Thursday, October 23, 2008

நடிகருடன் ஒரு விமானப்பயணம்!

விமான பயணம் எனக்கு பிடிக்காத ஒன்று, ஏன் தெரியுமா?

செக்யூரிட்டி செக்கிங், செக்கிங், செக்கிங்! விமான நிலையத்தில் காத்திருக்கும் நேரத்தில் அப்படியே பொடி நடையாக நடந்து போனால் கூட போகவேண்டிய இடத்துக்கு சீக்கிரம் போய் சேரலாம் போலிருக்கிறது. அதுவும் எனக்கும், விமான நிலைய செக்யூரிட்டி கேட்டுகளுக்கும் நிரந்தர தகராறு. நான் கேட்டை கடக்கும் போதெல்லாம் அது என்ன மாயமோ தெரியாது, தவறாமல் அலாரம் அடிக்கும். வளையல், செயின், கம்மல், சாண்டல்ஸ் என்று எல்லா மெட்டல்களையும் பார்த்து பார்த்து ரிமூவ் பண்ணி இருந்தாலும், கவனிக்க தவறிய ஹேர்க்ளிப் வில்லியாக சதி பண்ணி இருக்கும்.

சுய புலம்பல் இருக்கட்டும், இதெல்லாம் வழக்கமா நடப்பது தான். இருந்தாலும் அன்றைய விமானப்பயணம் எனக்கு வழக்கத்தை விட கொடுமையாக இருந்தது. நான் கொண்டு வந்த ஹாண்ட் லகேஜில் இருந்த லிக்விட் சோப், ஷாம்பூ, கண்டிஷனர் எல்லாம் 3 oz எடைக்கு அதிகமாம்!(என் இனிய தமிழ் மக்களே, 3 அவுன்சுக்கு குறைவாக யாராவது க்ரீம் எடுத்து வருவாங்களா?). "I am extremely sorry young lady" என்று ஒரு குண்டர் என்னுடைய விக்டோரியா சீக்ரெட் க்ரீம்களையும், பால் மிட்சல் ஷாம்பூ- கண்டிஷனரையும் என் கண் முன்னால் குப்பையில் தூக்கிப்போட்டார்(ண்ணா.. நல்லா இருப்பீங்களாணா?)

என்னுடைய சோகத்தை ஸ்டார்பக்ஸ் காஃபி குடித்து ஆற்றிக்கொண்டிருந்தபோது ஒரு இந்திய இளைஞர் தட்டுப்பட்டார். வழக்கமாக இந்தியர்களைப்பார்த்தால் சிரித்து ஒரு 'ஹாய்' சொல்வதுண்டு, அன்றைய தினம் மூட் இல்லாததால் பேசாமல் போய்விட்டேன். விமானத்தில் என்னுடைய பக்கத்து சீட் காலியாக இருந்தது, நான் வழக்கம் போல அங்கே இருந்த அறுவை மேகசீன்களை புரட்டிக்கொண்டிருந்த போது, "எக்ஸ்க்யூஸ்மி" என்ற குரல் என் கவனத்தை கலைத்தது. மீண்டும் அந்த இந்திய இளைஞர்!

"4 மணி நேர பயணம், நீங்க செல்போன்ல தமிழ்ல பேசிட்டு இருந்தீங்க. போரடிக்காம போகலாம் இல்லையா? உங்க பக்கத்தில உட்காரலாமா?"- இப்படி தமிழில் கேட்டவுடன் எனக்கு என்ன சொல்வததென்று தெரியவில்லை. No, offense to gentlemen here, தனியே பயணிக்கும் போது, அந்நியர்களுடன் முக்கியமாக ஆண்களுடன் நான் அதிகம் பழகுவதில்லை. பாதுகாப்பு சம்மந்தமான கவலை தான் காரணம். "அதுக்கென்ன,go ahead" என்று உதட்டளவில் சொல்லிவிட்டாலும் மனதளவில் தர்மசங்கடம். தமிழ் மட்டும் பேசாமல் இருந்தால் எப்படியாவது மறுத்திருக்கலாம்.

அவர் வந்து உட்கார்ந்ததில் இருந்து கீறல் விழுந்த ரெக்கார்ட் மாதிரி பேசிக்கொண்டேஏஏஏ இருந்தார்.முக்கியமாக நம்ம Gapடன் புகழ் பாடிக்கொண்டிருந்தார்.Gapடன் தான் தமிழ்நாட்டின் வருங்கால முதல்வராம்(!) ஏற்கெனெவே பயணம் என்றால் மைல்ட் மோஷன் சிக்னெஸ் வந்து அவதிப்படும் எனக்கு அவர் அணிந்திருந்த கொலோன் எக்ஸ்ட்ராவாக தலைவலியையும் ஏற்படுத்தியது. கூடவே ஒரு எண்ணம் "இவரை எங்கோ பார்த்தா மாதிரி இருக்கே?". அவர் சொல்வதற்கெல்லாம் சும்மா சிரித்துவைத்துக்கொண்டிருந்தேன். அப்போது தான் திடீரென்று என்னிடம் இந்தக்கேள்வியைக்கேட்டார் "என்ன வேலை செய்யறீங்க?"

நான் என்னுடைய கணிப்பொறியியல் வேலையைப்பற்றியும், ப்ராஜெக்டுகளைப்பற்றியும் சொல்லிவிட்டு ஃபார்மாலிட்டிக்காக அதே கேள்வியை அவரிடமும் கேட்டு வைத்தேன், அங்கே தான் வந்தது வினை. உடனே அவரின் முகம் சிறுத்துவிட்டது, "என்ன இப்படி கேட்டுட்டீங்க, நான் தான் *****. என் படம் பார்த்ததில்லையா? -----, ----- படத்தில் எல்லாம் நடிச்சிருக்கேனே, அதிலும் இந்த(ஒரு படத்தின் பெயரைக்குறிப்பிட்டு)படம் நல்லா ஓடியதே? எனக்கு என்ன சொல்வது என்று புரியவில்லை.

அவர் குறிப்பிட்ட அந்த பாடாவதி படம் அவர் சொன்ன பிறகு தான் நினைவு வந்தது, கூடவே அவர் முகமும். "ஷாருக்கான் படத்தை காப்பி அடிச்சது மாதிரி இருக்கே" என்று எரிச்சலடைந்து பாதியிலேயே டிவிடியை நிறுத்திய படம். "ஓ நல்லா நினைவிருக்கே, ரொம்ப சாரி நான் ஒரு சரியான ஸ்காட்டர் ப்ரெயின்" என்று எப்படியோ சமாளித்தேன்.

