Tuesday, September 1, 2009

நாடோடிகள்- காதலுக்காக பெருசா கிழிக்கிறாங்க!

நாலு வீணாப் போனவர்கள் ஒண்ணா சேர்ந்து ஒரு காதல் சோடியை, காலைக் கொடுத்து, காதைக்கொடுத்து, கண்ணைக்கொடுத்து சேர்த்து வைச்சு ஒரே கிழியாக்கிழிக்கிறாங்களாம்! இப்படி ஒரு படம்! அதுவும் இந்த இருபத்தி ஒண்ணாம் நூற்றாண்டில்! இன்றைய தமிழ் சினிமாவிலே இப்படி ஒரு அர்த்தமில்லாத படமா?

காதல் எனபது நிச்சயம் நல்ல விசயம்தான். அதை காப்பாத்த, காதலர்களைச் சேர்த்து வைக்க இப்படி கையை காலக் கொடுத்துப் போராடி வெற்றியடைவது எல்லாம் என்னவோ கேணத்தனமா இருக்கு! கிறுக்குத்த்னமான ஒரு படம்!

ஆமாம், பெரிய பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட் தான்.

அதனாலென்ன?

படம் எடுக்கிறானுகளாம் படம்!

தலைவர் சசிக்குமார் ஏதாவது தமிழ் மக்களுக்கு செய்யனும்னு நெனைச்சா சீக்கிரம் நடிக்கிறதை நிறுத்தனும்.

42 comments:

  1. நான் நேத்துதான் பாத்தேன். எனக்கும் இதேதான் தோனுச்சு.

    சும்மா திரியற பசங்கள காண்பிக்கிற வரைக்கும் ஓகே, அதுக்கு அப்புறம் காதல சேத்து வைக்கிறேன், புடுங்கிறேன்னு செம கடி. இதையே விஜய் நடிச்சிருந்தா கிழிச்சி நாரா போட்டிருப்பாங்க. நான் எழுதனும்னு நெனச்சேன் நீங்க எழுதிட்டீங்க. நன்றி

    ReplyDelete
  2. மருத்துவர் அய்யா ராமதாஸ் மாதிரி உக்காந்து யோசிப்பிங்களோ?

    ReplyDelete
  3. சேர்த்து வெக்கிறவங்களுக்குத்தான் தெரியும் இந்தக் கஷ்டம். இதைப் புரிஞ்சிக்க காதலிச்சி சேர கஷ்டப்பட்டிருக்கனும், இல்லாட்டி காதலிச்சு சேர கஷ்டப்படுறவங்களுக்கு நண்பனா இருக்கனும். இல்லாட்டி புடிக்காது..

    ReplyDelete
  4. வலைல படம் தேடிக்கிட்டு இருக்கேன்.வேண்டாமோ.

    ReplyDelete
  5. என்னைப் பொறுத்தவரைக்கும் ரொம்ப நல்ல படம். காதலர்கள் பார்க்கனும். அப்போதான் சேர எவ்ளோ கஷ்டப்பட்டிருக்கோம்னு தெரியும், வாழனும்னு தோணும்.

    ReplyDelete
  6. வருண் ஃப்ரிட்ஜுக்குள்ளயே வளந்துட்டு நேரா அமெரிக்காவுக்கு வந்திருப்பாரு போல. இளா சொன்ன மாதிரி ஒண்ணு லவ் பண்ணியிருந்திருக்கனும் இல்ல லவ் பண்றவங்களுக்கு ஃப்ரண்டா இருந்து சேத்து வச்சிருக்கணும். மத்த சினிமால காட்டுற மாதிரி காதல் ஒண்ணும் அவ்வளவு ஈஸியானது இல்ல பாஸ்.
    (அடுத்தவன் லவ்வுக்காக அடி வாங்கி போலிஸ் ஸ்டேஷன் வரை போனவனக்குத்தான தெரியும்).

