Tuesday, January 13, 2009

ஏ ஆர் ரகுமான் அடுத்த "ஆஸ்கர் (தமிழ்) நாயகனா"?

ஏ ஆர் ரகுமான் "கோல்டன் க்ளோப்" அவார்ட் பெற்ற முதல் தமிழன்!













இன்னும் நான் "ஸ்லம் டாக் மில்லியனர்" பார்க்கவில்லை. நம்மதான் தமிழனாச்சே! நமக்கு இந்திப்படமெல்லாம் பிடிக்குமா? இது ஒரு இந்தி-ஆங்கிலம் கலந்த படம்னு சொல்றாங்க!

நம்ம ஏ ஆர் ரகுமான் "பெஸ்ட் ஒரிஜினல் ஸ்கோர்" க்கு ஒரு "கோல்டன் க்ளோப்" அவார்ட் வாங்கி இருக்கார்! இதை அடுத்து ஒரு ஆஸ்கரும் வாங்கினாலும் வாங்கிவிடுவார்.

http://edition.cnn.com/2009/SHOWBIZ/Movies/01/11/golden.globe.list/
ஏ ஆர் ரகுமானிடம் என்ன ஒரு சிறப்புனா, இவர் எதுக்குமே அலட்டிக்கொள்வது இல்லை! அதுதான் இவர் வெற்றிக்கு காரணமானு தெரியலை. நம்ம "ஆஸ்கர் நாயகரெ"ல்லாம் இன்னும் "கோல்டன் க்ளோப்" கூட வாங்கவில்லை.


ஏ ஆர் ரகுமான் இந்திப்படத்திற்கு போனதால்தான் இதுபோல் வாய்ப்பு கிடைத்துள்ளது என்றுதான் தோன்றுகிறது. என்னதான் நம்ம 70 கோடி யில் சிவாஜி தசாவதாரம் மற்றும் 150 கோடியில் எந்திரன், மர்மயோகி போன்ற படங்கள் எடுத்தாலும் இந்திப்படத்திற்குத்தான் உலக அளவில் கவனிப்பு அதிகம். "யு கே பாக்ஸ் ஆஃபிஸ்" பார்த்தால் தெரியும், ஒரு சாதாரண "சாருக் கான்" மற்றும் அமீர் கான் படங்கள் நம்ம பெரிய பொருட்செலவில் எடுத்த படங்கள் தசாவதாரம் மற்றும் சிவாஜியை விட அதிக கலக்ஷன் பெறுகிறது. அதனால் இந்திப்படத்தில் நுழைந்ததால்தான் இவருக்கு இந்த அளவுக்கு உயர முடிந்தது என்பது ஒரு கசப்பான உண்மை!

எது எப்படி இருந்தாலும் ஏ ஆர் ரகுமான் ஒரு தமிழர். கே பாலசந்தர் தயாரிப்பில், மணி ரத்தினம் இயக்கிய "ரோஜா" என்ற தமிழ் படத்தின் மூலம் அறிமுகமாகி சினிமா உலகிற்கு வந்தவர்.

அவர் தாய் மொழி தமிழ்! அதனால் நம்ம எல்லோரும் இந்த வெற்றியை நினைத்து பெருமிதம் அடையனும்! விரைவில் அவருக்கு ஆஸ்கர் கிடைத்து அவர் அலட்டாத ஆஸ்கர் நாயகனாக வாழ்த்துக்கள்.

31 comments:

  1. I wish the same
    Bash

    ReplyDelete
  2. ***Anonymous said...
    I wish the same
    Bash***

    நிச்சயம் ஆஸ்கர் பெற வாய்ப்பு இருக்கிறது :-)

    ReplyDelete
  3. Here is my post related to slumdog millionaire. It is worth to watch.

