Thursday, October 16, 2008

காதல் கல்வெட்டு-14

இருவரும் கோயிலுக்கு உள்ளே சென்றார்கள். அந்த கோயில் நுழைவாயில் பேஸ்மெண்ட்ல இருந்தது. அந்தக் கோயிலில் கிழே பிரசாதம் (புளி சாதம், தயிர் சாதம், மசால் வடை) எல்லாம் விற்பார்கள். மாலையாகிவிட்டதால் இந்நேரம் விற்பதில்லை. கோயில் மேலே இருந்தது. கோயில் பிரஹாரத்திற்கு படியேறிச்செல்ல வேண்டும். படியேறி கோயில் மேலே சென்றால் எல்லா கடவுள்களும் அங்கே இருப்பார்கள். எல்லா கடவுளுக்கும் நடுநாயகமாக நாராயணன் (வெங்கடாஜலபதி) இருப்பார்.

மேலே படியேறும்போது, கயல், வருணை உரசியப்படி நடந்தாள்.

"கயல்! நீ கொஞ்சம் இடம் விட்டு நடக்கறியா, ப்ளீஸ்?!"

"அதென்ன வருண்? ஏன்?" என்றாள் மெல்லிய குரலில்.

"அது அப்படித்தான். என்னால் கோயில்ல சாமி கும்பிடுவதில் கான்செண்ட்ரேட் பண்ணமுடியாது. அப்புறம் தேவையில்லாத நினைவுகள் மனதில் இருக்கும். இதுக்குத்தான் நான் கோயிலுக்கே வருவதில்லை!"

"இதென்ன ஜோக்கா? நிஜம்மாத்தான் சொல்றீங்களா?"

"இல்லை கயல், சீரியஸாத்தான் சொல்றேன். கோயிலில் சாமி கும்பிட வரும்போது என்னை அழகான பெண்கள் டிஸ்ட்ராக்ட் பண்ணுவதுண்டு. சாமி கும்பிடுவதைவிட அவர்களை வேடிக்கைப்பார்த்தத்தான் தோனும். சாமி கும்பிடுவதைவிட்டுவிட்டு இப்படி மனம் அலைவதால் ரொம்ப கில்ட்டியா இருக்கும், கயல். அதனாலும் கோயிலுக்கு தேவை இல்லாமல் வருவதில்லை!"

"இப்போ நான் உங்களை டிஸ்ட்ராக்ட் பண்ணினேனா?"

"ஆமா! நீ இல்லை. சரி இதைப்பற்றி அப்புறம் பேசலாமே, ப்ளீஸ்?"

"சரி எனக்குப்புரியுது. வாங்க!" என்று புன்னகையுடன்.

வேண்டுமென்றே அவன் வலது கரத்தின் விரல்களுடன் தன் இடதுகரத்தைக் கோர்த்துக்கொண்டு மேலே நடந்தாள், கயல். கோயில் உள்ளே நுழைந்தவுடன் முன்னால் ஒரு டேபிளில் உட்கார்ந்து இருந்தவரிடம் அர்ச்சனைக்கு தேவையான பாக்கேஜ் வாங்கிக்கொண்டு நேராக பிரஹாரம் சென்றார்கள். அங்கே இருந்த நடுத்தர வயது அர்ச்சகரிடம் அர்ச்சனைத்தட்டைக் கொடுத்தாள், கயல்.

அவர், "யார் பெயருக்கு அர்ச்சனை? நட்சத்திரம் என்னம்மா?" என்று கேட்டார்.

கயல், அம்மா பேரும் நட்சத்திரமும் சொன்னாள். அர்ச்சகர், சமஸ்கிரத்தில் மந்திரங்கள் சொல்லி அம்மா பெயருக்கு அர்ச்சனை செய்தார். வருண், தன் ஆசைகளையெல்லாம் நிறைவேற்ற வேண்ட முயற்சி செய்து இந்த முறையும் தோல்வியுற்றான். அது அவனுக்கு அர்த்தமற்றதாக தோன்றியது என்பதால் தன் தோல்வியை ஒத்துக்கொண்டு பேசாமல் அந்த சிலையில் இருந்த ஆடை ஆபரனங்களை வேடிக்கைப்பார்த்தான்.

