Wednesday, November 19, 2008

நாத்தீகர்களும் கடவுளும்!

என்னவோ கடவுள்னு ஒருவர் இருந்தால், அவர் ஆத்தீகர்களுக்குத்தான் நன்றியோட இருப்பார்னு நினைப்பது தவறு! கடவுள் என்பவர் இருந்தால், சாதாரண ஜால்ராவுக்கும், முகஸ்துதிக்கும் மயங்கும் மனிதனைப்போல் உணர்வு உள்ளவர்/ள் போல் நினைத்து மடமையில் வாழ்கிறார்கள் சில ஆத்தீகர்கள்!

நாத்தீகர்களுக்கு கடவுள் என்றுமே எதிரி அல்ல. கடவுள் இல்லாமல் அவர்களால் வாழமுடியுது. அவர்களுக்கு கடவுளின் உதவி தேவைப்பட வில்லை! நாத்தீகர்களைப் பொறுத்தமட்டில் கடவுள் கடவுள்னு சொல்லி ஊரை ஏமாற்றும் சில ஆத்தீகர்களைத்தான் அவர்களுக்கு பிடிக்காது! கடவுள் என்பவர் இருந்தால் அவர் ஒரு போதும் நாத்தீகர்களுக்கு எதிரி அல்ல.

இப்போ எல்லோருக்கும் உதவி செய்ய ஒருவர் இருக்கார். அவரை எதுக்கு தொந்தரவு பண்ணனும், நம்ம பிரச்சினையை நாமே போராடி வெற்றியடைவோமே என்கிற தன்னம்பிக்கையில் அவரிடம் போகவில்லை, அவர் உதவியை நாடவில்லை என்றால், அவர் கோவிச்சுக்குவாரா? அப்படி கோபித்துக்கொண்டால் அவரும் சாதாரண மனிதர்தான். இல்லையா?

கடவுளுக்கு நாத்தீர்ககளைத்தான் ரொம்ப பிடிக்கும், பிடிக்கனும். தான் இல்லாமலே இவர்களால் தன்னம்பிக்கையுடன் போராடி வாழமுடியுது என்பதை கடவுளே பாராட்டுவார். என் பேரைச்சொல்லிச் சொல்லி ஊரை ஏமாற்றாமல்/ தங்களையே ஏமாற்றாமலும் இருக்காங்கனு ரொம்ப சந்தோஷப்படுவார்! அதைவிடுத்து, தன்னை வழிபடுவனைத்தான் எனக்கு பிடிக்கும் என்று கடவுள் நினைத்தால், அந்தக் கடவுளுக்கு கடவுளாக இருக்கும் தகுதி இல்லாமல்போகிறது!

பொதுவாக மனிதனாகப்பிறந்தவர்கள், ஏமாற்றாமல், திருடாமல், பெண் பொறுக்கியாக இல்லாமல், நம்பிக்கை துரோகம் பண்ணாமல், மேலும் எல்லோரையும் தன்னைப்போல் நினைப்பது, மனிதாபிமானத் தோட வாழ்வது போன்ற நற்பண்புடன் வாழ்ந்தால், நாத்தீகராக இருந்தாலும் அவர்களும் உயர்ந்த மனிதர்கள்தாம் என்பதை தன் சுயநலத்திற்காக, இறைவழிபாடு மற்றும் கடவுளை திருப்திப்படுத்த முயலும் ஆத்தீகர்கள் மனதில் கொள்ள வேண்டும்.

நாத்தீகர்கள், கடவுள் இல்லை என்று நம்புவது ஒண்ணும் பெரிய குற்றமல்ல! நம்ப முடியாததால் நம்புவதில்லை! அவர்களுக்கு நடிக்கத்தெரியவில்லை! தன் மனதில் தோன்றுவதை உண்மையாக சொல்கிறார்கள்! அவ்வளவுதான்!

நற்குணங்களுடன், மனிதாபிமானத்துடன் இருந்து தன்னால் உணரமுடியாத கடவுளை வணங்கவோ வழிபடவோ நாத்தீகர்கள் செய்யவில்லையென்றால் அது ஒண்ணும் தவறல்ல! அது எந்த வகையிலும் அவர்களை குறைக்காது என்பதை ஆத்தீகர்கள் உணர்வது நல்லது!

87 comments:

  1. எங்கள மாதிரி ரெண்டுங்கெட்டானெல்லாம் உணரவேண்டாமா?

    ReplyDelete
  2. அருமையான பதிவு.
    ஆனால் என்ன இது?
    //கடவுள் இல்லை என்று நம்புவது ஒண்ணும் பெரிய குற்றமல்ல!//
    கடவுள் இல்லை என்று நம்புவது குற்றமா?

    ReplyDelete
  3. ***குடுகுடுப்பை said...
    எங்கள மாதிரி ரெண்டுங்கெட்டானெல்லாம் உணரவேண்டாமா?

    19 November, 2008 11:34 AM***

    உணர்ந்ததால்தான் ரெண்டும்கெட்டானா இருக்கீங்க! :-)

    ReplyDelete
  4. ***Anonymous said...
    அருமையான பதிவு.
    ஆனால் என்ன இது?
    //கடவுள் இல்லை என்று நம்புவது ஒண்ணும் பெரிய குற்றமல்ல!//
    கடவுள் இல்லை என்று நம்புவது குற்றமா?

    19 November, 2008 11:57 AM***

    ஆமாம், குற்றமே இல்லைதான். என் தவறு! :-)

    ReplyDelete
  5. அன்பு அமைதி ஆனந்தம் ஆரோக்கியம் இவைகள் நிலைத்திருக்க வேண்டும் என விரும்புவர்களுக்கு கடவுளை வழிபடுவது தான் ஒரே வழி.

    எமது எண்ணங்களே எமது வாழ்வை வடிவமைக்கின்றன.
    நம் மனதை பண்படுத்தும் அருள்மொழிகளும் நன்னூல்களும் மதம் சார்ந்தவைகளாகவே இருக்கின்றன,
    கடவுளை தள்ளி விடுவதால் அவற்றின் பயன்களையும் இழக்கிறோம்.

    கடவுள் எதிரிகளின் பதிவுகளைப் பாருங்கள். வசை மொழிகளும், சாதிதிட்டுகளும். பண்பற்றதன்மையும் அப்படியே கொடி கட்டிப் பறக்கும்.
    அவர்கள் பதிவுகளை க்ளிக் பண்ணவே அருவருப்பாக இருக்கும்.

    கடவுளை நம்பினோர் கைவிடப்படார்,

    ReplyDelete
  6. //
    இப்போ எல்லோருக்கும் உதவி செய்ய ஒருவர் இருக்கார். அவரை எதுக்கு தொந்தரவு பண்ணனும், நம்ம பிரச்சினையை நாமே போராடி வெற்றியடைவோமே என்கிற தன்னம்பிக்கையில் அவரிடம் போகவில்லை, அவர் உதவியை நாடவில்லை என்றால், அவர் கோவிச்சுக்குவாரா? அப்படி கோபித்துக்கொண்டால் அவரும் சாதாரண மனிதர்தான். இல்லையா?
    //

    தன்னால் முடியும் என்ற தன்னம்பிக்கை மட்டுமல்ல, கடவுள் இல்லை என்ற அவ நம்பிக்கையும் தான் காரணம். இல்லாத ஒருவரிடம் ஏன் போய் உதவிக் கேட்க வேண்டும்? தவிர இருந்தாலும் அவர் பலருக்கு உதவி செய்வதாக தெரியவில்லை. அவர் பாடே ரொம்ப கஷ்டமாக இருக்கும் போலிருக்கிறது..

    //
    அதைவிடுத்து, தன்னை வழிபடுவனைத்தான் எனக்கு பிடிக்கும் என்று கடவுள் நினைத்தால், அந்தக் கடவுளுக்கு கடவுளாக இருக்கும் தகுதி இல்லாமல்போகிறது!
    //

    நச்!

    ReplyDelete
  7. ***அன்பு அமைதி ஆனந்தம் ஆரோக்கியம் இவைகள் நிலைத்திருக்க வேண்டும் என விரும்புவர்களுக்கு கடவுளை வழிபடுவது தான் ஒரே வழி.***

    இதெல்லாம் அநியாயம்ங்க! கடவுளை வழிபடாமலே அன்பு, அமைதி ஆனந்தம் நிலைத்திருக்க ஆசைப்படுபவர்கள் ஏன் இல்லை???

    ReplyDelete
  8. ***எமது எண்ணங்களே எமது வாழ்வை வடிவமைக்கின்றன. ***

    உண்மைதான்!

    **நம் மனதை பண்படுத்தும் அருள்மொழிகளும் நன்னூல்களும் மதம் சார்ந்தவைகளாகவே இருக்கின்றன,***

    அப்படி நீங்கள் சொல்லிவிட முடியாது

    திருக்குறள் மதம் சார்ந்தது என்றெல்லாம் சொல்ல முடியாது. வாழ்க்கையில் நிறைய தத்ஹ்டுவ ஞாநிகள் சொன்னவைகள், மதம் சார்ந்தவை அல்ல!