    Another TAMIL person got more popular after this movie. She is Mathangi "Maya" Arulpragasam a.k.a MIA

    //
    ஒரு சாதாரண "சாருக் கான்" மற்றும் அமீர் கான் படங்கள் நம்ம பெரிய பொருட்செலவில் எடுத்த படங்கள் தசாவதாரம் மற்றும் சிவாஜியை விட அதிக கலக்ஷன் பெறுகிறது. அதனால் இந்திப்படத்தில் நுழைந்ததால்தான் இவருக்கு இந்த அளவுக்கு உயர முடிந்தது என்பது ஒரு கசப்பான உண்மை!
    //

    உண்மையாயிருக்கலாம். ஆனால் ஹிந்தி படத்தின் வரவு அதன் தரத்தினால் அல்ல.. மக்கள் தொகையினால். தமிழ் படங்களும் அதற்கு சளைத்தல்ல.. தமிழ் படங்களும் உலகளவில் நல்ல வரவேற்பை பெறுகிறது..

    ஆனால் இப்போது பாலிவுட் செழுமையாக இருக்கிறது Wednesday, Taare Jamin paar, even Gajini and this movie

    துரதிர்ஷ்ட வசமாக தமிழில் குசேலன், குருவி, வில்லு என பல குப்பைகள் தொடர்கின்றன...

    தமிழுக்கு இது போதாத காலமே தவிர, நாம் எந்தளவுக்கு வடக்கத்தியர்களுக்கு சளைத்தவர்களல்லர்.

    ReplyDelete
  4. என்னது ஸ்லம் டாக் மில்லியனர் ஹிந்தி படமா? நான் இங்கிலீபீசு படம்னு நினைச்சிக்கிட்டு இருக்கேன்...(நமக்கு இங்கிலிப்பீசு, இந்தி ரெண்டும் தெரியாதுங்கிறதுனால ரெண்டும் ஒண்ணு தாங்கிறது வேற விஷயம்!)

    //
    நம்ம "ஆஸ்கர் நாயகரெ"ல்லாம் இன்னும் "கோல்டன் க்ளோப்" கூட வாங்கவில்லை.
    //

    இது ரகுமானுக்கு பாராட்டா இல்லை கமலுக்கு இடிப்பா? இந்தியாவில் பேசும் மொழி ஹிந்தி அல்லது இன்டியன் என்று பலருக்கு தவறான புரிதல் இருக்கிறது...கமல் ஹிந்தி படங்களில் நடித்திருந்தாலோ இல்லை அமெரிக்க படங்களில் நடித்திருந்தாலோ என்றோ ஆஸ்கர் அவார்ட் வாங்கியிருப்பார்...அவரது தேவர் மகன், குணா, மகா நதி நடிப்புக்கே ஆஸ்கர் அவார்ட் கொடுத்திருக்க வேண்டும்...என்ன செய்ய, எல்லாத் திறமைகளும் கவனிக்கப்படுவதில்லையே?

    அது சரி கமலைப் பற்றி அப்படி எழுதினாரு, இப்ப கொழப்பறாருன்னு சொல்லாதீங்க....எனக்கு கமலைப் பிடிக்கும்...குறிப்பா குணா ரொம்ப பிடிச்சிருந்தது...ஆனா அப்பப்ப நக்கல் அடிக்கிறது எல்லாம் ஜாலிக்கு...எங்க தலைய நாங்க ஓட்டாட்டி யாரு ஓட்டறது?? அப்ப ரஜினி?? அவரு தலைக்கெல்லாம் தலை :0))

    ReplyDelete
  5. ஆஸ்கரு குடுத்தா என்ன குடுக்காட்டி என்ன, நாங்கெல்லாம் ஆஸ்கருக்கே அவார்டு குடுப்போம் :0)))

    ReplyDelete
  6. ***உண்மையாயிருக்கலாம். ஆனால் ஹிந்தி படத்தின் வரவு அதன் தரத்தினால் அல்ல.. மக்கள் தொகையினால். தமிழ் படங்களும் அதற்கு சளைத்தல்ல.. தமிழ் படங்களும் உலகளவில் நல்ல வரவேற்பை பெறுகிறது..***

    ஆள்:

    மக்கள்தொகைதான் நான் ஒத்துக் கொள்கிறேன்.

    தமிழ்ப்படங்கள் உலக அளவில் இன்னும் வரவேற்பை பெறவில்லை என்று நினைக்கிறேன்.

