Wednesday, July 30, 2008

என்னுடைய முதன் முதல்...- 5

முதலில் என்னையும் விளையாட்டில் சேர்த்துக்கொண்ட பரிசல்காரருக்கு மிக்க நன்றி :). முதன் முதலாக என்று எழுத நிறைய இருந்தாலும், முக்கியமான மூன்று அனுபவங்களை மட்டும் குறிப்பிடுகிறேன்.

என்னுடைய முதல் நில நடுக்கம்: இன்று எழுத தொடங்கிய உடனே,'முதன்முதலாக' என்று சேர்த்துக்கொள்ள புதிதாக ஒன்று கிடைத்தது, என்னுடைய முதல் நில நடுக்க அனுபவம். காலை 11.45 அளவில், திடீரென என் கம்ப்யூட்டர், டெஸ்க், சேர் எல்லாம் குலுங்குவது போல ஒரு உணர்வு. என்னுடைய அலுவலக கட்டடம் நிலநடுக்கத்தை தாங்கும் வகையில் கட்டப்பட்டிருக்கிறது(Earth Quake safe).அதாவது,நிலநடுக்கத்தால் ஏற்படும் பக்கவாட்டு அதிர்ச்சிகளையும் தாங்கும்.கட்டட சுவர்களின் எடை குறைவாக இருக்க மரத்தால் கட்டி இருப்பார்கள், இதனால் யாராவது 'வெயிட் பார்ட்டிகள்' நடந்து போனால் கூட அந்த பகுதியே கொஞ்சம் ஆடுவதை உணரலாம். அது போல ஏதாவது வெயிட் பார்ட்டி ஓடி இருக்கும் என்று நினைத்துக்கொண்டே இருந்த வேளையில் ஸ்பீக்கரில் திடீர் அறிவிப்பு. நில நடுக்கம், Magnitude : 5.9 ஏற்பட்டிருக்கிறது என்றும், யாரும் பதட்டமடையவேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டது. பிறகென்ன, அறிவிப்பை கேட்டவுடன் நான் ரொம்ப பதட்டமடைந்தேன். :)இது நான் உணர்ந்த முதல் நிலநடுக்க அனுபவம்!


முதல்வாகனம்: நான் முதன் முதலாக வேலைக்கு சேர்ந்தவுடன் வாங்கிய முதல் வாகனம் டொயோட்டா கொரோலா 2004. ஒரு புகழ்பெற்ற கார் டீலர் ஷிப் கடைக்கு போய் ஒரு பத்து நிமிடத்திலேயே அந்த பேஜ்/கோல்ட் கலர் கொரோலா என் கண்ணில் பட்டது. பார்க்க காம்பேக்டாக, அழகாக இருப்பதோடு, மைலேஜும் அதிகமாக தந்தது.எல்லாவற்றுக்கும் மேலாக, நான் ரொம்ப விரும்பிய 6 CD சேஞ்சர் இருந்தது.வீட்டுக்கு வாங்கி வந்தவுடன் முதலில் என் பெற்றோருக்கு கார் பற்றி தெரிவித்தேன். அப்பா ரொம்ப ஆர்வமாக கேட்டுக்கொண்டார். அம்மா அசுவாரஸ்யமாய், "பொம்பளைப்பிள்ளை ஒரு புடவையோ, நகையோ வாங்கிக்கக்கூடாதா? கார் எதுக்கு?" என்று சலித்துக்கொண்டார்.

கார் ரொம்ப நன்றாகவே ஓடியது, ஆனால் ஒரு பிரச்சினை. ஃப்ரீவேயில் வாகனத்தை ஓட்டிக்கொண்டு போகும் போது, சில சமயம் இந்த வீணாப்போன எதிர்காத்து 'ஒருத்தி ஓட்டுகிறாளே' என்ற மரியாதை கொஞ்சம் கூட இல்லாமல் கொரோலாவை என் லேனை விட்டு மற்றொரு லேனுக்கு தள்ளியது, சமாளித்து 2 வருடம் ஓட்டினேன். ஒரு நாள் கொஞ்சம் பலமாகவே காற்றடிக்க, கொரொலோ ஒரு நிமிடம் கட்டுப்பாட்டை இழந்த மாதிரி ஏறக்குறைய பக்கத்து லேனுக்கே சென்றுவிட்டது. நல்ல வேளையாக பக்கத்து லேனில் அந்த சமயம் வாகனம் ஏதும் வரவில்லை. அடுத்தநாளே கொரோலாவை திரும்பக்கொடுத்துவிட்டு ஹாண்டா அக்யூரா மாற்றினேன். ஆனால் பேஜ் நிறக்காதல் மட்டும் மாறவில்லை, அடுத்து வாங்கிய வாகனமும் பேஜ் நிறம்!

