Monday, August 25, 2008

காதலன்/ரங்கமணி - காதலி/தங்கமணி அப்டேட் 101

மொக்கை பதிவு எழுதி ரொம்ப நாளாகுதே, அதற்காக இது. இந்த டிப்ஸ் உபயோகித்து காதலன்/காதலி வேண்டுமானால் பேரழிவிலிருந்து எஸ்கேப் ஆகலாம், தங்ஸ்/ரங்ஸ் என்றால் ரொம்ப சாரி(ஐயோ பாவம்!).

பெண்களுக்கு:

உங்களவருக்கு உங்க மேல இண்ட்ரெஸ்ட் போய்விட்டது என்று எப்படி தெரிந்துக்கொள்வது?


1. உங்களுடன் போனில் பேசும் போது, “ம்ம், ஆமாம், நீ சொன்னா சரிமா, அப்படியே செஞ்சுடலாம்” என்று சிங்கிள் வார்த்தைகளில் பதில் சொல்றாரா? கூடவே பேக்கிரவுண்ட்
மியுசிக்காக டிவியோ அல்லது வீடியோ கேமோ அலறுதா? ஐயா கவனிக்கப்படவேண்டியவர்!
2. நீங்க வேலையில் இருந்து வந்தவுடன், “வேலை எல்லாம் எப்படி இருந்தது?” என்று கேட்டுவிட்டு உடனே ஐபாட் சுவிச்சை ஆன் பண்ணுகிறாரா? அல்லது கார் ஸ்டீரியோ சத்தத்தை அதிகரிக்கிறாரா?
3. உங்க முக்கியமான தகவல்களை சார் மறந்துவிடுகிறார். உதாரணமா, உங்க பிறந்த நாள், உங்க பெயர் :) :)
4. ஏதாவது லைனில் நிற்கும் போது உங்களை விட இரண்டடி தள்ளியே நிற்கிறார், முக்கியமா ஏதாவது அழகான பெண்கள் கண்ணில் படும் தூரத்தில் இருந்தால்.
5. உங்க பெண் தோழிகளைப்பற்றி ரொம்ப அக்கறையா விசாரிக்கிறார், முக்கியமா அந்த தோழிகள் அழகா இருந்தால்!
6. நீங்க ஏதாவது ப்ரோக்ராம் போகலாம் என்று ப்ளான் பண்ணினால், என்ன ஆச்சர்யம்! உடனே உங்க காதலரின் மேனேஜர் போன் பண்ணி சரியா நீங்க ப்ரோக்ராம் போடும் நேரத்துக்கு வேலைக்கு வர சொல்றார்.
7. உங்களை தற்செயலா தெருவில் பார்த்தால், பார்க்காத மாதிரி ஆப்போசிட் டைரக்ஷனில் ஓடறார் நம்ம உள்ளம்கவர் கள்வன்.
8. வீட்ல இருந்தால் பழைய பனியனும், பர்மூடா ஷார்ட்ஸும், கலைந்த தலையும், ஷேவ் பண்ணாத முகமுமாக இருக்கும் நம்ம ஆள், வெளியே போவதென்றால்(அதுவும் தனியே), கேல்வின் க்ளைன் செண்டும், ரேபான் கூலிங் க்ளாஸும், இம்சை அரசன் வடிவேலு மாதிரி 2 இன்ச் பவுடரும் போட்டு கிளம்பறார்.

ஆண்களுக்கு:



உங்க உள்ளம் கவர் கள்ளிக்கு உங்க மேல இண்ட்ரெஸ்ட் போயிடுச்சா? எப்படி கண்டுபிடிக்கிறது?
1. நீங்க தொடர்ந்து ஒரே வாரத்தில் நாலாவது முறையா போன் பண்ணி வேலையில் இருந்து வர லேட்டாகும்னு சொல்றீங்க, என்ன வியப்பு? உங்க கண்மணி கொஞ்சம் கூட கோபப்படாம “அதனாலென்ன, எப்போனாலும் வாங்க(இல்லை வராமலே போங்க)”- இப்படி சிரிச்சிக்கிட்டே சொல்றாங்க.
2. அவங்களுடைய ஆத்மார்த்தமான “நண்பனை”ப்பற்றி அடிக்கடி பேசறாங்க., அவங்களா சொல்லாமல் நீங்களா அந்த “தோழரை”ப்பற்றி கேட்டால், “ஏன் இப்படி சும்மா சந்தேகப்படறீங்க?” என்று நெருப்பா பொரியறாங்க.
3. திடீர்னு மேடமுக்கு “வேலை” ரொம்ப அதிகமா போகுது, இதிலென்ன ஆச்சர்யம்னா, இதுவரைக்கும் செய்த அதே வேலையை தான் இப்போவும் செய்யறாங்க, ப்ரொமோஷன் கூட வரல.
4. உங்க ட்ரீம் கேர்ள் இப்போ எல்லாம் ரொம்ப டயட் பண்றாங்க, கண்ணாடி முன் நின்று அடிக்கடி சிரிக்கிறாங்க, சும்மா கடைத்தெரு போக ரன்வே மாடல் மாதிரி ட்ரெஸ் பண்றாங்க.
5. நீங்க பக்கத்தில் வந்தாலே, அக்காவுக்கு தலை வலி வருது.
6. வீகெண்ட் அல்லது இரவானா அக்கா மூட் அவுட் ஆகி, எரிச்சலா இருக்காங்க. மண்டே நீங்க இல்லை அவங்க வேலைக்கு போகும் போது தான் முகம் மலருது.

இரண்டு பாலினருக்கும் பொதுவாக:
1. இண்டர்நெட்டில் அதிக நேரம் உலவுகிறார், முக்கியமாக நீங்கள் தூங்கும் போது.

2. சாப்பிட மறக்கிறாரே தவிர, செல்போனில் இன்கம்மிங் - அவுட்கோயிங் நம்பர்களையும், டெக்ஸ்ட் மெசேஜ்களையும் அழிக்க தவறுவதில்லை.
நீங்களும் உங்களுக்கு தெரிஞ்ச டிப்ஸ் சேர்க்கலாம்

44 comments:

  1. ச்ச ச்ச கயலா இப்படி மொக்கை பதிவு போடறது .. நம்ப முடியவில்லை :-) :-) அப்படின்னு இப்போ ஊரே வந்து சொல்ல போகுது.

    ReplyDelete
  2. பத்த வெச்சியே கயலக்கா. :D

    நல்லா இருக்கு, மிகவும் ரசித்தேன்.

    படம் கூட சூப்பரா இருக்கு. (நான் அந்த மொட்டையன் படத்த சொல்லல)

    ReplyDelete
  3. நன்றி அம்பி அங்கிள் :) :)

    என் கடன் பத்த வைத்து கிடப்பதே!

    ReplyDelete
  4. அதான் ரங்கமணி ஆயிட்டேனே, இதுல சொல்ல என்ன இருக்கு, நீங்க வேற சோகத்த கிளறி விட்டுட்டு போயிட்டீங்க.

    ReplyDelete
  5. இத நான் நாலைஞ்சு பொண்ணுங்ககிட்ட test பண்ணி பார்க்க இருக்கு test முடிஞ்சதும் சொல்லுறேன்.... எல்லா பொண்ணுங்களுமே நீங்க சொன்ன மாதிரியே இருந்திட்டா எனக்கு சந்தோஷம்தான்

    ReplyDelete
  6. அக்கா, ஊர்ல என்னென்னமோ பேசிககிறாளே.

    மேட்டர் நெசந்தானா?

    ReplyDelete
  7. காதலன் காதலிக்குள் நல்லா இருக்கிற உறவை இப்படி பல சந்தேகங்களை உருவாக்கி கெடுக்கலாமா, கயல்? :-?

    அடுத்த காதல் கல்வெட்டை சீக்கிரம் எழுதனும்! LOL!!!

    ReplyDelete
  8. kevalama iruku kayal

    ReplyDelete
  9. //அதான் ரங்கமணி ஆயிட்டேனே, இதுல சொல்ல என்ன இருக்கு, நீங்க வேற சோகத்த கிளறி விட்டுட்டு போயிட்டீங்க.//

    சோகத்தை கிளறிட்டேனா? ரொம்ப சந்தோஷம் :) :)

    ReplyDelete
  10. வருக ஜோசப், உத்ரா :)

    ReplyDelete
  11. அனானி அண்ணா

    என்ன பேசிக்கறாங்க? ;)

    ReplyDelete
  12. உத்ரா இதெல்லாம் சும்மா ஜோக், சீரியசா எடுத்துக்க வேண்டாம். :)

    ReplyDelete
  13. கயலுக்கு...

    ரொம்ப பழைய விசயமா இருக்கு....

    ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

    ஆனாலும் இப்பொ உங்கள் பதிவு வேகம் கொஞ்சம் அதிகமாத்தான் இருக்கு....

