Monday, August 4, 2008

கற்புனா என்ன? : சில நினைவலைகள்(360 டிகிரி) - 5

எனக்கு எதை பார்த்து வியப்பாக இருக்கிறது தெரியுமா? இந்த பதிவுகளைப்படித்து மற்ற பதிவர்கள் அதிர்ச்சி அடைவது. என்னுடைய அனுபவத்தைப்போல உலகில் பலருக்கு ஏற்பட்டிருக்கிறது/ஏற்பட்டுக்கொண்டு இருக்கிறது, சொல்லப்போனால் என்னை விட பல மடங்கு அதிகமாக!

உதாரணத்துக்கு இந்த நினைவலைகளின் பின்னூட்டத்தில் துளசி டீச்சர் தன்னுடைய தந்தையினால் அவருக்கும் அவருடைய குடும்பத்துக்கும் ஏற்பட்ட வேதனையை பகிர்ந்துக்கொண்டிருப்பார்கள். அது போன்ற அனுபவங்கள் என் அனுபவங்களை விட பலமடங்கு கொடியவை. அந்த ஒரு முறை சறுக்கலைத்தவிர, அப்பா வேறு எந்த தவறும் செய்ததாக நினைவில்லை(அல்லது முட்டாள்தனமான தவறுகள் செய்து மாட்டிக்கொள்ளவில்லை). காலையில் இருந்து மாலை வரை குடும்பத்துக்காக தன்னைத்தானே வருத்திக்கொண்டு உழைக்கும் இலட்சக்கணக்கான தமிழ்நாட்டு குடும்பத்தலைவர்களுள் அவரும் ஒருவராகவே இருந்தார். நான் இதை எல்லாம் எழுதுகிறேன், மற்றவர்கள் எழுதுவதில்லை. சமுதாயம் என்ன நினைக்குமோ என்ற பயம் காரணமாக இருக்கலாம்.

இதை விடவும் பயங்கரமான அனுபவங்கள் சில பெண்களுக்கு ஏற்பட்டிருக்கிறது, நாம் கற்பனை பண்ணிக்கூட பார்க்க தயங்கும் பயங்கரம்! உதாரணத்துக்கு திருமதி. டிலோரிஸ். என்னுடைய இருப்பிடத்துக்கு அருகிலேயே வசிக்கிறார் இந்த அமரிக்க-மெக்சிகன் பெண்மணி. எனக்கு உடற்பயிற்சி செய்வது ரொம்ப பிடிக்கும். கட்டுப்படுத்தப்பட்ட சூழ்நிலை உள்ள ஜிம்மை விட, சுதந்திரமாக பார்க் போன்ற பொது இடங்களில் ஜாக் பண்ணுவதே பிடிக்கும். அங்கே பலரும் ஜாக் பண்ணிக்கொண்டிருப்பார்கள்,அப்படித்தான் டிலோரிஸ் எனக்கு அறிமுகமானார். டிலோரிஸ்(Delores) என்றால் ஸ்பானிஷ் மொழியில் துன்பம் அல்லது வருத்தம் என்று அர்த்தமாம். அவருடைய வாழ்க்கைக்கதையை கேட்ட பிறகு, 'என்ன பொருத்தமான பெயர்'! என்று நினைத்து வியந்தேன்.

சிரித்த முகம், சுருள் சுருளான பொன்நிற முடி, நீலக்கண்கள் - டிலோரஸை முதன் முதலில் சந்தித்தபோது நான் முதலில் கவனித்தது. அதை சொன்னால், "இல்லை எனக்கு உன்னுடைய ப்ரவுன் முடியும், ப்ரவுன் நிறக்கண்களுமே ரொம்ப பிடித்திருக்கிறது" என்று சொல்லி சிரிப்பார். ஒரு 40- 45 வயது இருக்கும், அந்த வயதிலும் ரொம்ப ஃபிட்டாக இருந்தார், அவர் சொல்லவில்லை என்றால் எனக்கு அவருடைய வயதே தெரிந்திருக்காது. தினமும் பார்த்துக்கொள்வதால், ஒருவருக்கொருவர் துணையாக ஜாக் பண்ண ஆரம்பித்தோம்.