"இட்ஸ் ஓகே" என்று அவர் சொன்னாலும் ஏமாற்றத்தை மறைக்க முடியாமல் தடுமாறினார்(இந்த எக்ஸ்ப்ரெஷன்களில் பாதியாவது படத்தில் காட்டி இருக்க கூடாதா?). அவரை அடையாளம் காண முடியாமல் போனதில் எரிச்சலோ என்னவோ, பிறகு தொடர்ந்து இந்தியர்கள் எப்படி இந்தியாவில் படித்துவிட்டு அமரிக்காவில் வேலை செய்ய ஓடிவிடுகிறார்கள், அதனால் இந்தியாவுக்கு எவ்வளவு நஷ்டம் என்பதைப்பற்றி எல்லாம் எனக்கு முழு நீள லெக்சர் கொடுத்தார்(அதெல்லாம் எங்களுக்கு தெரியாதாக்கும்?).

லெக்சரின் முடிவில், "வேலை எல்லாம் போதும், நீங்க ஏன் சென்னை வந்து செட்டில் ஆகக்கூடாது? எனக்கு நிறைய ப்ரெண்ட்ஸ், நாமெல்லாம் ஜாலியா ஊர்சுற்றலாம்" என்று கடைசியாக ஒரு போடு போட்டார். சென்னையில் வந்து அப்படி நடிகருடன் ஊர் சுற்றினால் என்னுடைய கன்சர்வேட்டிவ் பெற்றோர்களும், உறவினர்களும் என்ன கலாட்டாவெல்லாம் பண்ணுவார்கள்? நினைக்கும் போதே சிரிப்பு வந்தது. அவர் சொன்னதைக்கேட்டு சிரிப்பதாக நினைத்த நம்ம ஹீரோ அதற்கு பிறகு டாப் கியரில் அலற(பேச) ஆரம்பித்தார். எனக்கு ஒரு விஷயம் புரிவதில்லை, பக்கத்தில் உட்கார்ந்திருப்பவர்களிடம் பேச இப்படி ஏன் எட்டு ஊருக்கு கேட்கிற மாதிரி சிலர் கத்தவேண்டும்?

அவருடைய அலறலில் இருந்து நான் அறிந்துக்கொண்டவை: நம்ம ஹீரோவுக்கு ஏதோ ஷூட்டிங்காம். அவர் சொன்ன படத்தலைப்பை கேட்டாலே தூக்கம் வரும், அப்படி ஒரு அற்புதமான டைட்டில். அப்படி ஒரு படத்தை நான் எங்கேயும் கேள்விப்பட்டதாகவே நினைவில்லை. ஒரு வேளை மெகாசீரியலாக இருக்குமோ? அடுத்த ஜேகே ரித்தீஷ் ஆவதற்கான எல்லா பிரகாசமான வாய்ப்பும் நம்ம ஹீரோவுக்கு இருந்தது.

ரஜினி, கமல் போன்ற பெரிய நடிகர்களை எல்லாம் கட்டாய ஓய்வு எடுக்க வைக்கனுமாம், அவரை மாதிரி யூத்துகளுக்கு வாய்ப்பே இல்லாமல் போகிறதாம்(அவங்க ஓய்வெடுத்துட்டா மட்டும்?). வாய்ப்புகள் கிடைக்க அவர் படும் சிரமங்களை எல்லாம் ரொம்ப விரிவாக விளக்கினார், கடைசியில் "பாருங்க உங்களுக்கு கூட என்னை அடையாளம் தெரியாமல் போச்சு" என்று அவர் சொன்னதும் எனக்கே பாவமாக போய்விட்டது. "எனக்கு ஒரு ஆட்டோகிராப் ப்ளீஸ்" என்று அவரிடம்(வேறுவழி இல்லாமல்)கேட்டேன்.

ஏதோ ஒரு போஸ்ட் கார்ட்டில் அவருடைய தொலைப்பேசி எண் மற்றும் வீட்டு முகவரி எழுதி, கூடவே ஆட்டோகிராப்பும் போட்டு கொடுத்தார். இறங்கிய பிறகு, நான் போக வேண்டிய இடம் வரையில் கொண்டு வந்து விட்டு, போகும் போது "மறக்காமல் சென்னை வரும் போது என்னை வந்து பார்க்கனும், டைம் கிடைக்கும் போது போன் பண்ணுங்க" என்று சொல்லிவிட்டு போனார். சரி என்று சொன்னேன்(நிச்சயம் போகப்போவதில்லை).

அவர் எழுதிக்கொடுத்த ஆட்டோகிராப் கார்ட் எங்கோ தொலைந்துவிட்டது, இப்படி சில தகவல்களை நான் தொலைப்பதற்காகவே வாங்குவதுண்டு. ஆனால் அவர் குறிப்பிட்ட படத்தை மட்டும் ரிலீஸ் ஆகும் போது டிவிடியில் பார்க்கலாம் என்று நினைக்கிறேன்.

92 comments:

  1. கயல்: அவர் இதைப்படிக்காமல் இருந்தால் சரிதான் :)

    ReplyDelete
  2. //yaru antha boss?//

    வாங்க உதயக்குமார். :)
    Try to guess.

    ReplyDelete
  3. //கயல்: அவர் இதைப்படிக்காமல் இருந்தால் சரிதான் :)//

    இவர் மட்டுமில்லை, நிறைய பேர் என் ப்ளாகை படிக்கவே கூடாது :) :)

    ReplyDelete
  4. பொடிவச்சுப் பேசிட்டீங்களா?

    அவருக்குத்தானே அழுகை சீன் நல்லா வரலைன்னு சொன்னாங்க?

    ஆஹ்ஹா...... கண்டு பிடிச்சுட்டேன். அது விஜய்.

    ச்சும்மா....:-)))))

    இப்படியெல்லாம் 'ஆட்டோகிராஃப்' தேடிக்கிட்டு இருக்கீங்களா?

    ReplyDelete
  5. வாங்க துளசி டீச்சர். பொடி எல்லாம் இல்லை, வெளிப்படையா பெயர் சொல்ல முடியாதில்லையா? அதான் :) :)

    இப்போ வருண் சொன்னவுடன் அந்த நடிகர் என் ப்ளாக் படிக்க கூடாதேனு பயமா இருக்கு. நல்ல வேளை திட்ட வசதியா என் போன் நம்பர் அவருக்கு கொடுக்கவில்லை.

