Sunday, October 19, 2008

தாய் என்பவள் தெய்வம் போன்றவளா? (I)

ஜானகிராமன் கதைகள் பற்றி எழுத வேண்டும் என்று ஆசை. முதன்முதலில் நான் படித்த அவரின் எழுத்து அவரின் “அம்மா வந்தாள்” நாவல். அம்மா என்றால் அன்பு! அம்மா என்றால் தெய்வம்! தாயில் சிறந்த கோவில் இல்லை! இதுதான் நாம் அறிந்தது. எனக்குத்தெரிய சில நண்பர்கள் பலர் அம்மாவைப்பற்றி யாராவது தவறாக சொன்னால் கொலையே பண்ணுவார்கள் . ஆனால் “அம்மா வந்தாள்” கதையில் வரும் அப்பு வின் அம்மா, அலங்காரம் அந்த வகையை சேர்ந்தவளா?! அலங்காரம் என்கிற அம்மா நடத்தை சரி இல்லாதவள் போல சொல்லாமல் சொல்லி இருப்பார் ஜானகிராமன்.

அந்தக்கதையில்,

ஒரு நாள் அலங்காரத்தின் கணவர் 6 மகன்/மகள்களின் அப்பா, தன் மனைவியைப்பற்றி நினைத்துப்பார்ப்பார். அன்று தனியாக மொட்டைமாடியில் படுத்து இருப்பார். பழைய நினைவுகள்...அலங்காரத்துடன் தான் நடத்திய தாம்பத்ய உறவு, அனுபவித்த இன்பம் பற்றி நினைத்துப்பார்ப்பார்.

அதெல்லாம் அவருக்கு பழைய நடந்து முடிந்த கதை. இன்று அவருடன் அலங்காரம் தாம்பத்ய உறவு வைத்துக்கொள்வதில்லை. அவளுடன் உறவு வைத்துக்கொள்ளும்போதும் அவருக்கு அவள் புரியாத புதிராகத்தான் இருந்தாள். அலங்காரம் ஒரு சில நேரம்பேசுவது அவருக்கு புரியாது. அவளின் ஆசைகள், கனவுகள் இவரால் கொடுக்கமுடியாததாக இருக்கும். ஒவ்வொரு சமயம் அவளை தன்னால் பெண்டாள முடியுமா என்றுகூட அவருக்கே சந்தேகமாக இருப்பதுபோல் தோன்றும் அவருக்கு. இப்படி அவர் மனைவி பற்றி யோசித்துக்கொண்டு இருக்கும்போது,

அலங்காரம்! பேரு வச்சிருக்காங்க பாரு! ஒரு விலைமாதுக்கு வைப்பது போல!

இப்படி எழுதி இருப்பார்! தன் மனைவியைப்பற்றி, ஒரு தாயை, கணவர் நினைப்பதாக! இந்த இடத்தில்தான் ஜானகிராமன் அலங்காரத்தின் நடத்தை பற்றி முதன் முதலில் கோடிட்டுக்காட்டுவார்.பிறகு அலங்காரம் பற்றி கொஞ்சம் கொஞ்சமாக சொல்வார்.


சரி, இந்த அம்மா வந்தாள் கதை இங்கேயே நிற்கட்டும். பிறகு தொடர்கிறேன்.

இப்பொழுது சில உண்மை நிகழ்வுகளை சொல்கிறேன்.

இந்த நாவலைப்படித்துமுடித்த பிறகு, இதைப்போல் ஒரு அம்மா கேரக்டரைப்பற்றி என் நெருங்கிய நண்பன் சீனிவாசனிடம் பேசினேன். நான் இந்தக்கதையால் பயங்கரமாக பாதிக்கப்பட்டேன். இது போல் ஒரு தாயைப்பார்க்கும்போது எனக்கு மிகவும் எரிச்சலாகவும், சங்கடமாகவும், கவலையாகவும் குழப்பமாகவும் இருந்தது. நான் என் நண்பனிடம் பேசும்போது ஒன்று புரிந்தது. நாங்கள் இருவரும் இரண்டுவிதமான அம்மாக்களின் மகன்கள் என்று.

