Friday, August 29, 2008

எனக்கும் முதல் முறைதான்!

கல்யாணம் முடிந்து முதலிரவுக்கு அடுத்தநாள் காலையில் அவளைப்பார்க்க வந்த அவள் நெருங்கியதோழி சுமதி கேட்டாள், "எப்படியிருந்தது?" என்று.

"இரண்டு பேருக்குமே முதல் அனுபவம் என்பதால் முழுவதும் வெற்றி அடையவில்லை" என்று வெட்கத்தோடு சொன்னாள் ராஜி!

"அப்படியா?! குஷ்பு தியரியை டிஸ்ப்ரூவ் பண்ணிவிடுவார் போல இருக்கு உன் கணவர்?"

"இது பரந்த உலகம், குஷ்பூ ஒரு அறியாமையில் வாழும் ஒரு அரைவேக்காடு என்கிறார், அவர்," என்றாள் ராஜி!

"சரி, சரி, இன்னும் நிறைய காலம் இருக்கு மெதுவாக வெற்றிவாகை சூடலாம்! வாழ்த்துக்கள்" என்று சொல்லிவிட்டு புறப்பட்டாள் தோழி சுமதி!

"எனக்கும் இது முதல் முறைதான்" என்று கணவன் முத்துக்குமார் அவளிடம் சொன்னவுடன், ராஜிக்கு அதிசயமாகத்தான் இருந்தது “ஆண்களில் இப்படி மக்குக்களும் உண்டா என்று”? அதே சமயத்தில் அவளுக்கு ஏதோ ஒரு அளவில்லாத சந்தோஷம். பெருமை!

தன் அனுபவமில்லாமைக்கு காரணம் அவளுக்குத்தெரியும். ராஜி வளர்ந்த விதம் வேறு. இன்று வரை ஒர் நாள் கூட அவள் தனியாக எங்கும் இரவு தங்கியதில்லை. ஏன் பகலில் கூட ஒரு மணிநேரம் தோழிகள் வீட்டில்கூட தங்கியதில்லை. பெரியவளானவுடன் அம்மா அப்பாவுடன் தவிர யாருடனும், சினிமாவுக்கோ, பீச்சுக்கு, கோயிலுக்கோ போக அனுமதி ராஜிக்குக்கிடையாது. அவள் அம்மாவுக்கு காதல் என்றால் கெட்ட வார்த்தை. வாழ்க்கைக்கு அவசியமில்லாத ஒரு இன்பம். ராஜியின் அண்ணன் பாலுகூட அவளை தொட்டுப்பேசவோ அடிக்கவோ அனுமதி கிடையாது. அப்படியிருக்கும்போது தெரியாத ஆண்கள், முறைப்பையன்கள் போன்றவர்களெல்லாம் இவள் வயதுக்கு வந்த பிறகு இவளை தனியாகப்பார்ப்பது, பேசுவது, பழகுவதெல்லாம் குதிரைக்கொம்பு. பள்ளிக்கும் கல்லூரிக்கும் போகும்போது ராஜியை அப்பா அல்லது அண்ணா வந்து சரியாக அவளை ட்ராப் பண்ணி, பிக் அப் பண்ணி விடுவார்கள். அதனால் அவளுக்கு இன்னொரு ஆணுடன் நெருங்கிப்பழகும் வாய்ப்பு ஒரு போதுமே இருந்ததில்லை. பீரியேட்ஸ் ரெகுலராக இல்லை என்றாலும் அதைப்பற்றி ராஜி கவலைப்பட்டதே இல்லை.

ஆனால், தைரியமாக, தன் கணவர், முத்துகுமாரிடம் கேட்டுவிட்டாள், ராஜி! "நீங்க ஹாஸ்டலில் இருந்து படித்து இருக்கீங்க. என் அளவுக்கு கட்டுப்பாடும் உங்களுக்கு கிடையாது. அப்படி இருந்தும் உங்களுக்கும் எப்படி இது முதல் அனுபவம்?" என்று.