    ReplyDelete
  6. ஆஹா.. யாருன்னு தெரியலியே?.. .அந்த 'தூக்கம் வர்ற படத்தோட பேரு' என்னப்பா - யாராவது கண்டுபிடிங்க......

    ReplyDelete
  7. வாங்க ச்சின்னப்பையன் :)

    ReplyDelete
  8. **** கயல்விழி said...
    வாங்க துளசி டீச்சர். பொடி எல்லாம் இல்லை, வெளிப்படையா பெயர் சொல்ல முடியாதில்லையா? அதான் :) :)

    இப்போ வருண் சொன்னவுடன் அந்த நடிகர் என் ப்ளாக் படிக்க கூடாதேனு பயமா இருக்கு. நல்ல வேளை திட்ட வசதியா என் போன் நம்பர் அவருக்கு கொடுக்கவில்லை.****

    ஃபோன் நம்பர் கேக்கிறதெல்லாம் கொஞ்சம் அதிகம் இல்லையா, கயல்?

    எனக்கென்னவோ இந்தியா, அமெரிக்காவைவிட ஸ்பீடா போற மாதிரி இருக்குப்பா!

    நம்மல்லாம் ஏதோ நாகரீகத்தில் பின்னால் போய்விட்டது போல ஒரு ஃபீலிங் :-)

    ReplyDelete
  9. கயல்,
    யார்ன்னே கண்டு பிடிக்க முடியல. நீங்க குடுத்த clue - ஜு.வி, ஆ.வி ஸ்டைல்ல ஒண்ணுமே புரிய மாட்டேங்குது. அவிங்கதான் இப்டி எல்லாம் எழுதி மண்ட காய வைப்பாங்க. நீங்களுமா? :-((((.

    //வளையல், செயின், கம்மல், சாண்டல்ஸ் என்று எல்லா மெட்டல்களையும் பார்த்து பார்த்து ரிமூவ் பண்ணி இருந்தாலும், கவனிக்க தவறிய ஹேர்க்ளிப் வில்லியாக சதி பண்ணி இருக்கும். //

    இந்தக் கொடுமைய நானும் அனுபவிச்சிருக்கேன். ஒரு தடவை என்னோட வளையல கழட்டவே முடியல. ' சரி, போனாப் போகுதுன்னு' விட்டுட்டா.

    // லிக்விட் சோப், ஷாம்பூ, கண்டிஷனர் எல்லாம் 3 oz எடைக்கு அதிகமாம் //

    இந்த விதிகளைப் பத்தி எல்லா ஏர்லைன்ஸ் வெப் சைட்லயும் சொல்லி இருந்தாங்களேப்பா? நம்ம வச்சிருக்கற liquid அனுமதிக்கப்பட்ட அளவுல இருந்தாலும், அது இருக்கற container அளவுல பெரிசா இருந்தாலும் அனுமதிக்க மாட்டாங்களாம். அப்பறம் இந்த liquid container எல்லாம் ஜிப் லாக் bag ல இருக்கனுமாம். செக் இன் counter வரிசைல காத்திருக்கும்போதே இதை சொல்லி, bags குடுக்கறதைப் பாத்தேன். எதுக்கு இந்த வம்பெல்லாம்ன்னு, எதையும் கொண்டு போகலே.

    சித்ரா மனோ

    ReplyDelete
  10. அவரு பிரசன்னமானவர் அப்படின்னு எதாவது க்ளு குடுங்க

    ReplyDelete
  11. //!(என் இனிய தமிழ் மக்களே, 3 அவுன்சுக்கு குறைவாக யாராவது க்ரீம் எடுத்து வருவாங்களா?//

    :-)))

    //தமிழ் மட்டும் பேசாமல் இருந்தால் எப்படியாவது மறுத்திருக்கலாம்//

    எப்படியும் நம்ம முகம் காட்டி கொடுத்திடுமே ;-)

    //இந்த எக்ஸ்ப்ரெஷன்களில் பாதியாவது படத்தில் காட்டி இருக்க கூடாதா?//

    ஹா ஹா ஹா

    //எனக்கு நிறைய ப்ரெண்ட்ஸ், நாமெல்லாம் ஜாலியா ஊர்சுற்றலாம்" என்று கடைசியாக ஒரு போடு போட்டார்//

    என்னது !!!!!!!!!!!!!!!!!!!!!!!

    //அவர் சொன்ன படத்தலைப்பை கேட்டாலே தூக்கம் வரும்//

    அப்படி என்னங்க தலைப்பு சொன்னா நாங்களும் தெரிந்துக்குவோம்

    //கடைசியில் "பாருங்க உங்களுக்கு கூட என்னை அடையாளம் தெரியாமல் போச்சு" என்று அவர் சொன்னதும் எனக்கே பாவமாக போய்விட்டது. //

    பாவம் ரொம்ப ஃபீல் பண்ணிட்டாரு போல..நீங்க என்ன இருந்தாலும் அவரோட சந்தோசத்தை இப்படி குலைத்து இருக்க கூடாது :-))))

    இப்படி அநியாயத்துக்கு க்ளூ எதுவும் கொடுக்காமல் இருந்தால் எப்படி! எப்படியோ கூடுதுறை ஆசையை நிறைவேற்றி விட்டீங்க..பதிவா போட்டு :-)))

    Hostel விமர்சனம் போட்டு இருக்கேன், வந்து படித்து பார்த்து எப்படி இருக்குன்னு சொல்லுங்க (நீங்க படம் பார்த்த கொடுமையை :-D)

    ReplyDelete
  12. யார்தான் அந்த நடிகர் கண்டுபிடிக்க கொஞ்சம் இல்ல ரொம்பவே குஷ்டமா இருக்குது

    ReplyDelete
  13. என்னபா இது? யாரு தான் அவுரு? ஓரே கொடச்சலா இருக்கு :-)

    ReplyDelete
  14. என்ன கயல்...

    ஒரு ச்சின்ன க்ளூ கூட குடுக்காம எழுதிட்டீங்க...? அவரு படிச்சா என்ன இப்போ.. ‘அட.. இவ்ளோ ஃபேமஸ் ப்ளாக்கரா அந்தப் பொண்ணு?’ன்னு நெனைப்பாரு. அவ்வளவுதான்!

    ReplyDelete
  15. :(

    இதுக்கு நீங்க அந்த நடிகர் பெயரையாச்சும் சொல்லிட்டு போயிருக்கலாம். மண்டை காயுது..!

    ReplyDelete
  16. கடைசி வரியில் அந்த நடிகர் யார் என்று சொல்வீர்கள் என நினைத்தேன். சொல்லாததால், உங்க பிளாக் நான் எழுதும் இந்த வரி வரை சஸ்பென்ஸாக தொடர்கிறது.

