Monday, June 30, 2008

கற்புனா என்ன? : சில நினைவலைகள்(360 டிகிரி)



நான் முதன் முதலில் அமரிக்கா வந்த போது என் அம்மா ஏர்போர்ட்டில் என் தலை மறையும் வரை சொல்லிக்கொண்டே இருந்தது "போய் சேர்ந்தவுடனே ரங்கராஜன் மாமாவையும், கலா மாமியையும் காண்டாக்ட் பண்ண மறந்துடாதடீ". என்னவோ என்னுடைய அமரிக்க வாழ்கையே என்னுடைய தூரத்து உறவினர்களான ரங்கராஜன் தம்பதியினரிடம் அடங்கி இருப்பதை மாதிரி ஒரு பில்டப் தந்தார். அதே மாதிரி லாஸ் ஏஞ்சலீஸ் ஏர்போர்ட் வாசலில் ரங்கராஜன் தம்பதி தயாராக காத்திருந்தனர்.

வழக்கமான விசாரிப்புகளுக்கு பிறகு மாமி தான் முதலில் கேட்டார் "உன்னை எங்கேமா கொண்டு போய் விடனும்?"

"என்னுடைய காலேஜுக்கு மாமி, டார்ம் ரூமில் தான் ஸ்டே பண்ணப்போறேன்"

இடையில் மாமா குறுக்கிட்டு, "முதலில் வீட்டுக்கு வாம்மா, டார்ம் விஷயம் எல்லாம் அப்புறம் பேசிக்கலாம்". மாமி ரகசியமாக மாமாவை முறைத்ததை நான் கவனிக்க தவறவில்லை. புது ஊரை, முகங்களை பார்க்கும் பயம் மற்றும் பயணக்களைப்பு(நான் வந்து சேர்ந்த நேரம் இந்தியாவில் பகல் 3 மணி) இருந்ததால் அதற்கு மேல் நான் ஏதும் பேசவில்லை. வீடு வரும் வரை காரில் அசாதாரணமான அமைதி நிலவியது.


வீடு வந்தவுடன் அப்பா- அம்மாவுக்கு நலமுடன் ஊர் வந்து சேர்ந்த விஷயத்தை கால் பண்ணி சொல்லிவிட்டு, பிறகு சாப்பிட்டு, கொஞ்ச நேரம் அவர்கள் குழந்தைகளூடன் பேசிக்கொண்டிருந்தேன். மாமி ஏதோ நினைவுக்கு வந்தவளாக, "என்னோட வா கயல், மேல் தளத்தில் இருக்கும் கெஸ்ட் ரூம் காட்டறேன். அங்கே போய் ரெஸ்ட் எடுத்துக்கோ". நான் மேல் தளத்தில் இருந்த கெஸ்ட் ரூமில் தூங்க முயற்சி பண்ணிக்கொண்டிருந்தேன். நேரம் கெட்ட நேரத்தில் சாப்பிட்டது, தூக்கமில்லாமல் இருந்தது எல்லாம் சேர்ந்து தூங்கவிடாமல் ஏதோ பண்ணியது. சிறிது நேரத்துக்கு பிறகு படுத்திருப்பது சலிப்பாக இருக்கவே கீழே இறங்கி வந்து லிவ்விங் ரூமில் இருந்த புத்தகங்களை புரட்டிக்கொண்டிருந்தேன்.

பக்கத்து அறை மாஸ்டர் பெட்ரூமில், மாமியும் மாமாவும் பேசிக்கொண்டிருந்தது கொஞ்சம் கொஞ்சமாக கத்தலாக மாறியது. நான் கேட்க முயற்சி பண்ணவில்லை என்றாலும் கேட்பதை தடுக்கமுடியவில்லை.

"இப்போ என்ன அந்த பொண்ணு மேலே தனி கரிசனம் உங்களுக்கு?"

" என்ன கலா இப்படி பேசறே, அது நம்ம சொந்தக்கார பொண்ணு இல்லையா?"

"உங்களை விட எனக்கு தான் சொந்தம், அதான் கேட்கறேனே, எனக்கில்லாத அக்கறை உங்களுக்கு மட்டும் ஏன்?"

"வாயை மூடுடி, இப்படி அசிங்கமா பேசினா எனக்கு கெட்ட கோபம் வரும். அந்த பொண்ணு எனக்கு சொந்த மகள் மாதிரி"

"இந்த டயலாக்கை நாங்க ஏற்கெனெவே கேட்டிருக்கிறோம்"- இந்த முறை மாமியின் குரலில் கிண்டல் தெரித்தது.