முதல் காதல்: வலைப்பூவின் பெயரிலேயே காதலை வைத்துக்கொண்டு காதலைப்பற்றி எழுதாமல் இருக்க முடியாது இல்லையா? நான் இளங்கலை பொறியியல் படிக்கும் காலத்தில் கூட படிக்கும் மாணவர் மேல் இனக்கவர்ச்சி மாதிரியான ஒரு குழப்பமான காதல் வந்தது. என்னுடைய டான்ஸ் டீமில் அவரும் இருந்தார். எனக்கு எதிர்மறையான குணம் அந்த பையனுக்கு. நான் யார் வம்பிலும் தலையிடாமல் நானுண்டு என் படிப்புண்டு என்று இருக்க, அவருக்கு அப்போதே அரசியலில் ஆர்வம் அதிகம். மாணவர் தேர்தலில் கலந்துக்கொள்வார், கல்லூரியில் யாருக்கு எந்த பிரச்சினை என்றாலும் வலியப்போய் இன்வால்வ் பண்ணிக்கொள்வார். அப்போதெல்லாம் எனக்கு அதிகமாக யோசிக்க தெரிந்திருக்கவில்லை. ரஃப் அன்ட் டஃப்பாக அலைபவர்கள் தான் ஹீரோ என்ற தவறான எண்ணம் எனக்கிருந்தது, நிறைய தமிழ் சினிமா பார்த்ததின் விளைவாக இருக்கலாம். ஒரு நாள் ஸ்பென்சர் ப்ளேசாவில் இருக்கும் காஃபி டேவில் தோழிகளோடு உட்கார்ந்திருந்தபோது, அவர் தன் நண்பர்களுடன் உள்ளே நுழைய, லேசாக சிரித்து வைத்தேன். அந்த என்கரேஜ்மெண்டே அவருக்கு போதுமாக இருந்தது, கூட இருந்த நண்பர்களும் ஏற்றிவிட்டார்கள். அன்றிலிருந்து அவர் டிசைனர் உடை, தலை வலி வரும் அளவுக்கு கொலோன், மற்றும் கவனமாக ஸ்டைல் செய்யப்பட்ட தலைமுடியுடன் மட்டுமே கல்லூரிக்கு வந்தார். அஜீத் மாதிரி வேகமாக பைக் ஓட்டினார், மாதவன் மாதிரி தமிழை கடித்து துப்பினார். "எனக்காக ஒருவர் இத்தனை செய்வார்களா?" என்று எனக்கு ரொம்ப வியப்பாகவும், பெருமையாகவும் இருந்தது. செமஸ்டர் எக்ஸாம் முடிவில் ஒரு நாள் ரொம்ப தயங்கி காதலை சொல்லியேவிட்டார். எதிர்ப்பார்த்தது என்றாலும் ரொம்ப பதட்டமாக இருந்தது. ஏதோ பெரிய தவறு செய்கிற எக்ஸைட்மெண்ட்!. படிப்பு முடிந்தவுடன் பார்க்கலாம் என்ற ம்யூச்சுவல் அக்ரீமெண்டுடன் அதுவரை நண்பர்களாகவே இருப்பதாக முடிவு செய்தோம். சாதாரண பேச்சு, சிரிப்பு என்றே நட்பு தொடர்ந்தது. சில நாட்களிலேயே, அவரிடம் எனக்கு பிடித்தது என்று எதை எல்லாம் நினைத்தேனோ, அதெல்லாம் எனக்கு உண்மையிலேயே பிடித்தவை அல்ல என்று தெரிந்துக்கொண்டேன். மேலும் இருவரும் வேறு வேறு மதம்(அவர் முஸ்லிம், நான் இந்து). எனக்கு தனிப்பட்ட முறையில் ஜாதி, மதத்தில் நம்பிக்கை இல்லை என்றாலும் இருவீட்டு பெற்றோரும் நிச்சயம் ஒப்புக்கொள்ளப்போவதில்லை என்பது புரிந்தது. இதை அவரிடம் ஒரு நாள் விளக்கமாக எடுத்துச்சொன்னவுடன், அவரும் அதிலிருந்த நியாயத்தை உணர்ந்து "பிரிந்துவிடலாம்" என்ற முடிவுக்கு சம்மதம் தெரிவித்தார். ஆனால் கூட இருந்த அவரின் நண்பர்கள் அவரை வேண்டுமென்றே தூண்டிவிட்டு ஈகோ பிரச்சினையாக்கினர், அவரும் ரொம்ப சில்லியாக ஏதோ காதல் தோல்வியடைந்தது போல நடந்துக்கொண்டார். ஒரு நாள் வீட்டுக்கே வந்து அப்பாவிடம் வம்பு பண்ணினார். நட்பு எல்லாம் சுத்தமாக விட்டுப்போனது. சில மாதங்களுக்கு முன் பழைய தோழி ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்த போது அந்த குறிப்பிட்ட மாணவர் தற்சமயம் அரசியலில் நன்றாக வளர்ச்சியடைந்து தீவிர அரசியல்வாதியாகிவிட்டதாக அறிந்தேன்.