    உங்க ரிவியூ பார்த்தேன். படம் பார்த்துவிட்டவந்து என் ஒப்பீனியன் சொல்றேன். இப்போ சரியா புரியலை.

    ReplyDelete
  7. ***அது சரி said...
    என்னது ஸ்லம் டாக் மில்லியனர் ஹிந்தி படமா? நான் இங்கிலீபீசு படம்னு நினைச்சிக்கிட்டு இருக்கேன்...(நமக்கு இங்கிலிப்பீசு, இந்தி ரெண்டும் தெரியாதுங்கிறதுனால ரெண்டும் ஒண்ணு தாங்கிறது வேற விஷயம்!)***

    ஒரு மாதிரி கலப்புனு நினைக்கிறேன். டெக்னிஷியன் எல்லாம் ஃபாரீன், நடிகர்கள் கொஞ்சம் இந்தியர்கள். இந்தியால எடுத்ததால் ஹிந்தி நிறைய பேசுவதாக சொல்றாங்க!

    நான் இன்னும் படம் பார்க்கலை!

    ReplyDelete
  8. /
    ஒரு மாதிரி கலப்புனு நினைக்கிறேன். டெக்னிஷியன் எல்லாம் ஃபாரீன், நடிகர்கள் கொஞ்சம் இந்தியர்கள். இந்தியால எடுத்ததால் ஹிந்தி நிறைய பேசுவதாக சொல்றாங்க!

    நான் இன்னும் படம் பார்க்கலை!
    /

    It is a hollywood movie about indian boy, most of the dialogues are in english except few

    ReplyDelete
  9. ***குறிப்பா குணா ரொம்ப பிடிச்சிருந்தது***

    குணாவா!!!

    ஆள விடுங்க சாமி!!!

    "நீ அபிராமி நான் சாமி" LOL!!!

    ReplyDelete
  10. //
    உங்க ரிவியூ பார்த்தேன். படம் பார்த்துவிட்டவந்து என் ஒப்பீனியன் சொல்றேன். இப்போ சரியா புரியலை.
    //
    அடப்பாவி மக்கா.. என்ன புரியல :)

    That post just about that movie.. it is not exactly a review .

    ReplyDelete
  11. ***It is a hollywood movie about indian boy, most of the dialogues are in english except few****

    Well, my colleague was telling me that lots of dialogues are in hindi as it is taken in mumbai!

    Obviously she exagerrated :-)

    ReplyDelete
  12. ***That post just about that movie.. it is not exactly a review .**

    I read it aaL. I get the picture but you know, it is hard to get the "feel" unless I see the movie esp I want to hear the song for which ARR was awarded GG award :)

    ReplyDelete
  13. இசை வாழ்த்துக்கள் ஏ.ஆர்.ரகுமான்!

    ReplyDelete
  14. "இசை வாழ்த்துக்கள்!!!"

    புதுமையாக இருக்கு உங்கள் வாழ்த்து, ராஜ நடராஜன்! :-)

    ReplyDelete
  15. பொங்கல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  16. பொங்கல் வாழ்த்துக்கள் வேலன்! :-)

    ReplyDelete
  17. ஏதாவது ஒரு festival வந்தா, அதப்பத்தி எழுதற பெரியாரிஸ்ட் மாதிரி ஆகிட்டீங்க நீங்க ! எதப்பத்தி எழுதினாலும் கமல விடறது இல்ல.

    இதுல வேற கமல் ரசிகர்கள் ரொம்ப sensitive ன்னு அங்கலாயிக்கறீங்க ! என்ன பண்றது !

    slum dog millionaire டீசன்டான படம். எனக்கு திரைக்கதை ரொம்பவே பிடிச்சி இருந்தது. அத தவிர, actors எல்லாம் நல்லா பண்ணி இருந்தாங்க. நான் படம் பாக்கறபோது மியூசிக் ARR ன்னு தெரியாம தான் பாத்தேன். சில சமயம் வசனத்த விட இரைச்சலா இருந்தது. ஆனாலும் ஒரு சில எடத்துல ரொம்ப பிரமாதமா இருந்தது. அதுவும் ரயில்வே ஸ்டேஷன்லேந்து வெளில போகும்போது வரும் மியூசிக் கலக்கல்.