டிலோரஸை பல நேரம் அந்த பகுதியில் பார்த்திருக்கிறேன். நான் அவசரமாக வேலைக்கு ட்ரைவ் பண்ணிக்கொண்டிருக்கும் காலை நேரங்களில், பக்கத்து ஸ்கூல் குழந்தைகள் கவனமாக தெருவை கடக்க உதவும் வாலண்டியராக பரபரப்பாக வேலை செய்துக்கொண்டிருப்பார். சில சமயம் மாலை நேரங்களில், ஆல்பர்ட்சன்ஸில் வாங்கிய உணவுப்பொருட்களை வெளியே நிற்கும் ஹோம்லெஸ்களுக்கு தானமாக கொடுத்துக்கொண்டிருப்பார். அம்மாவை ரொம்ப மிஸ் பண்ணியதால், அதே வயதுடைய, கூடவே இத்தனை நல்ல மனமுடைய பெண்மணியிடம் பழகுவது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆபீஸ் விட்டு வரும்போது, அவர் செய்யும் இரவு உணவு ஏதாவது, என்சிலாடாவோ அல்லது புரிட்டோவோ கொண்டு வந்து கொடுப்பார். ஒருவருடைய வீட்டுக்கு மற்றொருவர் வந்தால், சுதந்திரமாக கிச்சன் வரைக்கும் சென்று தண்ணீர் எடுத்துக்குடிக்கும் அளவு எங்களுடைய நட்பு வளர்ந்தது.

டிலோரிஸ் என்னுடைய பெற்றோரைப்பற்றி ஆர்வமாக கேட்டு தெரிந்துக்கொள்வார், அவருடைய கணவரைப்பற்றியும், குழந்தைகளைப்பற்றியும் பெருமிதத்துடன் நிறைய சொல்லுவார். என்னுடைய பெற்றோரைப்பற்றி சொல்லும்போதெல்லாம், அவருடைய கண்களில் ஒரு வித ஏக்கம் தோன்றி மறையும். ஒரு நாள் அப்படி பேசிக்கொண்டிருந்தபோது, எனக்கு ஒரு சந்தேகம் வந்தது, "இவர் தன் பெற்றோரைப்பற்றியோ அல்லது பிறந்த வீட்டைப்பற்றியோ எதுவுமே பேசுவதில்லையே?". ஒரு நாள் என்னுடைய சந்தேகத்தை ஆர்வத்துடன் கேட்டே விட்டேன், உடனே அவருடைய பளீர் சிரிப்பு மறைந்தது. இறுகிய முகத்துடன் சிறிது நேர சிந்தனைக்கு பிறகு, "உனக்கு அப்புறம் சொல்றேன் மினியக்கா" என்றார். மினியக்கா(Muñeca) என்றால் "சின்ன குழந்தையே, அல்லது பெண்ணே" என்று ஸ்பானிஷில் அர்த்தமாம், மெக்சிகன் அம்மாக்கள் செல்லமாக தங்கள் மகள்களை அழைப்பது. அதையும் அவரே தான் சொன்னார். "ஒருவேளை கேட்கக்கூடாது ஏதாவது கேட்டு வருத்தப்படுத்திவிட்டோமோ?" எனக்கு கவலையாக இருந்தது.

சில நாட்கள் ஏதுவுமே நடக்காத மாதிரி வழக்கம்போல ஜாகிங் போனோம், உலக விஷயங்களைப்பற்றி பேசினோம், க்ளோபல் வார்மிங்கைப்பற்றி கவலைப்பட்டோம். நான் கேட்ட கேள்வியை சுத்தமாக மறந்துவிட்ட பிறகு, ஒருநாள் அவரே அந்த சப்ஜெக்ட் பற்றி மெல்லிய குரலில் பேச ஆரம்பித்தார். சிறுவயதில் 4 சகோதரிகளுள் கடைக்குட்டியாக பிறந்திருக்கிறார் டிலோரிஸ். அவருக்கு 6 வயது இருக்கும் போது, அப்பாவுக்கு வேலை போய்விட, டிலோரிஸின் அம்மா காலையில் இருந்து இரவு வரையிலும் ஒரு உணவு விடுதியில் பணிப்பெண்ணாக வேலை செய்யும் கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. அம்மா வேலையில் இருந்து வந்த பிறகு அசதியில் அடித்துப்போட்டது மாதிரி தூங்குவாராம். குடும்பத்தை வறுமை வாட்ட, ஏற்கெனெவே குடிகாரரான டிலோரிஸின் அப்பா, மனைவி வேலைக்கு போனவுடன் பகல் நேரத்திலேயே குடிக்க ஆரம்பித்திருக்கிறார். பெரிய அக்கா வேலைக்கு போக, அடுத்த இரண்டு சகோதரிகள் அரசு பள்ளிக்கு சென்றுவிட, டிலோரிஸை மட்டும் பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டிலேயே அடிப்படைக்கல்வியை அவருடைய அப்பாவே சொல்லிக்கொடுத்து, "ஹோம் ஸ்கூல்" பண்ணி இருக்கிறார்.

