Wednesday, October 22, 2008

அடாவடியா எழுதுறது தான் நம்ம ஸ்டைல்!

நான் பார்க்கும் தமிழ் சினிமாவே ரொம்ப ரொம்ப குறைவு, இந்த லட்சணத்தில் ரொம்ப நாளுக்குப்பிறகு பார்த்த தமிழ் சினிமா பிடிக்காமல் போக, அதை விமர்சித்து எழுதிய விமர்சனத்தை ஒரு குறிப்பிட்ட நடிகரைப்பற்றிய விமர்சனமாக கருதிய 'உலகநாயகர்கள்' பொதுவாக ஒரு கமெண்ட் எழுதினார்கள், "விமர்சனமா இது? அடாவடியா இருக்கே!".

அந்த நற்பெயரைக்காப்பாற்ற மற்றொரு அரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது! Way past due date இந்த தொடர் விளையாட்டை தொடருகிறேன் என்று சொல்ல ஆசை தான், ஆனால் உண்மை அதுவல்ல. வேலைக்கு வந்து ஏதோ தமிழ் மணம் பார்த்தோமா, விகடன்-குமுதம் படிச்சோமா என்று நல்ல பிள்ளையாக இருந்த எனக்கு ப்ராஜெக்ட் ஒர்க் எல்லாம் கொடுக்கும் அக்கிரமம் நடந்தது. ஜாவா கோடுகளோடு நான் போராடிக்கொண்டிருந்தபோது உங்களது தொடர் விளையாட்டை ஒரு ஏக்கப்பார்வை மட்டுமே பார்க்க முடிந்தது இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சோக நிகழ்ச்சியாகும்.

இனி ஒரு formal statement: தொடர் விளையாட்டுக்கு அழைத்த அதுசரி, அணிமா மற்றும் இவனுக்கு நன்றி :)

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

நான் பிறக்கும் முன்பே டிவி வாங்கிவிட்டார்கள் என்பதால் நினைவு தெரிந்ததில் இருந்தே(3 வயது இருக்கும்) சினிமா பார்த்துக்கொண்டு தான் இருக்கிறேன். முதன் முதலில் "Tarzan" என்ற படம் பார்த்ததாக நினைவு, காட்டிலேயே வளரும் சிறுவனுடைய கதை. அந்த சமயத்தில் தூர்தர்ஷன் என்ற ஒரே சேனல் தான். அதில் வெள்ளிக்கிழமைகளில் "ஒளியும் ஒலியும்", சனிக்கிழமைகளில் இந்திப்படம், ஞாயிற்றுக்கிழமை என்றால் தமிழ்ப்படம் பார்த்த நினைவிருக்கிறது(கூடவே ஞாயிறு மதியங்களில் வேற்றுமொழிப்படங்கள் வந்ததாக ஞாபகம்).

Tarzan படம் என்னை ரொம்ப கவர்ந்தது, அதுவும் Tarzan மரம் விட்டு மரம் தாவும் காட்சிகள்! டார்ஜன் மாதிரியே கட்டில், நாற்காலி, சோபா என்று ஏறி குதித்து அம்மாவிடம் அடி வாங்கி இருக்கிறேன். விலங்குகளின் மீது விசேஷ மதிப்பு வந்தது.

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

அரங்கிலா? அதெல்லாம் இந்தியாவில் பார்த்ததோடு சரி, இங்கே அத்தனை நேரம் உட்கார்ந்து பார்க்க பொறுமை இல்லை. கடைசியாக அரங்கில் உட்கார்ந்து பார்த்த படம், "அன்பே சிவம்", என்னுடைய All time favorite!

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

தசா.... வேண்டாம், ஏன் திரும்பவும் வம்பு? விட்டுடுங்க!

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?

திரும்பவும் அன்பே சிவம்! கமலஹாசனைத்தவிர வேறு யாராலும் நடித்திருக்கவே முடியாத நல்லசிவம் பாத்திரம். அந்தப்படத்தைப்பார்ப்பதற்கு முன் என்னுடைய பார்வையும் படத்தில் வரும் மாதவனின் பார்வையைப்போலவே இருந்தது, எல்லாவற்றிலும் சுயநலம். சுற்றி இருப்பவர்களைப்பற்றியும் சிந்திக்க, கவலைப்பட எனக்கு சொல்லிக்கொடுத்த படம் என்பதால் அந்தப்படத்தின் மீது பெருமதிப்பு உண்டு.

அப்புறம், முதல்வன்!- பிரம்மாண்டம் மற்றும் தொழில்நுட்பத்தில் என்னை வியக்க வைத்த படம். அதில் வரும் மனிதக்குரங்... சாரி, கைத்தவறிவிட்டது. படத்தில் வரும் மனிஷா கொயிராலாவைத்தவிர அனைத்தும் பிடித்திருந்தது.

சின்ன வயதில் "என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு" என்ற படத்தின் கதை ரொம்ப பிடித்திருந்தது.

5.அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?

எதுவும் இல்லை. தமிழ் நடிகர்களையும், அரசியல்வாதிகளையும் நான் சீரியசாக எடுத்துக்கொள்வதில்லை.

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?

தமிழ் சினிமா தொழில்நுட்பத்தை ரசிப்பதுண்டு, ஆனால் 'தாக்கிய' என்பதெல்லாம் ரொம்ப ஓவர். தொழில்நுட்பம் என்றாலே எனக்கு ஹாலிவுட் படங்களே நினைவில் வருகிறது.

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

எப்போதாவது சில சமயம்.அதிலும் கிசு கிசு பகுதியைப்படித்து மூளை குழம்புவது தான் மிச்சம்.

7.தமிழ்ச்சினிமா இசை?

ஏ.ஆர்.ஆரின் இசை எனக்கு ரொம்ப பிடிக்கும். முதலில் கேட்கும் போது சாதாரணமாக இருக்கும் பாடல்கள் கூட திரும்ப திரும்ப கேட்கும் போது பிடித்துப்போய்விடும். என்னுடைய ஐபாடில் இருக்கும் தமிழ்ப்பாடல்கள் அனைத்துமே ரஹ்மான் பாடல்கள்.