    கீப் இட் அப்! சஸ்பென்ஸ் தொடரட்டும்.

    ReplyDelete
  17. ம்ஹூம்... என்னால கண்டு பிடிக்க முடியலப்பா....

    இன்னும் கொஞ்சம் க்ளு கொடுங்களேன்...

    ReplyDelete
  18. //. "I am extremely sorry young lady" என்று ஒரு குண்டர்//

    இப்படி சொன்னது யாரை என்று சொல்லவேயில்லையே...

    அதிலும் ஒரு சஸ்பென்ஸா?

    (மாட்டிக்கிட்டிங்களா?)

    ReplyDelete
  19. //கயல்,
    யார்ன்னே கண்டு பிடிக்க முடியல. நீங்க குடுத்த clue - ஜு.வி, ஆ.வி ஸ்டைல்ல ஒண்ணுமே புரிய மாட்டேங்குது. அவிங்கதான் இப்டி எல்லாம் எழுதி மண்ட காய வைப்பாங்க. நீங்களுமா? :-((((. //

    வாங்க சித்ரா, :)
    ஸ்கூல் படிக்கும் காலத்தில் என்னுடைய பெஸ்ட் ப்ரெண்டுடைய பெயர் கூட சித்ரா.

    //இந்தக் கொடுமைய நானும் அனுபவிச்சிருக்கேன். ஒரு தடவை என்னோட வளையல கழட்டவே முடியல. ' சரி, போனாப் போகுதுன்னு' விட்டுட்டா. //
    இந்தியப்பெண்கள் என்றாலே கொஞ்சமாவது நகை அணிந்திருப்போம், இப்படி ஒரு அனுபவம் நிச்சயம் இருக்கும் :)

    //இந்த விதிகளைப் பத்தி எல்லா ஏர்லைன்ஸ் வெப் சைட்லயும் சொல்லி இருந்தாங்களேப்பா? நம்ம வச்சிருக்கற liquid அனுமதிக்கப்பட்ட அளவுல இருந்தாலும், அது இருக்கற container அளவுல பெரிசா இருந்தாலும் அனுமதிக்க மாட்டாங்களாம். அப்பறம் இந்த liquid container எல்லாம் ஜிப் லாக் bag ல இருக்கனுமாம். செக் இன் counter வரிசைல காத்திருக்கும்போதே இதை சொல்லி, bags குடுக்கறதைப் பாத்தேன். எதுக்கு இந்த வம்பெல்லாம்ன்னு, எதையும் கொண்டு போகலே.
    //
    தெரிந்திருந்தால் நான் ஏன் எடுத்துட்டு போகப்போறேன்? அப்புறமா ஏர்போர்ட்டில் சோப், க்ரீம் எல்லாம் வாங்கினேன்.

    ReplyDelete
  20. வாங்க குடுகுடுப்பை :)

    ReplyDelete
  21. //சென்னையில் வந்து அப்படி நடிகருடன் ஊர் சுற்றினால் என்னுடைய கன்சர்வேட்டிவ் பெற்றோர்களும், உறவினர்களும் என்ன கலாட்டாவெல்லாம் பண்ணுவார்கள்? நினைக்கும் போதே சிரிப்பு வந்தது.//

    என்ன உங்க வீட்டுக்கு பயந்துதான் சுத்தாம இருக்கிங்க போல?

    ReplyDelete
  22. //என்னது !!!!!!!!!!!!!!!!!!!!!!!//
    என்ன இவ்வளவு ஆச்சர்யப்படறீங்க? சினிமாகாரர்களுக்கு இதெல்லாம் ரொம்ப சகஜம் தானே?

    //
    பாவம் ரொம்ப ஃபீல் பண்ணிட்டாரு போல..நீங்க என்ன இருந்தாலும் அவரோட சந்தோசத்தை இப்படி குலைத்து இருக்க கூடாது :-))))

    இப்படி அநியாயத்துக்கு க்ளூ எதுவும் கொடுக்காமல் இருந்தால் எப்படி! எப்படியோ கூடுதுறை ஆசையை நிறைவேற்றி விட்டீங்க..பதிவா போட்டு :-)))//

    க்ளூ தரலாம், ஆனால் உங்க தொகுதிக்கு யார் எம்.எல்.ஏ? சாலை விதினா என்ன? தமிழ் நாட்டின் சார்பா எத்தனை மந்திரிகள் இருக்கிறார்கள், நீங்க ஓட்டுப்போட்ட கட்சியின் கொள்கைகள் என்னென்ன என்ற அடிப்படை கேள்விகளுக்கெல்லாம் பதில் தெரியாத நம்ம ஆட்கள், சினிமாஅ நடிகர்காளில் யார் யாரோடு ஓடிப்போனது, யார் யாரை காதலிப்பது போன்ற பொது அறிவுக்கேள்விக்கெல்லாம் பளிச்சென்று பதில் சொல்வாங்களே,அந்த பயம் தான் :) :)

    நம்பி தன் தனிப்பட்ட விஷயங்களை என்னிடம் தெரிவிக்கும் யாருடைய ப்ரைவசியையும் அப்யூஸ் பண்ண எனக்கு பிடிப்பதில்லை.

    இருந்தும் நிறைய க்ளூ கொடுத்திருக்கிறேன். கற்பூர மூளைக்காரர்கள் தெரிந்துக்கொண்டால் கொஞ்சம் அமைதி காக்கவும் :)

    //Hostel விமர்சனம் போட்டு இருக்கேன், வந்து படித்து பார்த்து எப்படி இருக்குன்னு சொல்லுங்க (நீங்க படம் பார்த்த கொடுமையை :-D)
    //

    நிச்சயம் வந்து பார்க்கிறேன்.

    ReplyDelete
  23. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி கிரி :)

    ReplyDelete
  24. வாங்க இவன் மற்றும் ராமச்சந்திரன் உஷா :)

    ReplyDelete
  25. //

    ஒரு ச்சின்ன க்ளூ கூட குடுக்காம எழுதிட்டீங்க...? அவரு படிச்சா என்ன இப்போ.. ‘அட.. இவ்ளோ ஃபேமஸ் ப்ளாக்கரா அந்தப் பொண்ணு?’ன்னு நெனைப்பாரு. அவ்வளவுதான்!
    //

    வாங்க பரிசல் :)

    ஏதோ அவர் திட்டாமல் இருந்தால் போதும். எழுதின பிறகு கொஞ்சம் கில்டியா இருக்கு.