"எதுக்கு போய் எதை இழுக்கற? நீ மட்டும் ரொம்ப ஒழுங்கா? அதை எல்லாம் நான் சொல்லிக்காட்டறேனா? வர வர உனக்கு வாய்கொழுப்பு ரொம்ப அதிகமாயிட்டே போகுது! என் பொறுமையை சோதிக்காதே"

"ஏன் என்ன பண்ணுவீங்க? அடிக்கப்போறீங்களா? இங்கே நீங்க அடிச்சால் நான் ஒன்னும் அழுதுட்டு பேசாமல் இருக்க மாட்டேன். உடனே 911 போலீஸை கூப்பிடுவேன். போலீஸ் வந்தால் என்ன நடக்கும் தெரியுமில்ல? டொமஸ்டிக் அப்யூஸ்"

மாமா குரல் தணிந்தவராக "உன்னோடு வாழறதை விட பேசாமல் விஷம் குடிச்சு சாகலாம். ராட்சசி!"

"அதை செய்ங்க முதல்ல. பெருசா பேச வந்துட்டார். அந்த பொண்ணு நம்மை பார்க்க வந்த கோலத்தை பாருங்க! ஜீன்ஸும், இறுக்க பிடிச்ச டிஷர்ட்டும். நல்ல பொண்ணு இப்படியா ட்ரெஸ் பண்ணும்?"

"அநியாயமா பேசாதே, இப்போலாம் மெட்ராஸில் பொண்ணுங்க இதை தானே போடறாங்க? ஏன் நீ போடல? கொஞ்ச நாள் வாயை கட்டுமா தாயே, கொஞ்சம் பழகின உடனே டார்முக்கு கொண்டு போய் விடலாம்"

மாமி எதையோ சொல்ல எத்தனிக்க,அதற்கு மேல் அங்கு நிற்க மனம் ஒப்பவில்லை. "ஜீன்ஸ், கோலம்" போன்ற வார்த்தைகள் என் மனதை ரொம்ப பாதித்ததால்(நான் ரொம்ப சென்சிடிவ் டைப்) பேசாமல் கெஸ்ட் ரூம் சென்று படுத்துக்கொண்டேன். இரவு 8 மணிக்கு மாமி தான் வந்து எழுப்பினாள்.

"கயல் எழுந்துக்கோமா, ஏதாவது வந்து சாப்பிடேன்"

பாத்ரூம் சென்று ஃப்ரெஷென் பண்ணிக்கொண்டு கீழ் தளத்தில் உள்ள டைன்னிங் டேபிளை அடைந்தேன். வீட்டில் கடும் அமைதி நிலவியது. குழந்தைகள் டிவியில் எதையோ பார்த்துக்கொண்டிருக்க, மாமா சாப்பிட்டுக்கொண்டே ஏதோ புத்தகத்தை புரட்டிக்கொண்டிருந்தார்.

"இப்போ எப்படி இருக்கு கயல் பரவாயில்லையா?" என்றார் முகத்தை ஏறிட்டுப்பார்க்காமலே. ஒருவேளை என் முகத்தை ஏறிட்டுப்பார்க்கவில்லை என்றால் பிரச்சினை வராது என்று நினைத்தார் போலும்.

"நல்லா இருக்கேன் மாமா, நீங்க ஏன் பேயடிச்சா மாதிரி இருக்கீங்க"

மாமி அவசரமாக, "அவருக்கு உடம்புக்கு சுகமில்லை கயல். அப்புறம் ஒரு விஷயம், உனக்கு எத்தனை நாள் வேண்டுமானாலும் இந்த ஊரை நல்லா பழகற வரைக்கும் இங்கே தங்கிக்கலாம். இன்னொரு விஷயம், நாங்க ரொம்ப கன்சர்வேட்டிவ், பசங்க இண்டியன் கல்சர் மறக்ககூடாது இல்லையா? அதனால கொஞ்சம் பார்த்து நடந்துக்க சரியா?"

எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை. வந்த சில மணி நேரத்தில் இவங்க குடும்ப கலாச்சாரத்தை குலைக்கிற மாதிரி என்ன செய்துவிட்டேன்?

"இல்லை மாமி, நாளைக்கே நான் டார்முக்கு போகனும், முடிஞ்சால் என்னை கொண்டு போய் விடறீங்களா" - அப்போதிருந்த நிலையில், பயத்தில் இந்த வார்த்தைகளை எப்படி சொன்னேன் என்பது இன்று வரை எனக்கே புரியாத புதிர்.

மாமி முகம் உடனே மலர்ந்தது, பல்ப் போட்ட மாதிரி ஒரு பிரகாசம். "ஏன் கயல் 4-5 நாளாவது இரேன், டிஸ்னிவோர்ல்ட், ஹாலிவுட் ஸ்டுடியோஸ் எல்லாம் போகலாம். இப்போ என்ன அவசரம்?"

"இருக்கட்டும் மாமி, நிதானமா பார்க்கலாம். எனக்கு இன்னும் 1.5 வாரத்தில் கிளாசஸ் தொடங்குது. இன்னும் எந்தெந்த க்ளாஸ் எடுப்பதென்று ப்ளான் பண்ணனும், புக்ஸ் வாங்கனும் நிறைய வேலை இருக்கு எனக்கு!"

"உங்கம்மா சொன்னாமாதிரி ரொம்ப பிடிவாதக்காரிடி நீ" - என்றார் கலா மாமி, சிரித்துக்கொண்டே.