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

தமிழைத்தவிர உலகத்திரைப்படங்கள் நிறைய பார்ப்பதுண்டு, முக்கியமாக ஹாலிவுட் படங்கள். இந்த ஹலோவீனுக்கு "Saw" வருகிறது, அதையும் விடாமல் பார்த்துவிடுவது என்று முடிவெடுத்திருக்கிறேன். ஏறக்குறைய புதிதாக ரிலீஸாகும் ஹாலிவுட் படங்களில் 50% பார்த்துவிடுவேன். பிறகு சைனீஸ் படங்கள், "Crouching Tiger, Hidden Dragon" படம் பார்த்தபிறகு சீன இயக்குநர்கள் மீதும், நடிகர்கள் மீதும் பெருமதிப்பு ஏற்பட்டது. ஜாப்பனீஸ் படங்களில் பேய்ப்படங்கள் என்றால் ரொம்ப பிடிக்கும் "One missed call" பார்த்திருக்கீங்களா? ஹாரர் படங்களை ஜாப்பனீஸை விட பயங்கரமாக யாராலும் எடுக்க முடியாது. தமிழில் ஏன் பேய்ப்படங்கள் அதிகமாக வருவதில்லை?

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்?பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

நேரடித்தொடர்பு என்றால் உறவினர்களா? நெருங்கிய உறவினர் யாரும் கிடையாது, ஆனால் நண்பர்கள் உண்டு. சமீபத்தில் கூட விமானத்தில் ஒரு நடிகரை சந்தித்தேன், அவர் நடிகர் என்பதே அவர் சொல்லித்தான் எனக்கு தெரிந்தது(அது ஒரு பெரிய கதை, தனிப்பதிவாவே எழுதலாம்). அவரிடமே போய் "என்ன வேலை செய்யறீங்க?" என்று கேட்டு வைத்தேன். அந்தளவு எனக்கு தமிழ்சினிமாவைப்பற்றிய பொது அறிவு இருக்கிறது!

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

தமிழ்சினிமா தற்போது ஒரு cult-ல் சிக்கிக்கொண்டிருக்கிறது. பிரம்மாண்டம், அரசியல், சூப்பர் ஹீரோயிசம், ஆபாசம், வன்முறை - இதை விட்டால் வேறு படங்கள் வருவதில்லை. நல்ல கதையமைப்புக்கொண்ட படங்கள் ரொம்ப ரொம்ப குறைவு. இதே நிலை தொடர்ந்தால் தமிழ் சினிமாவின் நிலை கவலைக்கிடம் என்பதில் சந்தேகமில்லை.

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

என்னை அது கொஞ்சம் கூட பாதிக்காது, ஆனால் தமிழகத்துக்கு நிறைய நன்மை இருக்கிறது. தமிழகம் உருப்படும்! தமிழ் சினிமாவை நம்பி இருக்கும் கலைஞர்கள் தான் பாவம்.

அடுத்து யாரை அழைப்பது? எழுதாதவர்கள் யாராவது இருக்கிறார்களா?

1. வருண்

2. எஸ்.கே(?)

57 comments:

  1. //
    அடாவடியா எழுதுறது தான் நம்ம ஸ்டைல்
    //

    அமெரிக்காவிலிருந்து வரும் அடாவடி ஞாநி வாழ்க!

    ReplyDelete
  2. //அமெரிக்காவிலிருந்து வரும் அடாவடி ஞாநி வாழ்க!
    //

    :)

    வாங்க அதுசரி, வேதாளத்தை இறக்கி விட்டாச்சா?

    ReplyDelete
  3. //
    ஜாவா கோடுகளோடு நான் போராடிக்கொண்டிருந்தபோது...
    //

    அந்த கோடு நீங்களே எழுதினது..அதனால அப்பிடி தான் இருக்கும் :0)

    //
    டார்ஜன் மாதிரியே கட்டில், நாற்காலி, சோபா என்று ஏறி குதித்து அம்மாவிடம் அடி வாங்கி இருக்கிறேன். விலங்குகளின் மீது விசேஷ மதிப்பு வந்தது.
    //

    அதுல இருந்து விலங்குகள் மீது மதிப்பே போயிடுச்சின்னு உங்க அம்மா சொல்லுவாங்க...கேட்டு பாருங்களேன் :)

    //
    கடைசியாக அரங்கில் உட்கார்ந்து பார்த்த படம், "அன்பே சிவம்", என்னுடைய All time favorite!
    //

    படத்துல அம்புட்டு அன்பு காட்டுனவய்ங்க, பாக்குறவங்க மேலயும் கொஞ்சம் அன்பு காட்டிருக்கலாம்...எலும்பல்ல ஒடச்சிட்டாய்ங்க!

    //
    சுற்றி இருப்பவர்களைப்பற்றியும் சிந்திக்க, கவலைப்பட எனக்கு சொல்லிக்கொடுத்த படம் என்பதால் அந்தப்படத்தின் மீது பெருமதிப்பு உண்டு.
    //

    சுத்தி இருக்கய்வங்களை சும்மா சொல்ட்டி சொல்ட்டி அடிக்க சொல்லிக் கொடுத்த படம்ன்கிறதுனால எனக்கு கூட பெருமதிப்பு உண்டு.. இப்பக்கூட, யாராவது வேண்டாதவங்க வந்தா அந்த படத்து டி.வி.டியை போட்டு விட்றது உண்டு!

    //
    அப்புறம், முதல்வன்!- பிரம்மாண்டம் மற்றும் தொழில்நுட்பத்தில் என்னை வியக்க வைத்த படம். அதில் வரும் மனிதக்குரங்... சாரி, கைத்தவறிவிட்டது. படத்தில் வரும் மனிஷா கொயிராலாவைத்தவிர அனைத்தும் பிடித்திருந்தது.
    //

    எனக்கு அந்த படத்து இடைவேளை பிடிச்சிருந்தது...ரொம்ப நேரமா தம்மடிக்க முடியாம வெயிட்டிங்ல இருந்தேன்.. அப்புறம் மனிஷா கொய்ராலா சூப்பர்.. அரை லூசா அவங்க நிஜ கேரக்டரை அப்படியே செஞ்சி இருப்பாங்க!

    //
    6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

    எப்போதாவது சில சமயம்.அதிலும் கிசு கிசு பகுதியைப்படித்து மூளை குழம்புவது தான் மிச்சம்.
    //

    அதெல்லாமா படிக்கிறீங்க?? எந்த புக்குலன்னு சொன்னா நாங்களும் படிப்போமில்ல?

    //
    என்னுடைய ஐபாடில் இருக்கும் தமிழ்ப்பாடல்கள் அனைத்துமே ரஹ்மான் பாடல்கள்.
    //

    உங்க மேல ஆப்பிள் கேஸ் போட போறாங்க..அப்பிடியே சில சௌத் அமெரிக்கன் நாடுகளும்! ம்யூசிக் பைரஸி!

