Friday, September 18, 2009

பாசமலர் vs முள்ளும் மலரும்!


இந்த ரெண்டு படங்களுமே அடிப்படையில் ஒரே மாதிரியான “ப்ளாட்டை” கொண்ட படங்கள்தான். ஆனால் ஒன்றிலிருந்து ஒன்றை காப்பியடித்ததாக வோ, தழுவி எடுத்ததாகவோ எதுவுமே சொல்ல முடியாது. அண்ணன் - த்ங்கை பாசத்தை அடிப்படையால வைத்து எடுத்தது.

பாசமலர் (1961):

நடிகர் திலகம் சிவாஜி கணேசனும், நடிகையர் திலகம் சாவித்திரியும் அண்ணன் தங்கையாக நடித்த இல்லை வாழ்ந்த படம் பாசமலர். சிவாஜியின் ஒரே தங்கை சாவித்திரி. இருவருக்கும் அம்மா அப்பா இல்லை. தங்கைனா அண்ணனுக்கு உயிர். அண்ணன்னா தங்கைக்கு தெய்வம். ஆனால், பருவ வயதில் வரும் காதல், காதலன் பிறகு கணவனானா மாறிய ஜெமினிகணேசனுக்கு சிவாஜினா ஆகாது. சிவாஜிக்கு ஜோடி, எம் என் ராஜம். அண்ணன் - தங்கை பாசம் என்பது கணவன் - மனைவி உறவைவிட சிறந்தது என்பதுபோல முடியும்.

நடிப்பு? சொல்லவே வேண்டாம். Outstanding!

பாடல்கள் அனைத்துமே தேனா இருக்கும்.

இசை: விஸ்வனாதன் ராமமூர்த்தி; பாடல்கள்: கவிஞர் கண்ணதாசன்

1) எங்களுக்கும் காலம் வரும்

2) மலர்களைப்போல் தங்கை உறங்குகிறாள்

3) காலங்களில் அவள் வசந்தம்

4) பாட்டொன்று கேட்டேன் பரவசம் அடைந்தேன் நான் அதை பாடவில்லை

5) வாராய் என் தோழி வாராயோ

6) மலர்ந்து மலராத

முடிவு: அண்ணனும் தங்கையும் கடைசியில் இறந்துவிடுவார்கள். சோகமான முடிவு. என்னைப் பொருத்தவரையில் இது மிகைப்படுத்தப்பட்ட படமோ, நடிப்போ இல்லை. ஆனால் சோகமான முடிவு.

முள்ளும் மலரும் (1978):

மகேந்திரன் டைரக்ஷனில் ரஜினி, ஷோபா, படாஃபட் ஜெயலக்ஷ்மி, சரத்பாபு நடித்த அண்ணன் தங்கை பாசத்திற்கு முக்கியத்துவம் கொடுத்த படம்.

ரஜினிகாந்த், காளி என்கிற ஒரு வீம்புபிடிச்ச அடாவடித்தனம் செய்யும் ஆனால் தங்கை, வள்ளி மேல் பாசத்தையும் அன்பையும் பொழியும் அண்ணனாக நடித்து இருப்பார். இவர்களும் அனாதைகள்தான். ரஜினி காளியாக நடித்து நடிப்பில் எல்லோரையும் மிஞ்சிவிடுவார். ரஜினிக்கு பாதிப்படத்தில் ஒரு கை வேற போயிடும்.

சோஃபா, ரஜினியின் தங்கை, வள்ளியாக அவரையும் மிஞ்சுமளவுக்கு முயன்று நடித்து இருப்பார். இருந்தாலும் ரஜினிதான் நடிப்பில் வின்னர்.

சரத்பாபு, ரஜினியின் அகந்தை, அடாவடித்தனத்தை வெறுக்கும் கண்டிப்பான மேலதிகாரியாக, அதே சமயத்தில் ரஜினியின் தங்கையின் காதலனாக கன்னியமாக கச்சிதமாக நடித்து இருப்பார்.

ரஜினி ஜோடியாக படாஃபட் ஜெயலக்ஷ்மியும் நடிப்பில் அசத்தி இருப்பார்.

இசை: இளையராஜா (தேங்க்ஸ் டு முகிலன்)

பாடல்கள்: கண்ணதாசன்

1) நித்தம் நித்தம் நெல்லுச்சோறு

2) செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல்

3) ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாளும் எனக்கொரு கவலையில்லை

முடிவு:

காளியும் வள்ளியும் முடிவில் சாகமாட்டார்கள். காளி, தன் தங்கை வள்ளிக்காக தன் பிடிவாதத்தை விட்டு இறங்கிவந்து தங்கை ஆசையை பூர்த்திசெய்து வைப்பார்.