பி.கு: 360 டிகிரிக்கான காரணத்தை கடைசியில் விளக்குகிறேன்.

- தொடரும்

58 comments:

  1. //மாமி முகம் உடனே மலர்ந்தது, பல்ப் போட்ட மாதிரி ஒரு பிரகாசம். "ஏன் கயல் 4-5 நாளாவது இரேன், டிஸ்னிவோர்ல்ட், ஹாலிவுட் ஸ்டுடியோஸ் எல்லாம் போகலாம். இப்போ என்ன அவசரம்?"
    //

    என்ன நடிப்புங்க இது ??? :-(((((

    ஊரை விட்டு தூரமா போக போக மனசுல உலகத்தை/மத்தவங்களை புரிஞ்சக்கிற மனபக்குவம் வளரும்னு நினச்சேன்....

    It is shocking to Hear..

    சந்தேகம் மட்டும் வந்தா சந்தோசம் சுத்தமா காணாம போய்டும்ங்க..

    என்ன பொருத்தவரை இந்த மாதிரி சொந்தங்கள் தேவையே இல்லைங்க....நல்ல நாலு நண்பர்கள் போதுங்க...

    ReplyDelete
  2. //மாமி முகம் உடனே மலர்ந்தது, பல்ப் போட்ட மாதிரி ஒரு பிரகாசம். "ஏன் கயல் 4-5 நாளாவது இரேன், டிஸ்னிவோர்ல்ட், ஹாலிவுட் ஸ்டுடியோஸ் எல்லாம் போகலாம். இப்போ என்ன அவசரம்?"
    //

    என்ன நடிப்புங்க இது ??? :-(((((

    ஊரை விட்டு தூரமா போக போக மனசுல உலகத்தை/மத்தவங்களை புரிஞ்சக்கிற மனபக்குவம் வளரும்னு நினச்சேன்....

    It is shocking to Hear..

    சந்தேகம் மட்டும் வந்தா சந்தோசம் சுத்தமா காணாம போய்டும்ங்க..

    என்ன பொருத்தவரை இந்த மாதிரி சொந்தங்கள் தேவையே இல்லைங்க....நல்ல நாலு நண்பர்கள் போதுங்க...

    ReplyDelete
  3. //"உங்களை விட எனக்கு தான் சொந்தம், அதான் கேட்கறேனே, எனக்கில்லாத அக்கறை உங்களுக்கு மட்டும் ஏன்?"
    //

    வார்த்தை கூட விசம்...

    ReplyDelete
  4. இது ரொம்ப சிரியசான பதிவு....சிந்திக்க வேண்டிய விசயம்..

    ReplyDelete
  5. //என்ன நடிப்புங்க இது ??? :-(((((

    ஊரை விட்டு தூரமா போக போக மனசுல உலகத்தை/மத்தவங்களை புரிஞ்சக்கிற மனபக்குவம் வளரும்னு நினச்சேன்....

    It is shocking to Hear..

    சந்தேகம் மட்டும் வந்தா சந்தோசம் சுத்தமா காணாம போய்டும்ங்க..

    என்ன பொருத்தவரை இந்த மாதிரி சொந்தங்கள் தேவையே இல்லைங்க....நல்ல நாலு நண்பர்கள் போதுங்க...//

    மாமி மேலும் தப்பு சொல்ல முடியாது வழிபோக்கன், அவர் நம்பிக்கையை குலைக்கும் அளவுக்கு ஏதோ நடந்திருக்கனும்.

    அவர்களுக்குள்ளே இத்தனை பிரச்சினை இருக்கும் போது, அவர்கள் கலாச்சாரத்தைப்பற்றி கவலைப்படுவது தான் பிறகு யோசித்துப்பார்க்கும் போது என்னை வியப்படைய வைத்தது.

    மேலும் திருமண முறைகள் மீதும் எனக்கிருந்த சந்தேகம் அதிகரித்ததும் இது ஒரு முக்கியமான காரணம்.

    ஒரே வீட்டில் எதிரிகள் கணவன் - மனைவி என்ற பெயரில்..

    ReplyDelete
  6. இப்பதான் ஆரம்பிச்சா மாதிரி இருக்கு அதுக்குள்ள இரண்டு பேரும் கலக்குறிங்க கயல்விழி,வருண்...

    ReplyDelete
  7. என்னங்க இப்படி எழுதிட்டிங்க...
    நிலமை இப்படியா இருக்கு...?

    ReplyDelete
  8. //ஒரே வீட்டில் எதிரிகள் கணவன் - மனைவி என்ற பெயரில்..//

    கேட்பதற்கு ஒரு சாதாரண வாக்கியமாக இருந்தாலும், அனுபவிப்பவர்களுக்கு இது கொடுமை.

    //மாமா குரல் தணிந்தவராக "உன்னோடு வாழறதை விட பேசாமல் விஷம் குடிச்சு சாகலாம். ராட்சசி!"//

    மாமாவின் நிலையை நினைத்தால் பாவமாக இருக்கிறது. என்னமோ பண்ணி வசமா மாட்டிட்டாருனு நினைக்கிறேன்.