    ReplyDelete
  7. பாப்புலாரான படத்தைப் பத்தி நெகட்டிவ்வா கமெண்ட் போட்டா நிறைய ஹிட் கிடைக்கும்னு ராமதாஸ் மாதிரி திட்டம் போட்றாரோ?

    ReplyDelete
  8. காதலுக்காக பெருசா கிழிக்கிறாங்களோ இல்லையோ வெறும் இனக்கவர்ச்சியை காதல்ன்னு தப்பா புரிஞ்சிகிட்டு நண்பர்கள்,பெற்றோர்களை எல்லாம் முட்டாளாக்கிற காதலர்களை கடைசில கிழிகிழின்னு கிழிக்கிறாங்கல்ல.......
    அதுதான் படத்தோட வெற்றிக்கு காரணம்.

    திருட்டு விசிடில படம் பார்த்திங்களா.

    என் நண்பனின் நண்பன் எனக்கும் நண்பன்னு படம் ஆரம்பிக்கும்போது ஒரு வாசகம் போடுவாங்க.அதுகூட படத்தின் வெற்றிக்கு ஒரு காரணம்.

    படத்துல பாராட்ட எவ்வளவோ விஷயம் இருக்கும்போது எல்லோருடைய ரசனையையும் இப்படி எள்ளி நகையாடிட்டிங்களே....

    ReplyDelete
  9. 'கந்தசாமி - கருத்துள்ள சாமி'ன்னு அடுத்து ஒரு பாராட்டு பதிவு உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம்.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. ILA said...

    என்னைப் பொறுத்தவரைக்கும் ரொம்ப நல்ல படம். காதலர்கள் பார்க்கனும். அப்போதான் சேர எவ்ளோ கஷ்டப்பட்டிருக்கோம்னு தெரியும், வாழனும்னு தோணும்.
    //
    எனக்கென்னமோ அவங்க காமிச்ச ஹீரோயிசம் , அதுக்கு அப்புறம் அட்வைஸ் எல்லாம் எனக்கு பிடிக்கலை, விஜய் நடிச்சா ஒத்துப்பீங்களா? இதே மாதிரி சாஜாகான் அப்படின்னு ஒரு படம் ஏற்கனவே வந்திருக்கு சார். இப்படத்தின் பலம் அவர்கள் தேர்ந்தேடுத்த பின்னணி, சுப்ரமணியபுரம் போல் கொஞ்சம் நாஸ்டால்ஜிக் விசயம்

    ReplyDelete
  11. முகிலன் said...

    வருண் ஃப்ரிட்ஜுக்குள்ளயே வளந்துட்டு நேரா அமெரிக்காவுக்கு வந்திருப்பாரு போல. இளா சொன்ன மாதிரி ஒண்ணு லவ் பண்ணியிருந்திருக்கனும் இல்ல லவ் பண்றவங்களுக்கு ஃப்ரண்டா இருந்து சேத்து வச்சிருக்கணும். மத்த சினிமால காட்டுற மாதிரி காதல் ஒண்ணும் அவ்வளவு ஈஸியானது இல்ல பாஸ்.
    (அடுத்தவன் லவ்வுக்காக அடி வாங்கி போலிஸ் ஸ்டேஷன் வரை போனவனக்குத்தான தெரியும்).
    //

    அதெல்லாம் வேற உண்டா? ஆமா லவ்வுன்னா இன்னாது சார்:))))))

    ReplyDelete
  12. குடுகுடுப்பை said...

    //எனக்கென்னமோ அவங்க காமிச்ச ஹீரோயிசம் , அதுக்கு அப்புறம் அட்வைஸ் எல்லாம் எனக்கு பிடிக்கலை, விஜய் நடிச்சா ஒத்துப்பீங்களா? இதே மாதிரி சாஜாகான் அப்படின்னு ஒரு படம் ஏற்கனவே வந்திருக்கு சார். இப்படத்தின் பலம் அவர்கள் தேர்ந்தேடுத்த பின்னணி, சுப்ரமணியபுரம் போல் கொஞ்சம் நாஸ்டால்ஜிக் விசயம்//

