Tuesday, February 10, 2009

ஸ்லம்டாக் மில்லியனரும் நான் கடவுளும்!

ஸ்லம்டாக் மில்லியனர் படம் பற்றி பொதுவாக விமர்சிக்கும்போது ஒரு ஆங்கிலேயக்குழு நம் இந்திய அடிமட்ட மக்கள் வாழ்க்கையை காட்டி கேவலப்படுத்திவிட்டார்கள் என்று எல்லோருக்கும் கவலை எரிச்சல். இப்படி ஒரு படத்தை எடுத்து வெள்ளைக்காரகள் நம்மைப்பார்த்து கைகொட்டி சிரிக்கிறார்கள் என்று ஒரே ஒப்பாரி, பொலம்பல் கேட்டது.

http://timeforsomelove.blogspot.com/2009/01/blog-post_18.html


இப்போ நம்ம ஊர் பாலா பிச்சைக்காரர்களின் வாழ்க்கையை மட்டுமன்றி நம்ம ஊர் சாமியார்களையும் மூடநம்பிக்கையையும் ரசித்து ரசித்து படமாக எடுத்து உள்ளார். பாலா படங்கள் பொதுவாக என்னால் ரசிக்க முடியாதுதான். என் மட்டமான ரச்னை ஒருபுறம் இருக்கட்டும். இதுவரை நம்ம பாலாவின் "நான் கடவுள்" படத்துக்கு வந்த விமர்சனங்களைப் பார்ப்போம்.

* தமிழ்சினிமா.காம் (5 ஸ்டார்ஸ் *****)

* SIFY (Outstanding)

* Rediff (***)

பொதுவாக எல்லா விமர்சனங்களிலும் இந்தப்படத்தை பாராட்டியுள்ளார்கள். இதுபோக நம்ம ரசினியும் இந்தப்படத்தைப் பார்த்துவிட்டு புகழோ புகழ்னு புகழ்ந்து தள்ளிவிட்டார். பாலாவைத் தவிர வேற யாரும் இதுபோல் எடுக்க முடியாது (இதெல்லாம் ரொம்ப அதிகம்). பாலாவுடைய தைரியத்தை பாராட்டனும். பாலா ஒரு தலைசிறந்த கலைஞன் என்ற புகழாரம்தான் எங்கும் கேட்கிறது.

இதற்கிடையில் பொழுதுபோக்குக்காக படம் பார்ப்பவர்கள் பலர் இந்தப்படத்தைப் பார்த்துவிட்டு பிடிக்கவில்லைனு சொல்ல பயப்படுகிறார்கள். ஒரு சில் இசைஞானி ஜால்ராக்கள், ஏ ஆர் ரகுமானை தேவையே இல்லாமல் இழுத்து அவமானப் படுத்துகிறார்கள்.

சரி விசயத்துக்கு வருகிறேன். இப்போ, ஒருவேளை இந்தப்படத்துக்கு (நான் கடவுள்) அடுத்த வருடம் ஆஸ்கர் வழங்குறாங்கனு வச்சுக்குவோம் ந்ம்ம இசைஞானிக்கும் சேர்த்து. அப்போவும் நம் பிச்சைக்காரர்கள் கலாச்சாரம் உலகறியும்! நம்ம சாமியார் கலாச்சாரமும் உலகம் அறியும். உலகமே இந்தியா ஒரு பிச்சைக்காரர்கள் நிறைந்த நாடு என்று சிரிக்கும்.

அந்த மாதிரி ஒரு நிலைமை உருவாகும்போது, இன்னைக்கு ஸ்லம்டாக் மில்லியனரை எடுத்து எங்களை கேவலப்படுத் திட்டாங்கனு புலம்பியவர்கள், அந்தப்படக்குழுவை தூற்றியவர்கள் என்ன சொல்வார்கள்? என்பது என் கேள்வி.

நம்மூர் பாலாவை தூற்றுவார்களா இல்லை போற்றுவார்களா?

27 comments:

  1. எதுக்கு இப்படி வேண்டாத சந்தேகம் உங்களுக்கு வந்துருக்கு.

    எதா இருந்தாலும் நம்மைக் கேவலப்படுத்தும்/கேவலப்படுத்திக்கும் உரிமை நமக்கு மட்டும்தான்.