    எனக்குத் தெரிந்த ஒரு குடும்பம், கணவனின் அதீத சந்தேகப் புத்தியால் சிதறிப் போனது கண்டு மிக அதிர்ச்சியடந்திருக்கிறேன்.

    அந்த சூழ் நிலையில்..
    உங்களது மன நிலையும் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கும்.. மீண்டு வந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

    அனுபவத்தை பகிர்ந்துகொண்டதில் நன்றி.

    அடுத்த பகுதியை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்..

    ReplyDelete
  9. கற்புனா என்ன னு நீ சூடா ஆரம்பித்தவுடன் ஒரே கூட்டம் இங்கே! :-)

    என்னனு தெரிந்துகொள்ள எல்லோருக்கும் ஆவல் போல இருக்கு, kayal! :-)

    ReplyDelete
  10. //இப்பதான் ஆரம்பிச்சா மாதிரி இருக்கு அதுக்குள்ள இரண்டு பேரும் கலக்குறிங்க கயல்விழி,வருண்...//

    நன்றி தமிழன். :)

    ReplyDelete
  11. //கற்புனா என்ன னு நீ சூடா ஆரம்பித்தவுடன் ஒரே கூட்டம் இங்கே! :-)

    என்னனு தெரிந்துகொள்ள எல்லோருக்கும் ஆவல் போல இருக்கு, kayal! :-)//

    நீங்க பயப்படற மாதிரி ஏதும் இல்லை வருண். :)

    ReplyDelete
  12. *** தமிழன்... said...
    இப்பதான் ஆரம்பிச்சா மாதிரி இருக்கு அதுக்குள்ள இரண்டு பேரும் கலக்குறிங்க கயல்விழி,வருண்..***.

    நன்றி தமிழன்!

    நம்ம கயலோட முகராசி அப்படி! :)

    பூவோட சேர்ந்த நார், நான்! :)

    ReplyDelete
  13. //நன்றி தமிழன்!

    நம்ம கயலோட முகராசி அப்படி! :)

    பூவோட சேர்ந்த நார், நான்! :)
    //

    என்ன தன்னடக்கம்! என்ன தன்னடக்கம்!(JK) :) :)

    ReplyDelete
  14. //அந்த சூழ் நிலையில்..
    உங்களது மன நிலையும் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கும்.. மீண்டு வந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

    அனுபவத்தை பகிர்ந்துகொண்டதில் நன்றி.

    அடுத்த பகுதியை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்..
    //

    அந்த நேரத்தில், அந்த நிமிடத்தில் பாதித்தது உண்மை தான். ஆனால் பிறகு சிந்தித்து பார்த்த போது இந்த இந்நிகழ்ச்சி என் மனதில் பல சிந்தனைகளை உருவாக்கியது.

    We are what we are because of our past experiences. இந்த அனுபவங்கள் இல்லாவிட்டால் பல முகங்கள் எனக்கு தெரியாமலே போயிருக்கும்.

    வருகைக்கு நன்றி சூர்யா.

    ReplyDelete
  15. கயல்விழி, நடந்தவற்றை எதார்த்தத்தை பொருள்பட எழுதி இருக்கீங்க..சமீபத்தில் எழுத ஆரம்பித்தாலும் வருணுடன் சேர்ந்து நன்றாக எழுதி வருகிறீர்கள்.. வாழ்த்துக்கள்.

    If you remove 'justify' option for your post, all readers who are using firefox browser also can read without problem.

    ReplyDelete
  16. பட்டையக் கெளப்புறீங்க! கூடிய சீக்கிரம் உங்க பிளாக்கப் படிச்சிட்டுத்தான் மத்த வேலை பாக்கப் போறங்க. ஆனா லேசா ஒரு பயமும் இருக்கு எனக்கு. ரொம்பப் பாப்புலர் ஆயிட்ட பின்னாடி என்னையெல்லாம் மற்ந்துருவீங்களோ?

    ReplyDelete
  17. /
    இது ரொம்ப சிரியசான பதிவு....சிந்திக்க வேண்டிய விசயம்..
    /

    911 இல்லைனா மாமிக்கு ரெண்டு சாத்தாவது விழுந்திருக்கும் தப்பிச்சிட்டாங்க

    :(((((((((((

    ReplyDelete
  18. //கயல்விழி, நடந்தவற்றை எதார்த்தத்தை பொருள்பட எழுதி இருக்கீங்க..சமீபத்தில் எழுத ஆரம்பித்தாலும் வருணுடன் சேர்ந்து நன்றாக எழுதி வருகிறீர்கள்.. வாழ்த்துக்கள்.