அவள் கணவர் சொன்னார் "ஆண்களிலும் பல வகை இருக்கிறார்கள். என்னை பொறுத்தவரையில், காதல் என்பது நம் சமுதாயத்தில் வெற்றி அடைவதைவிட தோல்வி அடைவதற்கு வாய்ப்புகள் அதிகம். அதனால் காதல், அதுனுடன் காமம் கலப்பது முட்டாள்த்தனம்- இது என்னுடைய நிலைமையில்! என் தங்கை திருமணத்திற்கு முன் உடலுறவு வைத்துக்கொள்ளக்கூடாது என்று நினைப்பவன் நான். இன்னொருவன் தங்கையை அல்லது இன்னொருவர் மகளை மட்டும் நான் ஏன் துச்சமாக நினைக்கனும்?. அது மட்டுமல்ல, வாழ்க்கையில், நான் படிப்பு, மார்க்ஸ், ஃப்யூட்சர் என்று போராடிக்கொண்டு இருக்கும்போது, எல்லோருக்கும் ஒரு காதலி கிடைப்பதில்லை. மேலும் அழகான பெண்கள் வந்து என்னை “ஃபோர்ஸ்” பண்ணி என்னைக்காதலிக்கும் அளவுக்கு நான் பெரிய மன்மதனும் இல்லை என்று"

"என்னைப்போல் பல ஆண்கள் இன்னும் தமிழ்நாட்டில் இருக்கத்தான் செய்கிறார்கள். விபச்சாரியிடம் காமம் கற்றுக்கொள்வதெல்லாம் அவமானமாக, அசிங்கமாக, அருவருப்பாக நினைப்பவன் நான். அதுவும் எயிட்ஸ் நமது நாட்டில் இப்படி பரவிக்கொண்டு இருக்கும்போது, ஏன் வம்பை நான் விலைகொடுத்து வாங்கனும், ராஜி?" என்று முடித்தார் அவள் கணவர், முத்துக்குமார்.

19 comments:

  1. யோவ் ! குஷ்பூவ விட்டு வெளில வாய்யா

    ReplyDelete
  2. அவனும் அவளும்!!

    LOL!!

    நான் சத்தியமாக சொல்கிறேன், இதுதான் கடைசிதடவை குஷ்பு வை இழுப்பது!

    ReplyDelete
  3. ///என்னைப்போல் பல ஆண்கள் இன்னும் தமிழ்நாட்டில் இருக்கத்தான் செய்கிறார்கள். ////

    ஹி ஹி..
    அதுல நானும் ஒருத்தன்.. (நம்புங்கையா)

    ReplyDelete
  4. வருண். இதுதா முத விசிட்.
    நல்ல பதிவுகள். உங்க point of view ல நல்லா ஆர்க்கியு பண்றீங்க. வாழ்த்துக்கள்.
    ( இதுல்ல. முந்திய பதிவுகள்)

    ஃஃஃஃஃஃஃஃ
    ///என்னைப்போல் பல ஆண்கள் இன்னும் தமிழ்நாட்டில் இருக்கத்தான் செய்கிறார்கள். ////

    ஹி ஹி..
    அதுல நானும் ஒருத்தன்.. (நம்புங்கையா)ஃஃஃஃஃஃஃஃஃஃஃ

    அட்ரா அட்ரா !!!
    இப்பத்தா பள்ளத்த அடைச்சி டிஸ்சார்ஜ் ஆகியிருக்கீங்க!!!!
    மறந்துட்டீங்களோ!!!!

    ReplyDelete
  5. /// சுபாஷ் said...
    அட்ரா அட்ரா !!!
    இப்பத்தா பள்ளத்த அடைச்சி டிஸ்சார்ஜ் ஆகியிருக்கீங்க!!!!
    மறந்துட்டீங்களோ!!!!///

    இன்னும் இதை ஊரு பூரா சொல்லுங்கன்னா..
    விளங்கிடும்...

    ReplyDelete
  6. **** உருப்புடாதது_அணிமா said...
    ///என்னைப்போல் பல ஆண்கள் இன்னும் தமிழ்நாட்டில் இருக்கத்தான் செய்கிறார்கள். ////

    ஹி ஹி..
    அதுல நானும் ஒருத்தன்.. (நம்புங்கையா)***

    நான் நம்புகிறேன், அணிமா! ;-)

    ReplyDelete
  7. *** சுபாஷ் said...
    வருண். இதுதா முத விசிட்.
    நல்ல பதிவுகள். உங்க point of view ல நல்லா ஆர்க்கியு பண்றீங்க. வாழ்த்துக்கள்.
    ( இதுல்ல. முந்திய பதிவுகள்) ***

    உங்கள் வருகைக்கும் விமர்சனத்திற்கும் நன்றி, திரு சுபாஷ்! ;-)

    ReplyDelete
  8. சுருக்கமா தெளிவா இருக்கு!