    இதுல எங்க ஹீரோயிசம் வந்ததுன்னு எனக்கு தெரியல. விஜய் நடிச்சிருந்தா கண்ணு கிழிஞ்சிருக்காது, அவங்க பாட்டி போய் சேந்துருக்க மாட்டாங்க, அவங்க மாமா பொண்ணு வேற ஒருத்தன கல்யாணம் பண்ணியிருக்காது, இவ்வளவு ஏன், கூட யாரயும் கூட்டிட்டுப் போவாம தனியாளா எல்லாத்தையும் செஞ்சிருப்பாரு, அதுனாலயே படம் ஓடியிருக்காது.

    இதெல்லாம் இந்தப்படத்துல இருந்ததுனால தான் இந்தப் படத்தை எதார்த்தமான படம்னு சொல்றாங்க.

    சசிகுமார் இது மாதிரி இன்னும் பல யதார்த்தமான படங்களைத் தரணும்னு கேட்டுக்கிறேன்.

    ReplyDelete
  13. இதெல்லாம் இந்தப்படத்துல இருந்ததுனால தான் இந்தப் படத்தை எதார்த்தமான படம்னு சொல்றாங்க.

    சசிகுமார் இது மாதிரி இன்னும் பல யதார்த்தமான படங்களைத் தரணும்னு கேட்டுக்கிறேன்.//

    யதார்த்தமான களத்தில் புகுத்தப்பட்ட காதலுக்காகவே அடிபடுகிற ஹீரோயிசம் தானே இது? இல்லையா?

    ReplyDelete
  14. //காதல் எனபது நிச்சயம் நல்ல விசயம்தான். அதை காப்பாத்த, காதலர்களைச் சேர்த்து வைக்க இப்படி கையை காலக் கொடுத்துப் போராடி வெற்றியடைவது எல்லாம் என்னவோ கேணத்தனமா இருக்கு! கிறுக்குத்த்னமான ஒரு படம்! //

    உங்களுக்கு நாடோடிகள் படத்தோட கதை சரியா புரியாததுதான் இந்த குழப்பமான பதிவுக்கு கா'ரணம்'. காலைக் கொடுத்து,காதைக் கொடுத்து, அரசாங்க வேலையையும்,அத்தை பொண்ணையும் இழந்து சேர்த்து வச்ச காதலர்கள் சந்தோஷமா இருந்துட்டு ஆசை தீர்ந்தவுடன் அவங்கவங்க வீட்டுல ஏற்பாடு செய்யற கல்யாணம் பண்ண புனிதமான காதலை கேவலப்படுத்துவதை பொறுக்காத அப்பாவி நண்பர்களின் அறச்சீற்றம்தான் இது.

    ReplyDelete
  15. காதலுக்காக நீங்கள் அடிபட்டதில்லையா குடுகுடுப்பை, இல்லை அடிபட்டவர்களைப் பற்றி கேள்வி கூட பட்டதில்லையா?

    துபாய் ராஜா சார், வருண் பாதி படத்துல ஆஃப் பண்ணிட்டு தூங்கியிருப்பாருன்னு நினைக்கிறேன்.

    ReplyDelete
  16. முகிலன் said...

    காதலுக்காக நீங்கள் அடிபட்டதில்லையா குடுகுடுப்பை, இல்லை அடிபட்டவர்களைப் பற்றி கேள்வி கூட பட்டதில்லையா?//

    நான் பட்டதில்லை. அடிவாங்கினவங்கள கேள்விப்பட்டிருக்கேன் சார். பெண்ணைக்கடத்தும் முறையில் வெறும் ஹீரோயிசமும், கார் ரேசும்தான் தான் இருக்கு, களத்தில் காட்டப்பட்ட எதார்த்தம் இல்லை சார். சுப்பிரமணியபுரம் படத்தில் கூட எனக்கு விமர்சனம் உண்டு, அதே கதை 2009 களமாக இருந்தால் அது ஒரு விஜய் படம் அல்லது விசால் படம். இங்கே இவர்களின் புத்திசாலித்தனமே களம்தான் கதையல்ல என்பது என் கருத்து.