    **கடவுளை தள்ளி விடுவதால் அவற்றின் பயன்களையும் இழக்கிறோம்.**

    கடவுளை வழிபடாததற்கும் இதற்கும் என்ன சம்மந்தம்?

    ReplyDelete
  9. உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி, அது சரி! :)

    ReplyDelete
  10. kadavul yaar? AAthigargal en/edhai kumbidugirargal? Avargal naathigargalai kandu en anjugirargal/verukirargal? Idhellam edhuvume theriyamal irupadhu thavaru illai. Adhu theriyamal irukum podhu ooril irukum ellorkum advise pannuvadhe thavaru.
    Putril vaazh aravam anjen, EEsam meedhu anbilladhavarai kandal anjuven nu manikavasagar pondravargal karanam illamal solla matargal. Things that you say are known to everyone.
    Even to say Thirukural is not this or that, one has to have read thirukural. Thirukural enforces vedic dharmam. It supports doing yagam and peaks high of vedhiyargal etc.

    ReplyDelete
  11. பொதுவாக மனிதனாகப்பிறந்தவர்கள், ஏமாற்றாமல், திருடாமல், பெண் பொறுக்கியாக இல்லாமல், நம்பிக்கை துரோகம் பண்ணாமல், மேலும் எல்லோரையும் தன்னைப்போல் நினைப்பது, மனிதாபிமானத் தோட வாழ்வது போன்ற நற்பண்புடன் வாழ்ந்தால், நாத்தீகராக இருந்தாலும் அவர்களும் உயர்ந்த மனிதர்கள்தாம் என்பதை தன் சுயநலத்திற்காக, இறைவழிபாடு மற்றும் கடவுளை திருப்திப்படுத்த முயலும் ஆத்தீகர்கள் மனதில் கொள்ள வேண்டும்.

    அருமையான வரிகள். மேலும் இது போன்ற பதிவுகளை பதிவிட எனது வாழ்த்துக்கள் வருண் & கயல்விழி.

    ReplyDelete
  12. /*
    பொதுவாக மனிதனாகப்பிறந்தவர்கள், ஏமாற்றாமல், திருடாமல், பெண் பொறுக்கியாக இல்லாமல், நம்பிக்கை துரோகம் பண்ணாமல், மேலும் எல்லோரையும் தன்னைப்போல் நினைப்பது, மனிதாபிமானத் தோட வாழ்வது போன்ற நற்பண்புடன் வாழ்ந்தால், நாத்தீகராக இருந்தாலும் அவர்களும் உயர்ந்த மனிதர்கள்தாம் என்பதை தன் சுயநலத்திற்காக, இறைவழிபாடு மற்றும் கடவுளை திருப்திப்படுத்த முயலும் ஆத்தீகர்கள் மனதில் கொள்ள வேண்டும்.
    */
    இதுல ஏதும் உள் குத்து இருக்கா?

    ReplyDelete
  13. :) நன்றாக இருக்கிறது.

    கடவுள் பெயரில் நடக்கும் கூத்துக்களை தட்டிக் கேட்பதால், கடவுளுக்கு ஜால்ராக்களைவிட நாத்திகர்களைத்தான் மிகவும் பிடிக்கும்.

    ReplyDelete
  14. ***kadavul yaar?***
    தெரியவில்லை

    ***AAthigargal en/edhai kumbidugirargal?***

    அவர்களின் சுயநலத்திற்காக! அவர்களின் நன்மைக்காக! அவர்கள் பயத்தைப்போக்க! அவர்கள் நிம்மதிக்காக!

    ***Avargal naathigargalai kandu en anjugirargal/verukirargal?***

    ஆத்தீகர்களின் அறியாமை இது!

    ***Idhellam edhuvume theriyamal irupadhu thavaru illai.***

    எனக்கு எதுவுமே தெரியாதா?!

    ***Adhu theriyamal irukum podhu ooril irukum ellorkum advise pannuvadhe thavaru.***

    நான் அட்வைஸ் பண்ணவில்லை! எனக்கு தோன்றியதை தைரியமாக சொன்னேன். நீங்கதான் எனக்கு அட்வைஸ் பண்ணுறீங்க!

    ***Putril vaazh aravam anjen, EEsam meedhu anbilladhavarai kandal anjuven nu manikavasagar pondravargal karanam illamal solla matargal.***

    அவர் ஒரு ஆத்தீகர் போல இருக்கு. அவருக்கு தெரிந்ததை சொல்லியுள்ளார்.

    ***Things that you say are known to everyone.***

    உங்களுக்கு தெரியும்னு மட்டும் சொல்லுங்க!

    ***Even to say Thirukural is not this or that, one has to have read thirukural.***

    யாகாவாராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப்பட்டு!

    இது எனக்கும் மற்றும் உங்களுக்கும் தான்!

    ***Thirukural enforces vedic dharmam. It supports doing yagam and peaks high of vedhiyargal etc.***

    என்ன சொல்றீங்க நீங்க???

    ReplyDelete
  15. நன்றி ஸ்ரீதர்கண்ணன், நசரேயன் (உள்குத்தெல்லாம் இல்லை :)) மற்றும் கோவி கண்ணன்!

    ReplyDelete
  16. ஒரு நிமிஷம் கோவி.கண்ணன் சார் பதிவுன்னு நினைச்சிட்டேன்... :-)

    ReplyDelete
  17. ஆத்திகர் என்பது வெறும் பெயர்தான், அதற்கு உரிமை கொண்டாடுபவர்கள் அனைவருமே மதச்சார்பினர். அவர்களைப் பொறுத்து மற்ற மதத்தினர் நாத்திகர் தான். இவர்கள் இறைவன் என்று சொல்வதும் அந்தந்த மதங்களில் சொல்லப்படும் குறியீடுகள் மட்டுமே. கிருஷ்ணனா, ஈஸ்வரானா யார் உயர்ந்தவர் என்கிற சண்டையும் முடிவில்லாமல் சென்று கொண்டே இருக்கிறது, எதற்கு வம்பு, முற்றிலும் தெரியாத, அறியாத ஒன்று இது, எனவே இருவரையுமே சொல்லிவைப்போமே என்று பிற இந்துக்கள் நினைத்துக் கொள்வார்கள், இந்த அளவுக்குத்தான் இந்து ஆத்திக நம்பிக்கையே இருக்கிறது. மற்றவர்களைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை.

    ReplyDelete
  18. //***Thirukural enforces vedic dharmam. It supports doing yagam and peaks high of vedhiyargal etc.***//

    இவை வெறுமனே உளரல் தான் இதற்கு எந்த ஆதாரமும் இல்லை, திருவள்ளுவரை கிறித்துவராக, சமணராக, பவுத்தராக, பூணூல் போட்ட பார்பனராக பலரும் அவரவர்கள் யானையைப் பார்த்த குருடர் போல் அள்ளிவிடுகின்றனர்

    ReplyDelete
  19. பிடிச்சிருக்கு ...

    ReplyDelete
  20. //
    அதைவிடுத்து, தன்னை வழிபடுவனைத்தான் எனக்கு பிடிக்கும் என்று கடவுள் நினைத்தால், அந்தக் கடவுளுக்கு கடவுளாக இருக்கும் தகுதி இல்லாமல்போகிறது!
    //

    நச்!

    ReplyDelete
  21. நல்லா எழுதியிருக்கிங்க!
    ஆத்திகர்களுக்கு மனதுக்குள் தெரியும்,
    ஆனால் தனது நம்பிக்கையை ஒருவன் குழைக்கிறான் என்பதால் கோபம் வருகிறது

    ReplyDelete
  22. நம்பறவங்களுக்கு அந்த நம்பிக்கையே தன் நம்பிக்கையைவிட மேலான பலம். அதே சமயம், நம்பாதவர்களுக்கு தன் நம்பிக்கை குறையும் சமயத்தில் வேறு நம்பிக்கையில்லாத பட்சத்தில் ஏற்படும் விளைவுகளை விட கடவுள் நம்பிக்கையால் ஏற்படும் விளைவுகள் மேல். There is close linkage to lack of spritual beliefs and higher incidence of depressions, suicides, anti-socialism.

    அதற்காக நம்பாதவர்கள் எல்லாம் பொல்லாதவர்களாக, மனித குளத்தின் எதிரிகளாக சித்தரிப்பது பழமை பேசும் hypocrites களுக்கு பொழுதுபோக்கு.

    Spritual awareness and self awareness cant be imposed. those who try to imporse simply make some others to follow them without being really aware of their own beliefs. so in my view, if you are a non-believer or a believer, just mind your own business.