    அதென்ன மத்த ஆளுங்க அந்த உரிமை எடுத்துக்கறது?

    நானும் இன்னும் கடவுள் பார்க்கலை.

    சேரிநாயைப் பார்த்துட்டேன்.

    நாயைக் கண்டால் கடவுளைக் காணோம்:-))))

    ReplyDelete
  2. வாங்க டீச்சர்.:)

    இப்படி ஒரு கேள்விகேட்டு உங்ககிட்ட குட்டு வாங்கத்தான் இந்தப்பதிவு, டீச்சர் :):):)

    என்னுடைய அமெரிக்கன் ஃப்ரெண்ட்ஸ் நிறையப்பேர் சேரிநாய் படம் விரும்பி பார்த்தாங்க டீச்சர்.

    ஹிந்தி, தமிழ் பாடல்களில் வரும் டூயட்களை கேலிபண்ணும் இவர்கள், இதுபோல் ஒரு "பிச்சைக்கார கம்னிட்டி" அமெரிக்காவிலும் கூட உண்டு என்று பெரியமனதுடன் பேசினார்கள்.

    யாருமே இந்தியாவைப்பார்த்தோ இந்தப்படத்தைப்பார்த்தோ கேலி பண்ணலை, டீச்சர் :)

    ReplyDelete
  3. //ஸ்லம்டாக் மில்லியனர் படம் பற்றி பொதுவாக விமர்சிக்கும்போது ஒரு ஆங்கிலேயக்குழு நம் இந்திய அடிமட்ட மக்கள் வாழ்க்கையை காட்டி கேவலப்படுத்திவிட்டார்கள் என்று எல்லோருக்கும் கவலை எரிச்சல்.//

    இதை உங்கள் கருத்தாக நீங்கள் கூறவில்லைதான். இக்கதையை எழுதியவரிலிருந்து இப்படத்தின் ஆக்கம் வரை நம்மவரின் பங்கும் அதிகம் என்பதெல்லாமும் தாண்டி நான் இதை எப்படிப் பார்க்கிறேன் என்பதை
    இங்கு பாருங்கள் நேரம் வாய்த்தால்.

    ’நான் கடவுள்’ படம் இன்னும் பார்க்கவில்லை நான். உங்களைப் போலவேதான் பலரும் இருபடங்களையும் ஒப்பிட்டுள்ளார்கள், என் பதிவின் பின்னூட்டங்களிலும் கூட.

    ReplyDelete
  4. //எதா இருந்தாலும் நம்மைக் கேவலப்படுத்தும்/கேவலப்படுத்திக்கும் உரிமை நமக்கு மட்டும்தான்.//
    ரெண்டு படத்திலும் யாரும் எதையும் கேவலப்படுத்தவில்லை. ரெண்டு படமும் அருமையா இருக்கு. அவ்வளவுதான்.

    ReplyDelete
  5. வாங்க ராமலக்ஷ்மி!

    உங்க கவிதை பார்த்தேன். ரொம்ப மனசை கஷ்டப்படுத்தியது. நம்மால ஒண்ணும் செய்யமுடியலையேனு ஒரு கில்ட்டி ஃபீலிங் வேற. கொஞ்சம் யோசித்து பதில் எழுதலாம்னு இருந்தேன்.

    இப்போ நீங்க சொன்னதும் போய் ஏதோ சொல்லிவிட்டு வந்தேன்.

    ReplyDelete
  6. ***Nilofer Anbarasu said...
    //எதா இருந்தாலும் நம்மைக் கேவலப்படுத்தும்/கேவலப்படுத்திக்கும் உரிமை நமக்கு மட்டும்தான்.//
    ரெண்டு படத்திலும் யாரும் எதையும் கேவலப்படுத்தவில்லை. ரெண்டு படமும் அருமையா இருக்கு. அவ்வளவுதான்.