    ReplyDelete
  17. ***குடுகுடுப்பை said...

    நான் நேத்துதான் பாத்தேன். எனக்கும் இதேதான் தோனுச்சு.

    சும்மா திரியற பசங்கள காண்பிக்கிற வரைக்கும் ஓகே, அதுக்கு அப்புறம் காதல சேத்து வைக்கிறேன், புடுங்கிறேன்னு செம கடி. இதையே விஜய் நடிச்சிருந்தா கிழிச்சி நாரா போட்டிருப்பாங்க. நான் எழுதனும்னு நெனச்சேன் நீங்க எழுதிட்டீங்க. நன்றி

    1 September, 2009 10:59 AM***

    நான் ஃபீல் பண்ணிய மாதிரியே ஃபீல் பண்ணி இருக்கீங்க, குடுகுடுப்பை!

    அதை பகிர்ந்துகொண்டதற்கு நன்றி!

    ReplyDelete
  18. சினிமாவில் சுவாரசியத்திற்காக கார் சேஸிங்கும் ஒருத்தன் நாலு பேரை அடிக்கும் ஹீரோயிசமும் தவிர்க்க முடியாதது. நான் விஜய் விஷால் இவர்களின் எல்லாப் படங்களுக்கும் எதிரி அல்ல. லாஜிக்கே இல்லை என்றாலும் விறுவிறுப்பான திரைக்கதைக்காக எனக்கு கில்லி படத்தைப் பிடிக்கும். ஆனால் விஷாலும் விஜயும் இதை மாதிரி படத்தையே திரும்ப திரும்ப நடிப்பதால் தான் எனக்கு பிடிக்கவில்லை. மேலும் நீங்கள் சொன்ன மாதிரி சுப்பிரமணியபுரத்தில் விஜய் படத்தின் வன்முறை இருந்தது. அது 1980களில் நடப்பதாக காட்டியிருந்தது நீங்கள் சொன்ன மாதிரி இயக்குனரின் சாமர்த்தியம். அதோடு மற்ற படங்களில் இருந்து அது விலகியிருந்ததன் காரணம் களம் மட்டுமல்ல. காதலுக்காக உயிரைக் கொடுத்த கதாநாயகன் நாயகியைப் பார்த்து வந்த நமக்கு நாயகி நாயகனுக்கு செய்த துரோகம் நம் முகத்தில் அறைகிறது பாருங்கள். நல்ல நண்பனே காசுக்காகவும் காவலுக்காகவும் காட்டிக்கொடுக்கும் காட்சி நம்மை ஸ்தம்பிக்கச் செய்கிறது பாருங்கள். அதுதான் அந்தப் படத்தின் வெற்றிக்குக் காரணம் என்பது என் கருத்து.

    ReplyDelete
  19. ***முகிலன் said...

    மருத்துவர் அய்யா ராமதாஸ் மாதிரி உக்காந்து யோசிப்பிங்களோ?***

    நான் அரசியல்வாதி இல்லைங்க! எனக்கு தோன்றியதை நான் 100% ஹானஸ்ட்டா எழுதினேன்!

    இவ்வளவு எதிர்ப்பு இதற்கு இருக்கும் என்று நினைக்கவில்லை! நம்புங்க! :)

    ReplyDelete
  20. ** ILA said...

    என்னைப் பொறுத்தவரைக்கும் ரொம்ப நல்ல படம்.***

    உங்க மதிப்பீட்டை நான் மதிக்கிறேன்.

    ***காதலர்கள் பார்க்கனும். அப்போதான் சேர எவ்ளோ கஷ்டப்பட்டிருக்கோம்னு தெரியும், வாழனும்னு தோணும்.

    1 September, 2009 11:48 AM***

    சோ, எங்களுக்கு, காதல், காதலர்கள் பற்றி எல்லாம் தெரியாதுங்கிறீங்களா?

