Sunday, January 18, 2009

ஸ்லம்டாஃக் மில்லியனர்- நமக்கு தேவையான ஒரு படம்!

இந்தியாவில் கால் செண்டர், ஐ டி பெருமை, ஐ ஐ எஸ் ஸி, ஐ ஐ டி தரமான படிப்பு, தாஜ்மஹால், காந்தி, புத்தா, கிருஷ்ணா என்று இந்தியப்புகழ்பாடத்தெரிந்த நாம், இந்தியாவில் எவ்வளவு கேவலமான வாழ்க்கை பல கோடிப்பேர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று தெளிவாக சொல்லுவதில்லை!

மூடி மறைப்பதேதான் நம் கலாச்சாரம். அதைத்தான் இன்று ஊர் சிரிக்கும் சத்தியம் கம்ப்யூட்டர் பித்தலாட்ட-ங்களில்கூடப் பார்த்தோம்.

இந்தியர்களில் பலர் படு கேவலமானவர்கள் என்று நமக்கு அடிக்கடி ஞாபகப் படுத்திக்கொள்வது நல்லது. இல்லை யென்றால் முட்டாளாகவே வாழ்ந்து செத்து விடுவோம்.

இந்தியர்கள், சத்தியம், தர்மம், கடவுள், கழுதை, காக்கா னு பெருமை பேசியே வாழ்ந்து அழிந்துபோகிறோம். இந்தியச்சேரிகள் பெருகி இந்திய மக்கள்த்தொகை அதிகரித்துக் கொண்டே போய்க்கொண்டு இருக்கிறது. அதைப்பற்றி நமக்கென்ன கவலை? நான் தான் உயர்சாதி, பணக்காரன் ஆச்சே? என்று அவர்களைப்பார்த்து அருவெருத்துவிட்டு நாம் போய்க்கொண்டே இருக்கிறோம்.

இந்தியச்சேரி வாழ்க்கையையையும் அதில் வாழும் மனித மிருகங்களையும், அதில்மாட்டிக்கொண்டு அழியும் அப்பாவிகளையும் படம் பிடித்து உலகத்திற்கு காட்டி, இந்தியாவை கேவலப்படுத்தி இருக்கும் ஒரு தேவையான படம் இது.

வெள்ளைக்காரன் இன்னும் ஆண்டுகொண்டிருந்தால் இந்த சேரியை எல்லாம் அழிக்க ஒரு வழியுடன் வந்திருந்தாலும் வந்திருப்பான். நமக்குத்தான் அதை என்ன செய்வதென்று தெரியாமல் ஒதுங்கிப்போய்க்கொண்டு இருக்கிறோம். இல்லையென்றால் என்னைப்போல் அமெரிக்காவில் வந்து ஒளிந்துகொள்கிறோம்- வெட்கமே இல்லாமல்!

இந்தப்படத்தில்

* உடலெல்லாம் மலத்துடன் ஓடிச்சென்று அமிதாப்பிடம் ஆட்டோ கிராஃப் வாங்கும் சிறுவனை காட்டுகிறார்கள். இந்தியாவின் மானத்தை கப்பலேற்றுகிறார்கள் அமெரிக்கர்கள் மற்றும் வெள்ளைக்காரர்கள் என்று ஒருபுறம் கோபம் வந்தாலும், இதுபோல் சேரிவாழ்க்கை உலகுக்கு எடுத்துக்காட்டியாவது நாம் இதை ஒழிக்க ஏதாவது செய்துவிடமாட்டோமா என்ற நப்பாசை எனக்கு. கோல்டன் க்ளோப் கொடுத்து உலகத்திற்கே நம் இந்திய அசிங்கமான சேரி வாழக்கையை உலகமெங்கும் பறைசாற்றுகிறார்கள்!

* இந்தியாவில் சிறுவர்களை ஊனமாக்கி, அவர்களை வைத்து எப்படி பல மிருகங்கள் பொழைப்பு நடத்துக்கின்றன என்பதை பச்சையாக சொல்லுகிறார்கள்.

