Tuesday, October 20, 2009

விஜய், அஜீத்தை முந்திய சூர்யா!



தமிழ்நாட்டைப்பொறுத்தமட்டில் ரஜினி, கமலுக்கு அப்புறம் விஜய்தான் அடுத்த பெரிய ஹீரோ. அதேபோல் அஜீத்துக்கும் ஸ்டார் வால்யூ உண்டு. ஆனால் அமெரிக்காவை பொறுத்தவரையில் கதை வேறமாதிரி போகுது. ரஜினி, கமல் படங்களுக்கு அடுத்தது விஜய் யோ, அஜீத்தோ இல்லையாம்! சமீபத்தில் சூர்யா படங்கள்தான் நல்லாப்போகிறதாம்.


அமெரிக்காவைப் பொறுத்தவரையில், படம் எவ்வளவு பெரிய ஓப்பனிங் கொடுக்கிறது என்பதுதான் ரொம்ப முக்கியம். ஏன்னா படம் பலவாரங்கள் எல்லாம் ஓடுவதில்லை. ஒண்ணு ரெண்டு ஷோலயே எவ்வளவு அள்ளுகிறார்கள் என்பதுதான் முக்கியம்.


பெரிய ஊர்கள் நியூ ஜெர்ஸி, சிகாகோ, டாலஸ், ஹ்யூஸ்டன், அட்லாண்டா, லாஸ் ஏஞ்சலஸ் போன்ற நகரங்களில் பொதுவாக தமிழ்ப்படங்கள் சில வாரங்களுக்கு மேலும் ஓடும். மற்ற சிறிய நகரங்களிலெல்லாம் ஒரு வீக் எண்ட்ல ரெண்டுல இருந்து ஆறு காட்சிகள் திரை இடுவாங்க அவ்வளவுதான். அதில் கிடைக்கும் கலக்ஷன்தான் முக்கியம். படம் ஊத்திக்கிட்டாக்கூட நல்ல ஓப்பனிங் இருந்தால் போட்டகாசை எடுத்து லாபமும் அடைந்துவிடுவார்கள்!குசேலனில்கூட லாபம் சம்பாரித்து விட்டார்களாம்!!

4 comments:

  1. //ஆனால் அமெரிக்காவை பொறுத்தவரையில் கதை வேறமாதிரி போகுது.//

    எனக்குத் தெரிந்து இப்போது இங்கும் பரவலாக எல்லோருக்கும் பிடித்த நடிகராக சூர்யாதான் மிளிர்ந்து கொண்டிருக்கிறார்.

    ReplyDelete
  2. ***ராமலக்ஷ்மி said...
    //ஆனால் அமெரிக்காவை பொறுத்தவரையில் கதை வேறமாதிரி போகுது.//

    எனக்குத் தெரிந்து இப்போது இங்கும் பரவலாக எல்லோருக்கும் பிடித்த நடிகராக சூர்யாதான் மிளிர்ந்து கொண்டிருக்கிறார்.***

    உண்மைதாங்க, ராமலக்ஷ்மி, சூர்யா கொஞ்சம் ஸ்டெடியாக மேலே போயிக் கொண்டேதான் இருக்கிறார். கொஞ்சம் நல்லாவே நடிக்கவும் செய்கிறார். ரொம்பவே நடிப்பில் முன்னேற்றம் தெரிகிறது. மேலும் ரெகுலர் இண்டெர்வல்ல அவர்படம் வந்துகொண்டே இருக்கிறது.

    மற்றவர்களெல்லாம் இப்போவே "ரஜினி ஸ்டெயிலில்" 1 1/2 வருடம், 2 வருடம் இடைவெளியில் ஒரு படம்னு வெளியிட்டுக்கொண்டு இருக்காங்க! இந்த வயதில் இவர்கள் வருடத்துக்கு 2 படமாவது பண்ணலாம்னு தோனுது :)

    தங்கள் பகிர்தலுக்கு நன்றிங்க, ராமலக்ஷ்மி. :)

    ReplyDelete
  3. நிறைய‌ ப‌ட‌ம் ப‌ண்ணி அது இல்ல‌ன்னா இதுன்னு த‌ப்பிச்சிக்குவார்னு தோணுது..

    -Toto
    www.pixmonk.com

    ReplyDelete
  4. ***Toto said...
    நிறைய‌ ப‌ட‌ம் ப‌ண்ணி அது இல்ல‌ன்னா இதுன்னு த‌ப்பிச்சிக்குவார்னு தோணுது..

    -Toto
    www.pixmonk.com

    21 October, 2009 10:59 AM***

    அப்படினு சொல்லலாம்ங்க, ஆனால் தொடர்ந்து படம் விழுந்தால், எழமுடியாது. அவர் படங்கள் எல்லாம் தயாரிப்பாளர் கையை கடிக்காமல் இருப்பதாலும்தான் அப்படி செய்ய முடியுதுனு நினைக்கிறேன் :)

    ReplyDelete