நான் பேசும்போது என் நண்பன் சீனிவாசன் என்னைப்பார்த்து சிரித்தான்.அவனுடைய பர்சனல் லைஃப் பற்றி எனக்கு அன்று வரை சரியாகத் தெரியாது. அவன் சொன்னான், கதையில் வரும் அலங்காரம் அவனுக்கு வித்தியாசமான அம்மாவாக தோனவில்லை என்றான். அவன் அம்மா கதையில் வரும் அலங்காரத்தைவிட ஒரு “புதிரான அம்மா” என்றான். அவனால் இதை ஈசியாக ஜீரணித்துக்கொள்ள முடிகிறது என்றும், அவன் அம்மா கொஞ்சம் ஒரு புரியாத புதிர் என்றும் சொன்னான். எனக்கு அவன் சொல்வதை நம்பவே முடியவில்லை. அவன் ஒரு ஆர்தோடக்ஸ் குடும்பத்தில் இருந்து வருபவன். நல்ல படித்த குடும்பத்தில் இருந்து வந்தவன் . அவன் அப்பா ஒரு பெரிய ப்ரீமியர் இண்ஸ்டிடூட்டில் பெரிய பேராசிரியர். மேலும் அவன் பயங்கரமான அறிவாளி. ஆனால் கொஞ்சம் “எக்சண்ட்ரிக் கேரக்டர்” என்று வேண்டுமானால் சொல்லலாம். ஒரு மாதிரியான ஜீனியஸ். மிகவும் திறந்த மனப்பாங்கு உள்ளவன்.

“என்னடா சொல்ற!!!” என்றேன் மிகவும் குழப்பத்துடன்.

அம்மா என்கிற ஒருவர் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு முக்கியமானவர் மதிக்கத்தக்கவர் என்று தெரியும் எனக்கு. என் தாயைப்போலவே எல்லோர் அம்மாவையும் மதிக்கத் தெரிந்தவன் நான். ஆனால் அக்கதையைப்பற்றிப்பேசும்போது அவனே அப்படி சொல்வதால்,மறுபடியும் கேட்டேன்.

“அப்படித்தான்்” என்றான் புன்னகையுடன்.

“ஜோக் அடிக்கிறயா? என்றேன் மறுபடியும் அவனிடம்.

“இல்லைடா சீரியஸாத்தான் சொல்றேன்” என்று அவர்களைப்பற்றி சொன்னான்.

அவன் தந்தைக்கு கல்யாணம் ஆன புதிதிலேயே அவன் அம்மா மிகவும் வித்தியாசமாக இருப்பதாக அவன் அப்பா ஃபீல் பண்ணினாங்களாம்.ஆனால், போகப் போக சரியாகிவிடும் என்று தொடர்ந்தாராம் உறவையும், வாழ்க்கையையும். இரண்டு குழந்தைகள் பிறந்த பின்பும் (என் நண்பனும் அவன் அண்னனும்) அதே நிலைதானாம்.கடைசியில் அப்பா அம்மா பிரிந்து வாழ வேண்டிய சூழ்நிலை தவிர்க்க முடியாததாகிவிட்டதாம். அதனால் கதையில் வரும் அலங்காரம் அவனுக்கு வித்தியாசமான அம்மாவாக தோனவில்லை. அவன் அம்மா அலங்காரத்தைவிட ஒரு “காம்ளிக்கேட்டெட்” அம்மா என்றான்.

மேலும் அவனிடம் இருந்து தெரிந்து கொண்டது.

அவன் அம்மாவுக்கு மந்திரம் மாயம் இதிலெல்லாம் நம்பிக்கை உண்டாம். என் நண்பனுக்கும் அதிலெல்லாம் நம்பிக்கை உண்டு என்று சொல்லியதைக்கேட்டு ஆச்சர்யப்பட்டேன். அவன் அம்மாவுக்கு ஒரு மாதிரியான சாமியார் கல்ட் க்ரூப்பில் பழக்கம் இருப்பதாகவும் சொன்னான். நான் சென்னையில் வளர்ந்த ஒரு நண்பனைப்பற்றிதான் சொல்கிறேன். சாதாரண கடவுள் நம்பிக்கையை நான் இங்கு சொல்லவில்லை. ஒரு மாதிரியான “கல்ட் க்ரூப்” நான் சொல்வது. அவன் அம்மாவை அவன் அப்பாவாலேயே புரிந்துகொள்ள முடியவில்லையாம். தற்போது அவன் அம்மா, அப்பாவுடனும் இவனுடனும் சேர்ந்து வாழவில்லை என்றும்.அப்பொழுதுதான் என்னிடம் சொன்னான்.