    //
    தமிழைத்தவிர உலகத்திரைப்படங்கள் நிறைய பார்ப்பதுண்டு, முக்கியமாக ஹாலிவுட் படங்கள். இந்த ஹலோவீனுக்கு "Saw" வருகிறது, அதையும் விடாமல் பார்த்துவிடுவது என்று முடிவெடுத்திருக்கிறேன்.
    //

    "Saw" அப்பிடின்னா, See ங்கிற‌தோட‌ பாஸ்ட் டென்ஸ் தான‌? அத‌ எப்பிடி ஃப்யூச்ச‌ர் டென்ஸ்ல‌ சொல்றீங்க‌?? இங்கிலிபீசு என்ன ரொம்ப‌ கொழ‌ப்புது!

    //
    "One missed call" பார்த்திருக்கீங்களா?
    //

    I missed it! So many missed calls!

    //
    ஹாரர் படங்களை ஜாப்பனீஸை விட பயங்கரமாக யாராலும் எடுக்க முடியாது
    //

    ஏன் முடியாது?? த‌மிழ்ல‌ வ‌ர்ற‌ பெரும்பாலான‌ ப‌ட‌ங்க‌ள் ப‌ய‌ங்க‌ ஹார‌ர்!

    //
    தமிழில் ஏன் பேய்ப்படங்கள் அதிகமாக வருவதில்லை?
    //

    அது ஏன்னா, மேக்க‌ப் இல்லாம‌ ந‌டிக்க‌ இங்க‌ யாருக்கும் விருப்ப‌மில்லை, அவ்ளோ தான் :0)

    //
    தமிழ்சினிமா தற்போது ஒரு cult-ல் சிக்கிக்கொண்டிருக்கிறது. பிரம்மாண்டம், அரசியல், சூப்பர் ஹீரோயிசம், ஆபாசம், வன்முறை - இதை விட்டால் வேறு படங்கள் வருவதில்லை. நல்ல கதையமைப்புக்கொண்ட படங்கள் ரொம்ப ரொம்ப குறைவு. இதே நிலை தொடர்ந்தால் தமிழ் சினிமாவின் நிலை கவலைக்கிடம் என்பதில் சந்தேகமில்லை.
    //

    நீங்க‌ சொல்ற‌தெல்லாம் விட்டுட்டு ப‌ட‌ம் எடுத்தா, ப்ர‌டியூச‌ர் நெல‌மை க‌வ‌லைக்கிட‌ம் ஆயிடுங்க‌.. அன்பே சிவ‌ம் பாத்த‌வ‌ங்க‌ சிட்டு அம்ப‌து பேரு.. இதே த‌சாவ‌தார‌ம் பாத்த‌வ‌ங்க‌ சிட்டிக்கு அஞ்சி ல‌ட்ச‌ம் பேரு...

    அப்ப‌ நாங்க‌ த‌சாவ‌தார‌ம் எடுக்கிற‌தா இல்ல‌ அன்பே சிவ‌ம் எடுத்து அப்பிடியே காவி காட்டிட்டு ஓடிப்போற‌தா??

    (பின் குறிப்பு: என‌க்கும் அன்பே சிவ‌ம் பிடித்திருந்த‌து..ஆனால், வியாபார‌ ரீதியாக‌ அது வெற்றி பெற‌வில்லை..)

    அழைப்பை ஏற்று தொட‌ர் எழுதிய‌த‌ற்கு மிக்க ந‌ன்றி க‌ய‌ல்விழி..

    ReplyDelete
  4. //டார்ஜன் மாதிரியே கட்டில், நாற்காலி, சோபா என்று ஏறி குதித்து அம்மாவிடம் அடி வாங்கி இருக்கிறேன். //
    :)

    ReplyDelete
  5. //கமலஹாசனைத்தவிர வேறு யாராலும் நடித்திருக்கவே முடியாத நல்லசிவம் பாத்திரம்//

    உண்மை தான், சிறப்பாக நடித்து இருப்பார். அதில் இருந்த மேக் அப் தரம் கூட தசாவதாரம் படத்தில் இல்லை.

    //இந்த ஹலோவீனுக்கு "Saw" வருகிறது, அதையும் விடாமல் பார்த்துவிடுவது என்று முடிவெடுத்திருக்கிறேன்//

    எனக்கு Saw படங்கள் அனைத்துமே பிடிக்கும், அதிகமாக ஹாரர் படங்கள் பார்ப்பேன் ஹி ஹி நான் பார்த்து பயந்து போன படம் Hostel அதை பற்றி நாளை ஒரு பதிவு போட போடுகிறேன் :-)

    //"Crouching Tiger, Hidden Dragon" படம் பார்த்தபிறகு சீன இயக்குநர்கள் மீதும், நடிகர்கள் மீதும் பெருமதிப்பு ஏற்பட்டது.//

    அந்த படம் முழுவதும் பார்க்கவில்லை, கொஞ்சம் பார்த்தே டென்ஷன் ஆகி விட்டேன்..அவர்கள் மரம் மீது தண்ணீர் மீதெல்லாம் ஓடிட்டு இருப்பார்கள், நம்ம தமிழ் படத்துலயும் விரைவில் இதை எதிர்பார்க்கலாம் :-) நம்மவர்கள் இப்போது வரைக்கும் காற்றில் தான் சண்டை போடுகிறார்கள்.

    //ஹாரர் படங்களை ஜாப்பனீஸை விட பயங்கரமாக யாராலும் எடுக்க முடியாது//

    கேள்வி பட்டு இருக்கிறேன் The eye பற்றி கூறி இருக்கிறார்கள் பார்க்கவேண்டும். நீங்கள் ஹாரர் படங்கள் அதிகமாக பார்ப்பீர்கள் போல உள்ளது :-)

    ReplyDelete
  6. //விலங்குகளின் மீது விசேஷ மதிப்பு வந்தது.//


    பிடிச்சிருக்கு.

    எதோ ஒரு இந்திய சினிமா ( ஹிந்தியா இல்லே தமிழான்னு தெரியலை) தனியா உக்கார்ந்து பார்த்தால் பரிசுன்னு சொல்லிக்கிட்டு இருந்தாங்களே....
    அவ்ளோ பயமாமே:-)

    ReplyDelete
  7. ///தமிழில் ஏன் பேய்ப்படங்கள் அதிகமாக வருவதில்லை?
    /////
    கயல்...இதுக்குதான் அடிக்கடி தமிழ் படங்களையும் பாக்கணுங்கற்து...பெரும்பாலான படங்களில் ஹீரோயின்களே 'பேய்' கேரக்டர் பண்ணுவதால்,யாரும் தனியாக பேய்படம் எடுப்பதில்லை...;)))

    ReplyDelete
  8. //
    அந்த கோடு நீங்களே எழுதினது..அதனால அப்பிடி தான் இருக்கும் :0)
    //

    அதான் இல்லை :) வேற ஒருவர் எழுதின கோடை ரிவர்ஸ் எஞ்சினியரிங் பண்ண ட்ரை பண்ணினேன். மற்றொருவர் எழுதிய கோடை புரிந்துக்கொள்ள முயலுவதை விட கொடுமை வேறில்லை :(


    //அதுல இருந்து விலங்குகள் மீது மதிப்பே போயிடுச்சின்னு உங்க அம்மா சொல்லுவாங்க...கேட்டு பாருங்களேன் :)//
    உண்மையை எல்லாம் இப்படி பப்ளிக்கா போட்டு உடைக்க கூடாது :)

    //படத்துல அம்புட்டு அன்பு காட்டுனவய்ங்க, பாக்குறவங்க மேலயும் கொஞ்சம் அன்பு காட்டிருக்கலாம்...எலும்பல்ல ஒடச்சிட்டாய்ங்க!//
    எப்படி எலும்பை உடைத்தார்கள்? நல்லா தானே இருந்தது?