பூசாரி, அர்ச்சனையை முடித்துவிட்டு, தீபாதரணை காட்டிவிட்டு, பிரசாதம் எல்லாம் கொடுத்தார். அவர் தட்டில் தட்சனை வைத்துவிட்டு, ஒரு முறை எல்லா சாமிகளையும் சுற்றி வணங்கிவிட்டு, கோயில் நடுவில் வந்து தரையில் அமர்ந்தான், வருண். கோயிலுக்கு வருவதிலேயே, அவனுக்கு அங்கே கொஞ்ச நேரம் அமைதியாக அந்த குளிர்தரையில் அமர்ந்து இருப்பதுதான் அவனுக்கு ரொம்பப்பிடித்த விசயம்.

அவன் அருகில் வந்து அமர்ந்த, கயல், "சாமியிடம் என்ன வேண்டினீர்கள், வருண்?"

"அதுவா? "உங்க அம்மாவுக்கு அடிக்கடி பொறந்தநாள் வரனும். அடிக்கடி கோயிலுக்கு வந்து அவங்க பேருக்கு அர்ச்சனை செய்கிற சாக்கை வைத்து உன்னோட சேர்ந்து கோயிலில் சுத்தனும்னு வேண்ட முயற்சி செய்தேன். ஆனால் இதற்காக கடவுளிடம் வேண்டுவதெல்லாம் எனக்கு அர்த்தமில்லாமல் தோனுச்சு, அதனால் விட்டுவிட்டேன்"

"என்னோட சேர்ந்து நேரம் செலவழிப்பது உண்மையிலேயே பிடிக்குதா வருண்?" என்ற கயல், அவன் வலதுகரத்தை தன் மடியில் எடுத்து வைத்து தன் கரத்தால் அழுத்திக் கொண்டே கேட்டாள்.

"உண்மையிலேயே நல்லாயிருக்கு, கயல், உன்னோட இருக்கிற கொஞ்ச நேரம்" என்றான் வருண் அவளை ஆழமாகப்பார்த்துக்கொண்டு. கொஞ்ச நேரம் இரண்டு பேருமே பேசாமல் மெளனமாக இருந்தார்கள். சில நேரம் மெளனத்தை விட வீரியமிக்க மொழி இருப்பதில்லை.

"சரி வா, புறப்படுவோமா, கயல்?"

"வெளியில் அந்த மரத்தடியில் கொஞ்சம் நேரம் உட்கார்ந்து இருந்துவிட்டுப் போவோமா?"

"சரி, வா, அந்த ஸ்டோன் பென்ச்ல உட்காரலாம்".

அங்கே மரத்தடி நிழலில் ஒரு ஸ்டோன் பென்ச் இருந்தது. அதில் அமர்ந்தான் வருண். அவன் அருகில் அமர்ந்தாள் கயல். அவள் மனது ஒரு மாதிரியாக இருந்தது. அம்மாவைப்பற்றி அர்ச்சனை செய்யும்போது மட்டும் ஒரு நிமிடம் நினைத்தாள். கோவிலில் வருண் சொன்னது அவளுக்கு மனதில் எதிரொலித்துக்கொண்டே இருந்தது.

"அம்மாவை கால் பண்ணி விஷ் பண்ணியாச்சா, கயல்?" என்று அமைதியைக் கலைத்தான், வருண்.

"இப்போ கூப்பிடவா வருண், இஃப் யு டோண்ட் மைண்ட்?"

"கூப்பிடு கயல்"

"ஹல்லோ"

"ஹாப்பி பர்த்டே அம்மா!"

"கயலா? அம்மா பிறந்தநாளை மறக்காமல் கூப்பிட்டுவிட்ட பாப்பா!"

"கோயிலுக்கு வந்து உன் பேருக்கு ஒரு அர்ச்சனை செய்துவிட்டு, கோயில் வெளியே இருந்து கால் பண்றேன்"

"அப்படியா? நீ மட்டும் தனியாகவா வந்த, பாப்பா?"

"இல்லைம்மா, ஃப்ரெண்டு ஒருத்தரோட வந்தேன். அவரிடம் ஒரு வார்த்தை பேசுறியா?"

"வேணாம்டி. உன் ஃப்ரெண்ட் பேர் என்ன?"

"வருண், அம்மா. கொடுக்கிறேன் பேசு" என்று வருணிடம் கொடுத்தாள்.

"ஹாப்பி பர்த்டே ஆண்ட்டி"

"தேங்க்ஸ்"

"ஆண்ட்டி! உங்க மேலே கயல் எவ்ளோ உயிரா இருக்கா தெரியுமா ஆண்ட்டி? ஆமா நீங்களும் அவள் பிறந்த நாளுக்கு நீங்க கோயிலுக்கு போய், கடவுளிடம் அவளுக்கு நல்ல புத்தி கொடுக்க வேண்டிக்குவீங்களா, ஆண்ட்டி?"