பின்குறிப்பு : பரிசலுடைய வரிசைப்படி நான் ஐந்தாவதாக எழுத வேண்டும் என்று நினைக்கிறேன். அதனால் தலைப்பில் 5 என்று குறிப்பிட்டிருக்கிறேன்.

72 comments:

  1. நிலநடுக்கத்தை உணர்ந்திருக்கீங்களா? நீங்க கொடுத்து வெச்சவங்கங்க, நான் முதலாமாண்டு கல்லூரியில படிக்கும்போது சென்னையில ஒரு சின்ன நிலநடுக்கம் வந்து பிரபலமாச்சு, ஏன்னா ஒரு வருஷம் முந்திதான் குஜராத் நிலநடுக்கம் நாட்டை உலுக்கி இருந்தது. அந்த நிலநடுக்கம் வந்த சமயம், வீட்ல நான் ஒருத்தி மட்டும் தரையில் உக்காந்து ஏதோ சிம்போஸ்யம் பேனர் செஞ்சுக்கிட்டு இருந்தேன். நாற்காலிகளில் உக்கார்ந்து இருந்தவங்க எல்லாம் அதை உணர்ந்து சொன்னாங்க, எங்கம்மா வழக்கம் போல கற்பனை குதிரைய தட்டியும் விட்டுட்டாங்க, ஆனா என் ஒருத்திக்கு மட்டும் ஒன்னுமே தெரியலைங்க. அடுத்த நாள் க்ளாஸ்ல எல்லாரும் எக்சைட்டிங் அனுபவம் அப்படி இப்படின்னு இஷ்டத்துக்கு சொல்றாங்க, நான் எங்க பீலா விட்டா மாட்டிப்பமோன்னு அமைதியா வாயப் போலந்து கேட்டுக்கிட்டு இருந்தேன்

    ReplyDelete
  2. வாங்க ராப் :) :)

    லக்கியா? நான் எவ்வளவு பயந்தேன் தெரியுமா? உயிர் மேல ரொம்ப ஆசை எனக்கு :) :)

    ReplyDelete
  3. இப்போ இருக்கிற வளர்ந்து வரும் எல்லா அரசியல்வாதிகளையும், இனிமே, இவங்களா இருக்குமோன்னு பாக்க ஆரம்பிச்சிடுவேன். முதல்ல அப்துல்லா அண்ணன், இப்போ நீங்களோ? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...................... இனிமேல யாரவது காதலிச்சவங்க பிரபலமானவங்களா இப்போ ஆகி இருந்தா தயவுசெஞ்சு சொல்லி, என் மண்டைய காய வெக்காதீங்க

    ReplyDelete
  4. அப்டி இல்லைங்க, எனக்கு இத மாதிரி விஷயங்களில் எல்லாம் ஜாஸ்தி ஆர்வம். நானும் அதை உணர்ந்திருக்கனும்னு நினைப்பேன்

    ReplyDelete
  5. இன்னும் இரண்டு நல்ல படியா யோசிச்சு எழுதி தலைப்பை பூர்த்தி செஞ்சுடுங்க

    நேத்து தான் நில நடுக்கம் செய்து பார்த்தேன். உங்களுக்கு மற்றும் உங்க நண்பர்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை அப்படிங்கறது கேட்டு ரொம்ப சந்தோசம்.

    எப்பவுமே 'முதல்' அனுபவம் மறக்க முடியாம தான் இருக்கும்.

    ReplyDelete
  6. Really Nice..

    Tamil Font prob. over here. I'll come later and comment.

    Rapp & You become gud fnds n discussing everything in comments.. ah? Good!

    //See, even after u mentioned clearly, someone mis-u/stood the Heading!!!)

    ReplyDelete
  7. அழகிய நினைவுகள் :)

    ReplyDelete
  8. *****நேத்து தான் நில நடுக்கம் செய்து பார்த்தேன். உங்களுக்கு மற்றும் உங்க நண்பர்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை அப்படிங்கறது கேட்டு ரொம்ப சந்தோசம்*****

    நிலநடுக்கம் வந்தா தான் அவருக்கு குழந்தை உண்டுன்னு ஒரு நண்பர் சொல்லுவாரு. அந்த மாதிரியான நில நடுக்கமா ?

    என்ன சொல்லவறீங்க நீங்க ? ஜெர்மனிலேந்து அமெரிக்காவுக்கு எல்லாம் முயற்சி பண்ணாதீங்க

    ReplyDelete
  9. அவனும் அவளும்

    என்ன சொல்லுறீங்க புரியலை ??

    ReplyDelete
  10. கயல்; நீ உண்மையைத்தவிர எதையுமே எழுதுவதில்லை! :-) உன் மிகப்பெரிய பலமும் மற்றும் பலவீனமும்கூட இதுதான்! :)

    ReplyDelete
  11. //இப்போ இருக்கிற வளர்ந்து வரும் எல்லா அரசியல்வாதிகளையும், இனிமே, இவங்களா இருக்குமோன்னு பாக்க ஆரம்பிச்சிடுவேன்.//

    :) :)

    நீங்க நினைக்கிற மாதிரி அந்த சம்பவம் சுவாரஸ்யமானது கிடையாது ராப். பழகிய கொஞ்ச நாட்களில் 75% யாருக்கும் தெரியக்கூடாது என்ற பயத்திலேயே கழிந்தது!