    ReplyDelete
  26. //:(

    இதுக்கு நீங்க அந்த நடிகர் பெயரையாச்சும் சொல்லிட்டு போயிருக்கலாம். மண்டை காயுது..!

    //

    வாங்க சென்ஷி. க்ளூவெல்லாம் கொடுத்திருக்கிறேன் :)

    ReplyDelete
  27. ஒரு சின்ன க்ளூவாவது குடுங்களேன் கயல், ப்ளீஸ், ஆபிஸ்ல வேலை ஓடாது. (அப்படியே வேலை பாத்துட்டாலும்) :))

    ReplyDelete
  28. //:(

    இதுக்கு நீங்க அந்த நடிகர் பெயரையாச்சும் சொல்லிட்டு போயிருக்கலாம். மண்டை காயுது..!

    //

    வாங்க செல்வக்குமார், இந்த முறை சஸ்பென்சுக்காக இல்லை, ப்ரைவசிக்காக பெயரை எழுதவில்லை :)

    ReplyDelete
  29. //

    இப்படி சொன்னது யாரை என்று சொல்லவேயில்லையே...

    அதிலும் ஒரு சஸ்பென்ஸா?

    (மாட்டிக்கிட்டிங்களா?)//

    வாங்க கூடுதுறை. உங்களுடைய ரிக்வெஸ்டுக்காக தான் தனிப்பதிவாக எழுதினேன்.

    முன்பெல்லாம் "Young girl" என்று சொல்வார்கள், இப்போதெல்லாம் "Young lady" என்று சொல்கிறார்கள். அடுத்து "Young aunty" என்று சொல்லாமல் இருக்கனும் :) :) :)

    ReplyDelete
  30. //

    என்ன உங்க வீட்டுக்கு பயந்துதான் சுத்தாம இருக்கிங்க போல?//

    வாங்க குட்டிப்பிசாசு.

    அதெல்லாம் இல்லை, எனக்கு சுயமரியாதையும், கொஞ்சம் பொது அறிவும் இருப்பதால் அப்படி ஊர் சுற்றுவதில்லை. இப்படி வெளிப்படையாக சொன்னால் Rude ஆக இருக்கும் என்பதால் குடும்பத்தையும் ஒரு காரணமாக சொல்லுவேன்.

    ReplyDelete
  31. வாங்க அம்பி :)

    க்ளூவெல்லாம் கொடுத்திருக்கிறேனே?

    ReplyDelete
  32. கயல்விழி,
    இந்த பதிவ அந்த நடிகர் படிச்சா நிச்சயமா கண்டுபுடிச்சுடுவாறு. அப்புறம் ஏன் அந்த நடிகர் மேல உங்களுக்கு இவ்வளவு கரிசனம் ? இதுக்கு தான் துணுக்குமூட்டை (குட்டி கதைகள்) ரொம்ப படிக்க கூடாதுன்னு சொல்றது.

    ReplyDelete
  33. இப்படி எங்கள் மண்டையை கொடைய வைத்த கயல்விழியை வன்மையாக கண்டிக்கிறேன். :( இப்போ நான் இது யாருன்னு தெரியாம என்ன பண்ணுவேன்....

    குறிப்பு வருணுக்கு : இதுக்கு முன்னாடி ரொம்ப கஷ்டப்பட்டு பதிவு எழுதிட்டு ஆள் இல்லம் வருண் இருக்காரு.. இங்கே கிசு கிசு'ந உடனே கூட்டத்தை பாரு.. :-) எங்கே போய் இதை எல்லாம் சொல்ல

    ReplyDelete
  34. கஜினி படம் பாத்து இருக்கீங்களா கயல் :-)

    அதுலே வர்ற அசின் நெனைப்பு தான் வந்தது எனக்கு இதை படிச்ச உடனே. :-) :-)

    jk :-)

    ReplyDelete
  35. அவரு பிரசன்னமானவர் அப்படின்னு எதாவது க்ளு குடுங்க//

    அதே அதே
    அதிருந்தால்
    அச்சமில்லை அச்சமில்லை
    இல்லை இல்லை
    உண்டு உண்டு

    ReplyDelete
  36. சரி தாயி... அவரு யாருன்னு எனக்கு உடனே ஒரு மெயில் அனுப்பிவுடு :)

    ReplyDelete
  37. இத்தனை பேரு கேக்கறாங்க்ளே சொன்னாதான் என்ன கயல்

    (அய்யோ மண்டை காயுதே)

    ReplyDelete
  38. அந்த ஆலிவுட் நடிகர் யாரு தாயி..
    வாழ்கைங்கிற சினிமாவிலே நாமெல்லாம் நடிகர்கர்கள் தானே :):)

    ReplyDelete
  39. இன்னமுமா தெரியல, நான் கண்டுபிடிசிட்டேன்.

    ReplyDelete
  40. Captain dhaan adutha mudhalvar-nu sollum hero-vaa?!?

    yaaru andha jollu party nadigar?

    ReplyDelete
  41. /*இன்னமுமா தெரியல, நான் கண்டுபிடிசிட்டேன்.*/
    சொல்லி தொலை சாமி..
    பதில் சொன்ன முன்னால் முதல்வர் பதவியை மாத்திட்டு வருங்கால முதல்வர் ஆக்கிடலாம்

    ReplyDelete
  42. I guess it's our kilukilu matter famous SJ S....?

    ReplyDelete
  43. ///*இன்னமுமா தெரியல, நான் கண்டுபிடிசிட்டேன்.*/
    சொல்லி தொலை சாமி..
    பதில் சொன்ன முன்னால் முதல்வர் பதவியை மாத்திட்டு வருங்கால முதல்வர் ஆக்கிடலாம்//

    இத படிச்சு பின்னூட்டம் போட்டா சொல்றேன்.

    கயல்விழி மன்னிக்கவும்

    ReplyDelete
  44. //கயல்விழி,
    இந்த பதிவ அந்த நடிகர் படிச்சா நிச்சயமா கண்டுபுடிச்சுடுவாறு. அப்புறம் ஏன் அந்த நடிகர் மேல உங்களுக்கு இவ்வளவு கரிசனம் ? இதுக்கு தான் துணுக்குமூட்டை (குட்டி கதைகள்) ரொம்ப படிக்க கூடாதுன்னு சொல்றது//

    வாங்க மணிகண்டன்

    நீங்க நான் சொன்னதை சரியா புரிந்துக்கொள்ளவில்லை என்று நினைக்கிறேன். என்னுடைய நோக்கம் நடிகருக்கு தெரியக்கூடாது என்பது இல்லை, நடிகரின் இமேஜ் மற்றவர்கள் முன்னால் குறையக்கூடாது என்பது. நடிகருக்கு தெரிந்தாலும், தெரியாவிட்டாலும் எனக்கு கவலை இல்லை.

