்போதுமே முழு கவனம்
செலுத்தினார்கள். தாழ்த்தப் பட்டவர்களையோ, அவர்கள் பட்ட இன்னல்களையோ பற்றி இவங்க ஒருபோதிலும் கவலைப்பட்டதே இல்லை!
வடிகட்டின சுயநலம்!
பெரியார்கூட
தாழ்த்தப்பட்டவர்களுக்காக ரொம்ப வரிந்துகட்டிக்கொண்டு வந்து அவர்களை இழிவுபடுத்திய "ஹை க்ளாஸ்"
திராவிட முட்டாள்களை கண்டித்தாரா என்பது தெரியவில்லை!
அம்பேத்கார்கள்
நம் தமிழ்நாட்டில் உருவாகி இருக்க முடியுமா? னு யோசித்தால் ... நிச்சயமாக
அந்த காலகட்டத்தில் உருவாக முடியாத ஒரு சூழல்தான் இருந்ததுனுதான் தோனுது. நிச்சயம்
அம்பேத்கார் போன்ற ஜீனியஸ்கள் தமிழ் நாட்டில் தாழ்த்தப்பட்ட வகுப்பில் பிறந்து, உலகறியாமலே வளர்ந்து, வாழ்ந்து பிறகு நாமறியாமலே மறைந்தும்தான் இருப்பார்கள்.
அவர்கள் அம்பேத்கார்போல் மேல் வந்து பெரிய ஆளாகததற்கு காரணம்?
தாழ்த்தப்பட்டவர்களை நசுக்கிய நம் உயர்சாதி தமிழர்களந்தான் நிச்சயம் இதில் பெரிய பங்குபெறுவார்கள்! தீண்டாமையை கண்டுபிடித்து, கடைபிடித்து,
வளர்த்த பார்ப்பணர்களும் இவ்விசயத்தில் "இண்ணொசண்ட்" எல்லாம் கெடையாது.
ரொம்ப
யோசித்தால், அறியாமைதான் (நம்ம முட்டாள்களா இருந்து இருக்கோம்)
எல்லாவற்றிற்கும் காரணம்னு பொத்தாம் பொதுவாக சொல்லிட்டுப் போகலாம்!
இல்லைனா இருக்கவே
இருக்காரு நம்ம கடவுள். ஆமா, அவர் என்னத்த கிழிச்சாரு தாழ்த்தப்பட்டவர்களை இந்த
முட்டாள்கள் சீரழிக்கும்போது?
குறிப்பு: அம்பேத்கார் திரைப்படம்
இன்னும் பார்க்கவில்லை! அந்த திரைப்படத்தைப் பத்தி யோசிக்கும்போது வந்த
சிந்தனைகளின் தொகுப்புதான் இது!
பின்குறிப்பு: இது ஒரு காலத்தில் எழுதிய பதிவு.
ஆமாம் மீள் பதிவு இது! அதனால் காரசாரமாக இருக்கும்! பயந்துடாதீங்க! :)