    10 February, 2009 7:57 PM***

    திறந்த மனதுடன் பாரபட்சமில்லாமல் அனுகி இருக்கீங்க அன்பரசு. :-)

    ReplyDelete
  7. //இதற்கிடையில் பொழுதுபோக்குக்காக படம் பார்ப்பவர்கள் பலர் இந்தப்படத்தைப் பார்த்துவிட்டு பிடிக்கவில்லைனு சொல்ல பயப்படுகிறார்கள்//

    மாற்றி சொல்கிறீர்கள் :-)))

    பிடித்து இருக்கு என்று கூற பயப்படுகிறார்கள். பிடித்து இருக்கு என்று கூறினால் எங்கே நம்மையும் அதே போல நினைத்து விடுவார்களோ என்று :-)))

    ReplyDelete
  8. why do you brand the "slum dog millonaire" bashers as illaiyaraja fans? these two are dis-connected entities. i feel the bashers would have bashed naan kadavul as well.

    ReplyDelete
  9. இப்போதைக்கு துளசி டீச்சர் பின்னூட்டத்துக்கு சிரித்து விட்டுப் போகிறேன்.

    இங்கேயும் அதே நிலைதான்.நாயைக் கண்டால் கடவுளைக் காணோம்:)))

    ReplyDelete
  10. அது என்ன உங்களுக்கும் கிரிக்கும் சினிமா விசயத்தில் எப்ப பார்த்தாலும் குடிமிப் பிடி சண்டை:)))

    ReplyDelete
  11. ***கிரி said...
    //இதற்கிடையில் பொழுதுபோக்குக்காக படம் பார்ப்பவர்கள் பலர் இந்தப்படத்தைப் பார்த்துவிட்டு பிடிக்கவில்லைனு சொல்ல பயப்படுகிறார்கள்//

    மாற்றி சொல்கிறீர்கள் :-)))

    பிடித்து இருக்கு என்று கூற பயப்படுகிறார்கள். பிடித்து இருக்கு என்று கூறினால் எங்கே நம்மையும் அதே போல நினைத்து விடுவார்களோ என்று :-)))

    11 February, 2009 1:03 AM****

    அழகான வாதம் கிரி. ஆனால், நான் சொன்னது உண்மை. நீங்கள் சொன்னதும் உண்மையா இருக்கலாம்.

    உங்க விமர்சனத்தை பார்த்தேன். நீங்க ஒரு பாலா விசிறி அதே சமயத்தில் மனசாட்சியுடன் நடப்பவர்.

    உங்கள் மனசாட்சி வென்றுவிட்டது! :-)

    ReplyDelete
  12. *** Anonymous said...
    why do you brand the "slum dog millonaire" bashers as illaiyaraja fans? these two are dis-connected entities. i feel the bashers would have bashed naan kadavul as well.

    11 February, 2009 3:44 AM***

    I am not saying that. I know bala-iLaiyaraja combo fanatics! I see them everywhere.

    They all should sing loudly that,

    புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை
    வெற்றிபெற்ற மனிதரல்லாம் புத்திசாலி இல்லை"

    and try to live with the reality rather than crying about the success of ARR!

    ReplyDelete
  13. ***ராஜ நடராஜன் said...
    இப்போதைக்கு துளசி டீச்சர் பின்னூட்டத்துக்கு சிரித்து விட்டுப் போகிறேன்.

    இங்கேயும் அதே நிலைதான்.நாயைக் கண்டால் கடவுளைக் காணோம்:)))

    11 February, 2009 3:49 AM***

    அய்யோ நடராஜன், அவங்க இன்னும் "கடவுளை" பார்க்கவில்லை! நாயை மட்டும்தான் பார்த்து இருக்காங்க!

    "கடவுள்" ஒவ்வொரு சமயம் ரொம்ப சோதித்துவிடுவார்!

    ReplyDelete
  14. ***ராஜ நடராஜன் said...
    அது என்ன உங்களுக்கும் கிரிக்கும் சினிமா விசயத்தில் எப்ப பார்த்தாலும் குடிமிப் பிடி சண்டை:)))

    11 February, 2009 3:51 AM***

    ஆமா, இந்த பாலா விசயத்தில் அதென்னவோ உண்மை மாதிரித்தான் இருக்கு!

    However, we know how to respect each others' feelings and understand each others' weaknesses as well. So, no problems! :-)

    ReplyDelete
  15. உங்க தரப்பு முடிவ சொல்லாம கேள்வி மட்டும் கேக்கறது ரொம்ப தப்பு ! . இத வன்மையா கண்டிக்கறேன் !