    ReplyDelete
  12. //அப்டி இல்லைங்க, எனக்கு இத மாதிரி விஷயங்களில் எல்லாம் ஜாஸ்தி ஆர்வம். நானும் அதை உணர்ந்திருக்கனும்னு நினைப்பேன்//

    எனக்கும் எர்த் குவேக் என்றால் எப்படி இருக்குமென்று பார்க்க ஆவலாக தான் இருந்தது. நேற்று பார்த்ததில் இருந்து பிடிக்கவில்லை :)

    ReplyDelete
  13. பதிவு நல்லா எழுதியிருக்கீங்க.

    ReplyDelete
  14. @ராப்
    உங்க ஆர்வக்கோளாறு ஒரு அளவில்லாம போய்கிட்டிருக்கு பாருங்க
    :)))))))))

    ReplyDelete
  15. //இன்னும் இரண்டு நல்ல படியா யோசிச்சு எழுதி தலைப்பை பூர்த்தி செஞ்சுடுங்க //
    வாங்க SK,
    பரிசல் சில பதிவர்களை இந்த தொடர் விளையாட்டுக்காக இன்வைட் பண்ணினார், அந்த வரிசைப்படி நான் ஐந்தாவது. அதை தான் தலைப்பில் குறிப்பிட்டேன்

    ReplyDelete
  16. //Really Nice..

    Tamil Font prob. over here. I'll come later and comment.

    Rapp & You become gud fnds n discussing everything in comments.. ah? Good!//

    தொடர் பதிவு அழைப்புக்கு மீண்டும் நன்றி பரிசல். :)

    ReplyDelete
  17. //அழகிய நினைவுகள் :)//

    வாங்க விக்னேஷ்வரன், மிக்க நன்றி :)

    ReplyDelete
  18. வாங்க ஜி, எங்கே காணோமே என்று பார்த்தேன் :)

    ReplyDelete
  19. //நிலநடுக்கம் வந்தா தான் அவருக்கு குழந்தை உண்டுன்னு ஒரு நண்பர் சொல்லுவாரு. அந்த மாதிரியான நில நடுக்கமா ?

    என்ன சொல்லவறீங்க நீங்க ? ஜெர்மனிலேந்து அமெரிக்காவுக்கு எல்லாம் முயற்சி பண்ணாதீங்க//

    வாங்க அவனும், அவளும். :)

    எனக்கும் நீங்கள் எழுதியது சரியாக புரியவில்லை.

    ReplyDelete
  20. //கயல்; நீ உண்மையைத்தவிர எதையுமே எழுதுவதில்லை! :-) உன் மிகப்பெரிய பலமும் மற்றும் பலவீனமும்கூட இதுதான்! :)//

    நன்றி வருண்(நீங்கள் என்றுமே என்னை விமர்சிப்பது கிடையாது)

    ReplyDelete
  21. //பதிவு நல்லா எழுதியிருக்கீங்க//

    வாங்க மங்களூர் சிவா, மிக்க நன்றி :)

    ReplyDelete
  22. //உங்க ஆர்வக்கோளாறு ஒரு அளவில்லாம போய்கிட்டிருக்கு பாருங்க
    :)))))))))
    //

    ஏன் என்னாச்சு?

    ReplyDelete
  23. மொத்தம் நீங்க எத்தனை கார் வச்சிருக்கிங்க...

    ReplyDelete
  24. மங்களூர் சிவா said...
    \\\
    @ராப்
    உங்க ஆர்வக்கோளாறு ஒரு அளவில்லாம போய்கிட்டிருக்கு பாருங்க
    :)))))))))
    \\\

    ரிப்பீட்டு...:)

    ReplyDelete
  25. //மொத்தம் நீங்க எத்தனை கார் வச்சிருக்கிங்க...//

    வாங்க தமிழன்.

    ஏன் கேட்கறீர்கள்? :)

    ReplyDelete
  26. ****SK wrote

    //நேத்து தான் நில நடுக்கம் """செய்து""" பார்த்தேன்.??? ***

    ஓ, இது """செய்தியா"""???

    I was wondering whether you were carrying out some "small scale" EQ expt or something!!! LOL!!!

    ReplyDelete
  27. //ரிப்பீட்டு...:)
    //

    பொறாமை, பொறாமை :)JK

    ReplyDelete
  28. ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க கயல். இன்னைக்கி அலுவலகத்துல நிறைய ஆணி , வீட்டுக்கு வர 12.15 am ஆச்சு. நாளைக்கி விரிவான கருத்துக்கள சொல்லுறேன்.