    ReplyDelete
  9. //
    அவள் கணவர் சொன்னார் "ஆண்களிலும் பல வகை இருக்கிறார்கள். என்னை பொறுத்தவரையில், காதல் என்பது நம் சமுதாயத்தில் வெற்றி அடைவதைவிட தோல்வி அடைவதற்கு வாய்ப்புகள் அதிகம். அதனால் காதல், அதுனுடன் காமம் கலப்பது முட்டாள்த்தனம்- இது என்னுடைய நிலைமையில்! என் தங்கை திருமணத்திற்கு முன் உடலுறவு வைத்துக்கொள்ளக்கூடாது என்று நினைப்பவன் நான். இன்னொருவன் தங்கையை அல்லது இன்னொருவர் மகளை மட்டும் நான் ஏன் துச்சமாக நினைக்கனும்?. அது மட்டுமல்ல, வாழ்க்கையில், நான் படிப்பு, மார்க்ஸ், ஃப்யூட்சர் என்று போராடிக்கொண்டு இருக்கும்போது, எல்லோருக்கும் ஒரு காதலி கிடைப்பதில்லை. மேலும் அழகான பெண்கள் வந்து என்னை “ஃபோர்ஸ்” பண்ணி என்னைக்காதலிக்கும் அளவுக்கு நான் பெரிய மன்மதனும் இல்லை என்று"
    //

    கேள்வி என்னன்னா, கரப் பழக்கமும் அனுபவமாகக் எடுத்துக் கொள்ளப்படுமா?


    மேலும், உடலின் வேதியியல் வினைகள் செய்யும் ஜாலத்தை மன அழுத்தமின்றி வெல்ல முடியுமா?

    ReplyDelete
  10. என்ன வருண் ஒரே எயிட்ஸ் பிரச்சாரநொடியாவே கொஞ்ச நாளா இருக்குது??

    ReplyDelete
  11. ****Sundar said...
    சுருக்கமா தெளிவா இருக்கு!

    29 August, 2008 7:54 PM****

    நன்றி,சுந்தர்! :-)

    ReplyDelete
  12. ****கேள்வி என்னன்னா, கரப் பழக்கமும் அனுபவமாகக் எடுத்துக் கொள்ளப்படுமா?

    மேலும், உடலின் வேதியியல் வினைகள் செய்யும் ஜாலத்தை மன அழுத்தமின்றி வெல்ல முடியுமா? ****

    நிச்சயம் ஒரு அனுபவம்தான்! அதை எப்படி எடுத்துக்கொள்வது என்பது ஒவ்வொருவருக்கும் வேறுபடும். அந்த அனுபவத்தின் விளைவுகளை பொறுத்தது.

    வேதிவினைகள் என்பதை ஒரு எக்ஸ்க்யூஸா பயன்படுத்தி நிறையப்பேர் சமாளிக்கிறார்கள்.

    some can avoid feeding catalyst for the reaction.

    some can terminate the reaction by some "inhibitors" or at least control it.

    It all depends on the individual I think!

    ReplyDelete
  13. ***இவன் said...
    என்ன வருண் ஒரே எயிட்ஸ் பிரச்சாரநொடியாவே கொஞ்ச நாளா இருக்குது??

    30 August, 2008 3:47 AM ***

    என்னைப் பொறுத்தமட்டில் எயிட்ஸ் நம்ம கலாச்சாரத்திற்கு மிகப்பெரிய "சேலஞ்". I find others are better off as far as this issue is concerned. We need to take it pretty seriously.

    ReplyDelete
  14. உண்மைதான் வருண் ஒத்துகொள்கிறேன்.....

    ReplyDelete
  15. உங்கள் வருகைக்கும் விமர்சனத்திற்கும் நன்றி இவன்! :-)

    ReplyDelete
  16. உங்கள் வருகைக்கும் புன்னகைக்கும் நன்றி திரு. அப்துல்லா!

    ReplyDelete
  17. Repeateeeeeeeeeeeeeey. Super post. Ennaiyum andha listla saerthukkonga.

    ReplyDelete
  18. ***Rajkumar said...
    Repeateeeeeeeeeeeeeey. Super post.

    #ennaiyum andha listla saerthukkonga.***

    நன்றி, ராஜ் குமார்!

    # உங்களையும் அந்தப்பட்டியலில் சேர்த்தாச்சு! :-)

    ReplyDelete
  19. பாவம் குஷ்பு :) ;) JK

    நல்ல போஸ்ட் வருண்.

    ReplyDelete