    ReplyDelete
  21. ***சங்கரராம் said...

    வலைல படம் தேடிக்கிட்டு இருக்கேன்.வேண்டாமோ.

    1 September, 2009 11:42 AM***

    நான் வேண்டாம்னுதான் சொல்லுவேன் :-)

    ReplyDelete
  22. ***LA said...

    சேர்த்து வெக்கிறவங்களுக்குத்தான் தெரியும் இந்தக் கஷ்டம். இதைப் புரிஞ்சிக்க காதலிச்சி சேர கஷ்டப்பட்டிருக்கனும், இல்லாட்டி காதலிச்சு சேர கஷ்டப்படுறவங்களுக்கு நண்பனா இருக்கனும். இல்லாட்டி புடிக்காது..

    1 September, 2009 11:37 AM***

    சேர்த்து வைக்கிரது சரி, இப்படித்தான் சேர்த்து வைக்கனும்னு இல்லைங்க!

    ReplyDelete
  23. ***முகிலன் said...

    வருண் ஃப்ரிட்ஜுக்குள்ளயே வளந்துட்டு நேரா அமெரிக்காவுக்கு வந்திருப்பாரு போல.***

    நான் வளர்ந்தது தண்ணி இல்லாத காட்டில்!

    ***இளா சொன்ன மாதிரி ஒண்ணு லவ் பண்ணியிருந்திருக்கனும் இல்ல லவ் பண்றவங்களுக்கு ஃப்ரண்டா இருந்து சேத்து வச்சிருக்கணும். மத்த சினிமால காட்டுற மாதிரி காதல் ஒண்ணும் அவ்வளவு ஈஸியானது இல்ல பாஸ்.
    (அடுத்தவன் லவ்வுக்காக அடி வாங்கி போலிஸ் ஸ்டேஷன் வரை போனவனக்குத்தான தெரியும்).

    1 September, 2009 11:58 AM***

    அடுத்தவன் லவ்வுக்காக, கை, காது, காலைக் கொடுத்தவங்க புரானத்தில்கூட இல்லைங்க பாஸ்!

    ReplyDelete
  24. ***
    Blogger முகிலன் said...

    பாப்புலாரான படத்தைப் பத்தி நெகட்டிவ்வா கமெண்ட் போட்டா நிறைய ஹிட் கிடைக்கும்னு ராமதாஸ் மாதிரி திட்டம் போட்றாரோ?

    1 September, 2009 11:59 AM***

    ஏங்க பாப்புளரான படத்தை + வாத்தான் எழுதனும்னு எதுவும் சட்டமா என்னங்க?

    நம்ம மனசுல தோனுறதை எழுதத்தாங்க இந்த ப்ளாக் எல்லாம் :)

    ReplyDelete
  25. வருண் said..

    //அடுத்தவன் லவ்வுக்காக, கை, காது, காலைக் கொடுத்தவங்க புரானத்தில்கூட இல்லைங்க பாஸ்!//

    அப்படியெல்லாம் சொல்லிடாதிங்க சார். ராமனோட காதலுக்காக கடலையே தாண்டி இருக்காரு அனுமார், ராமனுக்கும் ராவணனனுக்கும் நடந்த போருல எத்தன பேரு செத்திருக்காங்க.. அது காதலுக்காக நடந்த போர்தான?

    ReplyDelete
  26. ***முகிலன் said...

    வருண் said..

    //அடுத்தவன் லவ்வுக்காக, கை, காது, காலைக் கொடுத்தவங்க புரானத்தில்கூட இல்லைங்க பாஸ்!//

    அப்படியெல்லாம் சொல்லிடாதிங்க சார். ராமனோட காதலுக்காக கடலையே தாண்டி இருக்காரு அனுமார், ராமனுக்கும் ராவணனனுக்கும் நடந்த போருல எத்தன பேரு செத்திருக்காங்க.. அது காதலுக்காக நடந்த போர்தான?***

    சீதா, ராமனின் மனைவி சார். காதலி அல்ல! இது வேற விசயம்! :-)

    ReplyDelete
  27. வருன், சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள். நான் படத்தை 10 நிமிடங்களுக்கு மேல் பார்க்கவில்லை (முடியவில்லை).