    ReplyDelete
  45. வாங்க எஸ்.கே :)

    கஜினி படமா? பாதி படம் பார்த்தேன்.

    ReplyDelete
  46. //அதே அதே
    அதிருந்தால்
    அச்சமில்லை அச்சமில்லை
    இல்லை இல்லை
    உண்டு உண்டு
    //

    வாங்க சயந்தன் :)

    ReplyDelete
  47. //சரி தாயி... அவரு யாருன்னு எனக்கு உடனே ஒரு மெயில் அனுப்பிவுடு :)//

    அப்துல்லா,

    உங்க ஈமெயில் ஐடி எங்கே இருக்கு?

    ReplyDelete
  48. வாங்க அமிர்தவர்ஷனி அம்மா, நசரேயன் :)

    ReplyDelete
  49. வாங்க வ.மு :)

    எங்கே நம்ம நண்பர் அதுசரி?

    ReplyDelete
  50. வாங்க வ.மு :)

    எங்கே நம்ம நண்பர் அதுசரி?

    / ஒரு வேளை வேதாளத்திகிட்ட நடிகர் யாருன்னு கேக்க போயிட்டார் போல./

    ReplyDelete
  51. //அப்துல்லா,

    உங்க ஈமெயில் ஐடி எங்கே இருக்கு?
    //

    Never mind, கண்டுபிடிச்சாச்சு!

    ReplyDelete
  52. //ஒரு வேளை வேதாளத்திகிட்ட நடிகர் யாருன்னு கேக்க போயிட்டார் போல.//

    வேதாளம் கேள்வி மட்டும் தான் கேட்கும், பதில் சொல்லாது

    ReplyDelete
  53. நீங்கள் பெயரைக் கூட சொல்ல விரும்பாத ஒரு நடிகரை அகிலாண்ட நாயகன் ஜேகே ரித்தீஷ் அவர்களுடன் ஒப்பிட்டு அகிலாண்ட நாயகனை இழிவுபடுத்தியமைக்கு உங்களுக்கு கடுமையான கண்டணங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    மேலும் இந்த பதிவில் நீங்க அகிலாண்ட நாயகனை இழிவுபடுத்தியதை கண்டுகொள்ளாமல் விட்ட மன்றத்தின் பொருளாளர் புதுகை அப்துல்லா அண்ணணுக்கும் என் கடுமையான கண்டணங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். உடனே அப்துல்லாவை அப்பதவியில் இருந்து நீக்கி என்னை பொருளாளராக நியமிக்க வேண்டும் என தலைவி ராப் அவர்களுக்கு கோரிக்கை விடுக்கிறேன்.

    பி.கு: என்னடா இவன் இப்படி பின்னூட்டம் போட்டுருக்கானேன்னு கோவப்படாதீங்க கயல். இந்த நடிகருங்க விசயத்துல எல்லாம் நமக்கு எந்த அக்கறையும் இல்லீங்க அதான் இப்படி. சரி சரி, எனக்கு உடனே மெயில் அனுப்புங்க.

    ReplyDelete
  54. ஒ அவரா..அவரோட கடைசி படம் பார்க்கிற ரகம் தான்...
    அவ்வளவு மோசம் இல்லை!

    ReplyDelete
  55. //மித்ரா குட்டி said...

    ஒ அவரா..அவரோட கடைசி படம் பார்க்கிற ரகம் தான்...
    அவ்வளவு மோசம் இல்லை!//

    கயலக்கவோட நீங்க பெரிய ஆளு , வெள்ளிக்கிழ்மையும் அதுவுமா இப்படி ஒரு கொழப்பம். ஆண்டவா எல்லாரையும் அந்த நடிகர் கிட்ட இருந்து காப்பாத்து

    ReplyDelete
  56. //பி.கு: என்னடா இவன் இப்படி பின்னூட்டம் போட்டுருக்கானேன்னு கோவப்படாதீங்க கயல். இந்த நடிகருங்க விசயத்துல எல்லாம் நமக்கு எந்த அக்கறையும் இல்லீங்க அதான் இப்படி. சரி சரி, எனக்கு உடனே மெயில் அனுப்புங்க.//

    அனுப்பறேன் பாருங்க :)

    ReplyDelete
  57. //ஒ அவரா..அவரோட கடைசி படம் பார்க்கிற ரகம் தான்...
    அவ்வளவு மோசம் இல்லை!

    //

    ஸ்மார்ட் மித்ரா

    ReplyDelete
  58. வாங்க ஜோசப் மற்றும் மித்ரா. :)

    ReplyDelete
  59. ஆஹா...இவ்வளவு சஸ்பென்ஸ் வச்சி எழுதுவீங்க என்று தெரிஞ்சிருந்தா நான் கேட்டே இருக்க மாட்டேன்....

    எனக்கு மட்டுமாவது கொஞ்சம் விதிமுறைகளை தளர்த்தி க்ளு கொடுங்களேன்.

    அப்படியே பா.கே.ப விலும் எதாவது எழுதுங்களேன்..

    ReplyDelete
  60. சரிங்க கூடுதுறை, உங்களுக்கும் மின்னஞ்சலில் தெரிவிக்கிறேன் :)

    ReplyDelete
  61. அடடாஆஆஆ ... தரைக்கு மேல் சில அடிகள் உயரத்தில் மிதந்துகொண்டே இருக்கும் இவர் போன்ற ஆட்களின் ஈகோவில் பெரிய பொத்தல் போட்டு தரையிலிறக்கிவிட்டிருக்க வேண்டிய வாய்ப்பை தவற விட்டிருக்கிறீர்களே ! நானாக இருந்தால் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றியிருப்பேன். ஹி...ஹி

    எப்படியோ, நம்பி தமது தனிப்பட்ட விபரங்களை தந்தவரது இமேஜ் பற்றி (அல்லது அப்யூஸ் பண்ணக்கூடாது என்ற) உங்கள் அக்கறை பாராட்டுக்குரியது. நம்பிக்கையை காப்பாற்றவேண்டுமல்லவா !

    மற்றபடி, ஏன் பின்னூட்ட நண்பர்கள் அவர் பெயர் தெரிய இவ்வளவு துடிக்கிறீர்கள் ? அவர் ஒரு நடிகர் என்பது போதாதா ?