    //
    சுத்தி இருக்கய்வங்களை சும்மா சொல்ட்டி சொல்ட்டி அடிக்க சொல்லிக் கொடுத்த படம்ன்கிறதுனால எனக்கு கூட பெருமதிப்பு உண்டு.. இப்பக்கூட, யாராவது வேண்டாதவங்க வந்தா அந்த படத்து டி.வி.டியை போட்டு விட்றது உண்டு!
    //

    நிஜாமாவா?
    .
    //
    எனக்கு அந்த படத்து இடைவேளை பிடிச்சிருந்தது...ரொம்ப நேரமா தம்மடிக்க முடியாம வெயிட்டிங்ல இருந்தேன்.. அப்புறம் மனிஷா கொய்ராலா சூப்பர்.. அரை லூசா அவங்க நிஜ கேரக்டரை அப்படியே செஞ்சி இருப்பாங்க!
    //
    அரை லூசை விடுங்க, இந்திக்காரி தாவணி - இரட்டை சடையுடன் எவ்வளவு கோராமாக இருக்க முடியும் என்பதற்கு மனீஷா நல்ல உதாரணம்.

    //
    அதெல்லாமா படிக்கிறீங்க?? எந்த புக்குலன்னு சொன்னா நாங்களும் படிப்போமில்ல?
    //

    எல்லாம் குமுதம்- விகடன் தான் :)

    //உங்க மேல ஆப்பிள் கேஸ் போட போறாங்க..அப்பிடியே சில சௌத் அமெரிக்கன் நாடுகளும்! ம்யூசிக் பைரஸி!//
    நீங்களே சொல்லிக்கொடுப்பீங்க போலிருக்கு!JK
    //
    "Saw" அப்பிடின்னா, See ங்கிற‌தோட‌ பாஸ்ட் டென்ஸ் தான‌? அத‌ எப்பிடி ஃப்யூச்ச‌ர் டென்ஸ்ல‌ சொல்றீங்க‌?? இங்கிலிபீசு என்ன ரொம்ப‌ கொழ‌ப்புது!

    //

    சா(ரம்பம்) படம் ஒன்றை கூட பார்த்ததில்லையா? ரொம்ப மிஸ் பண்ணிட்டீங்க. சைக்கோ கொலைக்காரர்களில் ரொம்ப வித்யாசமான, ஜீனியஸ் இவர்.


    //ஏன் முடியாது?? த‌மிழ்ல‌ வ‌ர்ற‌ பெரும்பாலான‌ ப‌ட‌ங்க‌ள் ப‌ய‌ங்க‌ ஹார‌ர்!
    //
    நிஜம் தான் :(

    //அது ஏன்னா, மேக்க‌ப் இல்லாம‌ ந‌டிக்க‌ இங்க‌ யாருக்கும் விருப்ப‌மில்லை, அவ்ளோ தான் :0)
    //
    ஏன் உங்க தலைவர் ஒரு படத்தில் வெள்ளைக்காரரா வேஷம் போட்டிருப்பாரே, அதை விட பயங்கரம் உண்டா? :) :)

    //அழைப்பை ஏற்று தொட‌ர் எழுதிய‌த‌ற்கு மிக்க ந‌ன்றி க‌ய‌ல்விழி..//
    அழைப்புக்கு மீண்டும் நன்றி விக்ரமாதித்யன்

    ReplyDelete
  9. //உண்மை தான், சிறப்பாக நடித்து இருப்பார். அதில் இருந்த மேக் அப் தரம் கூட தசாவதாரம் படத்தில் இல்லை.//

    இதை சொன்னால் தான் கமல் ரசிகர்கள் கொத்த வராங்களே!


    //எனக்கு Saw படங்கள் அனைத்துமே பிடிக்கும், அதிகமாக ஹாரர் படங்கள் பார்ப்பேன் ஹி ஹி நான் பார்த்து பயந்து போன படம் Hostel அதை பற்றி நாளை ஒரு பதிவு போட போடுகிறேன் :-)//

    ஹாஸ்டல் 2 பார்த்தீங்களா? நான் 1 பார்த்து 3 நாள் தூங்க முடியவில்லை. கண்டிப்பா எழுதுங்க, அதில் கமெண்ட் எழுத எனக்கு நிறைய இருக்கு
    //
    அந்த படம் முழுவதும் பார்க்கவில்லை, கொஞ்சம் பார்த்தே டென்ஷன் ஆகி விட்டேன்..அவர்கள் மரம் மீது தண்ணீர் மீதெல்லாம் ஓடிட்டு இருப்பார்கள், நம்ம தமிழ் படத்துலயும் விரைவில் இதை எதிர்பார்க்கலாம் :-) நம்மவர்கள் இப்போது வரைக்கும் காற்றில் தான் சண்டை போடுகிறார்கள்.//

    நிஜமாவே gravity defying சைனீஸ் மார்ஷல் ஆர்ட்ஸ் இருக்காம்.

    // நீங்கள் ஹாரர் படங்கள் அதிகமாக பார்ப்பீர்கள் போல உள்ளது :-)//
    :) :)

    ReplyDelete
  10. வருகைக்கு நன்றி கிரி :)

    ReplyDelete
  11. வாங்க துளசி டீச்சர்.

    மை டியர் லீசா தானே அந்தப்படம்?

    ReplyDelete
  12. //.பெரும்பாலான படங்களில் ஹீரோயின்களே 'பேய்' கேரக்டர் பண்ணுவதால்,யாரும் தனியாக பேய்படம் எடுப்பதில்லை...;)))//

    வாங்க் மோகன்:). ஹீரோக்கள் மட்டும் என்னவாம்?

    ReplyDelete
  13. //ஜாப்பனீஸ் படங்களில் பேய்ப்படங்கள் என்றால் ரொம்ப பிடிக்கும் "One missed call" பார்த்திருக்கீங்களா?//
    என்னது "One missed call" ஜாப்பானீஸ் படமா???? நான் இங்கிலீஸ்ல்ல பார்த்தேன்.....
    "Apartment1303" பார்த்திருக்கீங்களா?