"இப்போ எனக்கு நல்ல புத்தி இல்லையா? கொழுப்புத்தானே உங்களுக்கு?"

"ஆமாம். நானும் கோயிலுக்கு போய் அவள் பெயருக்கு அர்ச்சனை பண்ணுவேன்"

"சரி ஆண்ட்டி, உங்களோட பேசியதில் மகிழ்ச்சி" என்று கயலிடம் கொடுத்தான்.

"யார்டி உன் ஃப்ரெண்டு?"

"ஏன்மா? அவர் பெயர் வருண். சொன்னேன் இல்லையா?"

"இல்லை, நீ இவரைப்பற்றி இதுவரை எதுவுமே சொன்னதே இல்லையே?"

"இப்போத்தான் சொல்லிட்டேன் இல்லை? சரிம்மா உன்னை விஷ் பண்ணத்தான் கூப்பிட்டேன், வச்சுடுறேன்" என்று முடித்தாள்.

"என்ன அதுக்குள்ளே பேசி முடிச்சுட்ட, கயல்?"

"ஏதாவது ஆரம்பித்துவிடுவார்கள், பாவம் நீங்கள்! அதான்"

"ஹேய் அடுத்தவாரம் என் வீட்டிற்கு வர்றியா?"

"எதுக்கு டின்னருக்கா வருண்?"

"அதெல்லாம் வேணாம். டீ மட்டும் தருவேன், வர்றியா?"

"இதென்ன கேள்வி? கட்டாயம் வர்றேன்"

"இல்ல, கொஞ்ச நாள்தான் பழக்கம். ஒருவேளை இவனொரு சைக்கோவா இருந்தால் என்ன பண்றதுனு, பயம்மா இல்லை?'

"நீங்கதான் பயப்படனும். எனக்கு உங்களிடம் பயம் எதுவும் இல்லை!"

"சரி போகலாமா, கயல்?"

"ஏன் என்னோட இருப்பது போர் அடிக்குதா?"

"இல்லை நேரம் ஆச்சு இல்லையா?'

இருவரும் எழுந்து காரில் அமர்ந்தார்கள். கயல், காரை வருண் வீடு நோக்கி ஓட்டிச்சென்றாள். அவளுக்கு எதுவும் பேசத்தோனவில்லை. வீடு வந்ததும், இறங்கிக்கொண்டான்.

"கவனமாக ட்ரைவ் பண்னு கயல், பை" என்றான்.

"குட் நைட் வருண்"

"அடுத்தவாரம் பார்ப்போம் என் வீட்டில், சரியா?"

"நிச்சயமா! பை வருண்"

அவள் கார் அவள் வீட்டைநோக்கி பயணித்தது

-தொடரும்

39 comments:

  1. /இருவரும் கோயிலுக்கு உள்ளே சென்றார்கள். /

    சாமி இருந்தாரா ஓடிட்டாரா?

    ReplyDelete
  2. //அவள் கார் அவள் வீட்டைநோக்கி பயணித்தது//

    ஆமை வேகத்தில்

    ReplyDelete
  3. //"கவனமாக ட்ரைவ் பண்னு கயல், பை" என்றான்.//

    பொய்,ஆண்கள் இப்படியெல்லாம் சொல்வார்களா என்ன ?

    ReplyDelete
  4. //மேலே படியேறும்போது, கயல், வருணை உரசியப்படி நடந்தாள்//

    வருண் கயலை என்றால் உண்மையாக இருக்ககூடும். கயல் எழுதியதை (கயல்,வருண்) இடம் மாற்றம் செய்து உள்ளது போல் தெரிகிறது

    உண்மையை சொல்லுங்க யாரு எழுதுனது.?

    ReplyDelete
  5. ****குடுகுடுப்பை said...
    /இருவரும் கோயிலுக்கு உள்ளே சென்றார்கள். /

    சாமி இருந்தாரா ஓடிட்டாரா?

    16 October, 2008 2:36 PM***

    சாமி மனதில் இருந்தால் கோயில் லயும் இருப்பாராம் :)

    ReplyDelete
  6. ***குடுகுடுப்பை said...
    //அவள் கார் அவள் வீட்டைநோக்கி பயணித்தது//

    ஆமை வேகத்தில்***

    ஆமா, அவளுக்கு வீட்டுக்கு போக இஷ்டமில்லை :)

    ReplyDelete
  7. ***குடுகுடுப்பை said...
    //"கவனமாக ட்ரைவ் பண்னு கயல், பை" என்றான்.//

    பொய்,ஆண்கள் இப்படியெல்லாம் சொல்வார்களா என்ன ?***

    போயும் போயும் இதைப்போய் பொய்னு சொல்றீங்களே! :)