    மட்டுமல்லாமல் 'பதிவுகளெல்லாம் அவர் படித்தால் ...' என்பதெல்லாம் கொஞ்சம் ஓவர்.

    பதிவுகள் - அதுவும் தமிழ் - படிக்கும் நிலையிலா இருக்கிறார்கள் நம்மூர் நடிகர்கள் ?

    அன்புடன்
    முத்து

    ReplyDelete
  62. //அடடாஆஆஆ ... தரைக்கு மேல் சில அடிகள் உயரத்தில் மிதந்துகொண்டே இருக்கும் இவர் போன்ற ஆட்களின் ஈகோவில் பெரிய பொத்தல் போட்டு தரையிலிறக்கிவிட்டிருக்க வேண்டிய வாய்ப்பை தவற விட்டிருக்கிறீர்களே ! நானாக இருந்தால் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றியிருப்பேன். ஹி...ஹி//

    வாங்க முத்துக்குமார், மனதில் இருக்கும் கடுமையை வார்த்தையில் ஏற்றுவது எனக்கு ரொம்ப கடினம்.

    //எப்படியோ, நம்பி தமது தனிப்பட்ட விபரங்களை தந்தவரது இமேஜ் பற்றி (அல்லது அப்யூஸ் பண்ணக்கூடாது என்ற) உங்கள் அக்கறை பாராட்டுக்குரியது. நம்பிக்கையை காப்பாற்றவேண்டுமல்லவா !

    மற்றபடி, ஏன் பின்னூட்ட நண்பர்கள் அவர் பெயர் தெரிய இவ்வளவு துடிக்கிறீர்கள் ? அவர் ஒரு நடிகர் என்பது போதாதா ?

    மட்டுமல்லாமல் 'பதிவுகளெல்லாம் அவர் படித்தால் ...' என்பதெல்லாம் கொஞ்சம் ஓவர்.

    பதிவுகள் - அதுவும் தமிழ் - படிக்கும் நிலையிலா இருக்கிறார்கள் நம்மூர் நடிகர்கள் ?//

    Finally some words of wisdom!!!!

    ரொம்ப ரொம்ப நன்றி முத்துக்குமார். :)

    ReplyDelete
  63. வணக்கம்!

    உங்கள் பதிவில் நான் பின்னூட்டம் இடவில்லை. அவர் வேறு நண்பராக இருக்கக்கூடும்.ஏனென்றால் இன்னொருவருடைய கருத்தை எனது என்று ஏற்றுக்கொள்ள மனம் வரவில்லை.


    எனினும் உங்க்கள் வருகைக்கும் தெளிவான கருத்திற்கும் நன்றி.

    ReplyDelete
  64. //உங்கள் பதிவில் நான் பின்னூட்டம் இடவில்லை. அவர் வேறு நண்பராக இருக்கக்கூடும்.ஏனென்றால் இன்னொருவருடைய கருத்தை எனது என்று ஏற்றுக்கொள்ள மனம் வரவில்லை.//

    அப்படியா? ரொம்ப சாரி குழம்பிவிட்டேன்.

    ReplyDelete
  65. ங்ஙேஏஏஏஏஏஏஏஏஎ

    ReplyDelete
  66. //ங்ஙேஏஏஏஏஏஏஏஏஎ//

    என்னாச்சு உங்களுக்கு? :)

    ReplyDelete
  67. என்ன ஆச்சா...? ஒரு க்ளூவும் புரியிறாமாதிரி இல்லை. நாங்கெல்லாம் விவரந்தெரிஞ்ச காலத்திலிருந்தே வாரமலர் துணுக்குமூட்டை,குமுதம் கிசுகிசு,ராணி கிசுகிசு எல்லாம் படிச்சு அதுக்கு விடை தெரியாம தூங்கப் போனதில்லை.
    ஆனா உங்க பதிவைப் படிச்சவுடனே,விடை கண்டுபிடிக்கிறதுக்குள்ள இருக்கிறா பாதி முடியும் கொட்டிடுமேன்னு பயம் வந்துடுச்சு. அதான் ங்ஙேஏஎ..
    எக்ஸ்ப்ரஸன் கரெக்டப் போட்டிருக்கேனா...?

    ReplyDelete
  68. //ஆனா உங்க பதிவைப் படிச்சவுடனே,விடை கண்டுபிடிக்கிறதுக்குள்ள இருக்கிறா பாதி முடியும் கொட்டிடுமேன்னு பயம் வந்துடுச்சு. அதான் ங்ஙேஏஎ..
    எக்ஸ்ப்ரஸன் கரெக்டப் போட்டிருக்கேனா...?
    //

    LOL

    சரியா தான் போட்டிருக்கீங்க.

    வருகைக்கு மிக்க நன்றி தமிழ்ப்பறவை :)

    ReplyDelete
  69. அந்த படத்தின் இயக்குனர் ஒரு முன்னாள் வலைப்பதிவரா.... ? :)

    ReplyDelete
  70. இயக்குநர் யாரென்று தெரியாது சயந்தன், நான் கேட்கவும் இல்லை.

    ReplyDelete
  71. அடடா .. நான் வார்த்தைக்கடுமையை சொல்லவில்லை கயல்விழி.

    தாங்கள் தேவதூதர்கள் என்ற நினைப்பில் தரையில் கால் பாவாமல் திரிபவர்களுக்கு 'இல்லையப்பா, நீயும் என்னை மாதிரி ஒரு குப்பன்/சுப்பன் தான், ஒளிவட்டம் ஏதும் உங்கள் தலைக்குப்பின் சுற்றவில்லை' என்பதை நிதானமாக புரியவைத்திருக்கலாம்.

    ஜெயகாந்தன் எழுதிய ஒரு கட்டுரையை படிக்கச்சொல்லவேண்டும் இவர்களை.

    மற்றபடி, நன்றிகள் கயல்விழி.

    அன்புடன்
    முத்து

    ReplyDelete
  72. //தாங்கள் தேவதூதர்கள் என்ற நினைப்பில் தரையில் கால் பாவாமல் திரிபவர்களுக்கு 'இல்லையப்பா, நீயும் என்னை மாதிரி ஒரு குப்பன்/சுப்பன் தான், ஒளிவட்டம் ஏதும் உங்கள் தலைக்குப்பின் சுற்றவில்லை' என்பதை நிதானமாக புரியவைத்திருக்கலாம்.
    //

    வாங்க முத்துக்குமார். ஓரளவு தெளிவாக பேசத்தெரியும், ஆனால் நீங்கள் சொல்லும் அளவுக்கு எனக்கு தெளிவாக பேசி புரிய வைக்க முடியாது. ஒரு வேளை வருங்காலத்தில் கற்றுக்கொள்ளலாம்.