அவன் அண்ணா மட்டும் அவன் அம்மாவுடனசேர்ந்து வாழ்வதாகவும்,அவன் அவர்களிடம் இருப்பதால் அண்ணனால் இவனைப்போல் சரியாக படிக்க முடியவில்லை என்றும். அவன் அம்மா அவன் மூத்த பையன் என்பதால் எப்படியோ வசியம் பண்ணி தன் தந்தையிடம் இருந்து பிரித்து விட்டதாகவும் சொன்னான். அதைவிட கொடுமை என்னவென்றால், என் நண்பன் அவன் அம்மாவை எதற்காவது பார்க்கப்போகும்போது அவர்கள் கொடுக்கும் காஃபி டீயைக்கூட அவன் குடிக்க பயப்படுவேன் என்றான். ஏதாவது மந்திரம்,பொடி போட்டு இவனையும் அவன் அண்ணனை செய்ததுபோல் மயக்கி தன்னுடன் அழைத்துக்கொள்வார்கள் என்ற பயம் என்றான்.

அம்மாவைப்பார்த்து அவர்கள் கொடுக்கும் காஃபியைக்குடிக்க பயப்படும் ஒரு மகனை முதன் முதலில் சந்தித்தேன்.

அவன் சொன்னதையெல்லாம் இன்னும் நெருங்கிய நண்பர்களிடம் சொல்லி சொல்லி ஆச்சர்யப்படுவேன்.

-தொடரும்

29 comments:

  1. பயங்கர ஒரு கடினமான தலைப்பு. அனுபவிக்காத விடயம். அதுனாலயே நிறைய பதில் இல்லை போல இருக்கு.

    என்னை போலவே நிறைய பேருக்கு என்ன சொல்லுறதுன்னு தெரியலைன்னு நினைக்குறேன். :-)

    தொடருங்கள்.

    ReplyDelete
  2. உண்மைதான் எஸ் கே, இதைப்பற்றி பேசுவதே கஷ்டம்தான்! :(

    ReplyDelete
  3. கொஞ்சம் கஷ்டமான விஷயத்த அழகா எழுதி இருக்கீங்க வருண். யாரும் பேச விருப்பப்படாத டாபிக்கும் கூட.

    சரி. நான் புதுசா ப்ளாக் எழுத ஆரம்பிச்சு இருக்கேன். முடிஞ்சா வந்துட்டு போங்க.

    thodar.blogspot.com

    ReplyDelete
  4. மணி:

    நான் உங்க புது ப்ளாக் வந்து ஒரு ஹலோ சொல்லி விட்டேன் :)

    ReplyDelete
  5. தி.ஜா.வை நான் படித்ததில்லை என்றாலும் அவர் தமிழின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவர் என்று பலரும் சொல்லக் கேள்வி..

    அவரது மரப்பசு ஒரு முறை கிடைத்தது..ஆனால், அப்போது அதைப் படிக்கும் அளவுக்கு பக்குவமில்லை.(இப்ப மட்டும் என்ன வாழுதாம், அதே கதை தான்!)

    ஆனால், நீங்கள் சொல்லியிருக்கும் வித்தியாசமான அம்மாக்கள் எனக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை..அவர்கள் வித்தியாசமாக தோன்றுவதற்கு காரணமே, அவர்கள் தமிழ்/இந்திய‌ கலாச்சாரத்தின் எல்லைக் கோட்டை தாண்டி விட்டவர்கள் என்பதால் தான் என்பது என் எண்ணம்.

    கலாச்சாரத்தை தாண்டியும் சில மனிதர்கள் இருக்கிறார்கள்..நானும் பலரை பார்த்திருக்கிறேன் என்பதால் எனக்கு என்னவோ ஆச்சரியமே இல்லை..

    முடிந்தால் நீங்கள் சொல்லியிருக்கும் அம்மா வந்தாளை படித்து விட்டு சொல்கிறேன்.

    ReplyDelete
  6. பார்த்தேன் வருன். தேங்க்ஸ்.
    *********
    அவர்கள் வித்தியாசமாக தோன்றுவதற்கு காரணமே, அவர்கள் தமிழ்/இந்திய‌ கலாச்சாரத்தின் எல்லைக் கோட்டை தாண்டி விட்டவர்கள் என்பதால் தான் என்பது என் எண்ணம்.
    **********

    உலக அளவிலயே என்பதே சரியாக இருக்கும் அது சரி.