Finally, அடிக்க வராதீங்க, முள்ளும் மலரும் ஹாஸ் அன் எட்ஜ் ஓவர் பாசமலர்னு எனக்கு தோனுது.

10 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. இது உங்களுக்கேெ ஓவரா தெரிஞ்சதாலதானே அந்த 'ஓவர்'ன்ற வார்த்தையைப் போட்டீங்க!:))

    ReplyDelete
  3. //முள்ளும் மலரும் ஹாஸ் அன் எட்ஜ் ஓவர் பாசமலர்னு எனக்கு தோனுது.//

    முள்ளும் மலரும் எட்ஜ் மட்டுமில்லை ஒரு மன்ஹாட்டன் அபவ் பாசமலர்.

    பாசமலர் ஓரு நாடகம். சினிமாவுக்கான எந்த அம்சமும் இல்லாத படம். முள்ளும் மலரும் ஒரு விஷுவல். குறிப்பாக கிளைமேக்ஸில் ரஜினி, ஷோபா, மஹேந்திரன், இளையராஜா எல்லாரும் புகுந்து விளையாடி இருப்பார்கள்.

    ReplyDelete
  4. தலைப்பை பார்த்ததுமே, வாசித்தபடி வரும்போதே நான் சொல்ல நினைத்ததை கடைசியில் நீங்கள் சொல்லிவிட்டிருக்கிறீர்கள்:))!

    ReplyDelete
  5. இர‌ண்டுமே வெவ்வேறு கால‌க்க‌ட்ட‌த்தில் வ‌ந்து ம‌ன‌தை நிறைத்த‌வை. என‌வே ஒப்பிட‌த் தேவையில்லை. You can try this view on Mullum malarum here.

    Film4thwall.blogspot.com

    Thanks.
    Toto.

    ReplyDelete
  6. ****VSK said...
    இது உங்களுக்கேெ ஓவரா தெரிஞ்சதாலதானே அந்த 'ஓவர்'ன்ற வார்த்தையைப் போட்டீங்க!:))

    18 September, 2009 8:37 PM***

    முள்ளும் மலரும் படம் ரொம்ப எதார்த்தமாவும் இருக்கும்ங்க. அந்த கிராமத்து கல்ச்சரை அழகா காட்டியிருப்பார்கள்.
    அதான்.. :)))

    ReplyDelete
  7. ***முகிலன் said...
    //முள்ளும் மலரும் ஹாஸ் அன் எட்ஜ் ஓவர் பாசமலர்னு எனக்கு தோனுது.//

    முள்ளும் மலரும் எட்ஜ் மட்டுமில்லை ஒரு மன்ஹாட்டன் அபவ் பாசமலர்.

    பாசமலர் ஓரு நாடகம். சினிமாவுக்கான எந்த அம்சமும் இல்லாத படம். முள்ளும் மலரும் ஒரு விஷுவல். குறிப்பாக கிளைமேக்ஸில் ரஜினி, ஷோபா, மஹேந்திரன், இளையராஜா எல்லாரும் புகுந்து விளையாடி இருப்பார்கள்.

    18 September, 2009 8:49 PM***

    உங்க பின்னூட்டத்திலிருந்த்தான் இளையராஜா இசை என்று மாற்றினேன்.
    பாசமலர் விசிறிகள் உங்களை உண்டு இல்லனு ஆக்கிவிடுவார்கள் கவனம்!! :))))

    ReplyDelete
  8. ***ராமலக்ஷ்மி said...
    தலைப்பை பார்த்ததுமே, வாசித்தபடி வரும்போதே நான் சொல்ல நினைத்ததை கடைசியில் நீங்கள் சொல்லிவிட்டிருக்கிறீர்கள்:))!***

    Great minds think alike னு சொல்லுவாங்க! உங்களோட சேர்ந்து நானும் "க்ரேட்" ஆகிக்கிறேன் :)))

    பகிர்தலுக்கு நன்றிங்க ராமலக்ஷ்மி :)

    ReplyDelete
  9. ***Toto said...
    இர‌ண்டுமே வெவ்வேறு கால‌க்க‌ட்ட‌த்தில் வ‌ந்து ம‌ன‌தை நிறைத்த‌வை. என‌வே ஒப்பிட‌த் தேவையில்லை. You can try this view on Mullum malarum here.

    Film4thwall.blogspot.com

    Thanks.
    Toto.***

    Thanks Toto. I will check it out, soon :)))

    ReplyDelete
  10. 12 வருடத்திற்கு ஒரு முறை வரும் அண்ணன் தங்கை படங்களை பார்க்கிறீர்கள் தானே...,

    ReplyDelete