    ReplyDelete
  14. புதிய சட்டியில் பழைய கள்ளு
    அதாவது
    புதிய பிளாக்கில் பழைய மேட்டரு

    ReplyDelete
  15. eduka varuha solreenga intha mathiri neenga ezhutharthelam nanga padikarthuka ??

    joke sirikara mathiri irukanum kayal thalaila adichitu pora mathiri iruka koodathu

    idhe evanavthu seriousa eduthukitu follow pana arambichutanna. ena neenga munadi ezhuthiya ezhuthukal avlo stronga(basement weeko) irunthathu

    intha mathiri namma mela interest illama poravangala kankanichu avangala nama vazhiku kondu vanthu vazhanumnu ninaikara kadhalona kadhaliyo or kanavano manaiviyo oru mutal if he is not interested or happy being with us why should we force them or drive their attention ena koduma idhu kayal apadi vazharthu rendu perukum santhoshathe kudukuma rendu perum othare othar santhehathodaye love panuvanga

    ipadi yellam panina
    next time anthalo ila anthama vo santheham varama vera ushar panuvanga apo ena panuveenga aduku inoru velakam ezhuthuveengala

    ReplyDelete
  16. Padichathu usefullaa irunthatho illaiyo... enakkulla iruntha Aaniyavaathi mattum velila theriya aarambichaan.. :))

    ReplyDelete
  17. கூடுதுறை

    இதெல்லாம் பழசா?

    இந்தியா பயங்கர ஸ்பீடா முன்னேறிட்டு இருக்கு போல ;)

    ReplyDelete
  18. நன்றி வால்பையன் :)

    ReplyDelete
  19. உத்ரா

    நீங்கள் ஆங்கிலத்திலேயே எழுதுங்கள், படிக்க சிரமமாக இருக்கிறது.

    ReplyDelete
  20. ஜி

    உங்க ஆணியவாதி பெர்சனாலிட்டி என்ன சொல்லுகிறது?

    ReplyDelete
  21. //4. உங்க ட்ரீம் கேர்ள் இப்போ எல்லாம் ரொம்ப டயட் பண்றாங்க, ...., சும்மா கடைத்தெரு போக ரன்வே மாடல் மாதிரி ட்ரெஸ் பண்றாங்க.//

    இதுல என்ன ஆத்தா தப்பு...? ஏற்கனவே ஊர்ல அவனவன் சந்தேகப் பிசாசு பிடிச்சுப் பேயாத் திரியரானுக.. இதுல நீங்க வேற...

    ReplyDelete
  22. //இதுல என்ன ஆத்தா தப்பு...? ஏற்கனவே ஊர்ல அவனவன் சந்தேகப் பிசாசு பிடிச்சுப் பேயாத் திரியரானுக.. இதுல நீங்க வேற...
    //

    ஆரம்பத்தில் இருந்து அப்படி இருந்தால் தப்பே இல்லை, நாங்க எல்லாம் காஃபி குடிக்க கூட ஃபுல் மேக்கப்பில் தான் போவோம்.

    அருக்காணி மாதிரி ட்ரெஸ் பண்ணிய பெண், திடீரென்று ஐஸ் தங்கச்சி மாதிரி ட்ரெஸ் பண்ண ஆரம்பித்தால் தான் ஆபத்து :) :)

    ReplyDelete
  23. /
    ambi said...


    படம் கூட சூப்பரா இருக்கு. (நான் அந்த மொட்டையன் படத்த சொல்லல)
    /

    ரிப்பீட்டு

    ReplyDelete
  24. //கயல்விழி said...
    ஜி

    உங்க ஆணியவாதி பெர்சனாலிட்டி என்ன சொல்லுகிறது?
    //

    அட... ஒன்னும் சொல்லல... ஆனா... முதல் பாதிய படிச்சு சிரிச்சிட்டு இருந்தது ரெண்டாவது பாதில டென்ஷன் ஆக ஆரம்பிச்சிடிச்சு... :)))

    ReplyDelete
  25. //காதலன் காதலிக்குள் நல்லா இருக்கிற உறவை இப்படி பல சந்தேகங்களை உருவாக்கி கெடுக்கலாமா, கயல்? :-?
    //

    ச்சும்மா ஜோக்ஸ், நோ சீரியஸ்

    ReplyDelete
  26. //அட... ஒன்னும் சொல்லல... ஆனா... முதல் பாதிய படிச்சு சிரிச்சிட்டு இருந்தது ரெண்டாவது பாதில டென்ஷன் ஆக ஆரம்பிச்சிடிச்சு... :)))
    //

    எனக்கு முதல் பாகமே செம கடுப்பா தான் இருந்தது, என்ன செய்யறது, ஜெண்டர் நியூட்ரலா எழுதச்சொல்லி எல்லாரையும் வம்பு பண்ணிட்டு, நான் எழுதாமல் இருக்க முடியுமா?