* இந்தியாவில் வேசித்தனம் பண்ணி மனித மிருகங்களாக வாழும் பலரின் கீழ்த்தரமான வாழ்க்கையையும் அப்பட்டமாக காட்டுகிறார்கள்.

* மும்பைச் சேரியை முதலில் சரிபண்ணுங்கடா! ராமர் கோயிலைப்பத்தி அப்புறம் பார்க்கலாம் என்று சொல்லாமல் சொல்லும் விசயங்கள் நம் மூடர்களுக்கு புரியுமா?

* இந்து முஸ்லிம் கலவரத்தில் எப்படியெல்லாம் ஏழைகள் அழிக்கப்படுகிறார்கள் என்பதை எடுத்துச்சொல்லி இருப்பதால், ராமர்/பாபர் பேரைச்சொல்லி பிழைப்பு நடத்தும் பணக்கார உயர்சாதி இந்து/முஸ்லிம் வெறியர்களுக்கும், மதவெறி தலை விரித்தாடும் சில பார்ப்பனர்களுக்கும் இந்தப்படத்தை சமர்ப்பிக்கலாம்!

நம்முடைய வருத்தம், கோபம்!

இந்தியாவில் உள்ள சேரிவாழ்க்கையைப்பற்றி எங்களை கேவலப்படுத்திவிட்டார்கள் என்று கொதித்தெழும் பலர் உண்மையை மறைத்தே வாழ்ந்து சாகனும்னு ஆசைப் படுகிறாரகள் போலும்.

ஆமாம் நம்மை கேவலப்படுத்துகிறார்கள்! புத்தா காந்தி பிறந்த நாட்டில் வாழும் மிருகவாழ்க்கையையும், சேரியில் சேற்றில் புரண்டு வாழும் ஏழைகளையும் வெளி உலகுக்கு காட்டுகிறார்கள்!

நம்மில் பலர் கேவலமாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் என்பதால்தானே இந்தக் கேவலம்?

அதனால, உங்களுக்கும், எனக்கும், அரசியல்வாதிகளுக்கும், ராமர் பேரைச்சொல்லி பிழைப்பு நடத்தும் மதவாதிகளுக்கும், பயங்கரவாதத்தை வரவேற்கும் முட்டாள்களுக்கும் இந்தப்படம் ஒரு நல்ல படிப்பினை!

ஆமா, நம்மை பார்த்து ஊர் சிரிக்கிறது!

உலகம் சிரிக்கிறது!

சிரிக்கட்டும்!

என்ன செய்யப்போகிறோம் அவர்கள் சிரிப்பை நிறுத்த?!

20 comments:

குடுகுடுப்பை said...

மூடி மறைப்பதேதான் நம் கலாச்சாரம். அதைத்தான் இன்று ஊர் சிரிக்கும் சத்தியம் கம்ப்யூட்டர் பித்தலாட்ட-ங்களில்கூடப் பார்த்தோம்.//

மேடாப் உங்க பக்கத்து வீடா? கார்ப்பரேட் திருடர்கள் ஏது நாடு.

குடுகுடுப்பை said...

மற்றவைகளோடு பெரும்பாலும் ஒத்துப்போகிறேன். வறுமையை விற்கும் வியாபாட்கள் மூலமாவது நல்லது நடந்தால் சரி

வருண் said...

குடுகுடுப்பை!

மேட்-ஆஃப் ஆல பாதிக்கப்பட்டது எந்த ஏழையும் கிடையாது. பணத்தால் கொழுத்த பல மில்லியனர்கள்!

சாதாரன அமெரிக்ககுடிமகன்கள் யாரும் அதனால் நட்டமடையவில்லை. கவலையும்படவில்லை!

சத்யம் கம்ப்யூட்டரால் பாதிக்கப்பட்டவர்கள் மில்லியனர்களா?

வருண் said...