    தெளிவான கருத்துக்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி.

    ReplyDelete
  73. நடிகர்களை கிள்ளுக் கீரைகளாக மதிக்கும், இந்த பதிவை

    வன்மையாக கண்டிக்கிறேன்

    -நடிகன் சர்வேசன் ;)

    ReplyDelete
  74. கயல்விழி said...
    //சரி தாயி... அவரு யாருன்னு எனக்கு உடனே ஒரு மெயில் அனுப்பிவுடு :)//

    அப்துல்லா,

    உங்க ஈமெயில் ஐடி எங்கே இருக்கு?

    //

    என் புரோபைலிலேயே இருக்கே

    pudukkottaiabdulla@gmail.com



    //மன்றத்தின் பொருளாளர் புதுகை அப்துல்லா அண்ணணுக்கும் என் கடுமையான கண்டணங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். உடனே அப்துல்லாவை அப்பதவியில் இருந்து நீக்கி என்னை பொருளாளராக நியமிக்க வேண்டும் என தலைவி ராப் அவர்களுக்கு கோரிக்கை விடுக்கிறேன்.

    //

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்......
    ஆரம்பத்தில் இருந்தே என் பதவியைப் பறிப்பதில் குறியாக இருக்கும் ஜோசப் அண்ணனை கண்டிக்கும் விதத்தில் அனைவரும் அவருக்கு தல நடித்த கானல்நீர் பட டி.வி.டி யை அனுப்பி வைக்கும் போராட்டத்தைத் துவங்கும்படி தாழ்மையோடு கேட்டுக் கொள்கிறேன் :)))

    ReplyDelete
  75. வாங்க சர்வேசன்.

    அடுத்த அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரங்களை விமர்சித்து எழுதலாம் என்று நினைக்கிறேன் :) :)

    ReplyDelete
  76. //அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்......
    ஆரம்பத்தில் இருந்தே என் பதவியைப் பறிப்பதில் குறியாக இருக்கும் ஜோசப் அண்ணனை கண்டிக்கும் விதத்தில் அனைவரும் அவருக்கு தல நடித்த கானல்நீர் பட டி.வி.டி யை அனுப்பி வைக்கும் போராட்டத்தைத் துவங்கும்படி தாழ்மையோடு கேட்டுக் கொள்கிறேன் :)))//

    அதிலும் டிவிடியை விடாமல் பார்க்கனும், தலைவருடைய க்ளோசப் ஷாட்ஸ் எல்லாம் திரும்ப திரும்ப ரீவைண்ட் பண்ணிப்பார்க்கனும். :)

    ReplyDelete
  77. //ஆரம்பத்தில் இருந்தே என் பதவியைப் பறிப்பதில் குறியாக இருக்கும் ஜோசப் அண்ணனை கண்டிக்கும் விதத்தில் அனைவரும் அவருக்கு தல நடித்த கானல்நீர் பட டி.வி.டி யை அனுப்பி வைக்கும் போராட்டத்தைத் துவங்கும்படி தாழ்மையோடு கேட்டுக் கொள்கிறேன்//

    இந்த படத்துக்கு டிவிடி வேற இருக்கா? யாரு அந்த புண்ணியவான் டிவிடி கம்பெனி.

    ReplyDelete
  78. Kayal see this :-)

    http://www.youtube.com/watch?v=kgT7sbn6Mnw

    ReplyDelete
  79. நான் என் அசின் பத்தி கேட்டேன்னு உங்களுக்கே தெரியும்..

    அடிக்க எல்லாம் கூடாது இப்போவே சொல்லிட்டேன். :-)

    ReplyDelete
  80. இதனால தான் உங்களுக்கு அசின் ஞாபகம் வந்ததா? :) :)

    ReplyDelete
  81. yes :-)

    நெனைப்பு சரி தானே :-)

    ReplyDelete
  82. இந்த சீன்'எ இப்போ கூட பாத்திட்டு உங்களை தான் யோசிச்சுகிட்டு இருக்கேன்.. :-)

    அப்படியே இருக்குல்லே :-)

    ReplyDelete
  83. நடிகர் சூர்யாவையோ அல்லது சஞ்சய் ராமசாமியையோ நம்ம அலட்டல் அண்ணாசாமியால ஏணி வைத்தாலும் எட்ட முடியாது :)

    ReplyDelete
  84. //இந்த சீன்'எ இப்போ கூட பாத்திட்டு உங்களை தான் யோசிச்சுகிட்டு இருக்கேன்.. :-)

    அப்படியே இருக்குல்லே :-)//

    ஐயோ பாவம் சூர்யா LOL

    ReplyDelete
  85. சூர்யா பாத்து நீங்க பாவ படறீங்க

    நான் வருன் வந்து என்னை அடிக்க போறாருன்னு கவலை பட்டுகிட்டு இருக்கேன்

    கடைசி வரைக்கும் அந்த நடிகர் யாருன்னு சொல்லவே இல்லை நீங்க :( :(

    ReplyDelete
  86. வருண் எதுக்கு உங்களை அடிக்கப்போறார்?


    ரொம்ப வருத்தப்படறீங்க, சரி உங்களுக்கு ஈமெயிலில் தெரிவிக்கவா?

    ReplyDelete
  87. நிச்சயமா :-)

    friends.sk@gmail.com

    Danke Schoen :-)

    ReplyDelete
  88. //
    தனியே பயணிக்கும் போது, அந்நியர்களுடன் முக்கியமாக ஆண்களுடன் நான் அதிகம் பழகுவதில்லை. பாதுகாப்பு சம்மந்தமான கவலை தான் காரணம்.
    //

    //
    எனக்கு நிறைய ப்ரெண்ட்ஸ், நாமெல்லாம் ஜாலியா ஊர்சுற்றலாம்" என்று கடைசியாக ஒரு போடு போட்டார்.
    //

    உங்க ஜாக்கிரதை உணர்வு நல்லதே..

    ReplyDelete
  89. வாங்க வெண்பூ :)

    எஸ்கே

    நீங்களே வேற யாரையாவது கற்பனை பண்ணி டிஸபாயிண்ட் ஆனால் அதுக்கு நான் என்ன செய்வேன்? : ):) JK

    ReplyDelete
  90. நீங்களே அந்த நடிகரை ஃபேமஸ் ஆக்கிட்டிங்க :P

    ReplyDelete