சிறுவயதிலேயே அவர் சகோதரிகளை விட டிலோரிஸ் மிக அழகாக இருப்பாராம், வளர்ச்சியிலும் அப்படியே. மதிய வேளையில் டிலோரிஸுக்கு ரொம்ப பசிக்குமாம், வயறு வலிக்கும் அளவுக்கு! தன்னை சுற்றி பாட்டிலும் கையுமாக இருக்கும் அப்பாவிடம் தயங்கி தயங்கி தனக்கு பசிக்கிறது என்பதை தெரிவித்தால், மூர்க்கமாக டிலோரிஸை எட்டி உதைப்பாராம். "நீ பிறந்ததே வேஸ்ட், உன்னால் எனக்கு ஒரு டாலருக்கு பயனில்லை" என்று முகம் சிவக்க கத்துவாராம். அதற்கு பிறகு அவர் சொன்னதை கேட்க எனக்கு மயக்கமே வரும் போல இருந்தது.

-நினைவுகள் தொடரும்.

40 comments:

  1. -நினைவுகள் தொடரும்.
    தொடருமா???!
    தொடரட்டும்.. உண்மைகளை மறைக்கமுடியாதல்லவா?

    ReplyDelete
  2. குழந்தைகள் உலகில் 'சைல்ட் அப்யூஸ்' ரொம்ப பயங்கரமான பின்விளைவை ஏற்படுத்துக்கின்றது.

    இது எந்தமாதிரி அப்யூஸாக (ஃபிஸிக்கல், மெண்டல், வெர்பல், எமோஷனல்) இருந்தாலும்(-:

    ReplyDelete
  3. நன்றி திரு வடுவூர் குமார் :)

    ReplyDelete
  4. //இது எந்தமாதிரி அப்யூஸாக (ஃபிஸிக்கல், மெண்டல், வெர்பல், எமோஷனல்) இருந்தாலும்(-:
    //

    வருகைக்கு மிக்க நன்றி துளசி டீச்சர். உண்மை தான், அளவிடமுடியாத பாதிப்புகளை ஏற்படுத்தும்.

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. இன்னுமொரு ஜோசப் ஃப்ரிட்செல்? :0(

    ReplyDelete
  7. வணக்கம் அனானி,
    ஜோசப் ஃப்ரிட்செல் யார்?

    ReplyDelete
  8. He is an Austrian, you can google for Joseph Fritzel and you will find some shocking details. A few months ago, he shocked the globe. He had occupied almost all the news channels for a while before being forgotten. :0(

    ReplyDelete
  9. //He is an Austrian, you can google for Joseph Fritzel and you will find some shocking details. A few months ago, he shocked the globe. He had occupied almost all the news channels for a while before being forgotten. :0(

    //

    ஓ அவரா, அவர் பெயர் மறந்துவிட்டது. அது ஒரு எக்ஸ்ட்ரீம், வழக்கமாக அந்த அளவுக்கு பலர் போகமாட்டார்கள்.

    ReplyDelete
  10. My bad..it is Joseph Fritzl not Joseph Fritzel
    http://news.bbc.co.uk/2/hi/europe/7371959.stm

    http://news.bbc.co.uk/2/hi/europe/7370897.stm

    http://news.bbc.co.uk/2/hi/europe/7473334.stm

    http://news.bbc.co.uk/2/hi/europe/7370208.stm

    ReplyDelete
  11. நன்றி அனானி. நீங்க ஆஸ்ட்ரியன் என்றவுடனே நினைவுக்கு வந்துவிட்டது. :)

    Ps: இதை சொந்த பெயரிலேயே எழுதி இருக்கலாமே? அத்தனை taboo சப்ஜெக்ட்டா? :)

    ReplyDelete
  12. nope:0)...I dont really care about taboos I dont own any blog, thats why...you can call me வளவன்...