    ReplyDelete
  23. சில நாட்களுக்கு முன் அலுவல் முடிந்து வெளியே வரும்போது வானத்தை அண்ணாந்து பார்த்தேன்.மேகங்களும் நீல வண்ணத்துடன் வானம் பார்க்கவே ரம்மியமாக இருந்தது.இந்தப் படைப்பின் விநோதங்களை எண்ணிக் கொண்டே சென்றேன்.

    உங்கள் பதிவையும் நாத்திகம் ஆத்திகம் சார்ந்த பதிவுகளையும் படிக்கும்போது மனசில் தோன்றுவது இது சார்ந்த சிந்தனைகளும் தர்க்கங்களும் தாக்கங்களும் ஏன் தமிழ்நாட்டில் அதிகம்?

    ReplyDelete
  24. கடவுளை தனக்குள் மட்டும் நம்ப மருத்து தன்னம்பிக்கை ஒன்றையே சார்ந்து வாழும் நாத்திகர்களை உண்மையான எந்த ஆத்திகனும் குற்றம் சாட்டுவதில்லை.அதை விடுத்து கடவுளை ஏற்க முரட்டுத்தனமாக வற்புறுத்துபவர்களைப்போல தாங்கள் நம்பாத கடவுளை மற்றவர்களும் மறுக்க வேண்டும் என்று வாதிட்டு,அதற்காக பிரயத்தனங்கள் செய்யும் நாத்திகர்களைத்தான் குற்றம் சுமத்த வேண்டியுள்ளது.இவர்களுக்கும் தீவிர பக்தர்களுக்கும் எந்த வேறுபாடும் இருப்பதில்லை தாங்கள் பின்பற்றும் வழிகளைத்தவிர...

    ReplyDelete
  25. உங்கள் பதிவையும் நாத்திகம் ஆத்திகம் சார்ந்த பதிவுகளையும் படிக்கும்போது மனசில் தோன்றுவது இது சார்ந்த சிந்தனைகளும் தர்க்கங்களும் தாக்கங்களும் ஏன் தமிழ்நாட்டில் அதிகம்?

    //
    பெரியார். தமிழர்கள் வெறும் நாத்திகம் பேசிகிறார்கள். மற்ற
    நாத்திகர்கள் மதம் ஆரம்பித்துவிட்டார்கள்.

    ReplyDelete
  26. ***சரவணகுமரன் said...
    ஒரு நிமிஷம் கோவி.கண்ணன் சார் பதிவுன்னு நினைச்சிட்டேன்... :-)

    19 November, 2008 8:41 PM***

    அப்படியா?

    அவருடைய ஒரு பதிவின் விளைவு தான் இந்தப் பதிவு! அதனால் வருக்கும் கொஞ்சம் இதில் பங்குண்டு
    :-)

    ReplyDelete
  27. *** கோவி.கண்ணன் said...
    //***Thirukural enforces vedic dharmam. It supports doing yagam and peaks high of vedhiyargal etc.***//

    இவை வெறுமனே உளரல் தான் இதற்கு எந்த ஆதாரமும் இல்லை, திருவள்ளுவரை கிறித்துவராக, சமணராக, பவுத்தராக, பூணூல் போட்ட பார்பனராக பலரும் அவரவர்கள் யானையைப் பார்த்த குருடர் போல் அள்ளிவிடுகின்றனர்

    19 November, 2008 9:26 PM ***

    உண்மைதான் கோவி! திருவள்ளுவரை நிறையப்பேர் சொந்தம் கொண்டாடுகிறார்கள்! :-)

    ReplyDelete
  28. ***Sundar said...
    நம்பறவங்களுக்கு அந்த நம்பிக்கையே தன் நம்பிக்கையைவிட மேலான பலம். அதே சமயம், நம்பாதவர்களுக்கு தன் நம்பிக்கை குறையும் சமயத்தில் வேறு நம்பிக்கையில்லாத பட்சத்தில் ஏற்படும் விளைவுகளை விட கடவுள் நம்பிக்கையால் ஏற்படும் விளைவுகள் மேல். There is close linkage to lack of spritual beliefs and higher incidence of depressions, suicides, anti-socialism.

    அதற்காக நம்பாதவர்கள் எல்லாம் பொல்லாதவர்களாக, மனித குளத்தின் எதிரிகளாக சித்தரிப்பது பழமை பேசும் hypocrites களுக்கு பொழுதுபோக்கு.

    Spritual awareness and self awareness cant be imposed. those who try to imporse simply make some others to follow them without being really aware of their own beliefs. so in my view, if you are a non-believer or a believer, just mind your own business.

    19 November, 2008 11:37 PM***

    உண்மைதான் சுந்தர். :-)

    ஸ்பிரிச்சுவாலிட்டி, கடவுள் நம்பிக்கை பலருக்கு மன அமைதி கொடுப்பது உண்மைதான்! இது மனதை பக்குவப்படுத்த ஒரு நல் வழி என்றும் சொல்லலாம்! ஆனால் இதுதான் ஒரே வழி என்றோ, இதுதான் சரியான வழி என்றோ சொல்லமுடியாது :-)

    ReplyDelete
  29. ****வால்பையன் said...
    நல்லா எழுதியிருக்கிங்க!
    ஆத்திகர்களுக்கு மனதுக்குள் தெரியும்,
    ஆனால் தனது நம்பிக்கையை ஒருவன் குழைக்கிறான் என்பதால் கோபம் வருகிறது***

    நாத்தீகர்கள் எல்லாம் மனிதாபிமான்ம் இல்லாதவர்கள், வெறுக்கத்தக்கவர்கள் என்கிற தவறான எண்ணத்துடன் பலர் வாழ்கிறார்கள். அந்த நம்பிக்கை தவறென்று சொல்ல முயற்சிக்கிறேன் :-)

    அவ்வளவுதான் வால்பையன்! :-)

    ReplyDelete
  30. நன்றி, மானமுள்ள சுயமரியாதைக்காரன் மற்றும், கண்ணன் :-)

    ReplyDelete
  31. ***தருமி said...
    பிடிச்சிருக்கு ...

    19 November, 2008 9:31 PM ***

    நன்றி, தருமி! :-)

    ReplyDelete
  32. ***ராஜ நடராஜன் said...
    சில நாட்களுக்கு முன் அலுவல் முடிந்து வெளியே வரும்போது வானத்தை அண்ணாந்து பார்த்தேன்.மேகங்களும் நீல வண்ணத்துடன் வானம் பார்க்கவே ரம்மியமாக இருந்தது.இந்தப் படைப்பின் விநோதங்களை எண்ணிக் கொண்டே சென்றேன்.

    உங்கள் பதிவையும் நாத்திகம் ஆத்திகம் சார்ந்த பதிவுகளையும் படிக்கும்போது மனசில் தோன்றுவது இது சார்ந்த சிந்தனைகளும் தர்க்கங்களும் தாக்கங்களும் ஏன் தமிழ்நாட்டில் அதிகம்?

    20 November, 2008 5:20 AM ***

    தமிழர்கள் ஓரளவுக்கு நல்ல சிந்தனையாளர்கள். தன் மனதுக்கு தவறு என்ரு தோன்றுவதை சத்தமாக சொல்பவர்கள் னு நினைக்கிறேன் :-)

    ReplyDelete
  33. ***நாகராஜன் said...
    கடவுளை தனக்குள் மட்டும் நம்ப மருத்து தன்னம்பிக்கை ஒன்றையே சார்ந்து வாழும் நாத்திகர்களை உண்மையான எந்த ஆத்திகனும் குற்றம் சாட்டுவதில்லை.அதை விடுத்து கடவுளை ஏற்க முரட்டுத்தனமாக வற்புறுத்துபவர்களைப்போல தாங்கள் நம்பாத கடவுளை மற்றவர்களும் மறுக்க வேண்டும் என்று வாதிட்டு,அதற்காக பிரயத்தனங்கள் செய்யும் நாத்திகர்களைத்தான் குற்றம் சுமத்த வேண்டியுள்ளது.இவர்களுக்கும் தீவிர பக்தர்களுக்கும் எந்த வேறுபாடும் இருப்பதில்லை தாங்கள் பின்பற்றும் வழிகளைத்தவிர...

    20 November, 2008 6:55 A***

    நீங்கள் சொல்வதும் உண்மைதான்! :-)

    ReplyDelete
  34. ***AAthigargal en/edhai kumbidugirargal?***

    அவர்களின் சுயநலத்திற்காக! அவர்களின் நன்மைக்காக! அவர்கள் பயத்தைப்போக்க! அவர்கள் நிம்மதிக்காக!

    --This answer simply shows you have no knowledge about Hindu dharma or religion. You can always see whether you worship god or not, you will get what is destined. (Thiruvalluvar kooda sollikeeraru oozh pathi). Different people need god for so many different reasons. But they all know "Existence" of HIM.

    Anyway, to comment about this complex subject one must have practiced religion for 20-30 years. Without sincerity it is difficult to grasp this subject.
    Aana onnume pannama ellam therinja egambaram mathiri "All aasthigars, listen to me". "Naasthigar listen me" nu petha koodadhu.

