Friday, December 12, 2008

காதலுடன் -3

ராஜூ கோபத்துடன், “நான் உன்னிடம் அதெல்லாம் கேட்டேனா? என்றார். நான் உடனே, "கோபப்படாதீங்க ராஜு, நானும் என் ரிசல்ட்ஸ் தருகிறேன்" சொன்னேன், ரமேஷ்”

”ஆனால் நீ அப்படி கேட்டது பிடிக்கவில்லையா அவருக்கு?”

“ஆமா, அது நான் என்ன பண்ணுறது, ரமேஷ்?”

"உன் முதலிரவு ரொம்ப வித்தியாசமாக ஆரம்பித்து உள்ளது, சந்தியா! ஆனால் எனக்கு இதில் எதுவும் தப்பா தெரியலை! ஆனால் ஒரு சில பேருக்கு இப்படி கேட்பதில் உள்ள நியாயம் தெரிந்தும் ஒரு வரட்டு கவுரவம் இருக்கும் இல்லையா? இவ என்ன கேட்பது, நான் என்ன கொடுப்பது என்று. சரி, வேற என்ன கேட்ட அவரிடம்?”

“நான் அவரிடம் சொன்னேன், கல்யாணம் ஆனாலும், எனக்குனு ஒரு சில பர்சனல் விசயங்கள் சில இருக்கு, அதையெல்லாம் என்னால் முழுவதுமாக ஷேர் பண்ண முடியாது. என்னுடையை சாலரியை என் தனி அக்கவுண்ட்ல போடுவேன். ஏன் என்றால், என் அப்பா, அம்மா மற்றும் ஃப்ரெண்ட்ஸ் சம்மந்தப்பட்ட கம்மிட்மெண்ட்ஸ் க்கு தேவைப்படும். அதே போல் அவரும் செய்துக்கலாம் நு சொன்னேன். அவருடைய பணத்திற்காக நான் அவரை கல்யாணம் செய்யவில்லை! அதே சமயத்தில், வாடகை, வீட்டு தேவைகள் எல்லாவற்றையும் சரியாக கணக்குப்பண்ணி என் பங்கை நான் கொடுத்துவிடுவேன் என்றேன். அதேபோல் அவரிடம் எதிர் பார்ப்பேன் என்றேன். அந்த “ப்ராப்பசிஷன்” அவருக்கு சுத்தமா பிடிக்கவில்லை!”

“எதுக்கு இந்த மாதிரி “ப்ராபொஷிஷன்” சந்தியா?

“என் அப்பா, அம்மா என் ஃப்ரெண்ஸ்லாம் எனக்கு ரொம்ப முக்கியம், ரமேஷ். அவங்க மிடில்-க்ளாஸ். அவர்களுக்கு தேவைகள் இருக்கு. இன்னைக்கும் நான் அவர்களுக்கு தேவையான நேரம் பணம் மற்றும் பலவிதத்தில்உதவுகிறேன். என் கல்யாணம் இதை எல்லாம் மாற்றிவிடக்கூடாது இல்லையா? அதுவும் வயதாக ஆக மருத்துவ செலவு அது இதுனு வரும். நான் நிறைய உதவ வேண்டிய நிலை வரலாம். நான் இதை என் கணவருக்கு ஒரு சுமையாக வைக்க விரும்பவில்லை! என்னுடைய தனிப்பட்ட பிரச்சினையாகத்தான் நான் எடுத்துக்க விரும்புறேன்.”

“இதெல்லாம் ராஜுவுக்கு புரியும் இல்லையா? இப்படி ஒண்ணு கேக்காமலே இருந்து இருக்கலாம் இல்லையா?”

“Ramesh! I don't want to take any chance here! What if he does not understand? I don't want to overlook that possibility. புரியுதோ, புரியலையோ, ரமேஷ், என்னோட தலைவலி எனக்குத்தான் புரியும். அதை அவரும் புரிந்து கொள்ளனுமோ, புரிந்து கொண்டு எனக்காக உருகனுமோனோ, அல்லது அதுபோல் நடிக்கனுமோனு நான் அவரிடம் எதிர் பார்க்கவில்லை. நான் அவரிடம் போய் இதுபோல் சின்ன சின்ன விசயத்தை எல்லாம் சொல்லி, விளக்கி, ஏதோ அவரிடம் பிச்சை எடுப்பது போல் கேட்க எனக்கு இஷ்டம் இல்லை”

“சரி, அதற்கு அவர் ரியாக்ஷன் எப்படி இருந்தது?”

“இதெல்லாம் அவருக்கு சுத்தமா பிடிக்கவில்லை, ரமேஷ். அதாவது புரிந்தாலும், இவ என்ன இப்படி “லா-பாயிண்ட்” பேசுவது என்கிற ஆணாதிக்க எண்ணம் இருக்கு அவரிடம். நான் ஏதோ தேவையில்லாமல் சின்ன விசயத்தை பெருசாக்குவதுபோல நினைக்கிறார். நான் இது சம்மந்தமாக அவரிடம் கெஞ்ச விரும்பவில்லை. அதான் எங்கள் திருமண உறவு இந்த நிலைமைக்கு வந்துவிட்டது!”

