Saturday, March 14, 2009

நடிகர் விஜய்காந்த் அவ்வளவுதானா?!

நடிகர் விஜய்காந்த் சட்டம் ஒரு இருட்டறையில் அறிமுகமானார். ரஜினிக்கு அடுத்து இவர்தான் வியாபார ரீதியாக பி அண்ட் சி செண்டர்களில் கொடிகட்டி பறந்தவர். இவர் நடிகராக மட்டும் இருந்தபோது இவருக்கென்று ஒரு மிகப்பெரிய ரசிகர்கள்கூட்டம் மாஸ் இருந்ததென்னவோ உண்மைதான். இன்றைய நடிகர்கள் அஜித், விஜய், விக்ரம், சூர்யா இல்லாத காலகட்டத்தில் கமர்ஷியல் ஹிட் என்று சொன்னால் இவர்தான் ரஜினிக்கு அடுத்து.

சமீபத்தில் விஜய்காந்த் தன்னை எம் ஜி ஆரின் ரசிகர் என்றும் கறுப்பு எம் ஜி ஆர் என்றும் சொல்லிக்கொண்டு அரசியல் களத்தில் இப்போது இறங்கி அதில் மூழ்கிக்கொண்டு இருக்கிறார்.

அரசியலில் இவர் வெற்றியடைய வாழ்த்துக்கள். இவர் அரசியலில் இறங்கியதிலிருந்து இன்னும் ஒரு 20 கிலோ வெயிட் போட்டு இருக்கிறார். ஒரு நடிகராக இருந்தும் ஏற்கனவே இவர் ரொம்ப கவனமாக உடலை ஃபிட்டாக வைக்கவில்லை. இந்த வகையில் இவர் நடிகர் திலகத்தை ஞாபகப்படுத்துகிறார். இப்போது ஒரு பெரிய தொப்பையோட ரொம்ப குண்டாக இருக்கிறார். கமல் மற்றும் ரஜினி இவரைகாட்டிலும் உடலை நல்லாவே வச்சிருக்காங்க. இதோடு இந்த தொப்பையுள்ள கறுப்பு எம் ஜி ஆர், அப்பப்போ சினிமாவிலும் ஹீரோவாகவும் நடித்து தன் நடிப்பு திறமையை காட்டுகிறார். ஆனால் எனக்கென்னவோ சினிமாவில் இன்று இவருக்கு முன்பு இருந்த மாஸ் போய், இவர் சினிமாவில் மங்கிவிட்டதாக தோன்றுகிறது. இவர் தலைகீழா நின்றாலும் இவருடைய உடல்வாகுவை ஒரு நல்ல நிலைக்கோ அல்லது பழைய சினிமா மார்க்கட்டை திரும்ப எட்டிப்பிடிக்க முடியும் என்றோ தோனலை.

ரஜினிகாந்த் மற்றும் கமலஹாஷனுக்கும் வயதாகிவிட்டதுதான். ரஜினி, இவரைவிட பல வருடம் வயதானவர். இருந்தாலும் ரஜினி, கமலுக்கு இன்றும் அந்த சூப்பர் ஸ்டார் மதிப்பு குறையவில்லை. ஆனால் விஜய்காந்தின் நிலைமை ரஜினி கமல் நிலைமைபோல் இல்லை என்று நம்புகிறேன். இவருடைய கறுப்பு எம் ஜி ஆர் அரசியல் கூத்துக்கு விலை இவர் சினிமாவில் வைத்திருந்த ஸ்டார் வால்யு என்று சொல்லலாமா? ஒருவேளை அரசியலில் இவர் தோல்வி யடைந்தால், அரசனை நம்பி புருசனை கை விட்டகதைதான் இவருக்கு!

11 comments:

  1. அரசியலுக்கு தொப்பை ஒரு பிரச்சினை இல்லை.ஆனால் நடப்புக்களை இவர் அணுகும் முறை மாற்று அணிக்கான ஏமாற்றத்தை தோற்றுவிக்கிறது.அரசியலுக்கு வந்து சம்பாதித்த பணத்தை விரயம் பண்ணும் நடிகர்கள் பரிதாபத்துக்குரியவர்கள்.

    ReplyDelete
  2. //இந்த வகையில் இவர் நடிகர் திலகத்தை ஞாபகப்படுத்துகிறார்//

    இங்கேயும் ஒருத்தர் இதையே தான் சொல்றார் http://kanavukale.blogspot.com/2009/03/blog-post_15.html

    ReplyDelete
  3. இது ஒன்னும் பெரிய கஷ்டமா தெரியலயே ! 30 நாள்ல தொப்பைய குறைக்க இதோ :-

    http://ezinearticles.com/?Slimmer-Stomach-in-One-Month---5-Steps-That-Secretly-Flatten-Your-Stomach-in-30-Days-Revealed!&id=2040284

    விஜயகாந்த்க்கு அனுப்பிவிடுங்க ப்ளீஸ்.