    ReplyDelete
  35. anonymous!

    You know very little of me too! Just bcos one has an experience 20-30 years in some "subject", that does not make them "well-qualified" to say anything they want.

    They are just followers of human-created religion and believers of something! They are not anything great!

    If you ask me to go get 20-30 years experience to say anything, or to have a debate with you, then you must be joking!

    ReplyDelete
  36. Dear Anonymous,

    விவேகானந்தரின் இந்த கருத்துக்களுக்கு உங்கள் பதில் என்ன?

    * கடவுள் இருந்தால் அவனை நாம் காணவேண்டும், ஆத்மா இருந்தால் அதனை நாம் உணர வேண்டும், அப்படியில்லையென்றால் நம்பிக்கை இல்லாமல் இருப்பது நன்று. பாசாங்கு போடுவதை விட நாத்திகனாக இருப்பதே மேல்.

    "If there is a God, we must see Him; if there is a soul, we must perceive it; otherwise it is better not to believe. It is better to be an outspoken atheist than a hypocrite."

    * உலகின் குறைகளை பற்றி பேசாதே. குறைகளை நோக்கி வருத்தப்படு, எங்கும் நீ குறைகளை காண்பாய். ஆனால், நீ உலகுக்கு உதவி செய்ய விருப்பினால் உலகை தூற்றாதே, குறை சொல்லாதே. குறை சொல்லி உலகை இன்னும் பலவீனப்படுத்தாதே. உலகின் குறைகள், குற்றங்கள் எல்லாம் அதன் பலவீனத்தால் விளைபவை அல்லவா.

    "Do not talk of the wickedness of the world and all its sins. Weep that you are bound to see wickedness yet. Weep that you are bound to see sin everywhere, and if you want to help the world, do not condemn it. Do not weaken it more. For what is sin and what is misery, and what are all these but the results of weakness?"

    ReplyDelete
  37. If there is a God, we must see Him; if there is a soul, we must perceive it; otherwise it is better not to believe. It is better to be an outspoken atheist than a hypocrite

    -- One cannot know what vivekananda meant by just quoting one kine. He is eloquent speaker, must have spoken much before and after.
    --He was atheist until he met Ramakrishna Paramahamsa. In a single touch he made him realise "Brahman".
    --Even before that he was a well read person and was always driven by "GOD" thought.
    -- Problem here is superficial understanding of problem and posting opinions. There are many postings like this in web world.

    ReplyDelete
  38. ****He was atheist until he met Ramakrishna Paramahamsa. In a single touch he made him realise "Brahman".***

    That sounds so funny! Yeah it is all in your mind to realize anything!

    ReplyDelete
  39. ***Problem here is superficial understanding of problem and posting opinions. There are many postings like this in web world.***

    We all think our understanding is better than others' including you!

    And that our way is high way!

    But who is judging your understanding here?

    Yourself?! LOL!

    That is a pity you see! :(

    ReplyDelete
  40. ****He was atheist until he met Ramakrishna Paramahamsa. In a single touch he made him realise "Brahman".***

    That sounds so funny! Yeah it is all in your mind to realize anything!

    --This is what I am saying. You did not understand what my lines meant.SO it sounded funny.
    --Paramahamsar theriyadhu, ramakrishnar theriyadhu, Manikavasagar theriyadhu,
    Then passing comments is wrong.

    ReplyDelete
  41. ***Anonymous said...
    --Paramahamsar theriyadhu, ramakrishnar theriyadhu, Manikavasagar theriyadhu,
    Then passing comments is wrong.
    anonymous!***

    I feel sorry for you anony! If I dont know them, I cant understand anything or what?!

    Jesus Christ did not know these people either! So did Gauthama Buddha! So did thiruvaLLuvar!

    You see my point?

    You are talking nonsense!

    ReplyDelete
  42. **We all think our understanding is better than others' including you!

    And that our way is high way!**

    **Jesus Christ did not know these people either! So did Gauthama Buddha! So did thiruvaLLuvar!

    You see my point?**


    லூஸ்ல விடுங்க வருண் பாவம் அனானி :)

    ReplyDelete
  43. I feel sorry for you anony! If I dont know them, I cant understand anything or what?!
    --Thanks for acceping lack of knowledge in this field.

    Jesus Christ did not know these people either! So did Gauthama Buddha! So did thiruvaLLuvar!

    You see my point?

    --You are not buddha or christ. so you have no point.

    --Anyway, I am not saying what you said was wrong. Just saying it is written with superficial knowledge and opinated against theists.
    I have nothing against you. If you accept this was superficial and you get inspired to know more it is good. Else you can keep dishing out crap about beleif and religion.

    ReplyDelete
  44. ***Anonymous said...
    I feel sorry for you anony! If I dont know them, I cant understand anything or what?!
    --Thanks for acceping lack of knowledge in this field.

    Jesus Christ did not know these people either! So did Gauthama Buddha! So did thiruvaLLuvar!

    You see my point?

    --You are not buddha or christ. so you have no point.***

    You are hilarious!!! LOL!

    I know I am not BudhdhA or Jesus or YOU either! My point is, you are keep saying "you dont know this", "you dont know that" and so on. That is what your whole debate is all about!

    Did I ever say I know everything?
    There is nothing wrong in not knowing something today. I will learn that tomorrow!

    What did I say bad about theists, anyway? I want them to understand the atheists and their point of view but you are reluctant to so. Because you are so arrogant as you think you own your God in your pocket by bribing him/her everyday- by praying him and pleasing him!

    ReplyDelete
  45. I want them to understand the atheists and their point of view but you are reluctant to so. Because you are so arrogant as you think you own your God in your pocket by bribing him/her everyday- by praying him and pleasing him!


    --This is the exact statement I saying stems from lack of understanding of religion or its view point.
    --I quoted Manickavasagar who you did not know him either.
    --what we refer as god is explained in that vivekananda incident. That sounded funny to you.
    --Whatever I quote you wont know. Simply one does not invest time in knowing god or religion. That is fine. But I wonder how they start advising without any homework?
    --There is a good reason why an atheist is not acceptable to an aspirant. You need to change perceptions to understand it.

    ReplyDelete
  46. There is nothing to understand about religion. It is just created by humans for their convenience. I wnat to understand human beings. Not religion or God!

    I dont think you will ever understand what I mean because you are corrupted by relious thoughts and hinduism!

    ReplyDelete
  47. நான் கடவுள் நம்பிக்கை உள்ளவன் தான். ஆனால் வெற்று சம்பிரதாயங்களில் , பஜனைகள்-ல் நம்பிக்கை இல்லாதவன். நாத்திகம் பேசுபவர்கள் பெரும்பாலும் தாங்கள் சொல்வது தான் உண்மை, இதற்கு வேறு கருத்தே கூடாது என்ற ரீதியில் எழுதியிருப்பார்கள் இல்லை இல்லை பெரும்பாலும் காட்டுக் கூச்சல் தான் இட்டு இருப்பார்கள். வழுவாந கருத்து ஏதும் இருக்காது. ஆனால் உங்கள் பதிவு நிதானமா கருத்தை மட்டும் கரையேற்றி இருக்கிறது. வாழ்த்துக்கள். நீங்க சொன்ன மாதிரி கடவுளை புகழ்ந்து பாடினால் அவர் அருள் தருவார் என்பது மடமையே. அதற்குத் தன் நம் முன்னோர்கள் அன்பே சிவம் என்று சொல்லியிருக்கிறார்கள். அன்பு காட்டுங்கள் அனைவரிடமும் அதுவே தெய்வ வழிபாடு. கோவி. கண்ணன் இந்த பின்னுட்ங்களில் கொஞ்சம் நிதானம் காட்டியிருக்கிறார். மற்ற இடங்களில் அவர் பின்னுட்டங்களைப் பார்க்கையில் ஐயோ பாவம் என்றிருக்கும்.மனிதனுக்கு என் இத்தனி ஆக்ரோஷம் தெரியவில்லை -குப்புக் குட்டி

    ReplyDelete
  48. நமது வருகையின் ரகசியத்தை அறியாவேண்டுமானால் அதனை உணர்ந்த நம் முன்னோர்களின் அறிவுரையின் வழி சென்றாலே முடிவும்,
    அதற்கு ஆரம்பம் தான் ஆலய வழிபாடாகும்,
    பல ஆலயங்களில் சித்தர், ரிஷிகளின் சைதன்யங்களும் நிறம்பியுள்ளன,
    அவற்றை அங்கு சென்றாலே உணரமுடியும்,

    பஜனைசெய்வதென்பது நமது மன அழுத்தம் குறைந்து மனம் இலகுவாகுவற்கு வழி செய்கிறது.
    எங்கு வேண்டுமானாலும் நாம் வாய்விட்டு சத்தம் போட்டு பாடிட முடியுமா?
    அத்துடன் அந்த வார்த்தைகளின் அதிர்வினால் நம் பய உணர்வும் போக்கடிக்கப் படுகிறது,
    ஆகவே எல்லோரும் வாயைத்திறந்து சத்தம் போட்டு பாடுங்கள். அதற்கு ஆலயங்களில் மட்டுமே வழி உண்டு.