    ReplyDelete
  14. ஆதவன்
    வருகைக்கு நன்றி :)
    மிஸ்ட் கால் படத்தை ஆங்கிலத்தில் படுகொலை பண்ணிவிட்டார்கள் :( ஒரிஜினல் படத்தில் தான் படத்தின் ஆழம் புரியும்.

    ஒரு ஆவி ஆராய்ச்சியாளர் பேய் ரூமில் தங்குவாரே, அந்த கதையா?

    ReplyDelete
  15. //ு. சமீபத்தில் கூட விமானத்தில் ஒரு நடிகரை சந்தித்தேன், அவர் நடிகர் என்பதே அவர் சொல்லித்தான் எனக்கு தெரிந்தது(அது ஒரு பெரிய கதை, தனிப்பதிவாவே எழுதலாம்)/

    இதைப்பற்றி உடனே பதிவிடுங்கள்... சுவராஸ்யமாக இருக்கும் போல் தெரிகிறது...

    அவரது பெயரை வெளியிட விரும்பாவிட்டால் கிசுகிசு பாணியில் சொல்லுங்கள்

    ReplyDelete
  16. தலைப்புக்கும் பதிவுக்கும் சம்பந்தேமேயில்லை போங்க.

    அன்பே சிவம் ரசனைவாதர்களுக்கு ஒரு சிறந்த படமாக இருந்தபோதிலும் வியாபாரக் கண்ணோட்டத்திலும் ஜனரஞ்சகமாகவும் தோற்றுப் போனது வருத்தப் படவேண்டியது.பெண்களை சீரியல் ரசிப்புக்கும் அப்பால் கொண்டு செல்ல வேண்டியுள்ளது.அப்பொழுதுதான் எந்த ஒரு நல்ல படமும் வெற்றிப் படத்துக்கு வழி வகுக்கும்.

    ReplyDelete
  17. //ஒரு ஆவி ஆராய்ச்சியாளர் பேய் ரூமில் தங்குவாரே, அந்த கதையா?//

    இல்ல கயல் அது ஒரு மொக்க படம்.அந்த படத்தோட பெயர் 1408. அத பாக்கவேண்டாம்.

    நான் சொல்றது ஜாப்பானீஸ் படம் "Apartment1303". மொழி புரியலனாலும் கொஞ்சம் பயமா இருந்தது.

    ReplyDelete
  18. தலைப்பை நிருபிச்சிட்டீங்க கயல்.. அதிரடியான பதில்கள்.. சூப்பர்..

    ReplyDelete
  19. ***கயல் எழுதியது:

    1. வருண் ***

    கயல்: இதுதான் அழைப்பிதழா? எனக்கு இந்த தொடர்பதிவு பற்றி சரியா தெரியாது, அதான் கேட்கிறேன். :-)

    நம்ம ஹிட் கவுண்டர்க்கு என்ன ஆச்சு?

    ஏதோ தப்பா காட்டுது?

    ReplyDelete
  20. எல்லாரும் ஒரு பேய் படம் வேணும்கிறாங்க அது சரியோட தயாரிப்புல வருண்& கயல்விழி நடிப்பில் அல்லது எழுத்தில் விரைவில் ஒரு பேய்படம் கொடுங்கள்.

    (காதல் பிளாக்வெட்ட அது சரியோட விக்கிரமாதித்தன் பின்னனில எழுதுனா சரியா வருமா)

    ReplyDelete
  21. /*எல்லாரும் ஒரு பேய் படம் வேணும்கிறாங்க அது சரியோட தயாரிப்புல வருண்& கயல்விழி நடிப்பில் அல்லது எழுத்தில் விரைவில் ஒரு பேய்படம் கொடுங்கள்.*/
    நானும் முன்னால் முதல்வர் கருத்தை வழி மொழிகிறேன், ஆனா படத்தோட டைரக்டர் வாய்ப்பு எனக்குதான் கொடுக்கணும்

    ReplyDelete
  22. பதிவில் ஓரிடத்தில் கூட ஜே.கே.ரித்திஷை குறிப்பிடாததை கண்டிக்கிறேன். குறிப்பாக, பத்தாவது கேள்விக்கு "ஜே.கே.ரித்திஷ்" என்று சுருக்குமாக பதிலளிக்காமல், மக்களை திசை திருப்பும் வகையில் பதில் கூறியதற்காக மீண்டும் கண்டிக்கிறேன். இது "திருப்பதி" பற்றி பதிவெழுதிவிட்டு "லட்டு" பற்றி சொல்லாததைப்போல் உள்ளது.

    ReplyDelete
  23. //இதைப்பற்றி உடனே பதிவிடுங்கள்... சுவராஸ்யமாக இருக்கும் போல் தெரிகிறது...

    அவரது பெயரை வெளியிட விரும்பாவிட்டால் கிசுகிசு பாணியில் சொல்லுங்கள்
    //

    வாங்க கூடுதுறை. :)

    உங்களுக்காக நிச்சயம் பதிவிடுகிறேன்

    ReplyDelete
  24. //தலைப்புக்கும் பதிவுக்கும் சம்பந்தேமேயில்லை போங்க.//

    வாங்க ராஜநடராஜன் :)

    என்ன கொடுமை இது? சம்மந்தம் இல்லையா? எல்லாரும் எழுதி முடிச்சிட்ட பிறகு நிதானமா எழுதுவது அடாவடி இல்லையா? JK :)

    ReplyDelete
  25. //நான் சொல்றது ஜாப்பானீஸ் படம் "Apartment1303". மொழி புரியலனாலும் கொஞ்சம் பயமா இருந்தது.
    //
    நீங்க சொன்ன படம் இன்னும் பார்க்கவில்லை, ஆனால் கவலைப்படாதீங்க, சீக்கிரமே பார்த்துவிடுவேன் :) :)

    ReplyDelete
  26. //தலைப்பை நிருபிச்சிட்டீங்க கயல்.. அதிரடியான பதில்கள்.. சூப்பர்..//

    வாங்க வெண்பூ :) நன்றி

    ReplyDelete
  27. //கயல்: இதுதான் அழைப்பிதழா? எனக்கு இந்த தொடர்பதிவு பற்றி சரியா தெரியாது, அதான் கேட்கிறேன். :-)

    நம்ம ஹிட் கவுண்டர்க்கு என்ன ஆச்சு?