    If you remove 'justify' option for your post, all readers who are using firefox browser also can read without problem.//

    ரொம்ப நன்றி திரு. டான் பாஸ்கோ. உங்கள் ஆலோசனைபடியே ப்ளாகை திருத்தியாகிவிட்டது. :)

    ReplyDelete
  19. //பட்டையக் கெளப்புறீங்க! கூடிய சீக்கிரம் உங்க பிளாக்கப் படிச்சிட்டுத்தான் மத்த வேலை பாக்கப் போறங்க. ஆனா லேசா ஒரு பயமும் இருக்கு எனக்கு. ரொம்பப் பாப்புலர் ஆயிட்ட பின்னாடி என்னையெல்லாம் மற்ந்துருவீங்களோ?//

    என்ன இது? அதெப்படி மறப்பேன் லதானந்த சரஸ்வதி அவர்களே?

    ReplyDelete
  20. //911 இல்லைனா மாமிக்கு ரெண்டு சாத்தாவது விழுந்திருக்கும் தப்பிச்சிட்டாங்க//

    ஒரு சக மனிதரை, அதுவும் சொந்த மனைவியை, நாலு சாத்து சாத்தி தான் நல்வழிப்படுத்தவேண்டும் என்ற கருத்தில் எனக்கு உடன்பாடில்லை.

    ReplyDelete
  21. நான் இவ்வளவு தாமதமாக வந்ததுக்கு என்னையே நொந்துக்கறேன் கயல்விழி. உங்களோட பதிவுகள் பின்னூட்டங்கள்(பதில்களாக நீங்க போடற பின்னூட்டங்களை சொல்றேன்) எல்லாமே சூப்பர். இனி சரியா வரணும். நீங்க எல்லாத்தையும் எக்ஸ்பிரஸ் பண்ற விதம் சூப்பர். இதே மாதிரி ஒரு நிகழ்ச்சி என் கசின் இன்னொருத்தங்க(அவங்க அவளுக்கு க்ளோஸ் ரிலேட்டிவ்) வீட்டில் தங்கப் போகும்போது நடந்ததா சொல்லக் கேட்டுருக்கேன். ரொம்ப பிடிச்சிருந்தது.

    ReplyDelete
  22. //மாமி மேலும் தப்பு சொல்ல முடியாது.அவர் நம்பிக்கையை குலைக்கும் அளவுக்கு ஏதோ நடந்திருக்கனும்.

    அவர்களுக்குள்ளே இத்தனை பிரச்சினை இருக்கும் போது, அவர்கள் கலாச்சாரத்தைப்பற்றி கவலைப்படுவது தான் பிறகு யோசித்துப்பார்க்கும் போது என்னை வியப்படைய வைத்தது//
    சரியா சொன்னீங்க. அப்படியே வழிமொழிகிறேன்.

    ReplyDelete
  23. /
    கயல்விழி said...

    //911 இல்லைனா மாமிக்கு ரெண்டு சாத்தாவது விழுந்திருக்கும் தப்பிச்சிட்டாங்க//

    ஒரு சக மனிதரை, அதுவும் சொந்த மனைவியை, நாலு சாத்து சாத்தி தான் நல்வழிப்படுத்தவேண்டும் என்ற கருத்தில் எனக்கு உடன்பாடில்லை.
    /

    சாம பேத தான தண்டம் எல்லாம் எதுக்காக மனைவிக்கு நல்ல புத்தி வரத்தான் இதே 3rd person ஆ இருந்தா எதுக்கு கவலைப்படபோறோம்.

    ReplyDelete
  24. கற்பு எனும் சொல் இருவர்க்கும்னு மாமி சொல்றாங்க போல.

    நல்ல ஆரம்பம்.வெகு யதார்த்தம்.எப்பவும் எங்கயும் நடக்கிற போராட்டம்.
    வாழ்த்துகள் கயல்விழி.

    ReplyDelete
  25. நம்ம குடும்பங்கள்ல நடிக்கிற நடிப்புக்கு உலக நாயகன் எல்லாம் பிச்சை வாங்கணும்...உங்க narration சூப்பர்...

    ReplyDelete
  26. //ஒரு வழிப்போக்கன் said...

    என்ன நடிப்புங்க இது ??? :-(((((

    ஊரை விட்டு தூரமா போக போக மனசுல உலகத்தை/மத்தவங்களை புரிஞ்சக்கிற மனபக்குவம் வளரும்னு நினச்சேன்....
    //

    not everybody is like that, at the same time I don't disagree with kayalvizhi

    ReplyDelete
  27. புதுப் பதிவு போட்டு இருக்கேன், நேரம் கிடைக்கும்போது வந்து பாருங்க

    ReplyDelete
  28. //நான் இவ்வளவு தாமதமாக வந்ததுக்கு என்னையே நொந்துக்கறேன் கயல்விழி. உங்களோட பதிவுகள் பின்னூட்டங்கள்(பதில்களாக நீங்க போடற பின்னூட்டங்களை சொல்றேன்) எல்லாமே சூப்பர். இனி சரியா வரணும். நீங்க எல்லாத்தையும் எக்ஸ்பிரஸ் பண்ற விதம் சூப்பர். இதே மாதிரி ஒரு நிகழ்ச்சி என் கசின் இன்னொருத்தங்க(அவங்க அவளுக்கு க்ளோஸ் ரிலேட்டிவ்) வீட்டில் தங்கப் போகும்போது நடந்ததா சொல்லக் கேட்டுருக்கேன். ரொம்ப பிடிச்சிருந்தது.//

    நீங்க லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்து இருக்கீங்க ராப். :)

    இது மாதிரி நிகழ்ச்சிகள் பெண்கள் வாழ்க்கையில் புதிது இல்லை என்று நினைக்கிறேன். நிறைய பேருடைய வாழ்வில் இப்படி ஏதாவது நிச்சயம் நடந்திருக்கும்.