    அங்கு தான் நாஸ்தீகர்கள் போகமாட்டார்களே.
    அவர்கள் மனப் பாரம் குறைந்து மகிழ்ச்சி அடைவதற்காக வேண்டி,
    வசதியுள்ளவர்கள் டிஸ்கோ பார்ட்டி என்று போகிறார்கள்.
    பின்பு பாரதூரமான விளைவுகளால் மன உளைச்சளை அதிகமாக்கிக் கொள்கிறார்கள்.
    வசதி குறைந்தவர்கள் மலிவுசாராயத்தை குடித்து விட்டு பரலோகம் போகிறார்கள்.

    இப்போ நடைப் பயிச்சியின் அவசியத்தை எங்கு பார்த்தாலும் வற்புறுத்துகிறார்களே,
    ரோட்டிலோ காட்டிலோ தினமும் நடந்து கொண்டிருக்க முடியுமா?
    இதனையுணர்ந்த முன்னோர்கள் பெரிய பெரிய கோவில்களை கட்டி வைத்து மூன்று முறை சுற்று ஐந்துமுறை சுற்று என்று வைத்தார்கள்.

    அவன் தாள் வணங்குவதற்கும் அவன் அருள் வேண்டும்

    ReplyDelete
  49. ***நாத்திகம் பேசுபவர்கள் பெரும்பாலும் தாங்கள் சொல்வது தான் உண்மை, இதற்கு வேறு கருத்தே கூடாது என்ற ரீதியில் எழுதியிருப்பார்கள் இல்லை இல்லை பெரும்பாலும் காட்டுக் கூச்சல் தான் இட்டு இருப்பார்கள்***

    பெரும்பாலும் சரி!

    நாத்தீகம் பேசுகிற அனைவரும் இந்த வகையை சார்ந்தவர்கள் அல்ல அல்ல!

    நாத்தீகம் பேசுவதால் அவர்கள் மனிதகுலத்திற்கோ,இறைவனுக்கோ எதிரி என்று சித்தரிக்கும் ஒரு சிலருக்காகவே இப்பதிவு!

    -------------------------

    அனானி ஆத்தீகர் ஒருவர் என்ன சொல்கிறார்! அரைகுறையாக என்னைப்புரிச்துகொண்டு,உனக்கு மாணிக்க வாசகர் தெரியாது அது தெரியாது இது தெரியாது, நீ என்ன பேசுவது என்கிறார்!

    இப்படி வாதம் செய்பவர்கள், தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்று மடமையில்வாழ்பவர்கள்தாம்!

    ReplyDelete
  50. ***nithi said...
    romba nidharsanama pathivu...

    21 November, 2008 2:41 AM***

    உங்கள் வருகைக்கு நன்றி, nithi! :-)

    ReplyDelete
  51. ***அங்கு தான் நாஸ்தீகர்கள் போகமாட்டார்களே.
    அவர்கள் மனப் பாரம் குறைந்து மகிழ்ச்சி அடைவதற்காக வேண்டி,
    வசதியுள்ளவர்கள் டிஸ்கோ பார்ட்டி என்று போகிறார்கள்.****

    அனானி!!!

    என்னவோ ஆத்தீகரெல்லாமே நல்லவர்கள் போலவும், பஜனை செய்வதைத்தவிர வேரெதும் செய்வதில்லை போலும்,நாத்தீகர்கள்தான் இப்படி அலைவது போலவும் நீங்கள் பேசுவது பயங்கர வேடிக்கை.

    டிஸ்கோ/பார்ட்டியில் கலந்து கொல்பவர்களில் பெரும்பான்மை கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் என்று தெரியாமல்மடமையில் வாழ்கிறீர்கள், அனானி.

    ஆத்தீகர்கள் பலர், எல்லா அயோக்கியத்தனமும் பண்ணிவிட்டு அதற்கு பரிகாரமாக, கடவுளிடம் ஜால்ரா அடித்து மன்னிப்பு கேட்டுவிட்டு அடுத்து புதிய அயோக்கியதனத்திற்கு ரெடியாவதை பார்த்ததில்லையா நீங்கள்?!

    ReplyDelete
  52. ***ஸ்ரீதர்கண்ணன் said...
    **We all think our understanding is better than others' including you!

    And that our way is high way!**

    **Jesus Christ did not know these people either! So did Gauthama Buddha! So did thiruvaLLuvar!

    You see my point?**


    லூஸ்ல விடுங்க வருண் பாவம் அனானி :)

    20 November, 2008 12:08 PM ***

    உங்கள் தெளிவான புரிதலுக்கு நன்றி, ஸ்ரீதர்கண்ணன்! :-)

    ReplyDelete
  53. //தமிழர்கள் ஓரளவுக்கு நல்ல சிந்தனையாளர்கள். தன் மனதுக்கு தவறு என்ரு தோன்றுவதை சத்தமாக சொல்பவர்கள் னு நினைக்கிறேன் :-)//

    வருண்!உலகக் கோப்பை பந்தாட்டத்தில் கூட தனது குழுவுக்கே கோல் போடற மாதிரி மீண்டும் ஒரு பின்னூட்டம்.நாத்திகம் பேசுறேன் பேர்வழின்னு முன்பு கூட ஒரு அக்கா பதிவுகள் போட்டுட்டு காணாமப் போயிட்டாங்க:)எது நாத்திகம்,எது ஆத்திகம்ன்னு கூட தெரியாம நிறைய விவாதங்கள் தொடர்கிறது.கடைசியில் பார்த்தால் இதன் எல்லையைத் தொடுபவர்கள் இரு பக்கமும் இல்லை.நல்ல சிந்தனைகள் உள்ளதால்தான் எழுத்துக்களும்,பதிவுகளும்,பின்னூட்டங்களும் கூட.தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால் அதிகம் சிந்திப்பதால்தானோ என்னெவோ ஒரு பிரச்சினையின் வாலைத் தொடுமுன் இன்னுமொரு பிரச்சினை வெடிக்கிறது.அது முடியும் முன் இன்னொன்று.நாட்களும்,மாதங்களும்,வருடங்களும் பிரச்சினைகளிலும்,மன உழைச்சல்களிலுமே போய்விடுகின்றன்.இந்தக் கோவா காரர்களைப் பார்த்திருக்கிறீர்களா? எதிலும் மூக்கை நுழைத்துக் கொள்வதில்லை.உலக விசயங்கள் ஏன் இந்திய விசயங்களும் கூட அதிகம் தெரியாது.வாழ்க்கை அனுபவிப்பதற்கே என்ற தத்துவத்தில் ஏக நம்பிக்கை கொண்டவர்கள் போல் இசை,மது,உடை,நட்பு,கார்னிவல் என்று ஒரு வட்டத்துக்குள் வாழ்க்கையை நடத்துகிறார்கள்.மதங்களில் வேறுபட்டிருந்தாலும் துவேசங்கள் மிகக் குறைவு.ஆனால் நாம் அதிகம் சிந்திப்பதன் காரணம் கொண்டோ,கூடவே மாற்றுச் சிந்தனைகளும் வந்து முட்டிக் கொள்வதாலும் வாழ்க்கை சுகமாய் பயணிப்பதில்லை.

    ReplyDelete
  54. நடராசன்!

    நீங்க கோவா வுடன் நம்மை கம்ப்பேர் பண்ணுறீங்க!

    நான் பீஹார் மக்களோடு கம்ப்பேர் பண்ணுறேன்.

    அங்கே உள்ள தாழ்த்தப்பட்டவர்கள் நிலைமை நம் நிலைமையைவிட 100 மடங்கு மோசம்!

    சினிமா கதாநாயகர்கள் வழிபாடு மற்றும் ஜாதி அரசியல் எல்லாம் இருந்தாலும், நாம் ஓரளவுக்கு முன்னேறுகிறோஒம் என்றுதான் நினைக்கிறேன்.

    இந்த சாதி பிரைச்சினை நமக்கே உள்ள ஒரு பெரும் பிரச்சினையாகப் போய்விட்டது. :(

    தீண்டாமை, கல்விக்கூடத்தில் அனுமதி என்பதை எல்லாம் சாதியை வைத்து நம் முன்னோர்கள் அசிங்கம் செய்துவிட்டார்கள். அதனால்தான் இவ்வளவு பிரச்சினைகள். இன்றும் சட்டக்கல்லூரி பிரச்சினையைப் பாருங்கள் :(

    ஹிந்துக்கள் எல்லோரும் சமம் என்று இருந்திருந்தால் எவ்வளவு நல்லா இருந்து இருக்கும்? :(

    ReplyDelete
  55. ஹிந்துக்கள் எல்லோரும் சமம் என்று இருந்திருந்தால் எவ்வளவு நல்லா இருந்து இருக்கும்?