    ஏதோ தப்பா காட்டுது?
    //

    அப்புறம் என்ன? ப்ரிண்ட் எடுத்து கையில் கொடுபோம் என்று நினைத்தீர்களா? :) :) இதே தான் அழைப்பிதழ்

    ஹிட் கவுண்டருக்கு என்ன ஆச்சு?

    ReplyDelete
  28. //எல்லாரும் ஒரு பேய் படம் வேணும்கிறாங்க அது சரியோட தயாரிப்புல வருண்& கயல்விழி நடிப்பில் அல்லது எழுத்தில் விரைவில் ஒரு பேய்படம் கொடுங்கள்.//

    உங்களுக்கு அந்தப்படத்தில் ஒரு கனமான பார்ட் உண்டு வருங்கால சிஎம்.

    சரி, முதல்வர் ஆன பிறகு எங்களை மறக்க மாட்டீங்களே?

    ReplyDelete
  29. //நானும் முன்னால் முதல்வர் கருத்தை வழி மொழிகிறேன், ஆனா படத்தோட டைரக்டர் வாய்ப்பு எனக்குதான் கொடுக்கணும்//
    டைரக்ஷன் என்ன? மெயின் ரோலே உங்களுக்கு தான் :) :)

    ReplyDelete
  30. //பதிவில் ஓரிடத்தில் கூட ஜே.கே.ரித்திஷை குறிப்பிடாததை கண்டிக்கிறேன். குறிப்பாக, பத்தாவது கேள்விக்கு "ஜே.கே.ரித்திஷ்" என்று சுருக்குமாக பதிலளிக்காமல், மக்களை திசை திருப்பும் வகையில் பதில் கூறியதற்காக மீண்டும் கண்டிக்கிறேன். இது "திருப்பதி" பற்றி பதிவெழுதிவிட்டு "லட்டு" பற்றி சொல்லாததைப்போல் உள்ளது..//
    ஜே.கே ரசிகரா நீங்க? உங்க தலைவர் அடுத்து ஹாலிவுட் படத்தில டாம் க்ரூஸ் தம்பியா நடிக்கப்போறாராமே?

    வாங்க மொக்கைச்சாமி :)

    ReplyDelete
  31. //கயல் சொன்னது

    சரி, முதல்வர் ஆன பிறகு எங்களை மறக்க மாட்டீங்களே?//

    தவறான புரிதல், நான் முதல்வர் பதவிக்கு என்றும் ஆசைப்படவில்லை, ஆனால் நிரந்தர வருங்கால முதல்வராக இருக்க விரும்பினேன். அதற்கும் இப்போது பலத்த எதிர்ப்பு, விரைவில் நான்
    முன்னால் வருங்கால முதல்வர் ஆகிவிடுவேன் போல் உள்ளது.

    ReplyDelete
  32. ஒருதடவை ஜே ஆர் டி டாடா விமானத்துல போறப்ப பக்கத்துல அமிதாப் இருந்தாராம். ரெண்டு பேரும் பேசிக்கிறப்ப டாடா அமிதாப்ப பார்த்து நீங்க என்ன வேலை செய்றீங்கன்னு கேட்ருக்காரு, அதுக்கே அமிதாப் பயங்கர அதிர்சியாயிட்டாராம்,இருந்தாலும் சமாளிச்சிக்கிட்டு நான் ஒரு சினிமா நடிகர் அப்டின்னு சொன்னாராம், அதுக்கு டாடா, அப்ப உங்க சாப்பாட்டுக்கு நீங்க எந்த வேலையுமே செய்யலையான்னு கேட்டாராம். அந்த அளவுக்கு டாடாவோட சினிமா அறிவு இருந்துச்சாம். அந்த மாதிரி நீங்களும் ஒரு நடிகருக்கு அதிர்ச்சி கொடுத்துருக்கீங்க.

    ReplyDelete
  33. //முன்னால் வருங்கால முதல்வர் //

    என்ன கொடுமை இது வ.மு

    (வாஷிங்டன் ம்யூச்சுவல் இல்லை)

    ReplyDelete
  34. வாங்க ஜோசப். :)

    டாடா வேலையில் பிசியா இருப்பதால் சினிமா பார்த்திருக்கமாட்டார். நான் தமிழ் சினிமா பார்க்காத காரணமே வேற :)

    ReplyDelete
  35. நல்லாயிருக்குது :)

    ReplyDelete
  36. //கயல்விழி said...
    //பதிவில் ஓரிடத்தில் கூட ஜே.கே.ரித்திஷை குறிப்பிடாததை கண்டிக்கிறேன். குறிப்பாக, பத்தாவது கேள்விக்கு "ஜே.கே.ரித்திஷ்" என்று சுருக்குமாக பதிலளிக்காமல், மக்களை திசை திருப்பும் வகையில் பதில் கூறியதற்காக மீண்டும் கண்டிக்கிறேன். இது "திருப்பதி" பற்றி பதிவெழுதிவிட்டு "லட்டு" பற்றி சொல்லாததைப்போல் உள்ளது..//
    ஜே.கே ரசிகரா நீங்க? உங்க தலைவர் அடுத்து ஹாலிவுட் படத்தில டாம் க்ரூஸ் தம்பியா நடிக்கப்போறாராமே?
    //

    ரித்தீஷ் ரேஞ்சுக்கு தம்பி கேரக்டரா.. அவரு அண்ணனா நடிக்க வேண்டியவருங்க :)

    ReplyDelete
  37. //தமிழ் நடிகர்களையும், அரசியல்வாதிகளையும் நான் சீரியசாக எடுத்துக்கொள்வதில்லை. //

    கலக்கல் :)

    ReplyDelete
  38. //"One missed call" பார்த்திருக்கீங்களா? //

    என் செல்போன்ல வர்றதெல்லாமே மிஸ்டு கால்தான் :(

    ReplyDelete
  39. //தமிழில் ஏன் பேய்ப்படங்கள் அதிகமாக வருவதில்லை?//

    பேய் பட ஹீரோ நிழல்கள் ரவி ரிட்டயர்டு ஆகிட்டாரு... அதான் :)

    ReplyDelete
  40. //தமிழ்சினிமா தற்போது ஒரு cult-ல் சிக்கிக்கொண்டிருக்கிறது. பிரம்மாண்டம், அரசியல், சூப்பர் ஹீரோயிசம், ஆபாசம், வன்முறை - இதை விட்டால் வேறு படங்கள் வருவதில்லை. நல்ல கதையமைப்புக்கொண்ட படங்கள் ரொம்ப ரொம்ப குறைவு. இதே நிலை தொடர்ந்தால் தமிழ் சினிமாவின் நிலை கவலைக்கிடம் என்பதில் சந்தேகமில்லை.//

    தவறான கண்ணோட்டம். தமிழ்சினிமா முன்னாடியிலேந்து இப்படித்தான் இருந்துட்டு இருக்குது.. அப்ப இருந்தவங்களூம் இதையேத்தான் சொல்லிட்டு இருந்திருப்பாங்கன்னு நினைக்குறேன். :)

    ReplyDelete
  41. கயல்,

    சுவாரஸ்யமா எழுதியிருக்கீங்க.