“உனக்கு ஐஸ் வைக்கிறதுக்காக சொல்லலை, சந்தியா. எனக்கு உண்மையிலேயே இந்த டீல் பிடிச்சி இருக்கு. ஒரு சில அம்மா அப்பா ஃபேமிலி சம்மந்தப்பட்ட பிரச்சினைகளை நம்ம வாழ்க்கை துணை புரியாமல் போவ தற்கு வாய்ப்புகள் நிச்சயம் இருக்கு. திடீர்னு அவங்களுக்கு சப்போர்ட் பண்ணுவதை நிறுத்த முடியாது என்பது உண்மைதான்..அதேபோல் அவர்கள் உன்னுடைய உறவுகள், அவைகளை நீ உணருவதுபோல் உன் கணவர் உணருவது கடினம்னு எனக்கு தோனுது. என்னை ராஜு நிலைமையில் வைத்து யோசித்து சொல்றேன்”

“நிஜம்மாவா!! தேங்க் யு, ரமேஷ்!”

“எதுக்கு தேங்க்ஸ்லாம் சந்தியா?”

“இல்லை ரமேஷ், என்னை யாருமே புரிஞ்சுக்கலை ரமேஷ். ஒவ்வொரு சமயம் ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. அப்பா, அம்மா எல்லாம் கூட நான் அதிகப் பிரசங்கித்தனம் பண்ணுவதாக சொன்னாங்க, ரமேஷ்”

“அதைப்பத்தி எல்லாம் கவலைப்படாதே சந்தியா. அது ராஜூவுக்கும் புரியத்தான் செய்யும்னு தோனுது”

“என்ன புரிஞ்சதோ போங்க . அவருக்கு இது பிடிச்ச மாதிரி தெரியலை. நானும் இதை கெஞ்சு கேக்கலை. ஒரு மாதிரி டிமாண்ட் பண்ணினேன் னு தான் சொல்லனும்”

"எதையுமே சொல்றவிதமா சொன்னால் புரிந்துகொள்வார்கள் னு சொல்லுவாங்க. அந்த சூழ்நிலையில் வின் - வின் சிச்சுவேஷன் என்பார்கள். ஆனால் அது எப்படினுதான் யாருக்கும் தெரியாதுனு நினைக்கிறேன்"

"நான் எனக்கு சரினு தெரிந்ததை எனக்கு தெரிந்தவிதத்தில் பேசினேன். பின்னால் நிறைய பிரசினையை தவிர்க்கலாம்னு பார்த்தேன். இப்போ ஆரம்பித்திலேயே பிரச்சினையாருச்சுனு நினைக்கிறேன்" அவள் சிரிக்க முயற்சித்தாள்.

”இதை எல்லாம் என்னிடம் பகிர்ந்து கொள்வதற்கு நன்றி, சந்தியா!”

"சரி, ரமேஷ், அடுத்த சாடர்டே என் வீட்டுக்கு வர்றீங்களா? சும்மா ஏதாவது காஃபி கீஃபி தர்றேன்"

"வேற என்ன கிடைக்கும்?"

"நீங்க வாங்க, அப்புறம் பார்க்கலாம். சரியா?"

"சரி வர்றேன். யாராவது கம்பெணி அழச்சுண்டு வரவா?"

"யாரு உங்க கேர்ள் ஃப்ரெண்டையா? அழச்சிட்டு வாங்களேன்?"

"வேணாம் வேணாம்"

"ஏன்?"

"என்னுடைய ஆறாவது அறிவு வேணாம்னு சொல்லுது"

சத்தமாக சிரிக்கிறாள்

"என்ன சிரிப்பு?"

"பரவாயில்லை உங்க அறிவு அப்பப்போ ஒழுங்கா வேலை செய்யுது"

"உன்னை சனிக்கிழமை வந்து கவனிச்சுக்கிறேன்"

"ரொம்ப பயமுருத்தாதீங்க! உங்க வீரத்தை நேரில் காட்டவும்"

"சரி நான் ஃபோனை வைக்கவா?"

"இதென்ன பர்மிஷன் கேக்குறீங்களா? சரி பாவம் பொழச்சு போங்க!"

"பை சந்தியா, சீ யு சாட்டர்டே! ஹேய் வாட் டைம்?"

"ஒரு காலையில் 11 மணிக்கு வாங்க!"