    நன்றாக தான் இருந்திருக்கும். இந்த நிலைமை மாற இன்னும் எவ்வளவு ஆண்டுகள் ஆகும் என நினைக்கிறீர்கள்?

    ReplyDelete
  56. //ஆத்தீகர்கள் பலர், எல்லா அயோக்கியத்தனமும் பண்ணிவிட்டு அதற்கு பரிகாரமாக, கடவுளிடம் ஜால்ரா அடித்து மன்னிப்பு கேட்டுவிட்டு அடுத்து புதிய அயோக்கியதனத்திற்கு ரெடியாவதை பார்த்ததில்லையா நீங்கள்?!//

    அன்பை ஆஸ்தியாகக் கொண்டிருப்பவர்கள் தான் ஆஸ்தீகர்கள்.
    அவர்களிடம் போலிதன்மையோ வேடத்தினையோ காண முடியாது,
    அவர்கள் எவரையும் பழிக்கவோ அழிக்கவோ மாட்டார்கள்.

    அயோக்கியத்தனம் செய்பவர்களானால் அவர்கள் வேடதாரிகள் தானே.
    அவர்களை எப்படி ஆஸ்தீகர்கள் எனலாம் வேண்டுமானால் வேடாஸ்தீகன் எனலாம்.


    யாரானாலும் அவர்வர் செய்ததை அவரவர் அனுப்வித்தே தீரவேண்டும், பரிகாரம், ஜால்ரா எதுவும் துணை போகாது. அது அவர்கள் அறியாமை.

    வேடதாரிகளைக் கருத்தில் கொண்டு அப்பாவி ஆஸ்தீகர்களை திட்டுவது என்ன நியாயம்.

    ReplyDelete
  57. //அங்கு தான் நாஸ்தீகர்கள் போகமாட்டார்களே.
    அவர்கள் மனப் பாரம் குறைந்து மகிழ்ச்சி அடைவதற்காக வேண்டி,
    வசதியுள்ளவர்கள் டிஸ்கோ பார்ட்டி என்று போகிறார்கள்.
    பின்பு பாரதூரமான விளைவுகளால் மன உளைச்சளை அதிகமாக்கிக் கொள்கிறார்கள்.
    வசதி குறைந்தவர்கள் மலிவுசாராயத்தை குடித்து விட்டு பரலோகம் போகிறார்கள்.
    //

    இவரு என்ன சொல்றாரு, டிஸ்கோ பார், கேளிக்கைகளுக்கு செல்பவர்கள் அனைவரும் நாத்திகர்களா ? என்ன கொடுமை சார் இது.

    இப்போதெல்லாம் சினிமா வில்லன்கள் குங்கும பொட்டு சகிதமாகத்தான் வருகிறார்கள், சிவாஜி படத்திலும் கூட சுமன் ஆத்திகராகத்தானே குங்கும பொட்டோடு வருகிறார்.

    ஒழுக்கக் கேட்டிற்கும் ஒருவன் நாத்திகனாக இருப்பதற்கும் என்ன தொடர்பு ?

    ஆத்திகம் என்கிற சித்தாந்தத்தை மறுப்பவன் தான் நாத்திகன், ஒருவரின் தனிப்பட்ட குணநலன்களுக்கும் என்ன தொடர்பு. எனக்கு தெரிந்து இரு மனைவியை உடைய நாத்திகர்கள் மிக மிகக் குறைவு. எய்ட்ஸ் வந்தவர்களில் எத்தனை பேர் கடவுள் நம்பிக்கை இல்லாததால் பாலியல் தொழிலாளியிடம் சென்று இன்பம் துய்து வியாதி வரவழைத்துக் கொண்டேன் என்று சொல்கிறான்.

    டாஸ் மாக் கடையில் கற்பூரம் கொளுத்துவிட்டு தான் பிஸினஸ் ஆரம்பிக்கிறார்கள்.

    ஹூம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் :(

    ReplyDelete
  58. ***ஸ்ரீதர்கண்ணன் said...
    இந்த நிலைமை மாற இன்னும் எவ்வளவு ஆண்டுகள் ஆகும் என நினைக்கிறீர்கள்?***

    உயர் சாதிகளைச் சேர்ந்தவர்கள் திருந்தும் போதுனு நினைக்கிறேன்!

    இந்து என்று தாழ்ந்த சாதியை சேர்ந்தவர்கள் இவர்களைப்போல் பெருமையாக சொல்லிக்கொள்ள முடியாது என்பது இந்த மடையர்களுக்கு தெளிவாக விளங்கும்போது!

    உயர் சாதியை சேர்ந்த ச்சிலதுகள் எப்போதுமே திருந்தவே திருந்தாதுகள்! :(

    ReplyDelete
  59. ****Anonymous said...

    அன்பை ஆஸ்தியாகக் கொண்டிருப்பவர்கள் தான் ஆஸ்தீகர்கள்.***

    சும்மா வாயிக்கு வந்த மாதிரி உளறக்கூடாது!

    ஆத்திகன் என்பர், கடவுள் இருக்கிறார் என்பதை நம்பும் ஒருவர்!

    அவர் நல்லவராக இருக்கலாம், வடிகட்டின அயோக்கியராகவும் இருக்கலாம்!

    ***அவர்களிடம் போலிதன்மையோ வேடத்தினையோ காண முடியாது,**

    இதெல்லாம் சும்மா சொல்லிக்கிட்டு திரிய வேண்டியதுதான்!

    ஊரை ஏய்ப்பவனும், பொய்ச்சாமியாரும், ஷ்ருதி சாய்பாபா/ மற்றும் சத்ய சாய்பாபாவை வணங்கும் பொம்பளை பொறுக்கிகளும் ஆத்தீகர்கள்தாம்.

    ஆனால் ஒரு சில நல்ல ஆத்தீகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதை நான் ஒருபோதும் மறுக்கவில்லை!

    ReplyDelete
  60. ***கோவி.கண்ணன் said...
    //அங்கு தான் நாஸ்தீகர்கள் போகமாட்டார்களே.
    அவர்கள் மனப் பாரம் குறைந்து மகிழ்ச்சி அடைவதற்காக வேண்டி,
    வசதியுள்ளவர்கள் டிஸ்கோ பார்ட்டி என்று போகிறார்கள்.
    பின்பு பாரதூரமான விளைவுகளால் மன உளைச்சளை அதிகமாக்கிக் கொள்கிறார்கள்.
    வசதி குறைந்தவர்கள் மலிவுசாராயத்தை குடித்து விட்டு பரலோகம் போகிறார்கள்.
    //

    இவரு என்ன சொல்றாரு, டிஸ்கோ பார், கேளிக்கைகளுக்கு செல்பவர்கள் அனைவரும் நாத்திகர்களா ? என்ன கொடுமை சார் இது.

    இப்போதெல்லாம் சினிமா வில்லன்கள் குங்கும பொட்டு சகிதமாகத்தான் வருகிறார்கள், சிவாஜி படத்திலும் கூட சுமன் ஆத்திகராகத்தானே குங்கும பொட்டோடு வருகிறார்.

    ஒழுக்கக் கேட்டிற்கும் ஒருவன் நாத்திகனாக இருப்பதற்கும் என்ன தொடர்பு ?

    ஆத்திகம் என்கிற சித்தாந்தத்தை மறுப்பவன் தான் நாத்திகன், ஒருவரின் தனிப்பட்ட குணநலன்களுக்கும் என்ன தொடர்பு. எனக்கு தெரிந்து இரு மனைவியை உடைய நாத்திகர்கள் மிக மிகக் குறைவு. எய்ட்ஸ் வந்தவர்களில் எத்தனை பேர் கடவுள் நம்பிக்கை இல்லாததால் பாலியல் தொழிலாளியிடம் சென்று இன்பம் துய்து வியாதி வரவழைத்துக் கொண்டேன் என்று சொல்கிறான்.

    டாஸ் மாக் கடையில் கற்பூரம் கொளுத்துவிட்டு தான் பிஸினஸ் ஆரம்பிக்கிறார்கள்.

    ஹூம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் :(

    22 November, 2008 8:30 AM"""

    தெளிவாக சொன்னீர்கள் கோவி கண்ணன்!

    இந்த அனானி செம காமெடி பண்ணுறாரு!