    இதே படம், இதே மாதிரி, இந்தியாவுல தயாரிக்க பட்டு இருந்தா ஒரு அவார்டும் கிடைச்சி இருக்காது. அது மட்டும் நிச்சயம்.

    ReplyDelete
  18. சொல்ல மறந்துட்டேன் பொங்கல் வாழ்த்துக்கள் வருன்.

    ReplyDelete
  19. ***மணிகண்டன் said...
    சொல்ல மறந்துட்டேன் பொங்கல் வாழ்த்துக்கள் வருன்.***

    உங்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் மணிகண்டன்!

    ----------------------

    முன்னால ஒருத்தர் வருவாரு, அவர், குஷ்பு பத்தி ஏதாவது கற்புபத்தி பேசயிலே பேசினால், ரொம்ப கோபமா வந்து "குஷ்புவை விடுயா" என்பார்!

    இப்போ நீங்க, ஆஸ்கர்பத்தி பேசும்போது, கமல் பத்தி பேசினால், நீங்க கமலவிடமாட்டீங்கனு சொல்றீங்க!

    தமிழ்நாட்டில் கற்புனா குஷ்பு ஞாபகம் வருவதும், ஆஸ்கர்னா கமல் ஞாபகம் வருவதும் உண்மைதான். அப்படி இருக்கும்போது எப்படிங்க? :-)

    ReplyDelete
  20. //
    இவர் எதுக்குமே அலட்டிக்கொள்வது இல்லை! அதுதான் இவர் வெற்றிக்கு காரணமானு தெரியலை
    //

    இதுல என்ன சந்தேகம் வருண்... "அடக்கம் அமரருள் உய்க்கும்" படிச்சதில்லையா?

    ReplyDelete
  21. உங்களுக்கு ஆஸ்கார்ன்னா மட்டும் தான் கமல் ஞாபகம் வருதா ? ஆத்திகம், நாத்திகம், உலக சினிமா, ரஜினி, உறவுகள், கல்யாணாம் இதுல எத பத்தி பேசினாலும் கமல விடறதா இல்ல நீங்க.

    அதே மாதிரி தான் குஷ்புவும். கமல பத்தி பேசின பின்னூட்டத்துல கூட குஷ்பூவையும் / கற்பையும் விட மாட்டேன்கறீங்க !

    ReplyDelete
  22. எல்லோருக்கும் நல்லவரா, எதையுமே க்ரிடிசைஸ் பண்ணாமல் இருக்கனும்னு வச்சுக்கோங்க, மணிகண்டன்!

    கடையை அடைத்துவிட்டு ஆறுமனமே ஆறுனு பண்டாரமா திரிய வேண்டியதுதான்.

    நம்மை நாமே கேலிபண்ணிதான் நம்ம தகுதியை நாம் உணரனும்,உணர்த்தனும்!

    ReplyDelete
  23. ***வெண்பூ said...
    //
    இவர் எதுக்குமே அலட்டிக்கொள்வது இல்லை! அதுதான் இவர் வெற்றிக்கு காரணமானு தெரியலை
    //

    இதுல என்ன சந்தேகம் வருண்... "அடக்கம் அமரருள் உய்க்கும்" படிச்சதில்லையா?

    14 January, 2009 9:42 PM***

    நன்றி வெண்பூ!

    புத்தியுள்ள மனிதரும் வெற்றி காண்பதுண்டு.:-)

    ReplyDelete
  24. //***குறிப்பா குணா ரொம்ப பிடிச்சிருந்தது***
    -- அது சரி.//

    அட! இங்க நம்மாளு ஒண்ணு ...!

    ReplyDelete
  25. வாங்க தருமி!

    ஒரு அழகான பொண்ண கடத்திக்கொண்டு போயி அவளை ரசிச்சு பூஜை செய்து வனங்குகிறார் ஒரு அப்பாவி.