    ReplyDelete
  7. //
    மணிகண்டன் said...
    பார்த்தேன் வருன். தேங்க்ஸ்.
    *********
    அவர்கள் வித்தியாசமாக தோன்றுவதற்கு காரணமே, அவர்கள் தமிழ்/இந்திய‌ கலாச்சாரத்தின் எல்லைக் கோட்டை தாண்டி விட்டவர்கள் என்பதால் தான் என்பது என் எண்ணம்.
    **********

    உலக அளவிலயே என்பதே சரியாக இருக்கும் அது சரி.

    //

    ரொம்ப கரெக்ட் மணிகண்டன்..

    எந்த கலாச்சாரத்திலும் பெரும்பான்மை மக்களை பின்பற்றாதவர்கள் வித்தியாசமாக பார்க்கப்படுவார்கள் என்பது உண்மையே..

    ஆனால், வருண் இங்கு தி.ஜா. பற்றியும் தமிழ் நாட்டில் நடக்கும் அவரது கதையை பற்றியும் சொல்லியிருப்பதால், அந்த கதாபாத்திரங்களை கட்டுப்படுத்தும் கலாச்சாரம் பற்றி சொல்ல நேர்ந்தது!

    ReplyDelete
  8. அது சரி!

    மரப்பசுவும் நல்ல நாவல்தான். ஆனால் அதில் ஒரு கல்யாணம் ஆகாத சிங்கிளைப் பற்றி கதை சுற்றுவதால், கொஞ்சம் ஈசியா எடுத்துக்கலாம்.

    "அம்மா வந்தாள்" நான் படிக்கும்போது கண்சர்வேடிவ் சூழலில் வளர்ந்த எனக்கு பெரிய ஷாக்க்காக இருந்தது. ஆனால் இன்றைக்கு அதை டிஸ்கஸ் பண்ணுமளவுக்கு லிபெரல் ஆகிவிட்டேன் போலும். :-)

    ஆமாம், தி ஜா ரா புத்தகங்கள் படிக்க நிச்சயம் மனப்பக்குவம் தேவைதான். அடல்ட்டரி பற்றி நிறைய எழுதினாலும், அப்படி செய்பவர்கள் ஒரு "கில்ட்டி ஃபீலிங்" லயே இருப்பதாகவும், அப்படி செய்வதால் சந்தோஷமாக மனநிம்மதியுடன் வாழமுடியாது என்று அவர் சொல்லாமல் சொல்லி இருப்பதுபோல் தோனும் எனக்கு!

    ReplyDelete
  9. பொதுவாக தமிழ் அம்மாக்கள் மிகவும் அன்பானவர்கள்தான். அம்மாக்கள் கொஞ்சம் அதீத கடவுள் நம்பிக்கை, சாமியார் நம்பிக்கை, ஜோசிய நம்பிக்கை உடையவர்களாய் இருப்பது ஒன்றும் புதிதல்ல. அவருடைய பெற்றோர் ஏதாவது ஒரு காரணத்தால் பிரிந்த பின்னர், தந்தை அளவுக்கு வசதியும் வாய்ப்புகளும் இல்லாமலிருப்பதால் தாய்க்கு தன்னுடன் உள்ள பிள்ளைக்கு நிறைய கல்வி வசதி தர இயலாமல் போயிருக்கலாம். தந்தை அவரை வளர்த்த போது, தன்னை விட்டு போய் விடக்கூடாது என்பதற்காக, அம்மாவைப் பற்றி 'அவர்கள் வசியம் செய்து விடுவார்கள். எது கொடுத்தாலும சாப்பிட்டு விடாதே' என்று சொல்லியே வளர்த்திருக்கலாம். அது அவருக்குள் தங்கி விட்டிருக்கலாம்.

    இதெல்லாம் நான் நினைப்பதுதான். இது உண்மையாயிருந்து விட்டால்... எனவே நல்லதே நினைக்கிற ஒருவரைக் கொண்டு அவர் அம்மா தரப்பை அவர் கேட்டால் அவர் எண்ணம் கண்டிப்பாய் மாறி விடும். ஏனெனில் பொதுவாக தமிழ் அம்மாக்கள் அனைவரும் மிக மிக அன்பானவர்கள். குறிப்பாக தம் பிள்ளைகளிடம்.