    ReplyDelete
  16. //However, we know how to respect each others' feelings and understand each others' weaknesses as well. So, no problems! :-)//

    இதையே எதிர்பார்க்கிறேன் வருண் நன்றி.

    கருத்துக்கள் வேறாக இருந்தாலும் அடுத்தவர் கருத்தை மதிப்பது தான் ஒரு விவாதத்திற்கு அழகு. யார் பெரியவன் என்ற எண்ணம் வந்தாலே அங்கு சண்டை தான் வருகிறது.

    ReplyDelete
  17. நானும் இதே கருத்துடைய ஒரு பதிவு எழுதலாம் என்று நினைத்தேன். எல்லா விஷயங்களுக்கும் எதிர்கருத்து உண்டு. ஐஸ்வர்யா மற்றும் சுஷ்மிதா அழகி பட்டம் பெற்ற போது இந்திய மார்பகங்களை வெளிநாட்டு கம்பெனிகள் குறிவைக்கின்றன என்று சொல்லி ஒரு கூட்டம் அதை விமர்சித்தது

    ReplyDelete
  18. ***மணிகண்டன் said...
    உங்க தரப்பு முடிவ சொல்லாம கேள்வி மட்டும் கேக்கறது ரொம்ப தப்பு ! . இத வன்மையா கண்டிக்கறேன் !

    11 February, 2009 10:43 AM ***

    மணிகண்டன்!

    நான் கேள்விமூலமாகவே பதிலும் சொல்லாமல் சொல்லி இருக்கேனே! :-)

    ReplyDelete
  19. ***கிரி said...
    //However, we know how to respect each others' feelings and understand each others' weaknesses as well. So, no problems! :-)//

    இதையே எதிர்பார்க்கிறேன் வருண் நன்றி.

    கருத்துக்கள் வேறாக இருந்தாலும் அடுத்தவர் கருத்தை மதிப்பது தான் ஒரு விவாதத்திற்கு அழகு. யார் பெரியவன் என்ற எண்ணம் வந்தாலே அங்கு சண்டை தான் வருகிறது.

    11 February, 2009 10:43 AM ***

    நீங்க ஆசைப்பட்டாலும் நான் உங்களோட சண்டை போடுறாப்பில இல்லை, கிரி! :-)

    ReplyDelete
  20. ***மருதநாயகம் said...
    நானும் இதே கருத்துடைய ஒரு பதிவு எழுதலாம் என்று நினைத்தேன். எல்லா விஷயங்களுக்கும் எதிர்கருத்து உண்டு. ஐஸ்வர்யா மற்றும் சுஷ்மிதா அழகி பட்டம் பெற்ற போது இந்திய மார்பகங்களை வெளிநாட்டு கம்பெனிகள் குறிவைக்கின்றன என்று சொல்லி ஒரு கூட்டம் அதை விமர்சித்தது

    11 February, 2009 1:05 PM***

    அதென்னவோ தெரியலை நீங்க பேசுவது நம்ம கமல் பேசுற மாதிரியே இருக்கு! :-)

    உங்கள் கருத்துக்கு நன்றி, மருதநாயகம்!

    ReplyDelete
  21. தேவையான பதிவு வருண்.

    ReplyDelete
  22. நன்றி, பாண்டித்துரை :)

    ReplyDelete
  23. உங்களுக்கு அகோரிகளை பத்தி ஒண்ணும் தெரியாது. ஆனா அவங்களை கஞ்சா சாமியார்னு சொல்ல தெரியுது. நீங்களும் பகுத்தறிவு ஆள்தான

    ReplyDelete
  24. ****Anonymous said...
    உங்களுக்கு அகோரிகளை பத்தி ஒண்ணும் தெரியாது. ஆனா அவங்களை கஞ்சா சாமியார்னு சொல்ல தெரியுது. நீங்களும் பகுத்தறிவு ஆள்தான

    14 February, 2009 12:13 PM ****

    கஞ்சா குடிக்கிற சாமியார "கணேஷ் பீடி சாமியார்" னா சொல்லுவாங்க?

    கஞ்சா சாமியார்னுதான் சொல்லுவாங்க!