    ReplyDelete
  29. //ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க கயல். இன்னைக்கி அலுவலகத்துல நிறைய ஆணி , வீட்டுக்கு வர 12.15 am ஆச்சு. நாளைக்கி விரிவான கருத்துக்கள சொல்லுறேன்.
    //

    வாங்க ஜோசப். :) 12.15 AM? My goodness, that's a long time :(

    ReplyDelete
  30. //நில நடுக்கம், Magnitude : 5.9 ஏற்பட்டிருக்கிறது என்றும், யாரும் பதட்டமடையவேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டது. பிறகென்ன, அறிவிப்பை கேட்டவுடன் நான் ரொம்ப பதட்டமடைந்தேன். :)இது நான் உணர்ந்த முதல் நிலநடுக்க அனுபவம்!
    //

    தெரிஞ்சாத்தான் பதட்டமே..

    ஒரு 4 மாசம் முன்னாடி இங்கே (Magnitude around 6) நிலநடுக்கம் வந்தது. அதிகாலை 1:00 மணிக்குனு நினைக்கிறேன்.

    நான் நல்லா தூங்கிட்டு இருந்தேன். திடிர்னு நிறைய ஆம்புலன்ஸ் சத்தம்.

    நான் முழிச்சு பாத்துட்டு (கண்டபடி திட்டிட்டு) தூங்கிட்டேன்.

    காலைல ஊர்ல இருந்து அக்கா சன் நியூஸ் பாத்துட்டு போன் பண்ணி கேட்டப்பதான் விசயமே புரிஞ்சுது.

    ReplyDelete
  31. வாங்க வழிப்போக்கன்.

    //நான் முழிச்சு பாத்துட்டு (கண்டபடி திட்டிட்டு) தூங்கிட்டேன்.//

    யாரை திட்டினீங்க? நில நடுக்கத்தையா? :)

    ReplyDelete
  32. SK! No big deal! :-)

    But I was actuslly confused by "avnum avaLum's " comment. It does not make any kind of sense to me, yet! :-o

    ReplyDelete
  33. //SK! No big deal! :-)

    But I was actuslly confused by "avnum avaLum's " comment. It does not make any kind of sense to me, yet! :-o

    //

    வருண், அவருடைய ப்ளாக் படித்துப்பார்த்தீர்களா? வித்யாசமா எழுதி இருக்கார். ஒரு வேளை போஸ்ட்மார்டன் எழுதோ என்னவோ, நமக்கு புரியவில்லை.

    ReplyDelete
  34. ***போஸ்ட்மார்டன் எழுதோ என்னவோ***

    அப்படித்தான் இருக்கனும்! :-?


    இல்லை கயல், நான் "அவனும் அவளும்" ப்ளாக் போனதில்லை. நான் நிறைய ப்ளாக்ஸ் போறதே இல்லை :-(

    டைம் கிடைக்க மாட்டேன்கிறது! :-(

    ReplyDelete
  35. //அறிவிப்பை கேட்டவுடன் நான் ரொம்ப பதட்டமடைந்தேன். :)//

    கயல்விழி,

    நல்லா எழுதிறீங்க :). வாழ்த்துகள்.

    நானும் நிலநடுக்கம் உணர்ந்திருக்கிறேன். இரண்டு முறை.

    1. 2001 (அ) 2002 - சென்னை. வெரி மைல்ட். அப்பொழுது ஆபிஸில் இருந்தேன். நண்பன் தான், நான் அமர்ந்திருக்கும், சேரைப்பிடித்து ஆட்டுகிறான், என்று திரும்பி முறைக்க, நண்பனும் திரும்பி முறைக்க, போட்டது போட்டபடி, மூன்று மாடி இறங்கி கீழே ஓடினோம்.ஆனால், வெரி மைல்ட், ஆபத்து இல்லை என்று எல்லாருக்கும் தெரிந்தே இருந்த்து. :). அதனால் நிதானமான ஓட்டம் தான். :)

    2. 2004 - 2005, நொய்டா,உ.பி.-யில்.அதுவும் மைல்ட் தான். ஒரு சோம்பேறித்தனமான ஞாயிறு. குழந்தையைத் தூக்கிக் கொண்டு 6-வது மாடியில் இருந்து ஓட்டம். பாத்ரூமிலிருந்து பாதி சோப்போடு, துண்டுடன் சிலர் :) , என்று சிரிப்பாய்த் தான் இருந்தது, அதிக பாதிப்பு இல்லை என்பதால்.

    ஆஹா! பின்னூட்டம் பெரிசாயுடுச்சு :P

    ReplyDelete
  36. //கயல்விழி,

    நல்லா எழுதிறீங்க :). வாழ்த்துகள்.//

    உங்கள் வருகைக்கு நன்றி தேனீ, மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி.