    அவர் லட்டு வாங்குபோது, அந்த கேமராவை படுகேவலமா அவள் (இவர் கடவுளுக்கு சமமாக கருதும் ஒருத்திய) மார்பை பர்ப்பஸாக காட்டி எடுத்து இருப்பாங்க,

    http://www.youtube.com/watch?v=tiLR8FAW6zc

    இதைவிட அப்பட்டமான பர்வேஷனை எங்குமே காணமுடியாது!

    புரியாமல்தான் கேக்கிறேன். இந்தப்படத்தில் என்ன பிடித்ததுனு மட்டும் சொல்லுங்க.

    நான் எனக்கு என்ன பிரச்சினையினு சொல்றேன் :-)

    ReplyDelete
  26. //
    இதைவிட அப்பட்டமான பர்வேஷனை எங்குமே காணமுடியாது!
    //
    அனுபவிக்கனும்..ஆராயக்கூடாது :)

    ReplyDelete
  27. // வாங்க தருமி!
    அவர் லட்டு வாங்குபோது, அந்த கேமராவை படுகேவலமா அவள் (இவர் கடவுளுக்கு சமமாக கருதும் ஒருத்திய) மார்பை பர்ப்பஸாக காட்டி எடுத்து இருப்பாங்க, http://www.youtube.com/watch?v=tiLR8FAW6zc
    இதைவிட அப்பட்டமான பர்வேஷனை எங்குமே காணமுடியாது! //

    வந்திட்டேன் வருண்!

    ஒண்ணு பண்ணுங்க…இதைப் படிக்கிறதுக்கு முந்தி இந்தப் பதிவை ஒருதடவை எட்டிப்பார்த்துட்டு வந்திருன்ங்க. பின்னூட்டங்களையும் சேர்த்து வாசிச்சிடுங்க. சரியா?

    என்னங்க வருண் .. உங்க கருத்துல ஏதாவது மாற்றம் இருக்கா? என்ன படங்க அது? அதுவும் நீங்க சொன்ன அந்த சீன் எனக்கு ரொம்பவே பிடிச்ச இடம். (எனக்கும் perversion அப்டிம்பீங்களோ? பரவாயில்லை)

    தலையில் தட்டும் மணி, திரும்பும் கைகாட்டி (அதன் தெலுங்கு எழுத்துக்கள் புரியாவிட்டாலும்), ‘அபிராமியின்’ அபயஹஸ்தம் எல்லாவற்றையும் ஒரு உச்சத்துக்கு எடுத்துப் போகும் ராஜாவின் BGM, அது முடிந்ததும் சடாரென்று துவங்கும் ஜேசுதாஸின் ஆழமான, அழகான, மயக்கும் குரல் – முதல் தடவை பார்த்த போது உண்டான நெகிழ்வை இப்போதும் உணருகிறேன். ( உங்க புண்ணியத்தில் மீண்டும் பார்க்க முடிந்தது.)

    நீங்க சொல்ற perversion என்னன்னு பார்க்கலாமா? அதுக்கு முந்தி, நீங்க ஒண்ணு செய்யணுமே. அபிராமி அந்தாதி பத்தி கேட்டுக்கங்க .. அடுத்து நீங்க சொல்ற சேலையை இழுத்து மூடுற சீனை “நல்லா” பாத்துக்கிட்டே பின்னால் வர்ர பாட்டின் வரிகைகளைக் கொஞ்சம் கேளுங்கள். அந்த “சீன்” எதுக்குன்னு புரியும்.

    அந்த சீன்ல எனக்குக் கிடச்சது: அழகியல் நெகிழ்வு.
    குணாவுக்குக் கிடச்சது spiritual orgasm.
    உங்களுக்குக் கிடச்சது; perversion!

    // நான் எனக்கு என்ன பிரச்சினையினு சொல்றேன் :-)// -- நீங்க சொல்லாமலே உங்கள் பிரச்சனை புரிகிறது. எனக்குப் புரியாதது: அவுத்துப் போட்டுட்டு குத்துப் பாட்டு ஆடுற சீன்களில் இல்லாத perversion இதில் உங்களுக்கு எப்படி வந்தது?