    ReplyDelete
  61. நல்ல கருத்துக்கள் வருண்.. வித்தியாசமானவையும்.. :)

    ReplyDelete
  62. உங்களுக்கு நம்பிக்கை இல்லேனா, வாய பொத்திட்டு போகவேண்டியது தானே.. அது என்ன நம்பிக்கை இருக்கவங்கள பத்தியும், பகவான் பத்தியும் புரளி பேசிட்டு திரியற வழக்கம்.. நாத்கிகன்கள் நாயை விட கேவல பிறவிகள்.
    ஞாபகம் இருக்கட்டும், உங்க ஆளுங்க 5 % கூட தேறாது, எங்க பக்கம் 95%.. 95% பேரு நம்பிக்கை வைத்திருக்கும் ஒரு விஷயம், அதுவும் 1000 ஆண்டுகள் மேல இருந்துட்டு வர வழக்கத்தை எப்படிடா வாய்கூசாம இப்படி இல்லாத விஷயம்னு சொல்றீங்க.. இல்லாத ஒரு விஷயம்னா இவ்ளோ நாள் தாக்குப்பிடிக்குமா?? லூசா நீங்க எல்லாம்??

    இப்படி விதன்டாவாதம் பேசிட்டு திரியறது ஒரு பேஷனா போச்சு இப்போ.. உங்களால தான், நாட்டுல சட்டம் ஒழுங்கு போயி. நாடே குட்டி சுவரா போகுது.. மதக்கலவரத்தை தூண்டி விடுறீங்க..

    இதுல ஒருத்தரு , கேவி கண்ணண் பேரு. என்னமோ எல்லாம் தெரிஞ்ச ஏகம்பரம் மாதிரி எழுதுவாரு.. பேர மட்டும் பாரு கண்ணணாம்.. கடவுள் பேர வெச்சுகிட்டு இப்படி பேச வெக்கமா இல்லையா உனக்கு?? பேர மாத்திக்கோ..

    நாஸ்திகம் பேசி இப்படி நம்மள படைச்ச கடவுளை இழிக்கறவன் தீவிரவாதி மாதிரிதான். இவனுங்களையும் தேசிய பாதுகாப்பு சட்டதுல பிடிச்சு உள்ளே போடனும்.. இல்லையனா.. தெய்வீக பாதுக்காப்புனு சட்டம் வந்து இவனுங்கள துல போடனும்.. அப்போது தான் தேசியமும் , தெய்வீகமும் தழைக்கும்.. திராவிட ஜால்றா சனியன்கள் இதுகள்.

    ராஜேஷ்
    திருச்சிராப்பள்ளி

    ReplyDelete
  63. ****வெண்பூ said...
    நல்ல கருத்துக்கள் வருண்.. வித்தியாசமானவையும்.. :)

    23 November, 2008 12:26 AM ***

    நன்றி, வெண்பூ! :-)

    ReplyDelete
  64. ***ராஜேஷ் said...
    உங்களுக்கு நம்பிக்கை இல்லேனா, வாய பொத்திட்டு போகவேண்டியது தானே..***

    இப்போ நாங்க என்ன செஞ்சுப் புட்டோம்னு இப்படி கத்துறீங்க?!

    ***அது என்ன நம்பிக்கை இருக்கவங்கள பத்தியும், பகவான் பத்தியும் புரளி பேசிட்டு திரியற வழக்கம் ***

    நம்ம பகவானைப்பத்தி யாரும் எதுவும் சொல்லலை. அவர் அவர் பாட்டுக்கு ஜாலியா இருக்கார், ராஜேஷ்!

    ReplyDelete
  65. ****ஞாபகம் இருக்கட்டும், உங்க ஆளுங்க 5 % கூட தேறாது, எங்க பக்கம் 95%.. 95% பேரு நம்பிக்கை வைத்திருக்கும் ஒரு விஷயம், அதுவும் 1000 ஆண்டுகள் மேல இருந்துட்டு வர வழக்கத்தை எப்படிடா வாய்கூசாம இப்படி இல்லாத விஷயம்னு சொல்றீங்க..**

    என்னவிசயத்தை சொல்றீங்க?

    எத்தனை விழுக்காடு, எவ்வளவு காலம் என்பது எல்லாம் முக்கியமல்ல!

    எது உண்மை என்பதுதான்!

    ஏன் இப்படி பகவானை ஏமாற்றுகிறீர்களென்று யார் வேணா கேக்கலாம்!

    ReplyDelete
  66. ***இப்படி விதன்டாவாதம் பேசிட்டு திரியறது ஒரு பேஷனா போச்சு இப்போ.. உங்களால தான், நாட்டுல சட்டம் ஒழுங்கு போயி. நாடே குட்டி சுவரா போகுது.. மதக்கலவரத்தை தூண்டி விடுறீங்க..***

    எங்களாலயா?!

    தோடா! ராஜெஷ் காமெடி பண்ணுறாரு!!!

    ReplyDelete
  67. ***இதுல ஒருத்தரு , கேவி கண்ணண் பேரு. என்னமோ எல்லாம் தெரிஞ்ச ஏகம்பரம் மாதிரி எழுதுவாரு.. பேர மட்டும் பாரு கண்ணணாம்.. கடவுள் பேர வெச்சுகிட்டு இப்படி பேச வெக்கமா இல்லையா உனக்கு?? பேர மாத்திக்கோ..***

    அவர் நம்ம பகவான் கிருஷ்ணனோட இன்னொரு அவதாரம். ஆத்திக அயோக்கியர்களை பகவான் பேரில் வந்து அறைகிறார் போலும்!

    எல்லாம் பகவான் செயல், ராஜேஷ்!

    ReplyDelete
  68. ***நாஸ்திகம் பேசி இப்படி நம்மள படைச்ச கடவுளை இழிக்கறவன் தீவிரவாதி மாதிரிதான். இவனுங்களையும் தேசிய பாதுகாப்பு சட்டதுல பிடிச்சு உள்ளே போடனும்.. இல்லையனா.. தெய்வீக பாதுக்காப்புனு சட்டம் வந்து இவனுங்கள துல போடனும்.. அப்போது தான் தேசியமும் , தெய்வீகமும் தழைக்கும்.. திராவிட ஜால்றா சனியன்கள் இதுகள்.

    ராஜேஷ்
    திருச்சிராப்பள்ளி***

    உம்மைச்சொல்லி என்னத்தை செய்ய!

    உம்மை படச்ச அந்த பகவானை நான் நல்லா நாக்கப்புடுங்கிட்டு சாகிறாப்பில நாலு கேள்வி கேட்டுட்டு வரேன்!

    பகவான் உம்மை நரகத்துக்கு அனுப்பி நல்லா பாடம் புகட்டுவாராக!

    LOL LOL!!!

    ReplyDelete
  69. ராஜேஷ்

    ** இதுல ஒருத்தரு , கேவி கண்ணண் பேரு. என்னமோ எல்லாம் தெரிஞ்ச ஏகம்பரம் மாதிரி எழுதுவாரு.. பேர மட்டும் பாரு கண்ணணாம்.. கடவுள் பேர வெச்சுகிட்டு இப்படி பேச வெக்கமா இல்லையா உனக்கு?? பேர மாத்திக்கோ.. **

    இந்த பதிவு உங்களுக்கு பிடிக்கவில்லையெனில் அதை பற்றி மட்டும் கருத்துக்கள் சொல்லுங்கள்.அதை விட்டுவிட்டு இப்படி தனி மனித தாக்குதல் நடத்துவது அநாகரிமான செயல்.

    அப்புறம் இந்த காமெடி நல்லா இருக்கு பாஸு...

    **நாஸ்திகம் பேசி இப்படி நம்மள படைச்ச கடவுளை இழிக்கறவன் தீவிரவாதி மாதிரிதான். இவனுங்களையும் தேசிய பாதுகாப்பு சட்டதுல பிடிச்சு உள்ளே போடனும்.. இல்லையனா.. தெய்வீக பாதுக்காப்புனு சட்டம் வந்து இவனுங்கள துல போடனும்.. அப்போது தான் தேசியமும் , தெய்வீகமும் தழைக்கும்.. திராவிட ஜால்றா சனியன்கள் இதுகள்.**

    ReplyDelete
  70. ஸ்ரீதர் கண்ணன்!

    கோவி கண்ணன் மேல் தனி நபர் தாக்குதலை நான் பார்த்து ரசிக்கவில்லை. அதை டெலீட் செய்து இருக்கலாம்தான். ஆனால், அறியாமையில் வாழும் உயர் சாதி ஆத்தீக இந்துக்களின் மடமையையும், அவர்களின் அநாகரீக நடத்தையையும் காட்டுவதற்காக நண்பர் ராஜேஷின் அநாகரீகப்பதிவை அப்படியே விட்டுவிட்டேன்!

    ராஜேஷை அவரோட பகவாந்தான் தண்டிக்கனும்!

    தண்டிப்பாரா?

    இல்லை ராஜேஷ் அவருக்கும் புகழ்பாடி லஞ்சம்கொடுத்து சொர்க்கத்துக்கு டிக்கெட் வாங்கிவிடுவாரா!

    யாருக்குத்தெரியும்?

    எல்லாம் அவரவர் கற்பனைதான்!