    //நானும் நிலநடுக்கம் உணர்ந்திருக்கிறேன். இரண்டு முறை.//

    நீங்க எல்லாம் மைல்டான நிலநடுக்கத்தையே உணரும் அளவுக்கு சென்சிடிவானவர்களா? நான் நேற்று தான் ஏதோ கொஞசம் உணர்ந்தேன்(நேற்று வந்தது கொஞ்சம் கடுமையான நிலநடுக்கமாம்)


    //ஆஹா! பின்னூட்டம் பெரிசாயுடுச்சு :P//

    No probs, the bigger the better. உங்க ப்ளாகில் நான் ஒருபக்கம் மிகாமல் பின்னூட்டம் எழுதி இருப்பேனே உங்களிடம் பர்மிஷன் கேட்காமலே, படிக்கலியா நீங்க? :) :)

    ReplyDelete
  37. முதன் முதலாய்
    அனுபவித்த நில நடுக்கம்- பயம் கலந்த அச்ச உணர்வு

    வாங்கி பயணித்த வாகனம்-சந்தோஷம் கலந்த ஆனந்த உணர்வு

    மயங்கிம் பிரிந்த காதல்- எச்சரிக்கை கலந்த விடுதலை உணர்வு.


    கோவை விஜய்
    http://pugaippezhai.blogspot.com/

    ReplyDelete
  38. வாங்க விஜய் :) சரியாக சொல்லி இருக்கிறீர்கள்.

    ReplyDelete
  39. Kayal and Varun,

    I guess he meant the same typo error in differeent way.

    But I couldnt follow up the first line.

    ReplyDelete
  40. Hello, earthquake safe-nu edhuvum kedaiyaadhu.

    buildings may be earthquake resistant, beyond a certain level, buildings will start to crack or collapse. (richter scale 6 or 7)

    ReplyDelete
  41. அவரும் ரொம்ப சில்லியாக ஏதோ காதல் தோல்வியடைந்தது போல நடந்துக்கொண்டார்.//

    சில்லியா நடந்துக்கிற குணம் இருந்ததுல? அப்புறம் எப்படி அரசியல்ல வளராமப் போவாரு..

    ReplyDelete
  42. முதல்ல அப்துல்லா அண்ணன், இப்போ நீங்களோ? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...................... இனிமேல யாரவது காதலிச்சவங்க பிரபலமானவங்களா இப்போ ஆகி இருந்தா தயவுசெஞ்சு சொல்லி, என் மண்டைய காய வெக்காதீங்க
    //

    மண்டை காய வேண்டாம்.மின்மடலில் யார் என்று சொல்கிறேன்

    ReplyDelete
  43. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் அப்போ எங்களுக்கு :( :(

    ReplyDelete
  44. //வாங்க வழிப்போக்கன்.

    //நான் முழிச்சு பாத்துட்டு (கண்டபடி திட்டிட்டு) தூங்கிட்டேன்.//

    யாரை திட்டினீங்க? நில நடுக்கத்தையா? :)

    //

    நடுராத்திரில சவுண்டு விட்ட ஆம்புலன்ஸ..

    இங்கே நிறைய பேருக்கு அந்த பயத்துல Heart Attack வந்திருச்சாம். :((

    எனக்கு அது தெரியதனால தூக்கம் பெருசா பட்டுது.

    ReplyDelete
  45. புதுப் பதிவு போட்டிருக்கேன், நேரம் கிடைக்கும்போது வந்து பாருங்க :):):)

    ReplyDelete
  46. ஒரு பரபரப்பான காதல் கதையை எவ்ளோ சிம்பிளா, அழகா நினைவு கூர்ந்துள்ளீர்கள். பாராட்டுகள்.!
    //சில்லியா நடந்துக்கிற குணம் இருந்ததுல? அப்புறம் எப்படி அரசியல்ல வளராமப் போவாரு// ‍இது ஜூப்பருங்க..

    ReplyDelete
  47. This comment has been removed by the author.

    ReplyDelete
  48. என்னையும் எழுதச் சொல்லியிருகாரு

    எப்ப எழுதணும்?

    ReplyDelete
  49. //Hello, earthquake safe-nu edhuvum kedaiyaadhu.

    buildings may be earthquake resistant, beyond a certain level, buildings will start to crack or collapse. (richter scale 6 or 7)//

    அனானி அண்ணா,

    என்னொட ப்ளாகில் கமெண்ட் எழுதியதுக்கு நன்றி. "Earth quake safe" என்று நான் குறிப்பிட்டது அதிக சேதம் விளைவிக்காத வகையில் கட்டப்பட்ட கட்டடம் என்பது. அதாவது, மேலே விழுந்தால் கூட காண்க்ரீட், சிமெண்ட் போன்ற ஹெவி ஐட்டம்ஸ் மேலே விழாது. அதனால் தான் அப்படி குறிப்பிடுகிறார்கள். உங்களுக்கு இன்னும் சந்தேகமா இருக்கா? இங்கே பார்க்கவும்.

    http://quake.usgs.gov/prepare/factsheets/SaferStructures/

    தயவு செய்து ஒன்று தமிழில் எழுதவும் அல்லது ஆங்கிலத்தில் எழுதவும். அதுவும் தமிழை ஆங்கிலத்தில் எழுதுவதை போல கொடுமை இல்லை.