    ReplyDelete
  13. nope:0)...I dont really care about taboos. I dont own any blog, thats why...you can call me வளவன்...

    ReplyDelete
  14. Oh really? I thought you are a blogger too. Welcome to this blog Valavan.

    ReplyDelete
  15. நன்றி ஷேர் விவேக் :)

    ReplyDelete
  16. :( வாழ்க்கை தான் எத்தனை துன்பகரமானது.... மனிதனை மனிதனாகவா பார்க்கிறார்கள்... ஒரு புத்தகத்தை படித்த தாக்கத்தில் சரித்திரத்தில் பெண்கள் எனும் தலைப்பில் கட்டுரை ஒன்றை தயார் செய்துக் கொண்டிருக்கிறேன். கூடிய விரைவில் பதிவேற்றுகிறேன். உங்களது வாழ்க்கை அலசல் மிகவும் நேர்த்தியாக உள்ளது... எழுத்து நடைக்கு வாழ்த்துக்கள். கருவுக்கு கவலைகள்..

    ReplyDelete
  17. When you are talking about Famale Child abuse, only this blog comes to mind.

    http://justpsychobabble.blogspot.com/

    This is from Dr. Shalini, Psychiatist. She has one of the specialist in this field.

    These kind of things worries me a lot.

    ReplyDelete
  18. //:( வாழ்க்கை தான் எத்தனை துன்பகரமானது.... மனிதனை மனிதனாகவா பார்க்கிறார்கள்//

    வருகைக்கு மிக்க நன்றி விக்னேஷ்வரன். :)

    ReplyDelete
  19. //ஒரு புத்தகத்தை படித்த தாக்கத்தில் சரித்திரத்தில் பெண்கள் எனும் தலைப்பில் கட்டுரை ஒன்றை தயார் செய்துக் கொண்டிருக்கிறேன். கூடிய விரைவில் பதிவேற்றுகிறேன். உங்களது வாழ்க்கை அலசல் மிகவும் நேர்த்தியாக உள்ளது... எழுத்து நடைக்கு வாழ்த்துக்கள். கருவுக்கு கவலைகள்..//

    சரித்திரத்தில் பெண்கள்? நிச்சயம் எழுதுங்கள், என்னிடம் இருந்தே நிறைய பின்னூட்டம் நிச்சயம்.

    உங்கள் பாராட்டுகளுக்கு நன்றி. :)

    சைல்ட் அப்யூஸ் கேஸில் பெண் குழந்தையாக இருந்தால் விளைவுகள் மிக பயங்கரமாக இருக்கும் என்பது என் கருத்து.

    ReplyDelete
  20. வருகைக்கு நன்றி SK.

    நம்ம நாட்டில் சைல்ட் அப்யூஸ் ரொம்ப சீரியசாக எடுத்துக்கொள்ளப்படுவதில்லை, தண்டனை காலமும் குறைவு. இவர்களுக்கு அரபு நாடுகள் ஸ்டைலில் தண்டனை கொடுப்பது தான் சரி.

    ReplyDelete
  21. :(( Intha maathiri edathula ellaam thodarum podaatheenga...

    kanda maanikku karpanai panna vaikuthu :((((

    ReplyDelete
  22. //நான் இதை எல்லாம் எழுதுகிறேன், மற்றவர்கள் எழுதுவதில்லை. சமுதாயம் என்ன நினைக்குமோ என்ற பயம் காரணமாக இருக்கலாம்//

    இதற்காக உங்களை பாராட்டுகிறேன்.

    ReplyDelete
  23. //மினியக்கா(Muñeca) என்றால் "சின்ன குழந்தையே, அல்லது பெண்ணே" என்று ஸ்பானிஷில் அர்த்தமாம், மெக்சிகன் அம்மாக்கள் செல்லமாக தங்கள் மகள்களை அழைப்பது.//

    அடடா நீங்க அவ்வளவு சின்ன குழந்தையா ?? பதிவ பாத்தா அப்படி தெரியலயே ?