    ReplyDelete
  4. ***ராஜ நடராஜன் said...
    அரசியலுக்கு தொப்பை ஒரு பிரச்சினை இல்லை.ஆனால் நடப்புக்களை இவர் அணுகும் முறை மாற்று அணிக்கான ஏமாற்றத்தை தோற்றுவிக்கிறது.அரசியலுக்கு வந்து சம்பாதித்த பணத்தை விரயம் பண்ணும் நடிகர்கள் பரிதாபத்துக்குரியவர்கள்.

    15 March, 2009 1:41 AM***

    இவர்கள் தொண்டு செய்றதுக்கு மக்களுக்கு உதவத்தான் அரசியலுக்கு வருவதாக சொல்கிறார்கள்.

    விரயம் செய்த பணம், யாருக்கு போய் சேர்ந்தது?

    மக்களுக்குத்தானே?

    அப்படியென்றால் இவர்கள் அரசியல் தோல்வியிலும் வெற்றிதானே?

    இல்லையா?

    ReplyDelete
  5. ***மருதநாயகம் said...
    //இந்த வகையில் இவர் நடிகர் திலகத்தை ஞாபகப்படுத்துகிறார்//

    இங்கேயும் ஒருத்தர் இதையே தான் சொல்றார் http://kanavukale.blogspot.com/2009/03/blog-post_15.html

    15 March, 2009 5:28 AM***

    வாங்க மருதநாயகம்!

    நம்ம சுரேஷ் அவர்களா?

    ஒரு வித்தியாசம், நான் மிகப்பெரிய சிவாஜி விசிறி. சுரேஷ் அவர்கள் "எமுசியாரு" ரசிகர்னு நெனைக்கிறேன்.

    அவரிடம் உள்ள கொலைவெறி என்னிடம் இல்லை. அதே சமயத்தில் உண்மையை சொல்லாமல் விட என் மனம் ஏற்கவில்லை.

    ReplyDelete
  6. ***மணிகண்டன் said...
    இது ஒன்னும் பெரிய கஷ்டமா தெரியலயே ! 30 நாள்ல தொப்பைய குறைக்க இதோ :-

    http://ezinearticles.com/?Slimmer-Stomach-in-One-Month---5-Steps-That-Secretly-Flatten-Your-Stomach-in-30-Days-Revealed!&id=2040284

    விஜயகாந்த்க்கு அனுப்பிவிடுங்க ப்ளீஸ்.

    15 March, 2009 7:40 AM***

    அரசியலுக்கு தொப்பை உதவலாம். ஆனா, நடிப்புக்கு அது உதவாது. இவர் தொப்பை வச்சிக்கவா இல்லையா குழம்புவதுக்கு காரணம் ரெண்டையும் விடமாட்டேன்கிறார்!

    ReplyDelete
  7. அவரை தொப்பை குறையும் வரை உண்ணாவிரதம் இருக்க சொல்லலாமே...அரசியலுக்கு அரசியல்...சினிமாவிற்கு சினிமா

    ReplyDelete
  8. //நடிகர் விஜய்காந்த் சட்டம் ஒரு இருட்டறையில் அறிமுகமானார்.//

    பிரபலமானார் என்பதே சரி. அதற்கு முன்பே பல குப்பை படங்களில் நடித்துள்ளார்.

    ReplyDelete
  9. ***Bleachingpowder said...
    //நடிகர் விஜய்காந்த் சட்டம் ஒரு இருட்டறையில் அறிமுகமானார்.//

    பிரபலமானார் என்பதே சரி. அதற்கு முன்பே பல குப்பை படங்களில் நடித்துள்ளார்.

    15 March, 2009 11:16 AM***

    அப்படியா!!!

    எனக்கு இன்றுவரை தெரியாதுங்க அது! இன்றுதான் உங்கள்மூலம் தெரிந்து கொண்டேன்! நன்றி :-)

    ReplyDelete
  10. ****கீழை ராஸா said...
    அவரை தொப்பை குறையும் வரை உண்ணாவிரதம் இருக்க சொல்லலாமே...அரசியலுக்கு அரசியல்...சினிமாவிற்கு சினிமா

    15 March, 2009 9:31 AM****

    உண்மையிலேயே நல்ல யோசனைங்க.விஜய்காந்த் சினிமாவில் தொடர்ந்து ஹீரோவாக நடிக்கனும்னா இதை கண்சிடெர் பண்ணனும்.

    நீங்க ராம்நாடு அருகில் உள்ள கீழக்கரையை சேர்ந்தவரா? அதான் "கீழை" அடைமொழி வச்சிருக்கீங்களா, ராஸா? :-)

    உங்கள் வருகைக்கும் அர்த்தமுள்ள யோசனைக்கும் நன்றி :-))

    ReplyDelete
  11. நன்பரே வணக்கம்.....
    உங்களின் எழுத்துக்கள் மிகவும் நன்றாக இருந்தது....

    ஆனால் அதில் இருக்கும் வாசகங்கள் தவறாக உள்ளது.....

    மற்றவரைப் பற்றி விமர்சிப்பதை விட்டுவிட்டு.... உன் பொலப்பப் பாருட புண்டமகனே.....

    ReplyDelete