    ReplyDelete
  50. //சில்லியா நடந்துக்கிற குணம் இருந்ததுல? அப்புறம் எப்படி அரசியல்ல வளராமப் போவாரு..//

    வருக அப்துல்லா.

    அரசியல்வாதிகள் சில்லியா? யார் சொன்னது? அவர்களுக்கு ஓட்டுப்போடும் நாம தான் சில்லி.

    ReplyDelete
  51. //அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் அப்போ எங்களுக்கு :( :(//

    ரிப்பீட்டு :)

    ReplyDelete
  52. //நடுராத்திரில சவுண்டு விட்ட ஆம்புலன்ஸ..

    இங்கே நிறைய பேருக்கு அந்த பயத்துல Heart Attack வந்திருச்சாம். :((

    எனக்கு அது தெரியதனால தூக்கம் பெருசா பட்டுது.//

    நானும் தூங்கிட்டு இருக்கும்போது இடியே விழுந்தாலும் தெரியாது. நிலநடுக்கம் வந்த போது பகல் நேரமானதால் விழித்திருந்தேன். :)

    ReplyDelete
  53. //புதுப் பதிவு போட்டிருக்கேன், நேரம் கிடைக்கும்போது வந்து பாருங்க :):):)//

    உடனே பார்க்கிறேன் ராப் :)

    ReplyDelete
  54. //என்னையும் எழுதச் சொல்லியிருகாரு

    எப்ப எழுதணும்?//

    வருகைக்கு நன்றி :)

    லதானந்த் சித்தர், நீங்க அந்த லிஸ்டில் நாலாவதா இருக்கீங்க. எப்போ வேண்டுமானாலும் எழுதலாம், ஆனால் எத்தனையாவது நபர் என்பதை மட்டும்(உதாரணத்துக்கு நான் ஐந்தாவது அதனால் என் தலைப்பில் 5 இருக்கிறது)
    தெரிவித்துவிடவும். :)

    ReplyDelete
  55. //ஒரு பரபரப்பான காதல் கதையை எவ்ளோ சிம்பிளா, அழகா நினைவு கூர்ந்துள்ளீர்கள். பாராட்டுகள்.!//

    மிக்க நன்றி தாமிரா :)(தங்கமணிகளை திருத்திட்டீங்களா?)

    ReplyDelete
  56. unga corolla pathi padicha udaney ennoda car pathi ninaichuten...

    http://dhinamum-ennai-kavani.blogspot.com/2006/04/award-vaangi-irukken.html

    time kidaichaa padichu paarunga...and one more thing anony annaava thittuna maathiri ennayum thittaatheenga...innaikku my computer acting weird if I use tamil font :-)

    ReplyDelete
  57. டயோட்டா கொரலா வரை வந்தேன்.உத்தரவாதமான வாகனம்.வீட்டுக்குப்போய் சாப்பிட்டு மீண்டும் வருகிறேன்.

    ReplyDelete
  58. அருமையாக இருக்கு.

    ReplyDelete
  59. நன்றி ஷயாம், உடனே பார்க்கிறேன்.

    ReplyDelete
  60. மீதியையும் படிச்சீங்களா ராஜ நடராஜன்?

    ReplyDelete
  61. உங்களுடைய வருகைக்கு மிக்க நன்றி குசும்பன்.

    ReplyDelete
  62. ////மீதியையும் படிச்சீங்களா ராஜ நடராஜன்?//

    நேற்று மீண்டும் வந்து தேடினால் பதிவைக் காணவில்லை.இன்று மீண்டும் தமிழ்மணத்தில் தரிசனம் தருகிறது.அவசரத்தில் நேற்று நுனிப்புல் மேய்ந்ததில் பதிவின் சாரம் சரியாக பிடிபடவில்லை.மீண்டும் இன்று ஒரு ஆழ்பார்வை.

    நில நடுக்கம் சமீபத்தில் அரைத்தூக்கத்தில் வந்தது.எத்தனை புள்ளிகள் எனத் தெரியவில்லை.நான் இருக்கும் இரண்டாவது மாடியில் ஒரு ஆட்டம் போட்டு நின்றுவிட்டது.சுமார் 8 அல்லது 9 புள்ளிகள் அளவீட்டில் இந்த ஊரில் நடுக்கம் ஏற்பட்டால் அவ்வளவுதான்.

    நேற்று டயோட்டா கொரலாவுக்கு உத்தரவாதம் கொடுத்தது சரியில்லை போலத் தெரிகிறது.ஹோண்டாவுக்கு மாறிட்டேங்கிறீங்க! நான் ஜப்பான் இரண்டாம் கரம் வண்டிகளை விலையும் பெட்ரோலும் குறைவுங்குற நினைப்பில வாங்கி வாங்கி வண்டிகளின் உதிரிப்பாகங்களை அறிந்ததுதான் மிச்சம்.அமெரிக்கன் வாகன தரங்களை நான் இப்பொழுதுதான் உணர்ந்தேன்.சுமார் 4 வருடமாக 4 வீலர் ஜீப் கிராண்ட் செரோக்கி 5.2 எஞ்சின் வேகம், 8 சிலிண்டர் கியர்,100 லிட்டர் பெட்ரோல் கொள்ளளவு, பிரிமியம் உயர்பெட்ரோல் சுமார் ரூ 10 விலை.வண்டியை முன்வரிசை சிக்னலில் பச்சை நிறத்திலிருந்து முடிக்கினால் மச்சி,மச்சினிகளையெல்லாம் பின்னால் தள்ளிவிட்டு சீறும்வேகம்.