    கதைகளும் நாடகங்களும் சில விடயங்களை மித மிஞ்சிய மோசமாக extreme ஆக சித்தரிக்கின்றன.

    ReplyDelete
  10. ***இதெல்லாம் நான் நினைப்பதுதான். இது உண்மையாயிருந்து விட்டால்...***

    உண்மையா இருக்கனும்! உண்மையா இருந்தால் நானும் சந்தோஷப்படுவேன். திரு. சுல்தான்! :-)

    ReplyDelete
  11. //
    வருண் said...

    ஆமாம், தி ஜா ரா புத்தகங்கள் படிக்க நிச்சயம் மனப்பக்குவம் தேவைதான். அடல்ட்டரி பற்றி நிறைய எழுதினாலும், அப்படி செய்பவர்கள் ஒரு "கில்ட்டி ஃபீலிங்" லயே இருப்பதாகவும், அப்படி செய்வதால் சந்தோஷமாக மனநிம்மதியுடன் வாழமுடியாது என்று அவர் சொல்லாமல் சொல்லி இருப்பதுபோல் தோனும் எனக்கு!

    //

    அப்படியா சொல்லியிருக்காரு?? அப்ப படிச்சே ஆகணுமே!

    அவரு என்ன சொல்லிருக்காரு, எப்படி சொல்லிருக்காருன்னு தெரில...ஆனா, கலாச்சார கோடுகளை கடக்கிறவங்க கொஞ்சம் அன் கம்ஃஃபர்டபிளா ஃபீல் பண்றது உண்மை..

    ReplyDelete
  12. ***அப்படியா சொல்லியிருக்காரு?? அப்ப படிச்சே ஆகணுமே!***

    அது சரி!

    அவர் அப்படி சொல்லியிருபதுபோல் எனக்கு தோனும். என்னால் அப்படி வாதிட முடியும்.

    மரப்பசு படிச்சீங்கனா தெரியும். அம்மனி (ஹீரோயின்) ஆடி அடங்கியபிறகு, அதாவது இளமை போனவுடன் ரொம்ப பயப்பட ஆரம்பித்துவிடுவாள்.

    மேலும் மரகதம் என்று ஒரு வேலைக்காரி இருப்பாள். அவள், இவளைப்போல் அல்லாமல் சிம்பிள் வழ்க்கை வாழுவாள். கணவன் பிள்ளைகள் என்று. அவளை அம்மனிக்கு ரொம்ப பிடிக்கும்.

    ஜானிகிராமன் அவர் கதைகள் மூலம் மாரல்ஸ் டீச் பண்ணுவதில்லை. அவர் கதையில் புதைந்து கிடக்கும் அதை நாம் தான் தேடி எடுத்துக்கனும் :)

    ReplyDelete
  13. //
    வருண் said...
    ***அப்படியா சொல்லியிருக்காரு?? அப்ப படிச்சே ஆகணுமே!***

    அது சரி!

    அவர் அப்படி சொல்லியிருபதுபோல் எனக்கு தோனும். என்னால் அப்படி வாதிட முடியும்.
    //

    என்னால அப்பிடி வாதிட முடியாது...ஏன்னா நான் தான் படிக்கவே இல்லியே :0)

    ரெண்டு பேருக்கும் எதுனா தெரிஞ்சா தான் வாதிட முடியும்..எனக்கு எதுவுமே தெரியாதுங்கிறதுனால என்னால வாதிட முடியாது..அதனால வாதமெல்லாம் வேணாம்..தோப்போம்னு தெரிஞ்சிட்டா நான் எதுலயும் கலந்துக்கிறதுல்ல :0)

    //
    மரப்பசு படிச்சீங்கனா தெரியும். அம்மனி (ஹீரோயின்) ஆடி அடங்கியபிறகு, அதாவது இளமை போனவுடன் ரொம்ப பயப்பட ஆரம்பித்துவிடுவாள்.

    மேலும் மரகதம் என்று ஒரு வேலைக்காரி இருப்பாள். அவள், இவளைப்போல் அல்லாமல் சிம்பிள் வழ்க்கை வாழுவாள். கணவன் பிள்ளைகள் என்று. அவளை அம்மனிக்கு ரொம்ப பிடிக்கும்.
    //

    அம்மணின்ற பேரு மட்டும் ஞாபகம் வருது..ஏன்னா, நான் அதுக்கு முன்னாடி அம்மணின்ற பேரை கேள்விப்பட்டதே இல்ல!