    ReplyDelete
  29. //சரியா சொன்னீங்க. அப்படியே வழிமொழிகிறேன்.//

    நம்மைப்போன்ற இந்தியர்கள், கண்ணுக்கு தெரியாத கலாச்சாரத்துக்கும், கடவுளுக்கும் கொடுக்கும் மதிப்பை கண்ணுக்கு தெரிந்த மனிதர்களுக்கு கொடுப்பதில்லை. :(

    ReplyDelete
  30. //கற்பு எனும் சொல் இருவர்க்கும்னு மாமி சொல்றாங்க போல.//

    நன்றி திரு வல்லி சிம்ஹன். :)

    ReplyDelete
  31. //not everybody is like that, at the same time I don't disagree with kayalvizhi
    //
    Thanks for coming Shyam. Yes, I understand that not everybody is like that. :)

    But I do believe that our marriage system is not perfect. There are some serious faults.

    ReplyDelete
  32. //நம்ம குடும்பங்கள்ல நடிக்கிற நடிப்புக்கு உலக நாயகன் எல்லாம் பிச்சை வாங்கணும்...உங்க narration சூப்பர்...//

    மிக்க நன்றி திரு. ஷ்யாம்.

    ReplyDelete
  33. //புதுப் பதிவு போட்டு இருக்கேன், நேரம் கிடைக்கும்போது வந்து பாருங்க//

    நிச்சயம் ராப். இங்கே பின்னூட்டம் போட்ட அனைவர் ப்ளாகையுமே விசிட் பண்ணுவது என் வழக்கம். :)

    ReplyDelete
  34. //இது மாதிரி நிகழ்ச்சிகள் பெண்கள் வாழ்க்கையில் புதிது இல்லை என்று நினைக்கிறேன். நிறைய பேருடைய வாழ்வில் இப்படி ஏதாவது நிச்சயம் நடந்திருக்கும்//
    இப்படி ஏதாவது பகிர்ந்துகிட்டால் பெண்ணியவாதி அப்படின்னு முத்திரை குத்திடறாங்க. பாதிக்கப்படுவது சிறு சதவிகிதமாக இருப்பினும் அதனை சுட்டினாத்தானே விவாதங்கள் உயிர் பெற்று மாற்றங்கள் வரும்.

    ReplyDelete
  35. //இப்படி ஏதாவது பகிர்ந்துகிட்டால் பெண்ணியவாதி அப்படின்னு முத்திரை குத்திடறாங்க. பாதிக்கப்படுவது சிறு சதவிகிதமாக இருப்பினும் அதனை சுட்டினாத்தானே விவாதங்கள் உயிர் பெற்று மாற்றங்கள் வரும்.//

    சுட்டிக்காட்ட வேண்டியது நிறைய இருக்கிறது ராப். அதை நம்ம தமிழ் மக்களை அஃபெண்ட் பண்ணாமல் எழுத வேண்டுமே என்பது தான் என் கவலை.

    ReplyDelete
  36. //We are what we are because of our past experiences. இந்த அனுபவங்கள் இல்லாவிட்டால் பல முகங்கள் எனக்கு தெரியாமலே போயிருக்கும்.
    //

    உண்மை...

    ReplyDelete
  37. //மாமி மேலும் தப்பு சொல்ல முடியாது வழிபோக்கன், அவர் நம்பிக்கையை குலைக்கும் அளவுக்கு ஏதோ நடந்திருக்கனும். //

    அத பத்தி இந்த கதையில சொல்லலயே!!! :-))

    மாமி பேச்சு, Comments, மட்டும் பாத்தா அவுங்க மேலதான் கோபம. வருது..

    ReplyDelete
  38. //சுட்டிக்காட்ட வேண்டியது நிறைய இருக்கிறது ராப். அதை நம்ம தமிழ் மக்களை அஃபெண்ட் பண்ணாமல் எழுத வேண்டுமே என்பது தான் என் கவலை.
    //
    இருக்கிற நல்லதையும் சேர்த்து சொல்லுங்க..இல்லாத நல்லதை ஏத்துகுவாங்க....

    ReplyDelete
  39. //அத பத்தி இந்த கதையில சொல்லலயே!!! :-))

    மாமி பேச்சு, Comments, மட்டும் பாத்தா அவுங்க மேலதான் கோபம. வருது..//

    இதனால் தான் நம்முடைய பல ஜட்ஜ்மெண்ட் தவறாகவே போகிறது வழிப்போக்கன்.