"சரி கால் பண்ணுறேன். இஃப் தேர் இஸ் எனி சேஞ்ச் ஆஃப் ப்ளான், ஐ வில் லெட் யு நோ. பை"

-தொடரும்

15 comments:

  1. ம்ம்ம் நல்ல கரு .. பாக்கலாம் அடுத்து எப்படி எல்லாம் போகுதுன்னு :)

    ReplyDelete
  2. "உன் முதலிரவு ரொம்ப வித்தியாசமாக ஆரம்பித்து உள்ளது, சந்தியா! ஆனால் எனக்கு இதில் எதுவும் தப்பா தெரியலை! //



    ரிலாக்ஸ்ன்னு சொல்லி வர வைச்சிட்டு டென்சன் பண்றீங்களே...........

    ReplyDelete
  3. ஏதோ அவரிடம் பிச்சை எடுப்பது போல் கேட்க எனக்கு இஷ்டம் இல்லை”//


    ?
    ?
    ?
    ?
    ?
    ?
    ?
    ?

    ReplyDelete
  4. வாங்க எஸ் கே!

    நானும் எப்படி எடுத்துட்டுப் போகமாம்னு யோசிச்சுக்கிட்டுத்தான் இருக்கேன்! :-)

    ReplyDelete
  5. ****SUREஷ் said...
    "உன் முதலிரவு ரொம்ப வித்தியாசமாக ஆரம்பித்து உள்ளது, சந்தியா! ஆனால் எனக்கு இதில் எதுவும் தப்பா தெரியலை! //
    ரிலாக்ஸ்ன்னு சொல்லி வர வைச்சிட்டு டென்சன் பண்றீங்களே...........****

    வாங்க SUREஷ்!

    ரொமப் யுனீக் கா இருக்கு உங்க பெயர்!

    இதெக்கெல்லாம் பயப்படலாமா சுரேஷ்! சும்மா கதைதானே? :-)

    ReplyDelete
  6. வருண் நீங்க ஏன் டிவி சீரியல்களுக்கு கதை எழுத கூடாது :)

    ReplyDelete
  7. வாங்க ஸ்ரீதர்கண்ணன்!

    அப்படி ஏதாவது செய்தால், நம்ம மக்கள் பாவம் இல்லையா?! :-)

    ReplyDelete
  8. "சரி, ரமேஷ், அடுத்த சாடர்டே என் வீட்டுக்கு வர்றீங்களா? சும்மா ஏதாவது காஃபி கீஃபி தர்றேன்"

    "வேற என்ன கிடைக்கும்?"

    "நீங்க வாங்க, அப்புறம் பார்க்கலாம். சரியா?"

    //

    இப்படியா கேப்பாங்க............

    ReplyDelete
  9. வாங்க குடுகுடுப்பை!

    நீங்க என்னதான் சொல்ல வறீங்க? அந்த டேஷெஸ் எல்லாம் எதுக்கு? :) :)

    ReplyDelete
  10. யோவ் வருன், உங்க கதாநாயகி சரியான லூசா ? If she does not want to take any
    chance, why the hell she waited so long ? முதலிரவு அன்னிக்கு சொக்குபுடி போடற டைப்பா?

    ஸ்ரீதர் நாராயணன் அருமையான ஐடியா கொடுத்து இருக்காரு !

    ReplyDelete
  11. ஊடல ரொம்ப அழகா எழுதறீங்க வருன் !

    ReplyDelete
  12. your writtings show you as a murpokkaalar. I noticed a small thing. Always your heroine speaks with the hero with respect in panmai "nga". but all your male characters call the female in singular (orumai). why?

    - Balyaa

    ReplyDelete
  13. ***Anonymous said...
    your writtings show you as a murpokkaalar. I noticed a small thing. Always your heroine speaks with the hero with respect in panmai "nga". but all your male characters call the female in singular (orumai). why?

    - Balyaa***

    Balya: It is a beautiful observation. That sounds not like "muRpOkkuvAthi" right? LOL!

    I dont know why :) But I think the heroes are couple of years older than the heroines :) :)

    ReplyDelete
  14. ***மணிகண்டன் said...
    யோவ் வருன், உங்க கதாநாயகி சரியான லூசா ? If she does not want to take any
    chance, why the hell she waited so long ? முதலிரவு அன்னிக்கு சொக்குபுடி போடற டைப்பா?

    ஸ்ரீதர் நாராயணன் அருமையான ஐடியா கொடுத்து இருக்காரு !

    15 December, 2008 7:50 AM***

    மணிகண்டன்!
    அவரு பேரு ஸ்ரீதர்கண்ணன்! :) :)

    ------------

    நம்ம ஹீரோயின் ரொம்ப நல்லவர்தாங்க! ஹாணெஸ்டா இருக்கார். அவர் யார் பணத்துக்கும் ஆசைப்படலை. அதே சமயத்தில் ஏமாரவும் தயாரா இல்லை. அதான் இவ்ளோ பிரச்சினைகளும் :) அவருக்குனு ஒரு லூசு பிறக்காமலா இருப்பார் ? :) :)

    ReplyDelete
  15. ***மணிகண்டன் said...
    ஊடல ரொம்ப அழகா எழுதறீங்க வருன் !

    15 December, 2008 7:52 AM ***

    :) :) :)

    ReplyDelete