    நீங்களும்,நண்பர் கிரியும் Saw பட ரசிகர்களா? என்னையும் உங்களோடு சேர்த்து கொள்ளுங்கள்.Saw பாகம் 5 நாளை வெளிவருகிறது.பார்த்து விடலாம்.

    Saw பாகம் நான்கை அரங்கில் நான் ஒருவன் மட்டுமே பார்த்தேன்.அதே போல் அரங்கில் தனியாக அமர்ந்து பார்த்த மற்றொரு படம் ஹாஸ்டல் பாகம் 2. பாகம் ஒன்று அளவிற்கு கண்டிப்பாக இல்லை.

    இந்த Slasher ஜானர் வகை படங்கள் பார்ப்பீர்கள் என்றால் High Tension பாருங்கள்.ஒரிஜினல் Haute Tension
    என ஃப்ரென்ச் மொழியில்.
    http://www.imdb.com/video/screenplay/vi1957495065/

    Texas Chainsaw Massacre,Final destination (series),identity போன்ற படங்களை பார்த்துள்ளீர்களா?

    ReplyDelete
  42. வாங்க சென்ஷி :) கருத்துக்களுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  43. //தவறான கண்ணோட்டம். தமிழ்சினிமா முன்னாடியிலேந்து இப்படித்தான் இருந்துட்டு இருக்குது.. அப்ப இருந்தவங்களூம் இதையேத்தான் சொல்லிட்டு இருந்திருப்பாங்கன்னு நினைக்குறேன். :)
    //

    80, 90களில் நல்ல கதை அமைப்புள்ள படங்கள் வந்த மாதிரி இருக்கிறதே?

    ReplyDelete
  44. //நீங்களும்,நண்பர் கிரியும் Saw பட ரசிகர்களா? என்னையும் உங்களோடு சேர்த்து கொள்ளுங்கள்.Saw பாகம் 5 நாளை வெளிவருகிறது.பார்த்து விடலாம்.

    Saw பாகம் நான்கை அரங்கில் நான் ஒருவன் மட்டுமே பார்த்தேன்.அதே போல் அரங்கில் தனியாக அமர்ந்து பார்த்த மற்றொரு படம் ஹாஸ்டல் பாகம் 2. பாகம் ஒன்று அளவிற்கு கண்டிப்பாக இல்லை.

    இந்த Slasher ஜானர் வகை படங்கள் பார்ப்பீர்கள் என்றால் High Tension பாருங்கள்.ஒரிஜினல் Haute Tension
    என ஃப்ரென்ச் மொழியில்.
    http://www.imdb.com/video/screenplay/vi1957495065/

    Texas Chainsaw Massacre,Final destination (series),identity போன்ற படங்களை பார்த்துள்ளீர்களா?//

    வாங்க பிரேம்ஜி. நீங்களும் Saw பட ரசிகரா? நான் ஏறக்குறைய புதிதாக வந்த அனைத்து ஹாரர்/ஸ்லாஷர் படங்களையும் பார்த்து விடுவேன். ஆனால் "High Tension" இதுவரை பார்த்ததில்லை.

    Texas Chainsaw Massacre series,Final destination series, I know what you did last summer series, Ring series - இந்த படங்கள் எல்லாமே பார்திருக்கிறேன்.

    சமீபத்தில் "The Happening" பார்த்து நொந்துப்போய் இருக்கிறேன்.

    Hostel 3 எப்போ வரும், any idea?

    அரங்கில் நீங்க மட்டுமே தனியே பார்த்தீங்களா, அது எப்படி??

    ReplyDelete
  45. //
    //படத்துல அம்புட்டு அன்பு காட்டுனவய்ங்க, பாக்குறவங்க மேலயும் கொஞ்சம் அன்பு காட்டிருக்கலாம்...எலும்பல்ல ஒடச்சிட்டாய்ங்க!//

    எப்படி எலும்பை உடைத்தார்கள்? நல்லா தானே இருந்தது?

    //

    அது அடிவாங்கின எங்களுக்கு தான தெரியும்?


    //
    "Saw" அப்பிடின்னா, See ங்கிற‌தோட‌ பாஸ்ட் டென்ஸ் தான‌? அத‌ எப்பிடி ஃப்யூச்ச‌ர் டென்ஸ்ல‌ சொல்றீங்க‌?? இங்கிலிபீசு என்ன ரொம்ப‌ கொழ‌ப்புது!

    //

    சா(ரம்பம்) படம் ஒன்றை கூட பார்த்ததில்லையா? ரொம்ப மிஸ் பண்ணிட்டீங்க. சைக்கோ கொலைக்காரர்களில் ரொம்ப வித்யாசமான, ஜீனியஸ் இவர்.
    //

    இவ்ளோ அப்பாவியா இருக்கீங்க.."See Saw" வார்த்தை விளையாட்டு...:0)
    அதவிடுங்க... நான் Saw ஒரே ஒரு படம் கூட பார்த்ததில்லை. ஹாரர் படம், சைக்கோ கொலை எல்லாம் எனக்கு பாக்கிறதுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.. தெரியாம பார்த்து கஷ்டப்பட்டது What Lies Beneath .... வேட்டையாடு விளையாடு கூட பார்க்க முடியலை.. அது என் டைப் படம் இல்ல. நான் பார்க்கிறதெல்லாம் ச்ச்சும்மா லைட் டைப் ஆக்ஷன், காமெடி.. Casino Royale, Bourne...படையப்பா இந்த மாதிரி.. நான் படம் பார்க்கிறதே சும்மா ஜாலியா இருக்கத்தான்.. அங்க போயி எதுக்கு ஒரு சைக்கோ கொலை செய்றதை பார்க்கணும்? அதை பார்த்தா ரொம்ப கஷ்டமாயிடுது..

    //
    ஏன் உங்க தலைவர் ஒரு படத்தில் வெள்ளைக்காரரா வேஷம் போட்டிருப்பாரே, அதை விட பயங்கரம் உண்டா? :) :)
    //

    என்ன‌து அது வேஷ‌மா? யாரும் தெறைமையா ந‌டிக்கிற‌துல்லன்னு குறை சொல்ரீங்க‌.. ஒருத்த‌ரு உருவ‌த்தையே, நிற‌த்தையே மாத்தி ந‌டிச்சாலும் குறை சொல்றீங்க‌ :0)

    இதை நான் கடும் க‌ண்ட‌ன‌ம் செய்கிறேன்..