    அடுத்து உங்கள் முந்தைய பதிவுகளையெல்லாம் இன்னும் நான் பின்னோக்கிப் பார்க்கவில்லை.முதல் காதல் பற்றியெல்லாம் படிக்கும்போது ஹிப்போகிரட்டிக் இல்லாத ஏகத்துக்கு மனம்திறந்த எழுத்துக்கள் போல் தெரிகிறது:)

    ReplyDelete
  63. வருகைக்கு நன்றி ராஜ நடராஜன். :)

    1. நிலநடுகத்தை உங்களால் நன்றாக உணர முடிந்ததா? :)

    2. அமரிக்கன் கார்களை நான் கன்சிடர் கூட பண்ணியதில்லை, அமரிக்கர்களே இப்போதெல்லாம் அமரிக்க கார்களை வாங்க மறுக்கிறார்கள். வேகம் அதிகமா? போலீஸ் அங்கிள் டிக்கெட் கொடுப்பார் :(

    3. ஹிபோக்ரிடாக இல்லையா? :) நன்றி. இதில் தவறு என்று பார்த்தால் இரண்டு பேர் மீதும் இருக்கிறது என்பதால் என் மேல் இருக்கும் தவறை மட்டும் குறைத்து அவர் தவறுகளை அதிகமாக்கி எழுத விரும்பவில்லை, ஓரளவு பேலன்ஸ்டாக இருந்தது இல்லையா?

    ReplyDelete
  64. அழகான முதல் காதல் கதை...

    என்னுடய முதல் காதல்(?!)... பத்மப்ரியா.. 2-ஆம் வகுப்பு படிக்கும்போது..

    ReplyDelete
  65. //என்னுடய முதல் காதல்(?!)... பத்மப்ரியா.. 2-ஆம் வகுப்பு படிக்கும்போது..//

    நன்றி சூர்யா. மீண்டும் வருக

    என்னது 2ஆம் வகுப்பா? இவன் 5 ஆம் வகுப்பு காதலையே ரொம்ப கிண்டல் பண்ணினேன், அதெப்படி 2 ஆம் வகுப்பில் காதல் வரமுடியும்? :) :)

    ReplyDelete
  66. //அதெப்படி 2 ஆம் வகுப்பில் காதல் வரமுடியும்? //

    தெரியலையே... ஆனால் அது முற்றிலும் உண்மை..பசுமரத்து ஆணி போல் பதிந்த உணர்வுகள்.

    இப்பவும் நினைத்துப் பார்க்கையில் எனக்கு 2-ம் வகுப்பில் ஏற்பட்ட காதலுக்கும் கல்லூரியில் ஏற்பட்ட காதலுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. ஆனால் இடையில் 9-10 வகுப்பில் ஏற்பட்டது கொஞ்சம் இனக்கவர்ச்சியாகப் படுகிறது.

    என்னமோ போங்க.. ‘கொசுவர்த்தி சுருளை' சுத்த வெச்சுட்டீங்க..

    ReplyDelete
  67. நானும் 2 முறை நில நடுக்கத்தை உணர்ந்திருக்கிறேன். கடைசியாக வனு-அற்றில் சுற்றுலா சென்றபோது உணர்ந்திருக்கிறேன்.

    ReplyDelete
  68. //இனிமேல யாரவது காதலிச்சவங்க பிரபலமானவங்களா இப்போ ஆகி இருந்தா தயவுசெஞ்சு சொல்லி, என் மண்டைய காய வெக்காதீங்க//

    அய்யய்யோ.....

    அப்ப நாங்களாம் [வழக்கமான “நாங்க காதலிச்சோம், ஆனா அவங்க காதலிக்கல :) :)” டிஸ்கியை சேத்துக்கோங்க ] ஸ்டெபி கிராப் முதல் விந்தியா வரை காதலிச்ச விவரத்தை எல்லாம் இங்க சொல்லக்கூடாதா :) :)

    என்ன கொடுமை ராப் இது :)

    ”வலைப்பு என்பது ஒரு Self expression tool” தானே

    --

    சீரியஸ் இடுகையில் நக்கலடிப்பது தவரென்றால் மன்னிக்கவும்

    ReplyDelete
  69. வாங்க புரூனோ

    வருகைக்கு நன்றி :) என் பதிவில் எதை வேண்டுமானாலும் தாராளமாக நீங்கள் கிண்டலடிக்கலாம், நோ ப்ராப்ளம் :))

    ReplyDelete