    ReplyDelete
  8. ***குடுகுடுப்பை said...
    //மேலே படியேறும்போது, கயல், வருணை உரசியப்படி நடந்தாள்//

    வருண் கயலை என்றால் உண்மையாக இருக்ககூடும். கயல் எழுதியதை (கயல்,வருண்) இடம் மாற்றம் செய்து உள்ளது போல் தெரிகிறது

    உண்மையை சொல்லுங்க யாரு எழுதுனது.?****

    விழுந்து விழுந்து சிரிக்கிறேன் :)

    ReplyDelete
  9. காதல் கல்வெட்டு கல் வெட்டுகளில் பொறிக்க வேண்டியது. நல்லா இருக்கு

    ReplyDelete
  10. நன்றி நசரேயன்! :-)

    கூடிய சீக்கிரத்தில் இந்த தொடரை முடிக்கனும் :)

    ReplyDelete
  11. ஹாய் வருண்,

    திரும்ப செதுக்கியாச்சா?

    ReplyDelete
  12. ஆமா, ஆனால் நீ செதுக்கியதுனு சொல்றாரு குடுகுடுப்பை. :)

    ReplyDelete
  13. இல்லைங்க குடுகுடுப்பை. நல்லா கவனிச்சு பார்த்தீர்கள் என்றால் நான் காதலைப்பற்றி எல்லாம் ரொம்ப எழுதமாட்டேன். காதல் - கல்யாணம் இதில் எல்லாம் ரொம்ப நம்பிக்கை இல்லாதது தான் காரணம் :) காதல் பற்றி உருக்கமா எழுதுவது எப்போதுமே வருண் தான்.

    ReplyDelete
  14. //மேலே படியேறும்போது, கயல், வருணை உரசியப்படி நடந்தாள்//

    ஐயோ, விட்டால் Adam teasing-குக்காக என் மேல் போலீஸ் புகார் கூட கொடுப்பார்கள் போலிருக்கு, என்ன கொடுமை இது வருண்?

    ReplyDelete
  15. ***கயல்விழி said...
    காதல் - கல்யாணம் இதில் எல்லாம் ரொம்ப நம்பிக்கை இல்லாதது தான் காரணம் :) ***

    இப்படி சொல்ற ஒருத்தியை போய் காதலிக்கிறேன் பாரு, என்னை சொல்லனும் :-)

    ReplyDelete
  16. ***கயல்விழி said...
    //மேலே படியேறும்போது, கயல், வருணை உரசியப்படி நடந்தாள்//

    ஐயோ, விட்டால் Adam teasing-குக்காக என் மேல் போலீஸ் புகார் கூட கொடுப்பார்கள் போலிருக்கு, என்ன கொடுமை இது வருண்?***

    நான் பொலைட்டாத்தானே சொல்றேன்? என் கஷ்டம் எனக்கு! அதுக்கப்புறமும் கேக்குறியா?

    உன்னைச்சொல்லி குற்றமில்லை. உன் பொட்டென்ஷியல் உனக்கே தெரியலை, அதான்...! ;-)

    ReplyDelete
  17. Sorry, I forgot to add something. எனக்கு ட்ரடிஷனல் காதல் மற்றும் கல்யாணத்தில் நம்பிக்கை இல்லை என்றால் பொருத்தமாக இருக்கும்.

    ReplyDelete
  18. //இப்படி சொல்ற ஒருத்தியை போய் காதலிக்கிறேன் பாரு, என்னை சொல்லனும் :-)
    //

    Think about the positive side, atleast I don't lie :) :)

    ReplyDelete
  19. /*நன்றி நசரேயன்! :-)

    கூடிய சீக்கிரத்தில் இந்த தொடரை முடிக்கனும் :)

    */
    அப்ப சீக்கிரமா வருனுக்கும் கயலுக்கும் கல்யாணமா?:):)

    ReplyDelete
  20. ஓ ஓ நசரேயன்!

    கல்யாணத்திற்கு பின்னால்தானே காதல் ரொம்ப அதிகமாகும்?! :)

    அப்படிப்போனால் சாகிறவரை இதை நிறுத்தவே முடியாது.