    ReplyDelete
  24. //என்னுடைய அனுபவத்தைப்போல உலகில் பலருக்கு ஏற்பட்டிருக்கிறது/ஏற்பட்டுக்கொண்டு இருக்கிறது, சொல்லப்போனால் என்னை விட பல மடங்கு அதிகமாக!
    //

    வீட்டுக்கு வீடு வாசப்படி.

    நமக்கு நிறைய உண்மைகள் தெரியும் போது நம்முடைய துன்பம் பெரிதாக தோன்றாது.

    இது போன்ற பகிர்தல் ஆறுதலை அளிக்கும்.


    //அந்த ஒரு முறை சறுக்கலைத்தவிர, அப்பா வேறு எந்த தவறும் செய்ததாக நினைவில்லை//

    ReplyDelete
  25. பயமாக இருக்கிறது அடுத்து என்ன நடந்ததோ என்று நினைக்கையில். உலகிலேயே கொடுமை குடிகாரனின் நடத்தைதான்.
    அதைவிட அதன் பின் விளைவுகள் வெகு பயங்கரம். குழந்தைகள் மனதில் பதிந்து பிற்காலத்தில் அவர்களின் குடும்ப வாழ்க்கையையும் பாதிக்கிறதே.
    பெண்ணோ ஆணோ குடிக்கு அடிமையானவன் குடும்பம் அதோ கதி அவன் திருந்தாவிடில்.

    ReplyDelete
  26. This comment has been removed by the author.

    ReplyDelete
  27. வாங்க ஜி என்ற மீசை வைத்த ஷாருக்கான்(உங்களை நீங்களே அப்ப்டி தானே வர்ணிக்கிறீங்க?) :) :)

    அடுத்த பகுதியை வெகு விரைவில் எழுதுகிறேன்.

    ReplyDelete
  28. வாங்க வழிப்போக்கன்.

    நன்றி.

    சிலருடைய நிஜவாழ்க்கை கதைகளை கேட்டால், நம்முடையது ஒன்றுமே இல்லை என்பது தெளிவாக விளங்கும்.

    ReplyDelete
  29. கருத்துக்கு மிக்க நன்றி வல்லி மேடம்

    //பெண்ணோ ஆணோ குடிக்கு அடிமையானவன் குடும்பம் அதோ கதி அவன் திருந்தாவிடி//

    ரொம்ப சரி.

    ReplyDelete
  30. I like the flow....the description of little girl's helpless situation and a break there...has the desired effect. it makes me uncomfortable... knowing that so many of little girls get into such situations everwhere. very few of CSA victims get past the impacts :(
    actually today is my first day reading tamil blogs and guess i am going to come back; keep writing....Sundar.

    ReplyDelete
  31. //I like the flow....the description of little girl's helpless situation and a break there...has the desired effect. it makes me uncomfortable... knowing that so many of little girls get into such situations everwhere. very few of CSA victims get past the impacts :(//

    உங்களுடைய கருத்துக்கு மிக்க நன்றி சுந்தர், நான் நிறுத்தியதற்கு எதிர்ப்பார்ப்பை உருவாக்க வேண்டும் என்ற காரணத்தை விட, பதிவு ரொம்ப பெரிதாக போகக்கூடாது என்ற உணர்வும் காரணம். விரைவில் அடுத்த பகுதி எழுதுகிறேன்.

    உண்மை தான், இந்த மாதிரி குழந்தைப்பருவத்தில் வன்கொடுமைகளையும், பாலியல் கொடுமைகளையும் அனுபவிக்கும் பெண்களில் பலர் இதிலிருந்து முழுமையாக குணமடைவதில்லை. :(

    //actually today is my first day reading tamil blogs and guess i am going to come back; keep writing....Sundar.//

    நிச்சயம் திரும்ப வரவும், உங்களுக்கு பிடித்தால் நீங்களும் ஒரு வலைப்பூ துவங்கி எழுதலாம்.