    //
    ஜானிகிராமன் அவர் கதைகள் மூலம் மாரல்ஸ் டீச் பண்ணுவதில்லை. அவர் கதையில் புதைந்து கிடக்கும் அதை நாம் தான் தேடி எடுத்துக்கனும் :)

    //

    எது மாரல்ஸ் அப்படிங்கிற அடிப்படையிலேயே கேள்வி இருக்கும் போது தேடுவது ரொம்ப கஷ்டம்..

    ஆனா, சான்ஸ் கெடைச்சா நிச்சயம் அம்மா வந்தாள், மரப்பசு படிச்சிட்டு வர்றேன்.. :0)

    ReplyDelete
  14. நமக்குப் போதிக்கப்பட்டு இருப்பதை விட்டு விலகி, நம்மைச் சுற்றியுள்ள மக்களின் வாழ்க்கையைக் கொஞ்சம் கூர்ந்து பாருங்கள். அநேக விசித்திரங்கள் இருக்கு.

    ReplyDelete
  15. //
    துளசி கோபால் said...
    நமக்குப் போதிக்கப்பட்டு இருப்பதை விட்டு விலகி, நம்மைச் சுற்றியுள்ள மக்களின் வாழ்க்கையைக் கொஞ்சம் கூர்ந்து பாருங்கள். அநேக விசித்திரங்கள் இருக்கு.

    //

    இதை நான் அப்படியே வழிமொழிகிறேன்!!!

    ReplyDelete
  16. சிக்கலான விஷயம் நல்லா எழுதியிருக்கீங்க!

    தி. ஜா. ரா. படிச்சி ரொம்ப நாளாயிடுச்சி. உங்க பதிவு பார்த்ததும் திரும்ப படிக்கணும் போல இருக்கு. கோபாலபுரம் ஈஸ்வரி லெண்டிங் லைப்ரரி ஞாபகம் வருது. என் ஞாபகத்துல தி. ஜா. ரா ரொம்ப வித்தியாசமான பாத்திரங்களை ரொம்ப இயல்பா objective கண்ணோட்டத்துல எழுதி இருப்பார். அதனால் அந்த பாத்திரங்களின் தன்மையை பிடிக்காவிட்டாலும் கூட, புரிந்து கொள்ள முடியும். You cant hate someone if you really get to understand that person என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு. அதற்கு அவர் எழுத்துக்களை சின்ன வயதிலேயே படிக்க நேர்ந்ததும் காரணமாக இருக்கலாம்.

    ஒவ்வொருவரும் ஒரு விதம். என்ன தனியாளாக இருந்துவிட்டால் அவர்கள் எப்படி இருந்தாலும் மற்றவர்களுக்கு பாதிப்பு இல்லை. தனக்கென குடும்பம், குழந்தை என்றாகி விட்டால், தன் நடத்தையும், அதன் பின்விளைவுகளும் சமூகத்தை சார்ந்தே இருக்கும், அது தன்னை சார்ந்தோரையும் பாதிக்கும் என்ற உணர்வு இருக்க வேண்டும்.

    உங்கள் நண்பரின் மன உளைச்சலும் அதன் விளைவுகளும் ம்ம் நினைத்தா கஷ்டமாக இருக்கு. I hope he gets through it.

    ReplyDelete
  17. //அம்மா வந்தாள்" நான் படிக்கும்போது கண்சர்வேடிவ் சூழலில் வளர்ந்த எனக்கு பெரிய ஷாக்க்காக இருந்தது. ஆனால் இன்றைக்கு அதை டிஸ்கஸ் பண்ணுமளவுக்கு லிபெரல் ஆகிவிட்டேன் போலும். :-)

    ஆமாம், தி ஜா ரா புத்தகங்கள் படிக்க நிச்சயம் மனப்பக்குவம் தேவைதான். அடல்ட்டரி பற்றி நிறைய எழுதினாலும், அப்படி செய்பவர்கள் ஒரு "கில்ட்டி ஃபீலிங்" லயே இருப்பதாகவும், அப்படி செய்வதால் சந்தோஷமாக மனநிம்மதியுடன் வாழமுடியாது என்று அவர் சொல்லாமல் சொல்லி இருப்பதுபோல் தோனும் எனக்கு!//

    நீங்க சொல்றது ரொம்ப சரிங்க. அம்மணி, அலங்காரம், மோகமுள்ள வர பாபு, யமுனா, பாபு வீட்டுக்கு பக்கத்து வீட்டுல இருக்கற வயதானவரின் இரண்டாவது மனைவி, ஒரு சிறுகதையில வர டாக்டரின் மனைவி(கதை தலைப்பு மறந்து போச்சு) இவங்கல்லாம் மறக்கவே முடியாத பாத்திரங்கள்.