    எல்லோரும் நிறுத்த சொல்ற முன்னாலே நானே நிறுத்திவிடுகிறேன் :)

    ReplyDelete
  21. ***கயல்விழி said...
    //இப்படி சொல்ற ஒருத்தியை போய் காதலிக்கிறேன் பாரு, என்னை சொல்லனும் :-)
    //

    Think about the positive side, atleast I don't lie :) :)***

    I know. Why do you think I love you? It is because you are not a liar like me! You are much better than me. That is why! :):)

    ReplyDelete
  22. உங்களை ஒரு தொடருக்கு அழைச்சிருக்கேன்... வந்திடுங்க
    -இவன்-

    ReplyDelete
  23. இனிமேல் செதுக்கினவுடனேயே ஒரு mailல தட்டி விடுங்க வருண்... அடுத்த பாகம் எப்போ??

    ReplyDelete
  24. ****** இவனொரு சைக்கோவா இருந்தால் என்ன பண்றதுனு, பயம்மா இல்லை? ****

    இப்படி கேள்வி கேட்டுட்டா இல்லைன்னு ஆய்டுமா ?

    ReplyDelete
  25. ***** சில நேரம் மெளனத்தை விட வீரியமிக்க மொழி இருப்பதில்லை ****

    MIG / F16 எல்லாத்தையும் விட effective weapon.

    ReplyDelete
  26. ********* It is because you are not a liar like me! You are much better than me. That is why! *****

    Are you trying to prove that in your statement itself ? :)-

    ReplyDelete
  27. போன பதிவுலே இதை முடிக்கற போல யோசனை இல்லை சொனீங்க, இப்போ சீக்கரம் முடிக்கணும்னு சொல்லுறீங்க என்ன ஆச்சு வருண் :-)

    ReplyDelete
  28. ****மணிகண்டன் said...
    ********* It is because you are not a liar like me! You are much better than me. That is why! *****

    Are you trying to prove that in your statement itself ? :)-

    17 October, 2008 4:17 AM****

    I must admit your smartness is amazing! Please do remember that I am a liar! Unfortunatley this time it hits you back!

    Just kidding maNikaNdan! Thanks for stopping by :)

    ReplyDelete
  29. ***SK said...
    போன பதிவுலே இதை முடிக்கற போல யோசனை இல்லை சொனீங்க, இப்போ சீக்கரம் முடிக்கணும்னு சொல்லுறீங்க என்ன ஆச்சு வருண் :-)

    17 October, 2008 5:49 AM***

    SK: The problem is if I dont stop at some point it will never end. Just like cigarette addition I am addicted to writing this story I suppose. Any kind of addiction is bad, you see :)

    ReplyDelete
  30. ***இவன் said...
    உங்களை ஒரு தொடருக்கு அழைச்சிருக்கேன்... வந்திடுங்க
    -இவன்-

    16 October, 2008 9:31 PM***

    அப்படியா இவன்?

    சரி வந்து பார்க்கிறேன். :-)

    ReplyDelete
  31. ***இவன் said...
    இனிமேல் செதுக்கினவுடனேயே ஒரு mailல தட்டி விடுங்க வருண்... அடுத்த பாகம் எப்போ??

    16 October, 2008 9:51 PM***

    சரி இவன்! :-)

    அடுத்த பாகமா? விரைவில் :-)

    ReplyDelete
  32. ***AMIRDHAVARSHINI AMMA said...
    :)))))))))

    17 October, 2008 1:58 AM***

    உங்களுக்கு தெய்வீக சிரிப்புங்க! ;-)

    ReplyDelete
  33. என்ன வருண், கொஞ்சம் புகைக்கு அப்புறம் புயலா வந்துட்டீங்க. நல்லா ரொமான்டிக்கா இருக்கு உங்க கதை.

    ReplyDelete
  34. நன்றி, சுந்தர்! :)

    ReplyDelete
  35. Your description of temple reminds of a temple in my place

    ReplyDelete
  36. அரோரா கோவில் மாதிரி இருக்கே. ம்ம் பாலாஜி அருளட்டும்.:)

    ReplyDelete
  37. வாங்க அனானி!

    பொதுவா வெஸ்ட்ல நிறைய கோயில் இப்படித்தான் இருக்கும்னு நினைக்கிறேன் :)

    ReplyDelete
  38. ***வல்லிசிம்ஹன் said...
    அரோரா கோவில் மாதிரி இருக்கே. ம்ம் பாலாஜி அருளட்டும்.:)

    23 October, 2008 ***

    ஆமா, சிக்காகோ ல உள்ள "அரோரா" கோயிலும் இதே போல்தான் இருக்கும் :-)

    ந்ஏதாவது கடவுளைப்பற்றி எழுதினால்தான் நீங்கள் இந்தப்பக்கம் வருவீங்க போல இருக்குங்க! :-)

    உங்கள் வருகைக்கு நன்றிங்க! :-)

    ReplyDelete