    ReplyDelete
  25. ஏம்பா வருண் இதுல துற்றுறதுக்கு என்ன இருக்கு. நாட்டுல உள்ள நிலமய தானே எடுத்து சொல்றாங்க. அவுங்க சினிமாவ எடுக்கிற அளவுக்கு நிலம இன்னும் இருக்கிறது உண்மை தானே!

    படிச்ச மக்கள் அதிகமாயிட்டாங்க, கம்யூட்டர் எல்லாம் வந்திருச்சி. உலகத்துல எல்லா நாடுகளுக்கும் நம்பாக்கள் போயிட்டுவாரங்க, படிக்கிறாங்க. நகரம் எல்லாம் நவீனமாயிடுச்சி இப்படிங்கிற மாற்றங்கள மட்டும் வைச்சி நாட்ட காண்பிக்க முடியுமா? எல்லா மக்களும் மாற்றத்த சந்திக்கவில்ல என்கிறது உண்மை தானே ! இந்தியன் என்னு வரும் போது ஐடி காரனும் பிச்சகாரனும் ஒண்ணுதானே ! உசந்த சாதியும் தாழ்ந்த சாதியும் ஒண்ணுதானே ! எல்லாம் சேர்த்து தானே இந்தியன். இல்ல பிச்ச காரன் எல்லாம் இந்தியன் இல்லேன்னு முடிவு பண்ணீட்டீங்களா?

    கேலி பண்ணுறதுக்கு நிறய விசயம் இருகுங்க, அதுக்கு சினிமாவ எடுத்து தான் கேலி பண்ணணும் எங்கிற அவசியம் இல்லீங்க. உதாரணமா எடுத்துகிட்டீங்கன்னா தீண்ட தாகாத மக்களுக்கு உதவ என்னு உலம் பூரா நிறைய அமைப்புகள் இருக்கு. தேசதாசிகள் சமூகத்துக்கு உதவ என்னு வெளிநாட்டுல அமைப்புகள் இருக்கு. கர்நாடகால கேம் போட்டு தங்கியிருந்து உதவி பண்ணீட்டிருக்காங்க. இந்த சினிமாவ விட நிறைய விசயம் இந்த உலகத்துக்கு இந்தியா பற்றி தெரியும். ஆனா உள்ளுர் வாசிகளுக்கு சினிமால பார்த்ததும் பிரச்சனயா இருக்கு அவ்ளோ தான். இன்னும் நிறய சினிமா இந்த மாதிரி வரும் போது தான் நம்ப ஒட்டு மொத்த இந்தியாவையும் நாகரீகமா மாற்றணும் என்ற எண்ணம் ஒவ்வொருவனுக்கும் வரும். ஆனா அதெல்லாம் நடக்காதுங்க. நீயும் நானும் இந்தியன் ஆனா உன்னிய தொட முடியாது தொட்ட தீட்டாகிடும். நீயும் நானும் இந்தியன் ஆனா உன்னிய இலங்கை படைகள் கொல்லட்டும், இப்படீங்கிற நிலமய மாத்த முடியாதுங்க.

    ReplyDelete
  26. அனானி!

    ஞாநி அவர்கள் ஏற்கனவே பிச்சைக்காரரை வைத்து பாலா பணம் சம்பாரிக்கிறார்னு சொல்லி இருக்கார்.

    இது என்ன வாழ்த்துவதா என்ன?

    கஞ்சா சாமியார் வந்து பிச்சைக்காரர்களை காப்பாதுறது மாதிரி ஒரு படம் நம் சமுதாயத்துக்கு தேவை இல்லை!

    கஞ்சா சாமியார் கப்பாத்துவார்னு எல்லோரும் அவர்களை விட்டுவிடப் போறாங்க, பாவம்!

    பிச்சைக்காரர்கள் மேலேயும், உடலூனமுற்றவர்கள் மேலேயும் எனக்கு இரக்கமில்லைனு லெக்ச்சர் அடிக்க ஆரம்பிச்சுறாதீங்க ப்ளீஸ்!

    ReplyDelete
  27. ஆமா, நம்ம ரசினி சாமியாரைப் பார்த்ததும் பரவசமாயிட்டாரு போல!

    ராமர் பாலத்தை ராமரே கட்டியவர்னு நம்புறவர் இவர்.

    இவருக்குக்கு ஜியாலஜியும் புரியாது விஞ்ஞானமும் புரியாது!

    ReplyDelete