    ReplyDelete
  32. //நிச்சயம் திரும்ப வரவும், உங்களுக்கு பிடித்தால் நீங்களும் ஒரு வலைப்பூ துவங்கி எழுதலாம்.//

    here I am. came back to see ur response & read any updates. I particularly like ur observations on the softer/emotional side of things.

    abt blogging on my own, aasai thaan, but my topic of interest is more of the 'boring' type for tamil blog readers - personal investing, corp affairs, views on economics etc. besides, fear of what it vl take to sustain keeps my thoughts to emails with frnds. vl do someday. Until then I am quite happy just gaining insights :)
    - Sundar. (vl figure out hw to type in tamil next time)

    ReplyDelete
  33. //abt blogging on my own, aasai thaan, but my topic of interest is more of the 'boring' type for tamil blog readers - personal investing, corp affairs, views on economics etc. besides, fear of what it vl take to sustain keeps my thoughts to emails with frnds. vl do someday. Until then I am quite happy just gaining insights :)
    - Sundar. (vl figure out hw to type in tamil next time)//

    எங்களுக்கு போர் அடிக்கும் என்று யார் சொன்னது? :) சில மொக்கைப்பதிவுகளை பார்த்து பயந்துவிடாதீர்கள், இங்கேயும் பல நல்ல தரமான வலைப்பூக்கள் உண்டு.

    ப்ளாக் ஆரம்பித்தாலே பிறகு நீங்களே எழுத ஆரம்பித்து விடுவீர்கள். நல்ல சுயவெளிப்பாட்டுக் கருவி இந்த வலைப்பூக்கள்.

    ReplyDelete
  34. //சில மொக்கைப்பதிவுகளை பார்த்து பயந்துவிடாதீர்கள்,//

    இதுல ஏதோ உள்குத்து இருக்கும் போல இருக்கே ??

    :))

    ReplyDelete
  35. //இதுல ஏதோ உள்குத்து இருக்கும் போல இருக்கே ??
    //

    எங்கே சார் உங்களை ரொம்ப காணமுடிவதில்லை? புது பதிவு ஏன் எழுதுவதில்லை?

    ReplyDelete
  36. அடுத்து வாரம் வெள்ளைக்காரனுக்கு விடுதலை அளித்துவிட்டு, ஆகஸ்ட் 16 இந்தியா செல்வதால் நிறைய "வெள்ளைக்கார விருந்துகள்"..

    பாசக்கார பயலுக..:))

    ReplyDelete
  37. //அடுத்து வாரம் வெள்ளைக்காரனுக்கு விடுதலை அளித்துவிட்டு, ஆகஸ்ட் 16 இந்தியா செல்வதால் நிறைய "வெள்ளைக்கார விருந்துகள்"..

    பாசக்கார பயலுக..:))

    //

    ரொம்ப பிசியா? பாசக்கார அங்கிள்ஸ் கொஞ்சம் விட்டவுடன் எழுதுங்கள்.

    ReplyDelete
  38. //ப்ளாக் ஆரம்பித்தாலே பிறகு நீங்களே எழுத ஆரம்பித்து விடுவீர்கள். நல்ல சுயவெளிப்பாட்டுக் கருவி இந்த வலைப்பூக்கள்.//

    உங்கள் ஊக்குவித்தளுக்கு நன்றி. முதலில் தொடர்ந்து படித்து பழகறேன். இப்போதைக்கு, எப்படிprivacy ஐ பாதுகாக்கறதுன்னு யோசிக்க ஆரம்பிச்சுருக்கேன்....சுந்தர்.

    ReplyDelete
  39. //ரொம்ப பிசியா? பாசக்கார அங்கிள்ஸ் கொஞ்சம் விட்டவுடன் எழுதுங்கள்.
    //

    ஒரு பதிவு போட்டாச்சு. நேரம் கிடைக்கும்போது பாருங்க கயல்.

    ReplyDelete
  40. டிஸ்கி: இளகிய மனம் படைத்தவர்கள், கீழே கொடுக்கப்பட்டுள்ள பக்கங்களுக்கு போஒகாமல் இருத்தல் நலம்..

    அண்மையில் உலகெங்கும் பரபரப்பாக பேசப்பட்ட ஆஸ்திரியாவின் Fritzl விவகாரம் போல....

    அமெரிக்காவையே திரும்பி பார்க்க வைத்த Genie கதை போலவும்..

    தந்தைகள் மட்டுமா, தாயாலும் முடியும் என காட்டி உலகையே உலுக்கிய Ondrej சோகம் போலவும்..

    சில வெளியில் தெரியும்.. பல தெரியாமலே புதைந்து போகும்.

    :(((((((((((

    ReplyDelete