    //காதலுக்காக கடலையே தாண்டி இருக்காரு அனுமார், ராமனுக்கும் ராவணனனுக்கும் நடந்த போருல எத்தன பேரு செத்திருக்காங்க// அட கிரகச்சாரமே! அவதாரமெடுத்து இராவணனை அழித்த புரானத்தை லவ் ஸ்டோரியா மாத்திட்டீங்களே, இது அடுக்குமா? நண்பர்கள் சேத்து வெச்சதாலயே பிடிக்கவில்லையென்றாலும் சேர்ந்து வாழ வேண்டுமா?

    ReplyDelete
  28. ***துபாய் ராஜா said...

    படத்துல பாராட்ட எவ்வளவோ விஷயம் இருக்கும்போது எல்லோருடைய ரசனையையும் இப்படி எள்ளி நகையாடிட்டிங்களே....

    1 September, 2009 12:04 PM***

    ஒண்ணு மட்டும் புரிஞ்சுக்கோங்க, இவர்கள் காலைக் கொடுத்து, காதைக்கொடுத்து சேர்த்து வச்ச காதலர்கள் 2 வருசத்திலே விவாகரத்துக்கூட செய்யலாம். இல்லைனா, இனோருவரை காதலிக்கவும் செய்யலாம். கொச்சைப்படுத்துவதா நினைக்காதீங்க! இதல்லாம் நடக்கலாம்! அப்படியிருக்கும்போது மூனாவது ஆளின் காதலின் ஆழத்தை ஆஹா ஓஹோனு எடைபோடுவதே தப்புனு சொல்வேன் நான்.

    ReplyDelete
  29. ***துபாய் ராஜா said...

    //காதல் எனபது நிச்சயம் நல்ல விசயம்தான். அதை காப்பாத்த, காதலர்களைச் சேர்த்து வைக்க இப்படி கையை காலக் கொடுத்துப் போராடி வெற்றியடைவது எல்லாம் என்னவோ கேணத்தனமா இருக்கு! கிறுக்குத்த்னமான ஒரு படம்! //

    உங்களுக்கு நாடோடிகள் படத்தோட கதை சரியா புரியாததுதான் இந்த குழப்பமான பதிவுக்கு கா'ரணம்'. காலைக் கொடுத்து,காதைக் கொடுத்து, அரசாங்க வேலையையும்,அத்தை பொண்ணையும் இழந்து சேர்த்து வச்ச காதலர்கள் சந்தோஷமா இருந்துட்டு ஆசை தீர்ந்தவுடன் அவங்கவங்க வீட்டுல ஏற்பாடு செய்யற கல்யாணம் பண்ண புனிதமான காதலை கேவலப்படுத்துவதை பொறுக்காத அப்பாவி நண்பர்களின் அறச்சீற்றம்தான் இது. ***

    அப்பாவிகள் அல்ல! முட்டாள்கள்! வாழ்க்கை காதல் பற்றி சிறிதளவும் தெரியாத மடையகளின் மடத்தனத்தை பார்த்து ரசிப்பது கடினம்!

    ReplyDelete
  30. //அப்பாவிகள் அல்ல! முட்டாள்கள்! வாழ்க்கை காதல் பற்றி சிறிதளவும் தெரியாத மடையகளின் மடத்தனத்தை பார்த்து ரசிப்பது கடினம்//

    உண்மைதான். அப்பாவிகளுக்கும், முட்டாள்களுக்கும் கோபம் வந்தால் படித்தவன் பார்வையில் அது மடத்தனம்தான்.

    நான் இனி இந்த ஆட்டத்துக்கு வரலை.

    ReplyDelete
  31. ***அமர பாரதி said...