***வறுமையை விற்கும் வியாபாட்கள் மூலமாவது நல்லது நடந்தால் சரி***

வித்தால் பரவாயில்லைங்க, ஆனால் ஒண்ணும் தெரியாத/புரியாத குழந்தைகளை ஊனமாக்குவது போன்ற மிருகச்செயலைபார்க்கும்போது, நெஞ்சு பொறுக்குதில்லைங்க :(

வெண்பூ said...

சரியா சொன்னீங்க வருண்.. அவன் நம்ம நாட்டோட அசிங்கமான பக்கத்தைக் காட்டிட்டான்னுதான் கவலைப்படுறானுங்களே தவிர அதை சரி செய்ய என்ன செய்யணும்னு எவனுமே யோசிக்கமாட்டேங்குறான். தைரியமாக சொன்னதற்கு பாராட்டுகள்..

வருண் said...

***வெண்பூ said...
சரியா சொன்னீங்க வருண்.. அவன் நம்ம நாட்டோட அசிங்கமான பக்கத்தைக் காட்டிட்டான்னுதான் கவலைப்படுறானுங்களே தவிர அதை சரி செய்ய என்ன செய்யணும்னு எவனுமே யோசிக்கமாட்டேங்குறான். தைரியமாக சொன்னதற்கு பாராட்டுகள்..

18 January, 2009 9:16 PM***

உங்கள் வருகைக்கும், புரிதலுக்கும்,பாராட்டுக்கும், ரொம்ப நன்றிங்க, வெண்பூ :-)

Sundar சுந்தர் said...

well said!

வருண் said...

Thank you, Sundar! :-)

Anonymous said...

நம்ம ஆளுங்க சொன்னா ஏறிக்கிட்டு வரும், அதயே வெள்ளைக்காரன் இங்க வந்து கலாய்ச்சான்ன, சூப்பருப்புன்னு கூப்புட்டு அவார்டு குடுத்து குனிஞ்சிக்கிட்டு நிப்பானுங்க..

Anonymous said...

இலங்கை அமைச்சர் சரத் பொன்சேகோ சொன்ன மாதிரி தமிழ்(இந்திய) அரசியல் தலைவர்கள்(மக்களும்) எல்லாம் ஜோக்கர்ஸ்தான்(இளிச்சவாயனுங்கதான்...)

வருண் said...

தாராவி!

நீங்க எப்படி வேணுமானால் இதை சொல்லிக்கோங்க, எடுத்துக்கோங்க!

ஆனால் இதுபோல் ஸ்லம் ல நடக்கிற மிருகத்தனங்கள் நம் இந்தியர்கள், நம் உடன் பிறப்புகள் செய்வது. வெள்லைக்காரன் அல்ல! இந்தப் படத்தில் காட்டுவது, சொல்லுவது பொய்யும் அல்ல!

அதைப்பார்த்து நாம் வெட்கி தலைகுனியத்தான் வேணும்!:(

Anonymous said...

I don't deny your point but don't you think English people were one of the reasons why India became a poorer country? They came and looted us and and they introduced all this non-sensical paper based office system which is still in effect and what causes a lot of corruption.

வருண் said...

We cant blame British or use them as an excuse for everything.

Today, the beggar culture and prostitution and child abuse in mumbai are happening.

Are we blaming British for this too? Are we going to say,British taught us this? Dont we have a brain of our own and have the freedom TODAY?

I must say, some of us are INHUMAN and ANIMALS.

We cant blame British for every darn thing we do.

Anonymous said...

நான் உங்கள் கருத்தை மறுக்கவில்லை. எல்லாவற்றுக்கும் அவர்களை குறை சொல்ல முடியாது. ஆனால் நான் சொல்ல வருவது, இந்த பிரச்சினைகளுக்கு வறுமை ஒரு காரணம். அந்த வறுமைக்கு British-உம் ஒரு காரணம் இல்லையா?
என் எண்ணம் எல்லாம், இதை சொல்ல அவர்களுக்கு அறுகதை கிடையாது என்பதுதான். East India Company இன்றும் ஒரு வியாபாரிதான். (இன்று நம் ஏழ்மையை விற்கிறான்.)

வருண் said...