    ReplyDelete
  18. //ஒவ்வொருவரும் ஒரு விதம். என்ன தனியாளாக இருந்துவிட்டால் அவர்கள் எப்படி இருந்தாலும் மற்றவர்களுக்கு பாதிப்பு இல்லை. தனக்கென குடும்பம், குழந்தை என்றாகி விட்டால், தன் நடத்தையும், அதன் பின்விளைவுகளும் சமூகத்தை சார்ந்தே இருக்கும், அது தன்னை சார்ந்தோரையும் பாதிக்கும் என்ற உணர்வு இருக்க வேண்டும்.//

    சுந்தர்,
    ரொம்ப சரி.படிக்கும்போது 'அம்மா வந்தாள்' அலங்காரத்த என்னால ஜீரணிக்கவே முடியல. ஆனா, வருண் சொல்ற மாதிரி இப்ப அதிர்ச்சியெல்லாம் போயிடிச்சு. :-))

    ReplyDelete
  19. ***துளசி கோபால் said...
    நமக்குப் போதிக்கப்பட்டு இருப்பதை விட்டு விலகி, நம்மைச் சுற்றியுள்ள மக்களின் வாழ்க்கையைக் கொஞ்சம் கூர்ந்து பாருங்கள். அநேக விசித்திரங்கள் இருக்கு.***

    வாங்க டீச்சர்!

    எனக்கு நல்ல அம்மா, நான் அதிர்ஷ்டசாலி என்று எந்த வம்பிலும் மாட்டாமல், நண்பர் பிரச்சினையை கண்டுக்காமல் (நம் மனசை என்ன கஷ்டப்படுத்தனும்?) என்றும் போவதில் தவறில்லைதான்.

    ஆனால் சில துரஷ்டசாலிகளை கூர்ந்து நோக்கும்போது எல்லோருக்கும் தெய்வீகமான அம்மா கிடைப்பதில்லை என்று எண்ணி ஒரு நிமிடம் உலகம் பயங்கரமாகவும் இருக்கலாம் என்று அச்சுறுத்துகிறது :(

    ReplyDelete
  20. ***சுந்தர் said...
    உங்கள் நண்பரின் மன உளைச்சலும் அதன் விளைவுகளும் ம்ம் நினைத்தா கஷ்டமாக இருக்கு. I hope he gets through it.****

    அவர் ஏற்கனவே "எக்சண்ட்ரிக்" தான். என்னைவிட தைரியம் ஜாஸ்தியும்கூட. மனம் உளைந்தது நாந்தான், சுந்தர். அவன் உளைந்து உளைந்து ஒரு பக்குவமடைந்துவிட்டான் என்று நினைக்கிறேன்! :)

    It is nice talking to someone who read TJR novels Sundar! :)

    ReplyDelete
  21. ****சுந்தர்,
    ரொம்ப சரி.படிக்கும்போது 'அம்மா வந்தாள்' அலங்காரத்த என்னால ஜீரணிக்கவே முடியல. ஆனா, வருண் சொல்ற மாதிரி இப்ப அதிர்ச்சியெல்லாம் போயிடிச்சு. :-))***

    நானும் உங்களைப்போலவே அன்று ஃபீல் பண்ணினேன், இன்றும் பண்ணுகிறேன், அனானி அவர்களே! :)

    ReplyDelete
  22. anonymous aNNA: It is nice to know you have read most of his novels and formed a IIIr opinion as mine! :-)

    ReplyDelete
  23. இதை படித்து கொஞ்சம் குழம்பி விட்டேன். இப்படிப்பட்ட அம்மா இருப்பது சாத்தியம் என்றாலும் கற்பனை பண்ணிப்பார்க்க விரும்பவில்லை. :(

    தி.ஜா இதுவரை படித்ததில்லை.