    //
    அழைப்புக்கு மீண்டும் நன்றி விக்ரமாதித்யன்
    //

    இதுல‌ ஒரு ச்சின்ன‌ ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருக்கு..அவ‌ச‌ர‌த்துல‌ "அதுச‌ரி"ன்னு எழுத‌ற‌துக்கு ப‌திலா, விக்கிர‌மாதித்த‌ன்னு எழுதியிருக்கீங்க‌ பாருங்க‌!

    ReplyDelete
  46. //
    கயல்விழி said...
    அப்புறம் என்ன? ப்ரிண்ட் எடுத்து கையில் கொடுபோம் என்று நினைத்தீர்களா? :) :) இதே தான் அழைப்பிதழ்

    ஹிட் கவுண்டருக்கு என்ன ஆச்சு?

    //

    அடுத்த வாரம் "அண்ணன் வருண் எழுதுகிறார்"னு டைம்ஸ் ஸ்கொயர்ல போஸ்டர் ஒட்டிரலாமா? :0) ம்ம்னு சொல்லுங்க, செலவு எல்லாம் அவர்கிட்டயே வாங்கிக்கலாம்!

    ஆமா, யாரது கவுண்டர்? உங்க பிரண்டா? அவருக்கு என்ன ஆச்சி?

    ReplyDelete
  47. கயல்,

    Hostel பாகம் 3 இப்போதைக்கு வெளிவராது.அப்படியே வந்தாலும் முதல் இரண்டு பாகங்களின் இயக்குனர் Eli Roth அதை இயக்க விரும்பவில்லை என சொல்லிவிட்டார்.அவர் இப்போது அவருடைய குருவான Quentin Taratino வின் Inglourious Basterds படத்தில் Brad Pitt,Diane Kruger
    உடன் நடித்து கொண்டுள்ளார்.

    அப்புறம்... தனியாதான்.வந்த ஒண்ணு ரெண்டு பேரும் படம் ஆரம்பிச்ச பத்து நிமிசத்தில எழுந்து போய் விட்டதால் தனியா தான் பார்க்க வேண்டியிருந்தது.:-))

    ReplyDelete
  48. //
    கயல்விழி said...
    //எல்லாரும் ஒரு பேய் படம் வேணும்கிறாங்க அது சரியோட தயாரிப்புல வருண்& கயல்விழி நடிப்பில் அல்லது எழுத்தில் விரைவில் ஒரு பேய்படம் கொடுங்கள்.//

    உங்களுக்கு அந்தப்படத்தில் ஒரு கனமான பார்ட் உண்டு வருங்கால சிஎம்.

    சரி, முதல்வர் ஆன பிறகு எங்களை மறக்க மாட்டீங்களே?

    //

    தயாரிப்பா? எங்க மாமா ஏ.வி.எம். சரவணன்கிட்ட சொல்றேன்...ஒரு கண்டிஷன்..டைரக்ஷன் நான் தான்..ஆனா, இப்ப என்னோட கால்ஷீட் 2020 வரை ஃபுல். அதுக்கப்புறம் தான் டேட் கிடைக்கும். பரவாயில்லையா?

    நாய் பத்திர ஊழல்ல மாட்டுன குடுகுடுப்பையார் இன்னுமா பதவியை ரிசைன் பண்ணல? பதவி வெறி :0)

    ReplyDelete
  49. //
    கயல்விழி said...
    //முன்னால் வருங்கால முதல்வர் //

    என்ன கொடுமை இது வ.மு

    (வாஷிங்டன் ம்யூச்சுவல் இல்லை)

    //

    அப்ப நாய் பத்திர ஊழல் மட்டும் கொடுமை இல்லையா? வாஷிங்டன் ம்யூச்சுவல சீப்பான ரேட்டுல வாங்கியிருக்காரு...அதுக்கு பணம் எங்க இருந்து வந்தது? கணக்கு காட்ட தயாரா?

    ReplyDelete
  50. /*
    நாய் பத்திர ஊழல்ல மாட்டுன குடுகுடுப்பையார் இன்னுமா பதவியை ரிசைன் பண்ணல? பதவி வெறி :0)

    */
    குடுகுடுப்பையார் ராஜினாமா கடிதம் கொடுத்து ஒரு நாள் ஆகிவிட்டது. அவர் இப்போது முன்னாள் வருங்கால முதல்வர்

    ReplyDelete
  51. **** கயல்விழி said...
    //கயல்: இதுதான் அழைப்பிதழா? எனக்கு இந்த தொடர்பதிவு பற்றி சரியா தெரியாது, அதான் கேட்கிறேன். :-)

    நம்ம ஹிட் கவுண்டர்க்கு என்ன ஆச்சு?

    ஏதோ தப்பா காட்டுது?
    //

    அப்புறம் என்ன? ப்ரிண்ட் எடுத்து கையில் கொடுபோம் என்று நினைத்தீர்களா? :) :) இதே தான் அழைப்பிதழ்

    ஹிட் கவுண்டருக்கு என்ன ஆச்சு?****


    சரி, நீ அழைத்து மாட்டேன் னு எப்படி சொல்றது! :-) கொஞ்சம் டயம் கொடுங்க, மஹாராணி! :-) எதோ என்னால் முடிஞ்சதை எழுதுறேன் :-)

    ஹிட் கவண்டர் ஏதோ 2-3 ஆயிரத்தை சாப்பிட்டுவிட்டதுனு நினைக்கிறேன் :-(

    ReplyDelete
  52. வருண் நீங்க எப்போ எழுதப்போறீங்க... கயல்விழி சுத்த American ஆக மாறீடாதீங்க... கொஞ்சம் தமிழ் படங்களும் பாருங்க...

    ReplyDelete
  53. அதுசரி
    என்ன இது? காட்டுக்கு தனியே போய் வேதாளத்தை எல்லாம் தூக்கிட்டு வரீங்க, ஒரு ஹாரர் படம் பார்க்க பயப்படலாமா? ஹாஸ்டல் நீங்க நிச்சயம் பார்க்கவேண்டிய படம்

    ReplyDelete
  54. ப்ரேம்ஜி
    தனியாவா பார்த்தீங்க? உங்களுக்கு ரொம்ப ரொம்ப தைரியம் தான். நாங்க எல்லாம் ப்ரெண்ட்ஸ் கூட்டமா பார்த்ததுக்கே அலறிட்டோம்.

    ReplyDelete
  55. வாங்க இவன்.

    நானா பார்க்கமாட்டேன் என்கிறேன்? எனக்கு பிடித்த மாதிரி யாரும் தமிழ் படம் எடுப்பதில்லை.

    ReplyDelete