டேனியல் பாய்ல்க்கு தகுதி இல்லைனு வச்சுக்குவோம்.

இதில் நடித்த நடிகர்கள் இந்தியர்கள் தாம். அவங்க இதுபோல் கதையில் நடிக்க மாட்டேன் னு சொல்லி இருக்கலாம். ஆனால் அவர்கள் அப்படி செய்யவில்லை.

அதற்கு காரணம் என்னனு நெனைக்-கிறீங்க?

இதுபோல் ஒரு படம் வந்தாவது இவர்கள் திருந்தட்டும்னு நினைத்து இருக்கலாம்.

வெள்ளைக்காரனுக்கு தகுதி இல்லைனே வச்சுக்குவோம். அது ஒரு பக்கம் இருக்கட்டும்.

இதுபோல் குழந்தைகளை பிச்சைக்காரர்களாக்குவது, அவர்களை ஊனமுற வைப்பது எல்லாம் ஒழியனும்ங்க!

ஏதாவது ஒரு புரட்சி வரனும்.

ஏழையாக இருந்தால் பிச்சை எடுக்கனும்னு இல்லையே? இவங்க அறியாமையில் மூழ்கி வாழ்றாங்க!

இதுபோல், நம்மைவிட ஏழைநாடுகள்ல கூட நடப்பதில்லை.

இலங்கையில் இப்படி நடக்குதா?

ஆஃப்ரிக்காவில்கூட இதுபோல் நடக்குதானு தெரியலை.

இதை நிச்சயம் ஒரு முடிவுக்கு கொண்டுவரனும்.

நம்மை இப்படியெல்லாம் வெள்ளைக்காரன் அவமானப்படுத் தியாவது, நம்மில் இது போல் ஒரு குறை இல்லாமல்போய்விடாதா என்கிற நப்பாசைதான் எனக்கு!

அது சரி(18185106603874041862) said...

ஆமா, எனக்கும் கூட தேவை...ஒரு டி.வி.டி இங்கிலீஷ் சப் டைட்டிலோட கிடைக்குமா? :0))

வருண் said...

A.S:

In US, the "illegal dvd"s available for 3 bucks!

All hindi movies/SDM (as well) are illegally sold in indian shops!

I dont know how these guys never get into any legal trouble!!!!

You dont need subtitle for this movie as the movie is in mostly English with "indian pronunciation" (very few dialogs are in hindi).

Very easy to follow as they all have an indian accent!

Anonymous said...

யப்பா, நீங்க இந்தியாவில இருக்கிற வறுமை பாத்து தாங்க முடியாம அமெரிக்காவில ஒளிஞ்சி இருக்கீங்களா?! கேக்கறதுக்கு நல்லா இருக்கு!
இந்தியாவில இருக்கிற வறுமை, வெளிநாட்டுக்காரன் படம் பிடிச்சாத்தான் நமக்கு உரைக்குமா?! அவன் வறுமையை வெச்சு பணம் சம்பாதிக்கறான்.
நீங்க அப்பறம் கயல் உங்க ப்லாக்ல எழுதரத படிப்பேன். இவ்வளவு நாளா பின்னூட்டம் போடல. ஆனா இப்ப இந்தியா பற்றி பதிவு போட்டதுநால பின்னொட்டம் போடரென். தப்பா நினைக்காதீங்க. You both sound like some wannabes. In one of the posts, Kayal wrote about how she is a FTOB in India. I thought you guys are FTOB in US. I know a lot of Indians became very patriotic or very derisive about India once away. Probably you are in the second category. I think you are trying to validate your moving away from India, but dont use whatever happens in India as an excuse. Stuff happens everywhere. Still you think a white person has to know about something to get it fixed. Talk about white man's burden. Apologies if it was rude.

வருண் said...

anony!

Being poor is NOT a problem with me! What poor does to make their living?

BEG?

Doing prostitition?

Abusing?

That is what frustrates!

geetha said...

naala sonneenga.ungaloda neraya pathivuhala paarthen...entha olivu maraivum illama pesureenga