Tuesday, May 19, 2009

பிரபாகரன் : ஒரு சகாப்தம்

சமீப காலமாக தமிழ்நாட்டு செய்தி என்ன, இந்தியச்செய்தி எதையுமே படிப்பதில்லை. படிக்கக்கூடாது என்பதெல்லாம் இல்லை, படிக்க நேரமில்லாமல் நிறைய மாற்றங்கள், வேலைகள், எப்போதாவது யாஹு செய்திகள் படிப்பதோடு சரி. யதேச்சையாக கண்ணில் பட்ட ஒரு செய்தி என்னை உறைய வைத்தது: தலைவர் பிரபாகரனின் மரணச்செய்தி, அதுவும் உறுதிப்படுத்தப்படாத குழப்பமான/வேதனையான செய்தி. புலிகள் குறிப்பிடுவது போல, பிரபாகரன் உயிரோடு இருக்க வேண்டும் என்பது என்னுடைய நம்பிக்கை.

தமிழினத்தலைவர் என்ற வார்த்தைக்கு தகுதியானவர் பிரபாகரனே. இந்த மரணச்செய்தியைக்கேட்டு வருத்தப்படுபவர்கள் ஒருபுறம் இருக்க, சிலர் மகிழ்ச்சியடைந்திருப்பதையும் ஒரு சில தளங்கள் படித்த போது அறிய முடிந்தது. ஒரு மனிதரின் சாவில் கூட மகிழ்ச்சியடையும் ஜென்மங்களை என்ன சொல்லி திட்டுவது என்று தெரியவில்லை. ஒன்று, அடுத்தவீடு தானே பற்றி எரிகிறது, நமக்கு ஆபத்தில்லை என்று நினைப்பது முட்டாள்தனம். இனப்படுகொலை எங்கு வேண்டுமானாலும் நடக்கலாம், இலங்கையில் மட்டுமே நடக்க வேண்டியதில்லை.

பிரபாகரன் ஒரு வேளை மரணமடைந்திருந்தாலும், அவர் விதைத்த கொள்கைகள் மரணமடைவதில்லை! பிரபாகரனைப்போன்ற மாவீரர்களுக்கு மறைவு என்பதே இல்லை. மனிதரை கொல்லலாம், சிந்தனையை கொல்ல முடியுமா? நிச்சயமாக முடியாது! தமிழீழமும் அப்படியே, அது ஒரு சிந்தனை- உண்மையான தமிழர்களின் கடைசிச்சொட்டு இரத்தம் இருக்கும் வரை தமிழீழ போராட்டம் தொடர்ந்துக்கொண்டு தான் இருக்கும்.

5 comments:

  1. Test: It's been while, just making sure everything works in TM

    ReplyDelete
  2. பிரபாகரன் உயிரோடு இருப்பார் என்று நம்புகிறேன்.

    மன்னாரிலிருந்து வந்த செய்திகளின்படி, அவரும் வேறு சிலரும் முன்னரே தப்பிச் சென்று விட்டதாகத் தெரிகிறது.

    சார்லஸ் அந்தோனி-இன் முகம் சற்றும் பொருந்தவில்லை. பிரபாகரின் முகமோ சமீபத்திய படங்களை விட பத்து வருடம் இளமையான தோற்றத்தோடு இருக்கிறது.

    http://joeanand.blogspot.com/2009/05/blog-post_20.html

    ReplyDelete
  3. அப்பா! கடைசியில் பெரியமனசு பண்ணி ஒரு பதிவு அழகா எழுதிட்ட, கயல்
    :-))

    ReplyDelete
  4. கயல்,
    தலைவர் பத்திரமா இருக்கார்.

    நீண்ட நாட்களாச்சு உங்க பதிவுகள் பக்கம் வந்து. எப்டியிருக்கீங்க?

    ReplyDelete