    வருன், சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள். நான் படத்தை 10 நிமிடங்களுக்கு மேல் பார்க்கவில்லை (முடியவில்லை).***

    உங்கள் கருத்துக்கு நன்றி, அமர பாரதி! :-)

    ReplyDelete
  32. ***துபாய் ராஜா said...

    //அப்பாவிகள் அல்ல! முட்டாள்கள்! வாழ்க்கை காதல் பற்றி சிறிதளவும் தெரியாத மடையகளின் மடத்தனத்தை பார்த்து ரசிப்பது கடினம்//

    உண்மைதான். அப்பாவிகளுக்கும், முட்டாள்களுக்கும் கோபம் வந்தால் படித்தவன் பார்வையில் அது மடத்தனம்தான்.

    நான் இனி இந்த ஆட்டத்துக்கு வரலை.***

    உங்கள் கருத்துக்கும், விவாதத்திற்கும் விளக்கத்துக்கும் நன்றிங்க, துபாய் ராஜா!

    டேக் இட் ஈஸி, ப்ளீஸ்! :)

    ReplyDelete
  33. Good lord.There is one more jeevan that thinks in the same line as me. Just because these 4 guys helped the cause of "Punidhamana Kadhal"(I first don't understand how they measured the level of punidham in the kadhals ;-)), should the lovers remain together forever evn if they don't get along anymore and make each other's life hell? Isn't it their life and it is upto them to decide what they want? It is none of others business to tell them whom they should live with, just because they helped them. Crappy logic! and irony is the media giving a masterpiece tag for such movies. Just because it has that raw nativity of a village, one cannot get carried away, i guess.Unfortunately, the tamil media is repeatedly doing the same mistake.

    ReplyDelete
  34. கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை

    ReplyDelete
  35. ஒரு கிசுகிசு

    வருண் தமிழுக்கு எதாவது நல்லது செய்யனுமென்றால், வலையில் எழுதுவதை நிறுத்தனும்!


    (சும்மா லுலுலாயிக்கு)

    ReplyDelete
  36. ***sriram said...

    Good lord.There is one more jeevan that thinks in the same line as me. Just because these 4 guys helped the cause of "Punidhamana Kadhal"(I first don't understand how they measured the level of punidham in the kadhals ;-)), should the lovers remain together forever evn if they don't get along anymore and make each other's life hell? Isn't it their life and it is upto them to decide what they want? It is none of others business to tell them whom they should live with, just because they helped them. Crappy logic! and irony is the media giving a masterpiece tag for such movies. Just because it has that raw nativity of a village, one cannot get carried away, i guess.Unfortunately, the tamil media is repeatedly doing the same mistake.

    1 September, 2009 7:18 PM***

    Thanks for sharing your thoughts, sriram! :)

    ReplyDelete
  37. ***Selva said...

    கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை
    1 September, 2009 11:05 PM ***

    கழுதைக்கு கற்பூர வாசனையும் தெரியாது, கற்பூரம் ஒரு கார்சினோஜன் கலந்த கலவை என்பதும் தெரியாது. அதை விடுங்க பாவம்!

    ஆனால் இந்தப் பழமொழியை வச்சு நம்ம பெரிய மேதாவிபோல காட்டிக்கலாம். அது மட்டும் உண்மை!

    ReplyDelete
  38. ***Blogger வால்பையன் said...

    ஒரு கிசுகிசு

    வருண் தமிழுக்கு எதாவது நல்லது செய்யனுமென்றால், வலையில் எழுதுவதை நிறுத்தனும்!


    (சும்மா லுலுலாயிக்கு)

    1 September, 2009 11:56 PM***

    நீங்க சொல்றதை நேரடியா சொல்லியிருக்கலாம். எதுக்கு இந்த கிசு கிசெல்லாம்!

    உங்கள் ஆசை நிறைவேற வாழ்த்துக்கள்! :-)

    ReplyDelete
  39. ***
    should the lovers remain together forever evn if they don't get along anymore and make each other's life hell?
    ***

    most of the married couples do !

    ReplyDelete