    நாம் வழக்கமாக கதையில் ஒரு பரிமாணத்தையே பார்க்கிறோம்- That's human nature. ஒரு நிகழ்ச்சிக்கு இரண்டு தரப்பு நியாயங்களும் இருக்கும். ஆழமாக பார்த்தால் புரியும்.

    எனக்கு அந்த மாமி என்னை அவர்கள் வீட்டில் வைத்துக்கொள்ளாதது வருத்தமில்லை. அது அவர்கள் வீடு, அவர்கள் முடிவு.

    ஆனால் போகிற போக்கில் வேறொரு பெண்ணின் மீதும் அநியாயமாக பழி போடுகிறார்கள் பார்த்தீர்களா? அது மட்டுமே வருத்தம்.

    ReplyDelete
  40. //மேலும் திருமண முறைகள் மீதும் எனக்கிருந்த சந்தேகம் அதிகரித்ததும் இது ஒரு முக்கியமான காரணம்.
    //

    என்ன பொறுத்த வரைக்கும், நமக்கு நடந்த ஒரு சில நிகழ்ச்சிக்ளை மட்டுமே வெச்சு எந்த முடிவுக்குமே வர கூடாதுங்க..

    Sometimes
    we are unlucky once..
    or sometime we are consistently unlucky....

    but that does not means, what we faced is all about LIFE...

    Other side of the coin பாத்தீங்கனா, இந்திய திருமணங்கள் ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்கி கொண்டுதான் இருக்கு....

    இருக்கற சின்ன சின்ன குறைகளை மட்டும் சரி பண்ணுனா போதும்

    ReplyDelete
  41. //Other side of the coin பாத்தீங்கனா, இந்திய திருமணங்கள் ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்கி கொண்டுதான் இருக்கு....

    இருக்கற சின்ன சின்ன குறைகளை மட்டும் சரி பண்ணுனா போதும்
    //

    I definitely agree.

    ReplyDelete
  42. கற்பு என்பதை பதிவுலகில் ஆண்கள் கிழித்து தொங்க விட்டார்கள் .. இதை ஒரு பெண்ணின் , அதுவும் இக்கால Ilaingiyin பார்வையில் கேட்பது நிச்சயம் இங்கே பலருக்கு (என்னையும் சேர்த்து தான்) புதியதாய் இருக்கும் .. தொடருங்கள்

    ReplyDelete
  43. //கற்பு என்பதை பதிவுலகில் ஆண்கள் கிழித்து தொங்க விட்டார்கள் .. இதை ஒரு பெண்ணின் , அதுவும் இக்கால Ilaingiyin பார்வையில் கேட்பது நிச்சயம் இங்கே பலருக்கு (என்னையும் சேர்த்து தான்) புதியதாய் இருக்கும் .. தொடருங்கள்

    //

    நன்றி யாத்ரீகன்.

    இது முழுக்க முழுக்க பெண்ணின் பார்வையில் இருந்து. என்னால் முடிந்தவரை நடுநிலையாக இருக்க முயற்சி செய்கிறேன். :)

    ReplyDelete
  44. நடுநிலை என்றதும் சொல்ல தோன்றுகின்றது .. இங்கே பலரும் அந்த குடும்பத்திலிருந்த கணவருக்கு பரிந்து பேசியதிலேயே .. எப்படி ஒரு சம்பவம் கண்டோ / கேட்டோ மிக விரைவில் சார்பு நிலையில் தீர்ப்பு வழங்கபடுகின்றது என்பதற்கு ஒரு உதாரணம் ;-)

    ReplyDelete
  45. //எப்படி ஒரு சம்பவம் கண்டோ / கேட்டோ மிக விரைவில் சார்பு நிலையில் தீர்ப்பு வழங்கபடுகின்றது என்பதற்கு ஒரு உதாரணம் ;-)
    //

    சரியா சொன்னீங்க.

    ReplyDelete
  46. கயல் இதை தனிப்பட்ட விமர்சனமா
    எடுத்துக்காம பொதுவா எடுத்த்துக்கங்க..

    தாய்நாட்டுல இருக்கும்போது ஒரு விதத்திலையும்,
    வெளிநாட்டுல வாழும்போது ஒரு விதத்திலையும்,
    வாழ எல்லோரும் பழகிடராங்க.. அது அவர்கள் தப்பு இல்லை
    ஏன் நீங்ககூட ஒரு ஐந்து அல்லது ஆறு ஆண்டுக்கு பிறகு
    இப்படி மாறினால் ஆச்சரியம் இல்லை.. பணம் மட்டுமே
    குறிக்கோளாக இருப்பதால் இப்படி...

    நல்ல நடை .. மெல்லிய சோகம் ..