    ReplyDelete
  71. தனிநபர் தாக்கு அல்ல., இப்படி கடவுள் பெயர் வைத்துக்கொண்டே கடவுள் பற்றி தவறான கருத்து பரப்பும் ஒருவரை பற்றி காமிக்கவே அவர் பெயர்.வேறு காரணம் இல்லை

    வருண்,

    உங்கள மாதிரி படைச்சு பாதுக்காக்கிற கடவுளையே கின்டல் பேசிவரும் பேர்வழிகளையே அவர் மன்னித்து விடும்போது, தினம் பகவான வணங்குற எங்களை அவர் தன்டிக்க ஏன் நாங்கள் லஞ்சம் கொடுக்கனும்?

    தெய்வ பக்தி இருக்கவஙக்ள கடவுள் எப்பவும் கைவிடமாட்டார்.

    கடவுளயே நாக்க புடிங்கிக்க வைக்கிற மாதிரி கேள்வி கேட்பேனு சொல்ல வெக்கமாயில்யா?

    //எத்தனை விழுக்காடு, எவ்வளவு காலம் என்பது எல்லாம் முக்கியமல்ல!

    எது உண்மை என்பதுதான்!
    //

    எது உண்மைனு எப்படி கேட்குறே?? வெக்காமில்லயா.. கடவுள் இல்லைனு நிருபிச்சாச்சா?

    //அறியாமையில் வாழும் உயர் சாதி ஆத்தீக இந்துக்களின் மடமையையும், அவர்களின் அநாகரீக நடத்தையையும் காட்டுவதற்காக //

    இதுலயே உங்க லட்சனம் தெரியரது பாரு.. நான் எங்கேயாச்சும் சாதி பத்தி பேசினேனா?? நீயே உயர் சாதி இந்து அப்படினு எழுதறே.. இது மாதிரி தான் எல்லாத்தயும் பிரிச்சு பேசி பழக்கப்படுத்தறீங்க..
    நான் எங்கே என்னை உயர்சாதி இந்து நு சொன்னேன்.. காமி பார்க்கலாம்..

    நீங்க இப்படி திரிச்சு பேசுறது துவேஷம் இல்லயா??

    ராஜேஷ்
    திருச்சிராப்பள்ளி

    ReplyDelete
  72. ****ராஜேஷ் said...
    தனிநபர் தாக்கு அல்ல., இப்படி கடவுள் பெயர் வைத்துக்கொண்டே கடவுள் பற்றி தவறான கருத்து பரப்பும் ஒருவரை பற்றி காமிக்கவே அவர் பெயர்.வேறு காரணம் இல்லை *****

    கடவுளுக்கு அவங்க அப்பா அம்மாவா பேர் வச்சா?

    உங்களுக்கு என்ன புரியலைனா, கடவுளுக்கு பேர் வச்சதே மனுஷந்தான். நீங்க பேசுவது சுத்தமான உளறல்!

    ReplyDelete
  73. ***வருண்,

    உங்கள மாதிரி படைச்சு பாதுக்காக்கிற கடவுளையே கின்டல் பேசிவரும் பேர்வழிகளையே அவர் மன்னித்து விடும்போது, தினம் பகவான வணங்குற எங்களை அவர் தன்டிக்க ஏன் நாங்கள் லஞ்சம் கொடுக்கனும்? ***

    என்னைப்படச்சதும் கடவுள் இல்லை! என்னை பாதுகாப்பதும் கடவுள் இல்லை!
    சும்மா சும்மா கடவுளுக்கு எல்லா க்ரிடட்டயும் கொடுக்க வேணாம்!

    ReplyDelete
  74. ***இதுலயே உங்க லட்சனம் தெரியரது பாரு.. நான் எங்கேயாச்சும் சாதி பத்தி பேசினேனா?? நீயே உயர் சாதி இந்து அப்படினு எழுதறே.. இது மாதிரி தான் எல்லாத்தயும் பிரிச்சு பேசி பழக்கப்படுத்தறீங்க..
    நான் எங்கே என்னை உயர்சாதி இந்து நு சொன்னேன்.. காமி பார்க்கலாம்.. ***

    உம்மை மாதிரி ஹிந்துமத வெறி பிடிச்சு அலையிறவா எல்லாமே உயர் சாதி மூடர்கள்தாம்! இதை எல்லாம் அறிந்துகொள்ள கொஞ்சம் "காமன் சென்ஸ்" இருந்தால் போதும்!

    ReplyDelete
  75. ***நீங்க இப்படி திரிச்சு பேசுறது துவேஷம் இல்லயா??

    ராஜேஷ்
    திருச்சிராப்பள்ளி

    24 November, 2008 2:44 AM **

    ஏன் எல்லாமே பகவான் செயல்தானே?

    நான் திரிச்சு பேஎசுவதும் அவன் செய்தல் தான்!

    போய் அவர் கிட்டயே கேளும்!

    ReplyDelete
  76. ஏன் வருண்

    என்னோட கமெண்ட் பப்ளிஷ் ஆகல.

    ReplyDelete
  77. ***அமிர்தவர்ஷினி அம்மா said...
    ஏன் வருண்

    என்னோட கமெண்ட் பப்ளிஷ் ஆகல.

    25 November, 2008 1:28 AM***

    வாங்க அமிர்தவர்ஷினி அம்மா!!

    நான் எந்த காமெண்ட்டையும் மாடெரேட்டோ அல்லது டெலீட்டோ பண்ணவில்லைங்க!

    ஏதாவது க்ளிட்ச்சா இருக்கலாம். முடிந்தால் மறுபடியும் ட்ரை பண்னுங்க, ப்ளீஸ்!

    ReplyDelete
  78. வருண்!என்னுடைய முந்தைய பின்னூட்டத்துக்கு என்ன பதில் சொல்கிறீர்கள் என்று தெரிந்து கொள்வதற்காக வந்தால் நண்பர் ராஜேஷ் களத்தில் அடித்து பிடித்து ஆடிக்கொண்டிருக்கிறார்.சிரிப்புத்தான் வருகிறது:))))

    ReplyDelete
  79. வாங்க நடராசன்!

    உங்களுக்கு ஏதோ பதில் சொன்னேன். குடுகுடுப்பையும் பதில் சொன்னார்.

    ஆமாம் ராஜேஷ், இஷ்டத்துக்கு எல்லோரையும் திட்டிவிட்டு போயிட்டார்.

    அவரை பகவான் கவனித்துக்குவார்! :-)

    ReplyDelete
  80. ************* பொதுவாக மனிதனாகப்பிறந்தவர்கள், ஏமாற்றாமல், திருடாமல், பெண் பொறுக்கியாக இல்லாமல் ************

    இதுல உள்ள கொடுமைய பாருங்க வருன் ! பெண் பொறுக்கி அப்படிங்கற சொல் ஆண்களை குறிப்பிடும் சொல் ! அதே மாதிரி ஆண் பொறுக்கின்னு சொன்னாலும் ஆண்களை குறிப்பிடுவதாகவே இருக்கிறது.

    ReplyDelete
  81. நிறைய நேரம் கடவுளை "ஆண்டவன்" என்று ஆண்பாலாகத்தானே சொல்றோம், மணிகண்டன்!

    பாஸிடிவான விசயங்களை ஏற்றுக்கொள்கிறோம் ஆனால் இது நெகடிவா எழுதும்போது நம்க்கு குத்துது :-)

    ReplyDelete
  82. ///
    நாத்தீகர்களுக்கு கடவுள் என்றுமே எதிரி அல்ல. கடவுள் இல்லாமல் அவர்களால் வாழமுடியுது. அவர்களுக்கு கடவுளின் உதவி தேவைப்பட வில்லை! நாத்தீகர்களைப் பொறுத்தமட்டில் கடவுள் கடவுள்னு சொல்லி ஊரை ஏமாற்றும் சில ஆத்தீகர்களைத்தான் அவர்களுக்கு பிடிக்காது! கடவுள் என்பவர் இருந்தால் அவர் ஒரு போதும் நாத்தீகர்களுக்கு எதிரி அல்ல.
    ////


    இத கத்தி க்கத்தி சொன்னாலும் சிலருக்கு புரியரது இல்லை

    ReplyDelete
  83. ////
    கடவுள் எதிரிகளின் பதிவுகளைப் பாருங்கள். வசை மொழிகளும், சாதிதிட்டுகளும். பண்பற்றதன்மையும் அப்படியே கொடி கட்டிப் பறக்கும்.
    அவர்கள் பதிவுகளை க்ளிக் பண்ணவே அருவருப்பாக இருக்கும்.

    கடவுளை நம்பினோர் கைவிடப்படார்,
    /////

    என்ன கொடுமை???அய்யா அப்படியே ஆத்திக வாதிகளை கவனியுங்கள்
    மதம் ,கடவுள் என்று கூறிகொண்டு ஆயுதம் தூக்குவதை
    90 சதவித தீவிரவாதம் கடவுள் பெயரால்தான்
    எந்த நாத்தீகவாதியும் கோவிலை இடித்ததில்லை

    ReplyDelete