    //ஒரு அழகான பொண்ண கடத்திக்கொண்டு போயி அவளை ரசிச்சு பூஜை செய்து வனங்குகிறார் ஒரு அப்பாவி. // இதுக்குப் பதில் என் பதிவில் கொஞ்சூசூசூண்டு இருக்குமே! நீங்க பார்த்தது icing மட்டும்; cake-ஐ முழுசா உட்டுட்டீங்க!

    எல்லாப் படத்தையும் ஒரே மாதிரி பார்க்கக்கூடாதுன்னு எனக்குத் தோணுது.

    நான் குணாவைப் பத்தி நினச்சதை, அப்போ எழுதி தொலைந்துபோன கட்டுரையை நினைவிலிருந்தாவது மீட்டெட்டுத்து ஒரு பதிவு போட்டுறணும்போல துரு துருன்னு இருக்கு. அப்படி எழுதிவிட்டால், உங்கள் தூண்டுதலுக்கு நன்றி.

    ReplyDelete
  28. இன்னொரு விஷயம், வருண். இந்த மாதிரி - குணா, தசாவதாரம் - படங்களை "ஈரடுக்குப் படங்கள்" என்று பெயர் வைக்கலாமென தோன்றுகிறது - கேக்கும், ஐஸிங்கும் !

    ReplyDelete
  29. ***ஆளவந்தான் said...
    //
    இதைவிட அப்பட்டமான பர்வேஷனை எங்குமே காணமுடியாது!
    //
    அனுபவிக்கனும்..ஆராயக்கூடாது :)

    15 January, 2009 8:12 PM**

    நம்ம மனசு எதையும் ஆராயாம விட மாட்டேங்கிதே :)

    ReplyDelete
  30. *** தருமி அவர் திரியில் சொன்னது...

    பாலகுமாரன் கதையான குணா நல்ல வேளை இதிலிருந்து கொஞ்சம் பிழைத்தது. சாதாரணமாக ஒரு கடத்தல் கதை போல் இருந்தாலும், பின்புலத்தில் பரமாத்மா (அபிராமி), ஜீவாத்மா (குணா) இடையிலான உறவு என்ற தத்துவமும், இன்னும் சில உள்ளடங்கிய தத்துவங்களும் படத்தின் வெளிப்படையான கடத்தல் கதைக்குள் பொதிந்து வைக்கப்பட்டன. புரிந்தால் புரிந்து கொள்ளப்படட்டும் இல்லாவிட்டில் இருக்கவே இருக்கிறது காதல் - கடத்தல் என்ற கதையாடல் என்பதால் அதிக எதிர்பார்ப்பு இல்லாமல் வந்து, அதிகப் பிரச்சனைகள் இல்லாமல் ஓடியது.***

    இந்த பரமாத்மா ஜீவாத்மா விசயம் எனக்கு தெரியாதுங்க, தருமி!

    படம் தீபாவளிக்கு தளபதியுடன் ரிலீஷ் ஆகி நல்லாத்தான் ஓடியது என்கிறார்கள் :)

    ReplyDelete
  31. ***அந்த சீன்ல எனக்குக் கிடச்சது: அழகியல் நெகிழ்வு.
    குணாவுக்குக் கிடச்சது spiritual orgasm.
    உங்களுக்குக் கிடச்சது; perversion!***

    அழகா சொல்லீட்டீங்க!

    உண்மைதாங்க பார்ப்பவர் கண்களையும் அவர்கள் ஞானத்தையும், ரசனையையும், தேவையையும், எதிர்பார்ப்பையும் பொறுத்துத்தான் அமைகிறது!

    நான் ரொம்ப காம்ப்ளெக்ஸ் பர்சனாலிட்டி இல்லைங்க.

    I cant enjoy anything if it is not reciprocated. Let it be love or sex or friendhip or whatever.

    While I can see Guna's obsession, I dont see what can she get out of Guna? I see nothing!

    ReplyDelete