    ReplyDelete
  24. கயல்:

    ஜானகி ராமனின் "அம்மா வந்தாள்" (நாவல்) அல்லது "வீடு" (சிறுகதை) அல்லது "தேடல்" (சிறுகதை) படித்து இருந்தால் நான் சொல்லியுள்ள மேட்டர் கொஞ்சம் கற்பனை பண்ணி பார்க்க முடியும்!

    ஒரு குடும்பத்தில் அப்பா செய்யும் தவறுகளை நாம் ஓரளவுக்கு பேசி தீர்க்க முடியும் ஆனால் அம்மா என்று வரும்போது, அது வேறதான்!

    அம்மா என்பது பெரிய மதிப்புக்குரிய "ரெஸ்பான்ஸிபிள்" தகுதி என்பது நம் கலாச்ச்சாரத்தில் இன்றும் உண்மைதான்!

    ஆண் பெண் சரி சமம் சமானம்தான்! ஆனால் இந்த மாதிரி விசயத்தில் அப்பா அம்மாவும் சமானம் இல்லை என்பதுதான் நமக்கு விளங்கும்!

    ReplyDelete
  25. //அவன் உளைந்து உளைந்து ஒரு பக்குவமடைந்துவிட்டான் என்று நினைக்கிறேன்! :)
    நல்லது. ஒரே மாதிரி அனுபவம் ஒருவரை மன நோயாளியாகவும் ஆக்கக்கூடும் இல்லை மன நல ஆலோசகராகவும் ஆக்கக்கூடும் இல்லையென்றால் ஒரு மனம் மரத்து போனவராகவும் ஆக்க கூடும். எனக்கு ஒரு புக் ஞாபகம் வருது. முடிஞ்சா இந்த புக் ( 'Man's search for meaning' by Viktor E Frankyl - his thinking is considered next generational to Freud's) தேடி படியுங்க. உங்க லோக்கல் லைப்ரரில/அமேசான்ல/நம்ம ஊர் ஹிக்கின்பாதம்ஸ்ல நிச்சயம் கிடைக்கும். இந்த புக்ல மனித மனசுக்கு எவ்வளவு ஆழம், எவ்வளவு அழுத்தம்ன்னு எளிய நடையில அலசி இருப்பார்.

    //It is nice talking to someone who read TJR novels Sundar! :)
    likewise. thanks for starting it up. என்ன TJR subjects எல்லாம் கொஞ்சம் 70-80's தீம் என்பதாலேயும், ஆங்கிலத்தில படிக்க ஆரம்பிச்சி அப்புறம், இன்டர்நெட் மட்டும் என்று ஆர்வம் மாறிடிச்சி. திரும்பவும் TJR தேடி படிக்கணும் - புதுசா இன்னும் கொஞ்சம் புரியும்ன்னு நினைக்கிறேன்..

    ReplyDelete
  26. // கயல்விழி said...
    தி.ஜா இதுவரை படித்ததில்லை.//

    உங்களுக்கு பிடிக்கும்ன்னு நினைக்கிறேன். it'd help to understand human behaviour better.

    ReplyDelete
  27. //தாய் என்பவள் தெய்வம் போன்றவளா? //

    இது அவரவர்க்கு கிடைத்திருக்கும் அம்மாவை பொறுத்தது

    ReplyDelete
  28. கிரி said...
    ***//தாய் என்பவள் தெய்வம் போன்றவளா? //

    இது அவரவர்க்கு கிடைத்திருக்கும் அம்மாவை பொறுத்தது

    22 October, 2008 8:29 PM***

    வாங்க கிரி! :-)

    உங்களுக்கு, சூப்பர் ஸ்டார் பாட்டு அம்மா என்றழைக்காத உயிரில்லையே அம்மாவை வணங்காது உயர்வில்லையே பாடல் ஞாபகம் வருமே?

    இல்லையா? :-)

    ReplyDelete
  29. சுந்தர்:

    நீங்கள் சொல்வது சரிதான் கயலுக்கு ஜானகிராமன் கதைகள் பிடிக்க நிறைய வாய்ப்பிருக்கு!

    அந்த ஆஸ்ட்ரியன் (?) எழுத்தாளர் புக் ( 'Man's search for meaning' by Viktor E Frankyl - ) கிடைக்கும்னுதான் நினைக்கிறேன்.

    படித்துவிட்டு சொல்றேன் :-)

    ReplyDelete