    ReplyDelete
  27. //அனானி அண்ணா

    என்ன பேசிக்கறாங்க? ;)
    //


    மடிப்பாக்கத் தோழர் போஸ்டர் ஒட்டியிருக்காரே?
    அதேங்....

    ReplyDelete
  28. படிச்சேன், பதிலும் சொல்லி இருக்கேன், "அதை அந்த செல்லாவிடம் நேராவே கேட்கலாமே" என்று :)

    ReplyDelete
  29. This comment has been removed by the author.

    ReplyDelete
  30. நாள் ஒண்றுக்கு குறைந்தது 25 முறை தொலைபேசும் தங்கமணிகளை , எந்த வகையில் சேர்ப்பது.

    ReplyDelete
  31. uthira:

    நீங்க என்னங்க இந்த மொக்கைப்பதிவை இவ்வளவு சீரியஸா எடுத்துக்கிறீங்க? :)

    நீங்க மொக்கைப்பதிவை படிக்காமல் ஒதுங்கி இருப்பது நல்லதுங்க, உத்ரா!

    ReplyDelete
  32. *** கயல்விழி said...
    //காதலன் காதலிக்குள் நல்லா இருக்கிற உறவை இப்படி பல சந்தேகங்களை உருவாக்கி கெடுக்கலாமா, கயல்? :-?
    //

    ச்சும்மா ஜோக்ஸ், நோ சீரியஸ் ***

    நான் சும்மா ஜாலியாத்தான் சொன்னேன், கயல்! :)

    ReplyDelete
  33. இந்த பொண்ணு தினமும் இப்படி ஏதாவது பதிவுன்ற் பேர்ல எழுதி வைக்க, நாம இவங்களுக்கு பதில் சொல்றத்துக்குள்ள தாவு தீருது.

    ReplyDelete
  34. வேற வழி? காதலியாகிப்போச்சுனா பதில் சொல்லி தானே ஆகனும்? எல்லாம் என் தலை எழுத்து

    ReplyDelete
  35. LOVE=CHEMISTRY
    SEX=PHYSICS

    ReplyDelete
  36. வருணின் மனது என்பது யாருங்க? :) :)

    நல்ல டைம்மிங்

    ReplyDelete
  37. பாவம் "வருணின் மனது", கயல்!

    அது, இல்லாததையும் பொல்லாததையும் கற்பனை பண்ணிக் கொள்கிறது! LOL!

    ReplyDelete
  38. //
    இம்சை அரசன் வடிவேலு மாதிரி 2 இன்ச் பவுடரும் போட்டு கிளம்பறார்
    //

    நம்ம மக்க, அங்க போயும் "பகுடர்" போட்றத விடலையா?? அடங்கமாட்டாய்ங்க போலருக்கு!

    ReplyDelete
  39. //
    வீகெண்ட் அல்லது இரவானா அக்கா மூட் அவுட் ஆகி, எரிச்சலா இருக்காங்க. மண்டே நீங்க இல்லை அவங்க வேலைக்கு போகும் போது தான் முகம் மலருது.
    //
    மன்டே முகம் மலர்றது பத்தி பிரச்சினை இல்ல. நம்ம மண்டைல எதனா போடாம இருந்தா சரி!

    ReplyDelete
  40. //நம்ம மக்க, அங்க போயும் "பகுடர்" போட்றத விடலையா?? அடங்கமாட்டாய்ங்க போலருக்கு!
    //

    அதை ஏன் கேக்கறீங்க, இப்போ எல்லாம் ஆண்களுக்கும் மேக்கப் வந்தாச்சு. பவுண்டேஷன்,காம்பேக்ட், லிப்ஸ்டிக் எல்லாம் கூட தனியா ஆண்களுக்காக வந்தாச்சு.

    ReplyDelete
  41. foundation அப்படின்னா இந்த வீட்டுக்கு கள்ள வெச்சு கட்டுவாங்கலே அது மாதிரியா ??

    ReplyDelete
  42. நல்லா மாட்டிவிடுறீங்கப்பா :)

    ReplyDelete