    அன்புடன்
    கார்த்திகேயன்

    ReplyDelete
  47. //கயல் இதை தனிப்பட்ட விமர்சனமா
    எடுத்துக்காம பொதுவா எடுத்த்துக்கங்க..
    //

    நீங்க தாராளமா என்னை தனிப்பட்ட வகையில் கூட விமர்சனம் பண்ணலாம். விமர்சனத்தை ஏற்றுக்கொள்ளும் மெச்சூரிட்டி இப்போதெல்லாம் வந்து விட்டது. :)

    ஆமாம், நான் கூட இங்கே வந்த பிறகு மாறிபோய்விட்டேன் என்பதை ஒப்புக்கொள்கிறேன்.

    ReplyDelete
  48. நான் இந்தப் பதிவை வேறு விதமாக அணுகுகிறேன். ஆணோ,பெண்ணோ, விருந்தினராக உறவினர் வீட்டிற்குச் செல்வது என்பது மிகவும் தர்ம சங்கடமான நிலைக்கே தள்ளுகிறது.
    ஏனெனில் நண்பர்களுடன் தங்குவதில் உள்ள சுதந்திரம் உறவினர் வீட்டில் கிடையாது..நான் எந்த உறவினர் வீட்டிற்கு சென்றாலும் இரவுத்தங்கலைத் தவிர்த்துவிடுவேன்..நின்றாலும்,அமர்ந்தாலும்,எதையேனும் பார்த்தாலும் கூட எனக்குக் கூசும். உறவினர்கள் நம் பெற்றோரிடம் பேசுவது வேறு.. நம்மிடம் பழகுவது வேறு..(இவை என் அனுபவங்கள்)

    ReplyDelete
  49. //ஆணோ,பெண்ணோ, விருந்தினராக உறவினர் வீட்டிற்குச் செல்வது என்பது மிகவும் தர்ம சங்கடமான நிலைக்கே தள்ளுகிறது.
    ஏனெனில் நண்பர்களுடன் தங்குவதில் உள்ள சுதந்திரம் உறவினர் வீட்டில் கிடையாது..//

    என்னுடய அனுபவத்திலும் இது மிகவும் சரி!!!

    ReplyDelete
  50. நன்றி தமிழ்பறவை மற்றும் சூர்யா.

    இந்தியாவுக்குள்ளே ஊர் விட்டு ஊர் போவதென்றால் சரி, எப்படியும் தெரிந்த சில நண்பர்கள் இருப்பார்கள்.

    நாடு விட்டு நாடு போவது கஷ்டம் தானே?

    ReplyDelete
  51. நல்ல தோழிகள் தோழர்கள் அதே ஊரில் இருந்தால், யாருமே அவர்களைத்தான் "ப்ரிஃபெர்" பண்ணுவார்கள். அப்படி யாரும் இல்லையென்றால்?

    மேலும், அப்பா, அம்மா, உறவினர்கள் பொறுப்பாக பார்த்துக்கொள்வார்கள் (சம வயது தோழ தோழியர் என்றால், சேர்ந்து ஆட்டம் போடுவார்கள்) என்று நினைப்பார்கள் :)

    ஆனால், நிஜம் என்றுமே வேறுமாதிரியாகத்தான் இருக்கும் :)

    ReplyDelete
  52. :((( Ippadiyumaa makkal irupaanga?? America vanthu kettu poyiduraanga makkal...

    Unga mama mami unga bloga vaasikka maattangalla?? :)))

    ReplyDelete
  53. //Unga mama mami unga bloga vaasikka maattangalla?? :)))//

    வாசிச்சாலும் பரவாயில்லை ஜி, நேரில் சொல்ல தான் தைரியம் இல்லை, இப்படியாவது சொல்லலாம் இல்லையா?

    ReplyDelete
  54. நான் ஊரில் இல்லாதப்ப இவ்வளவு(ம் நடந்துபோச்சா?

    அசத்தலா எழுதி இருக்கீங்க.
    மனமார்ந்த பாராட்டுகள் க.ஜூ.

    ReplyDelete
  55. ரொம்ப அழகா கொண்டு போறீங்க, கயல்.
    சொந்தங்கள், நட்புகள் தூரம் போகப் போக, நாட்டுக்கு நாடு மாறலாம். அதுவும், அமெரிக்காவில் ...... :))

    ReplyDelete
  56. Still I havent read your part 2, 3 and 4. But quite interested to read the same. Will do in subsequent days.

    Some views from my side,

    1. As you said many of the incidents what we hear (from friends, relatives, even in televesions ) are mostly (??) partial. Written from one point of view.

    2. This happens in most of the ( people )relatives place just because of many factor like previous history, present situation and many negative (hi)story what they hear. For eg., starting from mega serial till serials in international television talk mostly about affairs and all sort of things.

    3. Its a very good thing for you to learn a life. When you are in abroad you learn more about life, friends than about subjects.

    Best wishes. Will try to read other parts as well. Sorry I couldnt write in tamil, it takes ample time to write.

    ReplyDelete
  57. ஜீன்ஸ் இந்தியாவுக்கு வந்தே ரொம்ப நாளாச்சே!!! அமெரிக்காவிலிருந்து கொண்டு மாமி ஆச்சரியம்தான் எனக்கு!!!!

    ReplyDelete